Sunday, August 29, 2010
காலம் விளையாடிய மரண விளையாட்டு! கல்லூரி திக்... திக்!
திரைப்படங்களில் கூட பார்க்க முடியாத திடீர் கிளைமாக்ஸ்கள் நம் வாழ்வில் அரங்கேறி விடுவதுண்டு. அப்படிப் பட்ட ஒரு கிளைமாக்ஸ் சூறாவளியில் இரண்டு குடும்பங்கள் சிக்கின. அந்த சூறாவளி ஏற்படுத்திய பகீர் அனுபவங்கள் வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே அந்த இரண்டு குடும்பங் களின் கண்ணீர்ப் பிரார்த்தனை. அப்படி என்னதான் ஆனது?
மனதை தைரியப் படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.
சேலம் சக்தி கைலாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம். இங்கு முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் படிக்கும் தன் செல்ல மகள் ரேகாவைப் பார்க்கும் ஆவ லோடு... ரேகாவுக்குப் பிடித்த தின்பண்டங்களுடன் சென்றார் அப்பா ராஜேந்திரன். சேலத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை பார்க்கிறவர் அவர். வகுப்பறையில் ரேகா இல்லை என்று தெரிந்துகொண்டு ஹாஸ்டலுக்கு அவர் போக... அவரை அடையாளம் கண்டுகொண்ட வார்டன் ‘""என்னசார் பாப்பாவைப் பார்க்க வந்தீங்களா? ஹாஸ்டல் ரூம்லதான் இருக்கும் வாங்க''’ என்றபடி... மாணவியர் விடுதியின் மூன்றாவது தளத்திற்கு அவரை அழைத்துசென்றார். ரேகாவின் அறையோ உள்ளே தாழிடப்பட்டிருந்தது. குழப்பமான ராஜேந்திரன்... ’""ரேகா... நான் அப்பா வந்திருக்கேன்டா கதவைத் திற'' என்று பலமுறை கதவைத்தட்டினார். உள்ளே எந்த சலனமும் தெரியாததால்... அவரது வயிறு கலங்கியது. ஜன்னல் கண்ணாடியில் கண்களை ஒட்டிவைத்து அவர் பார்க்க... உள்ளே யாரோ நிற்பது மாதிரி மங்கலாகத் தெரிந்தது. என்னவோ ஏதோவென பகீரானவர்... ஒரு கல்லை எடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். உள்ளே... தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது அந்த உடல்.
தலையில் இடிவிழுந்த மாதிரி ஆனவர் ""ஐயோ ரேகா.. என்னடா இது? எதுக்கு இப்படிப் பண்ணினே?'' ராஜேந்திரன் கதற... ஹாஸ்டல் துக்க பிராந்தியமானது. வகுப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ரேகாவின் ரூம்மேட்டுகளான சௌமியாவும் கல் பனாவும் ""காலைல நல்லாதான் பேசிக் கிட்டு இருந்தா. லேட்டா அட் மிஷன் ஆன வருத்தம் மட்டும் அவளுக்கு இருந்தது. இப்படி திடீர்னு அவ தொங்கு வான்னு நாங்க எதிர்பார்க்கலை''’ என்றபடி கண் கலங்கினார்கள்.
போலீஸ் அறைக்கதவை உடைத்துக்கொண்டு போய்... தொங்கிய உடலை கீழே இறக்கினர். கதறிய படியே போன ராஜேந்திரன்... மகள் முகத் தைக்கூட பார்க்க தெம்பற்றவராய் “""ஆமாங்க. சமீபத்தில் எடுத்த டிரஸ்தாங்க இது. இது என் மகதான்''’’என்று தலையில் அடித்துக்கொண் டார்.
சோகமாக வந்த ரேகாவின் ஆசிரியர்கள் ""பெங்களூர்ல டிப்ளமா படிச்சப் பொண்ணு. இங்க ரெண்டாம் வருசம் ஜாயின் பண்ண வந்துச்சி. ப்ளஸ்-டூ மார்க்கை வச்சி ஃபர்ஸ்ட் இயர்தான் சேரமுடியும்னு சொன்னோம். வகுப்பு கன்ஃபார்ம் ஆகும்வரை பொறுத்துக்கன்னு சொன்னோம். அதுக்குள்ள...''’என்றார்கள் சோகக்குரலில்.
அப்போது... ரேகாவின் உறவினர்களில் ஒருவர் மாடியில் இருந்து கீழே பார்த்து திகைத்தார். திகைத்தவர்...
""ராஜேந்திரன் மாமா... நம்ம ரேகா வர்ற மாதிரி இருக்கு''’என மைதானம் பக்கம் கைகாட்ட... ராஜேந்திரன் ஓடிவந்து எட்டிப் பார்த்தார். கீழே வந்துகொண்டிருந்த அந்த மாணவி ‘""அப்பா... எப்ப வந்தீங்க. என்ன ஆச்சரியமா இருக்கு''’ -என்ற படி மேலே ஓடிவர.. .ஒரேநொடியில் காட்சிகள் மாறியது. மேலே ஓடிவந்த ரேகாவைக் கண்டு எல்லோரும் திகைத்து குஷியாக... மகளை ஓடிவந்து கட்டிக்கொண்டு ""என் செல்லம்... உனக்கு ஒண்ணும் ஆக லையே...'' என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ராஜேந்திரன். திகைத்த காக்கிகள் டீம்...’"அப்ப இறந்தது யார்?'’’என்றபடி குழம்பியது. சக மாணவிகளை அழைத்துப்போய் உடலைக்காட்ட...
""ஐயோ இது குருவி சுகன்யாங்க. காலைல கூட தலைவலிக்குது. கிளாஸுக்கு வரலைன்னு சொன்னா. பாவம்ங்க. அவ நடிகர் விஜய் ரசிகை. அதனால் அவ பெட்நேம் குருவின்னு வச்சுக்கிட்டா''’’ என்றார்கள் அதே சௌம்யாவும் கல்பனாவும். தகவல்அறிந்து சுகன்யாவின் அப்பா ஆறு முகமும் அம்மா செல்வியும்.. பதறியபடி ஓடி வந்து "அடி நான்பெத்த மகளே.. என் செல்லமே... என்ன ஆச்சும்மா? உனக்கு'’ என ஸ்ட்ரெச்சர் மீது விழுந்து கதறினர்.
டி.சி.பாஸ்கரனின் காலை இறுகப் பிடித்துக்கொண்ட ஆறுமுகம் ""சார் எம்புள்ளை உடம்பை அறுக்கவேணாம்னு சொல்லுங்க சார். அவ பிஞ்சுமேனி தாங்காது சார்'' என்று தேம்ப... காக்கிகளே கண்களைத் துடைத்துக்கொண்டனர்.
ஆறுமுகத்தை நாம் ஆசுவாசப்படுத்தி பேச வைத்தபோது ""நான் மீன் வித்து பிழைக்கிறவன்ங்க. இருந்தும் என் பிள்ளை என்னை மாதிரி லோல் படக்கூடாது. எதிர்காலத்துல பெரிய என்ஜினியரா ஆகணும்னு ஆசைப்பட்டு.. சிரமத்துக்கு மத்தியில் படிக்கவச்சேன். அதுக்குள்ள இப்படி ஆய்டிச்சே. என் மக தற்கொலை பண்ணிக்கிற ரகமில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கு''’’என்று தேம்பினார்.
கரஸ்பாண்டண்ட் ராஜவிநாயகமோ ""சுகன்யா 4 சப்ஜெக்ட்டில் பெயில். அதோட தான் மாநிறமா இருப்பதாலும் மீனவப் பிள்ளை என்பதாலும் மத்தவங்க ஏளனமாப்பார்க்கிறதா தாழ்வுமனப் பான்மையில் இருந்திருக்கு. சரியா படிக்கலைன்னா டீச்சர்ஸ் அட்வைஸ் பண்ணத்தான் செய்வாங்க. அதுக்காக இன்னைக்கு வகுப்புக்குப் போகாம இப்படி ஒரு முடிவைத் தேடிக்கிட்டது எங்களுக்கே ஷாக். ஒன்றைப் புரிஞ் சிக்கணும்... பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மட்டும்தான் பிள்ளைகள். ஆனா எங்களுக்கு இங்க படிக்கும் அத்தனைப்பிள்ளைகளுமே பிள்ளைகள்தான்'' என்றார் கலக்கமாக.
இத்தகைய சம்பவங்கள் இளைய சமுதாயத்துக்கு மன உறுதி தேவை என்பதையே அடித்துச்சொல்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment