Saturday, September 18, 2010
உங்கள் தொகுதியில் யாருக்கு சீட்? -என்.வி. வாரிசு வருவாரா?
பூட்டுக்கும் முறுக்குக்கும் பெயர்போன மாவட்டமான திண்டுக்கல்லில்... மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இந்த ஏழிலும் இப்போது சீட் பிடி ரேஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வாரியாக... சீட்டுக்குப் போட்டியிடும் பிரமுகர்கள் யார் யார் என பார்ப்போம்.
திண்டுக்கல் :
தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சி.பி.எம். பாலபாரதி... மீண்டும் சீட் வாங்கும் மும்முரத்தில் இருக்க.. ‘நம்ம என்.வி.மகனுக்கு இந்தமுறை சிபாரிசு பண்ணிப் பாப்போம்’ என தோழர்களில் ஒருதரப்பு.. நகரச் செயலாளரான கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவுக் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறது. ர.ர.க்களோ ‘"இது எப்பவும் நம்ம ரெட்டை இலைக் கோட்டை. இந்த முறை தோழர்களுக்குத் தரக்கூடாது'’ என கார்டனுக்கு பிரஷர் கொடுத்துவருவதோடு... நகரம் ராமுத்தேவர், மாஜி உப்புவாரியத் தலைவர் மருதராஜ், ஒ.செ. ஜெயச்சந்திரன் போன்றோர் இப்போதே சீட் ரேஸில் ஓடவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கு மத்தியில்...’"தியாகம் பண்ணியதெல்லாம் போதும். இந்த முறை யாவது கார்டன்கிட்ட கட் அண்ட் ரைட்டாப் பேசி தொகுதியை வாங்கிடுங் கண்ணே. ஜெயிச்சிட லாம்ணே'’என மறு மலர்ச்சித் தொண்டர்கள் இன்னொருபுறம் வைகோ வை நெருக்கியடிக் கிறார்கள். "இந்தமுறை இங்க பம்பரம்தான் சுத்தப் போகுது. அதிலும் நாந் தேன் வேட்பாளர் எழுதி வச்சுக்கங்க'’ என தன் ஆதரவாளர்களிடம் மா.செ.செல்வராகவன் தெம்பாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆளும் தரப்பான சூரியத் தரப்பிடம்... இந்தமுறை ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கைப் பிரகாசமாக இருப்பதால் மாவட்ட பொருளாளரும் சேர்மனுமான நடராஜன், நகரம் பசீர் அகமது, ஒ.செ.பெருமாள்சாமி, மிசா லட்சுமணன் மகன் நெடுஞ்செழியன், வி.கே.ராஜா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உ.பி.க் கள்... மாவட்ட மந்திரியான ஐ.பி.யை கிரிவலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கிடையே தே.மு.தி.க.வின் கிழக்கு மா.செ. ரவிக்குமார், ஜெ.ஜெ.காந்தி சந்திரன், ஜெயக்குமார், சுகுமாறன் போன் றோர்..’ "ஜனங்க மத்தியில் கேப்டன் அலை வீசப்போகுதாம். எங்க ஊர் சாமியாடி குறி சொல்லிட்டான். ஆக எனக்கு சீட் வாங்கிக்கொடுங்க'’ என்ற ரீதியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷை உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பழனி :
பத்து வருடங்களுக்குப்பின் பழனி பொதுத்தொகுதியாக ஆக்கப்பட்டிருப்பதால்.. சிட்டிங் தி.மு.க. அன்பழகன்... நிலகோட்டையைக் குறிவைத்து சீனில் இருந்து நகர்ந்துவிட்டார். எனவே மாஜி எம்.எல்.ஏ. பூவேந்தன், ஒ.செ.மாரியப்பன், கருமலை பாண்டியன், நகரம் வேலுமணி, ஹக்கீம், அப்துல்ரஜாக் என ஒரு பெரிய டீமே சூ லேஸை இறுக்கியபடி சூப்பர் ரன்னிங்கைத் தொடங்கிவிட்டது. இன்னும் சில உ.பி.க்களோ... அமைச்சர் ஐ.பி.யின் மகன் செந்தில்குமாரை இங்கே களமிறக்கி சடுகுடு ஆடவைக்கலாம் என்ற எண்ணத்தோடு... பரபரத்துத் கொண்டிருக்கிறார்கள். இலைத் தரப்பில் முன்னாள் எம்.பி.குமாரசாமி, ஏ.டி.செல்லச்சாமி, மகுடேஸ்வரன் போன்றோர் விறுவிறுத்துக்கொண்டிருக்க... தே.மு.தி.க.விலோ மாஜி எம்.எல்.ஏ. சின்னசாமி, சின்னதுரை, வெங்கடசுப்பிரமணி, கணேசன், செல்வராஜ் என ஒரு டஜன் பேர் கரன்ஸி பலத்தோடு... கேப்டன் தரிசனத்துக்காக ஓடிக்கொண்டி ருக்கிறார்கள்.
நத்தம் :
சிட்டிங்கும் மாஜியுமான நத்தம் விசுவநாதன்.. இந்தமுறையும் இதே தொகுதியில் குதிக்க... கவுண்ட் டவுன் பண்ணிக்கொண்டிருக்கிறார். எனினும் இவரை ஓரங்கட்டிவிட்டு சீட்டைப் பிடிக்கும் ஆசையில் ஒ.செ.ராமராஜன், ஷாஜ கான் உள்ளிட்ட அரை டஜன் ர.ர.க்கள் சீக்ரெட் கேம் ஆடிக்கொண் டிருக்கிறார்கள். ஆனால் சூரியத்தரப்போ ’"போன முறையோட உங்க சேப்டர் முடிஞ்சிடிச்சி. இனி புதிய சேப்டரை எழுதப்போறது நாங்க தான்'’ என்று வரிந்து கட்ட... சானார்பட்டி ஒ.செ. விஜயன், சின்னாண்டி அம்பலம், ராஜசேகர் போன்றோர் சீட் ஆசையில் அடிக்கடி அறிவாலயத்துக்குப் படையெடுத்துக்கொண்டிருக் கிறார்கள்.. தே.மு.தி.க. தரப்பிலோ முத்துவேல்ராஜ், தம்பி ஜெயராஜ், ஒ.செ.வீரப்பன் போன்றோர் சீட் கனவோடு ரேஸ் மாரத்தானில் ஐக்கியமாகியிருக் கிறார்கள்.
வேடசந்தூர் :
சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தண்டபாணி.. இந்தமுறையும் சீட் எனக்குத்தான் என்று பரபரக்க... ’அட புது கேண்டிடேட் நாங்க இருக்கோம்’ என்றபடி யூனியன் சேர்மன் ராஜம்மாள், பச்சைமுத்து போன்றோர் சீட் ரேஸில் புழுதி பறக்கத் தடதடத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உ.பி.க்களோ.. ‘இந்தமுறை தொகுதியை நாங்க கைக்குக் கொடுக்கமாட்டோம்’ என்று நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டிருக்க... கட்சி மாறிவந்த மாஜி சபா காந்திராஜன் உட்பட தொ.மு.ச. தண்டபாணி, மா.சேர்மன் கவிதா பார்த்தீபன், மாஜி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் என ஒரு டஜன் கரை வேட்டிகள் அறிவாலயத்தை விர்ர்ரென ரவுண்ட டித்துக் கொண்டிருக்கிறார்கள். இலைத் தரப்பி லோ போனமுறை வெற்றியை நழுவவிட்ட பழனிச்சாமி, நந்தகோபால், குஜிலியம்பாறை பாண்டியன், சுப்பிரமணி என ஒரு படையே ரேஸில் பரபரக்கிறது. இவர்களுக்கு மத்தியில் ஒ.செ.பெருமாள், பழனிவேல், மலையாரம், தங்கராஜ் போன்றோர் தங்கள் சீட் கோரும் குரல்... விஜயகாந்த் காதில் விழுமா? என முரசடித்தபடியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆத்தூர் :
இந்தத் தொகுதிக்கு நிரந்தரமானவன் நானே என்றபடி மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மந்திரியுமான ஐ.பெரி யசாமி... விறுவிறுப்பாய் வாள் சுழற்றிக்கொண்டி ருக்கிறார். கட்சிப்பிரமுகர் களான முரளி, சிவ குருசாமி, அம்பை ரவி, சத்தியமூர்த்தி போன் றோர் ‘எப்பவும் இப்பவும் ஐ.பி. அண்ணந்தான் அன்ன போஸ்ட் சீட்டுக்காரர்’ என்றபடி உற்சாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள். ’இங்க சூரியத் தரப்பை எதுத்துக் கரைஏற முடியாது’ என்ற படி ர.ர.க்கள் பலரும் பாரா முகம் காட்ட.. மாஜி எம்.பி சீனிவாசனும் மாஜி எம்.எல்.ஏ. நடராஜனும் எங்களுக்கு ஒரு சான்ஸ் கொ டுத்தா கலக்கிரு வோம்ல’ என்றபடி தலைமை நிலையத்தைச் சுற்றிசுற்றி வருகிறார்கள்.
தே.மு.தி.க.விலோ விஜயகாந்த்தின் கடைக்கண் பார்வை படுமா என்றபடி மாவட்ட இளைஞரணி ராஜேஷ் பெருமாள், முத்து, தாளமுத்து போன்றோர் சூவின் லேஸை இறுக்கிக் கட்டியபடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நிலக்கோட்டை :
இலைத்தரப்பு சிட்டிங்கான தேன்மொழி.. மீண்டும் எனக்கே சீட் வேண்டும் என பரபரத்து கொண்டிருக்க... எதிர் கோஷ்டிக்காரர்களான ஒ.செ.நாகரத்தினம், மோகன் போன்றோர்... பாண்டியம்மாளுக்கு சீட்வாங்க ரேஸில் இறங்கிவிட்டார்கள். கடந்தமுறை தொகுதியைக் ’கை’யிடம் கொடுத்துவிட்ட சூரியத் தரப்பு... இந்தமுறை அதை கை நழுவவிடக்கூடாது என்பது லோக்கல் உ.பி.க்களின் எதிர்பார்ப்பு. இதனடிப்படையில் மா.து.செ. நாகராஜ், வக்கீல் அன்பழகன், பிச்சைமணி போன்றோர்... அண்ணே கைவிட்றாதீங்க என்றபடி ஐ.பி.யை துரத்திக் கொண்டிருக்கிறார்கள். கைத்தரப்பு சித்தனோ தனது ஆதரவாளரான சந்திரபாண்டியனுக்கு சீட்டைக் கேட்ச் பண்ணிக்கொடுக்கும் எண்ணத்தோடு ஓடத்தொடங்கியிருக்கிறார். இவர்களுக்கு மத்தியில் தே.மு.தி.க.வில் மாலைராஜா, பழனி, ராஜீவ் போன்றோர் சீட் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.
ஒட்டன்சத்திரம் :
கொறடாவும் தி.மு.க. சிட்டிங்குமான சக்கரபாணி.. தனக்கே சீட் கிடைக்கும் என்பதால்... போட்டியாளர்கள் யாருமின்றி அன்னப்போஸ்ட்டாய் ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் பக்கமே அறிவாலயத்தின் கடைக்கண் பார்வை என்பதால்... சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்றபடி கட்சியிலுள்ள பசைப் பார்ட்டிகளும் கூட... கொறடா ஓடட்டும் என ஒதுங்கி நிற்கிறார்கள்.
இலைத் தரப்பிலோ கடந்த எம்.பி.தேர்தலில் வெற்றிக்கனியை நழுவவிட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் நல்லுசாமி போன்றோர்... கார்டனை நோக்கி ரேஸைத் தொடங்கி யிருக்கிறார்கள். முரசுத் தரப்பிலோ மேற்கு மா.செ.பாலசுப்பிர மணியன், ஜெயக்குமார், சங்கர் போன்ற பசைப்பார்ட்டிகள்...’ கண்ணுபட வேண்டுமய்யா சின்னகவுண்டரே’ என்று விஜய காந்த்தின் கடைக்கண் பார்வைக்காக... பாடியபடியே ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment