Wednesday, August 11, 2010

யுத்தம் 78 - நக்கீரன் கோபால்


வரும் வழியிலேயே தம்பி சுப்புவின் அக்கா கணவர் முருகேசனை அதிரடிப்படை போலீசார் மடக்கி, முகாமுக்கு இழுத்துச் சென்று விட்டார்கள்.

""சுப்பு எங்கே?''

""எங்களுக்குத் தெரியாதுங்க.''

""இப்படிக் கேட்டா உண்மை வராது''.

-அதிரடிப்படை முகாமுக்கே உரிய முறையில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார் முருகேசன். இரண்டு, மூன்று நாட்கள் இது போன்ற கொடூர சித்ரவதைகள் தொடர்ந்தன. சுப்புவின் இருப்பிடம் அவருக்கு உண்மையி லேயே தெரியாது என்ற உண்மையை அதிரடிப் படையினர் புரிந்துகொள்ள 3 நாட்களாயின. அதற்குள் சித்ரவதைகளால் நைந்துபோய்விட் டார் முருகேசன். அதன்பிறகுதான் அவரை வீட்டுக்கு அனுப்பியது அதிரடிப்படை முகாம். ஜெயலலிதா அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு நக்கீரன் தம்பிகள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினர்-உறவினர் என்று எல்லோருமே ஆளாயினர்.

பழிவாங்கும் நடவடிக்கையில் முதல் இலக்கான தம்பி சிவாவை, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரது அப்பாவின் முன் கொண்டுபோய் நிறுத்தவேண்டும் என்பதற்கான நக்கீரனின் சட்டப்போராட்டம் தீவிரமாகியிருந்த நேரம். ஊர் மக்களுக்கு வாக்கு கொடுத்தபடி, சிவாவை விரைவில் வெளியே கொண்டு வந்தாக வேண்டும்.

என்ன செய்வது என்பதற்காக ஈரோட்டில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு லாட்ஜில் நானும் வழக்கறிஞர் ப.பா.மோகனும் ரூம் போட்டு ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ப.பா.மோக னின் ஜூனியர்களும் உடனிருந்தனர். சிவா மீது மொத்தம் எத்தனை வழக்கு, அதில் எத்தனை வழக்கில் ஜாமீன் பெற்றிருக்கிறோம் என்பதிலிருந்து ஆலோசனை தொடங்கியது.

""சார்... தம்பி மேலே மொத்தம் 8 கேஸ். 1.கொள்ளேகால், 2.சாம்ராஜ்நகர், 3.வெள்ளித் திருப்பூர், 4.கந்தவேலு கொலை வழக்கு, 5. பக்தவத்சலம் கொலை வழக்கு, 6. ராஜ்குமார் கடத்தல், 7.பாலாறு பாம் ப்ளாஸ்ட், 8.கிருஷ்ணசாமி கடத்தல்''

-என்று நான் பட்டியலிட்டதும், ""அத்த னையும் பொய் வழக்கு'' என்றார் அட்வகேட்.

""ஆமாங்க சார்.. இதிலே கொள்ளேகால் கேஸில் முதலிலேயே பெயில் வாங்கிட்டோம். சாம்ராஜ்நகர் கேசுக்கு கர்நாடகா ஹைகோர்ட் டில் பெயில் கிடைச்சிடிச்சி. வெள்ளித்திருப்பூரி லும் கந்தவேலு கேசிலும் 90 நாளில் சார்ஜ் ஷீட் தாக்கல் செய்யாததால் பவானி கோர்ட்டில் பெயில் கிடைச்சிடிச்சி. இதே அடிப்படையில் பக்தவத்சலம் கேசில் கோவை ஜே.எம். ஐந்தாவது கோர்ட் மாஜிஸ்திரேட் திரு.ஜஸ்டின் டேவிட்டும், ராஜ்குமார் கேசில் சத்தியமங்கலம் மாஜிஸ்ட்ரேட் திரு.சுப்ரமணியனும் பெயில் கொடுத்துட்டாங்க. கிருஷ்ணசாமி கடத்தல் கேசில் எல்லோருக்குமே ஹைகோர்ட்டில் ஆன்டிசிபேட்டரி பெயில் கிடைச்சிடிச்சி.''

""அப்படின்னா பாலாறு கேசில் மட்டும் தான் பெயில் எடுக்கணும்.''

""ஆமா... அது தடா கேஸா மைசூர் கோர்ட்டில் நடக்குது. தடா கேஸில் 180 நாளுக்குள்ளே அந்த மாநில ஹோம் செகரட்டரி வழக்கு போட்டது சரி என்று சைன் பண்ணி லெட்டர் தரணும். என்.ராம் தலைமையில் பத்திரிகையாளர் டீம், கர்நாடக சி.எம்.மைப் பார்த்தப்ப, இந்த கேஸ் பற்றி சொன்னாங்க. சி.எம். கிருஷ்ணாவும் லெட்டர் தரவேணாம்னு அவங்க ஹோம் செகரட்டரிகிட்டே சொல் லிட்டார். அதனால 181-வது நாளில் அங்கே பெயில் கிடைச்சிடும். நாளைக்கு, நவம்பர் 1-ந் தேதிதான் 181-வது நாள். அதனாலதான் நான் சிவா ஊர் மக்கள்கிட்டே உறுதிகொடுத்துட்டு வந்தேன்.''

""கரெக்ட் கோபால் சார்... இந்த கேஸில் பெயில் எடுக்கிறதுக்காகத்தானே நாம மற்ற கேஸில் பெயில் கிடைத்தும் ஷ்யூரிட்டி பாண்ட் எக்ஸிகியூட் பண்ணாம இருக்கோம்'' என்றார் அட்வகேட் ப.பா.மோகன். பாலாறு வெடிகுண்டு வழக்கைத் தவிர, மற்ற அனைத்தும் தமிழகத்தில் நடக்கும் வழக்குகள். ஷ்யூரிட்டி கொடுத்து சிவாவை வெளியே எடுத்தால், அவரை மைசூர் சிறைச்சாலைக்கு கொண்டு போய் விடுவார்கள். அங்கேயிருந்து வெளியே எடுப்பது கஷ்டம். தமிழக சிறைத்துறை, நீதிமன்றங்களில் நியாய வான்கள் மிச்சமிருக்கிறார்கள். கர்நாடகத்தில் ஒரு தமிழ்ப்பத்திரிகையாளருக்கு கருணையை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், மைசூர் கோர்ட்டில் பெயில் கிடைத்ததும், மற்ற பெயில்களுக்கு ஷ்யூரிட்டி கொடுக்கலாம் எனக் காத்திருந்தோம்.

""கோபால் சார்... நாளைக்கு மைசூரிலும் ஷ்யூரிட்டி காட்டணும். மற்ற கோர்ட்டுகளிலும் ஷ்யூ ரிட்டி காட்டணும். அப்பதான் எல்லா இடத்திலும் க்ஷர்ய்க் ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ங் பண்ணி, கோவை ஜெயிலில் அதைக் காட்டி சிவாவை வெளியே எடுக்க முடியும். இல்லேன்னா லேட் ஆயிடும்'' என்றார் அட்வகேட்.

அத்தனை இடங்களிலும் ஒரே நேரத்தில் செயல் பட்டாகவேண்டும். எப்படி ஒர்க் பண்ணுவது என்ற ஆலோசனையில் நானும் ப.பா.மோகனும் ஈடுபட்டோம்.

""சார்.. தம்பி ஆத்தூர் சேகரை மைசூருக்கு அனுப்பிடுவோம். நாகப்பா கடத்தல் விவகாரத்தால அங்கே போக்குவரத்து இல்லை. ஒரு கார் எடுத்துக் கிட்டு, 3 ஷ்யூரிட்டிகளோடு இன்னைக்கே கிளம்பச் சொல்லிடுவோம். நாளைக்கு அங்கே ஷ்யூரிட்டி கொடுத்துட்டு, நேரா கோவை ஜே.எம்.5 கோர்ட்டுக்கு வந்து ஷ்யூரிட்டி காட்டட்டும். மைசூர் கோர்ட் பெயில் விவகாரத்தை நம்ம அட்வகேட் ஈஸ்வரசந்திராகிட்டே சொல்லி, அவரைப் போகச் சொல்லிடு வோம்'' என்றேன்.

அதுதான் சரி என்ற அட்வகேட் ப.பா.மோகன், ""கோவை கோர்ட்டில் நம்ம வக்கீல் அபுபக்கர் இருப்பார். அவரோடு நம்ம ஜூனியர்கள் திரு ஞானசம்பந்தத்தையும் லெனினையும் அனுப்பிடுவோம்.''

""சார்... பவானி கோர்ட்டுக்கு 4 ஷ்யூரிட்டி வேணும். தம்பி ஜீவாவையும் ஈரோடு ஏஜெண்ட் பெரியசாமியையும் ஷ்யூரிட்டிகளை அழைச்சிக்கிட்டு அங்கே போகச்சொல்லிடுவோம்.''

""அனுப்பிடுவோம் கோபால் சார்... ஜூனியர்கள் சிவராமன், முருகேசன், செந்தில் மூணு பேரும் அங்கே இருப்பாங்க. சத்தியமங்கலம் கோர்ட்டுக்கு நம்ம ஜூனி யர்கள் வெங்கடேஷும் கார்த்திக்கும் போயிடுவாங்க. ஷ்யூரிட்டி ரெடி பண்ணும் வேலையை தோழர்கள் ஸ்டாலின் சிவக்குமாரும் மோகன்குமாரும் பார்த்துக்கு வாங்க. நீங்களும் நானும் கோயம்புத்தூருக்கு போயிடு வோம். அப்பதான் க்ஷர்ய்க் ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ண்ர்ய்ஐ எல்லாம் ஜெயில் அத்தாரிட்டீஸ்கிட்டே காட்டி, சிவாவை வெளியே கொண்டு வரமுடியும்'' என்றார் ப.பா.மோகன்.

உடனே கர்நாடகா அட்வகேட் ஈஸ்வர சந்திராவை தொடர்புகொண்டு விவரத்தை சொல்கிறோம். ""அவரும் ரெடி'' என்கிறார். தம்பி ஆத்தூர் சேகரிடம் விவரத்தைச் சொல்ல, அவர் சிவாவின் சகலை நடேசன், பெரியவர் கருப்பணன், வெங்கடாச்சலம் மூவரையும் ஷ்யூரிட்டிகளாகவும் உடன் தன் நண்பர் சரவணனை உதவிக்கும் அழைத்துக்கொண்டு, அன்றிரவே காரில் புறப்பட்டுவிட்டார். ஷ்யூரிட்டிகள் 3 பேரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. போகும்வழியிலேயே அவரை டாக்டரிடம் காட்டி, மருந்து வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றார்.

அட்வகேட் ப.பா.மோகன் என்னிடம், ""சார்... மைசூர் கோர்ட்டில் க்ஷர்ய்க் ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ங் பண்ணும்போதே கோவை சிறைக்கு அதை ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ங் பண்ணச் சொல்லி ஆர்டர் வாங்கணும். இதை ஈஸ்வரசந்திராகிட்டே சொல்லணும்'' என்றார். உடனடியாக ஈஸ்வரசந்திராவைத் தொடர்புகொண்டு இதையும் தெரிவித்தேன். அதோடு, இன்னொரு முக்கியமான விஷயம் பற்றியும் ஆலோசித்தோம்.

பெயில் கிடைத்திருக்கும் ஒவ்வொரு வழக்கிலும் ஷ்யூரிட்டி கொடுத்ததும், ஒவ்வொரு கண்டிஷன் போடுவார்கள். ஒவ்வொரு கோர்ட்டும், ஒவ்வொரு ஊரில் தங்கி கையெழுத்துப் போடும்படி உத்தரவிடும். அப்படி உத்தரவிட்டால் என்ன செய்வது? ஒரே ஆள், ஒரே நாளில் எப்படி வெவ்வேறு ஊர்களில் கையெழுத்துப் போட முடியும்?

என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு சடாரென ஒரு ஐடியா.

"சாம்ராஜ்நகர் வழக்கில் தம்பி சிவாவுக்கு பெயில் கொடுத்த கர்நாடகா உயர்நீதிமன்றம், அவர் மைசூரில் தங்கி தினசரி சிட்டி கமிஷனரிடம் ஆஜராகி கையெழுத்துப் போடணும்னு உத்தர விட்டுள்ளது. இது ஹைகோர்ட் ஆர்டர். மற்ற வழக்குகளெல்லாம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், செஷன்ஸ் கோர்ட் என்று ஹைகோர்ட் டைவிட கீழே உள்ள கோர்ட்டுகளில் நடக்கும் வழக்கு. அதனால, ஹைகோர்ட் கண்டிஷனையே அமல்படுத்தும்படி மற்ற கோர்ட்டுகளில் கோரிக்கை வைத்து, நிபந்தனையை தளர்த்தும்படி ஆர்டர் கேட்டு வாங்குவோம்' என்று முடிவெடுத்தோம்.

கர்நாடக ஹைகோர்ட் ஆர்டர் காப்பியை காலையில் மற்ற கோர்ட்டுகளில் ஷ்யூரிட்டியுடன் சமர்ப்பித்தாக வேண்டும். ஆர்டர் காப்பியோ சென்னை அலுவலகத்தில் இருக்கிறது. நேரத்தைப் பார்க்கிறேன். இரவு 11 மணி.

அலுவலகம் பூட்டப்பட்டிருக்கும். ஆபீசை திறந்து ஆர்டர் காப்பியை எடுக்கவேண்டும். அதனால் எனது செயலாளர் தம்பி சிவக்குமாரை செல்போனில் பிடித்தேன்.

""தம்பி எங்கே இருக்கீங்க?''

""கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போய்க்கிட்டிருக்கேண்ணே..''

""ஆபீசை பூட்டியாச்சா?''

""ஆமாண்ணே... மழை ரொம்ப கடுமையா இருக்கு.''

உடன் தம்பி குருவிடம் ""ஆபீசை உடனடியாக திறக்க ஏற்பாடு செய், முக்கியமான வேலை இருக்கு'' என்றேன். அவரும் திறக்க ஏற்பாடு செய்தார்.

""தம்பி சிவா, குருவிடம் சொல்லி ஆபீசை திறக்க சொல்லியுள்ளேன். நீங்க... ஆஃபீசுக்கு போய், சாம்ராஜ் நகர் கேஸில் கர்நாடக ஹைகோர்ட் கொடுத்த ஆர்டர் காப்பியை எங்களுக்கு ஃபேக்ஸ் பண்ணுங்க. எவ்வளவு நேரமாகும் தம்பி?''

""அண்ணே... இங்கே சரியான மழை. டிராபிக் ஜாம் ஹெவியா இருக்கு. நான் ஆஃபீஸ் போனதும் உங்களை காண்டாக்ட் பண்ணு றேன்'' என்றார் தம்பி சிவக்குமார். அட்வகேட் ப.பா.மோகனின் நண்பர் கேசவன் ஒரு ஃபேக்ஸ் நம்பர் கொடுத்திருந்தார். அவரும், அட்வ கேட்டின் டைப்பிஸ்ட் பாலகிருஷ் ணனும் ஃபேக்ஸ் இருக்கும் இடத்தில் வெயிட் பண்ணிக்கொண் டிருந்தனர். ஃபேக்ஸ் வந்ததும் அதை எல்லா கோர்ட்டுகளிலும் சமர்ப்பிப்பதற்கு ஜெராக்ஸ் எடுத் தாக வேண்டும். அதனால் ஈரோடு நிருபர் பெரியசாமிக்கு தெரிந்தவர் ஒருவரின் ஜெராக்ஸ் கடையை திறந்துவைக்கச் சொல்லியிருந்தோம். இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகியும் சிவக்குமாரிடமிருந்து ஃபேக்ஸ் வரவில்லை.

ஏன்னா... சென்னையில்... திக்... திக்... திக்...!

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment