Thursday, September 2, 2010

திரைக்கூத்து!

நயன்தாராவுடன் பிரபுதேவா மனஸ்தாபம்!

ஜாங்கிரிதான்னாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்க முடியுமா? சலிப்பு வரத்தான செய்யும்? நயனுக்கும், நடனப் புயலுக்கும் சின்ன கோப தாபத்தில் ஊடல் ஏற்பட்டு போச்சாம். ரெண்டு மூணு நாளா ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையாம். அப்பறம் மனசு லேசாகி பிரபுதேவாவுக்கு போன் போட்டிருக்கிறார் நயன். ஆனால் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்லயே இருந்துவிட்டார் புயல். இதைத் தெரிந்துகொண்ட நயன், பிரபுதேவா வீட்டு தெருமுனை யில் ரொம்ப நேரம் காரிலேயே காத் திருந்தாராம். ஆனால் நடனம் வெளியே வராததால் ஏமாற்றத்தோடு திரும்பி யிருக்கிறார் நயன்தாரா.


கடத்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை!


அயோத்திக்குப்பம் வீரமணியின் வாழ்க்கைச் சாயலில் "பெருசு' படம் தந்த காமராஜ் இப்போது "விலை' படத்தை இயக்கி வெளியிட்டி ருக்கிறார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதா நாயகி ரித்துவை கடத்தி விபச்சார கும்பலிடம் விற்று விடுகிறது ஒரு கும்பல். அந்தப் பெண்ணை அவளின் அண் ணன் பரணியும், போலீஸ் ஆபீஸர் சரவணனும் மீட்க போராடும் கதை. ""சினிமாத்தனம் இல்லாமல் மிக யதார்த்தமாக படமாக்கியிருக் கீங்களே?'' என காமராஜிடம் கேட்டேன். ""காணாமல்போகும் பல பெண்கள் இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்படாமலே இருக்காங்க. அப்படி காணாமப்போயி திரும்பி வந்த சில பெண்களிடம் பேசி, நடந்த சம்பவங்களைக் கேட்டு படமாக்கினோம். படத்தை நாங்க எந்த ஆபாசமுமில்லாம எடுத்திருந் தாலும் அவுக சொன்ன சில சம்பவங்களை காட்சிப்படுத்த முடியல. அவ்வளவு கொடூரங்களை அந்த பெண்கள் அனுபவிச் சிருக்காங்க.

இந்தப் படத்தைப் பார்த்து பணத்துக்காக பெண்களை கடத்துறவங்கள்ல ஒருத்தனாவது திருந்தணும் அதுதான் இந்த படத்தோட நோக்கம்''’என்றார்.


இனி மும்பை நடிகை வேண்டாம்!


மிஷ்கின் இயக் கத்தில் சேரன் நடிக் கும் "யுத்தம் செய்' படத்தில் தீபாஷா எனும் மும்பை பார்ட்டி நடிக்கிறார்.

ஷுட்டிங் ஸ்பாட் டில் "ராணி உபசாரம்' கேட்டு அம்மணி ரப்சர் பண்ணுவதால் இந்த மிஸ்ஸுக்கும், மிஷ் கினுக்கும் முட்டிக்கிச் சாம்.

‘"இனிமே மும்பைக்காரங்கள நடிக்க வைக்க மாட்டேன்' என ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சத்தம் போட்டுச் சொன்னாராம் இயக்குநர்.


ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி!


"சிவா மனசுல சக்தி' படத்தையடுத்து "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ராஜேஷ்.எம். ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருக்கும் இந்தப்படம் காதலும், நகைச்சுவையு மாக ரகளைகட்டி யிருக்கிறதாம். இந் தப்படத்தை வெளி யிடும் உதயநிதி, படம் பிடித்துப் போனதால் ராஜேஷ் இயக் கத்தில் நடிகராக அறிமுகமாகவிருக் கிறார்.


கேரவனில் கரணோடு தகராறு!


"சூரன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் கரண். படப்பிடிப்பிற்கு அடிக்கடி தாமதமாக வந்த பிரச்சனையால் கடுப்பான தயாரிப்பு தரப்பு கேரவனுக்குள் புகுந்து கரணோடு தகராறில் இறங்கிவிட்டார் களாம். மறுநாளிலிருந்து படப்பிடிப்பு தாமதமில்லாமல் நடந்துவருதாம்.

அப்படியா!கிக் பவுடர் சங்கதியில் ஒல்லி நடிகை பேர் அடிபட்டதன் பின்னணியில் நடிகையின் நீக்ரோ பாய்ஃபிரெண்ட்டான காஸ்ட்யூமர் இருக்கிறாராம். அவரோடு பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பார் நடிகை. இந்த நீக்ரோ மூலம்தான் போதை விற்ற நீக்ரோ பார்ட்டிக்கி நடிகையின் நம்பர் போயிருக்கு மோ... என நடிகை தரப்பு சந்தேகப்படுகிறது. "அவனால நம்மபேரு கெட்டுச்சோ' என பாய்ஃபிரண்ட்டை வாய்க்கு வந்த படி வதக்கி எடுக்குறாராம் நடிகை

No comments:

Post a Comment