Tuesday, August 24, 2010
போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர். இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளையாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனிவர்மாவை பிரகாஷ்ராஜ் மணந்தார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
தேனிலவுக்காக சிம்லா, குலுமனாலி செல்ல திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்கு இருவரும் மும்பையில் தங்குகின்றனர். இதற்காக ஜுகு பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் 2000 சதுர அடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment