Thursday, August 19, 2010
ரகசியா, முமைத்கானை ஓரங்கட்ட வந்திருக்கும் மௌஷ்மி!
பிரபுதேவா- சிம்ரன் நடித்த "டைம்' படத்தை இயக்கிய ஏ.எஸ். கீதா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப்பின் "நிமிடங்கள்' என்ற படத்தை எழுதி இயக்குகிறார். இசையும் இவரே! "சங்கராபரணம்', "சலங்கை ஒலி', "சிப்பிக்குள் முத்து' போன்ற காவியங்களைத் தெலுங்கில் தந்த இயக்கு நர் கே. விஸ்வநாத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கீதா கிருஷ்ணா. இவரும் நாகார்ஜுனா போன்ற பெரிய ஹீரோக் களை வைத்து பல தெலுங்கு வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களையும் இயக்கி இருக்கிறார்.
சர்வதேச தீவிரவாதத்தைப் பற்றியது "நிமிடங்கள்' கதை. இந்தப் படத்தின் ஹீரோவாக தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சஷாங், கன்னட முன்னணி நாயகி பிரியங்கா தேசாய், டெல்லியில் பணிபுரியும் சி.பி.ஐ. ஆபீஸராக சுமன், பாகிஸ் தான் தீவிரவாதியாக அதுல் குல்கர்னி, கிரீஷ் கர்நாட் நடிக்கும் "நிமிடங்கள்' ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிறது.
காலையில் எழுந்து பேப்பரைப் பிரித்தால் குண்டு வெடிப்பு, உயிர்ப்பலி செய்திகள்தான் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. இது உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, தனி மனிதனின் நிம்மதியையும் பறித்து மனநிலை பாதிப்புக் குள்ளாக்குகிறது. அப்படி தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுவதே "நிமிடங்கள்' சொல்லப் போகும் கதை.
சினிமாவுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் ரெட்ஒன் காமிராவில், அதை இயக்குவதற்குப் பயிற்சி பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் முரளி, எம்.வி. ரகு "நிமிடங்கள்' படத்தை ஹைடெக்காக உருவாக்கி இருக்கிறார்கள்.
நாயகன் சஷாங், நாயகி பிரியங்கா தேசாய் இருவரும் பாடல் காட்சிகளில் படு நெருக்கமும் கவர்ச்சித் திருவிழாவும் நடத்தி இருக்கிறார்கள்.
"ஓடி ஓடிப் போவது நேரம்
ஓடாது போகுது தேசம்'
என்ற ஐட்டம் சாங்கிற்கு மும்பை யிலிருந்து கவர்ச்சிப் புயல் மௌஷ்மி ஆடி கிறுகிறுக்க வைத்திருக்கிறார். இந்தப் படம் வந்தபின் ரகசியா, முமைத்கானைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, கவர்ச்சி தேசத்தில் முதலிடத்தைப் பிடிப்பார் என்கிறது பட யூனிட்!
புளூஃபாக்ஸ் சினிமா என்ற புதிய பட நிறுவனம் தயாரித்திருக்கும் "நிமிடங்கள்' தமிழ் சென்டிமெண்டும், தெலுங்கு காரமும் மும்பை கவர்ச்சியும் கலந்த கலவையாகச் சுவைக்கும் என்கிறார்கள். சொன்னபடி செய்திருப்பார்களா என்று காத்திருப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment