Monday, September 13, 2010
மனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்!
வேலூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 8-ந் தேதி அதிகாலை 3.50-க்கு 45 பயணிகளுடன் திரு வண்ணாமலைக்குப் புறப்பட்டது அரசுப் பேருந்து.
திருவண்ணாமலைக்கு 15 கி.மீ.க்கு முன்னால், மல்லவாடி கிராமத்தை ஒட்டி பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில், ஜெட் வேகத்தில் ஒரு லாரி வருவதைப் பார்த்த ஓட்டுநர் ரவிக்குமார், நடத்துநர் மகாதேவனிடம் ""ஏன் இப்படி பேய் மாதிரி வர்றான்?'' -சொல்லி முடிக்கு முன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது லாரி.
பயணிகளின் உயிர்போகும் அலறல் மல்லவாடி கிராமத்தையே ஓடி வரவைத்துவிட்டது. லாரியின் முன்பகுதி பஸ்சுக்குள் போய்விட்டது. பஸ் முழுதும் கரும்புகை பரவிவிட்டது. எங்கே பயணிகள் இருக்கிறார் கள்... துடிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாத அளவுக்கு கரும்புகை. பஸ் சீட்டுகளுக்குள் சிக்கி, அலறியபடி கிடந்த பயணிகளை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்துகொண்டிருந்தார்கள் மக்கள்.
நடத்துனரைப் போலவே இன் னொரு பெண்மணியின் கால்களும் சீட்டுக்கடியில் மாட்டிக்கொண்டு விட்டது. அந்தப் பெண்மணியை அவரது கணவர் இழுத்துக்கொண்டி ருந்தார். முடியவில்லை. ""நீங்க முதல்ல வெளிய வாங்க சார்... உங்க ஒய்ஃப்பை நாங்க எப்படியாவது காப்பாற்றித் தருகிறோம்'' ரத்தம் வடிந்த கணவரை வலுக்கட்டாயமாக சாலையில் கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, அந்த அம்மாவைக் காப் பாற்றுவதற்காக இரண்டு இளை ஞர்கள், மீண்டும் பஸ்சுக்குள் நுழைய முயன்றபோதுதான்... டமார் என பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து, அந்த நொடியே... பஸ்சுக்குள் நெருப்பு பற்றியெரியத் தொடங்கியது.
பஸ்சுக்குள் சிக்கிக்கொண்ட 8 பயணிகளையும் தீ தின்னத் தொடங் கியது. ""அய்யோ என் மனைவி எரியுறாளே... என் மனைவியை சாகக்கொடுத்துவிட்டு நான் மட்டும் பிழைச்சு என்ன பண்ணப்போறேன்?'' அலறிய படியே எரியும் பஸ்சுக்குள் பாய்ந்தார் அந்தக் கண வர். யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை.
ஓட்டுநர், நடத்துநர், மரணத்திலும் பிரியாது மனைவிக்காக தீக்குள் பாய்ந்து உடன்கட்டை ஏறிய அந்த கணவர் உட்பட 9 பேரும் எரிந்து கரிக்கட்டையாகிப் போயினர். விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ""ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு போன லாரி இது. போலீசுக்குப் பயந்து வேகமாக ஓட்டி தானும் செத்து, அப்பாவிப் பொதுமக்களையும் சாகடித்துவிட்டான் லாரி டிரைவர். ரேஷன் அரிசி கடத்தியவர்களை, உடந்தை யாக இருந்த அதிகாரிகளை கண்டுபிடித்து கடு மையாகத் தண்டிக்கணும்'' என்றார்.
எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உணவு அமைச்சர் எ.வ.வேலு, ""அந்த லாரியில் இருந்தது ரேஷன் அரிசி இல்லையென்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் சொல்லியிருக்கிறார். அது ரேஷன் அரிசி இல்லை என்றே எனக்கும் தகவல் வந்திருக்கிறது. விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரமும், முதல்வர் நிதியிலிருந்து வழங்கப்படும்'' என்றார்.
காவல்துறையினரிடம் கேட் டோம். ""ஆத்தூர் லாரி இது. ஓட்டு நர் இறந்துவிட்டதால் எங்கிருந்து எங்கே போய்க்கொண்டிருந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை. பச்சரிசி, புழுங்கலரிசி மூட்டைகளுக்கு மேல் நெல் மூட்டைகளை அடுக்கி யிருந்தார்கள்'' என்கிறார்கள் காவல் துறையினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment