Saturday, August 21, 2010

""காங்கிரஸில் வாசனுக்கு வலிமை அதிகம் என்பது தவறு'' -பாயும் கார்த்தி சிதம்பரம்!


தமிழக காங்கிரஸில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இல்லாத கார்த்தி சிதம்பரம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தனது தந்தைக்கென (ப.சிதம் பரம்) ஒரு வலிமையான ஆதரவு தளத்தை காங்கிரஸில் உருவாக்குவதே இவரது நோக்கம். சமீபகாலமாக இவர் பேசும் பேச்சுக்கள் சர்ச்சைகளை உருவாக்கி வருவதுடன், இளைஞர் காங்கிரஸில் அதிகம் தலையிடுவதாகவும் கோஷ்டி அரசியலை வளர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.

தமிழகத்திற்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் இல்லை என்று உங்கள் கட்சி மீதே குற்றச்சாட்டு வைக்கிறீர்களே?

ஆமாம்... உண்மைதான். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கட்சிகள் மட்டும்தான் இருக்கின்றன. ஏன், இவை இரண்டு மட்டும்தான் இருக்க வேண்டுமா? அந்த ஸ்தானத்திற்கு காங்கிரஸ் வரக்கூடாதா? என்பது என் கேள்வி. பிரதான அந்தஸ்து தவிர, அந்த இரண்டு கட்சிகளுக்கும் பத்திரி கை, தொலைக்காட்சி என மீடியா பவர் இருக்கிறது. இவைகள் அனைத்தும் இருந்தும்கூட அந்த கட்சிகள் பொதுக்கூட்டங் கள் போட்டு மேடைகளில் முழங்குகிறார்கள். போட்டிக் கூட்டம் நடத்துகின்றனர். இது கட்சியை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் காங்கிரஸில் அந்த நிலை இல்லை. திராவிட கட்சி களின் ஸ்டைலை காங்கிரஸ் பின்பற்ற வேண்டும். திராவிட கட்சிகளைப்போல மக்களை நெருங்க பொதுக்கூட்டங்கள் போடவேண்டும். அதனைப் போடுவதற்கு கட்சி தவறினால் காங்கிரஸ் எப்படி வளர்ச்சி அடையும்? அதனால்தான் தமி ழகத்திற்கு உகந்த கட்சியாக காங் கிரஸ் இல்லை என்று பேசு கிறேன். இதில் தவறு இருப்ப தாக நான் நினைக்கவில்லை.

கூட்டணி உறவை உரசிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய நாயக னாக நீங்களும் இருக்கிறீர்களே?

அரசியலில் மௌனம் ஒரு யுக்தி அல்ல. கட்சியின் அபிலாசைகளை தலைவர்களும் தொண்டர்களும் வெளிப்படுத்த வேண்டும். அப்பொதுதான் கட்சி வலிமை அடையும். ஒரு பாராளு மன்றத் தொகுதிக்கு 2 சட்ட மன்ற தொகுதி என 78 இடங் களை காங்கிரஸ் பெறவேண் டும் என்றும் மத்திய அரசின் நிதிகளில்தான் மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படு கிறது என்றும் நான் பேசு கிறேன். இது சர்ச்சையாகிறது. ஆனால் இப்படி நான் பேசு வது எந்த வகையில் அநியா யம்? அநாகரிகம்? எங்கள் கட்சியின் விருப்பத்தை தெரி விப்பது எப்படி உறவை உரசிப்பார்ப்பதாக நினைக்க முடியும்? என்னைப் பொ றுத்தவரை சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பேசவேண் டும், அப்போதுதான் அந்த சர்ச்சைகள் விவாதமாக மாறும். அப்படி விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும். அந்த வகையில் சர்ச்சைக் குரிய நாயகன்தான் நான்.

நீங்கள் பேசும் சர்ச் சைக்குரிய பேச்சுக்களில் உங்கள் தந்தை ப.சிதம்பரத் திற்கு உடன்பாடு உண்டா? அவர் சொல்லித்தான் நீங் கள் பேசுகிறீர்களா?

மத்திய உள்துறை அமைச்சர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார் அவர். அவரிடம் ஆலோசித்துவிட்டுப் பேசுவதற்கு நான் ஒன்றும் அவரது ஸ்போக்ஸ் மேன் கிடையாது.

இளைஞர் காங்கிரசில் கோஷ்டி அர சியல் கூடாதுங் கிறது ராகுல் காந்தியின் கட் டளை. அந்த கட்டளையை மீறுகிற வகையில் கோஷ்டி அரசிய லை நீங்கள் புகுத்துவ தாக இளைஞர் காங் கிரசின் மாநில தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

ராகுல்காந்தியின் கட்டளையை எந்த விதத்திலும் நான் மீறவில்லை. இளைஞர் காங்கிரசில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழைக்கிற கூட்டங்களில் நான் கலந்து கொள்கிறேன். அது பேரண்ட் பாடி மீட்டிங்காக இருந்தாலும் சரி... இளைஞர் காங்கிரஸ் மீட்டிங்காக இருந்தாலும் சரி..! அவ்வளவுதான். மற்றபடி யுவராஜ் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாரில்லை.

காங்கிரசில் 85 சதவீத ஆதரவும் வலிமையும் உள்ள வாசன் இளைஞர் காங்கிரசில் தலையிடுவதில்லை. ஆனால் ப.சி.யின் மகன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லாத இவர் அதிகம் தலையிடுகிறார் என்று உங்கள் மீது விமர்சனம் வருகிறதே?

வலிமை அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறானது. வலிமை இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யார், யாருக்கு என்ன வலிமை என்பதை ஆராய்ந்து பாருங்களேன். அடுத்து ப.சி.யின் மகன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வதே அபத்தம். ஏன்னா... நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். விமர்சிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்... என்னை அழைக்கும் கூட்டங்களில் கலந்து கொள்கிறேனே தவிர இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை.

தி.மு.க.வைப்பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் விமர்சனங்களில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

தனி மனித விமர்சனத்தைத் தவிர மற்றபடி அவரது விமர்சனங்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவரது விமர்சனம் சரியானதுதான். அதில் உண்மை இருக்கிறது.

காங்கிரசில் தலைவர்கள் இருக்கிறார்கள்; தொண்டர் கள் இல்லை என்பதால்தான் தமிழகத்தில் 43 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளர்ச்சி அடையாமைக்கு காரணம் என்கிறார்களே?

திராவிட கட்சிகளுக்கு இல்லாத இளைஞர்கள் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.எங்கள் கட்சியில் 13 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.இந்த பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட தயார். திராவிட கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்... காங்கிரஸைப் போல தங்களின் இளைஞர்கள் பட்டியலை திராவிட கட்சிகள் வெளியிட தயாரா? தொண் டர்கள் இல்லை என்பதெல் லாம் திராவிட கட்சிகளின் கற்பனை.

No comments:

Post a Comment