Sunday, August 1, 2010

சென்சார் அதிகாரிக்கு காப்பு!
"காதல் சொல்ல வந்தேன்'’படத்துக்கு தணிக்கை சர்டிபிகேட் கொடுக்க லஞ்சம் கேட்ட ஊழல் முதலை ஒன்றை குறிவைத்துப் பிடித்திருக்கிறது சி.பி.ஐ. டீம்.

இந்த ஊழல் முதலை விவகாரத் துக்குப் போவதற்கு முன்... டிராஜிடியும் நெகிழ்ச்சியும் கலந்த ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.அமைச்சர் பரிதி இளம்வழுதி யின் செல்லமகன் பெயர் அப்பு. துரு துருவென அழகாய் இருப்பார். கல்லூரி ஒன்றில் படித்து வந்த அப்பு மீது பரிதியும் அவர் மனைவியும் உயிரையே வைத்திருந்தனர். இந்த நிலையில்... திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பு இறந்துபோனார். இந்த சோகத்தைத் தாங்கமுடியாமல் பரிதி குடும்பம் திணறியது. பரிதியின் மனைவி, மகன் நினைவாக எப் போதும் அழுதுகொண் டே இருந்தார்.

இந்த நிலையில் விஜய் டி.வி.யில் "கனா காணும் காலங் கள்'’தொடரில் நடித்துக்கொண் டிருந்த பாலாஜி யைப் பார்த்து திகைத்துப்போய்விட்டார் பரிதி மனைவி. காரணம்... தன் மகன் அப்புவின் சாயலில் அப்படியே இருந்தார் பாலாஜி. உடனே தன் கணவரான பரிதியிடம்... ""இந்தப் பையனைப் பார்த்தா நம்ம அப்பு மாதிரியே இருக்கு. இப்பவே இந்தப் பையனை நேர்ல பார்க்கணும் போலிருக்கு. எப்படியாச்சும் நீங்க இந்தப் பையனைக் கண்டுபிடிச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க''’ என அழ ஆரம்பிக்க... பரிதியே அந்த பாலாஜியைத் தேடி களம் இறங்கினார்.

சென்னை கோயம்பேட்டில் பாலாஜியின் அப்பா காய்கறிக்கடை வைத்திருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டு.... பாலாஜியை நேரில் சந்தித்தார். தன் மகன் அப்பு பற்றி எடுத்துச்சொல்லி... பாலாஜியை வீட்டுக்கு அழைத்து வந்தார். பரிதியின் மனைவி, பாலாஜியை தன் மகனாகவே பார்த்து கண்ணீர் வடித்தார். புத்தாடைகள் கொடுத்து, தன் கைகளால் சாப்பாடு போட்டார். அதிலிருந்து அடிக்கடி பாலாஜி, பரிதி வீட்டிற்கு வந்து போவார்.

பாலாஜிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பரிதி... தன் நண்பரான எஸ்-3 பிலிம்ஸ் ஜெயக்குமா ரிடம் பாலாஜியை அறிமுகப்படுத்த... ஜெயக்குமாரோ... பாலாஜியை ஹீரோ வாகப் போட்டு படம் எடுக்கும் முடிவுக்கு வந்தார். இப்படித்தான் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் "காதல் சொல்ல வந்தேன்'’ படத்தின் ஹீரோவாக ஆனார் பாலாஜி. ஹீரோயின் மேக்னா. படத்துக்கு இசை யுவன். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. படப்பணிகள் முடிக் கப்பட்டு... தணிக்கைச் சான்றிதழுக்காக சென்னை சாஸ்திரிபவனில் இருக்கும் அதற்கான அலுவலகத்துக்குப் போனது. அங்கு மண்டல அதிகாரியாக இருந்த ராஜசேகர்... ""எனக்கு ஒரு லட்சரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் கொடுப்பேன்'' என்று சொன்ன தோடு... படத்தையும் பார்க்காமல் சான்றிதழையும் தராமல் இழுத்தடித்தார்.

படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வரதராஜன், ""நானும் தணிக்கைக் குழுவில் உறுப்பினரா இருந்தவன்தான். எங்கக்கிட்டயே கறாரா பணம் கேட்டா எப்படி?''’ என்று பேசிப் பார்த்தார். ஊழல் முதலையான ராஜசேகர்... ""பணமிருந்தால் வாங்க. படத்தைக் கூடப் பார்க்காம... சர்டிபிகேட் கொடுக்கு றேன்''’என்றார் விடாப்பிடியாக. ""சரி பணத் தோட வர்றேன்'' என்றபடி அங்கிருந்து கிளம் பிய வரதராஜன்... அதே சாஸ்திரிபவனில் இருந்த சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இன்னொரு பட நிர்வாகியான கோவிந்தராஜை அனுப்பினார்.

டி.ஐ.ஜி. அருணாச்சலத்திடம் விவரங் களைச் சொல்லிப் புகார் கொடுத்தார் கோவிந்தராஜ். உடனே சி.பி.ஐ. டீம் அதிரடி ஆக்ஷனுக்கு ரெடியானது.

10 ஆயிரம் ரூபாயை ரெடிசெய்து.. அதன் எண்களைக் குறித்துக்கொண்டதோடு... அந்தப் பணத்தை அப்படியே ஸ்கேன் செய்து கொண்டனர். பின்னர் அதை கோவிந்த ராஜிடம் கொடுத்து ராஜசேகரிடம் அனுப் பினர். ""என்ன 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கா. மிச்சத்தை எப்பத் தருவீங்க?''’என்றபடி ராஜசேகர் அந்தப் பணத்தை வாங்கி சட்டைப் பைக்குள் வைக்க... அதே நேரம் அவர் அறைக்குள் நுழைந்த எஸ்.பி.ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.பி.ஐ. டீம், புழல் சிறைக்கு ராஜசேகரை அனுப்பி வைத்தது.

தஞ்சாவூர்க்காரரான ராஜசேகர் பஞ்சாப் கேடரில் ஐ.எஃப்.எஸ். படித்து... விலங்குகள் சரணாலய அதிகாரியாக இருந்தவர். சினிமாப் புள்ளிகளின் நட்பிற்காகவும் சம்பாதிப்பதற்காகவும்... கொஞ்சம் செலவு செய்து விருப்ப மாறுதல் வாங்கிக் கொண்டு கடந்த ஜூன் 17-ந் தேதிதான் இங்கு வந்து சேர்ந்தார். 40 வயதுக் காரரான ராஜசேகர், இங்கு வந்த 40-வது நாளிலேயே லஞ்ச வழக்கில் சிக்கி கைதாகியிருக்கிறார். இந்த 40 நாளில் அவர் தணிக்கைச் சான்று கொடுத்த படங் களின் எண்ணிக்கையும் 40 என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக இருக்கிறார். குழந்தைகள் இல்லை. இருந்தபோதும் பண ஆசை... ராஜசேகரை விடவில்லை.

ராஜசேகர் முதலில் கொடுத்த தணிக்கைச் சான்று.. "ராவணன்' படத்துக்காகத்தான். இதற்காக 75 ஆயிரம் ரூபாய் மொய் வசூலித்திருக்கிறார். சின்ன சின்ன புரட்யூசரைக்கூட விடாமல் கறாராக லஞ்சத்தைக் கேட்டு வாங்கிய ராஜசேகர்... இந்த 40 நாளில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறார் என்கிறது தணிக்கை அலுவலகத் தரப்பே.

No comments:

Post a Comment