Wednesday, September 15, 2010

""அமைச்சரைத் தோற்கடிக்க உள்கட்சி சதி!''



எப்போதும் உற்சாகமாக சிறகடிப்பவர் என உ.பி.க்களால் வர்ணிக்கப் படும் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு... சமீ பத்தில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பாதாள சாக்கடைத் திட்ட ஆய்வுக் கூட்டத்தில்... வழக்கத்திற்கு மாறாக...

""வரும் சட்டமன்றத் தேர்தலில் என்னைத் தோற் கடிக்காம ஓயமாட்டீங்க போலிருக்கு'' என மனம் நொந்து போய் பேச... அமைச்சருக்கு என்னாச்சு? என உ.பி.க்கள் மத்தியிலேயே பரபர டாக் பரவியது.

அமைச்சரின் மனக்கிலே சத்துக்கு காரணம் என்ன?


அவரின் மனதைப் படித்த சிலர் நம்மிடம்...

""ரொம்ப நாளாவே நடக்கும் கோஷ்டி சண்டையின் வெளிப்பாடு இது. பிச்சாண்டி எம்.எல்.ஏ. விவ காரத்தில் எப்பவுமே அமைச்சர் தலையிட்டதில்லை. இவங்க இரண்டு பேருக்கும் தனித்தனி கோஷ்டி இருந்தாலும் ஒத்துமையாதான் இருப்பாங்க. அமைச்சரோட தண்டராம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டு அந்த பகுதிகள் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளோட இணைஞ் சிடுச்சி. அதனால வரும் தேர் தல்ல எங்க நிக்கலாம்னு யோசிச்சாரு. செங் கம் ரிசர்வ்ங்கிற தால அங்க நிற்க முடியாது. திரு வண்ணாமலையை யோசிச்சப்ப அது பிச்சாண்டி 5 முறை நின்று 4 முறை வென்ற தொகுதி. அதனால அது வேணாம்னு கலசபாக்கம் அல்லது புது தொகுதியான கீழ்பென்னாத்தூர் இதுல எது சரி வரும்னு விசாரிச்சிக்கிட்டிருந்தாரு.

இதனால் அமைச்சர் கலசபாக்கத்தில் நிக்கப்போறாருன்னு தகவல் பரவுச்சு. இதை ஸ்டாலின் ஆதரவாளரான மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் திருவண்ணா மலை நகர்மன்றத் தலைவராகவும் இருக்கிற ஸ்ரீதர் என்கிற திருமகன் எதிர்பார்க்கலை. காரணம் இந்தத் தொகுதியை இந்தமுறை எப்படியும் வாங்கிடணும்னு தீவிரமா மேல்மட்டத்துல ஆதரவு திரட்டிக்கிட்டிருந்தாரு. அந்தத் தொகுதியில் அமைச்சர் வேலு நிக்கப்போறாருன்னு வந்த தகவலால், பிச்சாண்டியோட ஆதரவாளர்கள் அதிகமிருக்கிற கீழ்பென்னாத்தூரை வாங்கி அவர் மூலமா ஜெயிச்சிடலாம்ங்கிற எண்ணத்துலதான் அவர் பக்கம் போனாரு. ஆனா வேடிக்கை என்னன்னா... பிச்சாண்டி தரப்பு இனி திருவண்ணாமலை சரி வராது, புது தொகுதியான கீழ்பென்னாத்தூர்தான் ஒத்துவரும்னு பலமா ஆய்வுபண்ணி அங்க களப்பணியையும் ஆரம்பிச்சிடிச்சி...'' என மூச்சு வாங்கியவர்கள் மேற்கொண்டு விவரிக்க ஆரம்பித்தனர்.

""பிச்சாண்டி கீழ்பென்னாத்தூர் போனதால அமைச்சர் வேலு திருவண்ணாமலை பக்கம் பார்வையைத் திருப்பினாரு. இதுல விரக்தியான திருமகன், இரண்டு நாயுடுகளும் சேர்ந்து முதலியாரான என்னை ஓரம் கட்டுறாங்க. வளரவிடாம ஒழிக்கப் பார்க்கிறாங்கன்னு வெளிப்படையாவே எல்லார்கிட்டயும் சொல்ல ஆரம்பிச் சாரு. இது அவங்க இரண்டு பேர் காதுக்கும் போய் கடுப்பாயிட்டாங்க. அதனால இரண்டுபேரும் இப்ப அவரை ஒதுக்கி வச்சிருக்காங்க.

திருவண்ணாமலையில களப் பணியை ஆரம்பிச்ச அமைச்சர், முதல் கட்டமா பிச்சாண்டி யோட ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்தாரு. இதுல பிச்சாண்டி சிபாரிசுல ந.செ. பதவிக்கு வந்த கார்த்தி வேல்மாறன் வேலு ஆதரவாளரா மாறினாரு. அடுத்து அண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஆடையூர் ரவின்னு பலரை தன் பக்கம் இழுத்தாரு. பிச்சாண்டி மச்சான் நகர்மன்றத் துணைத்தலைவர் செல்வத்துக்கு குடைச்சல் தரும் தணிகைவேலை தன் பக்கம் சேர்த்துக்கிட்டு சில இடங்கள்ல முக்கியத்துவம் தந்தாரு. தன் ஆதரவாளர்களை இழுத்தவரு இப்ப நமக்கு வேண்டாதவங்களை வளர்த்து விடறது எந்த விதத்துல நியாயம்னு இப்ப பிச் சாண்டி தரப்பு முணுமுணுக்க ஆரம்பிச்சிருக்கு. அதோடு மறைமுகமாக அமைச்சருக்கு தனது எதிர்ப்பைக் காட்ட தொடங்கினாரு பிச்சாண்டி. தனி ஆவர்த்தனம் செய்யும் திருமகனும் அமைச்ச ருக்கு தன் ஒத்துழையாமையைக் காட்டத் தொடங்கிவிட்டார். இந்த ஒத்துழையாமை இயக்கத்துல இரண்டுபேரும் கைகோர்த்திருக் காங்க'' என்றார்கள் பூடகமாக.

""எப்படி?'' என்று மேலும் அவர்களின் வாயைக் கிளறி னோம்.

""தேர்தல் நெருங்கி வருது. சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்து அதற்கான லிஸ்டை தரச் சொன்னாரு அமைச்சர். பிச்சாண்டி, திருமகன் இரண்டுபேர்கிட்ட இருந்து மட்டும் வரல. அதோட அமைச்சர் சொல்றது எதையும் சேர்மன் திருமகன் சுத்தமா கேட்கறதேயில்ல. நகராட்சிப் பள்ளிகள் உள்ள 6 இடங்களில் பள்ளிச் சுவர்கள், சில வகுப்பறைகளை இடித்துவிட்டு கடை கட்டுது நகராட்சி. இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி, ஆட்சி மீதான அதிருப்தியா உருவாகியிருக்கு. இதை சிலர் அமைச்சரிடம் தெரிவித்தனர். அமைச்சர் சேர்மன்கிட்ட பசங்க படிக்கிற இடம் அங்கேயெல்லாம் கடை கட்டாதீங்கப் பான்னாரு. அத திருமகன் கேட்கல. அதோட கோயிலைச் சுத்தியிருக்கிற கடைகளை இடிச்சி பக்தர்களுக்கு வசதி செய்து தாங்கன்னாரு. அதையும் அவர் செய்யல.

கடைசியா பாதாள சாக்கடைத் திட்டம். திருவண்ணாமலை மக்களை இம்சைக்குள் ளாக்கி வருது. அதில் ஏகப்பட்ட குழப்படி. ரோட்ட தோண்டறது, மூடறது, திரும்பவும் தோண்டறது, திரும்பவும் மூடறதுன்னு இதுவரை 3 முறை செய்துட்டாங்க. இது வெளியூர் பக்தர்கள்ட்டயும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கு. இதை ஏன் இப்படி செய்றீங்க, சரி செய்பான்னாரு. அதையும் சேர்மன் கண்டுக்கல. தேர்தலுக்கு முன்னாடி தோண்டப்பட்ட ரோடுகளை சரிபண்ணி புது ரோடு போட அமைச்சர் விரும்புறாரு. புது ரோடு போடணும்னா பணி முடிஞ்சிடுச்சின்னு சர்டிஃபிகேட் பண்ணாதான் புது ரோடு போட பணம் ஒதுக்க முடியும். ஆனா பணி முடியல. அது தாமதமாக காரணம் திருமகன்தான்ங்கிறத தெரிஞ்சிதான் அவர் அப்படி பேசியிருப்பாரு'' என்கிறார்கள் எங்கெங்கோ போய்.

ஒத்துழையாமை பற்றி முன்னாள் அமைச்சரான பிச்சாண்டி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது... ""அவர் கூட்டம் நடத்துனது சாதாரணமானது தான். அதுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்குள்ள தொகுதி பிரச்சினை எதுவும் கிடை யாது. தலைமை எங்க நிக்கச் சொல்லுதோ அங்க நிக்கப் போறோம். இதுல என்ன யிருக்கு. நானும் அவரும் ஒத்துமையாத்தான் இருக் கோம். எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் கிடையாது. நான் தேர்தல் பணிக்குழு பட்டியல் தந்தாச்சு. அதுல எதுவும் பிரச்சினை கிடை யாது'' என்கிறார் கூலாகவே.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சேர்மன் திருமகனிடம் இது குறித்து கேட்டபோது... லைனை கட் செய்தபடியே இருந்தார்.

இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தரப்பு நம்மிடம், ""பாதாள சாக்கடை வேலைகள் இழுபறியா நடக்கிற ஆதங்கத்தில்தான் அமைச்சர் இப்படி அந்தக் கூட்டத்தில் பேசினார். மற்றபடி லோக்கல் அரசியலில் அமைச்சருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்கிறது கூலாய்.

எனினும் மாவட்டம் முழுக்க உண்டான பரபரப்பு அடங்கவில்லை.

No comments:

Post a Comment