Wednesday, August 11, 2010

திரைக்கூத்து!

ஆர்யா ஆட்டம்!


"ஜீன்ஸ்' உட்பட பல படங்களை தயாரித்த முரளிமனோகர் தயாரிப்பில் ஆர்யா - ஸ்ரேயா நடித்து வரும் படம் "சிக்கு புக்கு'. இந்தப் படத்திற்குப் பிறகு தான் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஆர்யா. ஆனால் ‘"பாஸ்' படத்தை தனது நிறு வனம் மூலம் விலைக்கு வாங்கிய ஆர்யா அதை உதயநிதி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ‘"பாஸ்' படத்தை உட னே முடித்துத் தரச்சொல்லி "பிரஷ்ஷர்' என உதயநிதியை கார ணம் காட்டி ‘"சிக்கு புக்கு' படத் தின் டப்பிங் வேலைகளை முடித்துத் தராமல் ஆர்யா இழுத்தடித்து வந்தார். "இன் னைக்கு டப்பிங் பேச வர் றேன்' என ஆர்யா சொல் வதை நம்பி டப்பிங் தியேட் டரை புக் பண்ணி வைப்பார் டைரக்டர் மணிகண்டன். ஆனால் வராமல் டேக்கா கொடுப்பார். இப்படி பல முறை நஷ்டப்படுத்தி விட்டார் ஆர்யா. இதையடுத்து "சிக்கு புக்கு' பட நிறுவனம் உதயநிதி தரப்பை தொடர்பு கொண்டு முறையிட... ‘"பாஸ் படத்தை உடனே முடித்துத் தரவேண் டும் என நாங்கள் எந்த நெருக்கடியை யும் தரவில்லை. ஆர்யா எங்க பேரை மிஸ்யூஸ் பண்ணுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல' எனச் சொல்லிவிட்டார் களாம். இதையடுத்தே ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறது "சிக்கு புக்கு' படக்குழு.


சிஷ்யனை மெச்சும் குரு!


"பச்சை என்கிற காத்து' படத்திற்காக கிராமிய வார்த்தைகளை யும், கிராமிய இசைக்கருவிகளையும் முழுக்க பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் கீரா. இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்த தங்கர்பச்சான், "என்கிட்ட இருந்து எத்தனையோ உதவியாளர்கள் வெளியேறி தனியா படம் பண்றாங்க. ஆனா கீரா மட்டும்தான் என்னோட சிந்தனைகளையும் உள்வாங்கி எடுத்துச் சென்றவர்' என தாராளமாகவே சிஷ்யனை மெச்சியிருக்கிறார் குரு.துரத்தும் த்ரிஷா!


த்ரிஷாவை ஒருதலையாக காதலித்து வரும் ஆர்யா, தன்னை காதலிக்கச் சொல்லி த்ரிஷாவை துரத்துகிறாராம். ஆனால் த்ரிஷா வுக்கு இன்னமும் விஜய் மீதான பிரியம் குறைய வில்லை. அவரை கல்யாணம் செய்துகொள்ளும் மனநிலையோடு இந்த துரத்தலை செய்கிறாராம். இந்த காதல் வில்லங்கம் முற்றிக்கொண்டு வரும் நிலையில் த்ரிஷாவை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினாராம் த்ரிஷாவின் அம்மா.

‘"எல்லா நடிகர்கள் கூடவும் பழகலாம். ஆனா எந்த நடிகரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவெல் லாம் வேணாம்' என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் மம்மி.


கர்ணன் VS துரியோதனன்!


சமீபத்தில் ‘"கௌரவர்கள்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த சத்யராஜ் ஒரு மிகப்பெரும் ரகசியத்தை உடைத்தார். உலகமே வியந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு, யாரோட நடிப்பு பிடிக்கும்னா பாலி வுட்டில் கொடிகட்டின திலீப்குமார் நடிப்புதான் பிடிக்கும். இதை சிவாஜி சாரே என்கிட்ட சொன்னார்.

திலீப்குமார் அதிகமாக வசனம் பேசாமல் பாவனையிலேயே அசத்து வார். திலீப்குமார் பாணியில் "கௌ ரவர்கள்' படத்தில் நடிக்க முயற்சித் திருப்பதாகச் சொன்னார் சத்யராஜ். உப்பிட்ட கடனுக்காக துரியோதனன் பக்கம் நின்றவன் கர்ணன். இது பாரதக்கதை. ஆனால் கர்ணனையும், துரியோதனனையும் எதிரிகளாக்கி இந்தக் கதையை உருவாக்கியிருக்காராம் டைரக்டர் சஞ்சய்ராம்.


கண்டுபிடிப்பு!
புதுசா வர்ற ஹீரோயினையும், பழசா இருக்கிற ஹீரோயின்களோடு ஒப்பிடுவதற்கான ஸ்பெஷல் உடற்கூறு அம்சங்களை பார்த்திபன் எப்புடித்தான் கண்டுபிடிப்பாரோ? "காதல் சொல்ல வந்தேன்' பட ஆடியோ விழாவில் ‘"நாயகி மேக்னா அப்புடியே நயன்தாரா மாதிரி இருக்கார்' என்றார்.

‘"இரண்டுமுகம்' ஆடியோ விழாவில் ஹீரோயின் சுஹானியை "அடுத்த நமீதா' என வர்ணித்திருக்கிறார். (நல்லா புடுச்சம்ல நமீதா போட்டா வுக்கு மேட்டர.)


அப்படியா?திருடன் பேரைக் குறிக்கும் சமீபத்திய ஹிட் படத்தின் நாயகி ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கலக்கல் பார்ட்டி கொடுத்தாராம். பார்ட்டியில் அம்மணி ரொம்பவே தாராளமயம் காட்ட... திக்கு முக்காடி விட்டார்களாம் முக்கிய புள்ளிகள்.

No comments:

Post a Comment