Monday, September 13, 2010

மோடியிடம் ராஜராஜன்! மீட்க கலைஞர் அனுப்பிய படை!


""ஹலோ தலைவரே...... கோவையில் நடந்த நீயா-நானா போட்டிக்குப் பிறகு, திருச்சியிலும் நீயா-நானா நடந்து முடிந்திருக்குது.''

""அ.தி.மு.க போன மாசம் 14-ந் தேதி நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தையும், தி.மு.க இந்த மாசம் 8-ந் தேதி நடத்திய கூட்டத்தையும்தானே சொல்றே.. கோவையைப் போலவே திருச்சியிலும் அ.தி.மு.க.வுக்குப் பதில் தரும் வகையில் தி.மு.க. ஸ்ட்ரென்த் காட்டியிருக்குதே...''

""கலைஞரின் முகத்திலும் மனத்திலும் அந்த வெற்றி பெருமிதம் தெரிஞ்சதை கட்சி நிர்வாகிகள் பூரிப்போடு பார்த்திருக்காங்க. நிகழ்ச்சி முடிந்த மறுநாள், ஃப்ளைட்டில் சென்னைக்குத் திரும்புவதுதான் கலைஞரோட ப்ளான். அப்புறம், ரயிலில் வரலாம்னு நினைச்சார். ஆனா, சந்தோஷமான மனநிலையோடு காரிலேயே ரோடு வழியா மறுநாள் காலையில் சென்னைக்குப் புறப்பட்டுட்டார்.''

""வர்ற வழியில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பெரியார் சிலையையும் திறந்து வைத்து தன் மனதுக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்காரே..''

""தலைவரே.. உட்கார்ந்த நிலையில் இருக்கும் கம்பீரமான பெரிய சிலை அது. கலைஞரின் கரத்தால் திறக்கணும்ங்கிறதுக்காக அந்தப் பெரியார் சிலை காத்திருப்பதை நம்ம நக்கீரன் எழுதியிருந்தது. அந்த சிலையைத் தான் இப்ப கலைஞர் திறந்து வைத்திருக்கிறார். திருச்சி நிகழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூருக்கு ஒரு விசிட் அடிச்சி, பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவனிக்கிறதுங்கிற திட்டமும் கலைஞரிடம் இருந்திருக்கு. நேரமின்மை காரணமா தஞ்சாவூருக்குப் போகலைன்னாலும், தஞ்சாவூரோடு சம்பந்தமுள்ள ராஜராஜ சோழன் சிலையை மீட்டெடுப்பதில் அவர் ரொம்ப தீவிரமா இருக்காரு.''

""திருச்சியில் அன்பில் சிலை, பெரம்பலூரில் பெரியார் சிலை.. தஞ்சாவூரில் ராஜராஜன் சிலையா?''

""இப்ப அந்த சிலை குஜராத் மாநிலத்தில் இருக்குது. 80 ஆண்டுகளுக்கு முன்னாடி அந்த மாநிலத்துக்குப் போய்விட்ட ராஜராஜசோழன் சிலையை மீட்டு வருவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான ஒரு படை போய் சந்தித்துத் திரும்பியிருக்குது. அப்பதான் அந்த சிலை பற்றிய விவரம் முழுமையா தெரிஞ்சதாம். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜன் சிலையையும் சோழனின் மனைவி செம்பியன்மாதேவி சிலையையும் 1930-ல், குஜராத்தின் மிகப்பெரிய பணக்கார குடும்பமான சாராபாய் குடும்பம், தாங்கள் நடத்தும் அருங்காட்சியகத்திற்காக வாங்கிட்டுப் போயிருக்காங்க. சாராபாய் குடும்பத் தைச் சேர்ந்த கௌதம் சாராபாய்தான் இதை வாங்கியிருக்கிறார். அவர் இறந்தபிறகு, அவரோட சகோதரி கீராபென் சாராபாய் வசம் அந்த அருங் காட்சியகம் ஒப்படைக்கப்பட்டிருக்குது. அங்கேதான் ராஜராஜசோழன் சிலை இருக்குது. 84 வயதாகும் கீராபென், அந்த சிலையை தர மறுக்குறாராம்.''

""குஜராத் முதல்வர் மோடி என்ன சொல்றார்?''

""அவரிடம்தான் தங்கம் தென்னரசு தலைமையிலான டீம் விவரத்தைச் சொல்லியிருக்குது. தமிழகத்திற்கு சிலை வரணும்னு கலைஞர் விருப்பப்படுறார்னு சொன்னதும், கலைஞர் எனக்குத் தந்தை போன்றவர்னு சொன்ன மோடி, வாழும் இந்தியத் தலைவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர். அவருக்கு இந்த உதவியை செய்வதன் மூலமா இரு மாநில உறவுகளும் பலப்படும். இந்திய இறை யாண்மைக்கு சிறந்த உதாரணமா இருக்கும். நான் அந்தக் குடும்பத்தினரிடம் பேசி வாங்கித்தர்றேன்னு உறுதி கொடுத்திருக்கிறார்.''

""பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்கு முன்னாடி நல்ல சேதி வரட்டும்.''

""நான் கொடநாட்டு செய்திகளை சொல்றேங்க தலைவரே.. திருச்சி தி.மு.க பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள் 8-ந் தேதி காலையிலிருந்தே கொட நாட்டில் இருக்கும் ஜெ.வுக்கு அப்டேட்டாகியிருக்கு. கூட்டம் அதிகம்ங்கிற தகவலால் அப்செட்டான ஜெ, மதுரையில் நாம கூட்டுற கண்டனக் கூட்டம்ங்கிறது யாரும் மிஞ்ச முடியாத அளவில் பிரம்மாண்டமா இருக்கணும்னு சொன்னதோடு, எம்.ஜி.ஆர். நினைவு தினமான டிசம்பர் 24-ந் தேதியன்னைக்கு மதுரை கூட்டத்தை நடத்துவதுன்னு முடிவு செய்திருக்கிறார்.''

""ஏன் இவ்வளவு இடைவெளி?''

""அது பற்றியும் நிர்வாகிகள்கிட்டே ஜெ பேசியிருக்கிறார். அழகிரியோட மிரட்டலுக்காக பயந்து நான் தேதியை தள்ளி வைக்கலை. கூட்டம் பிரம்மாண்டமா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் கேப் விட்டிருக்கேன். தேவர் ஜெயந்திக்காக அக்டோபர் 30-ந் தேதி தென்மாவட்டத்துக்குப் போகத்தான் போறேன். அப்ப அழகிரி தடுக்கட்டும் பார்க்கலாம்னு சொன்னாராம். அதோடு, ரஜினி மகள் கல்யாணத் துக்குப் போகாதது சர்ச்சையாகியிருப்பது பற்றியும் பேசினாராம். நேரில் போகலைன்னாலும் வாழ்த்து அனுப்பினேன். தலைமைக் கழக மகாலிங்கத்தையும் அனுப்பிவச்சேன். என் சார்பில் போன அவர், இதை பத்திரிகைகளில் செய்தியாக்காமல் விட்டதாலதான் இந்தளவுக்கு சர்ச்சையாகி யிருக்குன்னு சொல்லி, மகாலிங்கத்துக்கும் டோஸ் விட்டாராம்.

""சரி.. அடுத்த விஷயத்துக்குப் போவோம். டி.ஜி.பி லத்திகாசரண் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிலும் அதிரடித் திருப்பங்கள் ஏற்படுதே?''

""ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ்தான் வழக்கு தொடர்ந்தவர். இப்ப இந்த வழக்கில் விஜயகுமார் ஐ.பி.எஸ் போட்டிருக்கிற பெட்டிஷனால் புதிய பரபரப்பு உண்டாகியிருக்குது. மத்திய அரசுப் பதவி யில் இருப்பதால தன் பெயரை டி.ஜி.பி. போஸ் டிங்கிற்கு தமிழக உள்துறை பரிசீலிக்காமல் போனது தப்புன்னு விஜயகுமார் பெட்டிஷன் போட்டிருக் கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட் டிருக்கிற நிலையில், தீர்ப்பு எப்படி வருமோன்னு லத்திகா தரப்பு பதட்டமா இருக்குது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள உத்தரவின்படி, முதல் 3 இடத்தில் இருக்கும் டி.ஜி.பி அந்தஸ்துள்ள அதிகாரிகளில் ஒருவரை செலக்ட் பண்ணனும்.''

""லத்திகா எந்த இடத்தில் இருக்கிறார்?''

""அவர் செலக்ட்டானப்ப, நட்ராஜ், பாலசந்திரன், விஜயகுமார் இந்த மூணு பேரும் தமிழக கேடரில் முதல் 3 இடத்தில் இருந்த டி.ஜி.பி கள். நாலாவதா லத்திகா இருந்தார். விஜயகுமார் மத்திய அரசு பணியில் இருந்ததால அவரை விட்டுட்டு, மூணாவது அதிகாரியா லத்திகாவை கணக்கிலெடுத்துப் பரிசீலித்து பதவி கொடுக்கப் பட்டிருக்கு. விஜயகுமாரோ தன்னையும் பரிசீலிக்க ணும்னு பெட்டிஷன் போட்டிருக்கிறார். இதுதான் லத்திகா தரப்பின் பதட்டத்துக்கு காரணம்னாலும், சட்டரீதியா லத்திகாவுக்கு சாதகமான ஒரு வாய்ப்பும் இப்ப உருவாகியிருக்குது. பாலசந்திரன் ரிடையர்டாயிட்டார். அதன்படி இப்ப பார்த்தா நட்ராஜ், விஜயகுமார், லத்திகா மூவரும்தான் முதல் 3 டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரிகள். அதில் ஒருவரான லத்திகாவை டி.ஜி.பியாக்கு வதில் சட்டச் சிக்கல் எதுவுமில் லைன்னு அவர் தரப்பில் சொல்லப்படுது.''

""ஐ.பி.எஸ். பற்றி சொன்னே... முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் போலீசின் விசாரணை வளையத்திற்குள் வருகிறா ராமே?''

""ஆமாங்க தலைவரே.. .. அமைச்சர் கே.என்.நேரு வின் தம்பி ராமஜெயத் தின் உயிருக்கு குறி வைத்தது பற்றி, போலீஸ் பிடியில் ரவுடி குணா சிக்கியதையடுத்து, திருச்சி உறையூர் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருக்கு. இந்தக் கேஸ் தொடர்பா, செந்தூரேஸ் வரன்ங்கிறவரை போலீசார் அழைத்து விசாரித் தாங்க. எனக்கெதுவும் தெரியாதுன்னு அவர் சொல்லி யிருக்கிறார். எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும்னு எழுதி வாங்கிட்டு அவரை போலீசார் அனுப்பிச்சிருக்காங்க. அந்த செந்தூரேஸ்வரனின் அப்பாவும் டாமின் நிறுவனத்தின் முன்னாள் சேர்மனுமான தியா னேஸ்வரன் ஐ.ஏ.எஸ்ஸை திங்கட்கிழமையன்னைக்கு ஸ்டேஷனில் ஆஜராகச் சொல்லி போலீஸ் உத்தர விட்டிருப்பதால், இந்த கேஸ் ரொம்பவே சூடுபிடிக்க ஆரம் பித்திருக்கு.''

""ரிடையர்டு ஐ.ஏ.எஸ் பற்றி சொன்னே.. நடப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியா மாற்றி உத்தர விட்டிருக்காரே புதிய தலைமைச் செயலாளர் மாலதி?''

""ஒரே நேரத்தில் இப்படி பல உயரதிகாரிகள் தடாலடியா மாற்றப்பட்டதை கோட்டை வட்டாரத்தில் பரபரப்பா பேசிக்கிறாங்க. அதைத்தான் நான் சொல்லப்போறேன்.. நெருப்பு பட்டதும் சட்டெனப் பற்றிக்கொள்ளும் அந்த பூஜைப் பொருளைத் தன் பெயரில் கொண்ட அதிகாரியை முக்கிய பொறுப்புக்கு வரலிடாம ஒரு முயற்சி நடந்திருக்கு. ஆனா, டான்சி வழக்கில் அவர் அரசு பக்கம் உறுதியா நின்ன வருங்கிறதால நல்ல பதவி கிடைச்சது. அதே நேரத்தில், 3 முக்கிய துறைகளுக்குப் பொறுப்பு வகித்த சிப்பிக்குள் இருக்கும் பொருளின் பெயர் கொண்ட அதிகாரி மீது புகார்கள் குவிந்ததால் அவரை மாற்றிவிட்டு, நேர்மையா செயல்படக்கூடிய மார்கண்டேய நடிகரின் பெயர் கொண்ட அதிகாரியை நியமிச்சிருக்காங்க.''

மிஸ்டுகால்!



திருச்சி பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு மறுநாள் வியாழன் மாலை ஆறு மணிக்கு காரிலேயே சென்னைக்கு வந்த டைந்தார் கலைஞர். அப்போது தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண் டானுக்கு உடல்நலம் சரியில்லாமல் சீரியஸாக அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வந்ததும்... உடனடியாக ஏழு மணிக்கு மருத்துவ மனைக்கு சென்று நலம் விசாரித்தார் கலைஞர்.



மழைக்காலத்தில் கட்டுமானப் பணிகளின் அளவு குறைவாகவே இருக்கும். அதனால் சிமெண்ட், செங்கல் போன்றவற்றின் விலை உயர்வும் கட்டுப்பட்டிருக்கும். ஆனால், தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் நிலையில், 160 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த ஒரு மூட்டை சிமெண்ட்டை திடீரென 260 ரூபாய் என ஒரேயடி யாக உயர்த்தியுள்ளன சிமெண்ட் நிறுவனங்கள்.


அயோத்தியில் சர்ச் சைக்குரிய பகுதி பாபர் மசூதி கமிட்டிக்கு சொந்தமா, ராமஜென்ம பூமி அமைப் பினருக்கு சொந்தமா என்கிற வழக்கு பைசாபாத் கோர்ட்டில் 1885லேயே போடப்பட் டுள்ளது. ஆனா, சட்டப் பூர்வமான வழக்காக 1950 முதல் அலகாபாத் நீதி மன்றத்தில் நடந்து வரு கிறது. 60 ஆண்டுகால வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் 24-ந் தேதி வெளி யிடப்படுவதால் இரு தரப்பி லும் பதற்றம் காணப்படுகிறது. தீர்ப்பு எப்படி அமைந் தாலும் மதக்கலவரம் ஏற் படலாம் என உளவுத்துறை எச்சரித்திருப்பதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய தலைமைச் செயலகத்திற்குள் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோரின் அலுவலகங்கள் வருகின்ற 15-ந் தேதி இடம் மாறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச் சில் நடக்கின்றன. 15-ந் தேதிக்குப் பிறகு முக்கிய ஆலோசனைகளை புதிய தலைமைச் செயலகத்திலேயே நடத்துவார் முதல்வர் என்கிறது கோட்டை வட்டாரம். அதே சமயம், பழைய தலைமைச் செயலகத்திற்கும் முதல்வர் வந்து போவார் என்கிறார்கள் அதிகாரிகள்.


இந்திய அளவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்ய முடி வெடுக்கப்பட்டு, முதல்கட்டமாக 12 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர் களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே நேரத்தில் இத்தனை பேர் மாற்றப்பட்டி ருப்பது, நீதித்துறையினரின் புருவத்தை உயர வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment