நான்கு மாதப் போராட் டங்களுக்குப் பிறகு, மலேசிய நாட்டின் சிறையில் இருந்து 12.8.10 அன்று வெளியே வந்திருக்கிறார்கள், மலேசிய கடற்படையால் கைது செய்யப்பட்ட, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் 75 பேர்.
""எங்களுடைய விடுதலைக்கு நக்கீரனும், மாற்றுச் செயலணித் தலைவர் கலைவாணரும், பினாங்கு துணை முதல் வர் ராமசாமியும், உலகத் தமிழர்களின் அன்பும்தான் காரணம். எங்கள் மீது அக்கறை காட்டிய அத்தனை பேருக்கும் நன்றி'' -மலேசிய ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் குரல் கம்ம சொன்னார்கள்.
அடுத்து என்ன நடக்கும்? எந்த நாடு தங்களை ஏற்றுக்கொள்ளும்? நாளைய பொழுது எப்படி விடியும்? -இப்படிப் பட்ட ஆயிரமாயிரம் கேள்விகளோடு, திசை புரியாமல் தவிக்கும் இவர்களில் 8 குழந் தைகளும் இருக்கிறார்கள்.
2008-ம் ஆண்டிற்கு முன்னால் இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தவர்கள் இந்த சிறுவர்-சிறுமியர். சண்டை அதிகமான தால் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த வர்கள். எட்டாம் வகுப்பும், ஏழாம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் படித்து, படிப்பைத் தொடர முடியாமல் போன விவேகாவும், ராணிகாவும், சோலை வீதியும் நம்மிடம்... ""கடைசி காலத்தில் ஆர்மிக்காரன் ஷெல் அடிச்சான். எங்களுக்கெல்லாம் ஷெல் காயம். காயம்படாத ஒருத்தர் கூட இல்லையண்ணா... எங்கட வயதொத்த சிங்க ளப் பிள்ளைகள் எல்லாரும் பள்ளிக்குப் போறாங்கள். எங்க ளால் போக முடியலை. சண்டை முடிஞ்சதும் எங்களை முகாம் களில் அடைச்சான்கள். அங்கேயும் சிங்கள ஆர்மிக்காரன்கள் வயது வித்தியாசம் இல்லாமல் எங்களையும் சீண்டுவான்கள். நிறைய பொட்டைப்புள்ளைகளை தூக்கிட்டும் போனான்கள். எத்தனை நாள்தான் ஆர்மிக்காரன்களுக்கு பயந்து பதுங்க முடியும்? எங்களுக்கு படிக்கணும், அதான் அம்மாவிடம் அழுதோம். அப்புறம்தான் கப்பல் ஏறினோம். அப்பாவைக் காணலை. நாங்க மட்டும் வந்தோம். வேற்று நாடுகளில் நாங் கள் படிக்கப் போகிறோம் என்ற எங்க ஆசையையும் மலேசியக் கடற்படை பழுதாக்கிவிட்டதண்ணா. நாங்க படிக்கணும் அண்ணா...''-திக்கித் திணறி அந்தப் பிஞ்சுகள் சொன்னார்கள்.
பிரியா என்ற குழந்தையின் நிலை, பார்த்தவர்கள்... கேட்ட வர்கள் அத்தனை பேரையும் நிலைகுலையச் செய்யக்கூடியது.
""சிங்கள ஆர்மிக்காரன்களின் ஷெல் அடியும், முகாம் வதையும், மலாய்ச் சிறைக் கொடுமையும் சேர்ந்து எண்ட அம்மா சுமத்திராவை பயித்தியமாக்கிவிட்டது. அம்மா இருந் தும், இல்லாத மாதிரி... இனி எண்ட படிப்புக் கனவை உங்க ளைப் போன்ற நல்லவங்க... தமிழர்கள்தான் செய்யவேணும்... இந்த மலாய் அரசாங்கம் எங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதாம்... எந்தநாடு எங்களை ஏற்குமோ? தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞரய்யா நினைச்சால் நாங்களும் படிப்போம்... படிக்க வேண்டும் அண்ணா'' -பிரியாவின் குரலில் ஆர்வம் மட்டுமில்லை சோகமும் பயமும்கூட அளவுக்கு மீறி இருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment