shockan.blogspot.com
பள்ளியில் படிக்கும்போதே விளம்பரப் படங்கள் மூலம் நடிப்புத் துறைக்குள் நுழைந்த த்ரிஷா, மிஸ் சென்னை பட்டத்தை வென்றதும் மவுனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதலில் ஒப்பந்தமானது லேசா லேசா படம் என்றாலும் அந்த படம் நான்காவது படமாகத்தான் ரீலிஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது கண்டிப்பாக சொல்கிறேன், என்றார்.
தனது பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து கூறிய த்ரிஷா, எனக்கு அப்பா அம்மா என்றால் உயிர். எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது. வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
த்ரிஷாவின் அம்மா உமா கூறுகையில், என் மகளை செல்லமாக வளர்த்து வருகிறோம். அவருக்கு பிடித்தவரை அவர் மணந்து கொள்ளலாம். த்ரிஷாவை கண்ணின் இமை போல பாதுகாக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment