Thursday, August 19, 2010

சோனியாவும் வேண்டாம்! விஜயகாந்த்தும் வேண்டாம்! ஜெயலலிதாவின் குஷி கூட்டணி!



""ஹலோ தலைவரே... .... 2011 மே மாதம்தான் சட்டமன்றத் தேர்தல் . 8 மாசம் முழுசா இருக்குது. ஆனாலும், இப்பவே தேர்தல் பரபரப்பு எல்லாக் கட்சி வட்டாரத்திலும் தெரியுது.

""நானும் பல பேர்கிட்டே பேசினேம்ப்பா.. நம்ம நக்கீரன்தான் தமிழ்நாடு முழுக்க கள ஆய்வு செய்து, என்ன நிலவரம்ங்கிறதை வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தை சுறுசுறுப்பாக்கி விட்டிருக்குன்னு சொல்றாங்க.''

""தலைவரே.. .. திருச்சியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு திரண்டிருந்த கூட்டத்தினால ஜெ ரொம்ப தெம்பா இருக்கார். கோவையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, நீங்க விரும்புற கூட்டணி உருவாகும்னு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அந்தக் கூட்டணியைப் பற்றி திருச்சியில் ஜெ., அறிவிப்பாருங்கிற எதிர்பார்ப்பு கட்சிக்காரங்களுக்கும், மீடியாக்களுக்கும் இருந்தது.''

""ஆனா, கூட்டணி பற்றி எந்த அறிவிப்பையும் ஜெ., வெளியிடலையே?''

""அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிற கூட்டணிங்கிறது காங்கிரசுடனான கூட்டணியைத் தான். ஜெ.வும் அதற்காகத்தான் பல மாதங்களா முயற்சி பண்ணிக்கிட்டிருந்தார். ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் அடிக்கடி தி.மு.க.வை கடுமையா விமர்சிப்ப தால தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து, புதுக் கூட்டணி உருவாகும்ங்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. இளங்கோவன் விவகாரம் சம்பந்தமா சோனியாவை டெல்லியில் டி.ஆர்.பாலு சந்திச்சப்ப, சோனியா ரொம்ப க்ளியரா சொல்லிட்டாங்களாம்.''

""என்னவாம்?''

""இளங்கோவன் பேச்சையெல்லாம் அலட்சி யப்படுத்திடுங்க. எனக்கு அவரைப் பற்றி வந்திருக்கும் ரிப்போர்ட்படி, அவர் பர்சனல் கோபத்தில்தான் செயல்படுறார். பொதுநோக்கத்தில் செயல்படலை. தி.மு.க. கூட்டணியில்தான் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும். எந்த நிலையிலும் இந்தக் கூட்டணிதான்னு சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் அதன் லோக்சபா தலைவர் தம்பிதுரையும், ராஜ்யசபா தலைவர் மைத்ரேயனும் தங்களுக்கு வேண்டிய காங்கிரஸ் சோர்ஸ்களிடம் தொடர்ந்து பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க. ஜெ.வின் கோவை-திருச்சி பொதுக் கூட்ட பேச்சுகளை சப்டைட்டிலோடு சி.டியா போட்டு சோனியா, ராகுல் உள்பட பலகட்சித் தலைவர்களுக்கும் பார்லிமெண்ட் ஹாலிலேயே கொடுக்கவும் ஏற்பாடு நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, காங்கிரஸ்கூட பேசிக்கிட்டிருக்கும் அ.தி.மு.க. புள்ளிகளும்கூட அ.தி.மு.க. அணிக்கு காங்கிரஸ் வரும்னு நம்பலை.''

""அவங்க என்ன சொல்றாங்க?''

""2004-ல் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளை யும் தி.மு.க. கூட்டணி ஜெயிச்சதாலதான் மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இரண்டாவது முறையா இன்றைக்கு வரைக்கும் அந்த ஆட்சி தொடருது. அன்னைக்கு பா.ஜ.க. மறுபடியும் ஜெயிச்சிருந்தா, காங்கிரசின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும்னு சொல்லும் இரண்டு எம்.பி.க்களும், . கலைஞரின் உறுதியான கூட்டணியால்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததுங்கிறதை சோனியா மறக்கலை. அதனாலதான் அவர் தி.மு.க.வுடனான உறவைத் தொடர்கிறார். இப்பக்கூட நம்ம பக்கம் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுறதுகூட, தி.மு.க. கூட்டணியை முறிக்கணும்ங்கிறதுக்காக இல்லை. நம்ம கிட்டே பேசுவது தெரிந்தா, தி.மு.க. அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கும்ங் கிறதாலதான்னு சொல்லியிருக்காங்க.

""காங்கிரஸ் வராவிட்டால் விஜயகாந்த் கட்சியோடு அ.தி.மு.க. கூட்டணி அமைக் கும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்குதே..''

""விஜயகாந்த்தைப் பொறுத்தவரை காங்கிரசோடு கூட்டணி அமைக்கிறதுதான் எதிர்காலத்தில் தன் தலைமையிலான அரசை அமைப்பதற்கு வசதியா இருக்கும்ங்கிற லைனில் இருக்காரு. ஆனா, அவரோட குடும்பத்தினரோ இந்தத் தேர்தலில் வலுவான கூட்டணியில் தே.மு.தி.க. இருந் தால்தான் கட்சியைக் காப்பாற்றமுடியும். அ.தி.மு.கதான் அதற்கு சரியான சாய்ஸ்னு தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டிருப்பதோடு, அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலை வர்களோடும் இதுவரைக்கும் 3 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்காங்க. 80 சீட் வேணும்னு கேட்ட தே.மு.தி.க. இப்ப 60 சீட்டுக்கு இறங்கி வந்திருக்கு. ஆனா, அ.தி.மு.க. தரப்போ இது அதிகம்னு நினைப் பதால், பேரம் இன்னும் முடிவுக்கு வரலை.''

""பா.ம.க.வும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்குதே!''

""காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமையணும்னு ராமதாஸ் வெளிப்படையாகவே சொன்னார். ஆனா, காங்கிரஸ் சைடிலிருந்து பா.ம.க.வுக்கு பாசிட்டிவ் சிக்னல் வரலை. ராமதாஸ் நம்பத்தகுந்தவரா இல்லைங்கிறதுதான் பா.ம.க. பற்றிய சோனியாவின் கமெண்ட்டுன்னு டெல்லி வட் டாரம் சொல்லுது. அன்புமணிக்கிட்டே அகமது பட்டேல் பேசியதையடுத்துதானே, ராமதாஸ் இந்த லைனை எடுத்தார்னு ராகுல்கிட்டே சில சீனியர்கள் கேட்டிருக்காங்க. அதற்கு, அன்புமணியும் அகமதுபட்டேலும் ஃப்ரெண்ட்ஸ். அவங்க ஃப்ரெண்ட்ஷிப்பா பேசிக்கிறதெல்லாம் கட்சியோட முடிவாயிடுமான்னு ராகுல் கேட்டாராம். இதுவும் டெல்லித் தகவல்தான்.''

""அப்படின்னா பா.ம.க.வின் நிலை என்ன?''

""ராமதாஸைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமையும்னும், அதுதான் வலுவான கூட்டணியா இருக்கும்னும் நினைக்கிறார். அதனால அந்தக் கூட்டணியில் பா.ம.க. சேர்வதற்கான எண்ணங்கள்தான் தைலாபுரம் தோட்டத்தில் இப்ப ஓடிக்கிட்டிருக்குதாம். பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் விஜயகாந்த் கட்சிக்கு செல்வாக்கு உண்டு. ஒரே கூட்டணியில் இருக்கும்போது அந்த ஓட்டுகள் மூலம் வெற்றி எளிதா இருக்கும்னும் நினைக்கிறாராம்.''

""இவங்க நினைப்பெல்லாம் ஜெ.வின் கணக்கோடு ஒத்துப்போகணுமே?''

""திருச்சி பொதுக்கூட்டத்துக்கு திரண்ட தொண்டர் களின் கணக்கைப் பார்த்ததும் ஜெ.வோட தேர்தல் கணக்கு வேறுமாதிரி இருக்குன்னு கார்டனிலிருந்து தகவல் கசியுதுங்க தலைவரே..... தி.மு.க.கிட்டே பேரத்தை அதிகப் படுத்துறதுக்காக நம்ம பக்கம் பேசும் காங்கிரஸ் நம்ம அணிக்கு வரப்போறதில்லை. அவங்க அங்கே அதிக சீட் வாங்கினால், அங்கெல்லாம் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி ஈஸியா ஜெயிச்சிடலாம்னு கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறாராம் ஜெ. அதோடு, விஜயகாந்த் கட்சிக்கெல்லாம் 60 சீட்டை ஒதுக்கிக் கொடுத்துட்டு நாம மெஜாரிட்டி சீட் ஜெயிக்க முடியாம, தி.மு.க. மாதிரி ஆட்சி நடத்தப் போராடக்கூடாது. நாம கொடுக்கிற சீட்டை விஜயகாந்த் ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா போகட்டும். பா.ம.கவும் வந்தா பார்ப்போம். நாமளா அழைக்க வேணாம். கூட்டணியாவது, கத்தரிக்காயாவது! கட்சித் தொண்டர்கள் உற்சாகமா இருக்காங்க. ஆட்சி மீதான மக்களோட அதிருப்தியையும் நம்ம பக்கம் திருப்பிடலாம். கல்யாணசுந்தரம்-பி.ராமமூர்த்தி காலத்திலிருந்து அ.தி.மு.க.வுக்கு உதவியா இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளையும், நாம் கஷ்டப்பட்ட நேரத்தில் கூட இருந்த ம.தி.மு.க.வையும் நம்ம அணியில் வச்சிக்கிட்டு தேர்தலை சந்திப்போம்னு சொல்லியிருக்காராம்''.

""ஓ... இதுதான் ஜெ.வின் தேர்தல் கணக்கா?''

""அடுத்த மேட்டருக்கு வர்றேங்க... தலைவரே! தமிழக இளைஞர் காங்கிரசுக்கு 13 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்காங்க. இவங்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்குது. தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் செய்யவேண்டிய இந்த வேலையை கார்த்தி சிதம்பரம், ஒவ்வொரு மாவட்டமா போய் செய்துக்கிட்டிருக்காரு. இளைஞர் அணியின் மாநிலத் தலைவரான யுவராஜ் இதுபற்றி நம்மகிட்டே பேசினார். காங்கிரசில் இருக்கும் கோஷ்டி மனப்பான்மை இளைஞர் காங்கிரசில் இருக்கக்கூடாதுங்கிற தாலதான் முறைப்படி தேர்தல் நடத்தி நிர் வாகிகளைத் தேர்ந்தெடுத்தார் ராகுல்காந்தி. அதில் வந்து கோஷ்டி சேர்க்கிறார் கார்த்தி. தன் அப்பாவுக்கு இருக்கும் உயர்ந்த பதவியை இவர் மிஸ்யூஸ் பண்றார். இதை எங்க தலைவர் வாசன்கிட்டே சொன்னப்ப, இளைஞர் காங் கிரசுக்கு நான் பொறுப் பில்லை. ராகுல்கிட்டே சொல் லுங்கன்னு டீசன்ட்டா சொல்லிட்டார். இதையடுத்து, இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜீவ் சத்தாவ்கிட்டே புகார் சொன்னோம். கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பச் சொல்லிட்டார். அது ரெடியாகிக்கிட்டிருக்குன்னு சொன்னார் யுவராஜ்.''

""இந்தியாவில் நேரு, இந்திரா ஆகியோரையடுத்து, அதிக முறை தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர்ங்கிற பெருமை மன்மோகன்சிங்கிற்கு இந்த சுதந்திர தினத்தில் கிடைத்திருக்குது. அதே நேரத்தில், காஷ்மீரில் பிரச்சினைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கொடியேற்றிய முதல்வர் உமர் அப்துல்லா மீது அப்துல் அகாத் ஜான் என்பவர் ஷூவை வீசி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். பிடிபட்ட அவரை விசாரித்தபோது கிரிமினல் வழக்கில் கைதாகி சஸ்பெண்ட்டான ஏட்டுங் கிறது தெரியவந்தது. அவர் மனநோயாளின்னு காஷ்மீர் போலீஸ் சொல்லுது. பாதுகாப்பில் கோட்டை விட்டதா 15 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காங்க. கற்களை வீசுவதைவிட ஷூவை வீசுவது நல்லதுதான்னு உமர்அப்துல்லா சொல்றார்.''



""நானும் சுதந்திர தின தகவலோடுதான் லைனில் இருக்கேன்... ... சுதந்திர தினத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில முதல்வர்தான் கொடியேற்றணும்ங்கிற உரிமையை வாங்கித் தந்தவர் கலைஞர். அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதில் விவசாயிகளுக்கான அறிவிப்புதான் ஹைலைட். ஏற்கனவே கடன்ரத்து, மானியம், இலவச மின்சாரம்னு விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவித்திருந்தாலும், இன்னும் விவசாயிகளின் நிலைமை உயரலை. அவங்களுக்கு பலன் தரும் வகையில் ஏதாவது செய்யணும்னு யோசித்த கலைஞர், சிறு-குறு விவசாயிகளின் பம்ப் செட்டுக்கு இலவச மோட்டார், மற்ற விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மோட்டார் வழங்கப்படும்னு அறிவித்திருக்கிறார். இதனால் 15 லட்சம் விவசாயிகள் பலனடைவாங்களாம்.''

No comments:

Post a Comment