Wednesday, June 16, 2010

நித்யா யாகம்! ""எனக்கு மனநிலை பாதிப்பு'' ரஞ்சிதா கடிதம்!


கர்நாடக சிறையில் கம்பி எண்ணியும் களி தின்றும் 51 நாட்களை அனுபவித்த, படுக்கையறைப் பரவச நித்யானந்தா சாமியார் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, பிடதி ஆசிரமத்தைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனையுடனும், ஆன்மீக வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடனும் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

புத்திசாலிக் கிரிமினலான நித்யானந்தா, வெளியில் வந்ததும் பல வேலைகளைச் செய்வார் என்பதை அவரால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் எதிர்பார்த்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதுபோலவே, ஜாமீன் பெற்று பிடதி ஆசிரமத்திற்கு வந்த நித்யானந்தா, அக்னி தியானம் நடத்தி, மீடியாக்களில் தன் பெயரை வரவைத்திருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அவரது முன்னாள் சீடர்கள், ""நித்யானந்தா செய்கிற தியானத்துக்குப் பெயர் பஞ்சதபஸ்தா. அதாவது, வட்ட வடிவில் குழி வெட்டி, அதில் சுள்ளிகளைப் போட்டு, நெருப்பை எரிய வைத்து, நடுவில் உட்கார்ந்து தியானம் செய்வதைத்தான் பஞ்ச தபஸ்தா என்கிறார்கள். வட இந்தியாவில் இந்த வகை தியானம் ரொம்ப பிரசித்தம். நமது கிராமப்பகுதிகளில் பனிக்காலத்து இரவு நேரங்களில் கிராமமக்கள் குளிர்காய் வார்களே அதுபோலத் தான். உடம்பை நெருப்பு சுடாது. தீக்காயம் எதுவும் ஏற்படாது. ஒரு வகையில் இது உடலுக்கு இதமானது தான்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான தியானம் இது. சுற்றிலும் நெருப்பு எரிவதால், உடலிலிருந்து வியர்வை தாராளமாக வெளியேறும். வியர்வை வெளியேறுகிறது என்றாலே உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறுகிறது என்றுதான் அர்த்தம். உடம்புக்குள் உள்ள அசுத்தங்கள் வெளியேறினால் நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு கிடைத்துவிடும். நோயை எதிர்க்கும் சக்தியை உடல் பெறுவதனால், மனதும் திடமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கத் தொடங்கும் இதுதான் இந்த தியானத்தின் பலன். காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணிநேரம் இந்த தியானத்தை செய்யவேண்டும். அதைத் தான் நித்யானந்தர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்'' என்றார்கள்.

ஆன்மீகம் என்ற பெயரில், மனதை அசுத்தப்படுத்தி, உடம்பைக் கட்டில் விளையாட்டுக்கு நித்யானந்தர் உட்படுத்தியதை வீடியோ காட்சிகள் மூலம் உலகமே பார்த்தது. இப்போது தன் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளவும், மனதைத்திடப்படுத்தவும் அவர் தியானம் செய்கின்ற நிலையில், அவருடன் வீடியோ காட்சிகளில் இடம்பெற்றிருந்த நடிகை ரஞ்சிதா எங்கே இருக்கிறார் என்ற விசாரணையில் இறங்கினோம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று நித்யானந்தர் தரப்பில் ஆரம்பத்தில் சொல்லப் பட்டாலும், தடயஅறிவியல் சோதனை உள்ளிட்ட பல் வேறு சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு ரஞ்சிதா வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் வரவேயில்லை. விசாரணை வளையத்திற்குள் சிக்காமல் தப்பிக்கப் பார்க்கிறாரா என்ற கேள்வியுடன் நாம் விசாரணையைத் தொடர்ந்தபோது, ரஞ்சிதா வழக்கமாகப் பேசும் நெருங்கிய வட்டாரம் சொன்ன தகவல்கள் உருக்கமானவை.

அவர்களிடம் நாம் பேசிய போது, ""கல்யாணமாகியும் தனக்கு குழந்தை இல்லை என்ற வருத்தம் ரஞ்சிதாவுக்கு உண்டு. அவரது தாய்மை பற்றி புருஷனுக்கு சந்தேகம் இருந்ததால் அடிக்கடித் திட்டு வாராம். இதை ரஞ்சிதாவே எங்ககிட்டே சொல்லியிருக்கிறார். கருத்தரிப்பு சிகிச்சையில் பிரபல மான பெண் டாக்டர் ஒருவரிடம் சென்னையில் ரஞ்சிதா ட்ரீட் மெண்ட் எடுத்துக்கொண்டபோது, கர்ப்பம் தரிக்கக்கூடிய கருமுட்டை அவருக்கு இருக்கிறதென்பதும், ஆனால் வழக்கமாக இருக்க வேண்டிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதான் அவர் கருத்தரிக்க முடியாமல் இருந்ததற்கு காரணம். முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இதை சரிப்படுத்திவிடலாம் என்றாலும், கணவரின் தொடர்ச்சியான டார்ச்சரால் மனம் வெதும்பியிருந்த ரஞ்சிதா, ஹீலிங் சிகிச்சையில் நித்யானந்தா எக்ஸ்பர்ட் என்று தெரிந்ததும் அவரது பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டார். அது அவருக்கு மன ஆறுதலைத் தந்திருக்கிறது. அதனால் தொடர்ந்து அங்கே சென்றவரை, நித்யானந்தா கவனித்து, தன் வளையத்திற்குள் கொண்டுவரும் சாகசங்களைக் கச்சிதமாகச் செய்து, வீடியோ காட்சிகள் வரை இடம்பெறச் செய்துவிட்டார்.

"உனக்கு குழந்தை இல்லாததுதானே குறை. அதை என்னால் சரிசெய்ய முடியும். நானே கடவுள். நான் உனக்கு சக்தி தரும்போது, உனக்குள் கடவுளின் குழந்தை உருவாகும்' என்றெல்லாம் சொல்லி ரஞ்சிதாவை நித்யானந்தா வசியம் செய்துவிட்டார். சாமியாரின் காம இச்சைக்குப் பலியாகி, தன் பெயரையும் புகழையும் ரஞ்சிதா இழக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது ரொம்பவே பரிதாபகரமானது'' என்கிறார்கள் அவருக்கு வேண்டி யவர்கள்.

நம்முடைய தொடர்ச்சியான விசாரணையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தன் தங்கை வீட்டில் ரஞ்சிதா இருக்கும் விவரம் தெரியவந்துள்ளது. கர்நாடக சி.ஐ.டி போலீசார் அனுப்பிய நோட் டீசுக்கு, அங்கிருந்து ரஞ்சிதா சார்பில் அனுப்பப்பட்டுள்ள பதிலில், ரஞ்சிதாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், ரஞ்சிதா மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் அமெரிக்க டாக்டர் ஒருவரின் மெடிக்கல் சர்டிபிகேட்டு இணைக்கப்பட்டுள்ளது.

கருதரிப்பதற்கு ஹீலிங் சிகிச்சை பெற்று, கணவருடன் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் ஆசிரமத்திற்கு வந்த ரஞ்சிதாவை, மனநோயாளியாக்கிய நித்யானந்தா, தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள அக்னி தியானம் செய்துகொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment