Sunday, June 20, 2010

ராகுல் போகும் போக்கு!




""ஹலோ தலைவரே... உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட் டின் தொடக்கவிழா எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கி யிருக்குது.''

""ஆமாப்பா... தொடக்கவிழா, அலங் கார ஊர்திப்பேரணி, கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றம், கண்காட்சி கள் என பொதுமக்களை ஈர்க்கும் பல நிகழ்ச்சிகள்

கோவையை குலுங்கவைக்கப் போகுது. கலைநிகழ்ச்சிகளெல்லாம் 20-ந் தேதியே தொடங்கிடுது. அதையெல்லாத்தையும்விட செம்மொழித்தமிழை மேலும் செழுமையாக்கப் போவது ஆய்வரங்கமும் இணைய மாநாடும் தான். ஈழத்து தமிழறிஞர் சிவத்தம்பி தலைமையில் பலநாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் தமிழின் பல துறைகள் பற்றியும் ஆய்வுரைகளை வழங்கி, எதிர்காலத் தமிழுக்கும் தலைமுறையினருக்கும் வழிகாட்டப்போறாங்க. அதே மாதிரி, இணையமாநாட்டின் மூலம் கணினித் தமிழை மேம்படுத்தும் திட்டங்களும் வெளியாகப் போகுதே.. இதெல்லாம் நிச்சயமா தமிழின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தும்.''

""மாநாட்டுக்கான கட்டமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கு. அதை யெல்லாம் முதல்வர் வருகைக்குள்ளே முடிக்கணும்னு அதிகாரிகளை துணை முதல்வர் விரட்டித்தான் வேலை வாங்க வேண்டியிருந்திருக்குது. செம்மொழி மாநாடு முடிந்ததும் மேலவைத் தேர்தல் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுக்கும். மேலவையை எதிர்த்த அ.தி.மு.க.விலும் கூடஎம்.எல்.சி. பதவிக்காக முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் ரெடியாவதா கார்டன் வட்டாரத்திலிருந்து தகவல் கசியுது.''

""மேலவைத் தேர்தல் எப்போதாம்?''

""ஆகஸ்ட்டிலேயே நடத்திடணும்ங் கிறதுதான் கலைஞரோட கணக்கா இருந்தது. தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆரம்பத்தி லிருந்தே இந்த விஷயத்தில் இழுத்தடிச்சிக் கிட்டிருந்தார். திங்கட்கிழமையன்னைக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா டெல்லிக்கு நரேஷ்குப்தாவை அழைத்து நிலைமை களைக் கேட்டபோது, ஆசிரியர்கள் தொகுதி களுக்கான வாக்காளர்களையும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர்களையும் கணக் கெடுப்பதில்தான் தாமதமாகுதுன்னும் இப்ப மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியும் சேர்ந் திருப்பதால் இன்னும் சுணக்கம் ஏற்படுதுன்னும் சொல்லியிருக்கிறார் நரேஷ் குப்தா. அவர், வரும் ஜூலை கடைசியில் ரிடையர்டாகிற நிலையில், இந்தக் கணக் கெடுப்பு பணி, விடுபட் டோர் பட்டியல் சரிபார்ப்பு எல்லாம் முடிவதற்கு அக் டோபர் கடைசி வார மாகிவிடும்னு தேர்தல் கமிஷன் வட்டாரம் சொல்லுது. அதனால்தான் நவம்பர் 1-ல் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்னு நவீன்சாவ்லா சொல்லியிருக் கிறார். ஜனவரி மாதத் திற்குப்பிறகு சட்ட மன்றத் தேர்தல் பணிகள் தொ டங்கிடும்ங் கிறதால டிசம்பரில் மேலவைத் தேர்தல் நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது.''

""புத்தாண்டில் தமிழக சட்ட மேலவை மீண்டும் செயல்படும்னு சொல்லு.''

""மேலவைத் தேர்தலுக்குப்பிறகு சட்ட மன்றத் தேர்தல் பணிகள் தொடங்கிடும்ங் கிறதால அதுபற்றிய ஆலோசனைகளும் கட்சி வட்டாரங்களில் தீவிரமா நடந்துக்கிட்டிருக்குது. அதிலும் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத்திற்கு ராகுல்காந்தியிடமிருந்து நேரடியா இன்ஸ்ட்ரக்ஷன் கிடைத்துக் கொண்டிருக்குதாம். புதிய நிர்வாகிகளுக்குப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகிற நிலையில், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதில் தவறில்லைன்னு ராகுலிடமிருந்து தகவல் வந்திருக்குதாம். அதே மாதிரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாநில அரசின் செயல்பாடுகள் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர் வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகள் இருக்க ணும்னும் சொல்லப்பட்டிருக்குதாம்.''

""தேர்தல் நேரத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பலமா இருக்கணுமே.. இந்த மாதிரி நடவடிக்கைகள் வேறு மாதிரியா இருக்குதே?''

""காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டேங்க தலைவரே... ... தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பா ராகுல்காந்தி ஒரு டார்கெட் வைத்திருக் காராம். என்னதான் சோனியா-கலைஞர் நட்பு வலுவா இருந் தாலும், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ராகுல்தான் கண்ட்ரோலாம். கூடுதல் சீட்-கூட்டணி ஆட்சி என்ற டிமாண்டுடன் தி.மு.க.வுடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்குமாம். டெல்லியில் இதுசம்பந்தமா தனது கோர் கமிட்டியுடன் ஆலோசித்த ராகுல், 100 சீட் என்று பேச்சை ஆரம்பிப்போம். சீட் குறைந்தாலும் கூட்டணியில் பங்குங்கிறதில் உறுதி. ஒத்துவரலைன்னா தனியா நிற்போம். காங்கிரசுக்கு 8% ஓட்டு இருக்குது. திருமங்கலம் பாணியில் வேலை செய்து ஓட்டுகளைக் கொண்டுவருவோம். தே.மு.தி.க.வோடு கூட்டணி போட்டு நின்றால் 60 முதல் 80 சீட் வரைக்கும் நாம ஜெயிக்கலாம். அப்புறம், தி.மு.க.-அ.தி.மு.க. எந்தக் கட்சி ஆட்சியமைக்கணும்னாலும் நமக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் நடக்கும்னும் சொல்லியிருக் கிறார். கோர் கமிட்டி ஆட்களுக்கே ராகுலோட வியூகங்கள் பிரமிப்பை உண்டாக்கியிருக்குது. களநிலவரப்படி இதெல்லாம் சாத்தியமான்னு குழம்பிப்போயிருக் காங்களாம்.''

""தேர்தல் பேச்சு வந்தாலே பலவிதமான செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்ப்பா..''

""தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு எந்தெந்த காங்கிரஸ் தலைகள் நெருக்கமா இருக்குதுன்னும் எவ்வளவு சொத்து சேர்த்திருக்காங்கன்னும் லிஸ்ட் எடுத்து வச்சிருக்காராம் ராகுல்.

சொத்துன்னு சொன்னதும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் விவகாரம் ஞாபகத்துக்கு வருதுங்க தலைவரே.. .. அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்ட உமாசங்கருக்கு நெருக்கடி வந்தது. கொங்கு மண்டலத்து அமைச்சரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகிட்டே பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அரசு கேபிள் கார்ப்பரேஷ னிலிருந்து உமாசங்கர் மாற்றப்பட்டார்.''

""அவர் மேலே துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோது, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்துக்குப் போய் தடை வாங்கினாரே?''

""இப்ப சிறுசேமிப்புத்துறை கமிஷனரா உமாசங்கர் இருக்கிறார். இந்த நிலைமையில்தான், அவர் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துவிட்டதாகவும், அது பற்றிய விசாரணைக்கு நேரில் ஆஜராகணும்னும் விஜிலென்ஸிடமிருந்து ஓலை வந்திருக்குது. இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். தன்னை அரசாங்கம் பழிவாங்குவதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப் பிப்பதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமே தவிர, போலீஸை ஏவி விடமுடியாதுன்னும் மனுவில் உமா சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நீதிமன்றம், விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.''

""அ.தி.மு.க.வில் டாக்டர் வெங்கடேஷின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்படுவதா செய்திகள் வருதே...''

""என் காதுக்கும் வந்ததுங்க தலைவரே... தலைமைக் கழகத்தில் அவர் நடத்திய இளைஞர்-இளம்பெண்கள் பாசறைக் கூட்டத்திற்கு ஜெ வந்தப்ப, காஞ்சி மாவட்ட கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் ஜெ படம் சின்னதாகவும் வெங்கடேஷ் படம் பெருசாகவும் இருந்த தாம். பேனரை வச்ச கட்சிக்காரரும் வெங்க டேஷூம் ஒரே சமுதாயம்னு ஜெ.வுக்குத் தெரியவர, கட்சிக்காரரை முதலில் கூப்பிட்ட ஜெ, "இது என்ன ஜாதிக்கட்சியா? கட்சிக்கு நான் தலைவியா வேறு யாராவது தலைவரா'ன்னு சத்தம் போட்டி ருக்கிறார். அடுத்ததா, வெங்க டேஷைக் கூப்பிட்டு, கம்யூனிட்டி லாபி பண்ணிக்கிட்டிருக்கியான்னு கேட்டாராம். இந்த சம்பவத் துக்கப்புறம் கட்சி நடவடிக்கைகளில் அவரோட தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டி ருப்பதா சொல்றாங்க.''

""கும்பகோணம் பக்கத்தில் இருக்கிற அணைக்கரையில் புதிய பாலம் கட்டணும்னு அ.தி.மு.க நடத்தும்போராட்டம் வெங்கடேஷ் தலைமையில் நடக்கும்னுதான் ஜெயலலிதா முதலில் அறிவித்திருந்தார். ஆனா, அவரை மாற்றிட்டு துரை. கோவிந்தராஜன்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிட்டார். இதையெல்லாம் கூட்டிக்கழிச்சிதான் டாக்டர் வெங்கடேஷ் ஓரங்கட்டப்படுறார்னு செய்தி பரபரப் பாகிக்கொண்டிருக்குது. டாக்டர் தரப்போ, எங்க ளுக்கு டெல்லியில் கூட்டணி தொடர்பா சில அசைன்மென்ட்டை மேடம் கொடுத்திருக்காங்க.

அதனாலதான் ஸ்டேட் அரசியலில் கேப் விழுந்திருக்குதுன்னு சொல்லுது.''

மிஸ்டுகால்



வடக்கு மண்டல ஐ.ஜி. துரைராஜ் மாற்றம் செய்யப்பட்டு, ரமேஷ்குடவாலா புது ஐ.ஜி.யாகியிருக்கிறார். துரைராஜை சிபாரிசு செய்தவர் மு.க.அழகிரி. அவர் பெயரைப் பயன்படுத்தி, எஸ்.ஆர்.எம். கல்லூரி சீட் விவகாரத்தில் துரைராஜ் திருவிளையாடல்கள் நடத் தியதாக அழகிரிக்கு தகவல் போக உடனடியாக மாற்றப்பட்டுள்ளார்.



அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு ஆளுங்கட்சிக்குப் போகிறார் என்ற தகவல் கொடநாட்டுக்கு எட்டவே, அப்செட்டான ஜெ, உடனடியாக ஓ.பி.எஸ்ஸையும் செங்கோட்டையனையும் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தச் சொன்னார். இருவரும் அழகுதிருநாவுக்கரசு வீட்டுக்கே ஜூன் 17-ந் தேதி சென்றபோதும் சந்திக்கமுடியவில்லை.



அதேநாளில் கலைஞரை சந்தித்து தி.மு.க.வில் சேர்வதை உறுதிப்படுத்திய அழகு.திருநாவுக்கரசு தனது ஆதரவாளர்களுடனான இணைப்பு விழாவை சசிகலாவின் ஏரியாவானமன்னார்குடியில் பிரம் மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்.

No comments:

Post a Comment