Saturday, August 28, 2010

எந்திரன் - வியக்கும் ஹாலிவுட்


எந்திரன் என்றாலே சாதனையின் சிறப்பிடமாகிவிட்டது.படம், பாடல், தயாரிப்பு, விற்பனை உரிமை என பல சாதனைகளை படைத்துவரும் எந்திரனின் தற்போதைய சுவாரசியமானத் தகவல் கிளிமாஞ்சாரோ பாடல் பற்றியது.


எந்திரன் பாடல்களில் ஹைலைட் ஹிட்டான கிளிமாஞ்சாரோ பாடல் படமாக்கப்பட்ட இடத்தில், இதுவரை எந்தப் படமும் படமாக்கப்படவில்லை என்பது அறிந்ததுதான். இந்தப் பட்டியலில் ஜேம்ஸ் பாண்டின் ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’ படமும் இடம் பெற்றுள்ளது என்பதே ஹாட் நியூஸ்.


பா.விஜய்யின் பாடல் வரிகளில், ஜாவித் அலி-சின்மயி பாடியுள்ள இந்தப் பாடல், பெரு நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மச்சு பிச்சு’ மலைத்தொடரில் படமாக்கப்பட்டது. இந்தப் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.


கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் பாண்டின் குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்திற்கான சண்டைக் காட்சி ஒன்றினை இந்தப் பகுதியில் படமாக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் படப்பிட்டிப்பை நடத்தியுள்ளது எந்திரன் படக்குழு. இதனால் வியந்துபோய் உள்ளது ஹாலிவுட்.


உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜேம்ஸ் பாண்டின் படத்திற்கே கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு தமிழ்ப்பட சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு கிடைத்துள்ளது தமிழ்த் திரையுலகுக்குப் பெருமையே.


இப்படியும் எந்திரன் சாதனைப் பட்டியில் நீள்கிறது...

ஜெயம் ரவியின் புதிய தோற்றம்!


சமீபமாக ஜெயம் ரவி விழாக்களுக்கு தாடியோடு வருகிறார். என்ன தான் சங்கதி என விசாரித்ததில் அந்த தகவல் தேசிய விருது வரைக்குமான விஷயமுன்னு பிறகுதான் தெரிந்தது.





பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு அமீர், ஜெயம் ரவியின் நடிப்பில் இயக்குவதாக இருந்தப் படம் ‘ஆதிபகவான்’. ஆனால் சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி படத்தில் நாயகனாக நடிக்கவிருந்ததால் இந்தப் படம் இயக்குவதை தாமதப்படுத்தினார் அமீர். அதனால் ஜெயம் ரவியும் ’பேராண்மை’யில் நடிக்க சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து தில்லாலங்கடி படமும் முடித்துவிட்ட நிலையில் தற்போது அமீரின் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரவி.


இதில் ஜெயம் ரவி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பால்வடியும் தனது முகத்தின் கெட்டப்ப மாத்தி, படத்துக்கு ஏற்றாற்போல் தனது செட்டப்பையும் மற்றிக் கொண்டுள்ளாராம் ரவி. இந்த மாற்றங்களுக்காகவே அவர் வெளியில் தலைகாட்டுவதில்லையாம்.


இதே மாதிரிதான் ஆர்யாவும் ‘நான் கடவுள்’ படத்தில் நடித்தபோது இருந்தார். இப்பொழுதும்கூட அவன்-இவன் படத்தில் நடித்து வருவதால் தொப்பி அணிந்துதான் வெளியில் வருகிறார்.


பருத்திவீரனில் கார்த்தி தாடியுடன் அழுக்கா, அதே நேரம் கம்பீரமான கிராமத்து அழகனாய் நடித்திருப்பார். அந்தப் படத்தின் மூலம் கார்த்திக்கு தேசியவிருதையும் தாண்டிய புகழ் கிடைத்தது.


அதேபோன்ற ஒரு மாறுபட்ட, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. நிச்சயம் தேசிய விருதுக்கான முயற்சியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ‘ஆதிபகவான்’.

நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி


செப்டம்பர் 3, 2010 !

ரஜினி வீட்டின் மிகப்பெரியவிழா. இளைய மகள் சவுந்தர்யாவை அஷ்வின் குமாருக்கு கன்னிகாதானம் செய்து தரப்போகிறார் ரஜினி.

“கடைசி பிள்ளையின் கல்யாணத்தை கடலை உடைத்து கொண்டாடு” என்று கிராமப்புறங்களில் கூறுவர். அதற்கு பிறகு பெரிய விசேஷம் எதுவுமில்லை என்பதால் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் எனபதே இதன் பொருள்.

கிராமத்திலேயே இப்படி கொண்டாடப்படும் என்றால்... தமிழ்த் திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ’கொண்டாடப்படும்’ சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் வீட்டு திருமணம்.... அதுவும் செல்ல மகள் திருமணம்...எப்படி இருக்கும்னு சொல்லணுமா என்ன?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர் தவிர்த்து அரசியல் அளவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர்.

ஆனால் இந்தத் திருமணத்திற்கு எந்தப் பாகுபாடோ, வேறுபாடோ இன்றி திரைத்துறை, அரசியல், பத்திரிக்கைத்துறை என்று முடிந்தவரை அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார் பொறுப்பான அப்பா ரஜினி!

தமிழக முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு ரஜினி நேரில் சென்று அவரை திருமணத்திற்கு அழைத்தார். அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் மனைவி சகிதமாக சென்று அழைப்பிதழ் வழங்கினார். இப்படி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்பது மட்டுமில்லாமல் அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து வருகிறார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்தார்.

ரஜினி திரைப்படங்களில் ஸ்டைலாக புகைப்பிடிப்பது இளைஞர்களிடையே தீய பழக்கத்தை தூண்டுகிறது என்று விமர்சித்தார் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி.


அதற்குமுன்பு... ரஜினியுடன் இருந்த மோதல் காரணமாக, பாபா திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க. ஒரு கட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் பாபா படப்பெட்டியையே தூக்கிக் கொண்டு போய் பரபரப்பு கிளப்பியவர்கள் பா.ம.க.வினர்.

அப்படிப்பட்ட பா.ம.க.வின் எதிர்காலம் என்று கொண்டாடப்படும் டாக்டர் அன்புமணியையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினியும், அன்புமணியும் நெகிழ்ந்து போனார்களாம்.

இப்படி தன்னை எதிர்த்தவர்களையும் நேரில் சென்று தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

நக்கீரன் ஆசிரியரோடு நீண்ட பல வருடங்களாக நட்பு பாராட்டி வரும் ரஜினி, கடந்த வெள்ளிக்கிழமை (27ந் தேதி) நக்கீரன் அலுவலகத்திற்கே வந்து ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் குடும்பத்தினரை மகள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு கொடுத்தார்.

சிங்கம் சிங்கிளாதான் வரும் - சிவாஜியில் தான் பேசிய வசனத்தை சொல்லாமல் சொல்வதாக இருந்தது அவரின் வருகை.


துணைக்கு யாரையும் அழைத்து வராமல்... சிம்பிளாக...தனி மனிதராக நக்கீரன் அலுவலகம் வந்தவர்.... பைண்டிங் ஊழியர்கள் தொடங்கி எடிட்டோரியல் வரை எல்லோரிடமும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

லிப்ட் எல்லாம் எதுக்கு... அப்படியே நாலு ஸ்டெப் நடந்துடுவோம் என்று நாலு மாடியையும் நடந்தே ஏறினார் ரஜினி’ ஃபெண்டாஸ்ட்டிக்கா இருக்கு ஆபீஸ் அட்மாஸ்பியர். வாழ்த்துகள் கோபால்’ என்றபடி ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தவர்... கல்யாண பரபரப்புக்கு இடையிலும் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நக்கீரன் அலுவலகத்தில் இருந்த ரஜினி ஒரு மினி ஃபோட்டோ செஷனையே நடத்தி முடித்து விட்டார்.

வயசானாலும் உன் இளமையும்... ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா....!

Friday, August 27, 2010

பிரபல நடிகையுடன் டேட்டிங்! -மாட்டிய புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம்!


கோவை மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பிரபல தொழிலதிபர்கள் தங்கள் டென்ஷனை குறைக்க நினைத்தால் வலைய தளத்தில் அந்த இணைய தள முகவரியைத்தான் உடனே விரல் நோக அடிக்கிறார்கள்.

இந்த முகவரியை விரல் நோக அடித்தால் அதில்... ""உங்களை மகிழ்விக்க, உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த இளம்பெண்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த மொழி பேசும் பெண் வேண்டு மானாலும் தயாராக உள்ளனர். இன்றைய இரவை இனிதாக்கிக் கொள்ளுங்கள்'' என்ற வாசகத்திற்கு பின்னால்...

கோவை என்றால் எந்த கல்லூரி பெண்கள் உங்களை மகிழ் விக்கப் போகிறார்கள் என்ப திலிருந்து அவர்களின் செல்ஃபோன் நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த இணையத்தில். இப்படி தொழிலதிபர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் இந்த கும்பலைப் பற்றியான தகவல்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவுக்கு வர... அவரின் உத்தரவின் பேரில் ஏ.சி.முத்துராஜ் தலை மையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விபச்சாரத் திற்கு பயன்பட்ட இரண்டு சொகுசு கார்களையும், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்ததோடு...

அந்த விபச்சார கும்பலின் புரோக்கரான சீனி என்ற சீனிவாசனையும், அவன் தம்பியான தர்மா என்பவனையும், கொல்கத்தா அழகி சொப்னா, பெங்களூர் அழகி வைஷ்ணவி என்ற இரண்டு விபச்சார அழகிகளையும் துடியலூரில் உள்ள ஆடம்பர பங்களாவில் வைத்து கையும் களவுமாய் கைது செய்திருக்கிறது அந்த தனிப்படை.

அதற்குப் பிறகு கோவை பி-3 ஸ்டேஷனில் தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசலு தலைமையிலான டீம் இணைய தள விபச்சார புரோக்கர் சீனியிடம் விசா ரணை நடத்த, அவன் சொன்ன தகவல்கள் போலீஸாரையே அதிர்ந்து போக வைத்திருக்கிறது. இனி அவன் வாக்குமூலம்.


""நான் பழனியத் தாண்டி இருக்கற கணக்கம்பட்டி யைச் சேர்ந்தவன். பெரிசா எந்த வேலையும் கிடைக்காம அலைஞ்ச போது ஆஷாங்கிற திருச்சியில் இருக்கிற ஒரு பொம்பள புரோக்கர்கிட்ட எடுபுடியா வேலைக்கு சேர்ந்தேன். அப்பதான் விபச்சார உலகத் துல கிங்கான கோவை பாலாஜி, குமார், நவாஸ், சந்தியா, செல்வம்ங்கற ப்ராஸ்டிடியூசன் புரோக்கர்களோட தொடர்பு கிடைச்சது. அப்புறம் கோவை பாலாஜிகிட்ட எடுபுடியா மாறினதுக்குப் பிறகு தான் இந்த உலகம் செக்ஸ்ங்கிற விஷயத்துல எப் படி சபலப்பட்டு கிடக்குதுங்கிறத புரிஞ்சுக்கிட்டேன்.

ஏன்னா கோவை பாலாஜியோட கஸ்டமர்கள் எல்லாம் பெரிய பிஸினஸ்மேன்கள். அவுங்க காலேஜ் பொண்ணுங்க, சினிமா நடிகைங்ககிட்ட உல்லாசமா இருக்கறதுக்காக லட்சக்கணக்குல பணத்த விட்டெறியறத கண்ணாரப் பார்த்தேன். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டிருக்கற நாம பெரிய ஆளா வரணும்னா இந்த தொழில நம்மளே செய்யலாம்ன்னு முடிவெடுத்து கோவை பாலாஜிகிட்டயிருந்து பிரிஞ்சு வந்து தனியா இந்த தொழில பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு சில காலேஜ் பொண்ணுகள யும், தொழிலில் இருக்கும் பெண் களை காலேஜ் பொண்ணுங்கள் னும் சொல்லி பிஸினஸ் பண்ண ஆரம்பிச்ச போது கல்லா கட்ட ஆரம்பிச்சுச்சு. அவுங்களுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் கொடுத்துருவேன்'' என்று சொல்ல அதிர்ந்து போன போலீஸிடம் விடாமல் தொடர்ந்தவன்...

""என் இலக்கு பணம்தான். பல பெரிய மனுஷங்களோட இலக்கு பெண்கள்தான். அதனால அதுதான் கிடைக்கும். இது தான் கிடைக்கும்ங்கறதெல்லாம் இந்த உலகத்துல கிடை யவே கிடையாது. நான் நினைச்சா யாரை வேணும்னாலும் சொடக்குப் போடுற நேரத்துல கூட்டிட்டு வந்துருவேன். ஆனா அதுக்கு தேவை பணம்தான்'' என்று தத்துவம் பேசிய சீனி... ""வெப் சைட்ல காலேஜ் பொண்ணுகளோட போட்டாவ போட்டபோது எல்லா பிஸினஸ்மேன்களும் என் காலடியில வந்து விழுந்தாங்க. விபச்சார தொழிலுக்கான என்னோட எல்லை களை விரிவாக்கம் செஞ்சபோது துணை நடிகைங்க என் தொழிலுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் என் பிஸினஸ் வளர்றதுக்கு ரொம்ப உதவி பண்ணது ஒரு முக்கிய நடிகைதான்.

அதுபோலவே நானும் அவுங் களுக்கு பண விஷயத்துல கரெக்டா இருப்பேன். சினிமால முக்கிய நடிகைங் கறதால அவுங்களுக்கு ரொம்பவே கிராக்கி. அவுங்க ரேட் எட்டு லட்சம். அவுங்கள புக் பண்ணணும்னா முதல்ல அவுங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர்ல 5 லட்சத்த போட்டுறணும். அதுக்குப் பிறகு ரெண்டு மாசங்கழிச்சு இந்தியாவ ஒட்டியிருக்கிற ஒரு தீவுக்கு டேட் குடுத்த நாள்ல அந்த நடிகை போயிருவாங்க. அதுக்கப்புறம் பணங்கொடுத்த கஸ்ட மர்களை அங்க கூட்டிட்டுப் போவேன். அவுங்களும் திருப்தியா இருந்துட்டு வருவாங்க.

அவுங்களும் அந்த நடிகையோட இருந்துட்டு மீதி 3 லட்சத்த குடுத்துட்டு போயிருவாங்க. இந்த தொழில்ல நேர்மைதான் சார் ரொம்ப முக்கியம். அதனால நடிகையும் சரி, நம்ம கஸ்டமர்களும் சரி, பண விஷயத்துல கரெக்டா இருப்பாங்க'' என்று அவன் அந்த பிரபல நடிகை பெயரை சொன்னவுடன் அதிர்ச்சி அளவு கடந்து போயிருக்கிறது விசாரித்த தனிப் படைக்கு.

தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசலுவிடம் பேசினோம்.

""அந்த பிரபல நடிகை எவ்வளவு தூரம் இவனுடன் சம்பந்தப்பட்டிருக் கிறார் என்பது அடுத்த கட்ட விசா ரணையில்தான் தெரியவரும். அந்த நடிகையின் அக்கவுண்ட் நம்பரில் பணம் போட்டிருக்கிறேன் என்று சீனி சொல்லியிருப்பதால் அந்த அக்கவுண்ட் நம்பரை அவனிடமிருந்து கிடைத்தபின்பே அந்த நடிகை குறித்து சீனி சொல்லியிருக்கிற விஷயங்கள் உண்மையா என்பதை தெளிவு செய்ய முடியும்'' என்றார்.

நித்யானந்தாவுக்கு இன்னமும் திமிர் அடங்கவில்லை போலும்.


பரபரப்பு வீடியோ, வழக்கு, கைது என்று தொடர்ந்து சரிந்து வரும் தன் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த பல முயற்சிகளை எடுத்து வரும் நித்யானந்தா... தமிழகத்திலும் தன் செல்வாக்கை திரும்ப பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கர்நாடக ஆசிரமத்துக்கு சில டி.வி. நடிகைகளை அழைத்து பூஜைகள் நடத்தியது போன்று தமிழகத்தில் சில பிரபலங்களை கொண்டு செல்வாக்கை மீட்கும் திட்டத்தை வகுத்து வருகிறார் என்கிறார்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் கர்நாடக காவல்துறை அதிகாரிகள்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரை வரவழைத்தாராம். அடுத்த கட்டமாக தமிழக இந்து அமைப்புகள் சிலவற்றை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாகவே இப்படி பலர் நித்யானந்தாவை சந்தித்து செல்கிறார்கள்.

"இதோடு ரத யாத்திரை ஒன்றை தமிழகம் முழுக்க நடத்தவும், வினாயகர் சதுர்த்தி ஊர்வலத் தின் போதும், ரத யாத்திரை யின் போதும் இந்து மத வெறியை தூண்டிவிடவும் திட்டமிட்டிருக்கிறது நித்யா னந்த ஆசிரமம்'’ என அதிர்ச்சி தகவலைக் கொடுக் கிறார் கர்நாடக மாநில தி.மு.க. பிரதிநிதியாக உள்ள சுரேஷ்!

""சமீப காலமாக நித்யானந்தா ஆசிரமத்துக்கு தமிழகத்தில் இருந்து பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கிறார்கள். அப்படி வந்து போகிறவர்களில் தமிழக சிவசேனா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நாகூரை சேர்ந்த தங்க. முத்துக் கிருஷ்ணன், பழனி சந்திரசேகர், தஞ்சை சசி உள்ளிட்ட பலரும் முக்கியமானவர்கள். நாகூர் தங்க. முத்துக்கிருஷ்ணனை தலைவராக கொண்டு புதிதாக இந்து அதிரடிப்படை என்கிற அமைப் பையே இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப் போகிறார்கள். முதலில் கும்பகோணத்தில் இருந்து திருவண்ணா மலை வரை மட்டும் இந்த ரத யாத்திரையை நடத்துவதாக இருந்தார்கள். இப்போது தமிழகம் முழுக்க ஒரு மாதத்துக்கு மேல் இந்த ரத யாத்திரையை நடத்த இருக்கிறார்கள்.

இதற்காக 25 லட்ச ரூபாய் கொடுப்பதாக நித்யானந்தா ஆசிரம தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதுவரை 18 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இந்த ரத யாத்திரையின் போது திட்ட மிட்டு சில இடங்களில் பிரச்சினை ஏற்படுத்தப் போகிறார்கள். இதன் மூலம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுப்பதுதான் அவர் களின் திட்டம். தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்த இப்போதே தயாராகி விட்டார்கள். இது மட்டுமின்றி வினாயகர் சதுர்த்தி தினத்தில் சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்தி பிரச்சினை உண்டாக்கவும் திட்டமிட்டிருக்கிறார் கள்'' என்று அதிரடித் தகவல்களை சொல்லிக் கொண்டே போன சுரேஷிடம், "உங்களுக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன' என்றோம்.

""நித்யானந்தா ஆசிரமத்தின் தரப்பில் இருந்து செல்கின்ற இ-மெயில்களை ஆராய்ந்தாலே எல்லாம் தெரியவரும். அவர்கள் போட்ட திட்டங் கள், பணம் கொடுத்தது எல்லாமே நிரூபணமாகும். நித்ய பிராணானந்தா என்கிற சாமியாரின் இ-மெயிலில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில் கள் ஒரு சிலரின் மூலம் எங்களுக்கும் வந்தது. அதன் பிறகே இதைப்பற்றி முழுமையாக கவனிக்க ஆரம்பித்தோம்'' என்ற சுரேஷ், ""தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இப்படி ஒரு சதி செய்யப்படு கிறது என்பதை எங்கள் கர்நாடக மாநில தி.மு.க. தலைவர் பெரியசாமி.. துணை முதல்வர் அலுவல கத்தின் பார்வைக்கு இந்த தகவல்களை கொண்டு சென்றிருக்கிறார். கூடவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த ரத யாத்திரை பற்றி அலர்ட் செய்து இ-மெயிலும் அனுப்பியிருக்கிறோம். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக விட்டுவிடக் கூடாது என்கிற அக்கறையோடு செயல் படுகிறோம்'' என்று முடித்தார்.

நித்யானந்தாவுக்காக ரதயாத்திரை நடத்தப்போகிறார் என்று சொல்லப்பட்ட நாகூர் தங்க.முத்துக்கிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். விஷயத்தை கேட்டதுமே, ""ஆமாம்... விரைவில் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போகிறோம். இந்து துறவியர்களே மோசம் என்பது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றவே ரத யாத்திரைக்கு திட்டமிட்டிருக் கிறோம். நான் ஏற்கனவே இரண்டு முறை ரத யாத்திரை நடத்திய அனுபவம் உள்ளவன். 42 நாட்கள் இந்த ரதயாத்திரையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. இதற்காக இந்து அதிரடிப்படை என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டிருப்பது உண்மைதான். நான்தான் அந்த அமைப்புக்கு தலைவர்'' என்ற முத்துக்கிருஷ்ணனிடம்,

""நித்யானந்தாவுக்காகத்தான் இந்த ரத யாத்திரை நடத்தப்படுவதாகவும், அதற்காக 25 லட்ச ரூபாய் நிதி கொடுக்கப்படுவ தாகவும், ரத யாத்திரையின் மூலம் தமி ழகத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கர்நாடக மாநில தி.மு.க.வினர் புகார்கள் அனுப்பியிருக்கிறார்களே?'' என்று கேட்டோம்.

""நான் இப்போ பெங்களூர்ல இருந்துதான் உங்ககிட்ட பேசறேன். 4 நாட்கள் நித்யானந்தா ஆசிரமத்தில்தான் இருந்தேன். ரத யாத்திரையில் என்னோடு பங்கெடுக்க போகிற பழனி சந்திரசேகர் போன்றவர்களும் எனக்கு முன்பே ஆசிரமத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். வினாயகர் சதுர்த்திக்கு பிறகுதான் ரத யாத்திரையை தொடங்குவோம்.

ஆனால் வினாயகர் சதுர்த்தியின் போது நித்யானந்த வினாயகர் சிலையை உருவாக்கி சென்னையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்போகிறோம். இந்த ரத யாத்திரையால் எந்த பிரச்சினையும் வராது. ரத யாத்திரைக்கான செலவு முழுவதையும் மக்களிடமே கையேந்தி பெற இருக்கிறோம்'' என்கிறார் முத்துக் கிருஷ்ணன்.

ஆசிரம வட்டாரத்தில் விசா ரித்தபோது, ""தமிழகத்தில் தர்மா னந்தா (எ) லெனின் தந்த புகாரை வைத்து வழக்கு பதிவானது. இதன்பிறகு கர்நாடக மாநிலத்துக்கு நித்யானந்தா-ரஞ்சிதா சி.டி.வழக்கு மாற்றப்பட்டு நித்யானந்தா சிறைக்கு செல்லும் அளவிற்கு நிலைமை மாறியது. இதற்கு காரணம் சென்னையில் வழக்குப் பதிவானது தான். அதனால் தி.மு.க. அரசுக்கு எதிராகத்தான் நாங்கள் செயல் படுவோம்'' என்றார்கள்.

திரைக்கூத்து!

ஷங்கரின் ‘"த்ரீ இடியட்ஸ்' ரீ-மேக்கில் விஜய், மாதவன், ஜீவா நடிக்கிறாங்களாம். ஹீரோயின் நாற்காலிக்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் இலியானாவும், சமீரா ரெட்டியும். ஆனால் ஷங்கரின் பார்வை தமன்னா மீதாம். கிட்டத்தட்ட தமன்னா ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால் யாருக்கு ஜோடி என்பது முடிவாகவில்லை. ஆனால் விஜய்க்கு ஜோடியாக வேண்டும் என்பதுதான் தமன்னாவின் விருப்பமாக இருக்கிறது. இந்த விருப்பத்திற்கு காரணம்.... நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் தமன்னா பெரிய ஹீரோக்களுடன் நடித்த படங்கள் எல்லாமே ஹிட். ஆனால் விஜய்யுடன் நடித்த ‘"சுறா' மட்டும் சொதப்பிவிட்டது. அந்த அவப்பெயரை துடைக்க வேண்டும் என்றுதான் விஜய்யோடு டூயட் போட விருப்பப் படுகிறார் தமன்னா.


அநியாயமா இருக்கே?


"சிந்தனை செய்' டைரக்டர் யுவன் இயக்கி நடிக்கும் படத்தில் சந்தியாவை நாயகியாக கேட்டனர். "படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்க. படிச்சிட்டு ரிசல்ட் சொல்றேன்' எனச் சொல்லி விட்டாராம் சந்தியா. மேலும் சில கண்டிஷன்களை போட்டிருக்கிறார். அதனால் சந்தியாவிற்கு பதில் ஷம்முவை பேசியிருக்காங்களாம். ‘"கதையை கேக்காம நடிச்சாலும் குத்தம் சொல்றாங்க. கதையை கேட்டு நடிக்கலாம்னா அதுக்கும் பொல்லாப்பு சொல்றாங்க. என்னதான் செய்றது?' என நொந்து கொள்கிறார் சந்தியா.



நெல்லுக்கு நோ!


சத்யா, பாக்யாஞ்சலி நடித்திருக்கும் "நெல்லு' படம் விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றியது. அத்துடன்... கூலி உயர்வு கேட்ட விவசாயத் தொழிலாளர்கள் சுமார் நாற்பது பேர்களை குடிசையில் தூங்கும்போது பண்ணையார்கள் தீவைத்துக் கொளுத்திக் கொன்றார்கள். 1968-ல் தஞ்சை கீழவெண்மணியில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தை "நெல்லு' படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் தணிக்கைக்குழு அந்த காட்சி உட்பட சில காட்சிகளை நீக்கச் சொன்னது. இதற்கு டைரக்டர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்ததால் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பச் சொல்லீட்டாங்களாம்.



வில்லங்க சப்ஜெக்ட்?


"என்னா கோழி இது அநியாயமா இருக்கு?' எனக் கேட்டபடியே லைனுக்கு வந்தார் இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன். அவரே தொடர்ந்தார்.

""ஏற்கனவே கொழுந்தன் மேல ஆசப்பட்டவ தன் குழந்தை மீது கொதிக்கிற பாலை ஊத்துற மாதிரி வில்லங்கமா ‘"உயிர்' படம் எடுத்தார் டைரக்டர் சாமி. இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவு படங்களால்தான் பூவரசி மாதிரி ஆளுங்க குழந்தைகள கொடூரமா கொல் றாங்க. இப்ப "மாமனார்-மருமகள்' கள்ளத் தொடர்ப வச்சு "சிந்து சமவெளி' படம் எடுக்குறார்.

இந்த மாதிரி படங்கள சென்ஸார் அனுமதிக்கக் கூடாதுனு கோரிக்கை மனு கொடுக்கப்போறோம். மீறி அனுமதிச்சா சென்ஸார் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்தப் போறோம்'' என ஆவேசப் பட்டார் கண்ணன்.

அப்படியா!



அந்த தானியப் படத்தின் படப்பிடிப் பின் போது அந்த வளரும் ஹீரோ படத்தின் நாயகியான புதுமுகத்திற்கு ரூட் விட்டார். ஆனால் அம்மணி மசியவில்லை. ‘ஏதாவது இருந்தா ரெடி பண்ணு' என நடிகையின் உதவிஆளிடம் சொன்னாராம் ஹீரோ. "பத்தாயிரம் வெட்டுங்க. இந்த படத்து ஹீரோ யினவே ஓகே பண்ணீரலாம்' எனச் சொல்ல ஹீரோவுக்கு ஷாக். பணத்தை கொடுத்தவர் "நான்' என்பதை நடிகை யிடம் சொல்லாதே' எனச் சொல்லிவிட்டாராம். நடிகை கொடுத்த அப்பாயின்மெண்ட் நேரத்திற்கு சரியாக ஆஜரானார் நடிகர். அவரை பார்த்ததும் நடிகைக்கு அதிர்ச்சி. அதன்பின் அசடு வழிந்தாராம் நடிகை. அதன்பின் சுபகாரியம் சுப முகூர்த்தத்தில் சுபமாக முடிந்த தாம்.

அடிச்சா... அமெரிக்க டாலர்தான்!


நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு மாட்டிக்கொள்ளும் ஆசாமிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம் கள்ளக்குறிச்சி இளைஞனான சக்கரவர்த்தியோ... அமெரிக்க டாலர்களையே டூப்ளிக்கேட்டாக அச்சடித்துப் புழக்கத்தில் விட்டு... ’மோசடிச் சாதனை’ பண்ணி... காக்கிகள் தரப்பையே திகைக்க வைத்திருக்கிறான்.

அவனது மோசடிச் சாதனையைப் பார்க்கும் முன்... அவர் பிடிபட்ட விதத்தை முதலில் பார்ப்போம். விழுப்புரம் மாவட்ட கல்வராயன்மலை மேல்பரிகம் ’உண்டு உறைவிடப் பள்ளியில்’ தலைமை ஆசிரியையாக இருக்கிறார் 40 வயது எஸ்தர் ராணி. அதே பள்ளியில் சமையல்காரராக வேலைபார்க்கும் முனியப்பிள்ளை எஸ்தரிடம் வந்து ""மேடம்... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்... ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்குறார். இதை மாத்தினா... 45 லட்சரூபாய் கிடைக்கும். உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க'' என்று காதைக்கடிக்க... இதைக்கேட்டு குஷியான எஸ்தர் டீச்சர் ‘""அப்படியா.. முதல்ல அட்வான்ஸா 25 ஆயிரம் ரூபா தர்றேன். அமெரிக்க டாலரை வாங்கிக்கொடுங்க. மீதிப்பணத்தை.. டாலரை மாத்தித் தந்துடறேன்'' என்று பணத்தை நீட்ட... அவருக்கு சக்கரவர்த்தியிடமிருந்து பிரெஸ்ஸாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வந்து சேர்ந்தது. டாலரைக் கண்டு கிறுகிறுத்துப்போன எஸ்தர்... பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு... டாலரை எக்சேஞ் பார்ட்டியிடம் மாற்றப்போனார். எக்சேஞ் பார்ட்டியோ "உங்களுக்கு எப்படி டாலர் கிடைச்சிது. டாலரைப் பார்த்தா டவுட்டா இருக்கே'’ என கேள்விகள் கேட்டுக்குடைய... அடப்போய்யா என திரும்பிவிட்டார்.


மிச்சப் பணத்தை சக்கரவர்த்தி கேட்க... ’""என் னால் உடனடியா டாலரை மாத்த முடியலை''’ என்றார் எஸ்தர். ""அப்ப என் டாலரைத் திருப்பிக்கொடுங்க'' என சக்கரவர்த்தி கேட்க... இருவருக்கும் பிரச்சினை ஆனது. உடனே எஸ்தர் விவகாரத்தை க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி காதுக்குக் கொண்டு போனார். உஷாரான போலீஸ்... எஸ்தர் மூலம் சக்கரவர்த்தியை வளைத்தது. அவனிடமிருந்து நாலரைகோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரையும் கைப்பற்றினர்.

கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு கொண்டுவரப் பட்ட சக்கரவர்த்தியிடம் "போலி டாலரை தயாரிக்கும் ஐடியா எப்படி உனக்கு வந்தது?' என்றோம். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சக்கரவர்த்தியோ ‘""எனக்கு கம்ப்யூட்டர்ல நல்ல திறமை உண்டு. அதை வச்சி சங்கராபுரம் கோவிந்தன் என்பவருக்காக போலி டாக்குமெண்டுகளை ரெடிபண்ணிக்கொடுத்தேன். அப்ப கள்ளநோட்டு வழக்கில் கைதாகி வெளி யே வந்த குளத்தூர் சிவக்குமாரை சந்தித்தேன். அவன்தான் "போலி டாக்குமெண்ட், கள்ளக்கரன்ஸி அடிச்சி சீக்கிரம் மாட்டுறதைவிட... அமெரிக்க டாலரை அடிச்சி கிடுகிடுனு சம்பாதிச்சிடலாம்'னு சொன்னான். அட... நல்ல ஐடியாவா இருக்கேன்னு களத்தில் இறங்கிட்டேன். கத்தை கத்தையா கரன்ஸி அடிப்பதை விட டாலர் அடிப்பது லாபமானது. ஏன்னா கரன்ஸியை விட 45 மடங்கு மதிப்புள்ளது டாலர். சிக்கிரமே பணக்காரனா ஆகணும்னுதான் இப்படி செஞ்சேன். ஆனா பிள்ளையார் சுழியிலேயே மாட்டிக்கிட்டேன்'' என்றான் கூலாக.

க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியோ ‘""இவன் டாலரை எந்த அளவிற்கு புழக்கத்தில் விட்டிருக்கான்னு தெரியலை. அவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிச்சாதான் முழு விபரமும் வெளில வரும். நம்ம ஆளுங்க பிராடுபண்றதுல கூட அமெரிக்க லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச் சிட்டாங்க பாருங்க'' என தலையில் அடித்துக்கொண்டார்.

செக்-போஸ்ட் லட்சுமி! -தாம்பரம் கதை!

சென்னை நகரின் நுழைவாயிலான தாம்பரத்தில் 48 வயதான ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் நுழைந்து வெட்டிக் கொன்றார்கள். அவரது இறப்பை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தாம்பரம் பகுதி மக்களும் அரசியல்வாதிகளும். ஏன் இப்படி ஒரு மகிழ்ச்சி என தாம்பரம்வாசிகளைக் கேட்டோம்.

இறந்து போனவரின் பெயர் வரலட்சுமி. இருபது வருடங்களுக்கு முன்பு சென்னை நகருக்குள் வரும் வாகனங்களை சோதனை போட செக்போஸ்ட் ஒன்று தாம்பரத்தில் இருந்தது. சோதனைக்காக லாரியுடன் காத்திருக்கும் டிரைவர்களிடம் இன்ப சுகத்தைக் காட்டி அவர்களது பணத்தைப் பறிப்பதில் திறமையானவளாக செயல்பட்டதால் அவள் பெயர் "செக்-போஸ்ட் லட்சுமி' என்றே பிரபலமானது.

இந்தத் தொழிலால் சேர்ந்த பணம் ஃபைனான்ஸ் அதிபர் என்ற பெயரை கொடுத்தது. அது அவருக்கு அரசியல்வாதிகளின் நட்பைக் கொடுத்தது. அ.தி.மு.க., தி.மு.க. என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கேற்ப மாறிய அவர் விபச்சாரம், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் என சகல துறைகளிலும் வளர்ந்த இவர், கடைசியாக காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவியாக உருவெடுத்தார்.

வாய் நிறைய வெத்தலைப் பாக்கு, கழுத்து நிறைய நகைகள், "அவர் என் பாக்கெட்டில், இவர் என் ஜாக்கெட்டில், போலீஸ் என் இடுப்பில்' என தைரியமாக பேசும் வாய்ச்சவடாலுக்கு ஏற்றவாறு, நகர வி.ஐ.பி.க்களுக்கு பெண் சப்ளை செய்வதில் சாகும்வரை சளைக் காமல் தொண்டாற்றினார்.

இதற்காக இன்றளவிலும் இந்தப் பகுதியில் பிரபலமாக விளங்கும் ஆதரவற்ற பெண்கள் விடுதியையே பயன்படுத்தினார். வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவரும் இளம்பெண் களை தாம்பரத்தில் மடக்கி ஆதரவற்ற விடுதி மூலமாக வி.ஐ.பி.க்களுக்கு விருந்தாக்குகிறார் என சுசிலா என்கிற பெண் அப்போதைய தாம்பரம் காவல்நிலைய ஆய்வாளரும், தற்போதைய உதவி கமிஷனருமான குப்புசாமியிடம் 2004-ம் ஆண்டே புகார் கொடுத்தார்.

"சப்ளை அண்ட் சர்வீஸ், கந்து வட்டி, நில மோசடி என யார் லட்சுமி மேல் என்ன புகார் கொடுத்தாலும் லட்சுமி மீது பெயருக்கு ஒரு சிறிய வழக்கு ஒன்றை மிகவும் தாமதமாக பதிவு செய்து காவல் துறை தனது விசுவாசத்தை காட்டிக்கொள்ளும்' என்கிறார்கள். கடந்த இருபது வருடங்களாக தாம்பரத்தை கதிகலங்க வைத்த லட்சுமியின் முடிவு அவரது அக்காள் மகன்களாலேயே ஏற்பட்டது என சொல்கிறது காவல்துறை வட்டாரம்.

"குடிசையில் வாழ்ந்த லட்சுமிக்கு தனது மாடி வீட்டில் இடம் கொடுத்தார் அவளது அக்காள் கலைவாணி. காலப்போக் கில் கலைவாணியை வீட்டை விட்டே துரத்தியடித்ததோடு அதை தட்டிக்கேட்ட பகுதி ம.தி.மு.க. பிரமுகரான வேலு பிரபாகரனை கொலை செய்ய ரவுடி களை ஏற்பாடு செய்தார். வேலுபிரபாகரன் லட்சுமியின் அக்கா மகன்களோடு கூட்டணி அமைத்து அவரது வீட்டிலேயே லட்சுமியின் கதையை முடித்துவிட்டார்' என்கின்றனர் போலீசார்.

""எந்த ஒரு பெரிய மனிதனின் வாழ்வின் ஆரம்பத்தை ஆராய்ந்தால் அது தவறானதாகவே இருக்கும். ஆனால் லட்சுமி இப்போது திருந்திவிட்டார். திருந்திய பிறகு கொன்றுவிட்டார்கள்'' என வருத்தப்படுகிறார் தாம்பரம் நகர சேர்மன் மணி.

"லட்சுமி தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்' என ஒத்துக்கொள்கிறார் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா.

ஒரு லட்சுமி மறைந்தாலும் அவ ளைப் போன்ற பல லட்சுமிகள் உலா வருகிறார்கள் என பயத்துடன் முணு முணுக்கிறார்கள் தாம்பரம் மக்கள்.

கல்லூரி கலைவிழா! ஏமாற்றப்பட்ட மாணவர்கள்!


""ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. உன் லவ் லெட் டர் கிடைச்சுதுடா.. ஐ டூ லவ் யூ''

-பின்பக்கத்திலிருந்து ஒலித்த பெண் குரலைக் கேட்டதும், அன்டார் டிகா பனியில் மூழ்கி எழுந்ததுபோல ஜில்லெனத் திரும்புகிறான் கல்லூரி மாண வன். அப்படியே ஃப்யூஜியமா எரிமலை யாகிவிடுகிறான். காரணம், ஒலித்தது பெண் குரல் அல்ல. சக மாணவர்களின் மிமிக்ரி இம்சை. ரவுசுதான் என்றாலும் இளவட்டங் களுக்குள் புதைந்திருக்கும் மிமிக்ரி, ஆக்டிங், டான்ஸ், மியூசிக் போன்ற தனித்தன்மைகளை ஒழுங்குபடுத்தி அதை ஒரு கலையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்லூரி களில் கலைவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த நோக்கத்தையே சிதைப்பதாக இருக்கிறது திருச்சி பாரதிதாசன் கல்லூரியின் கலைவிழா என்கிறார்கள் மாணவர்களும் கல்லூரி நிர்வாகிகளும்.

கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப் பட்டினம் இத்தனை மாவட்டங்களில் உள்ள கலைக் கல்லூரிகளும் பாரதிதாசன் பல் கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. மொத்தம் 103 கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளுக் கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரிய கலைக்கொண்டாட்டத்திற்கு இஆதஉ இஊநப என்று பெயர்.

ஒருங்கிணைப்பாளர் கனகசபையின் ஒருதலைபட்சமான போக்குகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பல கல்லூரிகள், பாரதிதாசன் பல்கலைக்கழக கலைக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து வந்தன. இந்த முறை நடந் தது 25ஆம் ஆண்டு கலைவிழா என்பதால் பல கல்லூரிகள் ஆர்வம் காட்டின. எனினும், கனக சபையின் கெடுபிடியால் 35 கல்லூரிகள் மட்டுமே கலந்துகொண்டன. அக்டோபரில் நடத்த வேண்டிய போட்டிகளை ஆகஸ்ட்டிலேயே திடுதிப்பென அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், திருச்சியின் மையப்பகுதியில் உள்ள கல்லூரியில் விழாவை நடத்தாமல் எல்லையில் உள்ள மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை கல்லூரியில் விழா என்றதுமே பல கல்லூரிகள் அப்செட்.

கலைவிழாவில், நாடகம், மௌன நாடகம், நாட்டுப்புறநடனம் ஆகியவை இடம்பெறுவதால் ஒவ்வொரு கல்லூரியும் கிட்டதட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து தங்கள் மாணவர்களை ரெடி பண்ணியது. பல கல்லூரிகள் கலந்துகொள்ளும் கலைக்கொண்டாட்டத்தில் ஜெயித்தது யார் என்பதை முடிவு செய்ய, நடுவர்கள் எழுதிய தீர்ப்புகளை ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து, அதை போட்டியில் கலந்துகொண்ட கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் கள் முன்னிலையில் திறந்து, முடிவுகளை அறி விப்பதுதான் வழக்கம். ஆனால், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் கனகசபையின் நடவடிக்கை களால், நடுவர்கள் என்ன தீர்ப்பு எழுதினாலும், அந்த பேப்பரில் தங்களுக்கு வேண்டிய கல்லூரியின் பெயரை பென்சிலால் எழுதி அதையே அறிவிப்பது வழக்க மாகிவிட்டது. அத்துடன், இந்த முறை இந்தக் கல்லூரிக்கு விட்டுக்கொடுங்கள். அடுத்த முறை உங்களுக்குத் தருகிறோம் என்று ஒருங்கிணைப்பாளர் கெஞ்சுவதும் நடக்கிறது. அப்படியென்றால் இதற்கு உள் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு பேராசிரியர் ஒருவர்.

நாடகம்-மவுன நாடகம் இவற்றில் பெரம்பலூர் ரோவர் கல்லூரி மாணவர்களின் தனித்திறமை மற்ற கல்லூரி மாணவர்களாலேயே பாராட்டப்படும். பல முறை விருது பெற்றவர்கள். அந்தக் கல்லூரியை இந்த முறை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார்கள். மிமிக்ரி, வாய்ப்பாட்டு போன்றவை நடந்தபோது அவற்றிற்கு மார்க் போட நடுவர்களே இல்லை. திடீரென, அங்கு வந்த ஒரு தமிழாசிரியரைக் கூப்பிட்டு நீங்கள்தான் நடுவர் என்று மிமிக்ரி போட்டிக்கு உட்கார வைத்துவிட்டார்கள். இத்துறைக்கென் றே வல்லுநர்கள் இருக்கும்போது திடீர் நடுவ ரால் மாணவர்கள் மிரண்டுபோய்விட்டார்கள். எஃப்.எம். வானொலிகளில் பேசி அசத்திய மாணவர்கள் பலர் பரிசு எதுவும் பெறமுடி யாமல் வெறுங்கையுடன் திரும்பினர்.

மிமிக்ரி போட்டியில் கலந்துக்கிட்ட 25 பேரையும் வீடியோ எடுத்திருக்கோம் சார். நல்ல நடுவர்கிட்டே போட்டு பார்த்து செலக்ட் பண்ணச் சொல்லுங்க என்கிறார்கள் மாணவர் கள். "போஸ்ட்டர் மேக்கிங், ரங்கோலி, கார்ட் டூன்ஸ், கிளேமாடல் ஆகியவற்றில் திறமை காட்டிய சில மாணவர்களின் ஆற்றலைப் பார்த்துவிட்டு, "எனக்கே இது ரொம்ப புது மையா இருக்கு' என்று பாராட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் மருது. ஆனால், அந்த மாண வர்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை.

கலைவிழா பேரணி மதியம் 2 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால் மொட்டை வெயிலில் மாணவ-மாணவியரை நிற்க வைத்துவிட்டனர். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் மீனா 5 மணிக்குத்தான் வந்தார். மயங்கி விழுந்த மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சைகூட கிடைக்கவில்லை. கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை. பேரணி கலைநிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்ட பரிசுகளிலும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை. சிதம்பரம்பிள்ளை கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்ப தற்கு விளம்பரம் செய்யும்வகையில் இந்த கலை விழாவை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு துணைவேந்தரும் ஒத்துழைப்பு என குற்றம் சாட்டுகிறார்கள் மற்ற கல்லூரி நிர்வாகத்தினர்.

தவறான முடிவுகளால், தகுதி வாய்ந்த பரிசு களைப் பெறமுடியாமல் பெயருக்கு சில பரிசுகளை மட்டுமே பெற்ற புனித சிலுவை கல்லூரி மாணவர் களும் ஜோசப் கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கனகசபை முன்னாலேயே போட்டுஉடைத்தும், சான்றிதழ்களைக் கிழித்தெறிந் தும் அந்த இடத்திலேயே எதிர்ப்பைத் தெரிவிக்க, அதற்கு மற்ற கல்லூரி மாணவர்களிடமிருந்து பலத்த கைதட்டல் வரவேற்பு கிடைத்துள்ளது.

அலங்கோலமான கலை நிகழ்ச்சி குறித்து ஒருங் கிணைப்பாளர் கனகசபையிடம் கேட்டபோது, ""அடிப்படைவசதி களையெல்லாம் செய்திருந்தோம். "துணைவேந்தர் ஒப்புதலோடு நடு வர்களை நிய மித்துதான் முடிவு களை வெளியிட் டோம். ஒரு கல் லூரியின் வெற்றி யை இன்னொரு கல்லூரியின் மாணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை'' என்றார் வெகு சாதாரணமாக.

இளமைத் திருவிழாவாக நடந்திருக்கவேண்டிய பாரதிதாசன் பல்கலைக்கழக கலைக் கொண்டாட்டம் ரணகளமாகி முடிந்திருக்கிறது.

நீதிபதியிடம் நீதி கேட்ட 7 வயது சிறுவன்!


பல நாட்களாக சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவித்த அந்த வார்த்தைகளை ஒருவழியாகச் சொல்லிவிட்டார் செந்தில்ராஜா.

""ரோகிணி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.''

உசிலம்பட்டி சி.எஸ்.ஐ. சென்டரில் டியூட்டராக பணிபுரிந்துகொண்டிருந் தார்கள் ரோகிணியும் செந்தில்ராஜாவும்.

செந்தில்ராஜாவையே வெறித்துப் பார்த்த ரோகிணி, ""உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. எனக்கு கல்யாணமாகி பையன் இருக்கிறான். இப்ப நான் விதவை. அப்புறம்... நீங்க கள்ளர் சாதி இல்லையா, நான் நாடார் கம்யூனிட்டி. இதுவும் ஒரு பிரச் சினை. வேண்டாம் ராஜா... உங்க சாதியில உங்க மாதிரி படிச்ச மாப்பிள்ளைக்கு நிறைய வர தட்சணையும் நகையும் சீரும் செய்வாங்க. எதுக்காக என்னை மாதிரி ஒரு விதவை யை, -அதுவும் குழந்தையுள்ள விதவை யை விரும்பணும்? வேண்டாங்க...'' -மிகத் தெளிவாகச் சொன்னார் ரோகிணி.

""உன் குணம் புடிச்சிருக்கு ரோகிணி. அதைவிட... ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்குறோம்ங்கிற சந்தோஷம் இருக்கு. ரெண்டுபேருமே பட்ட தாரிகள். ரெண்டு பேரும் வேலை செய் றோம். நமக்கு எதுக்கு சீர் வரிசை, நகைநட்டு? சாதி ஒரு பிரச்சினைதான். வீட்டுக்குத் தெரிஞ்சா அனு மதிக்கமாட்டாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம வீடுகள்ல நம்மளைச் சேர்க்கமாட்டாங்க. பரவாயில்லை... நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சந்தோஷமா இருக்கலாம். உன் மகனுக்கு நானே ஒரு நல்ல தந்தையாக இருப்பேன். இன்னும் ஒண்ணோ, ரெண்டோ குழந்தைகள் பெத்துக்கிறலாம்'' -தெளிவாகவே பதில் சொன்னார் செந்தில் ராஜா.






""அப்ப ஒண்ணு செய்யலாம்... இன்னும் கொஞ்சநாள் காதலர்களாக இருப்போம். நம்ம காதல் வலுப்பட்டால் கல்யாணம் பண்ணிக்க லாம் இல்லைனா ஒதுங்கிக்கலாம்'' என்றார் ரோகிணி.

""நீ மறுத்தாலும் நான் ஏதாவது ஒரு விதவையைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறேன். இது உறுதி'' என்றார் செந்தில்ராஜா.

சுமார் ஒருமாதம் கழித்து, மதுரையில் ஒரு பெருமாள் கோயிலில் ரோகிணி-செந்தில்ராஜா திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் குறையாத காதலோடு தான் வாழ்ந்திருக்கிறார்கள். பையன் ராஜரோசனுக்கு இப்போது 7 வயது. கடந்த ஒண்ணரை ஆண்டுகளாக பிரச்சினை.

கணவர் மீது 4 முறை, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லா மல் போனதால், மகன் ரோச னோடு மதுரை வந்து மாவட்ட நீதிபதி ரத்தினராஜனிடம் புகாரை நீட்டினார் ரோகிணி.

அந்தத் தந்தையிடம் தன் தாயும், தானும் படும்பாட்டை தேம்பியபடியே சொன்னான் ராஜரோசன்.

""இப்பல்லாம் அப்பா தினம் ராத்திரில குடிச்சுக் குடிச்சிட்டு வர்றார். அம்மாவை போட்டு அடியடினு அடிக்கிறார். சிகரெட் டால சூடு வைக்கிறார். எனக் கும்தான்... சாப்பிடும்போது என் தட்டுல ஒன் பாத்ரூம் போறார். அப்புறம் அதை கீழ கொட்டாம சாப்பிடச் சொல்லி அடிக்கிறார். "ஒரு லட்ச ரூபாய் என் மாமா தர்றேன்றார். இவனை அவருக்கு வித்திடலாம்'ன்றார். இந்த பேப் பர்ல கையெழுத்து போடுடினு அடிக்கிறார். செத்துப்போடி... இல்லேனா உன் சாதிக்காரன் யாரையாச்சும் கூட்டிக்கினு ஓடுடினு திட்டுறார். அப்பா இல்லாதப்ப இந்த அப்பா வேணாம்... வாம்மா நாம ஓடிப்போலாம்னு சொன்னா... அம்மா வரலை. எப்ப பார்த்தாலும் அழுகுறாங்க... பாவம் அம்மா.''

ராஜரோசன் சொன்னதைக் கேட்ட நீதிபதியின் கண்களும் குளமாகிவிட்டதாம். நீதிபதியைச் சந்தித்துவிட்டு, இலவச சட்டக்குழு வக்கீல் முத்துக்குமாருடன் தென்மண்டல ஐ.ஜி.யை பார்ப்பதற்காக புறப்பட்ட ரோகிணியை நாம் வழி மறித்தோம்.

""ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொல்லி என்னை திருமணம் செய்துகொண்டார். முதல் 4 வருஷமா அவர் அம்மா எங்களை ஏத்துக்கொள்ளலை. என் மூத்த மகனை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டேன். அதன் பிறகுதான் என் மாமியார் மயிலம்மாள் என் கணவரை நச்சரிக்க ஆரம் பித்தார். "இவளைக் கட்டிக்கினதால என்ன பிரயோஜனம். அடிச்சு விரட்டிவிடு... தலையை முழுகு. உனக்குப் பிறந்த இந்தப் பயலை நம்ம சொந்தக்காரர் விலைக்கு கேக்குறாரு. ஒரு லட்சம் தருவாரு. அவருக்குப் புள்ளையில்லை. புள்ளையா எழுதிக் குடு... இவளையும் விரட்டிப் பத்திட்டு வா... 100 பவுன் போட்டு உனக்கு பொண்ணு குடுக்க நம்ம சாதியில ரெடியாயிருக் காங்க'ன்னு சொல்லிச் சொல்லி மனசை மாத் திடுச்சு. அப்புறம் தான் முழு குடிகார னா மாறினாரு. அடி, உதை, சூட் டையெல்லாம் தாங்கிட்டு கூலி வேலைக்குப் போறேன் நான். ஆனால் இந்த சின்ன மகன்... பாதிச் சாமத்துல பயந்து பயந்து அலறுறான்... அப்பா வெட்ட வர்றார்... கொல்ல வர்றார்னு கத்துறான். 8 வருஷமா இல்லாத சாதிப்பாசம் என் கணவருக்கு இப்ப வந்திடுச்சு. என்னாலயும் இவர்ட்ட அடி, உதை பட முடியலை. 4 தடவை உசிலம்பட்டி போலீஸ்ல புகார் செஞ்சேன். அவங்க சாதிக்காரங்க நாற்பது, ஐம்பது பேரு வந்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சமாதானப்படுத்திடுவாங்க. அதனாலதான் இப்ப நீதிபதி ஐயாகிட்ட வந்தேன்'' -கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ரோகிணி.

ரோகிணியின் கணவர் செந்தில்ராஜாவைத் தொடர்பு கொள்வதற்காக... அவரது எண்ணுக்கு போன் செய்தோம். தொடர்புகொள்ள முடியவில்லை. அவரைச் சந்திப்பதற்காக உசிலம்பட்டிக்குச் சென்றோம். வீடு பூட்டிக் கிடந்தது. தாயும் மகனும் தலைமறைவாகிவிட்டனர்.

அக்கம்பக்கத்தினரோ... ""மதுரை போலீசார் வழக்குப் பதிஞ்ச தாக்கல் கிடைத்ததுமே எங்கேயோ கிளம்பிவிட்டார்கள். பாவம்யா அந்தப் பொண்ணு...'' -பரிதாபப்பட்டார்கள்.

கிரீன்பீல்டு விமான நிலையம்! மக்கள் மனநிலை!


""எங்க பிள்ளைங்க எல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் ஸ்கூலுக்கு போறாங்க. இங்க கவர் மெண்டுல வேலை பார்க்குறவங்க யாரும் கிடையாது. எந்த ஆட்சியிலயும் எந்த பேங்க்கும் விவசாயத்துக்கு கூட லோன் தரல. அவ்வளவு ஏன் சார் சுதந்திரம் வாங்கி அறுபது வருஷம் ஆகுது. இதுவரைக்கும் எங்க ஊருக்கு அரசாங்க பஸ்ஸே வந்ததில்லை.

ஆனா இப்ப வெளிநாட்டுக்கு பறக்குற ஏரோப்ளேன் வந்து எங்க வயக்காட்டுல எறங்கப் போறதா சொல்றாங்க. பஸ்ஸே வராத ஊருக்கு எதுக்கு சார் ஏரோப்ளேன்'' என நம்மிடம் ஆவேசமாக கேள்வி கேட்கிறார் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி.

இந்த கொட்டையூரோடு சேர்த்து சென்னையின் சர்வதேச தொழில் நகரமாக மாறியுள்ள ஸ்ரீபெரும் புதூர், அதை தொட்டுக் கொண்டிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பத்தூர் பகுதியில் உள்ள முப்பது கிராமங்களையும் முழுமையாக கைப்பற்றி தமிழகத்துக்காக ஒரு பெரிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற இடத்தில் நானோ கார் தயாரிக்க டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அந்த மாநில அரசு முடிவு செய்தபோது, ஒரு பெரும் எதிர்ப்பலை எழுந்தது. அதைப் போன்ற எதிர்ப்பு இந்த விமான நிலைய அமைப்பு திட்டத்திற்கும் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் சிங்கூர் என சொல்லு மளவிற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், பா.ம.க. என தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் வீடு வீடாக சென்று மக்களை எதிர்ப்பியக்கத் திற்காக திரட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த முப்பது கிராம மக்களும் அவர்களை வாருங்கள் என வரவேற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

அந்த மக்களை நாம் சந்தித்தபோது புலியிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்ற தப்பியோடும் மானின் பயத்துடன், ஒரு பெரிய எதிர்ப்பியக்கத்தில் வேகமாக செயல்படும் அறிவுஜீவியின் புத்திசாலித் தனத்தையும் அந்த பாமர மக்களிடம் பார்க்க முடிந்தது.

பூதேரிபண்டையைச் சேர்ந்த உண்ணாமலை ""நான் இருக்கிறது குடிசை வீடுதாங்க. பத்து பதினைஞ்சு அடி பள் ளத்தை மேடாக்கி ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு வீடு கட்டியிருந்தோம். அதுவே 5 சென்ட் அளவுக்கு இருக்குது. இந்த ஊர்ல விவசாய கூலியாதான் வாழ்ந்துகிட்டிருக் கோம். இந்த ஊரை விட்டு காலி பண்ண சொன்னா இதுபோல ஒரு வீடு கிடைக்கலாம். ஆனால் இந்த ஊரை விட்டு போனால் 45 வயசான எனக்கு கம்பெனி யில எவன் வேலை கொடுப்பான். சோனியா காந்தி தான் அவங்க வீட்டுக்காரரு இங்க செத்துப் போனதால் இங்க ஏர்போர்ட் கொண்டு வரணும்னு பிடிவாதம் பிடிக்கி றாங்களாம். வீட்டுக்காரரு சாவுக்காக இலங்கையில இருக்கிறவங் களையெல்லாம் அழிச் சாங்களாம். அடுத்தபடியா எங்க ஊரையெல்லாம் கொள்ளை கேட்க வர்றாங்க. இது இன்னா சார் நியாயம்'' என்கிறார் கோபமாக.

வயலூர் தி.மு.க. கிளை செயலாளரான முருகன் ""கடற்கரை யோரத்தில் அமைந்துள்ளதால் எல்லா பருவகாலங்களிலும் தவறாமல் மழை பெய்யும் பூமி இது. சென்னை நகருக்கு மினரல் வாட்டர்களை தரும் அனைத்து கம்பெனிகளும் இங்குதான் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு நிலத்தடி நீர்வளம் கொழிக்கும் முப்போகமும் விளையும் விவசாய பூமி இது. விவசாய குடும்பங்களில் கூட சாகும் நிலையில் இருப்பவர் கூட சாவதற்கு முன்பு தனது நிலத்தை ஒருமுறை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார். அதேபோல் தன்னுடைய உடலை தனது விவசாய நிலத்தில் உள்ள மேடான பகுதியான தலைமேடு பகுதியில்தான் புதைக்க வேண்டும் என்றும் சொல்வார். அப்படி விவசாயம் அவர்கள் உடம்பில் ஊறிப் போன ஒரு தொழில். இந்த நிலங்களை தங்கள் வாழ்க்கைக்கு தொடர்பேயில்லாத விமான நிலையத்திற்காக இழப்பதற்கு யாரும் சம்மதிக்கமாட்டார்கள்'' என்கிறார் மக்களின் மனதை அறிந்தவராக.

வடமங்கலம் பஞ்சாயத்து தலைவரும் எம்.ஜி.ஆரின் நெருக்கமான தொண்டருமான அ.தி.மு.க.வைச் சேர்ந்த சாமிநாதன், ""எதை செய்தாலும் மக்களின் மனநிலையை அறிந்து செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வார். அவரது ஆட்சிக்காலத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கொடுக்கக்கூடாது என ஒரு சட்டம் இருந்தது. இந்த ஊரே மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில்தான் அமைந்திருந்தது. நாம் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டுமென்றால் பட்டா வேண்டும் என எம்.ஜி.ஆரை கேட்டபோது கொஞ்சம் கூட தயங்காமல் மாவட்ட கலெக்டரை கூப்பிட்டு பட்டா வழங்க சொன்னார். இந்த விமான நிலையம் கட்டுவதால் 30,000 குடும்பங்கள் தங்களது சொத்துக்களையும் அடையாளத்தையும் ஒட்டுமொத்தமாக இழந்து விடுவார்கள். அவர்கள் இந்த அரசுக்கு நிரந்தர எதிரிகளாக மாறிவிடுவார்கள். இது அரசுக்கு தேவையா?'' என கேள்வி எழுப்புகிறார்.

பா.ம.க.வைச் சேர்ந்த இல.சடகோபன் ""விமான நிலையம் அமைக்க இடம் சென்னை நகரில் இல்லையா? செங்குன்றம் சோழவரம் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய பழைய விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலை யத்தைச் சுற்றி ஆயிரக்கணக் கான ஏக்கரில் அரசு பால் பண்ணைக்காக மாடுகள் அங்கு வளர்க்கப்படுகிறது. அங் குள்ள நிலங்கள் எல்லாம் வனத் துறைக்கு சொந்தமான நிலங்கள். அதில் 6,000 ஏக்கரை வைத்து புதிய விமான நிலையம் அமைக்க லாம். சென்னை-கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து மிகக் குறுகிய தொலைவில் விமான நிலையம் அமைக்காமல் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பது ஏன்'' என ஆவேசப்படுகிறார்.

நாம் சென்ற முப்பது ஊர்களிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒரு சென்ட்டுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்தாலும் சரி, நாங்கள் பிச்சை எடுத்து வாழும் நிலைமை வந்தாலும் சரி, இந்த மண்ணை விட்டு நாங்கள் வெளி யேற மாட்டோம். எங்களை துப் பாக்கியால் சுட்டுக் கொல்லட்டும். ஒட்டுமொத்த ஊரையும் பெட் ரோல் ஊத்தி கொளுத்தட்டும். நாங்கள் பிணமாகத்தான் இந்த ஊரை விட்டு போவோம்'' என ஆவேசமுடன் பேசுகிறார்கள் பொதுமக்கள்.

தமிழக வளர்ச்சிக்கு தேவை யானது விமான நிலையம் என் றாலும் மக்கள் மனநிலையையும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


""அதனாலதாம்ப்பா.. மழைக்குத் தாங்காமல் பார்லி மெண்ட் கட்டிடமே ஒழுகுது'' என்றார் ஒரு வடநாட்டு எம்.பி. ஆச்சரியக் கிண்டலுடன். அண்மையில் டெல்லியில் மழை பெய்தபோது நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. புகழ்பெற்ற நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைநீர் கசிந்தபோது, வடநாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் இதற்கு என்ன காரணம் என்று வேடிக்கையாக விவாதித்துக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டு எம்.பி.க்களின் குரல்தான் காரணம் என்ற பேச்சு வந்தது. அவர்கள் வேடிக்கையாகப் பேசினாலும், அதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றிருக்கிறது.

மருத்துவபடிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்வதற்கு இந்தியா முழுவதும் பொதுநுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக வெளியான அறிவிப்புதான் இந்த விவாதத்தின் பின்னணி. நுழைவுத் தேர்வு என்பது கிராமப்புற ஏழை- நடுத்தர-ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருப்பதால் அதனைத் தமிழகம் ரத்து செய்துவிட்டது.

இதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டு, 2007-ஆம் ஆண்டு முதல் +2 தேர்வு முடிவு அடிப்படையிலேயே மருத்துவ-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடை பெற்றுவருகிறது.

அதேநேரத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அந்தந்த மாநில அரசின் நுழைவுத் தேர்வுடன் மத்திய அரசின் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களில் சேர்வதற்குத் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளும் எழுதி வருகிறார்கள். இதற்குப் பதி லாக ஒரே நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும் என வட நாட்டைச் சேர்ந்த சிலர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. அந்த மனுவுக்குப் பதில் அளித்த மத்திய அரசு, நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்பதாக தெரிவித்த பதில்தான் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தது.

சமூகநீதிக் கொள்கை களை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து தமிழகம் நடை முறைப்படுத்திவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றுவரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் கிராமப்புற ஏழை மாணவர்களையும் பாதிக்கக்கூடியதால் உடனடியாக இம்முடிவை கைவிடவேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

கி.வீரமணி, ராமதாஸ் உள்ளிட்ட சமூகநீதிப் போராட்டத் தலைவர்களும் பொதுநுழைவுத்தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இம்முடிவை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். நாடாளுமன்றத்திலும், ராஜ்ய சபாவிலும் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒரே குரலில் பேசினர்.

முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துகேட்டு அதனடிப்படையில் கொடுத்த ஆய்வறிக்கையின் படிதான் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பயனை அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வு முடிவுகளைக் காட்டியே நிரூபித்தார் அனந்தகிருஷ்ணன்.

""2007-ல் நடந்த பொதுத்தேர்வில் அதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் 6% மாணவர்கள் அதிகமாக வெற்றிபெற்றிருந்தனர். கல்வியில் பின்தங்கியிருந்த மாவட்டங்களான வேலூர் , கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 7% முதல் 14% வரை தேர்ச்சி விகிதம் உயர்ந்தது. விருதுநகர், நெல்லை, கோவை, தூத்துக்குடி போன்ற கல்வியில் முன்னேறி வந்த மாவட்டங்களிலும் தேர்ச்சி விகிதம் மேலும் உயர்ந்தது.

இந்த உயர்வுக்கு காரணம், தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம்தான். நுழைவுத்தேர்வு ரத்து என்றதும் +2 பொதுத்தேர்வில் நன்கு கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்துவிட்டனர் மாணவர்கள். நுழைவுத்தேர்வு என்கிற கூடுதல் சுமை குறைந்தது. தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கும் 200-க்கு 190 மதிப்பெண்களுக்கு மேல் அவர்கள் பெறுவதற்கும் இதுதான் அடிப்படை'' என்பதே அனந்தகிருஷ்ணனின் கருத்து. கடந்த இரண்டாண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் பின்தங்கிய-ஏழை மாணவர்களே பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வருவதற்கும் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது முக்கிய காரணமாகும். இதனால், மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் 69% இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் பொதுநுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தால் பெரும்பாலான மாநிலங்களைப்போல 50% க்கு மேல் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. இதனால், தொழிற்கல்வி பெறும் முதல் தலைமுறையினர் பலரும் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழியிலேயே படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் வெற்றிபெறுவது கடினம். வடநாட்டவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைக்கும். இதனால், இந்திய அளவில் தமிழக மாணவர்கள் ஓரங்கட்டப் படுவதுடன், தமிழ் தெரிந்த டாக்டர்களை நாளடைவில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். மருத்துவம் போலவே பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற்கல்விகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு என மத்திய அரசு முடிவெடுத்தால் அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. கல்வியில் மாநில அரசுக்குள்ள உரிமைகள் மொத்தமாக பறிபோகும்.

இத்தகைய ஆபத்துகளைக் கொண்ட பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்திலும் டெல்லியிலும் நமது மாநில அரசியல் பிரமுகர்கள் ஒருமுகமாக எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மத்திய அரசு தனது முடிவை நடைமுறைப்படுத்துவதை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. அனைத்து மாநில நலன்களையும் கருத்தில்கொண்டே செயல்படுவோம் என மத்திய அரசின் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக தமிழக எம்.பி.க்களின் கட்சி கடந்த ஒருமித்த குரலை கிண்டல் செய்த வடஇந்திய எம்.பிக்களோ, தங்களின் சம்பள உயர்வுக்காக கட்சிகளை மறந்து கைகோத்து, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இது பொது மக்களிடையே கிண்டலுக்குள்ளானது.

""உயிர்நாடியான பிரச்சினைகளில்கூட, நாடாளுமன்றத்தில் தி.மு.க. மீது அ.தி.மு.க.வும் அ.தி.மு.க. மீது தி.மு.க.வும் குற்றம்சாட்டிப் பேசுவதே வழக்கமாக இருந்த நிலையில், ஒருமித்த குரலால் இருகட்சியினரும் பொதுநுழைவுத்தேர்வு அபாயத்திற்கு அணை போட்டிருக்கிறார்கள். இரு கட்சியினரும் ஒரே குரலை வலுவாக ஒலித்தால் டெல்லியின் பிடிவாதமும் அலட்சியமும் மாறும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிற நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றிலும் இதே பாணியைக் கையாண்டு மத்திய அரசை வழிக்குக் கொண்டு வரலாமே'' என்கிறார்கள் இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களிக்கும் தமிழக மக்கள்.

யுத்தம் 82 நக்கீரன் கோபால்


நாகப்பா விடுதலை என்ற செய்தி வெளிவந்த சில மணிநேரங்களில் அதே நாளிதழின் புதிய பதிப்பு வெளியானது.

""நாகப்பாவை வீரப்பனே சுட்டுக் கொன்றான்...'' என்ற தலைப்பிடப்பட்ட அந்த செய்தி தமிழகத் தையும் கர்நாடகத்தையும் ஒட்டு மொத்தமாக அதிரவைத்தது. தமிழக அரசின் அதிரடிப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், நாகப்பாவை விட்டுவிட்டு வீரப்பன் தப்பி ஓடிவிட்டதாக மார்தட்டிக்கொண்ட ஜெயலலிதா அரசும் காவல்துறை உயரதிகாரிகளும், நாகப்பா சுட்டுக் கொலை என்றதும் என்ன சொல்வ தென்று தடுமாறினார்கள். நாகப்பாவை வீரப்பனே சுட்டுக்கொன்றான் என் றால், அதிரடிப்படை மேற்கொண்ட நட வடிக்கையின் பயன் என்ன என்ற கேள்வி எழுந்தது.

வீரப்பனிடம் மாதக்கணக்கில் பிணைக்கைதியாக பத்திரமாக இருந்த நாகப்பாவை எப்படி திடீரென வீரப்பனே சுட்டுக் கொன்றிருப்பான்? நாகப்பாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதிரடிப் படையினர் மீது சந்தேகம் உள்ளது என்று நாகப்பாவின் உறவினர்களும் ஜனதாதளக் கட்சிக்காரர்களும் கொந்தளிப்பாயினர்.

நாகப்பாவைத் தேடி காட்டுக்குள் சென்றவர்களில் கொள்ளேகால் பகுதி ஜனதாதள பொறுப்பாளரான பொன்னாச்சி மகாதேவசாமியும் ஒருவர். வீரப்பனால் நாகப்பா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. ""காட்டில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை முன்வைத்து, வீரப்பன் இந்தக்கொலையை செய்திருக்க மாட்டான்'' என்றார்.


""நான் நாகப்பா குடும்பத்துக்கு ரொம்பவும் நெருக்கமான நண்பன். அவர் பிணைக்கைதியாக இருந்தபோது மருந்து-மாத்திரைகளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போனேன். 25 நாட்களுக்கு மேலே சுற்றித் திரிஞ்சேன். அப்புறம் தான் ஒருநாள் மார்டன்னி வனப்பகுதியில் ஒரு உருவம் துணி துவைத்துக்கொண்டிருந்தது. பக்கத்திலேயே துப்பாக்கி இருந்தது. உற்றுப்பார்த்தபோதுதான் வீரப்பன் என்பது தெரிந்தது. நெருங்கிபோனால் சுட்டு விடுவார் என்பதால், கொஞ்ச தூரத்திலேயே நின்று, கைகளை உயர்த்தியபடி, "தலைவரே... உங்களைத்தான் பார்க்க வந்திருக்கேன்'னு கத்தினேன். உடனே வீரப்பனுக்கு பாதுகாப்பா இருந்த சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட வங்க என்னை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பிட்டாங்க. வீரப்பன் அவங்களை சும்மா இருக்கச் சொன்னார்.

சந்தேகப்படும்படியான ஆள் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் நாகப்பாகிட்டே என்னை அழைச்சிட்டுப்போனாங்க. நாகப்பா யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர் அவரை விட்டுடுங்கன்னு வீரப்பன்கிட்டே சொன்னேன்.

அவரும், "எஸ்.டி.எஃப்.பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு மாநில அரசாங்கங்களும் வாக்குறுதி அளித்தபடி உதவிகளை செய்யட்டும். நாகப்பாவை விட்டுடுறேன்'னு சொன்னார். அவர் எப்படி நாகப்பாவை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? இது அதிரடிப்படை போலீஸ் வைத்த குறிதான்'' என்றார் மகாதேவசாமி.


தூதர்களை அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் தொடர்ந்து வலியுறுத்தியபோதும், கடைசிவரை தூதரை அனுப்பாமல் தமிழக அரசு காட்டிய பிடிவாதம்தான் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தலைவரின் உயிரைப் பறித்துவிட்டது என்று கன்னட அமைப்பினர் அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

தமிழகத்தை ஆளும் ஜெ. அரசை நோக்கியே கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த கோபமும் திரும்பியதால், ஜெ. பதட்டமானார். அடுத்தவர்கள் மீது வீண்பழி சுமத்தத் தயங்காத அவர், தன்னை நோக்கி உண்மையான பழி வருகிறது என்றதும் அடுத்தடுத்த நாட்களில் அவரிடமிருந்து மறுப்பறிக்கைகள் வெளியான படியே இருந்தன.

""சில விஷமத்தனமான சக்திகள் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி, பிரச்சினையை உண்டாக்குவது துரதிர்ஷ்டவசமானது. இது முழுவதும் பொய்யான செய்தி. கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதற் கிணங்க தமிழக அதிரடிப்படை வாபஸ் பெறப்பட்டபின், கர்நாடகப் பகுதியில் அது எந்தவிதமான நட வடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கர்நாடக எல்லைக்குள் 40 கி.மீ தூரத் தில் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்திற்கும் தமிழக அதிரடிப்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை'' என்றார் ஜெயலலிதா.

ஆரம்பத்தில், நாங்கள்தான் நாகப்பாவை மீட்டோம் என்று பத்திரிகைகளில் செய்தி வரச்செய்த ஜெ.அரசு, அதன்பிறகு நாகப்பாவைக் கொன்றது எங்கள் அதிரடிப்படை அல்ல என்று அலற ஆரம்பித்தது.

தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும், ""நாகப்பா கொலைக்கு வீரப்பன்தான் காரணம். அவன் ஒரு கொலை வெறியன். கொள்ளைக்காரன். தான் கேட்டதெல்லாம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அவனே இந்தக் கொலையைச் செய்திருப்பான். தனது தம்பி அர்ஜுனனை நாகப்பாதான் சங்கர்பித்ரி மூலம் சயனைடு வைத்துக் கொன்றதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் வீரப்பன் சொல்லியிருக்கிறான். அந்தக் கோபமும் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும்'' என்றார்கள்.

நாகப்பா மரணத்திற்கு உண்மைக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் மீடியாக்கள் தீவிரமாக இருந்த நேரத்தில்தான், கர்நாடக அரசுக்கு வீரப்பனிடமிருந்து ஒரு கேசட் வந்திருப்பதாக தகவல் பரவியது. பத்திரிகையாளர்கள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை தொடர்புகொண்டு, அந்த கேசட்டில் வீரப்பன் என்ன பேசியிருக்கிறான் என்று கேட்டபடியே இருந்தனர்.

வீரப்பனிடமிருந்து வந்திருந்த அந்த முக்கியமான ஆடியோகேசட், மீடியாக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. தமிழும் கன்னடமும் கலந்து வீரப்பன் அதில் பேசியிருந்தான்.

""நான் வீரப்பன் பேசுறேன்.. வியாழக்கிழமை காலைல 9 மணி இருக்கும். மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி. சகுன மும் சரியில்லை. சேத்துக்குளி கோவிந்தன்கிட்டே.. இங்கே யிருந்து கிளம்பலாம்டா அப்படீன்னேன். அவன் சாமான்சட்டுகளைக் கட்டினான். அதெல்லாம் கிடக்கட்டும்டா.. திரும்பி வந்து எடுத்துக்கலாம். மொதல்ல பெரியவரை (நாகப்பா) கூட்டிக்கிட்டு கிளம்புடான்னேன்.

அப்ப திடீர்னு எஸ்.டி.எஃப்.காரன் ரெண்டு பேரு எங்களை சுட ஆரம்பிச்சானுங்க. படக்குன்னு குதிச்சி நானும் கோவிந்தனும் புதருக்குள்ளே மறைஞ்சோம். கோவிந்தன் பதிலுக்கு சுட ஆரம்பிச்சான். அதுல 2 எஸ்.டி.எஃப்.காரன் அடிபட்டு விழுந்தான். பெரியவர் மட்டும் பாறை மேலேயே நின்னார். "பெரியவரே.. பெரியவரே.. கீழே குதிங்க. பயப்படாம குதிங்க'ன்னு சொல்லும்போதே சடசடசடனு ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் சீற, உடனே நாங்க ஓடினோம். ஓடிக்கிட்டே திரும்பி பாறையை பார்த்தப்போ பெரியவரை காணலை. நாங்க ஓடி வந்துட் டோம்.

அப்புறம் கடந்த மூணு நாளா பேப்பர்ல சேதி வரும்னு பார்த்தேன். பெரியவரைப் பற்றி ஒண்ணும் வரலை. இப்ப நாகப்பா என்னோட கட்டுப்பாட்டுல இல்லை. பெரியவரை நான் கொல்லலை. நான் பிடித்த பிணைக் கைதிகள் யாரையும் நான் கொல்லலை. இனிமேலும் அப்படி செய்ய மாட்டேன். இதுக்கெல்லாம் காரணம் தேவாரமும் ஜெயலலிதாவும்தான். என் மேல் எந்தப் பழியும் வரக்கூடாதுங்கிறதாலதான் இந்தக் கேசட்டைப் பேசி அனுப்புறேன்.''

-வீரப்பனின் குரல் மீடியா வழியாக கர்நாடகாவில் பரவியபோது, கொந்தளிப்பு மேலும் அதிகமானது. உண்மையைக் கண்டறி வதற்காகவும் நாகப்பாவுக்கு ஈமக்கிரியைகள் செய்வதற்காகவும் அவருடைய உறவினர்கள் செங்கடி வனப்பகுதிக்குள் கலங்கிய கண்களோடு சென்றார்கள்.

அடர்ந்த மரப்புதர்களுக்கிடையே ஒற்றை யடிப்பாதையில் பயணித்து, நாகப்பா சுடப்பட்ட இடத்தில் , விளக்கேற்றி வைத்து, மலர்களைத் தூவியபடி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் கள். சுடப்பட்ட ஸ்பாட்டை அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திலிருந்து 500 அடி தொலைவிலேயே சில துணிமூட்டைகளோடு, ஒரு டைரியும் கிடந்தது. இது.. தலைவரோட கையெழுத்துதாங்க என்றபடி கட்சிக்காரர்களும் உறவினர்களும் அதனைப் புரட்டினர். சுடப்படுவதற்கு முதல்நாள் வரை அவர் டைரி எழுதியிருக்கிறார்.

டைரி எடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் துப்பாக்கிக்குண்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்த ஒருவர், இதுபற்றி குரல் கொடுக்க.. அருகிலுள்ள மரங்களிலும் பாறைகளிலும் துப்பாக்கிகள் துளைத்திருப்பது தெரிந்தது. நாகப்பாவின் மருமகனும் டாக்டருமான கிரண்பட்டீல், "ஒரு டாக்டர்ங்கிற முறையில் என் மாமனார் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தப்ப பக்கத்திலேதான் இருந்தேன். 10, 15 அடி தூரத்தி லிருந்துதான் அவரை சுட்டிருக்காங்க. அவரோட கை, கால்களெல்லாம் கட்டப் படலை. அவரைக் காப்பாற்றணும்ங்கிற எண்ணமில்லாமல் சுடணும்ங்கிற எண்ணத்திலேயே சுட்டிருக்காங்க. ஏ.கே.47 தோட்டாதான் பாய்ந்திருக்குது.

5-ந் தேதியன்னைக்கு நெல்லூர் ரோட்டில் உள்ள கவுதலி கிராமத்தில் ஒரு ஜீப்பை ஓட்டிக்கிட்டு மோகன் நிவாஸ் போனதை அங்கேயிருக்கிறவங்க பார்த்திருக்காங்க. அதுக்கு முன்னாடி நொக்கலிங்கிற இடத்தில் முண்டாசு கட்டிக்கிட்டு ஸ்கூட்டரில் போயிருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அதிரடிப்படைதான் என் மாமனாரைக் கொன்னிருக்குன்னு தெரியுது. இதை நாங்க விடப்போறதில்லை. தமிழக அதிரடிப்படைதான் கொலை செய்திருக்குங்கிறதை நிரூபிப்போம்'னு மீடியாக்கள்கிட்டே கிரண் பட்டீல் பேசினார்.

கண்ணீரும் வேதனையும் பொங்க பேட்டியளித்த நாகப்பாவின் மனைவி, ""தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சி நடந்திருந்தா தூதரை அனுப்பி என் புருஷன் உயிரைக் காப்பாத்தியிருப்பார். இந்தம்மாகிட்டே உதவி கேட்டு போனோம். உதாசீனப்படுத்திட்டாங்க. இப்ப என் புருஷனோட உயிர் போயிடிச்சி'' என்றார்.

நாகப்பாவைக் கொன்றது வீரப்பனா, அதிரடிப்படையா என்ற விவாதங்கள் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் தொடர்ந்துகொண்டிருந்தபோது, நமக்கு வேண்டிய பலரும் தொடர்புகொண்டார்கள்.
""அண்ணே... இதுக்கு முன்னாடி வீரப்பன் பலரைக் கடத்தினப்ப, கலைஞர் ரொம்ப சாதுர்யமா மனிதாபிமானத் துடன் நடந்து கொண்டார். இரண்டு மாநிலமும் உங்கள தூதரா அனுப்பி வச்சிச்சி, உயிரைப் பணயம் வச்சி காட்டுக்குப்போய் அவன்கிட்டே சாதுர்யமா பேசி, பிடிபட்டிருந்தவங்களை உயி ரோடு பத்திரமா மீட்டுட்டு வந்தீங்க. ஆனா, இப்ப தூதரையே அனுப்பமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி, அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டாங்களே'' என்றார்கள் வேதனைக் குரலில்.

அடுத்தவரின் வேதனைகள் பற்றிக் கவலைப்படாமல், யாருடைய உயிர் போனாலும் பரவாயில்லை, என்னோட பிடிவாதம்தான் முக்கியம் என்றளவில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஜெ.வின் அரசாங்கம், பழிவெறியோடு நக்கீரன் மீது அடுத்த பாய்ச்சலை ஆரம்பித்தது.

-யுத்தம் தொடரும்

இலங்கையின் அழுகுணி ஆட்டம்!


ஆட்டம் தொடங்கும் போதே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நகம் கடிக்கும் டென்ஷனுடன் டி.வி. பெட்டி முன் உட்கார்ந்தார்கள். இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற வேண்டுமானால் இந்தப் போட்டியில் எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமை இரு நாட்டு அணிகளுக்கும் இருந்தது. இந்தியா- இலங்கை-நியூசிலாந்து ஆகிய நாடுகளுக் கிடையே நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் பந்தயத்தின் முக்கிய போட்டி இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையே இலங்கையின் தம்புலா மைதானத்தில் ஞாயிறு (ஆக.22) மதியம் தொடங்கியது.

டோனி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்றதுமே, நல்ல சகுனம் தொடங்கி விட்டதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எடுத்த எடுப்பிலேயே ஏமாற்றம். அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்துவந்தவர்களாவது ரன் குவிப்பார்கள் என்று பார்த்தால்.. தினேஷ்கார்த்திக், யுவராஜ்சிங் ஆகியோருக்கும் எல்.பி.டபிள்யூ கொடுத்து விரலை உயர்த்தினார் அம்பயர். இப்படியே 103 ரன்களில் சுருண்டது இந்தியா. பதினைந்தே ஓவர்களில் இந்த வெற்றி இலக்கை எட்டி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை.

மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினால் ஸ்டேடியத்திலேயே அவர்களுக்கு எதிராக குரல் எழுப்புவதும், இந்திய வீதிகளில் அவர்களின் உருவங்களை கொடும்பாவி கொளுத்தி செருப்பால் அடிப்பதும் இந்திய ரசிகர்களின் வழக்கம். ஆனால், இந்த முறை அவர்களின் கோபம் முழுக்க முழுக்க இலங்கை மீது திரும்பியது.

""அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க. நம்ம ப்ளேயர்கள் 4 பேருக்கு அவுட் கொடுத்தது பற்றி டவுட் இருக்கு. டி.வி.யில் அதை ரீ-ப்ளே செய்தப்ப, அவங்களுக்குத் தப்பான முறையிலே எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டி ருக்குன்னு தெரிஞ்சுது. ரெய்னாவை சங்கக்கரா கேட்ச் பிடித்ததா சொன்ன தும் பொய்னு தெரிஞ்சுது'' என்கிறார் கிரிக்கெட் ஆட்டத்தை கண் இமைக்காமல் டி.வி.யில் பார்த்த சிவகங்கை முருகன்.

""இருநாடுகள் விளையாடும் போட்டிகளில் ஒரு அம்பயர், போட்டி நடத்தும் நாட்டின் அம்பயராக இருப்பார். இன்னொரு அம்பயர் இருநாடுகளுக்கும் சம்பந்தமில்லாத அம்பயராக இருப்பார்.

இறுதிப்போட்டிக்கு இலங்கை போக வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு அம்பயர் குமார் தர்மசேனா 3 தப்பான அவுட் கொடுத்திருக் கிறார். இறுதிப்போட்டிக்கு இந்தியா போய்விடக்கூடாது என்பதற்காக 1 தப்பான அவுட் கொடுத்திருக்கிறார் பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ரவூஃப்'' என்கிறார் கிரிக்கெட் ரசிகரான திருமாறன், கோபம் கொப்பளிக்க.

சுரேஷ்ரெய்னாவுக்கு அவுட் கொடுக்கப் பட்டதை, தம்புலா போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அருண்லால் ""நம்பவே முடியவில்லை. நாங்கள் துல்லியமான ஒலியமைப்பு வசதிகளோடு இருக்கிறோம். பேட்டில் பந்து பட்டதற்கான எந்த சத்தமும் கேட்கவேயில்லை. அப்புறம் எப்படி சங்கக்கரா கேட்ச் பிடித்தார் என்று தீர்ப்பளித் தார்கள் என்று தெரியவில்லை'' என ஓப்பனாகவே வர்ணனை செய்தார். அவருடன் இணைந்து வர்ணனை செய்த இலங்கையின் முன்னாள் வீரர் ரணில் அபய்நாயகே, "இந்திய வீரர்கள் துரதிர்ஷ்டவசமான நிலையில் இருக்கிறார்கள்' என்று அம்பயரின் தவறான தீர்ப்பை மறைமுக மாகச் சுட்டிக்காட்டினார்.

நடுவர்களின் மோசமான தீர்ப்பினால் இந்தியா தோற்கடிக்கப்பட்ட சர்ச்சையை ஆங்கிலச் சேனல்கள் பெரும் விவாதமாக்கி, ரசிகர்களின் கொதிப்பையும் கிரிக்கெட் வல்லுநர்களின் கண்டனத்தையும் ஒளிபரப்பின. உடனே இலங்கை கேப்டன் சங்கக்கரா, ""டெசிஷன் ரெஃபரல் சிஸ்டம் என்கிற மறுஆய்வு முறையை இனி போட்டிகளில் நடைமுறைப்படுத்தலாம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் தவறுகளை சரிசெய்ய முடியும்'' என்று சப்பைக்கட்டு கட்டினார்.

உங்க தொழில் நுட்ப யுக்தியெல்லாம் தெரியாதா என்று கொந்தளிக்கிறது இந்தி யத் தரப்பு. இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற ஒரு ரன் தேவைப்படுகிறது. 99 ரன்களுடன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷேவாக் சதம் அடிக்கவும் ஒரு ரன் தேவைப் பட்டது. அணியின் வெற்றியையும் ஷேவாக்கின் 13-வது சதத்தையும் காண ரசிகர்கள் பரவசத்துடன் இருந்த நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் ரன்தீவ் நோ-பால் போட்டு ஷேவாக்கின் சதத்தை தடுத்தார்.

ரன்தீவ்வுக்கு அதே அணியின் வீரர் தில்ஷான்தான் இந்த நோ-பால் ஆலோசனை யைத் தெரிவித்திருக்கிறார் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து... இலங்கை அணியினர் திட்டமிட்டே இப்படி மோசமான நடத்தைகளை மேற்கொள்கிறார்கள் என்பது புரிகிறது என்கிறார்கள் இந்திய கிரிக்கெட்டின் சீனியர்கள்.

உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவரான தமிழக வீரர் ஸ்ரீகாந்த்திடம், இலங்கை அணியின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகள் பற்றிக் கேட்டோம். ""நான் தேர்வுக்குழுவில் இருப்பதால் உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. போட்டிகள் முழுமையாக முடியட்டும் விரிவாகப் பேசுகிறேன்'' என்றார். ஜென்டில்மேன் கேம் எனப்படும் கிரிக்கெட்டை அடாவடி ஆட்டமாக ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை என்பதே சர்வதே கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு.

இனப்படுகொலைகளால் சர்வதேச அரங்கில் குற்றவாளியாகப் பார்க்கப்படும் இலங்கை, கிரிக்கெட் போட்டிகள், சினிமா விழாக்கள் மூலம் தன் கொடூர முகத்தை மாற்ற நினைக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்தியாவின் மூக்கு ஒவ்வொரு முறையும் அறுபட்டே வருகிறது. இம்முறை நம் கிரிக்கெட் வீரர்கள் சென்று, மூக்கறுபட்டு அவமானத் துடன் திரும்பியிருக்கிறார்கள்

விஜயகாந்த்தின் நிஜ பிளான்!


""ஹலோ தலைவரே... கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் நேரக் காய்ச்சல் பலமாகவே அடிக்க ஆரம்பிச் சிடிச்சி. காய்ச்சல் கண்டவங்க நிமிஷத்துக்கு நிமிஷம் எதையாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க... அதேபோல கட்சித் தலைவர்களும் கூட்டணி ஃபீவரில் இருப்பதால் முதல் நாள் ஒண்ணு, மறுநாள் இன்னொன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""எதை சொன்னாலும் காரணத்தோடுதானே சொல்லுவாங்க.. அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாமே!''

""தலைவரே... ஆடி மாசம் முழுக்க முகூர்த்தம் கிடையாது. அதனால ஆவணி பொறக்கட்டும்னு புரோகிதர்கள் போலவே அரசியல் தலைவர்களும் காத்திருந்தாங்க. 22-ந் தேதியன்னைக்கு ஆவணி மாதத்தில் இரண்டாவது முகூர்த்தநாள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை, கேட்கணுமா? கல்யாணம், கிரகப்பிரவேசம், கடைதிறப்பு, கட்டிடம் திறப்புன்னு ஏகப்பட்ட நல்ல காரியங்கள். அதனால, தமிழக அரசியல் தலைவர்களும் அன்னைக்கு பிஸி.''

""அ.தி.மு.க. கட்சிக்காரங்க 20 பேர் வீட்டுக் கல்யாணத்தை வானகரத்தில் ஜெயலலிதா நடத்தி வைத்தாரே!''

""இந்த விழாவுக்காக வடபழனி-கோயம்பேடு 100 அடி ரோட்டில் ஜெ.வின் வாகனம் போய்க்கிட்டிருந்தது. வழியெங்கும் ஜெ. கட்-அவுட்டுகளும் அ.தி.மு.க. கொடிகளும் நிறைந்திருந்தன. அந்த ஏரியாவில் ஒரு ஓட்டலில் நடந்த திருமணவிழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கலந்துக்கிட்டார். அவரை வரவேற்பதற்காக கொடிகட்டிய பா.ம.க. நிர் வாகிகள், அ.தி.மு.க.வோடு கூட்டணி அமையணும்ங்கிறதை விரும்புறவங்க போல! அ.தி.மு.க. கொடிகளுக்கு நடுநடுவே பா.ம.க கொடிக்கம்பங்களை ஊன்றி வச்சிருந்தாங்க. தேர்தல் நேரத்தில் நடக்கிற பிரச்சாரக் கூட்டம்போல ஒரு தோற்றம் இருந்தது. அந்தப் பக்கமா போய்வந்த அ.தி.மு.க தொண்டர்கள் கூட, மறுபடியும் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உருவாயிடிச்சோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட் டாங்க.''

""ஜெ.வும் இதை கவனித்திருப்பாரே?''

""கவனிச்சார்.. ரொம்ப டென்ஷன் ஆயிட்டார். அதன் ரிசல்ட்டை ஜெயா டி.வி.யில் பார்க்க முடிந்தது. பொதுவா, ஜெ. எங்கே போனாலும் அவர் போகிற வழியில் உள்ள அலங்காரங்கள், கட்சிக்காரர்கள் வழியெங்கும் தரும் வரவேற்பு எல்லாத்தையும் காட்டிட்டுத்தான் விழாவைக் காட்டுவாங்க. ஆனா, வானகரம் திருமண விழாவைப் பொறுத்தவரை, ஜெ. சென்ற வழியில் இருந்த அலங்காரங்களை ஜெயா டி.வி. காட்டலை. நேரடியா நிகழ்ச்சிக்குப் போயிட் டாங்க. அ.தி.மு.க. கொடி களோடு பா.ம.க கொடிகளும் பறந்ததால் அதை ஒளிபரப்பக் கூடாதுன்னு உத்தரவாம்.''

""திருமண விழாவில் குட்டிக்கதைகளை யெல்லாம் சொல்லி மணமக்களை ஜெ வாழ்த்தியிருக்காரே?''

""விழாவுக்கு வந்திருந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரும் ஜெ.விட மிருந்து கூட்டணி பற்றிய செய்தியைத்தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் விஜயகாந்த்தோடு கூட்டணி அமையும்ங்கிறது தான் அவங்க எதிர்பார்ப்பு. ஏன்னா, லோக்கலில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளெல்லாம் அங்கே இருக்கும் தே.மு.தி.க. ஆட்கள்கிட்டே, நம்ம கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு நீங்களும் வாங்க. அது தான் கூட்டணி அமையப்போகுதில்லே..ன்னு உரிமையா கூப்பிட்டிக்கிட்டிருப்பதால இந்த எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருந்தது.''

""தொண்டர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி அந்த விழாவில் ஜெ. எதுவும் பேசலையே?''

""அதே முகூர்த்த நாளில், ஆண்டாள்- அழகர் பொறியியல் கல்லூரி சார்பில் மாமண்டூ ரில் இலவச திருமண மண்டபத்தை திறந்து வைத்த விஜயகாந்த், தே.மு.தி.க.வின் கூட்டணி நிலைப்பாடு பற்றி பேசுவாருங்கிறதை அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கவே இல் லீங்க தலைவரே... .... இத்தனை நாளா தன்னோட "விருதகிரி' பட ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்த விஜயகாந்த், தே.மு.தி.கவின் தேர்தல் நிலைப்பாடு பற்றி வெளிப்படையா பேசாமல் இருந்தார். திருமண மண்டப திறப்பு விழாவில் பேசும்போது, தே.மு.தி.க. அவங்களோடு கூட்டணி, இவங்களோடு கூட்டணின்னு செய்தி வெளியிடுறாங்க. தே.மு.தி.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். தி.மு.க., அ.தி.மு.க.ன்னு இரண்டு கட்சிகளையும் மக்கள் மாறி மாறி பார்த்துட்டாங்க. வரும் தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாதுன்னு தடாலடியா போட, கூட்டணி விஷயமா பேசிக்கிட்டிருக்கும் அ.தி.மு.க.வின் பொன்னையன் தலைமையிலான மூவரணியும், தே.மு.தி.க. சுதீஷ் தலைமையிலான மூவரணியும் பயங்கர ஷாக். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர்களுக்கும் அதிர்ச்சி. அதைவிட அ.தி.மு.க. தொண்டர்களுக்குப் பலத்த அதிர்ச்சி.''

""75 சீட்டில் ஆரம்பித்து 60 சீட் வரைக்கும் தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டதையும் துணை முதல்வர் பதவி கேட்கப்பட்டதையும் நம்ம நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்ததே!''

""அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையிலான பேச்சு கள் ஒருபக்கம் நடந்துக்கிட்டிருந்தாலும் விஜயகாந்த் இதை வைத்து ஆழம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு காங்கிரசோட கூட்டணி அமைப்பதில்தான் அதிக ஆர்வம். திருச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்குப்பிறகு, விஜயகாந்ந் வந்தா வரட்டும்ங்கிற நிலைப்பாட்டுக்கு ஜெ. வந்ததைப் பற்றி நம்ம நக்கீரன் எழுதியிருந்தது. இதைத்தான், தே.மு.தி.க. தரப்பிலிருந்து இப்ப அ.தி.மு.க. தரப்பிடம் சுட்டிக்காட்டிப் பேசுறாங்க. ஜெ.வின் இந்த நிலைப்பாட்டால் விஜயகாந்த் டென்ஷனாயிட்டதா அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டிருக்குது.''

""ஓ...''

""விஜயகாந்த் ரொம்பவும் கடுப்பாகி, கூட்டத்தை என்னாலும்தான் கூட்ட முடியும். நானும் கூட்டிக் காட்டுறேன்னு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் சொன்னவர், எம்.பி.தேர்தலில் தே.மு.தி.க. அதிக ஓட்டு வாங்கிய தொகுதியான விருதுநகரில் வரும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்திருக்காரு. இதையடுத்து பல ஊர்களிலும் பொதுக்கூட்டம் நடக்குமாம். இதற் கிடையே, தே.மு.தி.க. செல்வாக்காக இருக்கும் 2 மாவட்டங்களான கடலூரிலும் விழுப்புரத்திலும் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள் தங்கள் தலைமைக்கு ஒரு தகவலை அனுப்பியிருக்காங்க. அதாவது, நாம பா.ம.க.வோடு கூட்டணி அமைத்தால் இங்கே நல்ல ரிசல்ட் கிடைக்கும். சிறுத்தைகளையும் சேர்த்துக்கிட்டா வடமாவட்டங்களில் நாமதான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்னு சொல்லியிருக்காங்களாம்.''

""ராமதாசும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனுமில்லைன்னு புதிய உறவுக்கு ஏற்கனவே கை நீட்டிவிட்டாரே..''

""திருமண மண்டப திறப்பு விழாவில் பேசிய விஜயகாந்த்தும், மறப்போம்.. மன்னிப்போம்னு சொல்லியிருக்கிறார். அதனால் தே.மு.தி.க.-பா.ம.க. அதோடு சிறுத்தைகள்னு ஒரு கூட்டணி அமைப்பதற்கான மூவ் ஆரம்ப கட்டத்தில் இருக்குது. இதில் சி.பி.எம்.மையும் கொண்டுவந்தா மூன்றாவது அணி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைக் கிறாங்க.''

""காங்கிரசோடு பா.ம.க. -தே.மு.தி.க. கூட்டணிங்கிற பழைய மூவ் என்னாச்சு?''

""விஜயகாந்த் தரப்பிலும் அன்புமணி தரப்பிலும் அகமது பட்டேல் பேசியதிலிருந்து தான் அந்த மூவ் ஆரம்பமாச்சு. அகமது பட்டேலோ நான் இரண்டு தரப்பிலும் பேசினேன். ஆனா, கூட்டணி விஷயமா எதையும் கமிட் பண்ணலைன்னு சொல்றாராம். கூட்டணி விஷயங்களில் உறுதியான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாமல் தேர்தல் சீசனுக்காக காத்திருப்பதால், எல்லா சைடிலும் மூவ் பண்ணிக்கிட்டிருக்காங்க.''

""விஜயகாந்த்தின் பேச்சுக்கு கலைஞர் ரியாக்ட் பண்ணியிருக்காரே...''

""ஆமாங்க தலைவரே... சினிமாவுக்கு வசனம் எழுதியதன் மூலம் தனக்கு கிடைத்த பணத்துக்கு உரிய முறையில் வரி கட்டிவிட்டு, மீதியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் பொதுநல காரியங்களுக்கும் வழங்கியிருப்பதை பட்டியல் போட்டிருக்கும் கலைஞர், தன்னையும் தி.மு.க.வையும் பார்த்து ஊழல் கட்சின்னு பேசும் விஜயகாந்த், கதாநாயகனாக நடிக்கும் படங்களிலே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, அதற்கு வரிகட்டாமல் கருப்பு பணமா வாங்குவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமான்னு விஜயகாந்த்துக்கு பதிலடி கொடுத் திருக்கிறார்.''

""விஜயகாந்த்துக்கு ஜெ.வின் ரியாக்ஷன் என்ன?''

""கட்சி சீனியர்கள்கிட்டே பேசிய ஜெ., ஊழ லைப் பற்றி இவரு பேசலாமா? எம்.பி. தேர்தலில் நம்மோடு கூட்டணி அமைக்கிறதுக்கு 200 கோடி பணம் வேணும்னு பேரம் பேசியவர்தானே இந்த விஜயகாந்த். கல்யாண மண்டபத்தை திறந்து வைக் கும்போது என்ன நிலைமையில் இருந்தாருன்னு தெரியலைன்னு வறுத்தெடுத்து விட்டாராம்.''

""விஜயகாந்த்தின் எலெக்ஷன் ப்ளான்தான் என்ன?''

""தலைவரே... விஜயகாந்த்தைப் பொறுத்த வரை, ஜெ.வோடு கூட்டணி சேர்ந்தால் குறைந் தளவு சீட்டுக்கள்தான் கிடைக்கும்னு நினைக்கிறார். தி.மு.க.வுடன் இருக்கும் காங்கிரசும் தன் பக்கம் வராதுன்னு நினைக்கிறார். அதனால் நாம் தனி அணி அமைத்து நிற்போம்ங்கிறதுதான் அவரோட திட்டம். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தன் தலைமையில் கூட்டணி அமைக்கத் தயங்கினால் தொகுதி உடன்பாடுங்கிற முறையில் சீட் பிரிச்சிக்க லாம்னு விஜயகாந்த் நினைக்கிறார். சி.எம். கேண்டி டேட்டாகத்தான் தேர்தலில் நிற்கணும்ங்கிறது அவரோட முடிவு. இந்த முறை பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் அடுத்த ரவுண்டில் பார்த்துக் கலாம். பெரிய கட்சிகள்கிட்டே கூட்டணி அமைப்பதற்காக சி.எம். கேண்டிடேட் என்கிற தகுதியை பலி கொடுத்திடக்கூடாதுங்கிற முடிவில் இருக்கும் விஜயகாந்த், அதற்கான மூவ்களை செய்து வர்றார். தன் தலைமையிலான அணியுடன் தேர்தலை சந்திப்பதுங்கிறதுதான் விஜயகாந்த்தின் நிஜ ப்ளான்''.

""தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பு திடீர்னு வெளியானதன் நோக்கம்?''

""முதலில் இந்தக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தத்தான் முதல்வர் முடிவு செய்திருந்தார். எம்.பி.க்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் அரசாங்கத்தின் தலைமைச் செய லகத்திலேயே கூட்டம் நடத்தி, மாநில அரசின் வரி வருவாயை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சரக்கு மற்றும் சேவை வரிகள் சம்பந்தமான உத்தேச வரைவுத் திருத்தம் குறித்து அலசுவதுங்கிறதுதான் கூட்டத்தின் நோக்கம். மத்திய அரசு மேற்கொள்ளவிருந்த முடிவால் மாநில அரசுகள் பாதிக்கப்படும்ங்கிறதை ஏற்கனவே கலைஞரை சந்திக்க பிரணாப் முகர்ஜி வந்தப்பவே எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனா, மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்வதுபற்றி பேசத்தான் பிரணாப் வந்தாருன்னு மீடியாக்கள் கிளப்பி விட்டதால, இந்த முக்கியமான விஷயம் முக்கியத்துவம் பெறலை.''

""சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி தமிழகத்தின் சார்பில் அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கிட்டு பேசினாரே!''

""பிரணாப்பிடம் கலைஞர் இந்த சட்டத்திருத்தத்தை அவசரப்பட்டு அமல்படுத்தக்கூடாது, ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான கால அவகாசம் வேண்டும்னு வலியுறுத்தியிருந்தார். இதை பிரணாப்பும் மத்திய அரசிடம் தெரிவித்தார். இதையடுத்துதான், அனைத்து மாநிலங்களிடமும் இது பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் கூட்டம் நடந்தது. அதனால் பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப் பட்டது. தலைமைச் செயலகத்தில் தி.மு.க எம்.பிக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தினால் அதை வைத்து பிரச்சினை கிளப்பிடுவாங்கன்னுதான் அறி வாலயத்தில் நடத்துவதுன்னு மாற்றம் செய்யப்பட்டது.''

""ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விவகாரம் பற்றிப் பேசத்தான் இந்தக் கூட்டம்னு தகவல் பரவியதே?''

""அவரைப் பற்றி டெல்லி வரைக்கும் தி.மு.க கம்ப்ளைண்ட் பண்ணியதால், இனி எதுவும் விவகாரமா பேசமாட்டாருன்னுதான் தி.மு.க தரப்பு நினைத்தது. சோனியாவின் உத்தரவுப்படி செயல் படுவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, இளங்கோவனோ தன் மேலே என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லைங்கிற ரீதியில் தொடர்ந்து பேசுவதால், தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்திற்கு இந்த சப்ஜெக்ட்டும் முக்கிய மானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் டெல்லியில் அகமது பட்டேலும், ஏ.கே.அந்தோணியும் சோனியாவிடம் இதைப் பற்றிச் சொல்லியிருக்காங்க. இதையடுத்து சோனியாவின் உத்தரவுப்படி குலாம் நபி ஆசாத் திங்கள் இரவு வெளியிட்ட அறிக்கையில் மத்தியி லும், மாநிலத்திலும் இந்தக் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடரும். இதை எதிர்த்து யார் பேசி னாலும் தலைமை பொறுத்துக் கொண் டிருக்காதுன்னு எச்சரிக்கை விடுத்தார். டெல்லியின் இந்த அறிக்கையையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் இளங்கோவன் சப்ஜெக்ட் தேவையில்லாமல் போய்விட்டது.''

Thursday, August 26, 2010

""இனிமேல் டியூட்டி டயத்தில் சுடிதார் போடாதே... சேலைதான் கட்டவேண்டும்...


""பெண் டாக்டர்கள் என்றால் -அதுவும் கொஞ்ச வயது பெண் டாக்டர்கள், பெண் உதவி மருத்துவர்கள் என்றால் எங்கள் இணை இயக்குநரின் செக்ஸ் டார்ச் சரும், இரட்டை அர்த்த வசனங் களும் எல்லை மீறிப் போய் விடுகிறது...''

""இனிமேல் டியூட்டி டயத்தில் சுடிதார் போடாதே... சேலைதான் கட்டவேண்டும்... ம்... எதுக்காக என்னைப் பார்க்கிறாய்! பசு மாட் டைப் பார்! சினை ஊசி போடப் பட்டிருக்கிறதா பார்! தடுப் பூசி போடப்பட்டிருக்கிறதா பார்! உட்காராமல் நல்லா குனிஞ்சு பசுவின் மடியைப் பார்... பார்த்தால் போதுமா? மடிமார்புக் காம்புகளை இழுத்து, பால் சுரக்கிறதா என்று பார்னு ரெட்டை அர்த்தமாகத்தான் பேசுவார்!''.

""இதையெல்லாம் கூட சகித்துக் கொண்டுவிடலாம்... நாங்கள் குனியும்போது, பக்க வாட்டில் நின்று, தன்னோட பேனா கேமராவால் பட மெடுத்து, அதை அலுவலக கம்ப்யூட்டரில் போட்டு பார்த்து ரசித்து கமெண்ட் அடிக்கிறாராம்... கேட்கும் போதே எங்க உடம்பெல் லாம் கூசுது சார்...!''

திண்டுக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ இணை இயக்குநர் அறிவழகன் மீது, கால்நடை பெண் மருத்துவர் களும் உதவி பெண் மருத்து வர்களும் மனம் நொந்து கூறும் புகார்களில் சிலவற்றைத்தான் மேலே படித்தீர்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கால்நடை மருத்துவமனைகளும், 118 கால்நடை உதவி மருத்துவ மையங் களும் உள்ளன. இவற்றில் பணியாற் றும் டாக்டர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? மருத்துவமனை வேலை முடித்து, கிராமங்களுக்குச் சென்று களப்பணி செய்கிறார்களா என்பதை கவனிப்பதே, மாவட்ட கால்நடை இணை இயக்குநரான அறிவழகனின் வேலை.

""செக்ஸ் டார்ச்ச ரோட நிற்பதில்லை. கிராமங்களில் எல்.ஐ.சி. பாலிசி பிடித்துக் கொடுக் கச் சொல்லி கட்டாயப்படுத்துறார். 6 மாதமா எந்த டாக்டருக்கும் லீவு தர மறுக்கிறார். டாக்டர்களுக்குக் கொடுக்கச் சொல்லி வந்த அலவன்ஸ் 2 லட்ச ரூபா யைக் கூட இன்னும் பிரித்துக் கொடுக் கலை. ஆபாசப் படமெடுத்து ரசிக்கிற அசிங்கம்தான் ரொம்ப கேவலமா இருக்கு. வேலூர்ல வேலை செய்யும் போது ஒரு லேடி டாக்டரை பட மெடுத்து, அதுக்காக பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கினவர்தான் இந்த அறிவழகன்... திருந்த மாட்டேன்றார்...!'' என்கிறார்கள் கால்நடை மருத்துவ ஆண் டாக்டர்கள்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி யிருக்கும் இணை இயக்குநர் அறிவழ கனைச் சந்திப்பதற்காக அவரது அலு வலகம் சென்றோம். நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதும், அவர் செய்த முதல் வேலை... தனது கேமரா பேனாவை "ஆன்' செய்து பாக்கெட்டில் மாட்டிக் கொண்டு நம்மை படம் பிடிக்கத் தொடங்கியதுதான்...

""ஏங்க... உங்களுக்கெல்லாம் பேட்டி தரமுடியாது. நான் நேர்மை யானவன் கிளம்புங்க!'' என்றார் இணை இயக்குநர்.

அறிவழகன் மீதான புகார்களை கலெக்டர் வள்ளலாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

""விளக்கம் கேட்டு, இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்... பதில் வரட்டும்...!'' என்றார் கலெக்டர்.

துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் கூறினோம். ""பேனாவில் கேமராவா, புலனாய்வு பத்திரிகையாளர்கள் பயன்படுத்த வேண்டியதை இவர் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறார்? விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார் அமைச்சர்.

ரயில் பணம் வாபஸ்! சாதித்த தமிழர்!


ரயில்வே துறையில் இருந்து தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்த ஹோட்டல்காரர் சென்னை வேலப்பன்சாவடி ராமசாமிக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.

""தங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலைய கமர்ஷியல் பிரிவுக்குச் சென்றார். கடிதத் தைப் பெற்றுக்கொண்டு 450 ரூபாயை எடுத்து நீட் டிய காசாளர், ""ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில்ஏறி... தொடர்ந்து பயணம்செய்ய முடியாமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, அந்த டிக்கெட்டுகளை அந்த ஸ்டேஷனில் ஒப்படைத்து, டிக்கெட்டுக்கான பணத்தை பெற்ற முதல் இந்தியர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்'' என்றார்.

""நான் செய்தது மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்துவிடட்டும்'' -பணத்தைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு கிளம்பினார் வேலப்பன்சாவடி ராமசாமி. சென்னை பூவிருந்த வல்லிக்கு அருகிலுள்ள வேலப்பன்சாவடியில் ஹோட்டல் வைத்திருப்பவர் ராமசாமி. இவ ருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகிலுள்ள வடக்கம்பட்டி கிராமம்.

ஒரு விசேஷத்திற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்ற ராமசாமிக்கு, திரும்பி சென்னை வருவதற்கு ரிசர்வேஷன் டிக்கெட் கிடைக்கவில்லை.

"சரி ஓப்பன் டிக்கெட் எடுக்கலாம், ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பய ணிக்கலாம்' என்று 5 பேருக் கும் டிக்கெட் எடுத்தார். விருதுநகர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

""கரெக்ட் டயத்துக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து விட்டது. அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயங்கர கூட் டம். எப்படியோ முண்டியடித்து ஏறிவிட்டோம். உள்ளே கால் வைக்க இடமில்லை. மிகுந்த அவஸ்தை யோடு பயணம் செய்து எப்படியோ மதுரை வரை வந்துவிட்டோம். அதற்குமேல் அதே நெருக்கடியில் பயணிக்க முடியுமா? மதுரையில் ஐந்துபேரும் இறங்கிவிட்டோம். அதன்பிறகு அந்த டிக்கெட்டு களை கேன்சல் செய்துவிட்டு பணத்தை வாபஸ் பெறவேண்டும் என்று முடிவு செய்தேன். டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்று கேட்டேன். ரிசர்வேஷன் செய்த டிக்கெட்டை மட்டும்தான் ரத்து செய்து இங்கே பணம் பெற முடியும் என்றார் அங்கிருந்தவர். வாக்குவாதம் ஆகிவிட்டது. ரெண்டே ரெண்டு சாதா பெட்டிகளை போட்டு, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை கொடுத்தால் எப்படி? மூச்சு முட்டி சாகணுமா? என்று சத்தம் போட் டேன். அதற்குள் மதுரை ஸ்டேஷன் உதவி மேலா ளர் அங்கே வந்துவிட்டார். டிக்கெட்டை பிற ஸ்டே ஷனிலும் மாற்ற முடியும் என்ற விஷயம் எங்கள் அலு வலர்களுக்கே தெரிவதில்லை. உங்க டிக்கெட்டுடன் மனு எழுதிக் கொடுத்துவிட்டு போங்கள் என்றார். எழு திக் கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு வருடத்திற் குப் பிறகு இப்போதுதான் அந்த டிக்கெட்டிற்கான கேன்சல் பணம் வந்திருக்கிறது'' என்றார் ராமசாமி.

எப்படியோ... காலதாமதமானாலும் நுகர்வோர் என்ற உரிமையோடு ஒரு ஸ்டேஷனில் வாங்கிய ஓப்பன் டிக்கெட்டை இன்னொரு ஸ்டேஷனில் கொடுத்து, பணத்தைப் பெற்று மற்ற பயணிகளுக்கு விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார் வேலப்பன்சாவடி ராமசாமி.

குவியும் பக்தர்கள்! -அலட்சிய சுகாதாரத்துறை!


உலகத்திலுள்ள அத்தனை பகுதிகளிலிருந்தும் சாதி, மத பாகுபாடு இல்லாமல் மக்கள் கூட்டம் குவியும் திருவிழா, புனித வேளாங் கண்ணி கோயிலில் ஆயத்தமாகிக் கொண்டி ருக்கிறது. ஆகஸ்ட் 29-ந் தேதி தொடங்கி... பிரார்த்தனைகள், வாண வேடிக்கைகள், அங்க பிரதட்சணம், தேர் இழுத்தல் என செப்டம்பர் 8-ந் தேதிவரை கோலாகலமாகவும், குதூ கலமாகவும் கொண்டாடப்படும்.
அப்பேர்ப்பட்ட கோலாகலமான வேளாங் கண்ணி திருவிழாதான் சில சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் தீனி போட்டிருக்கிறது.

""எங்க குடும்பம் நிம்மதியா சந்தோஷமா வாழணும், பணம், பொருள் சேரணும், பிள் ளைங்க படிச்சு முன்னேறணும். -இப்படி பலவிதமான வேண்டுதல்களோடு புனித வேளாங் கண்ணி மாதாவை தரிசிக்க வர்றவங்கள்ல பெரும்பாலும் நோய்கள் குணமாகணும்னுதான் அதிகம்பேர் வருவாங்க. இப்படி பலவிதமான நோய்களோடு வர்றவங்க, அந்த நோயையும் இந்தப் பகுதி மக்களிடம் பரப்பிவிட்டு போயிடு றாங்க'' என்று புது குண்டைத் தூக்கிப்போட்ட முக்குலத்துப் புலிகள் அமைப் பின் தலைவர் ஆறு சரவணன், ""அப்படித்தான் போன வருசம் பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியான்னு பீதி கிளப்பிக் கிட்டிருந்த நோய்களோடு பலரும் வேண்டு தலுக்கு வர... அந்த நோய்களெல்லாம் இந்தப் பகுதி மக்களுக்கு தொற்ற ஆரம்பிச்சுடுச்சு. சரி... சிகிச்சை எடுத்துக்கலாம்னா இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லை. இதனால சின்னச்சின்ன வியாதி களுக்குக்கூட நாகப்பட்டினம் போக வேண்டி யிருக்கு.

திருப்பூண்டியை தலைமையாகக் கொண்ட காரப்பிடாகை, சின்னத்தும்பூர், சோழ வித்தியாபுரம், கீழையூர், திருக்குவளை, துணை சுகாதாரநிலையங்கள், விழுந்த மாவடி, வேளாங்கண்ணி, பி.ஆ.புரம், பாலக் குறிச்சியிலுள்ள ஆ.சு.நிலையங்களிலும் டாக் டர்களே இல்லை. ஏற்கனவே பலவிதமான நோய்களோடு பாதிக்கப்பட்டிருக்கும் இப் பகுதி மக்கள்... வேளாங்கண்ணிக்கு வர்ற நோயாளிகளால் பரப்பப்படும் நோய்க் கிருமிகள்னு டபுள் அவஸ்தைப்படுறாங்க. வேளாங்கண்ணி திருவிழா ஆரம்பிக் கிறதுக்குள்ள இப்பகுதி மக்களுக்கு டாக்டர் களையும், மருத்துவ வசதிகளையும் ஏற் படுத்தலைன்னா இப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்கிறார் கொந்தளிப்பாக.

வருஷா வருஷம் வேளாங்கண்ணிக்குத் தவறாமல் போய்வரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவரான அந்தோணிராஜா, ""இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம்னு எல்லா மதத்துக்காரங்களும் கலந்துக்கிற புனித திருவிழாங்க இது. கை, கால் விளங்காம போனவங்க, மனநிலை பாதிக் கப்பட்டவங்க, தீராத வியாதி யுள்ளவர்கள், பில்லி சூனியம் மந்திரத்தால் கட்டப்பட்டவர்கள்னு 30 சதவீதம் பேர் வேளாங்கண்ணிக்கு போறாங்கன்னா... வேண்டுதல்கள் நிறைவேறி அற்புதம் நடந்தவர்கள் 20 சதவீதம் பேர் நன்றிக்கடன் செலுத்த வருவாங்க. மீதமுள்ள 50 சதவீதத்தில் 35 சதவீதம் பேர் நோய் குணமாக ணும்னுதான் வருவாங்க. அதனால தான் சுகாதாரத்துறை மூலமா போன வருஷம் திருவிழாவுல மருத்துவ முகாம் அமைச்சாங்க. ஆனா எதுவுமே சரியா செயல் படுத்தப்படல. இந்த வருஷமாவது சரியா செயல்படுத்தணும்'' என்கிறார் கோரிக்கையாக.

வேளாங்கண்ணி பகுதி மக்களுக்கு ஆம்பு லன்ஸ் போல் ஓடிவரும் ஆட்டோக்காரர் தம்பி ராஜன் நம்மிடம், ""திரு விழா சமயத்துல மட்டு மில்லீங்க... சாதாரண மாகவே மக்கள் கூட் டம் அலைமோதுற பகுதி இது. வெளியூர்லயிருந்து வர்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீர்னு பிரசவ வலி உண் டாகி, அக்கம் பக்கத்துல டாக்டர்கள் இல்லாம எத்தனை கர்ப்பிணிகள், குழந்தைகள் இறந்துருக்காங்க தெரியுமா? நினைக்கும்போதே அழுகையா வருதுங்க'' -கண் கலங்குகிறார்.

""இந்த வேளாங்கண்ணி திருவிழாவை சுற்றிப் பார்க்க வர்றாங்களே பதினைந்து சதவீதம் பேர்'' -முகம் சுளித்தபடி பேசத் தொடங்குகிறார் வேளாங்கண்ணி திருவிழா வின் ரெகுலர் பக்தரான டேவிட். ""திரு விழாவுல கொடியேத்துற 12:30 மணிவரைக்கும் அமைதியா இருப்பாங்க. முடிஞ்சதுமே பக்கத்துல இருக்கிற வாஞ்சியூருக்கு கிளம்பிடுவாங்க. எப்படிப் பட்ட சரக்கா இருந்தா லும் விலை கம்மியா கிடைக்கிறதால குடியும் கும்மாளமுமா லாட்ஜ் களுக்குப் போயிடுவாங்க. இவங்களையே டார்கெட் டா வெச்சிருக்கிற விபச்சார கும்பல் பொம்பளைங்களை கூட்டிக்கிட்டு வந்து "வா... வா..'ன்னு அழைத்து பணம் கறக்க ஆரம்பிச்சிடும்'' என்று வேதனையுடன் சொன்னவர், ""வேளாங் கண்ணி கோயிலில் பெரிய தேரை இழுக்க பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து போறவங்களை அனுமதிக்கிறதில்லைங்க. பெங்களூர்க்காரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்'' என்கிறார் வேதனையுடன்.

இந்த ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் நாகை கலெக்டர் முனியநாதனின் கவனத்துக்கு கொண்டு சென் றோம். ""வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை செய்திருக்கோம். டாக்டர்கள் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்றோம். அசம்பாவிதங் கள் நடக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்துகிறோம்'' என்கிறார் பொறுப்புணர்வுடன்.

இங்கு மட்டுமல்ல.... தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிரம்மாண்ட கோயில்கள், மக்கள் அதிகமாக வந்துபோகும் பகுதிகளில் டாக்டர்கள் பற்றாக் குறையை நீக்கி... மருத்துவ சேவையை அதிகப்படுத்த வேண்டும்.

எங்கள் வீட்டுக்கு வந்த அன்னை தெரஸா'' -சிலிர்க்கும் ஐ.ஏ.எஸ். தேவசகாயம்!


நள்ளிரவு பதினோரு மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தின் மனைவி திருமதி அஸ்டில்தான் அந்த குரலை கேட்டார்.

சண்டிகரின் கலெக்டராக இருப்பவரின் மனைவிக்கு வழக்கமான பஞ்சாபி மொழி குரல்களும் ஹிந்தி குரல்களும் அவர் வளர்ந்த பகுதியான கேரளத்தின் மலையாள குரல்களும் தாய்மொழியான தமிழ் குரல்களும் தெரியும். அந்த நள்ளிரவில் ஒலித்த குரல் ஒரு வெள்ளைக்கார குரல். ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவதை போல கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்புடன் முதிர்ந்த வயதுடைய பெண்ணின் குரல்.

""சார்... மிஸ்டர் தேவசகாயம்'' என நான்கு முறை ஒலித்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் அன்னை தெரஸா என அறிந்தபோது தேவ சகாயமும் அஸ்டிலும் அதிர்ந்து போனார்கள்.

""காலையில் உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டதாக சொன்னார்கள். அதனால் இந்த நேரம் வந்தால் உங்களை பார்க்க முடியும் என்பதால்தான் வந்தேன்'' என அன்னை மெதுவாக சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முழங்காலிட்டு ஜெபிக்கும்போது கூட கட்டாந்தரையில் தான் தனது கால்மூட்டை பதிய வைப்பார். உடுக் கின்ற துணியாக இருந்தா லும் ஒரு துணிக்கு மேல் வைத்திருக்க மாட்டார். அந்த துணி கிழிந்தாலும் தன் கையாலேயே ஊசி நூல் கொண்டு கோணல் மாணலாக தைத்தாலும் கவலைப்படாமல் போட்டுக் கொள்வார்.

தனிப்பட்ட யார் வீட்டிற்கும் போக மாட்டார். யாரிடமிருந்தும் பச்சை தண்ணீர் வாங்கி பருக மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்த அஸ்டி லும் தேவசகாயமும் "ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றால் காலம், நேரம் எதையும் பார்க்க மாட்டார். அதற்காக யார் வீட்டு கதவையும் எந்த நேரத்திலும் தட்டுவார்' என்ற அன்னை தெரஸாவின் மற்றொரு முகத்தை அப்பொழுதுதான் பார்த்தார்கள்.



""அன்னை இதுபோல் ஆறுமுறை வந்தார்கள். நாங்கள் கொடுத்த உணவு பொருட்களையும் சாப்பிட்டார்கள். எனது மகன்களுடன் பாசமாக பழகினார்கள். அவர்களை ஆசீர்வதித்தார்கள்'' என பரவசத்துடன் நினைவுகூரும் தேவசகாயம், ஹரியானா மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

""பிரிட்டிஷ் அறிஞர் ஜான் கெப்பிள், "உண்மை யான மனித நேயத்தில் யார் தன்னைத் தானே மூழ் கடித்துக் கொள்கிறானோ அவனைத்தான் உயரத்திற்கு கடவுள் இட்டுச் செல்வார்' என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரஸா அதையே மிக எளிதாக "நீங்கள் எதை பெற விரும்பினாலும் அதை முதலில் மற்றவர்களுக்குக் கொடுங்கள்' என சொல்வார். அவர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள், அனாதைகள், முதியோர் என இனி வாழ்வில் எங்களுக்கென என்ன இருக்கிறது என்று மரணத்தை எதிர்நோக்கி அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு அதிலும் -குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக ஏற்றவர்.

அவர் மரணமடைந்து சொர்க்கத்துக்குப் போனபோது, அங்கிருந்த ஏசுவின் முக்கிய சீடர் புனித பீட்டர் அன்னையைப் பார்த்து "இங்கே உங்களுக்கு வேலையே இல்லை. ஏனென்றால் இங்கே ஏழைகளும், குடிசைகளும் இல்லையே. ஆகவே உடனடியாக நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்' என சொல்லி சிரித்ததாக ஒரு கதை உண்டு.

அப்படிப்பட்ட சொர்க்கங்களில் ஒன்றாகத்தான் சண்டிகர் நகரை அன்னை தெரஸா நினைத்திருந்தார். "சண்டிகர் பணக்காரர்களின் நகரம் அங்கு நான் வரமாட்டேன்' என சொன்னவரை நாங்கள் அழைத்து வந்து பணக்கார வேஷத்துடன் நிற்கும் அந்த மகா நகரத்தில், தொழிலாளர் குடியிருப்புகள் என்றழைக்கப் பட்ட ஏழைகளின் வீடுகளில், கேன்சர் கட்டிகளால் ஆதரவற்ற மக்கள் அவதியுறுவதை காட்டினோம். அவர்களின் கண்ணீரை கண்ட பிறகுதான் சண்டிகர் நகரில் தனது "நிர்மல இதயம்' என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை துவக்க ஒத்துக் கொண்டார்.

கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜோயா தலை மையில் ஐந்து சகோதரிகளை அனுப்பி வைத்தார். ஹரி யானா நகரின் பிரதான பகுதியான 23-வது செக்டரில் 2 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 5ரூ வாடகை என 99 வருட குத்தகைக்கு என நிலம் கொடுத்தது அரசு.

அந்த இல்லத்தில் அவர் அனாதை குழந்தைகளை தொட்டிலில் போடும் தொட்டில் குழந்தை திட்டத் திற்கான தொட்டிலை முதன்முதலில் அமைத்தார்.

முதல் குழந்தை ஒரு கிறிஸ்துமஸ் நன்னாளில் வந்து விழ, அதற்கு கிறிஸ்து என்றே பெயரிட்டார். ஆரம்பித்த புதிதில் அந்த இல்லத்திற்காக 4 லட்சம் திரட்டி தருவோம் என நாங்கள் சொன் னோம். ஆனால் எங்களால் ஒன்றரை லட்சம்தான் திரட்ட முடிந்தது. நாங்கள் நிதி வசூல் செய்து கொண்டிருந்த நேரத்தில் அன்னைக்கு நோபல் பரிசு என அறிவிப்பு வந்தது. அதன் பரிசுத் தொகை யை வாங்கிய அன்னை "இனிமேல் எனக்கும் எனது நிறுவனங்களுக்கும் எந்த நன்கொடையும் தரவேண்டாம்' என வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நாங்கள் கொடுத்த தொகையை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவும் நடந்து முடிந்த காலம் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலம். எமர்ஜென்சி கொடுமைகள் பற்றிய செய்திகள் அன்னை மனதையும் பாதித் திருந்தது. அந்த கொடுமைகளை எதிர்த்த இயக்கங்களும் பெருமளவில் அன்னை உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் இவையெல்லாம் வாழ் வதற்கு எதுவுமேயில்லாத ஏழைகளை தொடவில்லை. அவர்களுக்கு சேவை செய்த அன்னை இந்த அரசியல் குழப்பங்களையெல்லாம் கடந்து ஆகஸ்ட் 26-ம் தேதி நூறு வயதை கடந்து நூற்றாண்டு விழா காணும் அன்னை தெரஸா அன்றும் இன்றும் என்றும் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Tuesday, August 24, 2010

என்ன பின்லேடனா...? காமெடி பண்ணாதீங்கப்பா...!


அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன். இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகளும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்ற விளக்கங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.


இந்நிலையில், பின்லேடன் மாதிரியான வேடத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் சாமியின் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி தற்போது நடித்து வரும் படம் “அய்யனார்”.

இதில் சந்தானம் பின்லேடன் கெட்டப்பில் வந்து காமெடியில் கலக்கவிருகிறார்.


சந்தானத்தின் பின்லேடன் காமெடி இந்த ஆண்டின் சிறந்த காமடியாக இருக்கும் என்று ‘அய்யனார்’ படக்குழுவினர் கூறுகின்றனர்.

என்ன, சந்தானம் பின்லேடனா...? காமெடி பண்ணாதீங்கப்பா...!