டெல்லி: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஸ்வாகதம் என்ற தீம் பாடலை, காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாலாக அமைச்சர் கள் குழு இறுதி செய்துள்ளது.
இன்னும் பத்து நாட்களில் இந்த மைய நோக்குப் பாடல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழுவின் தலைவரான நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலைஇறுதி செய்துள்ளோம். ஸ்வாகதம் என்ற அந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இறுதி வடிவம் கொடுத்து வருகிறார். இன்னும் பத்து நாட்களில் அது வெளியிடப்படும்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவின் கடைசியி்ல் இந்தப் பாடல் ஒலிக்கப்படும்.
ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பாடலை, ஷியாம் பெனகல், பரத் பாலா ஆகியோருடனும், ரஹ்மானுடனும் விவாதித்து கடைசியில் அதை தேர்வு செய்தோம்.
இந்தப் பாடல் மிக அருமையாக உள்ளது. சரியான செய்தியை சொல்லும் வகையில் உள்ளது என்றார்.
பாடல் எப்படி உள்ளது என்று போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியிடம் கேட்டபோது, எனக்குப் பாடல் பிடித்துள்ளது என்று மொட்டையாக பதிலளித்தார்.
இந்த மையநோக்குப் பாடலை மகாத்மா காந்திக்கு அர்ப்பணிப்பதாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment