Thursday, August 19, 2010

பணம் சர்ச்சையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.!



""இருபது லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார் குடியாத்தம் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் லதா!'' என்று ரியல் எஸ்டேட் அதிபர் மொசைக் செல்வம் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை போலீசாரிடம் கொடுத்த மாவட்ட ஆட்சியர் ""புகாரைப் பதிவு செய்யுங்கள். விசாரியுங்கள். உண்மை என்றால் நடவடிக்கை எடுங்கள்!'' என்றார்.

கும்பல் சேர்த்தார், பணம் கேட்டார், மிரட்டினார் என 5 பிரிவுகளில் 13.8.10 அன்று, எம்.எல்.ஏ. லதா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ்.

எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேட்டோம். ""ஜோதிமடம் ஏரியாவில் 3.29 ஏக்கர் நிலத்தை 2007-ல் வாங்கினேன். அந்த இடத்தில் 36 குடும்பத்தினர் குடியிருந்தனர். அவர்களைக் காலி செய்யச் சொன்னேன். அவர்கள் அ.தி.மு.க. கவுன்சிலர் பார்த்திபன் மூலம் என்னிடம் வந்தார்கள். அந்த 36 பேருக்கும், காலியார் கிராமத்தில் குடிசைகள் போட்டு, எல்லா வசதிகளும் செய்து கொடுத்தேன். இவர்களில் 7 பேர் மட்டும் எங்களுக்கு இடம் வேண்டாம். ரொக்கமாக கொடுங்கள் என்றார்கள். தலா 40 ஆயிரம் கொடுத்தேன். என்னிடம் பணம் வாங்கிய இந்த 7 பேரும் எம்.எல்.ஏ. லதாவை போய்ப் பார்த்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ. தூண்டுதலால் கலெக்டரிடம் "எங்கள் வீடுகளை இடித் துத் தரைமட்டமாக்கி, எங்களைத் துரத்தி விட்டார் கள்' என்று பெட்டிஷன் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு எம்.எல்.ஏ.வின் ஆட்கள் என் நிலத்தில் வந்து தகராறு செய்தார்கள். ஏரியா கவுன்சிலர் பார்த் திபன் போய் எம்.எல்.ஏ.வைப் பார்த்து முடிந்த ஒரு விஷயத்தை ஏன் பிரச் சினை ஆக்குகிறீர் கள் என்று கேட்டதற்கு, "எனக்கு 20 லட்சம் வாங்கிக் கொடு, நான் சைலண்ட் ஆகிவிடுகிறேன்' என்றாராம் எம்.எல்.ஏ. அதனால்தான் புகார் கொடுத்தேன். பார்த்திபனும் புகார் கொடுத்திருக் கிறார்!'' என்றார் மொசைக் செல்வம்.

இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த போதுதான், காலி செய்யப்பட்ட மக்களை, அதே நிலத்தில் குடியமர்த்த வேண்டுமென்று, 12.8.10 அன்று குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான எம்.எல்.ஏ. லதா, நெஞ்சு வலியென மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருக்கிறார். எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி மார்க் சிஸ்ட் மா.செ.நாராயணனிடம் கேட்டோம்.

""நகராட்சியின் பாட்டைப் புறம்போக்கில் குடியிருந்த மக்க ளை ரவுடிகளை ஏவி காலிசெய்ய வைத்திருக்கிறார்கள். வீடுகளை புல்டோசர் வைத்து இடித்திருக் கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காக 3 முறை போராட்டம் நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கப் போன எம்.எல்.ஏ. லதாவை மிரட்டியிருக்கிறார் கவுன்சிலர் பார்த்திபன். நாங்கள் புகார் கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. சி.எஸ்.ஆர். கூட போடவில்லை. ஆனால் செல்வம் புகார் கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்காக செல்வத்தின் மீது மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்வார் எம்.எல்.ஏ. லதா!'' என்றார் மா.செ. நாராயணன்.

கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் உள்ள எம்.எல்.ஏ. லதாவைச் சந்தித்து விட்டு வந்த மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் ""இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற் காக ஆளும் கட்சி செய்யும் சதி. இதைக் கண்டித்து, தமிழகம் முழு வதும் போராட்டம் நடத்தவுள் ளோம்'' என்கிறார். இருந்தாலும் எம். எல்.ஏ. லதா மீதும் அவர் கணவர் மீதும் தொகுதியில் புகார்கள் எழுந்து கொண்டேதான் உள்ளது.

No comments:

Post a Comment