Wednesday, August 11, 2010

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு - நக்கீரன் தேர்தல் கள ஆய்வு முடிவு!


ஒரு ஆட்சியின் நிர்வாகத்திறனை வெளிப் படுத்துவதில் முக்கிய அம்சமாக இருப்பது சட்டம்-ஒழுங்கு எந்தளவில் பாதுகாக்கப்படுகிறது என்பதுதான். திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சி அமைந்ததிலிருந்து, சட்டம்-ஒழுங்கை நிர்வாகம் செய்யும் காவல் துறையை (உள்துறை) முதலமைச்சர்களே தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். தற்போதும் முதல்வர் கலைஞர் அவர்களின் நேரடி நிர்வாகத்தில் காவல்துறை உள்ளது.

கடந்த நாலேகால் ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள சாதாரண பொதுமக்களை பாதிக்கும் வகையில் பெரியள விலான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் நடைபெறவில்லை. எனினும், 2006 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆளுங்கட்சியினர், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி நடத்திய தேர்தல் முறை கேடுகள், தி.மு.க. ஆட்சியின் முதல் சட்டம்-ஒழுங்கு பிரச் சினையானது. அதனைத் தொடர்ந்து 2007-ல் போலீ சார் முன்னிலையில் மதுரை தினகரன் அலுவலகத்தை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தீவைத்து எரிக்க, அதில் 3 பேர் பலியாயினர். தனது நிர் வாகத்தில் உள்ள போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த தை அறிந்த முதல்வரே இச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிட நேர்ந்தது.

சென்னை சட்டக் கல்லூரியில் இருதரப்பு மாண வர்களிடையே நடைபெற்ற மோதலை போலீசார் வேடிக் கை பார்த்தபடி நின்றதும், சென்னை உயர்நீதிமன்றத் தில் சில வழக்கறிஞர்கள் திட்டமிட்டு உருவாக்கிய வன்முறையை, லாவகமாகக் கையாளாமல் கடுமையான தடியடி வரை சென்று, நீதி பதியே தாக்கப்படும் நிலைமை உருவாகி, கமிஷன் விசாரணை-உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்கிற அளவுக்குச் சென்றதும் காவல் துறைக்கு அவப்பெயரை உண்டாக்கிய சம்பவங்க ளாகும்.

இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர் தல்களின்போது ஆளுங் கட்சியின் பண விநியோ கத்திற்கும்-தேர்தல் யுக்தி களுக்கும் காவல்துறை அதிகாரிகள் துணை நிற்பதாக தேர்தல் ஆணையத் திடம் எதிர்க்கட்சிகள் புகார் செய்வதும், இதை யடுத்து காவல்துறை யினர் இடமாற்றம் செய் யப்பட்டதும் கடந்த 4 ஆண்டுகளாகத் தொ டர்ந்து நடைபெற்று வந்துள்ளன.

போலீஸ்துறையில் இருப்பவர்களை அரசாங்கமே இடமாற்றம் செய்யும்போது, புதிய இடத்திற்குச் செல்லாமல், பழைய இடத்திற்கே திரும்பிவிடும் போக்கும் கடந்த 4 ஆண்டுகளில் நீடித்து வந்துள்ளது.

தனிப்பட்ட நிகழ்வு கள், தனிப்பட்ட அதிகாரி களின் செயல்பாடு கள் இவற்றால் அவ்வப் போது சில சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்தபோதும், கடந்த நாலேகால் ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் பெரிய சாதி மோதல்களோ, மத மோதல் களோ நடைபெறவில்லை. கடந்த 25 வருடங்களில் சாதிக்கலவரம் பதிவாகாத ஆண்டுகள் என்றால் அது இந்த 4 ஆண்டுகள்தான்.

மற்ற தென்மாநிலங்களான கேரளாவில் மதமோதல்கள் தொழில்துறை சார்ந்த அமைதியின்மையும் சட்டம்-ஒழுங்கிற்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம்-மக்கள் யுத்தக்குழுவின் தாக்குதல்கள் ஆகியவை அம்மாநில காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இனரீதியான வெறுப்பு, அதனால் கலவரங்கள், அரசியல் குழப்பங்களால் அடிதடி ஆகியவற்றால் கர்நாடகக் காவல்துறையும் திணறுகிறது. இவற்றோடு ஒப்பிடும்போது, சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அமைதி தவழும் மாநிலமாகவே தமிழகம் காணப்படுகிறது.

No comments:

Post a Comment