Sunday, June 20, 2010

தங்கத்தில் கலப்படம்! ஆதார ரிப்போர்ட்!


shockan.blogspot.com
ஆறேழு வருஷத்துக்கு முன்னால 3500 ரூபாய் விற்ற தங்கம் இன்னைக்கு 15 ஆயிரம் ரூபாய்னு விலை எகிறிப் போச்சு. ஆனாலும் தங்கம் விற்கிற விலையைவிட வாங் குறவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கிட்டுதான் இருக்கு. அதுவும் அட் சய திருதியை மாதிரியான நாட்களில் நகைக்கடைகளில் தள்ளுமுள்ளே ஏற்படும். அந்தளவுக்கு கூடிக் கொண்டே இருக்கிறது மக்களின் மத்தியில் தங்கத்துக்கான மவுசு.

ஆனால், அவ்வளவு ஆயிரங் களை கொட்டி வாங்கும் தங்க நகைகளில் கலப்படமும் இருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 6000 நகை தயாரிப்பாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. குறிப்பாக தென்காசியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட நகைக்கடைத் தொழி லாளர் குடும்பங்கள் இருக்கின்றன. இங்குதான் தங்கக் கலப்பட சர்ச்சை... புகைந்துகொண்டிருக்கிறது.

நகை செய்யும் தொழிலாளர் களான அண்ணாமலையும் முருகேச னும் ""பொதுமக்கள் மற்றும் நகைக் கடைக்காரர்கள் தரும் தங்கத்தை தேவையான நகையாக வடிவமைப் பது எங்கள் தொழில். அப்படிச் செய்யும் போது... தரப்படும் தங்கக்கட்டிகளிலுள்ள தரமும் அளவும் மாறா மல் டிசைன் ஆப ரணங்கள் தயாரிப் போம். அதுல எடை சேதாரம் போக கிடைக்கிற செய்கூலிதான் எங்களுக்கு வருமானம்.

நகையாக வடிவ மைக்க பலமுறை அந்தத் தங்கக் கட்டிகளை உருக்கவேண்டி யிருக்கும். அப்படி உருக்கும்போது ஒவ்வொரு தடவையும் 100 கிராமாக இருக்கும் தங்கக் கட்டியில் அரைகிராம் வீதம் குறைஞ்சுக்கிட்டே இருந்தது. இதனால நகையை செஞ்சு முடிக்கும்போது ரெண்டு கிராம் குறைஞ்சிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஆகிட்டோம்.

கேரட் அளவும், தரமும் குறையாம எடை மட்டும் பெரிதாகக் குறையுதே எப்படி? மண்டையை பிச்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுப்போச்சு எங்களுக்கு. ஆனா, நகையை ஒப்படைக்குறப்போ நகைக்கடைக்காரர்களிடம் சொன்னா "உங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?'ன்னு எங்களையே குற்றவாளியாக்குறாங்க. அதுமட்டுமில்ல... இதைக் காரணமா காட்டி எங்களோட ஆறா யிரம் ரூபாய் வருமானத் துல 3500 ரூபாயை புடிச்சுக்கிறாங்க. நாங்க எங்க போ வோம்?'' என்று சோகமாய் சொன்னவர்கள் ""எங்க தப்பு நடக் குதுன்னு புரியாம தவிச்சுப் போயிட் டோம். கண்டு புடிச்சப்போதான் பெரும் அதிர்ச்சி யாகிட்டோம். எப்படிங்கிறீங்களா?

வங்கிகளிலேயும் போஸ்ட் ஆபீஸ்களி லேயும் வாங்குற அரசு முத்திரை (ஹால் மார்க்) இடப்பட்ட தங்கக் கட்டிகளை உருக்கும்போது எடை குறையல. ஆனா, நகைக்கடைக்காரர் கள் கொடுக்குற தங்கக்கட்டிகளில் எடை குறைஞ்சது எங்களுக்கு பொறி தட்டிச்சு. அதுமட்டுமில்ல முன்பெல்லாம் நகைக் கடைக்காரர்கள் கொடுக்கிற தங்கக்கட்டிகளை உடைக்கும்போது... ரொம்ப பாலிஷா இருக்கும். ஆனா இப்போ அப்படியில்லாம சிராய்ப்பா இருந்தது எங்க சந்தேகத்தை அதிகப்படுத்திடுச்சு. தங்கத்துல ஏதோ கலப்படம் பண்றாங்கன்னு மட்டும் புரிஞ்சது.

உடனடியாக கோவையில இருக்கிற தங்க தரக் கட்டுப்பாட்டு சோதனை மையமான எமரால்ட் டெஸ்ட்டிங் இந்தியா லிமிடெட் "லேப்'புக்கு அனுப்பி னோம். ஆய்வு முடிவில் "வேதிப்பொருளான பிளாட் டின கலவை கலக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிய வர... அதிர்ச்சியில் உறைஞ்சு போயிட்டோம். உருக்கும்போது பிளாட்டின கலவை தீஞ்சு போறதனாலதான் இப்படி எடை குறைவு ஏற்பட்டிருக்கு. "அடக்கொடுமையே... இத்தனை நாளா பணத்துக்காக தங்கத்துல கலப்படம் பண்ணினதும் இல்லாம... எங்க சம்பளத்தையும் புடிச்சு எங்க குடும்பத்தோட வயித்துல அடிச்சுட்டீங் களேய்யா'னு கோபத்தோட போய் ஆதாரத்தைக் காட்டிக் கேட்டோம். நகைக்கடைக்காரர்களோ "அப்படியா... மொத்த நகை வியாபாரிகளிடமிருந்து தானே தங்கக்கட்டி வாங்குறோம்? எங்க சங்கத்துல சொல்லி நடவடிக்கை எடுக்குறோம்'னு சொன்னாங் களே தவிர எந்த மாற்றமும் செய்யல'' என்கிறார்கள் விரக்தியோடு.

யார் இந்தத் தங்கக் கலப்பட மோசடியை செய் வது? நகை வியாபாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். ""வெளிநாடுகளிலிருந்தும் தங்கம் இறக்குமதி செய்யப் படுது. அதுல -குறிப்பா லண்டனில் இருந்துதான் அதிகமா இறக்கு மதி செய்யப் படுது. அப்படி இறக்குமதி யாகும் "தங்க பார்'களைத் தான் அரசு நிறுவனங் களிலும், மும்பைச் சந்தையின் வியாபாரி களான மார் வாடிகள்தான் அதிகமாக வாங்கி 100 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளா மாற்றுகிறார்கள்.

அப்படி மாற்றும்போதுதான் இந்த மார்வாடிகள் பிளாட்டினக் கலவையை தங்கத்தில் கலந்திருக்கணும். இதனால் மொத்த வியாபாரிகளுக்கு லாபம் கொட் டோ கொட்டுன்னு கொட்டுது. ஆனா, இந்த தில்லுமுல்லால நகை தயாரிக்கும் அப்பாவி மக்கள் தவறானவர்களாக சித்தரிக்கப்படுறாங்க. அதுமட்டுமில்ல... இந்த கலப்பட தங்கக் கட்டிகளால் உருவாக்கப்படும் நகைகள் நாளாக நாளாக... நிறம் மாறவும் வாய்ப்பிருக்கு.

ஆக... மொத்த வியாபாரிகளால் வாங்கப்படும் தங்க பார்கள், இந்திய தர நிர்ணயமான (இன்ழ்ங்ஹன் ஞச் ஒய்க்ண்ஹய் நற்ஹய்க்ஹழ்க்ள்) இஒநலில் சோதனைக்குட்படுத்தி சான்றிதழ் பெறாமல் விற்க அனுமதிக்கக்கூடாது'' என்கிறார்கள்.

அதேபோல் ஆபரணங்களாக வடிவமைக்க வரும் தங்கக்கட்டிகள் அதற்கான ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்ற சான்றிதழை பெற்ற பிறகுதான் வடிவமைக்கணும்... நகை செய்யும் தொழிலாளர்கள்.

செய்வார்களா?

No comments:

Post a Comment