Thursday, August 12, 2010

நகரத் தந்தையின் கேங் ரேப்!


ராமேஸ்வரம் தி.மு.க. சேர்மன் மீது எழுந்திருக்கும் பகீர்ப் புகாரால் சங்கடத்தில் கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட உ.பி.க்கள். சேர்மன் ஜலீல் தன் சகாக்கள் 6 பேருடன் கைதாகி கம்பி எண்ணிக்கொண்டிருக்க... இதற்குக் காரணமான யாஸ்மின் பானுவிடம் என்ன நடந்தது என்றோம்.

""எனக்கு சொந்த ஊர் கீழக்கரை. என் கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு. என் கண வரின் நண்பர்தான் சேர்மன் ஜலீல். பல முறை என் கணவரோடு என் வீட்டிற்கு ஜலீல் வந்திருக்கிறார். இந்த பழக்கத்தின் அடிப்படையில் கொஞ்ச நாட்களுக்குமுன் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் கடனாக வாங்கிச்சென்று திருப்பித் தராமல் இழுத்தடித்தார். தொடர்ந்து கேட்டபோது என்னை ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னார். நானும் என் தோழி நிஷாவை துணைக்கு அழைத்துக்கொண்டு ராமேஸ் வரம் போனேன். அங்கு பஸ் ஸ்டாண்டில் என்னை பிக்கப் செய்துகொண்ட ஜலீல் தன் ஐஸ்பிளாண்ட் ஆபீசுக்கு பணம் கொடுப்பதாக அழைத்துச்சென்றார். அங்கு அவர் கொடுத்த கூல்டிரிங்ஸைக் குடிச்சேன். எனக்கு தலை சுத்தல் உண்டா னது. அப்போது.. "என்ன தைரியம் இருந்தா பணம் கேட்டு வருவே' என்றபடி ஜலீலும்... அவர் நண்பர்களும் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். அதோடு உடம் பெங்கும் சிகரெட்டால் சூடுவைத்தும் கத்தியால் கீறியும் சித்ரவதை செய்தனர். உச்சகட்டமா தங்கள் செல் போனாலும் அந்த அசிங்கமான கொடுமைகளை... படம் பிடிச்சாங்க. இனி பணம் கேட்டா அந்தப் படங்களை இண்டர்நெட்டில் போட்டுவிடுவதாக மிரட்டி.. என்னை அடித்துத் துரத்திவிட்டார் ஜலீல்''’என்றபடி கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.


யாஸ்மினோடு ஜலீலைப் பார்க்க சென்ற நிஷாவிடம்... "உங்களுக்கு அந்த ஜலீல் டீம் டார்ச்சர் கொடுக்கலையா?' என்றோம். நிஷாவோ... ""நான் வெளியில் தப்பிப்போய் தகவலை பரப்பிடக்கூடாதுன்னு என்னையும் நிர்வாணப்படுத்தி உட்கார வச்சாங்க. அதைப் படமும் எடுத்தாங்க. ஆனா பாலியல் ரீதியா அவங்க யாஸ்மினைத்தான் குதறியெடுத்தாங்க. எல்லோரும் கஞ்சா போதையிலும் குடிபோதையிலும் இருந்ததால்... என்னால யாஸ்மினைக் காப்பாத்த முடியலை. அவங்க செஞ்ச கொடுமைகளுக்கு நான்தான் நேரடி சாட்சி''’என்றார் எந்த சலனமும் இல்லாமல்.

நாம் கீழக்கரையில் யாஸ்மின் பற்றி விசாரித்தோம். அங்கிருந்த த.மு.மு.க.பிரமுகர் ஒருவர் ‘""யாஸ்மினின் நடத்தை யைப் பிடிக்காமல்தான் அவள் கணவர் அவளைப் பிரிஞ்சி போய்ட்டார். நிஷாவோட சேர்ந்து யாஸ்மின் பல லாட்ஜுகளுக்குப் போனதா பேச்சு அடிபடுது. இதைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பலை''’என்று முடித்துக்கொண்டார்.

""சேர்மன் பதவிக்கே தகுதியில்லாத ஆள் ஜலீல். இவர் மீது ஆறேழு வழக்கு பதிவாகியும் சில போலீஸ் அதிகாரிகளின் தயவால் இவர் இத்தனை நாள் தப்பிச்சிக்கிட்டே வந்தார். இப்படிப்பட்ட ஒருத்தரை நகரத்தந்தை என்று சொல்லவே வெட்கமாக இருக்கு. இவரைப் பதவியில் இருந்து நீக்கணும்னு வலியுறுத்தி நாங்க தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போறோம்'' என்கிறார் சி.பி.எம். பிரமுகர் செந்தில்வேல்.

சேர்மன் மீதான புகாரால் பரபரப்பில் மூழ்கியிருக்கிறது ராமேஸ்வரம்.

No comments:

Post a Comment