Wednesday, August 11, 2010


அண்டர் செகரட்டரி எனப்படும் சார்புச் செயலாளர்கள் முதல் அங்கன்வாடி-சத்துணவுப் பணியாளர்கள் வரை தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சீருடைப் பணியாளர்கள் எனப்படும் காவல்துறையினரும் அடக்கம். இந்த 13 லட்சம் அரசு ஊழியர்களில் சுமார் மூன்றரை லட்சம் பேர் பள்ளி ஆசிரியர்கள். 80 ஆயிரம்பேர் கல்லூரி ஆசிரியர்கள். 13 லட்சம் அரசு ஊழியர்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 3 வாக்காளர்கள் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர் கள்தவிர, பென்ஷன்தாரர்களையும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குகளையும் சேர்த்தால் 50 லட்சம் என்கிற அளவை எட்டும். ஏறத்தாழ அரைகோடி வாக்காளர்களைக் கொண்டதாக இருக்கிறது அரசு ஊழியர்களின் குடும்பங்கள்.


அரசு ஊழியர்களுக்கான சங்கங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி அண்ட் டி பிரிவு) ஆகியவை இரண்டும் அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களாகும். இவற்றைத்தவிர, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தலைமைச் செயலகப் பணியாளர் சங்கம் ஆகியவை அதிக அரசு ஊழியர்களை உறுப் பினர்களாகக் கொண்டிருக்கும் பிற சங்கங்களாகும். ஆசிரியர்களுக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், இளநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், கல்லூரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகள் உள்ளன.


பல்வேறு சங்கங்கள், பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அரசு ஊழியர்கள் இனம் காணப்பட்டாலும் தேர்தலில் ஜாதியோ சங்கங்களோ பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவ தில்லை என்பதைச் சங்க நிர்வாகிகளே தெரிவிக் கிறார்கள். எந்த அரசு தனது ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கிறது என்கிற அடிப்படையி லேயே வாக்களிக்கிறார்கள். இந்தச் சலுகைகள் அனைத்து சாதிகளையும் சேர்ந்த அரசு ஊழியர் களுக்கும் கிடைப்பதால், அரசு ஊழியர்களின் வாக்களிக்கும் முறையில் சாதிக் கணக்கும் பெரியளவில் இருப்பதில்லை.


இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் ஆதரவு எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த அளவில் இருக்கிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.


அரசு ஊழியர்களில் ஏறத்தாழ நான்கில் 3 பங்கு ஆதரவை தி.மு.கவே பெற்றிருக்கிறது. இதற்கு காரணம், கலைஞரின் அரசு ஊழியர் ஆதரவு நிலைப்பாடுகளும், ஜெ.வின் அரசு ஊழியர் விரோதப் போக்குகளுமே காரணமாகும். ஜெ ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்கள் நடத்திய போராட் டங்களின்போது எஸ்மா-டெஸ்மா ஆகிய சட்டங்களைக் காட்டி மிரட்டல், கைது, ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைபறிப்பு ஆகியவை நடந்தன.


அத்துடன், ஓய்வூதிய பலன்களில் கட், ஜி.பி.எஃப் லோன் கட், சரண்டர் லீவுக்கான சம்பளம் கட், திருவிழா முன்பணம் கட் என பலவற்றை ரத்து செய்தார் ஜெ. இவை யனைத்தும் கலைஞர் அரசில் மீண்டும் கிடைத் துள்ளன. அத்துடன் மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.


கலைஞர் ஆட்சி அமைந்த 89-91, 96-2001, 2006 முதல் தற்போது வரை ஆகிய காலகட்டங்களில்தான், மத்திய அரசு நியமிக்கும் ஊதியக் கமிஷனின் அறிக்கைகள் வெளியாகின்றன. அவை உடனே தமிழக அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக நடைமுறைப் படுத்தப்படுவதால் அரசு ஊழியர்கள் பலன் பெறுகிறார்கள்.மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் ஆகிய புதுப் பணியிடங்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம், கல்லூரி-பள்ளி ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதுடன் அவர்களின் குடும்பத்தினர்- உறவினர்களின் வாக்குகளும் தி.மு.கவுக்கு சாதகமாக அமைகிறது. கடந்த நான்காண்டுகளில் மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரி விக்கிறது.


அதே நேரத்தில், காலியாக இருக்கும் மீதிப்பணியிடங்களை நிரப்பாததால் தற்போதுள்ள ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமை, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட் டாலும் வீட்டுவாடகைப்படி உள்ளிட்ட இதரப்படிகள் உயராமல் இருப்பதும், இவை குறித்து சீர் செய்வதற்காக அமைக்கப்பட்ட ராஜீவ்ரஞ் சன் கமிஷனின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும் தி.மு.க. அரசுக்கு எதிரான அம்சங்களாக இருக் கின்றன.


ஜெயலலிதா எதுவும் செய்யமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் கலைஞரிடம்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை நிறை வேற்றாமல் இருக்கும்போது அதிருப்தி ஏற்படுகிறது என்கிறார்கள் இந்தக் கோரிக்கைகள் வலியுறுத்தும் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ள தி.மு.க., அவர்களின் மேலும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் ஏறத்தாழ ஒட்டுமொத்த வாக்குகளையும் பெறக்கூடிய வாய்ப்பிருப்பதை நமது கள ஆய்வில் அறிய முடிந்தது.

No comments:

Post a Comment