Thursday, August 12, 2010
துணைவேந்தரை தாக்கினாரா எம்.எல்.ஏ.?
""திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பனையும் உடற்கல்வி இயக்குநர் தேவதாஸையும் தாக்கியதாகக் கூறப்படும் நெல்லை எம்.எல்.ஏ. மாலைராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!''.
ஜெயலலிதாவும் கூட்டணிக் கட்சி யினரும் கொடுத்திருக்கும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றன.
என்னதான் நடந்தது... 7.8.10 சனிக்கிழமை மாலை, நெல்லை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில்...?
""பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே பிரச்சினை கள் உருவாகி விட்டன. "பட்டமளிப்பு விழாவுக்கு துணை முதல்வர் வருகிறார். நீங்களும் கட்டாயம் கலந்து கொள்ளணும்'னு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சபா நாயகர் ஆவுடையப்பனை தொடர்பு கொண்டு சொன்னார். அதற்கு சபாநாயகர் "எனக்குக் கூட கூரியர்ல அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்கள்' என்று சொன்னாராம். அதன்பிறகு அமைச்சர் துணைவேந்த ரிடம் பேசியதும், துணைவேந்தர் காளியப்பன் நேரடியாகப் போய் ஒரு அழைப்பிதழை சபாநாயகருக்கு கொடுத்தார். ஆனாலும் எம்.எல்.ஏ. மாலைராஜாவுக்கு கூரியர்லதான் அனுப்பினார்கள். யூனிவர்சிடி சிண்டிகேட் மெம்பரான எம்.எல்.ஏ. மாலைராஜாவை அவமானப்படுத்தலாமா?'' என்கிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள். விழாவில் என்ன நடந்தது என்று பல்கலைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.
""துணை முதல்வர் வருவதற்கு முன்பே மேடைக்குக் கீழே முதல் வரிசை நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார் எம்.எல்.ஏ. மாலைராஜா. அப்ப, பேராசிரியர் ஒருத்தர் எம்.எல்.ஏ.விடம் போய், "நீங்க சிண்டிகேட் உறுப்பினர். கவுன் போட்டுட்டு மேடையிலதான் இருக்க ணும். வாங்க கவுன் தர்றேன்'னு கூட்டிட்டுப் போனார். கவுன் கொடுக் கிறதுக்கு ரொம்ப லேட்டாகியிருக்கு. அதற்குள் ஸ்டாலின் வர, அந்த பரபரப்பில் எம்.எல்.ஏ. உட்கார்ந்திருந்த நாற்காலியில் வேறு யாரோ உட்கார்ந்து விட எம்.எல்.ஏ. கவுனும் இல்லாமல் பின் வரிசையில் உட்கார வேண்டியதாப் போச்சு... பட்டமளிப்பு விழா 5.55-க்கு முடிந்து எல்லாரும் போய்விட்ட பிறகு 6.15-க்கு தன்னோட ஆட்களோட துணைவேந்தர் அறைக்குப் போனார் மாலைராஜா. அங்கே ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. தகராறுனு தெரிஞ்சதும் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன், அந்த அறைக்குள் நுழைந்து மாலைராஜாவையும், மற்றவர்களையும் வெளியே அழைத்து வந்தார்...'' என்றார் பல்கலைப் பேராசிரியர் ஒருவர்.
எம்.எல்.ஏ. மாலைராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
""அவர் அறைக்குப் போய் அவரிடம் என்னை நீங்க சரியா நடத்தலை. ஏன் கவுன் தரலைனுதான் கேட்டேன். இதெல்லாம் ஒரு சில்லி மேட்டர்... உங்க மாதிரி அரசியல்வாதிகளுக்கு நாங்க பயப்படணும்னு அவசியமில்லைனு சொல்லிட்டு, இவங்களை வெளியேத்துங்கனு அவங்க ஆட்களிடம் சொன்னாரு... அவர்கள் எங்களை தள்ளுனாங்க. தேவதாஸ்ங்கிறவர் என் தோள் மேல கையை வச்சதும், என்னோட வந்தவங்க தேவதாஸ் கையைத் தட்டிவிட் டாங்க. அவமானப்பட்டுத் திரும்பியது நான்தான்...!'' என்றார் கோபத்துடன் எம்.எல்.ஏ. மாலைராஜா.
துணைவேந்தர் காளியப்பனையும் உடற்கல்வி இயக்குநர் தேவதாஸையும் பலமுறை நாம் தொடர்பு கொள்ள முயன்றோம். பேச மறுத்துவிட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment