பாளையங்கோட்டை : நீங்க நெனைச்சா நடக்காதா...!
சிறையில், எந்தப் பொரு ளுக்கும் விலை கொஞ்சம் கூடுத லாத்தான் இருக்கும். பாளை சிறையில், மிளகு சைஸில் உள்ள கஞ்சா உருண்டையின் விலை 10 ரூபாயாகி விட்டது. செல்போனில் ஒரு நிமிடம் பேசுவதற்கு 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். பீடி, சிகரெட் விலையும் எக்குத் தப்பாக எகிறிக் கொண்டி ருக்கிறது என்று கைதிகள் குமுறிக் கொண்டிருக் கிறார்கள்.
ஆனால் சிறைக் காவலர்களின் கவலை யோ வேறு. செல் போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள், கஞ்சா, பீடி, சிகரெட் எல்லாம் மெயின்கேட் வழியாகத் தான் எப்படியோ உள்ளே வருகிறது என்று மெயின்கேட்டில் கெடுபிடிகளை அதிகப்படுத்தியும் பயனில்லை.
இரண்டுவாரமாக திணறிக் கொண்டிருந்தார்கள் காவலர்கள். திடீரென ஒரு தகவல் ""ஏழெட்டுப் பிளாஸ்டிக் பைகளை ரோட்டிலிருந்து சிறைக்குள் தூக்கிவீசி விட்டு இரண்டு, மூன்று பேர் ஓடிவிட்டார்கள்!'' என்பதுதான் அந்தத் தகவல். சிறைக்குள் பாய்ந்து சென்று பொட்டலங்கள் வீசப்பட்ட இடத்தில் தேடிப் பார்த்தார்கள். அதற்குள் மாயமாகி விட்டன பிளாஸ்டிக் பொட்டலங்கள். வார்டன்களுக்குத்தான் வெளிச்சம் என்கிறார்கள் காவலர்கள்.
-பரமசிவன்
சென்னை : உள்ளம் என்பது உலகமாகலாம்!
தனி மரம் தோப்பாகுமா? ஆகும் என்பதற்கு " எம்.பி.நிர்மல்- தனிமரத் தோப்பு' என்ற தலைப்பில் ராணி மைந்தன் எழுதிய புத்தகமே சாட்சி.
தலைசிறந்த சாதனையாளர், இந்தியாவின் எட்டு வழிகாட்டிகளில் ஒருவர், இந்தியாவை மாற்றும் பத்து தேவதை களில் ஒருவர், இன்றைய கதாநாயகன் என்றெல்லாம் இந்திய மற்றும் வெளி நாட்டுப் பத்திரிகைகளின் பாராட் டைப் பெற்றிருக்கும் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மலைப் பற்றிய நூல்தான் இந்த "எம்.பி.நிர்மல் -தனிமரத் தோப்பு'.
இந்த நூலை வெளியிட்டு, இந்த நூலையும் நிர்மலையும் எக்ஸ்னோரா வையும் பாராட்டிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ""1989-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, என்னை அழைத்து அடையாறில் எக்ஸ்னோராவை தொடங்கி வைக்கும் வாய்ப்பைத் தந்தார் நிர்மல். சமூக சேவையில் பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்த எக்ஸ்னோரா தொடங்கியதில் இருந்துதான் எனக்கு ஏற்பட்டது. இளைஞர்களுக்கு வழி காட்டும் இந்த நூலை வெளியிடு வதில் உள்ளபடியே நான் பெருமை யடைகிறேன்'' நெகிழ்ச்சியோடு சொன்னார்.
-சுந்தர்
மணப்பாறை : கருணையுள்ள மனுசரெல்லாம் கடவுளுக்கும் மேலே!
மணப்பாறை கோயில்பட்டித் தெருவில் வசிக்கும் முறுக்கு வியாபாரி சுரேந்தருக்கு, சுரேஷ்-சூரியா என்று இரண்டு மகன்கள். இருவரும் தியா னேஸ்வரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கின்றனர். மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெற்ற இருவரிட மும் "ராங்க் கார்டு'களைக் கொடுத்த ஆசிரியர், ""அப்பாவிடம் கையெ ழுத்து வாங்கிக் கொண்டு வரவேண்டும்'' என்று சொல்லியிருந்தார். அப்பாவிடம் அடிவாங்கப் பயந்த சுரேசும், சூரியாவும், பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டு காசை வாங்கிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.
மூன்றாம் நாள், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பட்டினியோடு திரிந்த இருவரையும் விசாரித்த ஆட்டோ ஓட்டுநர் ஜாப்பர், அவர்களைச் சமாதானப்படுத்தி தனது ஆட்டோவில் மணப்பாறைக்கே கூட்டிவந்து ஒப்படைத்தார். மூன்று நாட்களாக மகன்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநருக்கு 1000 ரூபாயைக் கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார். மணப்பாறை காவல் நிலையத்திலும் ஓட்டுநர் ஜாப்பருக்கு பாராட்டு கிடைத்தது.
-ஜெ.டி.ஆர்.
தூத்துக்குடி : வாழ்வைக் கெடுக்குது, பணத்தைப் பெருக்குது!
துபாய் மற்றும் மாலத்தீவில் இருந்து கோட்டயம், கலூர் ஆகிய கேரள நகரங்களில் உள்ள கம்பெனிகளுக்காக, தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன 3 கண்டெய்னர்கள்.
இரும்பு கிராப்ஸ் என்ற குறிப் பிடப்பட்ட அந்த கண்டெய்னர்களைத் தாண்டி வெளியே வந்தது கொடூர நாற்றம். சந்தேகப்பட்ட வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநர் ராஜன் அவற்றைத் திறக்கச் சொன்னார்.
உள்ளே தடை செய்யப்பட்ட 148 கேட்னியம் பேட்டரிக் கழிவுகள், கம்ப்யூட்டர் கழிவுகள், யு.பி.எஸ். குப்பைகள்... அத்தனையும் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட நச்சுக் குப்பைகள்.
""இந்தியா என்ன சுகாதார நாடுகளின் குப்பைத் தொட்டியா? கண்ட கண்ட நோயையும் இறக்குமதி செய்து பரப்புகிறீர்களா? எப்படி வந்ததோ, அதே மாதிரி உங்க செலவில் உடனே திருப்பி அனுப்புங்கள்'' எச்சரித்து திருப்பி அனுப்பச் செய் திருக்கிறார் இயக்குநர் ராஜன்.
-சிவன்
கள்ளக்குறிச்சி : ஏமாற்றாதே! ஏமாற்றாதே! ஏமாறாதே... ஏமாறாதே...!
சென்னை செல்வதற்காக, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை, கீழ்ப்பாச்சேரியைச் சேர்ந்த முருகன், இரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்து நின்றார். ""உன்னைப் பார்க்க சந்தேகமா இருக்கு... நடடா ஸ்டேஷனுக்கு'' -போலீஸ் தோரணையில் மிரட்டிய 5 வாட்டசாட்ட இளைஞர்கள், முருகனிடம் இருந்த செல்போனையும், பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, ""காலையில் வந்து கள்ளக்குறிச்சி ஸ்டேஷன்ல வாங்கிக்கடா'' -சொல்லிவிட்டு அடுத்தும் சிலரை விசாரிக்கச் சென்றனர். அடுத்த 10-வது நிமிடம் உண்மையான போலீஸ் டீம் நுழைந்தது. அதே முருகனிட மும் வந்தது... ""இப்பதானே உங்க போலீஸ்காரங்க வந்து செல்போனையும், இருந்த பணத்தையும் மிரட்டி வாங்கிட்டுப் போனாங்க... அதோ அந்தக் கடையில் நிக்கிறாங்க பாருங்க...'' அடையாளம் காட்டி னார் முருகன். உடனே சென்று 5 வாட்ட சாட்டங்களையும் மடக்கியது போலீஸ்.
""நீங்க செய்ற தைப் பார்த்துப் பார்த்துதான் நாங்க செய்தோம். இது ஒரு குத்தமா?'' என்றார்கள் ஐவரும். அவர்களில் பாதுஷா, தமிழரசன் என்ற இருவர் மீது மட்டும் சீட்டிங் கேஸ் போட்டு சிறைக்கு அனுப்பி வைத்தது கள்ளக்குறிச்சி ஒரி ஜினல் போலீஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment