Monday, August 16, 2010
234 தொகுதி! எந்தக் கூட்டணி வெல்லும்!
தேதி முடிவு செய்யப் படுவதற்கு முன்னதாகவே தேர்தல் களத்திற்குத் தயாராகிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். சொற்பொழிவாளர் கூட்டம், கண்டனப் பொதுக்கூட்டம், நிர்வாகக் குழு கூட்டம், ஊழியர்கள்கூட்டம் என ஒவ்வொரு கட்சியும் கூட்டுகின்ற கூட்டங்களில் எல்லாமே தேர்தல் குறித்துதான் விவாதிக்கப்படுகின்றன. இருக்கின்ற கூட்டணி தொடருமா, மாற்றங்கள் ஏற்படுமா என்பது பற்றியெல்லாம் அலசப்படுகின்றன. கூட்டணிக்குள் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகளின் பின்னணி பற்றி பூதாகாரமான தகவல்கள் மீடியாக் களில் வெளியாவதால், "அவர்கள் இங்கே தாவுவார்களா, இவர்கள் அங்கே தாவுவார்களா' என்ற எதிர் பார்ப்பு செய்திகளைப் படிக்கும்- பார்க்கும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனிப்பட்ட வாக்கு வங்கியுடன் கூட்டணி பலம் சேரும்போது அது தேர்தல் களத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதை தமிழக அரசியல் கள வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. தற்போதைய நிலை யில், கட்சிகளின் பலமும் கூட்டணி பலமும் எப்படி இருக்கிறது என்பதை கடந்த 12 இதழ்களாக உங்கள் நக்கீரன் துல்லியமாக வெளியிட்டு வந்துள்ளது. மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த கள ஆய்வு முடிவுகளின்படி தற்போதும் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய இரு கழகங்களே சக்தி வாய்ந்த கட்சிகளாக இருக் கின்றன. இவற்றுடன் கூட்டணி சேரும் கட்சிகளின் வாக்கு வங்கியைப் பொறுத்து தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நமது கள ஆய்வின்படி, மண்டலவாரியாக தி.மு.க-அ.தி.மு.கவின் பலம் வரைபடம் மூலமாக விளக்கப்படுகிறது.
சென்னை மண்டலம் 24 தொகுதிகள்
தி.மு.க.வின் கோட்டை என்று வர்ணிக் கப்பட்ட சென்னை மாநகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள தொகுதி களிலும் அ.தி.மு.கவின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இரு கழகங்களுக்குமான இடைவெளி குறைந்துவரும் நிலையில், கூட்டணி பலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வேலூர் மண்டலம் 36 தொகுதிகள்
வேலூர் மண்டலத்தில் தி.மு.க. வலுவாக இருக்கிறது. கூட்டணி பலமும் அதற்கு சாதகமாக உள்ளது. அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டிப் பூசல்களும் அதன் தலைமையின் அணுகுமுறைகளும் செல்வாக்கைச் சேதப்படுத்தி யுள்ளன.
கடலூர் மண்டலம் 24 தொகுதிகள்
விழுப்புரம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் தி.மு.க.வின் தனிப்பட்ட வளர்ச்சியும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணியும் அந்த அணிக்கு சாதகமானதாக உள்ளது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான வாக்கு இடைவெளி கணிசமான அளவில் உள்ளது. பா.ம.க., தே.மு.தி.க.வின் கூட்டணி இம்மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
சேலம் மண்டலம் 18 தொகுதிகள்
மிகக்குறைந்த இடைவெளியில் இரு கழகங்களும் மோதிக்கொள்ளும் இந்த மண்டலத்தில் பா.ம.க.வின் வாக்கு வங்கியும், தே.மு.தி.க.வின் வளர்ச்சியும் தேர்தல் களத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. சாதி வாக்குகளின் ஒருங்கிணைப்பும் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.
கோவை மண்டலம் 24 தொகுதிகள்
எதிர்க்கட்சியான அ.தி.மு.க, ஆளுங்கட்சியான தி.மு.க.வை விட கூடு தல் செல்வாக்கைக் கொண் டுள்ள மண்டலம் இது. இரட்டை இலைக்குப் பதிவாகும் பாரம்பரியமான வாக்குகளும், தி.மு.க. நிர்வாகிகளின் உள்ளடி அரசிய லுமே இங்கு ஆளுங்கட்சியைப் பின்தங்கச் செய்துள் ளன. இரு கழகங்களும் தங்கள் பலத்தைக் காட்டுவதற்கு மாற்றி, மாற்றி கூட்டம் கூட்டிய மண்டலம் என்பதால் அதற்கு தாக்கம் இருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும். கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சியால் எம்.பி. தேர்தல் போல வாக்குகளைப் பெறமுடியுமா என்ற கேள்வியும் இம்மண்டலத்தில் உள்ளது.
ஈரோடு மண்டலம் 18 தொகுதிகள்
அ.தி.மு.க.வின் பலம், தி.மு.க.வைவிட சற்று கூடுதலாக உள்ள மற்றொரு மண்டலம் ஈரோடு. இங்கும் சாதிரீதியான வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அ.தி.மு.க.வுக்குப் பாரம்பரிய மாக விழக்கூடிய வாக்குகளை, அங்கிருந்து கட்சி தாவிய பிரமுகர்கள் எந்தளவுக்கு ஆளுங்கட்சிப் பக்கம் திருப்ப முடியும் என்ற கேள்வியும் நிலவுகிறது.
திருச்சி மண்டலம் 12 தொகுதிகள்
இரு கழகங்களும் கடும் போட்டியிடக்கூடிய மண்டலம் திருச்சி. தி.மு.க.வின் மாவட்ட அமைச்சர் தனிப்பட்ட முறையில் செலுத்தும் கவனத்தால் அக்கட்சி இங்கு சற்று முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இம்மண்டலத்திலுள்ள வாக்கு வங்கியும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தஞ்சை மண்டலம் 18 தொகுதிகள்
திராவிட இயக்கமும் பொதுவுடை மை இயக்கமும் வளர்ச்சி பெற்றுள்ள தஞ்சை மண்டலத்தில் தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தாலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு என்பது அ.தி.மு.க. அணிக்கு பலம் தருகிறது. காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள் இம்மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மதுரை மண்டலம் 18 தொகுதிகள்
எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.கவின் கொடி உயரப் பறந்த மதுரை மண்டலத்தில் தற்போது தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி நிர்வாகிகளிடம் காணப்படும் சுணக்கமும், பழைய வாக்கு வங்கிகளில் ஏற்பட்டுள்ள சரிவும் இதற்கு காரணம் என்றாலும், தேர்தல் நெருங்கும்போது பலம் பெற்று எழ முடியும் என நம்புகிறது அ.தி.மு.க.
திண்டுக்கல் மண்டலம் 12 தொகுதிகள்
அ.தி.மு.க.வின் வெற்றிக்கணக்கைத் தொடங்கி வைத்த மண்டலம் திண்டுக்கல். ஜெ.வின் சொந்தத் தொகுதி அமைந்திருப்பதும் இந்த மண்டலத்தில் தான். அதனால் இங்கே ஆளுங்கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் கடும்போட்டி நிலவுகிறது. சாதிவாக்கு களின் பலமும் அ.தி.மு.க.வுக்கு சார்பாக உள்ள நிலையிலும், நாலேகால் ஆண்டு சாதனைகளை முன்னிறுத்தி ஆளுந்தரப்பு தேர்தல் களத்தில் தன் மூக்கை முன்னே நீட்டுகிறது.
நெல்லை மண்டலம் 18 தொகுதிகள்
தி.மு.க. தன் செல்வாக்கை அண்மைக்காலத் தில் உயர்த்திக்கொண்ட மண்டலங்களில் நெல்லை யும் ஒன்று. இரு கழகங்களிலுமே இங்கு கோஷ்டி கானங்கள் கேட்கின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. இழந்திருந்த தலித் வாக்கு வங்கியை, புதிய தமிழகத்துட னான கூட்டணி மூலமாக சரிசெய்ய முடியும் என அக்கட்சி எதிர்பார்க் கிறது. ம.தி.மு.க. வுக்குள்ள கணிச மான செல்வாக்கும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அம்சம். போட்டா போட்டி நிலவும் மண்டலங்களில் இதுவும் ஒன்று.
குமரி மண்டலம் 12 தொகுதிகள்
தமிழகத்தின் கடைக்கோடி மண்ட லம். தேசிய கட்சிகளின் செல்வாக்கு நிறைந்த தொகுதிகள் அதிகம். சாதி வாக்கு களோடு மதரீதியாகவும் வாக்குகள் ஒருங் கிணைவது இந்த மண்டலத்தின் அரசியல் அம்சம். திராவிடக் கட்சிகளுக்கு சோதனைக் களமாக இருக்கும் இந்த மண்டலத்தில், தி.மு.க. தன் செல்வாக்கை சற்று உயர்த்தி யுள்ளது. தேர்தல் நெருங்கும்போது களத் தில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment