Tuesday, August 24, 2010

‘ஏழாம் அறிவு’.


கஜினி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சூர்யா- ஏ.ஆர்.முருகதாஸ் ஹிட் ஃபார்முலா டீம் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஏழாம் அறிவு’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவி்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளிலும் திரையிடப்படவுள்ளது.

இதில் ஸ்ருதி கமலஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இந்தியில் ‘லக்’ படத்தில் நடித்துள்ள ஸ்ருதிக்கு ‘ஏழாம் அறிவு’தான் தமிழில் முதல் படம்.

கமல்,தனது உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் ஸ்ருதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.அதேபோல் ஏழாம் அறிவு படத்திலும் ஸ்ருதி நடிக்க காரணமும் அவர்தானாம்.

ஏழாம் அறிவு படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் கமல்தான். இதில் நடிப்பதற்காக கமலிடம் முருகதாஸ் அணுகிய போது, வேறுபடங்களின் கால்ஷீட் பிரச்சனைகளால் இதில் நடிக்க முடியாது என்றார். அதன் பிறகு, இதில் நாயகியாக நடிப்பதற்கு ஸ்ருதியின் சம்மதம் கேட்டபோது, அவர் நடிக்க முடியாது போனதால் தனது மகளை நடிக்கவைத்தார் கமல்.

படத்தில் எப்படிப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் ஸ்ருதி ஒரே டேக்கில் ஓ.கே வாங்கிவிடுவாராம்.இதனால் படக்குழுவினரின் பாராட்டுக்களை பலமுறை வாங்கியுள்ளார். (யாரு... உலக நாயகனின் பெண்ணல்லவா...)

படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஏற்கனவே ஸ்ருதியை வாரணம் ஆயிரம் படத்தில் பாடவைத்து, அவரின் குரலை வெகுவாகப் பாராட்டியவர் ஹாரிஸ். தற்போது இந்தப் படத்தின் கதாநாயகியாகவும் இருப்பதால் பாடலின் ஸ்ருதியில் எல்லாம் ஸ்ருதியின் ஆளுமைதானாம்.எல்லாப் பாடல்களையும் இவரே பாடியிருப்பதாகவும் தகவல்.


இந்தப் படம் இந்தியிலும் டப்பிங் ஆகவுள்ளது. அதிலும் ஸ்ருதிதான் நாயகி. ‘லக்’கில் இல்லாத லக் ஏழாம் அறிவில் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஸ்ருதி.

ஏறக்குறைய கஜினிப்படத்தின் அதே கூட்டணி இதிலும் இணைந்திருப்பதால், ஏழாம் அறிவும் இன்னொரு மெகா ஹிட்தான் என்று பேசப்பட்டு வருகிறது. உதயநிதியும் இந்தப் படம் தமிழ் தெலுங்கு, இந்தி என்று மிகப் பெரிய அளவில் வெற்றியடைய எல்லாவகையிலும் முயற்சித்து வருகிறார். இதுபோக தற்போது சூர்யா என்றாலே வெற்றியின் பிரகாசம் என்ற தனிச்சிறப்பும் ஏற்கனவே உண்டு.

பிறகென்ன, படத்தின் வெற்றி குறித்து கேட்கவா வேண்டும்...

No comments:

Post a Comment