Monday, August 16, 2010

இதுவா ஜனநாயகம்? -மிரட்டிய விளம்பரமும் வெளியான செய்தியும்!



"ஜூனியர் விகடன் இதழை எதிர்த்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் மிகப்பெரும் போராட்டத்தை எங்கள் இயக்கம் நடத்தும்!' -தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார் மாநில சங்கத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் பெயரில் வெளிவந்த இந்த விளம்பரத்தைப் பார்த்து... கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் கொந்தளித் தார்கள்.

இதை கண்டித்து சென்னைப் பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரி கையாளர் மன்றம் உள்ளிட்ட பத்திரிகை யாளர் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. விளம்பரம் வெளியான அன்றைய தினமே சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் அவசரக் கூட்டம் ஒன்றும் கூட்டப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான வெளிப்படையான மிரட்டல் சவால்களை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்ட அந்தக் கூட்டமே பிறகு கண்டனக் கூட்டமாகவும் மாறியது.

மிரட்டல் விளம் பரம் கொடுப்பது, பணி யாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, தொலைபேசியில் அச்சுறுத்தி வருவது உள்ளிட்ட ஜனநாயக விரோதச் செயலை கண்டிப்பதோடு, பத்திரி கையாளர்கள் உயிருக்கும், உடை மைக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர்நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுசென்று உரிய பாது காப்புக்கான உத்தரவை பெறுவது, பகிரங்க அச்சுறுத்தல் கொடுத்த தனி நபர்கள், சங்கங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் பத்திரிகையாளர்கள்.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் ஆசிரியர் அசோகன் பத்திரிகை யாளர்களிடம் பேசியபோது, ""சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத் துக்கு முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட விளம்பரங்கள் கொடுப்பது இந்திய தேசத்தின் அரசமைப்பு சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல -பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள் ளது. யூகத்தின் அடிப்படையில் சில நிருபர்கள் பெயரைக் குறிப்பிட்டு மதுரை முழுக்க 10-க்கும் மேற்பட்ட வகையிலான போஸ்டர்களை ஒட்டி யிருப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர். தொலைபேசி வழியாகவும் முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இது பற்றி டி.ஜி.பி., சென்னை கமிஷனர் ஆகியோரிடம் முறைப்படி தெரிவித்திருக்கிறோம். ஜூ.வி. அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும் வழி ஏற்படுத்த வேண்டி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க இருக்கிறோம்''’என்றதோடு, குறிப்பிட்ட அந்த செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்''’என்றார் அழுத்தமாக.

மிஸ்டர் கழுகு என்ற பகுதியில், ’மடக்கப்பட்ட மதுரை திலகம்’என்ற தலைப்பில் அவதூறான செய்தி வெளி யிடப்பட்டதாக குறிப்பிட்டது கண்டனத்துக்குரிய அந்த விளம்பரம். குறிப்பிடும் அந்த செய்தி என்ன?

""பேரென்ன ஊரென்ன என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அமைச்சர்கள் தொடங்கி போலீஸ் வட்டாரம் வரை, இந்த விவகாரம்தான் இப்போது பெரிதாக பேசப்படுகிறது. மூத்த புள்ளிக்கு முழுநேர உடன்பிறப்பாக இருக்கும் குங்குமப் புள்ளியை போலீஸ் வகையாகக் கவனித்த கதைதான் அது. அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் அந்தக் குங்குமப் புள்ளிக்கு போன் போட்டிருக்கிறார். உடனடியாக சென்னைக்கு வாருங்கள் என்று’ அமைச்சர் அழைக்க, சரி எனத் தலையாட்டிய குங்குமப் புள்ளி சட்டென உஷாராகிவிட்டாராம். ‘நான் வரமுடியாது’ என அமைச்சரிடம் தடாலடியாக மறுத்திருக்கிறார். அடுத்தநாள் காலையில் முதல்வருக்கு நிழலான அதிகாரியிடம் இருந்து குங்குமப் புள்ளிக்கு போன் போயிருக்கிறது. அதி உயர்வான ஒரு பெயரைத் துணைக்கு அழைத்தவர், ‘அவருடைய ஆர்டர்... சீக்கிரம் வந்து சேருங்க’ எனச் சொல்லப்பட, தனது ‘சூப்பர்’ நண்பருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் குங்குமப் புள்ளி. ‘சூப்பரை’ வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, குங்குமத்தை தனி அறைக்கு கூட்டிக்கொண்டு போனது கட்டுமஸ்தான ஒரு டீம். இதை போலீஸ் என்கிறார்கள் சிலர், இல்லை போலீஸ் மாதிரி என்கிறார்கள் இன்னொரு சிலர். உள்ளே தரப்பட்ட பிரசாதத்தில் வெலவெலத்துப்போன குங்குமம், ‘அண்ணனுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல...’ எனக் குமுற, ‘அவர் சொல்லித்தான் பூசை..’ என வரி வரியாகப் போட்டு அனுப்பினார்களாம்'' என்று போகிறது அந்த செய்தி.

குங்குமப் புள்ளி என்று தன்னைத்தான் குறிப்பிடுகிறார்கள் என மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருக்கும் சுரேஷ் பாபு ஜூ.வி.க்கு எதிராக மதுரை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜராகி கிரிமினல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்பாபு, “""குங்குமப்புள்ளி என்று அவர்கள் குறிப்பிடுவது என்னைத்தான். அவர்கள் குறிப்பிடுவது போன்ற சம்பவமே நடக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் நிரூபிக்கட்டும். அதை விட்டு ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டு என்னையும், மத்திய அமைச்சரையும் கொச்சைப்படுத்துவது எப்படி பத்திரிகை தர்மம் ஆகும். நீங்கள்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று என்னிடம் விசாரித்தீர்களே? அவர்களின் செய்தியால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற் பட்டிருக்கிறது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக 10 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கிரிமினல் வழக்கு போட்டிருக்கிறேன்''’என்றார்.

சுரேஷ்பாபு தொடர்ந்திருக்கும் கிரிமினல் வழக்கில் விகடன் நிறு வனத்தை சேர்ந்த 7 பேர் பெயரைக் கொடுத்திருப்பதால் அவர்களுக்கு முன் ஜாமீன் உள்ளிட்ட சட்ட பாது காப்புக்கான வேலைகளை செய்து வருகிறார்கள்.

பத்திரிகை விளம்பரத்தை பார்த்து டென்ஷனான முதல்வரும் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதை ஒட்டி தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் விளம்பரம் கொடுத்த வி.பி.எம். சங்கர்.

ஜனநாயக நாட்டில் சட்ட ரீதியாக எதையும் சந்திப்பது மட்டுமே நியாயமான செயலாக இருக்கும்.

No comments:

Post a Comment