Sunday, June 13, 2010

யுத்தம் 61 -நக்கீரன் கோபால்




shockan.blogspot.com

டி.எஸ்.பி. வீசிய புதுகுண்டுக்கு நான் பயப்படவில்லை. போலீசின் இன்னொரு புதுக்கரடி இது. மலைவாழ் மக்களை எஸ்.டி.எஃப்புக்கு எதிராக நக்கீரன் திருப்பியது என்ற பொய்க்குற்றச்சாட்டுக் கான காரணம், சதாசிவம் கமிஷன்தான். வீரப்ப னுக்கும் எஸ்.டி.எஃப்புக்குமிடையில் சிக்கிக்கொண்டு அல்லல்பட்ட மலைவாழ் மக்களின் துயரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மலைவாழ் பழங்குடி மக்கள் சங்கத்தின் துணையோடு கொண்டு சென்றது நக்கீரன். அதனைத் தொடர்ந்து மலைவாழ் பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் இருமாநில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இடைவிடாத போராட்டத்தையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின்பேரில், வீரப்பன் தேடு தல் வேட்டை என்று சொல்லிக்கொண்டு போலீசார் நடத்திய கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள் உள்ளிட்ட அத்துமீறல்களையும் அக் கிரமங்களையும் விசாரிக்க அமைக் கப்பட்டதுதான் சதாசிவம் கமிஷன்.

தங்களின் வண்டவாளங்களை யெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி, போலீசாரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிட்ட சதாசிவம் கமிஷன் மீது காக்கிகளுக்கு கோபம் என்றால், அந்தக் கமிஷன் அமைக்கப்பட காரணமாக இருந்த நக்கீரன் மீது அளவுக்கதிகமான கோபம். அதனால்தான், எஸ்.டி. எஃப்புக்கு எதிராக மலைவாழ் மக்களை திருப்பியதாக டி.எஸ்.பி. கொந்தளித்தார்.

""எஸ்.டி.எஃப் தேடுதல் வேட்டை நடத்திய இடத்தில் கற் போடு ஒரு பெண்ணைக் காட்டுங்க'' என்றேன் நான். இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

""காடு உங்களுக்குத்தான் சொந்தமா? வீரப்பனை நீங்க வெறும் 5 கி.மீ. தூரம் நடந்துபோய் சந்திச்சிட்டு, 40 கி.மீ. நடந்தோம், 50 கி.மீ நடந்தோம்னு சொல்றீங்க''.

""சார்.. 5 கி.மீ தூரத்தில்தான் வீரப்பன் இருக்கான்னா நீங்களே பிடிச்சிருக்க வேண்டி யதுதானே?'' -நான் கேட்டதும் டி.எஸ்.பி. நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

""நீங்க லா படிச்சிருக்கீங்களா?'' என்றார் என்னைப் பார்த்து.

""இல்லை...''

""எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?''

""மலைகிராம மக்கள்கிட்டே போய்ப் பேசிப்பாருங்க. அவங்க படிக்கவேயில்லைன்னாகூட என்னை மாதிரிதான் பேசுவாங்க. அடிவாங்கிக் கிட்டே இருக்கிறவங்க திருப்பி அடிக்கி றாங்களோ இல்லையோ, அடியிலிருந்து தப்பிக்கப் பார்ப்பாங்க. போலீசோட பொய் வழக்குகளால் நாங்க அநியாயமா பாதிக்கப்படுறோம். அதிலிருந்து தப்பிக்க நினைக்கமாட்டோமா? 5 கி.மீ. தூரத்தில்தான் வீரப்பனை சந்திச் சோம்னு சொல்றீங்கன்னா, நீங்க எங்களை ஃபாலோ பண்ணினீங்களா? மீட்பு மிஷன் முடிகிறவரைக்கும் போலீ சார் யாரும் ஆபரேஷனில் இறங்கக் கூடாதுன்னு முதல்வர் கலைஞர் எவ்வ ளவோ சொல்லியும் நீங்க ஃபாலோ பண்ணியிருக்கீங்க. அதாவது, அரசின் உத்தரவை அத்துமீறியிருக்கீங்க.''

என் வாதத்திற்கு அவர்களிடம் பதில் இல்லை. கோபம்தான் பெருகியது.

""வீரப்பன் மாதிரியே மீசை வச்சிருக்கீங்களே... அவனைப் பார்த்து தான் வச்சீங்களா.. யாரைக் கேட்டு இந்த மீசை வச்சீங்க.?'' -டி.எஸ்.பியின் குரல் உயர்ந்தது.





""போச்சுடா... மீசை கதைக்கு வந்துட்டீங்களா! இந்த மீசையை வைக்க நான் யாரைக் கேட்கணும்?''

""உங்க இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி மீசை இருக்குது. அப்ப நீங்க அவனோட கூட்டாளிதானே?''

""சார்.. என்ன சார் அநியாயமா இருக்கு? எங்க ஊர் பக்கம் வந்தீங் கன்னா, வீரப்பன் கூட்டாளிகள் நிறைய பேரு இருப்பாங்க. அதனால, மீசையை வச்சி நான் வீரப்பன் கூட்டாளின்னு வெளியிலே சொல்லிடாதீங்க, சிரிப் பாங்க'' என்றேன். டி.எஸ்.பி.யும் அவரது டீமும் மவுனமாக இருந்தது.

நான் 1983-லிருந்து இந்த மீசையை வைத்திருக்கிறேன். வீரப்பன் இதே போன்ற மீசையுடன் இருப்பான் என்பது, அதற்கு 10 ஆண்டுகள் கழித்து தான் எனக்கே தெரியும். அந்த நாளை இப்பவும் மறக்க முடியாது.

1993-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்.

இணையாசிரியர் தம்பி காமராஜ் ஒரு பையனைக் கூட்டிக்கொண்டு என் அறைக்கு வருகிறார். அந்தப் பையன்தான் தம்பி சிவ சுப்ரமணியன். என்னைப் பார்த்ததும் தம்பி காமராஜ், "அண்ணே... வெற்றி. வீரப்பனை பார்த்துட்டாரு சிவா. படமும் எடுத்துட்டாராம், பேட்டியும் எடுத்துட்டாராம்.'

தம்பி காமராஜ் சொன்னதும், நான் தம்பிக்கும் சிவாவுக்கும் கை கொடுத்தேன். சிவா, தான் படம் எடுத்திருந்த 3 ரோல்களையும் கொடுத்தார். வீரப்பன் எப்படி இருப்பான் என்பதை உலகத் திற்குக் காட்டப்போகும் ரோல்கள் அவை. அதுவரை, போலீசார் காட்டிய சஃபாரி அணிந்து கைகட்டிய பவ்ய வீரப்பன் படம்தான் எல்லா பத்திரிகைகளிலும் இடம்பெற்றிருந்தது. அதனால், 3 ரோல்களிலும் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வம்.





""தம்பி.. நீங்க பேட்டியை எழுதுங்க. நான் பிலிம் ரோலை டெவலப் பண்ணி, பிரிண்ட் போட்டுட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு, நம்ம டிரைவர் மோகனை ஜீப் எடுக்கச் சொன்னேன். அலுவலகத்தி லிருந்து அவசரமாகப் புறப்பட்டேன்.

என் வண்டி நின்ற இடம், திருவல்லிக்கேணி மதன் ஸ்டுடியோ. நக்கீரனுக்கான கலர் ஃபோட்டோ பிரிண்ட்டுகள் அங்கேதான் போடுவோம். அதுவும், மிக முக்கியமான எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோ என்றால் நிச்சயமாக மதன் ஸ்டுடியோவில் மட்டும்தான் மேனுவல் பிரிண்ட் போடுவோம். இப்போதுபோல அப்போது தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகவில்லை. கலர் பிரிண்ட் போடுவதென்றால் நிறைய வேலைகள் இருக்கும்.

முதலில் டெஸ்ட் பிட் என்று சின்ன அளவில் படத் தைப் பிரிண்ட் போட்டு பார்ப்பார்கள். கலர் என்லார் ஜரில் பிரிண்ட்டுக்குத் தேவையான பேப்பரில் எக்ஸ் போஸ், டெவலப், கடைசியாக கெமிக்கலில் வாஷ் பண் ணித்தான் டெஸ்ட் பிட் போடப்படும். ஸ்டுடியோவின் உரி மையாளர் மதனிடம் வேலை பார்த்த வெங்கடேஷ்தான் கெமிக்கலில் பிலிம் ரோலைக் கழுவுகிறார். நானும் மதனும்தான் அந்த டார்க் ரூமில் இருக்கிறோம்.

டெஸ்ட் பிட் பாதி பிட் கழுவி ரெடியான போது, அதில் மீசை தெரிகிறது. "யோவ்.. என்னை மாதிரியே மீசை இருக்குய்யா...' -நான் மதனிடமும் வெங்கடேஷிடமும் சத்தமாகச் சொல்கிறேன். ""ஆமாண்ணே...'' என்று அவர்களும் சொல்கிறார்கள். படம் ரெடியாக, ரெடியாக எனக்கு ஆர்வம் கூடியது. 1993 ஏப்ரல் மாதம் காட்டுக்குள் வீரப்பன் நடத்திய கண்ணிவெடி தாக்குத லால் 22 போலீசார் பலியானதை யடுத்து, இரு மாநில அரசுகளும் வீரப்பன் தலைக்கு 40 லட்ச ரூபாய் விலை வைத்திருந்த நேரம் அது. அந்த தருணத்தில்தான், நாங்கள் வீரப்பன் படத்தை பிரிண்ட் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்துடனும் பேட்டி யுடனும்தான் நக்கீரன் இதழ் வெளிவரப்போகிறது.

ஜெ.வுக்கும் தேவாரத்திற்கும் இந்த ஒரு காரணம் போதாதா, நக்கீரன் மீது பாய்ச்சலைக் காட்டு வதற்கு! அதனால் ரொம்பவும் கமுக்கமாகவும் பாதுகாப்பாகவும் பிரிண்ட் போட்டுக்கொண்டிருந்தோம். முழுப்படமும் போடப்பட்டு, மீசையோடு வீரப்பனைப் பார்த்த தும், அந்த டார்க் ரூமில் எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. ""மீசையை வச்சே எனக்கும் வீரப்பனுக்கும் முடிச்சுப் போட்டுடுவாங்கய்யா'' என்று மதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இதுவரை போலீஸ் காட்டிக்கொண்டிருந்த வீரப்பன் படத்திற்கும், நாம் பிரிண்ட் போட்ட படத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது. ரொம்பவும் கேஷுவலாக ஒரு பாறைக்கு அருகில், துப்பாக்கியை பிடித்தபடி உட்கார்ந்திருந்த வீரப்ப னைப் பார்த்ததும், நக்கீரன் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியை நினைத்து பெருமிதமாக இருந்தது. பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தெல் லாம் நாம் பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. ஆனா லும், வீரப்பன் என்று ஒருவன் இருக்கி றானா, இருந்தாலும் அவன் எப்படி இருப்பான் என்று அவனைத் தேடு கிற இருமாநில எஸ்.டி.எஃப்., மத்திய அரசின் பி.எஸ்.எஃப் உள் பட யாருக்கும் தெரியாத நிலை யில், அவன் இப்ப டித்தான் இருக்கி றான் என்று உல கத்திற்கு நக்கீரன் தான் காட்டப்போகிறது என்றதை நினைத்ததும் மிகப்பெரிய சாதனைதான் என்று உள்ளுணர்வு சொன் னது.

இடதுகையால் ஃபோட்டோ பிரிண்ட்டை பிடித்தபடி, வலதுகையால் மதனுக்கு கைகொடுத்தேன். மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஃபோட்டோவை 300 செட் பிரிண்ட் போடுவது என முடிவு செய்ததால், இரவு முழுக்க பிரிண்ட்டிங் பணி நடந்தது. டெஸ்ட் பிட் உள்பட எதுவும் வெளியே போய்விடாதபடி நானே எடுத்து வந்து விட்டேன்.

நான் அலுவலகத்திற்கு போன்செய்து தம்பி காமராஜிடம் பேசினேன். ""தம்பி... எங்கேயும் போயிடாதீங்க. அங்கேயே இருங்க. நான் வந்திடுறேன்''.

""என்னண்ணே...''

""வந்திடுறேன் இருங்க...'' -அப்போது செல்போன் வசதி கிடையாது. ஆபீஸ் போன் டேப் ஆகிக்கொண்டிருந்ததால் அதற்கு மேல் பேசவில்லை. அலுவலகத்திற்கு வந்தபோது தம்பி காமராஜும், சிவாவும், நக்கீரன் தம்பிகள் அனைவரும் ஆவலாக காத் திருந்தனர். ஃபோட்டோ எடுத்த சிவாவுக்கு கை கொடுத்து, கட்டிப்பிடித்தேன். தம்பி காமராஜுக்கு கை கொடுத்து, படத்தைக் காண்பித்தேன். அவர் முகத்திலும் வெற்றி பெருமிதம். அந்தப் படம்தான் நக்கீரன் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்று, இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வெளியான படமும் செய்தியும், மொழி எல்லைகளைத் தாண்டி, தேசம் முழுவதும் தாக்கத்தை உண்டாக்கியது என்றால் அது நக்கீரன் வெளியிட்ட வீரப்பன் படம்தான்.

83-லிருந்து பெரிய மீசை வைத்திருக்கும் எனக்கு, வீரப்பனும் என்னைப் போலத்தான் மீசை வைத்திருக்கிறான் என்பது 93-ல்தான் தெரியும். அவனை சரணடைய வைப்ப தற்காக, காட்டுக்குச் சென்றேன். முதன்முதலாக அவனை சந்திக்கப் போகும்போதுதான் அந்த பயங்கரம்.. .. ...

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment