Wednesday, June 16, 2010

கடத்தல் கும்பலிடம் உயிர் தப்பிய சிறுவன்!



""யோவ் எம்.எல்.ஏ... உன் தம்பி மகன் தர்மதுரையை நாங்கதான் கடத்தி வெச்சிருக் கோம். ஒழுங்கா அஞ்சு லட்சம் கொடு... இல் லேன்னா நீ உசுருக்குசுரா பாசம் வெச்சுருக்குற உன் தம்பி மகனை இனி உசுரோடவே பார்க்க முடியாது'' -வியாழக்கிழமை 10-ந் தேதி வந்த மிரட்டல் ஃபோனால் அரண்டு போயினர் எம்.எல்.ஏ. அமரமூர்த்தியும் அவரது தம்பி பழனிச்சாமியும்.

10... 11... 12... 13...-ந் தேதி நான்கு நாட்களும் கடந்துபோனதால் எம்.எல்.ஏ.வின் குடும்பம் கலக்கத்தில் மூழ்கியது. 14-ந் தேதி திங்கட்கிழமை காலை தைலாபுரம் அருகிலுள்ள கிளியனூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து "கடத்தப்பட்ட சிறு வன் ஸ்டேஷன்லதான் இருக்கான்' என்ற தகவல் கிடைக்க விரைந் தனர் அரியலூர் மாவட்ட காக்கிகள்... நாமும்தான்.

மிரட்சியுடன் அமர்ந் திருந்த 14 வயது சிறுவன் தர்மதுரையிடம் கடத்தல் சம்பவம் குறித்து கேட்ட போது... திக் திக் நிமிடங்களை விவரிக்கத் தொடங்கினான்.

""4.45 மணி இருக்கும். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது... முன்னாடி பெரியப்பாவுக்கு கார் ஓட்டுன டிரைவர் மணிகண்டனும் இன்னொருத்தரும் திடீர்னு கார்ல வந்து... வாடா கார்ல போய் உங்க வீட்ல விடு றோம்ன்னாங்க. அதெல்லாம் வேணாம் நானே போய்க் கிறேன்னு சொன்னதுமே... என் வாயை கையால அமுக்கி கார்ல தூக்கிட்டுப்போய் போட்டுட்டாங்க. அடுத்த நிமிஷமே கார் பயங்கர ஸ்பீடா போக ஆரம்பிச்சிடுச்சு. ஏண்ணே இப்படி பண்றீங்க?ன்னு கேட்டு அழுதப்போ "டேய்... நான் கார் ரேஸ்ல கலந்துக்கணும். அதுக்கு அஞ்சு லட்சம் பணம் தேவைப்படுது. அதான் உன்னை வெச்சு உன் பெரியப்பன்கிட்ட பணம் கறக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்'னவங்க வீட்டுக்கும் ஃபோன்பண்ணி மிரட்டினாங்க. திங்கட்கிழமை காலை ஒரு இடத்துல காரை நிறுத்திட்டு மணிகண்டன் மட்டும் வெளியில போனாரு. அந்த நேரம் பார்த்து கண்ணாடியைத் தட்டி கதறி அழுது கூச்சல் போட்டேன். நல்லவேளை அந்தப் பக்கமா போனவங்க பலரும் ஓடிவந்து கூட இருந்த அண்ணனை அடிச்சு என்னைக் காப்பாத்தி போலீசுக்கு தகவல் கொடுத் துட்டாங்க'' என்கிறான் பெருமூச்சுவிட்டபடி அதிர்ச்சி விலகாமல்.

சிறுவனுடன் இருந்த மதர் ஷாவை போலீஸார் "தகுந்த' முறையில் விசாரிக்க... ""மணிகண்டன்தான் "கடத் துனா பணம் கிடைக்கும் வாடா'ன்னு சென்னையிலிருந்த என்னை வரவழைச் சான். நாங்க வாடகைக்கு எடுத்த இனோவா காரின் நம்பரை போலீஸ் ட்ரேஸ் பண்ணிடுச்சின்னு தெரிஞ்சுதான் நம்பர் பிளேட்டை மாற்ற மணிகண்டன் காரை நிறுத்திட்டு... என்னை விட்டுட்டுப் போனான். அதுக்குள்ள பொதுமக்கள் வந்ததால மாட்டிக்கிட்டேன்'' என்று கடத் தல் பின்னணியை கக்கியிருக்கிறான் கடத்தல் கும்பலில் ஒருவனான மதர்ஷா. இந்தக் கடத்தலுக்கு மூளை யாக செயல்பட்ட முன்னாள் டிரைவர் மணிகண்டனை அதிரடியாகத் தேடி வருகிறது காவல்துறை.

அரியலூர் காங் கிரஸ் எம்.எல்.ஏ. அமர மூர்த்தி நம்மிடம் ""இதுபோன்ற நிலைமை எதிரிக்குக்கூட வரக் கூடாதுங்க'' என்றார் கண்கள் கலங்க.

No comments:

Post a Comment