Monday, September 13, 2010

நடிகைகளின் கல்யாண கணக்குகள்...?



26 வயதான நடிகை த்ரிஷா, ""துரதிர்ஷ்டவசமாக இதுவரை நான் திருமணம் செய்யப்போகும் மனிதரைக் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான அவசியமும் அவசரமாக எனக்கு ஏற்படவில்லை. ஆனால் சரியான நேரத்தில் அவரைக் கண்டுபிடிப்பேன்'' என்று சிரிக்கிறார்.

ஹன்ஷிகா மொத்வானியிடம் கேட்டால், ""மூன்று பெரிய தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதோடு எனக்கு 19 வயதுதான் ஆகிறது. நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டியதும் அதிகமாக இருக்கிறது. அதனால் என்னுடைய சரியான பார்ட்னரைத் தேட இப்போதைக்கு நேரமில்லை'' என்கிறார்.


""நான் நடிப்புத் துறையில் எட்ட வேண்டிய உயரம் நிறைய இருக்கிறது. அதனால் எனக்கு கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டிலாக வேண்டிய அவசரம் ஒன்றுமில்லை. கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா நிச்சயமா என்னோட ஆள அவசர அவசரமா தேட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை'' என்கிறார் ஸ்ரேயா சரண்.

""தெலுங்கு, தமிழில் நாலு படத்துல பிஸியா நடிச்சிட்டிருக்கேன். இந்த நெருக்கடியில புது உறவுகளை ஏத்துக்கறதுக்கு நேரமே கிடையாது. சரியான நேரம் வரும்போது, கட்டிக்கப்போற அந்த சரியான மனிதரும் வந்து சேருவார்'' என்கிறார் காஜல் அகர்வால்!

No comments:

Post a Comment