Thursday, June 10, 2010

கொழும்பில் 12 ஆடம்பரத் தொடர்மாடி குடியிருப்புகளில் சர்வதேசப் புலிகளின் முதலீடு


shockan.blogspot.com

சர்வதேசப் புலிகள் கொழும்பில் வாழும் தமது ஆதரவாளர்கள் அல்லது உறவினர்கள் மூலமோ அல்லது வேறு புலிகள் ஆதரவு நிறுவனங்கள் மூலமோ மேற்படி 12 மாடிக் குடியிருப்புகளையும் அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

தலைநகர் கொழும்பில் சர்வதேசப் புலிகளின் நிதியைப் பயன்படுத்தி அதி ஆடம்பரக் குடியிருப்புகள் பல அமைக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து இதுபற்றிப் புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளிடையே மேற்கொண்டுவரும் தீவிர விசாரணைகளிலிருந்து அவ்வாறு கொழும்பில் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகள் சர்வதேசப் புலிகளின் நிதிகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேசப் புலிகள் கொழும்பில் வாழும் தமது ஆதரவாளர்கள் அல்லது உறவினர்கள் மூலமோ அல்லது வேறு புலிகள் ஆதரவு நிறுவனங்கள் மூலமோ மேற்படி 12 மாடிக் குடியிருப்புகளையும் அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதுபற்றி, பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேலும் மேற்கொண்டுவரும் விசாரணைகளிலிருந்து இவ்வாறு கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளும் கட்டப்பட்டதற்கான பெருந்தொகை நிதிகளும் புலிகள் இயக்கத்தினர் தீவிரமாகச் செயற்பட்டுவரும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்தே கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும் இதுபற்றிய குறிப்பான தகவல்களுக்கேற்ப கனடாவிலும் சுவிற்சர்லாந்திலும் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்தே இவ்வாறு மேற்படி 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்கான பெருந்தொகை நிதிகளும் கிடைத்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் புலனாய்வுத்துறை தரப்பிலிருந்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சர்வதேசப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து குறித்த 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளையும் அமைப்பதற்காக சிறிலங்காவிலுள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுக்கப்பட்ட அல்லது சிறிலங்காவிலுள்ள புலிகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் சர்வதேசப் புலிகள் முதலீடு செய்திருக்கும் நிதிகள் கணிப்பிட முடியாத அளவுக்குப் பெருந்தொகையானவை எனவும் எவ்வாறாயின், புலனாய்வுத்துறை இதுபற்றிய பரந்த விசாரணைகளை சந்தேகத்துக்குரிய தனியார் மற்றும் நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுத்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதுபற்றிப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரும் இரகசியப் பொலிஸ்பிரிவினரும் இணைந்து விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளில் சராசரியாக ஒவ்வொரு ஆடம்பர மாடிக் குடியிருப்பும் 10 மாடிகளைக் கொண்டவையாகவும் ஒவ்வொரு மாடியிலும் தனித்தனியாக 4 வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆடம்பர வீட்டுத் தொகுதியும் சராசரியாக ரூபா இரண்டு கோடிக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் மேலும் புலனாய்வுத்துறைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் பெறப்பட்ட பாரிய பணத்தொகைகள் சர்வதேசப் புலிகள் இயக்கத்தின் நிதிக் கணக்குகளிலேயே வைப்புச் செய்யப்பட்டிருப்பதாகப் புலனாய்வுத்துறைக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறு சுமார் 10 மாடிகளைக் கொண்ட ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட தொடர் குடியிருப்புகள் எண்ணிக்கையில் கொழும்பில் சர்வதேசப் புலிகளின் பணத்தில் கட்டப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட தொடர் வீட்டுக் குடியிருப்புகள் கொழும்பில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வுத்துறை தரப்பில் இரகசியப் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் குறிப்பிட்ட சில தொடர் வீட்டுக் குடியிருப்புகளில் வீடுகள் இன்னும் விற்கப்படாத நிலையில் உள்ளதாக மேலும் இரகசியப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேசப் புலிகள் இயக்கத் தலைவரின் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து இவ்வாறு பெருந்தொகைப் பணத்தைப் பெற்று ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் தொடர் வீட்டுக் குடியிருப்புகளையும் அமைத்தவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட தனியார் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தற்போது நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்கள் எனவும் பெரும்பாலும் கடந்த வருடம் மே மாதம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலாகப் புலிகள் இயக்கத் தலைவர்கள் கூட்டாகக் கொல்லப்பட்டதன் பின்னரே மேற்படி தொடர் மாடிக் குடியிருப்பை அமைத்தவர்களில் பெரும்பாலானோர் நாட்டைவிட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு அதன் நிதிச் செயற்பாடுகள் செயலிழந்துள்ள நிலையில் குறித்த ஆடம்பர மாடித் தொடர் குடியிருப்புகள் மற்றும் தொடர் வீட்டுக் குடியிருப்புகளை அமைத்த புலிகள் இயக்க ஆதரவாளர்களிடையே தற்போது பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் மோதல்கள் தோன்றியுள்ளதாகவும் இரகசியப் பொலிஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு தமக்குள் மோதிக்கொண்ட குறிப்பிட்ட தரப்பினர் அண்மையில் ஒருவருக்கு ஒருவர் எதிராக முறைப்பாடுகளை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளனர். இது சம்பந்தமாக இரகசியப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே இவ்வாறு வெளிநாடுகளில் இயங்கும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் ஆடம்பர மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்காக இங்கு குறித்த ஆதரவாளர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு சர்வதேசப் புலிகள் இயக்கத்தின் நிதியில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள மேற்படி 12 ஆடம்பரத் தொடர்மாடிக் குடியிருப்புகள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வேறும் சில ஆடம்பரத் தொடர்மாடிக் குடியிருப்புகளும் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் இவற்றைக் கட்டிக்கொண்டிருக்கும் உரிமையாளர்களிடம் இரகசியப் பொலிஸ் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் இதன்மூலம் இந்த தொடர் குடியிருப்புகள் அமைவதற்குக் குறித்த உரிமையாளர்களுக்கு இவ்வாறு பெருந்தொகை நிதி வெளிநாடுகளில் செயற்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளிடமிருந்தே கிடைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் இரகசியப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொழும்பில் ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்காகப் பெருந்தொகை முதலீடுகளைச் செய்துள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகவிருப்பதாக மேலும் பொலிஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரும் இரகசியப் பொலிஸ் பிரிவினரும் மேற்கொண்டுள்ள பூர்வாங்க விசாரணைகளிலிருந்து கிடைத்துள்ள தகவல்களில் இவ்வாறு கொழும்பில் ஆடம்பரத் தொடர் மாடிக் குடியிருப்புகள் அமைப்பதில் வெளிநாடுகளிலுள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் இங்குள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்களும் தீவிரமாக முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது கடந்த 2002 ஆண்டின் சமாதானப் பேச்சுகள் மற்றும் ஒப்பந்தத்தின் பின்னரே எனத் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய பாதுகாப்பு விமர்சனங்களுக்கு ஏற்ப இவ்வாறு பெரும் அதி ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளில் பாரிய முதலீடுகளை வெளிநாடுகளிலுள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் இங்குள்ள புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்களும் செய்வதும் அவற்றைக் கோடிக்கணக்கான பணத்துக்கு விற்று குறித்த முதலீடுகளின் பன்மடங்கான இலாபத்தைப் பெறுவதும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் புலிகள் இயக்கத்தை நிதி அடிப்படையில் மேலும் பலப்படுத்துவதாகவே அமையும் எனவும் எனவே இந்த முதலீடுகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பரவலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment