Monday, August 16, 2010
நிர்வாண ஊர்வலம்! -ஷாக் ரிப்போர்ட்!
குடும்ப கௌரவத்தை காப்பதாக எண்ணி.... சாதி மாறியோ... மதம் மாறியோ காதலிப்பவர்களைக் கொலை செய்வதும்... அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடக்கவிட்டு சித்ரவதை செய்யும் கொடுமை பரவலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப் பாக வட மாநிலங்களில் தொடங்கியிருக்கும் இந்த கொடூரக் கலாச்சாரம்... நாடுமுழுக்க பரவும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் பகீரடைந்திருக்கிறார்கள்.
சம்பவம்-1 :
மேற்குவங்க மாநி லம் சூரி பகுதியில்... கடந்த வாரம் பல செல்போன் களில் அந்த பகீர்க் காட்சி பரவியது. 17 வயதே ஆன ஒரு ஆதிவாசி இளம்பெண்... ஊர்மக்கள் முன் நிறுத்தப்படுகிறாள். அவளின் ஆடைகளை சிலர் பலவந்தமாகக் கிழித்தெறிகிறார்கள். கதறியழும் அந்த இளம்பெண்ணோ கைகளால் தன் அங்கங்களை மறைத்துக்கொள்ள படாதபாடு படுகிறாள். அப்போது அவளது கைகளை அங்கங்களில் இருந்து எடுக்கச் சொல்லி கம்பால் அவளை அடிக்கிறார்கள் சில முரடர்கள். சிலர் அவளது உடல் பாகங்களைத் தொட்டு கேலிபேசிச் சிரிக்க... அவளோ கதறுகிறாள். அந்த நிர்வாண நிலையிலேயே அவளை ஏறத்தாழ 10 கி.மீ. தூரம் தெருத்தெருவாக நடக்க விட்டு.. அந்தக் கும்பல் அவளை சித்ரவதை பண்ணிக்கொண்டே வருகிறது. இதை பலரும் தங்கள் செல்போனில் படம்பிடித்தபடியே வருகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவள் மயக்க நிலையை அடைகிறாள். கால்கள் பின்ன... அவளது நடை தள்ளாடுகிறது.
அப்போது அவள் மீது இடியாய் பிரம்படிகள் விழுகிறது. வலி ஏற்படுத்திய சுதாரிப்பால் மீண்டும் நடக் கிறாள். 11 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோக் காட்சியைக் கண்டவர்கள் பதறிப் போனார்கள். அதி காரிகளுக்குத் தகவல் போக... விசாரித்து நடவடிக்கை எடுக் கும்படி போலீஸுக்கு உத்தரவு போகிறது. அந்த செல்போன் காட்சிகளை ஆராய்ந்த காக்கிகள்... ராம்புத்காத் பகுதியில் இருக்கும் கிராமப் பகுதிதான் அது என கண்டுபிடிக்கிறார்கள். அங்கு விசாரணை நடத்தி.... அந்தக் கொடூரச்செயலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர். ’’கள்ளக் காதலில் ஈடுபட்டதால்தான் இப்படி செய்தோம். எங்கள் கிராமத்தின் கௌரவத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டாமா?’எனக் கேட்ட அந்த அயோக்கியர்களை செமையாய் கவனித்து ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள் காக்கிகள்.
சம்பவம்-2 :
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் நகருக்கு அருகில் இருக்கும் நான்பெட் கிராமம். அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் கால்நடை மருத்துவருக்கும் தவறான உறவு இருப்பதாக அந்த கிராமத்தினர் கருதினார்கள். கண்காணிப்பு தொடர்ந்தது. ஒருநாள் கால்நடை மருத்துவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தார். இருவரும் வீட்டுக்குள் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கிராமத்தினர்... இரு வரையும் அடித்து உதைத்தனர். அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது என அவர்கள் முடிவு செய்ய... ஊர் பெரிசுகளோ.. கொலை யெல்லாம் வேணாம். அம்மணமா ஊர்வலம் விட்டு அசிங்கப்படுத்துங்கப்பா’ என ஆலோ சனை வழங்க... அந்தப் பெண்ணையும் டாக்டரையும் பலவந்தமாக நிர்வாணமாக்கி... 3 மணிநேரம் ஊர்வலம் விட்டு.... ஆனந்தப்பட்டனர். சிலர் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தங்கள் செல்போனில் படம்பிடித்தும் ரசித்தனர். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குப்போக... ஊர்பிரமுகர்கள் பலர் இப்போது கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்.
சம்பவம்-3 :
உ.பி. மாநில அலிகாரில் இருந்து 20-வது கிலோ மீட்டரில் இருக்கும் சந்துகா கிராமம். இங்குள்ள பிர்மாதேவி என்ற குடும்பத்தலைவி கோயிலுக்குப் போய்விட்டுவர.. ஊர் விடலைகள் சிலர் அவரைக் கேலி செய்தனர். உடனே பிர்மாதேவி போலீஸுக்குப் போய்ப் புகார்கொடுத்தார். இதையறிந்த கிராமத்தினர் பஞ்சாயத்து கூட்டி, ‘கேவலமான புகாரைக் கொடுத்து... "நம்ம கிராமத்தின் மானத்தையே வாங்கிவிட்டாள் பிர்மாதேவி, இதற்கு பதிலுக்கு பதில் அவள் மானத்தை நாம் வாங்க வேண்டும்'’ என தீர்மானம் போட்டனர். பிறகு?
பிர்மாதேவியை தெருவிற்கு இழுத்துவந்து உடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக்கினர். அடித்து உதைத்து தெருத்தெருவாக நடக்கவிட்டு தங்கள் கொடூரத்தை அரங் கேற்றினர். இந்த விவகாரமும் விசுவரூப மெடுக்க... இந்த கொடூரத்துக்கு காரணமான மாவட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மூல்சந்த் உட்பட 6 பேரை அள்ளிக் கொண்டுபோய் சிறையில் போட்டிருக்கிறது போலீஸ்.
-இப்படியாகக் காதலர்களுக்கு.. குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும் சம்பவங்கள் நாட்டையே உலுக்க ஆரம்பிக்க... பெண் கொடுமை களுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்கிற குரல்கள் தற்போது நாடாளு மன்றம்வரை எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.
தேசிய சமூகநல வாரியத் தலைவியான பிரேமா கரியப்பா சொல்கிறார்...’’""இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை எங்களுக் கெல்லாம் தந்திருக்கிறது. தாலிபான்கள் ஸ்டைலில் இவர்கள் அரங்கேற்றிவரும் இதுபோன்ற கொடுமை கள்... எவ்வளவு மோசமான காட்டுமிராண்டித்தனம். இதுபோன்ற வன்முறைகளில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்கிற பயிற்சியை மாணவி களுக்கும் உழைக்கும் மகளிருக்கும் பயிற்றுவிக்கும் முடிவில் இருக்கிறோம்.
அதோடு இதுபோன்ற நிர்வாண ஊர்வலக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுவது குறித்து டில்லியில் வரும் 26-ந் தேதி எங்கள் செயற்குழு கூடி ஆலோசிக்க இருக்கிறது.
சமீபத்தில்தான் ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் நூறு ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஒரு பூப்பு நீராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பெண்களை வெறுக்கும் அந்த கிராமத்தில்... பெண் குழந்தைகளை பிறந்தவுடனேயே கொன்றுவிடுவார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழித்தால்தான் சமூகம் ஆரோக்கிய மானதாக இருக்கமுடியும்''’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment