Saturday, September 4, 2010

டம்மியாக்கப்பட்ட வெங்கடேசன்!




2009 எம்.பி. தேர்தலில் வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் என்று அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற கட்சித் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அதிகாரம் பொருந்தியவராக இருந்த டாக்டர் வெங்கடேஷ், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் பூத் கமிட்டிகளில் இளைஞர் பாசறை உறுப்பினர்களை பயன்படுத்துவது குறித்த கூட் டத்திற்கு கூட அழைக்கப்படாத நிலைக்கு முக்கியத்துவம் இழந்திருக்கிறார். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது தொடங்கிய வெங்க டேஷின் செல்வாக்கு சரிவு இப்போது மேலும் அதலபாதாளத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் பாசறை பொறுப்பாளர் கொடுத்த விளம்பரம் ஒன்றில் அந்த மாவட்டத் துக்கான பொறுப்பாளர் மைத்ரேயன் பெயரை வேண்டுமென்றே சிறிதாக போட்டு, வெங்க டேஷின் பெயரை பெரிதாக போட்டதில் ஆரம்பித் தது இந்த சரிவு. அந்த சமயத்தில் ஜெ. கூப்பிட்டு கண்டித்தபோது கூட வெங்கடேஷ் கலங்கவில்லை. சில நாட்களில் இதை சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் வெங்கடேஷின் திடீர் வளர்ச்சியால் வெறுப்பில் இருந்த டி.டி.வி. தினகரன், மகாதேவன், திவாகர் என சசிகலா குடும்ப பிரபலங்களும் அவருக்கு எதிராக தொடர்ந்து வேலை பார்த்ததின் விளைவு தான் இப்போதைய பெரும் சரிவு' என்கிறார் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள மாநில நிர்வாகி ஒருவர்.

கோவை, திருச்சி என்று ஜெ. நடத்திய பொதுக் கூட்டங்களின் போதும்கூட மேடையில் பின் வரிசை யில்தான் அமர்ந்திருந்தார். சசிகலா பிறந்தநாளின் போது கார்டனுக்கு சென்றபோது எப்படி யும் ஜெ.வை சந்தித்து பேசிவிடலாம் என்று நினைத்தார் வெங்கடேஷ். ஆனால் அப்போதும் ஜெ.வை தனியே சந்தித்து தன் தரப்பை விளக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. சென்ற வாரத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்களை ஜெ. சந்தித்தபோதும் வெங்கடேஷூக்கு அழைப்பில்லை. அந்த கூட்டத்தில், வரும் தேர் தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளில் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி வலியுறுத்தினார் ஜெ. ஆனால் இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மாநிலச் செயலாளருக்கு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் வெங்கடேஷின் அதிகாரத்தை அதிகாரப் பூர்வமாக குறைக்கும் விதமாக 3 இணைச் செயலாளர்கள் மற்றும் ஒரு துணைச் செய லாளர் பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வெங்கடேஷின் தொடர் சரிவு பற்றி சொன்ன போயஸ் தோட்ட பணியாளர்கள் மேலும் தொடர்ந்தார்கள்.

கடந்த திங்களன்று மாலை பொள் ளாச்சி ஜெயராமன், கோகுல இந்திரா, நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகளுடன் கலைராஜன் எம். எல்.ஏ., தூத்துக்குடி சரவணப்பெரு மாள், வக்கீல் ராஜலட்சுமி உள் ளிட்டவர்களையும் வரவழைத்திருந் தார். அவர்களோடு பேசியபோது, ""தேர்தலுக்கு முன்பாக இளைஞர் பாசறையை மேலும் பலமாக்க வேண் டும். பூத் கமிட்டிகளில் அவர்களை அதிகமாக போட்டு தேர்தலுக்கு தயார்படுத்துங்கள். மாநிலம் முழுவதும் இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட் டங்களை நடத்துங்கள்'' என்றெல்லாம் பேசி யிருக்கிறார். மாநில நிர்வாகியாக இருக்கும் டாக்டர் வெங்க டேஷ் பற்றி எது வுமே குறிப்பிட வில்லையாம். பொது வாக இணை, துணை பொறுப்பாளர்களை நியமிக்கும்போது... மாநில நிர்வாகியுடன் கலந்து பேசுங்கள் என்று சொல்லும் ஜெ. இந்த முறை அப்படி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இணைச்செயலாளர்களில் ஒருவரான தி.நகர் எம்.எல்.ஏ. கலைராஜன், டி.டி.வி. தினகரனுடைய தீவிரமான ஆதரவாளர். வெங்கடேஷ் டீமிற்கு எதிராக வெளிப்படை யாகவே மோதி வந்தவர். அப்படிப்பட்டவருக்கு இளைஞர் பாசறை கொடுக்கப்பட்டி ருக்கிறது.

இளைஞர் பாசறை கூட் டங்களை ஒருங்கிணைக்க கோகுல இந்திராவுக்கும் உத்தரவிட்டி ருக்கிறார் ஜெ. இவரும் டி.டி.வி.யின் தீவிர ஆதர வாளர்தான். இன்னொரு இணைச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் வக்கீல் ராஜ லட்சுமிக்கு சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும் சென்னையிலேயே செட்டில் ஆனவர். சாதி அடிப்படையில் மைத்ரேயன் எம்.பி.யோடு இணைந்து செயல்படக் கூடியவர்.

இளம்பெண்கள் பாசறையை தனியே பிரித்து அதற்கு மாநிலச் செயலாளராக வக்கீல் ராஜலட்சுமியை நியமிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தூத்துக்குடி சரவணப்பெருமாள் குறுகிய காலத்தில் ஜெ.வின் நேரடி நம்பிக்கையைப் பெற்ற வர், திறமையானவர் என்கிற எண்ணமும் ஜெ.வுக்கு இருக்கிறது. அதேபோல ஜெ.வின் பார்வையில் பட்டு ஒரேநாளில் வெளிச்சத்துக்கு வந்தவர் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவை விஷ்ணு பிரபு. கோவை பொதுக்கூட்டத்தின்போது அவரின் சுறுசுறுப்பை பார்த்து அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். இப்போது மாநில பொறுப்பை கொடுத்துவிட்டார். இந்த டீம்தான் இனி இளைஞர் பாசறையை கவனிக்கும். இதை மீறி டாக்டர் வெஙக்டேஷ் தனியாக எதுவும் செய்துவிட முடியாது’என்று முடித்தார் கள்.

இந்த நிலையில் வியாழன் அன்று சென்னையில் நடந்த இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகளும், ஆலோசகர்களாக இருக்கும் கோகுல இந்திரா, நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்டனர். மாநிலச் செய லாளரான டாக்டர் வெங்கடேஷூக்கு தெரிவிக்கப்படாமலேயே கூட்டம் நடந்திருக்கிறது.

சமீபத்திய இந்த அதிரடிகள் குறித்து டாக்டர் வெங்கடேஷ் தரப்பில் பேசினோம். ""அவர் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் அவரை எதிரியாக நினைப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து வேலை செய் கிறார்கள்.

ஆனாலும் அவர் வழக்கம்போல இளைஞர் பாசறையை வளர்ப்பதற்கான பணிகளில் இருக்கிறார். கடந்த வாரம்கூட மதுரை பகுதிகளில் கட்சிக்காரர்களின் திருமண நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டார்''’என்றார்கள். ஆனால் டாக்ட ருக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு சில நண்பர்களோ, ""இத்தனை அவமானங்களை சந்திக்க வேண்டுமா என்கிற ஆதங்கம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்பது பற்றி அடிக்கடி பேச ஆரம்பித்துவிட்டார்''’என்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் சசிகலா குடும்ப உறுப்பினர்களை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார் ஜெ. அதுபோலதான் இப்போது டாக்டரை ஒதுக்கி வைத்திருக் கிறார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் சேர்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் டாக்டருக்கு நெருக்கமான எம்.பி. ஒருவர்.

Friday, September 3, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம்

Rajinikanth daughter soundarya wedding
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. அவருக்கும் பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதியின் மகன் அஸ்வினுக்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

மணமகள் சவுந்தர்யாவும், மணமகன் அஸ்வினும் மாலை 6-30 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வந்தார்கள். சவுந்தர்யா பச்சை நிறத்தில் பட்டுச்சேலை அணிந்திருந்தார். அஸ்வின், சந்தன நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இருவருக்கும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த பத்திரிகையை புரோகிதர்கள் படித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்த்-லதா ரஜினிகாந்த் தம்பதிகளும், ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதிகளும் நிச்சயதார்த்தத்துக்கான தட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடனும், வைஜெயந்தி மாலா, மோகன்பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

இன்று காலை திருமணம்:

இன்று காலை ஏழரை மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் செளந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார்.

வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது. மைசூர் தலைப்பாகை போன்ற தொப்பியை ரஜினி மற்றும் ராம்குமார் குடும்பத்தினர் அணிந்திருந்தனர். ரஜினியின் மூத்த மருமகனான நடிகர் தனுஷுக்கும் தலைப்பாகை அணிவித்திருந்தனர்.

செளந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும், மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார்.

பி்ன்னர் முகூர்த்த நேரம் நெருங்கியதும் தனது மடியில் செளந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மணமகள் கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின. திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி, லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியை சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் பாலசந்தர், தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற செய்தார்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்தினம், நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகை மீனா தனது கணவருடன் ஜோடியாக வந்திருந்தார்.

Thursday, September 2, 2010

அமெரிக்கப் பெண்களின் 'சைஸ்' பிரச்சனை! பெரிதாகி வரும் அமெரிக்கப் பெண்களின் மார்புகள்



அமெரிக்கப் பெண்களின் மார்புகள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தங்களது அளவுக்கேற்ற பிராவை வாங்கிச் செல்லும் பெண்கள், சீக்கிரமே சைஸ் மாறி விடுவதால் பிராக்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.

அமெரிக்காவின் முன்னணி பிரா தயாரிப்பாளரான வகோல் அமெரிக்கா நிறுவனம், கடந்த ஆண்டு 36டி என்ற பிரா வகையை அறிமுகப்படுத்தியது. அது அமெரிக்கப் பெண்களிடையே சீக்கிரமே பிரபலமானது. ஆனால் இந்த ஆண்டு அதை தூக்கி விட்டு 36 டிடி என்ற புதிய பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். காரணம், ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த 36டி பிரா, பின்னர் சைஸ் சரியாக இல்லை என்று பெருமளவில் புகார்கள் வந்ததால்தான் இப்போது 36டிடி என்ற அடுத்த பிராவை களம் இறக்கியுள்ளதாம்.

அமெரிக்கப் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மார்பக வளர்ச்சி இயல்பை விட பெரிதாக இருப்பதே இந்த பிரா குழப்பத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் பொருளாதாரப் பிரச்சினை. இப்போது இந்த 'பிரா'ப்ளம் வேறயா...!

""நித்யானந்தாவுக்கு சவால்!''-லெனின் தர்மானந்தா



கண்ணில்பட்டதையெல்லாம் சுருட்டிய திருடன் யாரும் தன்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக திருடன்...திருடன்.. என்று கத்திக்கொண்டே ஓடி, மக்களை திசைதிருப்பினான் என்று கிராமப்புறத்தில் சொல்வ துண்டு. நித்யானந்தா சாமியார் விவகாரத்தில் இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நித்தியும் ரஞ்சிதாவும் நெருக்கமாக உள்ள காட்சிகள் அடங்கிய சி.டி போலி யானது என்றும், அவதார் படம் போல கிராஃபிக்ஸ் முறை யில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த லீலைகள் வெளிவரக் காரணமான லெனின் (எ) தர்மானந்தாவை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிடதி ஆசிரமத்தில் மிச்சமிருக்கும் சிலரைத் தூண்டி விட்டிருக்கிறார் நித்தி. இவர்கள் பெங்களூரு போலீசாரிடம் புகார் கொடுத்திருப்பதுடன், திடீர் மறியல் செய்தும் புது பரபரப்பை கிளப்பப் பார்த்தனர்.

நித்யானந்தாவின் உண்மை சொரூபத்தை வெளிக் கொண்டு வந்ததில் முக்கியமானவரான லெனின் தர்மானந்தா வை சந்தித்து அவர் மீதான புகார்களுக்கு என்ன பதில் என்று கேட்டோம். பிசிறில்லாத வார்த்தைகளுடன் தங்குதடை யின்றி கொட்டின பதில்கள்.

நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் நெருங்கியிருக்கும் வீடியோ காட்சிகள் போலியானவை என்றும் இது வெளிவரக் காரண மான உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தரப்பட்டு, போராட்டங்கள் நடந்துள்ளதே?

லெனின் தர்மானந்தா : நித்தியானந்தருடன் 80ஆயிரம் கிலோமீட்டர் ஒன்றாக சுற்றுப் பயணம் செய்தவன் நான். அவருடைய இளைஞர் அமைப்பிற்கும் ஜீவன் முக்தி புத்தக வெளியீட்டுத் திட்டத்திற்குமான 130 மையங்களுக்கு நான்தான் ஒருங் கிணைப்பாளன். தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிமாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் உள்ள சீடர்களுக்கும் நான் நித்யானந்தருடன் தொடர்ந்து சுற்றியது தெரியும். அதனால் நித்தியானந்தரைப் பற்றிய எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும்.

நான் வெளியிட்டிருப்பது ஒரிஜினல் சி.டிதான் என்பது முன்னாள் சீடர்கள் எல் லோருக்கும் தெரிந்திருக்கிறது.அவர்களில் பலரும் என்னைத் தொடர்புகொண்டு, "நித்யானந்தரை கடவுளின் அவதாரமாக நாங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருந் தோம். சாதாரண மனிதர்கள்கூட ஒரு தப்பு செய்து சிக்கிக்கொண்டால், தான் செய்தது தப்பு என்பதை ஒப்புக்கொள்வது தமிழ் நாட்டுக்கலாச்சாரம். ஆனால், கடவுளின் அவதாரமாக நினைத்த நித்தியானந்தர் தப்பு மேல் தப்பு செய்துவிட்டு, இதெல்லாம் போலி சி.டி, அவதார் படம் போல கிராஃபிக்ஸ் வேலை என்று எவ்வளவு பெரிய பொய்யை ரொம்ப சர்வசாதா ரணமாகச் சொல்கிறார்! இதையெல்லாம் பார்க்கும்போது இவர் பின்னாலயா நாம் போனோம்னு எங்களுக்கு வெட்கமா இருக்கு'ன்னு போனில் பேசுறாங்க.

சரிங்க சார்.. இந்த சி.டி போலி என நித்யானந்தர் நிரூபிக்கட்டும். அவர் எங்கே கூப்பிடுகிறாரோ அங்கே வந்து நிற்கிறேன். எத்தனை ஆயிரம் பேரை வேண்டுமானா லும் அவர் கூட்டிக்கிட்டு வந்து என்னைக் கல்லால் அடித்துக் கொல்லட்டும் நான் தயார். அதே நேரத்தில், இந்த சி.டி. ஒரி ஜினல் என்பது கோர்ட்டில் நிரூபண மானால், எந்த தண்ட னையாக இருந்தாலும் நித்தியானந்தா ஏற்கத் தயாரா? சவாலுக்கு அவர் ரெடியா?





எந்த சி.டியால் நித்யானந்தா அம்பலப்பட்டாரோ அதை அவர் தரப்பு போலி என்கிறது. நீங்கள் எந்த அடிப்படையில் அந்த சி.டி ஒரிஜினல் என்கிறீர்கள்?

லெனின் தர்மானந்தா : அந்தக் காட்சிகளை ரகசியமாக எடுத்தவன் நான்தான் என்பதால் அது ஒரிஜினல் என்பது எனக்குத் தெரியும். ஆன்மீகத்தின் பெயரில் பல பெண்களை கற்பிழக்கச் செய்த நபரை உலகுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து அந்த முயற்சியில் இறங்கினேன். ஏர் ப்யூரிஃபயர் கேமராவை அவரது அறையில் செட் பண்ணினேன். அது ஆள்நடமாட்டம் உள்ள நேரத்தில் மட்டும்தான் இயங்கும். எப்போதெல்லாம் நித்தியானந்தர் ரஞ்சிதாவுடன் அந்த அறையில் இருந்தாரோ அப்போது அது படம் பிடித்தது.நித்தியானந்தர் கிரிமினல்தனமான விஷயங்களில் பயங்கர புத்திசாலி. அந்த சி.டியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒரு கட்டத்தில், கேமரா செட் பண்ணியிருந்த இடத்தைக் காட்டி ரஞ்சிதாவிடம் ஏதோ சொல்வார். அவருக்கு லேசாக டவுட் வந்ததுதான் இதற்கு காரணம். ரஞ்சிதாவோ அந்த ஏர் ப்யூரிஃபயரை திருப்பி வைத்துவிடுவார். அன்றைய வீடியோவில் அதற்கு மேல் காட்சிகள் இருக்காது.

பெங்களூரில் இந்த வழக்குகளை விசாரித்துவரும் சி.ஐ.டி. போலீசார் இது முழுக்க முழுக்க ஒரிஜினல் என்பதை உறுதி செய்துவிட்டார்கள். நித்தியானந்தரும் ரஞ்சிதாவும் படுக்கையில் இருப்பது உண்மைதான் என்றும் ரிப்போர்ட் அவர்களிடம் இருக் கிறது. அவர்கள் இதன் ஒரிஜினல்தன்மையை அறிவதற்காக டெல்லியில் உள்ள மத்திய அரசின் தடயஅறிவியல் துறையினரிடம் ஒப்படைத்து, ஆய்வு செய்து.. ஒரிஜினல்தான் என சர்டிபிகேட் வாங்கி கோர்ட்டில் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?

லெனின் என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவரான நீங்கள், வாட்டிகனில் இருந்து கிறிஸ்தவ தலைமையின் துணையுடன் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் இதற்காக பல ஆயிரம் டாலர்கள் உங்க ளுக்குத் தரப்பட்டதாகவும் நித்யா னந்தர் தரப்பு சொல்கிறதே?

லெனின் தர்மானந்தா : லெனின் என்று பெயர் இருந்தால் கிறிஸ்தவரா? என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். சி.பி.ஐ. இயக்கத்தில் இருக்கிறார். தோழர் தா.பாண்டியனுக்கு மிகவும் நெருக்கமானவர். சமுதாய ரீதியாகப் பார்த்தால் நான் வன்னி யர் ஜாதியைச் சேர்ந்த இந்து. நித்தியானந்தர் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் அதை மறைப்பதற்காக எதையெதையோ சொல்லிப் பார்க்கிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் என்பது நிரூபணமாகும். அவர் தோற்றுத் தான் போவார்.





இந்து மதத்திற்கு எதி ராகவும் அதன் பெயரைக் கெடுப்பதற்காகவும்தான் நீங்கள் இப்படி செயல்பட்டிருப்பதாக வும் குற்றம்சாட்டுகிறார்களே?

லெனின் தர்மானந்தா : நான் ஒரு இந்து. இந்த மதம் இப்படிப்பட்ட அயோக்கியர் களிடம் சிக்கினால் இழிவுதான் மிஞ்சும் என்பதால்தான் இந்த காரியத்தில் இறங்கினேன். காவி உடை போட்டுக்கொண்டு , இந்து மதத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடும் அயோக்கியத்தனம் அம்பலமானால்தான் இந்து மதத்தில் உள்ள கசடுகள் நீங்கி,அதன் புனிதம் காக்கப்படும் என்று இதைச் செய்தேன். லாப நோக்கமில்லாத நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லித்தான் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் தன்னுடைய ஆசிரமத்திற்கு அங்கீகாரம் வாங்கியிருக்கிறார் நித்தியானந்தர். ஆனால் அவ ருடைய பெயரிலேயே அமெரிக் காவில் 5 கம்பெனிகளும், மலேசியாவில் 1 கம்பெனியும் இருக்கிறது. லாப நோக்கமில்லை என்றால் தன் பெயரில் எதற்கு சொத்துகளைப் பதிவு செய்ய வேண்டும்? பெண்ணாசையும் பொன்னாசையும் கொண்டு அலையும் நித்யானந்தர் எப்படி இந்து மதத்தின் பாதுகாவலராக இருப்பார்? அவருடைய செயல்கள்தான் இந்து மதத்திற்கு எதிராகவும் அதன் பெயரைக் கெடுக்கும் விதத்திலும் உள்ளன.

நித்யானந்தரின் செயல்பாடுகளை அடுக்கடுக்காகச் சொல்கிறீர்கள். அதற்கான ஆவணங்களையும் முன் வைக்கிறீர்கள். ஆனால், நித்யானந்தர் பெயிலில் வெளிவந்து பிடதி ஆசிரமத்தில் மீண்டும் வழக்கமான வேலைகளைத் தொடங்கிவிட்டார். யாகங்கள் நடத்துகிறார். பழைய இமேஜ் கிடைப்பதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார். இதனால், உங்கள் முயற்சிகள் தோற்றுவிட்டன என நினைக்கிறீர்களா?

லெனின் தர்மானந்தா : ஒன்றை நீங்க புரிஞ்சுக்கணும். ரஞ்சிதாவுடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகளை எடுத்துவிட்டோம் என்று தெரிந்ததும் நித்தியானந்தர் என்னைத் தொடர்பு கொண்டு, அந்த சி.டியை ரிலீஸ் பண்ணிடாதே.. நீ ஆசிரமத்துக்கு வா. நீ என்ன கேட்டாலும் தர்றேன்னு பேசினார். அந்தப் பேச்சும் என்கிட்டே ஆதாரப் பூர்வமா இருக்கு. அதையும் நான் போலீஸ்கிட்டே ஒப்படைச்சிருக்கேன். ஆசிரமத்தில் சேரும் பெண் களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டது தொடர் பாகவும் பல ஆவணங்களை தந்துள்ளேன். ஒரு தனி மனிதனாக என்னுடைய வேலையும் போராட்டமும் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இனிமேல் சட்டமும் நீதியும் சரியாக செயல்பட்டு, ஆன்மீகப் போர்வையில் மோசடிகள் பல செய்த நித்யானந்தருக்கு கடுமையான தண்டனை வாங்கித்தரும் என உறுதியாக நம்புகிறேன். தற்காலிக வெற்றிகள் ஒரு போதும் நிரந்தரமாகாது என்பதை நித்தியானந்தருக்கு காலம் எடுத்துச் சொல்லும்.

நீங்கள் முன்வைக்கும் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளால், நித்யானந்தர் தரப்பிலிருந்து தொடர் அச்சுறுத்தல்களும் மற்ற வகையான மிரட்டல்களும் வருவதாகச் சொல்லப் படுகிறதே?

லெனின் தர்மானந்தா : உண்மைதான். நித்யானந்தர் தொடர்பான முக்கிய வழக்குகளின் புகார்தாரர் நான்தான். அந்த வழக்குகளின் முக்கிய சாட்சியான என்னை, பெயிலில் வெளிவந்திருக்கும் நித்யானந்தரும் அவரது ஆட்களும் மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. எனக்கோ, என்னுடன் இருப்பவர்களுக்கோ ஏதாவது நடந் தால் அதற்கு முழுப் பொறுப்பும் நித்யானந்தா தான்.

தடுத்த ஈழ ஆதரவுத் தலைவர்கள்! ஆதாரங்களுடன் போராளிகள்!


"விடுதலைப் போராட்டத்தை அழித்து முடிப்பதில் முழு மூச்சோடு நின்ற காங்கிரசு அரசைக் காப்பாற்ற உங்கள் எழுத்து உதவாதிருக்கட்டும்' என கடந்த இதழ் கட்டுரை படித்தபின் வாசகர் ஒருவர் மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கவலைப்படாதீர்கள் தோழர். தமிழருக்கெனவும் உலக வரைபடத்தில் ஓர் நாடு அமைகிற காலம் கனிந்து வந்த தருணத்தை குரூரமாகக் கலைத்ததில் இந்திய அரசமைப்பின் பங்களிப்பினை, யுத்தக் குற் றங்கள் பல புரிந்த ராஜபக்சே அரசினை பாதுகாப்ப தில் இன்றுவரை அது ஆற்றி வரும் ஒழுக்கமிலா வெளியுறவு வேலைகளை வரலாறு பதிவு செய்து விட்டது. இவற்றிற்கான பதிலை இந்திய அரசமைப் பிடமிருந்து விழிப்புணர்வடைந்து விட்ட தமிழின் பிள்ளைகள் என்றேனும் ஒருநாள் பெறாமல் விடமாட்டார்கள். எனவே இந்திய அரசமைப்பினை குற்றப் பழியிலிருந்து பாதுகாக்கிற வேலையை நாம் செய்ய முயல்கிறோம் என்று எந்த உணர்வாளரும் ஐயமுறத் தேவையில்லை.

இந்தப் பதிவின் நோக்கம் எளிதானது, நேர்முக மானது. கருணம்மானின் துரோகத்தை வரலாறு பதிவு செய்துவிட்டது. அவர் ஒரு காலத்தில் தேசிய தலைவரின் நெஞ்சம் நிறைந்த வீரனாய் இருந்தபோதும் கூட. கே.பி.யின் சந்தர்ப்பவாதத் தை வரலாறு பதிவு செய்து விட்டது. அவர் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுத்த பிதாமகர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட. அதுபோலத்தான் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்களும். ஈழ விடுதலைக் களத்தில் நின்று பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்திருந்த போதும் -போராட்டத்தை எப்பாடு பட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா -சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து போ ராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு அழிக்கப் படக் காரணமாய் இருந்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. 2009 ஜனவரி இறுதியில் இந்தியா மேற்கொண்ட முதல் சண்டை நிறுத்த முயற்சி யில் நேர்மை இருந்ததா? அப்படியே அப்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் அது நீண்டு நிலைத்திருக்குமா? -போன்ற கேள்விகள் மிகச் சரியானவை.

எந்த நோக்குடன் சண்டை நிறுத்த முயற்சியை இந்திய ஆட்சி அமைப்பு மேற்கொண்டது என்பதை நாம் எவருமே அறியப் போவதில்லை. விரைவில் வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத் தொகுதிகளை வெல்ல ஓர் சண்டை நிறுத்தம் உதவி யாக இருக்கும் என காங்கிரஸ் அரசு கருதியிருக்கலாம்... மேற்குலக நாடுகள் முயன்று சண்டை நிறுத்தம் கொணர் வதைவிட தானே அதைச் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்... விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக பலமழிக் கப்படுவதை விரும்பாமல் கூட இருந் திருக்கலாம்... இவற்றையெல்லாம் நாம் யூகிக்க மட்டும்தான் முடியும்.

ஆனால் ஒன்று. அன்று சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் பொதுத் தேர்தல் முடியும் வரையாவது அது நீடித்திருக்கும். சற்றேறக் குறைய நூறு நாட்கள் சண்டை நிறுத்த இடை வெளி கிடைத்திருக்கும். அது விடு தலைப் புலிகள் இயக்கத்தை பொறுத்தவரையும், போராட்டத்தை பொறுத்தவரையும் மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கும். புலிகள் தங்களை மறு ஒருங்கமைவு செய்திட (தங்ஞ்ழ்ர்ன்ல்), காயம்பட்டவர்களை காப் பாற்ற, உணவுப் பொருட்கள் சேக ரிக்க, யுக்திகளை மாற்றியமைக்க, ஏன் நிஜமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை கள் தொடங்க அந்த இடைவெளி வழி சமைத்திருக்க முடியும். மிக முக் கியமாக கட்டளைக் கட்டமைப்பை ஈர்ம்ம்ஹய்க் ள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்ஐ காப்பாற்றி யிருக்க முடியும்.

அப்போது நடந்ததையும் பின்னர் நான் அறிய வந்தவற்றையும் வர லாற்றிற்காய் மீண்டும் ஒருமுறை இங்கு பதிவு செய்கிறேன்:





2009 ஜனவரி இறுதி, பிப்ரவரி தொடக்க நாட்கள். தமிழகம் கொந் தளித்துக் கிடந்த காலம் அது. தமிழக அரசு தனது வழிகளில் மத்திய அரசு மீது தொடர் அழுத்தம் கொணர்ந்து கொண்டிருந்த தருணம் அது. களத் தில் தலைவரது நம்பிக்கைக்குரிய ஒருவரோடு, தலைவரது சார்பில் பேசும் தகுதியுடைத்த ஒருவரோடான தொடர்பு கோரப்பட்டது. ஒரே ஒரு நிபந்தனையடிப் படையில் உடனடி சண்டைநிறுத்தம் கொணர இந்திய அரசு தயாராயிருப்பதாய் அவர்களுக்குச் சொல்லும் படியும் கோரப்பட்டது. "ஒய்ற்ங்ய்ற்ண்ர்ய் ற்ர் கஹஹ் உர்ஜ்ய் ஆழ்ம்ள்' - "ஆயுதங்களை ஒப்படைப்பதற் கான விருப்பம்' மட்டும்தான் அப் போது விதிக்கப்பட்ட நிபந்தனை.

நான் எனது லண்டன் நண்பர் வழியாக இதனைத் தெரிவிக்க லண் டன் விடுதலைப் புலிகள் இயக்க சார்பில் "ரூட் ரவி' தொடர்புக்கு வந்தார். விபரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட அவர் களத்திற் குத் தகவல் சொல்லி விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவு பொறுப்பாளர் நடேசன் தொடர்புக்கு வந்தார். யுத்தம் முழு உக்கிரமாய் நடந்த அக்காலத்திலும் கூட அவரது குரலில் சாந்தமும் உறுதியும் வெளிப்பட்டது. நான் அவருக்கு இப்படித்தான் சொன்னேன். ""அண்ணை... நீங்கள் சண்டை பிடித்து தாக்குப் பிடிக்க முடியுமென்று நினைத்தால் இந்த வாய்ப்பை நிராகரியுங்கள். ஆனால் வேறு வழியில்லை, ஓர் சண்டை நிறுத்தம் உதவக்கூடுமென நினைத்தால் இந்த வாய்ப்பினை பிடித்துக் கொள்ளுங்கள்'' நிபந்தனையை தெளிவாகக் கேட்டுக்கொண்டார்.

தலைவரிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்புகொள்வ தாய் கூறினார். அவ்வாறே தலைவரிடம் பேசிவிட்டுத் தொடர்புகொண்ட அவர், (ஒய்ற்ங்ய்ற்ண்ர்ய் பர் ப்ஹஹ் உர்ஜ்ய் ஆழ்ம்ள்) -ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பம் தொடர்பான நிபந்தனையின் உண்மையான விளைவு என்ன? என்பது பற்றி தலைவர் அறிய விரும்புவதாகக் கூறினார்.

சண்டை நிறுத்த முயற்சியை மேற்கொண்டிருந்தவர் களிடம் இதனை நான் தெரிவித்தபோது, ""ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்க வேண்டும். அதற்கான மாதிரி வரைவினை (உழ்ஹச்ற்) அவர்களே முதலில் பரிந்துரைக்கட்டும்'' என்றார்கள். நடேசன் அவர்களிடம் இதனைத் தெரிவித்தபோது ""நீங்களே ஒரு மாதிரி வரைவு தயாரித்து அவர்களுக்கு அது சம்மதமா என கேட்டுச் சொல்லுங்களேன்'' என்றார். அதன்படி அந்த வரைவு இவ்வாறு தயாரிக்கப்பட்டது. ""இந்திய அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, இந்திய அரசின் முயற்சி யாலோ உலக நாடுகளின் முயற்சியாலோ மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொ டங்கி தமிழ் மக்களுக்கு திருப்தியானதோர் அரசியற்தீர்வு ஏற்படும்பட்சத் தில் ஆயுதங்களை ஒப்படைப்ப தற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராக இருக்கிறது.'' ஆயுதங்களை ஒப்படைப்பதற்கும் தமிழ் மக்களது அரசியற் சிக்கலுக்கு திருப்தியான ஓர் தீர்வு ஏற்படுவதற்கும் இடை யே ஓர் முடிச்சினை ஏற்படுத்துதன் மூலம், எதிர்காலத் தில் ஒப்பந்தத்திலிருந்து புலிகள் இயக்கம் விலகவேண் டிய நிர்பந்தம் எழுந்தாலும் அதற்கான நியாயம் கட்டமைவு செய்யப்பட்டது. நடேசன் அண்ணைக்கு இந்த வரைவு பிடித்திருந்தது. ""இதற்கு புதுடில்லிக்காரர்கள் ஒத்துக் கொள்வார்களா?'' என ஐயத்துடன் கேட்டார். ஆனால் நானே ஆச்சரியப்படும் வண்ணம் அந்த வரைவினை புது டில்லிக்காரர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அத் தோடு வெறும் தபால்காரனாகிய எனது வேலை முடிந்தது. நடேசன் அண்ணனே புதுடில்லி உயர் அதிகாரி ஒருவ ரோடு நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினார்.

ஆனால் தொடங்கிய வேகத்திலேயே பேச்சுவார்த் தைகள் முடங்கின. இரண்டு சுற்று உரையாடல்களுக்குப் பின் நடேசன் மீண்டும் தொடர்புக்கு வரவில்லை என புதுடில்லிக்காரர்கள் சொன்னார்கள். ஏன் என்பதை அறிய விரும்பினார்கள். எதுவானாலும் பேசலாம் என் றார்கள். சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதில் அன்றைய உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்கள். நடேசன் அண்ணையை மீண்டும் நான் தொடர்புகொண்ட போது, ""இஞ்செ வேறெ மாதிரி யோசிக்கினும்'' என்று மட்டும் சொன்னார்.

ஏன் சண்டை நிறுத்தத்திற்கான அந்த வரலாற்று வாய்ப்பு தவறவிடப்பட்டது என்பதற்கான காரணத்தை நடேசன் அவர்கள் சொல்லவில்லைதான். ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுற்றபின் களத்தில் நின்ற பலரோ டும் விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப் போதுதான் தமிழகத்தில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் எவ் வளவு அரசியற் சுயநலத்துடன் நடந்துகொண்டிருக் கிறார்கள் -அந்த சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாதென எத்தகு அழுத் தங்களை கொணர்ந்திருக்கிறார்கள் என்ப தெல்லாம் தெரியக்கூடியதாயிருந்தது. காங் கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. தமிழகத்தில் எல்லா தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப்போகிறது... சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டால் கொந்தளித் துக் கிடக்கும் தமிழக மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.... என்றெல்லாம் பேசியிருக் கிறார்கள். இந்திய அரசை நம்பாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இவற்றினாலெல்லாம்தான் விடுதலைப் புலிகள் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்களா இல்லை வேறு காரணங்கள் இருந்தனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பின்னோக்கிப் பார்க்கையில் -அந்த வாய்ப்பு பயன்படுத்தப்பட்டிருந்தால் புலிகளின் கட்டளை கட்டமைப்பு (ஈர்ம்ம்ஹய்க் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) காப்பாற்றப்பட்டிருக்கும். மீண்டும் விடுதலைப் போராட்டம் கம்பீரத்தோடு தொடர்ந்திருக்கும். சூன்யப் புள்ளியை தொட்டிருக்கமாட்டோம்.

கடைசியாக ஒரு வார்த்தை: களத் தோடு கடைசி நாட்களில் ஆதரவுத் தலைவர்கள் இங்கிருந்து பேசிய ஆதாரங்களை வைத்திருக்கிற போராளிகள் இன்னும் உயி ரோடுதான் இருக்கிறார்கள்.

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?



""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்.

சிறுமிகளுக்கு தயாரான தாலி!


""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக.

கவனம்... அக்கறை! முதல்வர் நடத்திய அதிகாரிகள் மாநாடு!



மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் இரண்டுநாள் மாநாட்டை 27, 28 தேதிகளில் கோட்டையில் நடத்தினார் கலைஞர்.

முதல் நாள் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளோடு இணைந்த சில முக்கிய துறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப் பாக பொதுப்பணி, குடிநீர் வடி கால் வாரியம், சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட துறைகளும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. "ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சாயப் பட்டறைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நிறைய புகார்கள் வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும்' என்று கேட்டுக் கொண்டார் சுற்றுச் சூழல் துறை செக்ரட்டரி தேவேந்திரநாத் சாரங்கி. பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், "ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் சில மாவட்டங்களில் சுணக்கமாக இருக்கிறது. மழைக்காலம் துவங்கி விட்டதால் மழைநீரை சேமிப்பதிலும், வெள்ளத் தடுப்புகளிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று தனது ஆலோசனையாக வெளிப்படுத்திவிட்டு, "இம்மாதிரியான பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார்' என்று பணிகள் நடந்துள்ள மாவட்டத்தை பாராட்டவும் செய்தார்.

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் தங்களுக்கு கொடுக்கப் பட்ட 3 நிமிடத்தில், அரசு நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் விதம் குறித்து விவரித்தனர். திருச்சி மாவட்ட கலெக் டர் சௌண்டையா, கலர் டி.வி. வழங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய விபரம் பலத்த விவாதங்களுக்கு அடிபோட்டது. ""திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு நலத் திட்டங்கள், அரசு உதவிகள் உள்ளிட்டவைகளில் எதுவும் பெண்டிங்கில் இல்லை. வண்ணத் தொலைக்காட்சி பெற்ற 6900 குடும்பங்கள், அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்'' என்று சொன்ன போது, முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் உன்னிப் பாக கவனித்தனர். ""எதனால் அந்த பிரச்சினை?'' என்று தலை மைச் செயலாளர் ஸ்ரீபதி கேள்வி கேட்க, ""அந்த 6900 குடும்பத் தினரின் வீடுகளுக்கும் மின்சப்ளை கிடையாது. காரணம், அவர்கள் பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதுதான். பொதுப்பணித்துறையும், வருவாய்த்துறையும் என்.ஓ.சி. தராததால் அந்த வீடுகளுக்கு மின்சப்ளை கொடுக்க மறுக்கிறது மின்சார வாரியம்!'' என்று சுட்டிக் காட்டினார் சௌண்டையா.

உடனே ஸ்ரீபதி, மின்வாரிய சேர்மன் சி.பி.சிங் கைப் பார்த்து கேட்க, அவரோ ""சம்மந்தப்பட்ட துறைகள் என்.ஓ.சி. தந்தால்தான் மின்சப்ளை தர வேண்டும்ங்கிறது விதி'' என்று சொல்ல, வருவாய்த்துறை, பொ.ப.துறை செக்ரட்டரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அவர்களோ, ""அவர்களுக்கு பட்டா இல்லை. அதனால்தான்'' என்றனர். உடனே முதல்வர் குறுக்கிட்டு ""அவர்களுக்கு மின்சப்ளை கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவாதித்து ஒரு முடிவை எடுங்கள்'' என்று அட்வைஸ் செய்தார்.





மக்களிடமிருந்து எந்த மாதிரியான கோரிக் கைகள் வருகிறது என்பதை சில கலெக்டர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், ""சேலம் மாவட் டத்தில் உள்ள கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஊரை பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக் கையை வைத்துள்ளனர்'' என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ""அப்படியெல்லாம் கோரிக்கை வந்திருக்காது. சேலம் மாவட்டத்தை விட பெரம்பலூர் மாவட்டத்தில் என்ன வளர்ச்சி இருக்கிறது? எல்லா வசதிகளும் கெங்கவல்லி மக்களுக்கு சேலம் மாவட்டத்தில்தான் கிடைக்கிறது'' என்று கோபமாக கேட்டார்.

காவல்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் இணைந்து கலந்து கொண்ட 2ம் நாள் கூட்டுக் கூட் டத்தில், இரண்டு, 3 வருடங்களாக பெண்டிங்கில் இருக்கும் பல வழக்குகளின் பட்டியலை தயாரித்து வைத்திருந்தார் முதல்வர். குறிப்பாக, சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ள வழக்குகள் பற்றித்தான் பட்டியலில் நிறைய இருந்தது. இதுபற்றி பேசத் துவங்கிய ஸ்ரீபதி சென்னை சென்ட்ரலில் ரயிலை கடத்திய வழக்கு, கோவை லஷ்மி நகைக் கடையில் கொள் ளையடிக்கப்பட்ட வழக்கு, திருச்சியில் துரைராஜ் என்பவர் காரில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் ஆகியவைகளின் நிலை என்ன? என்று கேள்வி கேட் டார். அதேபோல, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கொள்ளை வழக்கு என்னாயிற்று? என்று சென்னை கமிஷனரிடம் ஸ்ரீபதி கேட்க, இவ ரும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு குறித்து விவா தம் நடந்தபோது, காவல்துறை உயரதிகாரிகள் சில விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்பதை எடுத்துச் சொன்னார் உள வுத்துறை ஐ.ஜி.ஜாபர்சேட். குறிப்பாக, தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நக்ஸலைட்டு களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்ப தாகவும் அதேபோல தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் ஏற்படுகிற சூழல் இருந்து வருவதாகவும் சுட்டிக் காட்டிவிட்டு இவை களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சீரியஸ்னஸ் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை காவல்துறை அதிகாரிகள் பலர் குறித்துக் கொண்டனர்.

அரசு நலத்திட்டங்கள் குறித்து விவரித்த முதல்வர், தொலைக்காட்சிப் பெட்டி கிடைக் காதவர்களுக்கு வரும் டிசம்பருக்குள் கிடைக்க வழிவகை காண வேண்டும் என்றும், குடிசை களை அகற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்றும் இலக்கை மார்ச் 31-க்குள் அனைத்து மாவட்டங் களிலும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டுமென்றும் கலெக்டர்களுக்கு கடுமையாக வலியுறுத் தினார். அதேபோல, சமீபத்தில் விவசாயிகளுக் காக இலவச பம்பு செட் அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்து பேசிய முதல்வர், இதனை எப்படி வினியோகிக்கப் போகிறீர்கள்? என்று மின் வாரிய சேர்மன் சி.பி.சிங்கைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முழுமையான ஒரு ரிப்போர்ட் தயாரித்து வருகிற 15-ந் தேதிக்குள் தருகிறோம் என்று பதிலளித்தார் சி.பி.சிங்.

கடந்த 4 வருடங்களில் நடந்த கலெக்டர் மாநாட்டினைப் போல, இந்த மாநாட்டில் அமைச்சர்களின் குறுக்கீடுகளோ, முதல்வரின் கோபமோ இல்லை என்பதே கலந்து கொண்ட அதிகாரிகளின் எண்ணங்களாக பிரதிபலித்தன.

யுத்தம் 84 நக்கீரன் கோபால்



தம்பி காமராஜ் கையிலிருந்த அந்தக் கடிதம், போயஸ் கார்டனிலிருந்து ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களாவுக்கு அனுப்பப்பட்ட ஃபேக்ஸின் நகல். அவர் அதை என்னிடம் கொடுக்க, அதை நான் படிக்கப் படிக்க ஒரு அரசாங்கம் எந்தளவுக்கு தனிப்பட்ட விரோதம் கொண்டு பழிவெறியுடன் செயல்படுகிறது என்பதை அப்பட்டமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜெயலலிதா அப்போது ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். (கொடநாடு பங்களா ரெடியாக வில்லை). அங்கிருந்தபடியே, மக்கள் நலத் திட்டங் களில் அவர் கவனம் செலுத்தவில்லை. நக்கீரனை எப்படி பழிவாங்கலாம் என்பது பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

விடியற்காலை 5 மணிக்கெல்லாம் ஹைதரா பாத்திலிருந்து தமிழக உயர் போலீஸ் அதிகாரிக்கு போன்.

""நக்கீரன் கோபால் கேஸ் என்னாச்சு? இன்னும் அரெஸ்ட் பண்ணலையா? ஏன் பண்ண லை? உடனடியா எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும்.''

-அதிகாலையிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டதால், 7 மணிக்குள் பதில் கொடுக்க வேண்டிய அவசரத்தில் இருந்தார்கள் அதிகாரி கள். நம் மீதான கேஸ்களையெல்லாம் பட பட வென பட்டியலிட்டு ஒரு ரிப்போர்ட்டை ஹைதராபாத்துக்கு அனுப்பிவைத்தார்கள். அதன் நகலைத்தான் தம்பி கொண்டு வந்திருந்தார்.

அதன் சாராம்சம் இதுதான்...

"அருப்புக்கோட்டையில் ஒரு ஏழைக் குடும் பத்தில் பிறந்த நக்கீரன் கோபால், தன் வாழ்க்கைத் தேவைக்காக ஒரு அரிசிக் கடையில் வேலை பார்த்தார். இளம் வயதிலேயே சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் குணம் கொண்டவராக அவர் இருந்தார் என்பது, கல்லூரி படிக்கும் போதே இலங்கைக்கு ரகசியமாக அவர் பயணம் மேற்கொண்டார் என்பதிலிருந்து தெரிகிறது. சென்னையில் பட்டர்ஃப்ளை கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்த அவர், தாய் பத்திரிகையில் சேர்ந்து, பிறகு அதிலிருந்து விலகி 1988-ல் நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தார். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் அரசு ஊழியர்கள் மீதும் மக்கள் சேவகர்கள் மீதும் அவதூறான செய்திகளை வெளியிடுவது அவர் வழக்கம். இத்தகைய செய்திகளுக்காக முதல்வரும் உயரதிகாரிகளும் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.





வனக் கொள்ளைக்காரன் வீரப்பனிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட கோபால், தங்குதடை யின்றி வீரப்பனை சந்தித்து வந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரப்பனிடம் பணயக் கைதிகளாக இருந்த கர்நாடக வனத்துறையினர் 9 பேரை 1997-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீட்பதற்கும், கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்கும் நக்கீரன் கோபாலை மாநில அரசு தனது தூதுவராக தேர்வு செய்யும் அளவுக்கு அவருக்கு வீரப்பனுடன் தொடர்பு இருந்தது. இதற்காக, அரசுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக கொள்ளேகால் காவல்நிலையத்தில் நிலுவையில் இருந்த வழக்கை நீக்க வேண்டும் என அவர் பேரம் பேசினார்' என அந்த ஃபேக்ஸில் குறிப்பிடப்பட்டு பேராசிரியர் கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கு, ராஜ்குமார் கடத்தல் வழக்கு, கந்தவேல் கொலை வழக்கு, பக்தவத்சலம் கொலை வழக்கு ஆகியவற்றின் விவரங்களையும் அதில் சொல்லியிருந்தனர்.

ஃபேக்ஸின் கடைசிப் பகுதியில், "கைது மற்றும் விசாரணையிலிருந்து தப்பித்து, பல்வேறு கோர்ட் உத்தரவுகள் மூலமாக நக்கீரன் கோபால் பாதுகாப்பு தேடிக்கொண்டிருக்கிறார். தன்னையோ தன் அலுவலக ஊழியர்களில் யாரையேனுமோ கைது செய்யக்கூடா தென்றும், வீரப்பனுடன் தொடர்புபடுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கக் கூடாதென்றும், தாளவாடி வழக்கில் சி.பி.ஐ.விசாரணை கோரியும், தன்னிடம் போலீஸ் நடத்திய விசாரணையின் வீடியோ கேசட்டுகளை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் பல ரிட் பெட்டிஷன்கள் தாக்கல் செய்து, ஆர்டர்களைப் பெற்றிருப்பதால் எங்க ளால் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை.

மேற்சொன்ன குற்றங்களில் நக்கீரன் கோபாலுக்கு உள்ள தொடர்புகளை நிரூபிப்பதற்கு அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். உரிய ஆதாரங்களை எடுப்பதற்காக அவருக்கு சொந்தமான இடங்களை ரெய்டு செய்யவேண்டும். கோபால் மீது மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு, நிலுவையில் உள்ள ரிட் பெட்டிஷன்கள் தொடர்பாக சட்ட ஆலோசனைகள் பெற வேண்டியது அவசியமாகிறது. சட்ட ஆலோசனைகள் வழங்கினால் உடனே பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கிவிடுவோம்' என்று போலீஸ் அதிகாரிகள் அவசர அவசரமாக பதில் அனுப்புகிறார்கள். நக்கீரனுக்கு சூழ்ந்திருக்கும் மிகப் பெரிய ஆபத்து பற்றிய முன்னெச்சரிக்கை மணி அடிப்பது போல அந்த ஃபேக்ஸின் நகல் இருந்தது.

அருப்புக்கோட்டையில் அப்பாவிடம், நான் சிலோன் போயிருக்கிறேனா என்று போலீசார் விசாரித்ததன் பின்னணி இப்போது புரிந்தது. பொய்ப்பழி சுமத்துவதற்காக ஒரு விசாரணை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஃபேக்ஸில் போலீசாரின் திரைக்கதை எழுதும் திறமை நன்றாகவே தெரிந்தது. அத்தனை பொய்கள்.

ஃபேக்ஸின் நகலை பார்த்ததும், அட்வகேட் பெருமாள் சாருக்கு போன் செய்தேன்.

""சார்.. உடனே வாங்க..''

""வந்திடுறேன் அண்ணாச்சி''.

ஈரோடு நிருபர் ஜீவாவுக்கு அடுத்த போன். தம்பி.. நம்ம முகவர் பெரியசாமிகிட்டே ஒரு ஃபேக்ஸ் நம்பர் வாங்குங்க. அதற்கொரு முக்கிய மேட்டரை அனுப்புறேன். அதை ரிசீவ் பண்ணி ஒரு கவரில் போட்டு, சீல் வைத்து அட்வகேட் ப.பா.மோகன்கிட்டே கொடுக்கச் சொல்லிடுங்க.

""சரிங்கண்ணே...''

அட்வகேட் ப.பா.மோக னைத் தொடர்புகொண்டேன். ""சார் உங்களுக்கு ஒரு ஃபேக்ஸ் காப்பி கொண்டு வந்து கொடுப் பாங்க. அதைப் படிச்சிப்பார்த் துட்டு கிழிச்சி போட்டுடுங்க. படிச்சதும் கான்டாக்ட் பண்ணுங்க''.

""ஓ.கே. சார்''

கொஞ்ச நேரத்தில் அட்வ கேட் பெருமாள், நம் அலுவலகத் திற்கு வந்தார். ப.பா.மோகன் லைனில் வந்தார். இருவருமே, ""கைதுக்கான எல்லா நடவடிக் கையையும் ரெடி பண்ணிட்டாங்க. எந்த நேரத்திலும் உங்களை அரெஸ்ட் பண்ணலாம்' என்றார்கள்.

"என்ன செய்யலாம், சட்டப் படியா என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு கைது செய்யப்படுவதைத் தவிர்க்க லாம்'' என ஆலோசித்தோம்.

""சீனியர்கிடே டிஸ் கஷன் பண்ணலாம்''- என் றார் பெருமாள்.

நான், அட்வகேட் பெருமாள், என் செகரட்டரி சிவகுமார் மூவரும் சீனியர் அட்வகேட் கே.எஸ். வீட்டுக் குச் செல்கிறோம். திடீரென நாங்கள் வந்ததிலிருந்தே ஏதோ விபரீதம் என்பதை கே.எஸ். புரிந்துகொண்டார்.

ஃபேக்ஸ் காப்பியை முழுவதும் படித்துப் பார்த்தார். படிக்கும் போதே அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்து, அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெருமாள் சாரும், ப.பா.மோகனும் என்ன சொன்னார்களோ அதே மனநிலையில்தான் சீனியரும் இருந்தார்.

""கோபால்.. நீ------------------------------------------------------------------ங்க இங்கே தமிழ்நாட்டிலேயே இருக்க வேணாம். பக்கத்து ஸ்டேட் டுக்கு போனாகூட ஆபத்து தான். எங்கேயாவது தொலை தூரத்துக்குப் போயிடுங்க. ஜனவரி 8-ந் தேதி வரைக்கும் நீங்க மறைவா இருக்கணும். ஏன்னா, அதுவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு வெகேஷன். அதற்கப்புறம்தான் நம்ம கேஸில் ஆர்டர் கிடைக்கும்'' என்றார் சீனியர்.

சட்டத்தை அறிந்தவர்களே தயங்கக்கூடிய அளவுக்கு இருந்தது அந்த ஃபேக்ஸ் செய்தி. அதிகாரம் மிக்க அரசாங்கம் ஒரு முடிவு எடுத்துவிட்டால் நீதி-நேர்மை-நியாயம் பற்றிக் கவலைப்படாமல், தான் நினைத்ததை செய்து முடித்துவிடும். ஜெயலலிதா அரசாங்கத்தின் செயல்பாடுகள் முழுவதுமே இதே வகையில் இருந்ததால், நிச்சயமாக நம்மை கைது செய்துவிடுவார்கள் என்று வழக்கறிஞர்கள் நினைத் தார்கள். சட்டத்தின் பாதுகாப்பை உடனடியாக பெறுவதற்கும் வழியில்லாமல், உச்சநீதிமன்றம் விடுமுறையில் இருந்தது.

வழக்கறிஞர்கள் சொல்வது போலச் செயல்படுவதுதான் இந்த தருணத்தில் சரியாக இருக்கும். அதனால் 8-ந் தேதி வரை யார் கண்ணிலும் படாமல் இருக்க முடிவு செய்துவிட்டேன். என்னுடைய பயணத்தை எளிதாக அடையாளம் காட்டுவது என்னுடைய ஜீப்தான். போலீசார் அதன் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள். அதனால், ஜீப்பை விட்டுவிட்டு, அப்பாவின் காரை எடுத்துக் கொள்ளும்படி டிரைவர் மோகனிடம் சொன்னேன்.

வீட்டுக்குள் போனதும், 10 நாளைக்கு வேண்டிய டிரஸ் எடுத்து வைத்தேன். திடீரென நான் அப்படி டிரஸ் எடுத்து வைத்ததும் வீட்டில் உள்ளவர்கள் திடுக்கிட்டார்கள். கலைஞர் ஆட்சியின்போது அரசுத் தூதராக காட்டுக்குப் போகும்போது இப்படி டிரஸ் எடுத்து வைத்துச் செல்வேன். ஜெ.ஆட்சியில் அதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் எதற்காக 10 நாளுக்கு டிரஸ்? ஏதாவது ஆபத்தா என்று அவர்களின் மனதுக்குள் கேள்வி.

என் துணைவியாரும் சின்ன மகள் சாருவும் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்கள்.

""ஏம்ப்பா.. இத்தனை டிரஸ்?'' என்று சின்ன மகள் கேட்டார்.

""ஏதாவது பிரச்சினையா?'' - துணைவியார் கேட்டார்.

அதெல்லாம் இல்லை என்று சொன்ன நான், வழக்கு விவரமாக வெளியூர் களுக்கு அலைய வேண்டியிருக்கிறது என்று சொல்லி சமாளித்தேன்.

கர்நாடக டி.ஜி.பி. தினகர் எழுதி யிருந்த ஒரு புத்தகத்தில், வீரப்பன் கடத்தல் விவகாரம் சம்பந்தமாக நம் மீது அநியாய பழிபோட்டு எழுதி யிருந்தார்.அவர் மீது வழக்குத் தொடுப்பதற்காக அட்வகேட் ஜெயப் பிரகாஷை சந்தித்து நான், பெருமாள் சார், சிவகுமார் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது லைனில் வந்தார் பொதுமேலாளர் தம்பி சுரேஷ்..

""அண்ணே...''

-அவர் சொன்ன தகவல், பேயாட்சியின் பேயாட்டம் ஆரம்பாகி விட்டதைக் காட்டியது.

-யுத்தம் தொடரும்

முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!



""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி.

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார்.

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

பிணம் எரியும்போது..,! -மரணகானா விஜி


தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட விஜி தொடர்ந்தார். ""பசிக்கொடுமையால திருடற பழக்கம் எங்ககிட்டே சேர்ந்துடுச்சு. திருட ஆரம்பிச்சோம். போலீஸ் புடிக்கும். சிறுவர் சீர்திருத்த ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க. அங்க நல்லா சோறு கெடைக்கும். சாப்பிடறதுக்காகவே ஏதேனும் திருடிட்டு ஜெயிலுக்குப் போறதை வழக்கமா வெச்சிக்கிட் டோம். இதுக்கு இடையில சேகர், பீடைன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் எங்களுக்குக் கெடைச்சாங்க. இவங்க ரெண்டு பேரு கதையும் எங்களைவிட மோசமா இருக்கும்.

இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு. பிளாட்பாரத்துல கெடக்கிற எங்கள மாதிரி அனாதைப் பசங்களுக்கு பாதுகாப்புங்கிறதே கேள்விக்குறிதான். அதுவும் ராத்திரியாயிட்டா சொல்லவே வேணாம். மெரினா பீச்சுல பொண்ணு கெடைக்காதவனுங்க ஆம்பளப் பசங்கள இழுத்துக்கிட்டு போய்டுவானுங்க. ஒருமணி நேரம், ரெண்டு மணி நேரம் விடமாட்டானுங்க. வலி உயிரு போயிடும். அந்த ஆபத்துல என்னைத் தவிர மத்த மூணு பேருமே மாட்டிக்கிடு வாங்க. ஒருநாள் இதப்பத்தி கவலையா பேசிக்கிட்டு இருந்தோம். இனி எவனாவது வந்து இழுத்தா... பீர் பாட்டிலாலா ஒரே குத்து குத்திட்டு ஓடிடணும். இப்படியெல் லாம் வன்முறை எண்ணம் வந்தது. இதனால எப்பவும் எங்க தலைமாட்டுல பீர் பாட்டில்கள வெச்சுக்கிட்டே தூங்குவோம். ஒருநாள் அந்த வெறிபுடிச்ச ஆளுங்க வந்தானுங்க. நாங்க 4 பேரும் பீர் பாட்டில ஒரே நேரத்துல அடிச்சி ஒடைச்சோம். அவனுங்கள நோக்கி பாபு, சேகர், பீடை மூணுபேரும் குத்துறதுக்குப் பாய... விழுந்தடிச்சிக்கிட்டு ஓடினாங்க. இதப் பார்த்த போலீஸ் எங்களை நோக்கி வர... என்னைத் தூக்கி தன் தோள்மேல வெச்சிக்கிட்டான் பாபு. என்னோட கட்டை வண்டியை சேகர் எடுத்துக்கிட் டான். நாங்க வேக வேகமா ஓடினோம். போலீசும் தொறத்துனுச்சு. கண்ணுமண்ணு தெரியாம அந்த இருட்டுல ஓடினோம். ஓடிக்கிட்டே இருந்தோம்.

ரொம்பவும் இருட்டா இருந்த எடத்துல அப்படியே பதுங்கிக்கிட்டோம். நாங்க பதுங்கியிருந்த இடத்துல பெரிய மதில் சுவர். அதுல ஒரு பெரிய நாய் நுழையற மாதிரி ஓட்டை இருந்துச்சு. அதுக்குள்ள நுழைஞ்ச பீடை, "டேய்... இங்கு ஏதோ பெரிய மைதானம் மாதிரி இருக்குடா. படுக்கிறதுக்கு வசதியா திண்ணை போட்டி ருக்காங்கடா'ன்னு சொல்ல. நாங்க எல்லோரும் அந்த ஓட்டை வழியா நுழைஞ்சு உள்ளே போனோம். அங்கி ருந்த திண்ணை மேல ஏறி படுத்துக்கிட்டோம். ரொம்ப நேரம் ஓடி வந்ததுனால அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வந்துடுச்சு.

விடிஞ்சதும் பார்த்தா... பயந்து போயிட்டோம். நாங்க இருக்கிறது வெளையாட்டு மைதானம் இல்லே, ராயபுரம் சுடுகாடு. நாங்க படுத்திருந்தது திண்ணை இல்லே கல்லுக அடுக்கி வெச்ச சமாதிகள்'' என்ற ஒருவித திகிலுடன் விஜி, ""காலையில கறுப்பு பறையன்னு ஒரு வெட்டியான் வந்தாரு. எங்களைப் பார்த்து "யாருடா நீங்க? இங்க என்ன பண்றீங்கன்னு அதட்டுனாரு. அப்ப நான், "ஐயா நாங்கள்லாம் காகிதம் பொறுக்கிறவங்க. வெளியில நிம்மதியா எங்கள இருக்கவிடமாட்டேங்கிறாங்க. இந்தப் பொணங்களோட பொணமா நாங்களும் இங்கேயே படுத்துக் கிறோம்யா'ன்னு கெஞ்சினேன். "சரி... சரி... இருந்துக் குங்க... ஆனா இந்தப் பொணங்களை ஏதும் தொந்தரவு பண்ணிடாதீங்க'ன்னு உத்தரவு போட்டாரு.

அதுல இருந்து பகலானா பீச்சுலயும் ராத்திரி யானா ராயபுரம் சுடுகாட்டுலயும் தஞ்ச மடைஞ்சோம். மரணங்களுக்கு மத்தியிலயும் பொணங்களுக்கு மத்தியிலயும் எங்க வாழ்க்கை ரணமாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. சில சமயங்கள்ல, நான் சுடுகாட்டுலயே இருந்துக்குவேன். மத்த மூணுபேரும் வெளியில போய் காகிதம் பொறுக்குவாங்க.

சுடுகாட்டுக்கு வர்றவங்க ஏதேனும் பலகாரம். சோறுன்னு வெச்சிட்டுப் போனா அதை எடுத்துச் சாப்பிடுவேன். கறுப்புப் பறையனும் தன்கிட்டே இருக்கிறதை எனக்குச் சாப்பிடக் கொடுப்பாரு.

இன்னைக்கு சென்னையில வீடுகள்ல நான் கானா பாடுறேன்னா... அதுக்குக் காரணம் கறுப்பு பறையன்தான். சுடுகாட்டுக்கு பொணம் வந்ததும் அதுக்கு சம்பிரதாயங்கள் பண் ணிட்டு கொள்ளி வச்சிட்டு போய்டுவாங்க. பொணம் கொழுந்துவிட்டு எரியும். தன்கிட்ட இருக்கிற கஞ் சாவை எடுத்துக் கொடுத்து அத சுருட்டுல போட்டு கொடுடான்னு சொல்லுவாரு கறுப்பு பறையன்.

நானும் போட்டுக் கொடுப்பேன். கஞ்சாவை ஒரு வலி வலிச்சிட்டு, கொழுந்துவிட்டு எரியுற தீயைப் பார்த்து, "நீயே மாயை நீயே உலகம் நீயே வந்தியோ... நீயே இருந்த நீயே இறந்த உன்னில் மறப்பாயோ!' என்று அடிவயிறு புடைக்க, உச்சஸ்தாயில் ராகம் எடுத்துப் பாடுவாரு. பொணத்தை எரிச்சிக்கிட்டு விடிய விடிய பாடுவாரு. பாட்டெல்லாம் மரணத்தை பத்தியேதான் இருக்கும். அப்போதைக்கு இந்தப் பாட்டுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஆனா, போகப் போக புரிய வெச்சாரு கறுப்பு பறையன். எனக்கு புரிய ஆரம்பிச்சதும் அவரோடு சேர்ந்து நானும் பாடுறதை வழக்கமா வெச்சிக்கிட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு பாபு என்னைத் தேடி வந்தான். அவன்கிட்டே இந்த பாட்டை பாடி காண்பிச்சேன். டேய் மச்சான் என்னடா கானாவெல்லாம் பாடுறேன்னு ஆச்சரியப் பட்டான். அதுக்குப் பெறகுதான் கானாங்கிற வடிவம் புரிஞ்சது. அந்த காலத்துல கானா கட்டிக்கிட்டு இருந்த ஆயிரம் விளக்கு செல்வாகிட்டே என்னைக் கூட்டிட்டு போனான் பாபு. அவரால பாடப்பட்ட பாடல்களை உள்வாங்கிட்டு, நானாக வார்த்தைகளையும் மெட்டுக்களையும் போட்டு பாட... கானா எனக்கு புரிய ஆரம்பிச்சிது.

கறுப்பு பறையனோட ரொம்ப நாளா சுடுகாட்டுலயே இருந்ததினால, மரணங்களை மட்டுமே கானா எடுத்து பாடுறதுன்னு முடிவு செஞ்சேன். பேதமில்லா பெருவாழ்வு மரணம் மட்டும்தான். சமரசம் உலாவும் இடமே சுடுகாடுதான்னு தனது மரண சித்தாந்தங்களை சொல்லி கொடுத்தாரு கறுப்பு பறையன்.

ஒருநாள் இவரும் காணாமப் போய்ட்டாரு. இவருக்கு என்ன ஆச்சுன்னு இதுவரை யாருக்குமே தெரியாது.

ஒருமுறை ராயபுரம் சுடுகாட் டுல நான் இருந்தப்போ எரிஞ்சு போன பாடி ஒண்ணு கொண்டாந் தாங்க. அந்த பாடி மாசமாயிருந்தது. நம்ம சுடுகாட்டுல ஒரு ரூல்ஸ் வெச்சிருக்காங்க. அதாவது, இறந்து போனது பொண்ணாயிருந்து, அதுவும் மாசமாயிருந்தா வயித்துல இருக்கிறது ஆணா, பொண்ணான்னு பார்த்துட்டுத் தான் சுடுகாட்டுல ரசீது போடு வாங்க. அப்புறம் தான் அந்த பாடியை எரிக்கவோ, பொதைக்கவோ முடியும்.

அப்போ சுடுகாட்டுல பாடியை அறுக்கிறதுக்கு ஆளு இல்லாததால அந்த பொணத்தை கொண்டு வந்தவங்க முழிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்ப நான், "சாரே, பாடியை நான் அறுக்கிறேன். எவ்வளவு தருவீங்க?' என்று கேட்க, "நீயா? சின்ன பையனாட்டம் இருக்கே!' என்று ஒருத்தன் கேட்டான்.

"சின்ன பையன், பெரிய பையனெல்லாம் என்ன சாரே இருக்கு. ஒரு பிளேடு இருந்தா... ஒரு நிமிடத்துல காரியம் முடிஞ்சிடும். என்ன சொல்றீங்க? எனக்கு காசு வேணும். தருவீங்களா?' என்றதும் ஒருத்தர் என்கிட்டே வந்து 400 ரூபாயை கொடுத்தாரு. ஒரு பிளேடு வாங்கி வரச் சொன்னேன். பிளேடு வந்ததும், அந்த பொண்ணு (பாடி) போட்டிருந்த துணியை காலிலிருந்து தூக்கினேன். "வேணா, வேணா... துணியை கழட்டாம வயித்துல கிழிச்சு எடு'ன்னு புருஷன்காரன் பதறினான். எனக்கு என்னமோ மாதிரி ஆய்டுச்சு.

வயித்தை ஒரு கிழி கிழிச்சேன். வெள்ளையா ஒரு தோல் வந்துச்சு. ரெண்டாவது கிழியில ரத்தக் கட்டிகள். என் ரெண்டு கையையும் வெச்சு கிழிசலை அகலப்படுத்தி, கையை உள்ளே நுழைச்சு கொழந்தையை வெளியே எடுத்தேன்.

"பாருங்க, ஆம்பளை கொழந்தை'ன்னு காட்டினேன். அத காட்டி சுடுகாட்டுல ரசீது போட் டுட்டு, பெறகு அந்த பாடியை எரிச்சிட்டு போ னாங்க. இவ்வளவு கால மாகியும் இந்த சம்பவம் என்னை ஏதோ ஒரு வகையில நெருடிக்கிட்டே தான் இருக்கு.

இப்படி தெனம் தெனம் மரணங்களை, பாடிகளை சந்திச்சுக்கிட்டே தான் இருந்தேன். கறுப்பு பறையன் விட்ட பணியை நான் தொடர்ந்தேன். ராயபுரம் சுடுகாட்டுல எந்த பொணம் வந்தாலும், நான் உச்சஸ்தாயில் மரணத்தைப் பத்தி கானா பாடுவேன். அந்த பகுதியே அது எதிரொலிக்கும். என் பாட்டுக்குப் பெறகுதான் பாடி நல்லா வேகும். கொள்ளி வச்சிட்டு எல்லாரும் போன பெறகும் பாடி எரிந்து முடியிற வரைக்கும் பறை அடித்து கானா பாடிக்கிட்டே இருப்பேன். நடு நிசியை தாண்டியும் என் பாட்டு ஒலிக்கும்.

இப்படியே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. எங்க ஃப்ரண்ட் மச்சான் சேகர் பல் வலின்னு ஆஸ்பெட்டலுக்கு போனான். பல் புடுங்கிட்டு வந்தவன் வலி அதிகமா இருக்குன்னு சொல்லிக்கிட்டு எங்கக் கூடவே படுத்துட்டான். காலையில எழுந்திருச்சு பார்த்தா தலகாணி முழுக்க ரத்த கறை. செத்துப் போயிருந்தான் சேகர். பல்லை புடுங்கின டாக்டரு சரியா புடுங்கி, பஞ்சை சரியா வெக்காததினால ராத்திரி முழுக்க ரத்தம் கசிந்துகிட்டே இருந்திருக்கு. அதான் அவன் செத்துட்டான்னு சொன்னாங்க. ஏழைங்க உசிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?ன்னு நெனைச்சிக்கிட்டேன்.

ராயபுரம் சுடுகாட்டுல நாங்க 4 பேரும் மொத மொத படுத்திருந்தோமே அதே இடத்துல சேகரை நாங்க பொதைச்சோம். மச்சான் சேகரோட மரணம் என்னால தாங்கிக்க முடியலை. சேகர் மரணத்துக்குப் பிறகு மிச்சம் இருந்தது நாங்க மூணு பேருதான். அதுல, பீடை ஓவரா கஞ்சா அடிச்சி மெண்டலாயிட்டான். சேகர் மரணத்துக்கு பின் பீடை யாருக்கிட்டயும் சரியா பேசுறதில்லை. இதனால, மனநிலை பாதிக்கப்பட்டவன் மாதிரி தனியா திரிய ஆரம்பிச் சான். அவனை ஒரு டாக்டர் கிட்ட காட்டி, மெண்ட்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வெச்சோம்.

கூட இருந்தவனுங்க, எங்க மேல பிரியம் வெச்ச வங்க, நாங்க அனுபவிச்ச பொண்ணுங்க எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல மரணமடையறது தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்தது. மரணமும் பிரிவும் எங்களை கசக்கி பிழிஞ்சது. எல்லாத்துக்கும் மேல ஒரு பெரிய இடி என் மேல் விழும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

(தொடரும்)

இளங்கோவனுக்கு நோட்டீஸ்! சிதம்பரம் போட்ட தடை!




""ஹலோ தலைவரே... பட்டமளிப்பு விழா நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மாலைராஜாவால் தாக்கப் பட்டார்னு பரபரப்பான நெல்லை அண்ணா பல் கலைக்கழகத் துணைவேந்தர் திடீர்னு எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.வை தன் மனைவி யோடு சந்தித்திருப்பதைப் பார்த்தீங்களா?''

""மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு சொல்றாரே துணைவேந்தர் காளியப்பன்!''

""தலைவரே.. அவரோட பதவிக்காலம் செப்டம்பர் 17-ந் தேதியோடு முடிவடையுது. மாலைராஜா தன்னை தாக்க வந்தப்ப பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் தடுக்க வந்ததாகவும், அவரை எம்.எல்.ஏ தாக்கிய தாகவும், இதுசம்பந்தமா புகார் கொடுத்தும் நட வடிக்கை இல்லைங்கிறதும் தான் துணைவேந்தரோட குற்றச்சாட்டு. அதோடு, நடந்த சம்பவங்களையெல் லாம் விளக்கி துறை அமைச்ச ருக்கும் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் துணைவேந்தர். அதற்கும் செகரட்டரி லெவலிலிருந்து கூட விசாரிப்பு இல்லையாம். இந்த நிலையில்தான், கடந்த 10 நாளா மாலைராஜா தரப்பிலிருந்து துணை வேந்தர் காளியப்பனுக்கு மிரட்டல் வந்துக்கிட்டி ருக்குதாம். ரிடையர் டுக்குப் பிறகு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் பாதுகாப்பு தேடிய துணைவேந்தர், ஜெ.வை சந்தித்திருக்கிறார்.''

""எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னாராம்?''

""சொல்ல வேண்டியதையெல்லாம் தேர்தல் நேரத்தில் சொல்லுங்கன்னு சொன்ன ஜெ, தலித்துக்கு எதிரா தி.மு.க அரசின் நடவடிக்கை இருக்குங்கிற வகையில் நீங்க பேசணும்னு துணை வேந்தர்கிட்டே சொல்லியிருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரையும் இதேபோல ஜெ.வை சந்திக்க வைக்க முயற்சிகள் நடக்குது. இதுவரை உமாசங்கர் பிடி கொடுக்கலை.''

""சி.சுப்ரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அழைக்காததாலும், அவரது ஆதரவாளர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்ததாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டப்போறதா மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமி சொல்லியிருக்காரே?''

""இளங்கோவன் பக்கம் இருக்கிற ஒரே எம்.எல்.ஏ அவர் தான். மத்தவங்களெல்லாம் நிலைமையை பார்த்துட்டு விலகிட்டாங்க. அவரோட கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பற்றி டெல்லி மேலிடத்துக்கு தங்கபாலு தெரிவிச்சப்ப, கலைஞரை விமர்சனம் செய்ததால.. இளங்கோவனுக்கே ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப குலாம்நபி ஆசாத் ரெடியாயிட்டாரு. ப.சிதம்பரம்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லி நிறுத்திட்டாருன்னு டெல்லியில் உள்ளவங்க சொல்லியிருக்காங்க. கோவையில் நடந்த சி.எஸ். நூற்றாண்டு விழாவில் ப.சி பேசுறப்ப, உலகம் முழுக்க இனி கூட் டணி ஆட்சிதான். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தனிக் கட்சியை நம்பி மக்கள் வாக்களிக்க விரும்பலைன்னு பேசினார். ப.சியின் இந்தப் பேச்சையும், இளங்கோவனைக் காப்பாற்றும் விதத்தில் அவர் செயல்பட்டதையும் சந்தேகத்தோடு பார்க்குறாங்க.''

""அ.தி.மு.க தரப்பு தகவல்கள்?''

""உடல்நலன் தேறுவதற்கான சிகிச்சைகளை எடுப்பதற்காக மறுபடியும் கொடநாடு போய் ஓய்வெடுக்க முடிவு செய்துவிட்டார் ஜெ. அதனால, மதுரையில் நடக்கவிருந்த கண்டனப் பொதுக்கூட்டமும் கேன்ச லாகுது. ஏற்கனவே மதுரையில் நடக்கவிருந்த கட்சிக்காரர் கள் வீட்டுத் திருமணங்களையும் சென்னையிலே நடத் திட்டாரு ஜெயலலிதா. இப்ப கண்டனப் பொதுக்கூட்ட மும் இல்லைங்கிறதால அழகிரி தரப்பு ரொம்ப உற்சாகமா இருப்பதா மதுரை ர.ர.க்களே சொல்றாங்க.''

""கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் அரசியல் பரபரப்பை உண்டாக்க ரெடியாக இருந்த ர.ர.க்களுக்கு ஜெ.வின் கொடநாடு ஓய்வு அப்செட்டான செய்தியா இருக்குமே?''





""அவங்களை இன்னொரு செய்தியும் அப்செட் டாக்கியிருக்கு. 30 பேர் எம்.எல்.ஏ ஆவதற்கும் 10 பேர் எம்.பி ஆவதற்குமா நான் தே.மு.தி.க.வை நடத்துறேன்னு விஜயகாந்த் தன் கட்சி நிர்வாகிகளிடம் கேட்குறாருன்னு நாம ஏற்கனவே பேசியிருக்கோம் ஞாபகமிருக்குங்களா.. அதை திண்டிவனத்தில் விஜயகாந்த் வெளிப்படையாகவே பேசிட்டாரு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாருமே நல்லாட்சி கொடுக்கலைன்னு ஜெ.வையும் சேர்த்து விமர்சித்த விஜயகாந்த், மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து ஆட்சியமைப்பேன்னு சொல்லியிருக்காரு. அதாவது, தான்தான் சி.எம்.ங்கிறதில் அவர் உறுதியா இருக்காரு. கூட்டணியை எதிர்பார்த்திருந்த ர.ரக்களை விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு அப்செட்டாக்கியிருக்குது.''

""டாக்டர் வெங்கடேஷும் அப்செட்டில் இருக்காராமே?''

""கட்சித் தலைமை தன்னைத் தொடர்ந்து ஓரங்கட்டுவதால் அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் யோசனையில் இருந்தார் டாக்டர் வெங்கடேஷ். இந்த நிலையில், 30-ந்தேதி கொடநாடு புறப்படும் முன், கட்சி நிர்வாகிகளோடு கார்டனில் ஆலோசனை நடத்திய ஜெ., டாக்டரின் பவரைக் குறைத்து டம்மியாக்கும் விதத்தில் பாசறைக்கு இணைச் செயலாளர்களாக சரவணபெருமாள், கலை ராஜன், வக்கீல் ராஜலெட்சுமி ஆகியோரை நியமித்தார். ஒரு துணைச் செயலாளரும் நியமிக்கப்பட்டிருக் கிறார். அத்தோடு நயினார் நாகேந்திரனையும் கோகுல இந்திராவையும் டூர் போகச் சொல்லி, பூத் கமிட்டிகளில் பாசறை ஆட்களை போடச் சொல்லியிருக்கிறார் ஜெ. இதுதொடர்பாக நடந்த எந்த ஆலோ சனையிலும் டாக்டர் வெங்கடே ஷுக்கு அழைப்பு இல்லாததால் அவர் தன்னுடைய ராஜினாமா முடிவில் தீவிரமாக இருக்காராம்.''

""சட்டமேலவை அமைப்பது பற்றி தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க.வையும் காங்கிர சையும் தவிர மற்ற கட்சிகளெல்லாம் இப்போதைக்கு மேலவைத் தேர் தலை நடத்துவதில் ஆர்வம் காட் டலை. அ.தி.மு.க சார்பில் கலந்துக் கிட்ட ஓ.பன்னீர் சிரிச்சுக்கிட்டே, நீங்க அவசர அவசரமா தேர்தல் நடத் தினா, அடுத்ததா நாங்க ஆட்சிக்கு வந்ததும் அவசர அவசரமா ரத்து பண்ணிடுவோம்னு சொன்னார்.''

""அறிவாலயத்திற்கு வந்துபோகும் கரைவேட்டி பிரமுகர்கள் பலரும் மேலவை எலெக்ஷன் பற்றி என்ன பேசிக்கிறாங்கன்னு நான் சொல்றேன். எம்.எல்.ஏ எலெக்ஷனுக்கு பிறகே எம்.எல்.சி. தேர்தலை நடத்தலாம்னு சொல்றாங்க. அதாவது, தொகுதியில் கெட்ட பெயரோடு இருக்கும் சிட்டிங் மந்திரிகள், எம்.எல். ஏக்களுக்கு வரும் எலெக்ஷனில் சீட் கொடுக்காமல், உங்க ஏரியாவில் அதிக தொகுதிகளில் நம்ம கட்சியை ஜெயிக்க வையுங்க. அப்புறம் எம்.எல்.சி.யாக்கி மந்திரியாக்குறோம்னு சொன்னா, விறு விறுன்னு தேர்தல் வேலை நடக்கும்னு பேசிக்கிறாங்க.''

திரைக்கூத்து!

நயன்தாராவுடன் பிரபுதேவா மனஸ்தாபம்!





ஜாங்கிரிதான்னாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்க முடியுமா? சலிப்பு வரத்தான செய்யும்? நயனுக்கும், நடனப் புயலுக்கும் சின்ன கோப தாபத்தில் ஊடல் ஏற்பட்டு போச்சாம். ரெண்டு மூணு நாளா ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையாம். அப்பறம் மனசு லேசாகி பிரபுதேவாவுக்கு போன் போட்டிருக்கிறார் நயன். ஆனால் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்லயே இருந்துவிட்டார் புயல். இதைத் தெரிந்துகொண்ட நயன், பிரபுதேவா வீட்டு தெருமுனை யில் ரொம்ப நேரம் காரிலேயே காத் திருந்தாராம். ஆனால் நடனம் வெளியே வராததால் ஏமாற்றத்தோடு திரும்பி யிருக்கிறார் நயன்தாரா.


கடத்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை!


அயோத்திக்குப்பம் வீரமணியின் வாழ்க்கைச் சாயலில் "பெருசு' படம் தந்த காமராஜ் இப்போது "விலை' படத்தை இயக்கி வெளியிட்டி ருக்கிறார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதா நாயகி ரித்துவை கடத்தி விபச்சார கும்பலிடம் விற்று விடுகிறது ஒரு கும்பல். அந்தப் பெண்ணை அவளின் அண் ணன் பரணியும், போலீஸ் ஆபீஸர் சரவணனும் மீட்க போராடும் கதை. ""சினிமாத்தனம் இல்லாமல் மிக யதார்த்தமாக படமாக்கியிருக் கீங்களே?'' என காமராஜிடம் கேட்டேன். ""காணாமல்போகும் பல பெண்கள் இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்படாமலே இருக்காங்க. அப்படி காணாமப்போயி திரும்பி வந்த சில பெண்களிடம் பேசி, நடந்த சம்பவங்களைக் கேட்டு படமாக்கினோம். படத்தை நாங்க எந்த ஆபாசமுமில்லாம எடுத்திருந் தாலும் அவுக சொன்ன சில சம்பவங்களை காட்சிப்படுத்த முடியல. அவ்வளவு கொடூரங்களை அந்த பெண்கள் அனுபவிச் சிருக்காங்க.

இந்தப் படத்தைப் பார்த்து பணத்துக்காக பெண்களை கடத்துறவங்கள்ல ஒருத்தனாவது திருந்தணும் அதுதான் இந்த படத்தோட நோக்கம்''’என்றார்.


இனி மும்பை நடிகை வேண்டாம்!


மிஷ்கின் இயக் கத்தில் சேரன் நடிக் கும் "யுத்தம் செய்' படத்தில் தீபாஷா எனும் மும்பை பார்ட்டி நடிக்கிறார்.

ஷுட்டிங் ஸ்பாட் டில் "ராணி உபசாரம்' கேட்டு அம்மணி ரப்சர் பண்ணுவதால் இந்த மிஸ்ஸுக்கும், மிஷ் கினுக்கும் முட்டிக்கிச் சாம்.

‘"இனிமே மும்பைக்காரங்கள நடிக்க வைக்க மாட்டேன்' என ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சத்தம் போட்டுச் சொன்னாராம் இயக்குநர்.


ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி!


"சிவா மனசுல சக்தி' படத்தையடுத்து "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ராஜேஷ்.எம். ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருக்கும் இந்தப்படம் காதலும், நகைச்சுவையு மாக ரகளைகட்டி யிருக்கிறதாம். இந் தப்படத்தை வெளி யிடும் உதயநிதி, படம் பிடித்துப் போனதால் ராஜேஷ் இயக் கத்தில் நடிகராக அறிமுகமாகவிருக் கிறார்.


கேரவனில் கரணோடு தகராறு!


"சூரன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் கரண். படப்பிடிப்பிற்கு அடிக்கடி தாமதமாக வந்த பிரச்சனையால் கடுப்பான தயாரிப்பு தரப்பு கேரவனுக்குள் புகுந்து கரணோடு தகராறில் இறங்கிவிட்டார் களாம். மறுநாளிலிருந்து படப்பிடிப்பு தாமதமில்லாமல் நடந்துவருதாம்.

அப்படியா!



கிக் பவுடர் சங்கதியில் ஒல்லி நடிகை பேர் அடிபட்டதன் பின்னணியில் நடிகையின் நீக்ரோ பாய்ஃபிரெண்ட்டான காஸ்ட்யூமர் இருக்கிறாராம். அவரோடு பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பார் நடிகை. இந்த நீக்ரோ மூலம்தான் போதை விற்ற நீக்ரோ பார்ட்டிக்கி நடிகையின் நம்பர் போயிருக்கு மோ... என நடிகை தரப்பு சந்தேகப்படுகிறது. "அவனால நம்மபேரு கெட்டுச்சோ' என பாய்ஃபிரண்ட்டை வாய்க்கு வந்த படி வதக்கி எடுக்குறாராம் நடிகை

கடவுள் பெயரில் லஞ்சம்! -அரசு ஊழியர்களின் புது டெக்னிக்!

லஞ்சம் வாங்கும் போது கையும் களவு மாக கலெக்டர் அலுவலக ஊழியர் சிக்கிக் கொண்டார், காவல்துறை அதிகாரியும் சிக்கிக் கொண்டார். வருவாய்த்துறை அதி காரியும் சிக்கிக் கொண்டார் என தினந் தோறும் எதாவது ஒரு அரசுத்துறை ஊழியர் லஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும் செய்தி தினசரிகளில் தினமும் வருவதால், அரசு ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தேய்ந்து கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையில் "சீனிகிழங்கு தின்ன பன்றி, செவி அறுத்தாலும் நிக்குமா?' என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப கையூட்டு வாங்கிய அதிகாரிகளின் கை சும்மா இருக்கு மா? மீண்டும், மீண்டும் வாங்க தூண்டுவதால் விஜிலென்ஸ் கையில் சிக்காமல் இருக்க நம்மூர் லஞ்ச அதிகாரிகள் புதிய டெக்னிக் மூலம் லஞ்சத்தை வாங்குகிறார்கள். அந்த டெக்னிக்தான் என்ன?

சம்பவம்:-1

குமரி மாவட்ட மின்சார வாரியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் பக்தி பரவசமான அந்த உயர்ந்த அதிகாரி. தடிக் காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் எஸ்டேட் முதலாளிகள் சிலர், எஸ்டேட் டுக்கு மின்சாரம் வேண்டி அந்த அதிகாரியை சந்தித்தனர். அதிகாரியோ வழக்கம் போல், மின்சாரம் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகக் கூறியதால் இறுதியில் அந்த எஸ்டேட் முதலாளிகள் ""உங்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டுறோம்'' என்ற ஒரு பிட்டைபோட, அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரியோ, ""நான் அதை என் கையால தொடமாட்டேன். ஒரு கோயிலை சொல்லுறேன். அந்த கோயிலில் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடையாக கட்டிவிட்டு ரசீதை கொண்டு வாருங்கள். உடனே மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். இதற்கு எஸ்டேட் முதலாளிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த விஷயம் இன்னொரு அதிகாரி மூலம் நம் காதுக்கு எட்ட, உடனே நாம் அந்த அதிகாரி கூறிய பூதப்பாண்டி அருகேயுள்ள அந்த அம்மன் கோயில் நிர்வாகியை துருவினோம். நிர்வாகி சொன்ன தகவல் பலத்த அதிர்ச்சியாக இருந்தது.

""விஜிலென்ஸுக்கு பயந்து அந்த அதிகாரி நேரிடையாக லஞ்சம் வாங்க மாட்டார். இப்படி கோயிலில் கட்ட சொல்லிவிடுவார். நாங்களும் பணத்தை வாங்கிட்டு நன்கொடை ரசீது கொடுத்துவிடுவோம். அதன்பிறகு அந்த அதிகாரி யிடம் பணத்தைக் கொடுக்கும்போது அவர் ஒரு லட்சத்துக்குக் கீழ் இருந்தால் 20 பர்சன்டேஜும், அதற்கு மேல் இருந்தால் 30 பர்சன்டேஜும் கோவிலுக்கு தந்து விடுவார்.

இப்படி பல லட்சம் ரூபாய்க்கு இங்கிருந்து ரசீது கொடுத்து இருக்கிறோம். அவர் புண்ணியத் தில் எங்கள் கோயிலின் கட்டிடங்கள் உயருது'' என்றார்.

சம்பவம்:-2

வரதட்சணை கேஸ் என்றால் அங்கு "தட்சணை' கொடுத்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். கடற்கரை யோர அந்த மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அமைதிக்கு பெயர் கொண்ட அந்த பெண் எஸ்.ஐ.யை கையும் களவுமாகப் பிடிக்க அந்த பகுதி வர்த்தக நண்பர்களும், விஜிலென்சும் பொறி வைத்தனர். அதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் அந்த எஸ்.ஐ.

பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளான ஒரு புது மணப்பெண் தனது கணவர் மீது புகார் கொடுக்க எஸ்.ஐ.யிடம் வந்தார். வசதி படைத்த அந்த புது மணமகனிடம் இருந்து கரன்சியை கறக்கவும் வேண்டும், விஜிலென் சிடம் மாட்டிக் கொள்ளவும் கூடாது என யோசித்தார் எஸ்.ஐ.

அதற்காக அந்த பெண் எஸ்.ஐ. மேற்கொண்டது கோயில் பாலிசி. மணமகனிடம், ""நீ செய்த பாவம் தொலைய வேண்டுமானால் எனது ஊரில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடு, உன் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன்'' என்றதும், மணமகனும் உடனே அந்த பணத்தை கோயிலில் சென்று கட்டி விட்டார்.

இதில் கோயிலுக்கு 15 ஆயிரம் ரூபாய் போக மீதியை எஸ்.ஐ. வாங்கிச் சென்றார். பாதிக்கப்பட்ட புது மணப்பெண் உடல் முழுக்க பாலியல் கொடுமை தழும்போடு கதறிக் கொண்டிருக்கிறார்.

சம்பவம்:-3

லஞ்சம் தலைவிரித்தாடும் பத்திரப் பதிவுத்துறையை சொல்லவே வேண்டாம். துறை மந்திரியின் சொந்த தொகுதியில் இருக்கும் மலையடிவார பதிவு அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனால் அதன் பதிவாளர், ரியல் எஸ்டேட் அதிபர்களின் தில்லுமுல்லுகளை கண்டுகொள்ளாமல் இருக்க, கோயில் பாலிசியைத்தான், ஒரு பத்திரப் பதிவு எழுத்தர் மூலம் முறைப்படுத்தி வருகிறார். தோவாளையில் உள்ள ஒரு தேவசம்போர்டு கோயிலிலேயே லஞ்ச பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொள்கிறார்கள். நம் விசாரணையில் கோயில் நிர்வாகி ஒருவர் இதற்கென்றே போலி ரசீது அடித்து வைத்து இருப்பதாக தெரிய வந்தது.

இன்னும் பல அதிகாரிகளும் இதேபோல் கோயில் பாலிசியை பின்பற்றி வருகிறார்கள். பாதிக்கப்படும் மக்களோ, ""தெய்வத்தின் பெயரால் இந்த புது டெக் னிக்கை பயன்படுத்தும் லஞ்ச அதிகாரிகளுக்கு தெய்வம் நிச்சயம் கூலி கொடுக்கும்'' என்கி றார்கள்.

செந்நாய்களின் அட்டகாசம்!


அதிகாலையில், கிடைக் காம்பவுண்டுக்கு வந்து பார்த்த மாரிமுத்துவும், ஆறுமுகமும், முருகையாவும் நிலைகுலைந்து போனார்கள்.

அவர்களுடைய 8 செம்மறி ஆடுகள் செத்து, வெளிறி, விரைத்துக் கிடந்தன. செந்நாய்க் கூட்டம், இந்த ஆடுகளின் குரல் வளைகளைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து விட்டுப் போயிருந்தன.

""போச்சே... ஒரே ராத்திரியில 80 ஆயிரம் ரூபாய் உசுரு களோட ரத்தத்தை குடிச்சு.... எங்களை கடன்காரங்களாக்கி விட்டதே'' -பரிதாபமாகப் புலம்பினார்கள் மூவரும். கால்நடை மருத்துவர் வந்தார். ""ஆமாம்... செந்நாய்கள் தான் கடிச்சுக் கொன்னுடுச்சு'' -எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

""நெல்லை மாவட்டத்தில் காடுகளும் தோப்புகளும், கம்பளி மலையும் கொண்ட தென்காசியை ஒட்டிய தட்டான் குளம் கிராமத்தில்தான் இந்த அவலம்.

""பொழுது போனாலே பயம்தான். எந்தத் திக்கில் இருந்து பாய்ஞ்சு வரும்னு யாருக்கும் தெரியாது. அஞ்சாறு செந்நாய்கள் சேர்ந்து, சேர்ந்துதான் வரும். ஊசிப்பாறை மாதிரி மூஞ்சி, கோரப்பல்லு, மூணடி ஒசரம்... பார்க்கவே பயங்கரமா, அகோரமா இருக்கும். ஒரு கவ்வுக் கவ்விச்சின்னா அரைகிலோ சதையைப் பிய்ச்சு எடுத்திடும். ஆனால் அதுகளுக்கு வேண்டியது ரத்தம்தான். ஆடு, மாடு, எதுவாயிருந்தாலும் குரல்வளை யில பாஞ்சிடும்...'' -முத்துகிருஷ்ணனும், மூக்கையாவும் ராமகிருஷ்ணனும் கண்களில் பயம் மின்ன சொன்னார்கள்.

தட்டான்குளம், விந்தன்கோட்டை பகுதியில் இதுவரை 40 ஆடுகளை, 3 எருமைகளை, ஒரு பசுமாட் டை பிணமாக்கி விட்ட தாகக் கூறுகிறார்கள்.

""இந்தச் செந்நாய்க் கூட்டம் 3 மாதமாத்தான் இங்கே வருது. இதுக வர்றதுக்கு முன்னாடி எங்க ஊர் நாய்கள் உள்ளூர்க்காரர்கள் யாரையும் கடித்ததில் லை. இப்ப ஆறுமுக வடிவு, சொர்ணம் மாள், பால ஜெயந்தி, இசக்கியம்மாள், அச் சன்கொண்டான்னு எட்டுபேரை கடிச்சு விட்டன. ஒவ்வொருத்தரும் ஆறு ஊசி போட்டிருக்காவ...'' என்கிறார் மாணவி பால ஜெயந்தியின் தாயார் துரைச்சி. ""செந்நாய் களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆடுகள் வளர்ப்போருக்கு நிவாரணம் தரணும்னு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்திருக்கிறோம். அதோடு, இந்தச் செந்நாய்க் கூட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்கிறார் தட்டான்குளம் ஊராட்சித் தலைவர் சங்கரபாண்டியன்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ரத்தம் உறிஞ்சும் செந்நாய்க் கூட்டம், மனிதர் களின் குரல்வளையையும் குறி வைக்குமோ என்ற பயம் தட்டான்குளம், விந்தன் கோட் டை ஏரியாவில் பரவிக்கொண்டிருக்கிறது.

""மக்கள் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒன்று, ஊருக்குள் வரும் செந்நாய்களோடு கிராமத்து நாய்களுக்கு பழக்கம் ஏற்பட்டால் அவை களுக்கு உள்ள பழக்கம் இவைகளுக்கும் பற்றிக்கொள்ளும். பிறகு இவைகளும் ரத்தம் குடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் வெறி பிடிக்காது. பிகேவியர் சேஞ்சஸ்தான்'' என் கிறார் கால்நடை மருத்துவரான செல்வ ராஜ்.

""ஜெ.'' போட்ட உத்தரவு! தொண்டர்களுக்கு தொங்கும் தூக்கு கயிறு!



""தீயில் கருகி துடிதுடித்து இறந்த அந்த 3 மாணவிகளை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. அந்தக் கொடூரத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது. அப்பாவி மாணவிகள் தப்பிக்க முடியாத படி பஸ்சின் கதவை மூடித் தீவைத்து, திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைத்தான் சேலம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டை ஏற்றால், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே வீணாகிவிடும்...!''.

தருமபுரி பஸ்ஸில் மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில், 30.8.10 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ். சவுஹானும் கனத்த இதயத்தோடு குறிப்பிட்ட உருக்கும் வாசகங்கள் தான் இவை.

கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.





தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் பறந்தது. ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து, சாலைமறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தமிழகம் முழுதும் வன்முறைகள் நடந்தன. தருமபுரியிலும் நடந்தது...

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் வந்த பேருந்தை தருமபுரி இலக்கியம்பட்டிப் பகுதியில் வழி மறித்து நிறுத்தி, பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்தார்கள். மாணவிகள் கோகில வாணியும், காயத்ரியும், ஹேமலதாவும் தீயில் கருகி உயிரிழந்தார்கள். அகில இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது சேலம் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் இறந்து விட்டார். எஞ்சிய 30 பேரில் இருவரை விடுதலை செய்தது சேலம் நீதிமன்றம்.

மீதி 28 பேரில், ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், முத்து (எ) அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன், ராஜு, மணி, மாதுராமன், முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தௌலத், பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகிய 25 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது சேலம் நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும், சேலம் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுச் சிறைத் தண்டனையை 2 ஆண்டாக குறைத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறி ஞர்கள் அல்தாப் அகமதுவும், சண்முகசுந்தரமும் ஆஜராகி ""கீழ்க்கோர்ட் குற்றவாளிகளுக்கு விதித்த தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும்!'' என்று வாதாடினர்.

அ.தி.மு.க.வினர் சார்பில் வாதாடிய சுஷில்குமார், ""இந்த வழக்கில் நம்பகத்தன்மையுள்ள சாட்சிகள் இல்லை. சாலைமறியலில் ஈடுபட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படை யில் இந்த மூவரும்தான் பஸ்ஸை எரித்திருப்பார்கள் என்பது வெறும் யூகமே... ஆகவே மரண தண்ட னையை ரத்துச் செய்ய வேண்டும்!'' என்று வாதாடினார்.

25 பேருக்கு 2 ஆண்டுத் தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த 25 பேரும் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த ஆகஸ்ட் 30 நண்பகலில் தருமபுரி அ.தி.மு.க. வட்டாரத்தில் கோபத் தையும் கண்ணீரையும் பார்க்க முடிந்தது.

""யாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு இதைச் செய்தார்கள். அம்மா வுக்காகத்தானே! அம்மா உத்தரவு போட்டதால் தானே செய்தோம். கீழ்க் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் தீர்ப்பு வந்தபோது அம்மா இருக்கிறார்... கட்சி இருக்கிறது... தூக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்... காப்பாற்றுவார்னு சொன்னாங்களே... இப்ப என்ன நடந் திருக்கு தலைமை பேச்சை கண்ணை மூடிக்கிட்டு அடிமை போல கேட்டு நடந்த மூன்று தொண்டர்களின் கழுத்துக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செஞ்சுடுச்சு. இனிமேல் என்ன சொல்லுவார்கள்? கருணை மனு போடலாம்னு தானே... சே... ச்சே...!'' என்று பகிரங்கமாகவே சத்தம் போட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

அ.தி.மு.க.வினரால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமியை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம்.

""தாமதமானாலும் நீதி சாகாது என்பதைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. பெறாத பிள்ளைகளான சாட்சிகள் எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் சத்தியத்தில் நின்று சாட்சியளித்தார்கள். தங்கள் கட்சித் தலைமைக்காக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எரிக்கலாம், கொல்லலாம் என்று செயல்படுபவர்களுக்கு இதுதான் சரியான பாடம்...!'' கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் வீராசாமி.

எரித்துக் கொல்லப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா பெயரில் "கே.ஜி.எச்.' அறக்கட்டளையை நிறுவிய அதன் தலைவர் அருள் நம்மிடம், ""உச்சநீதிமன்றம் மிக அரிதாகவே மரண தண்டனை விதிக்கிறது. அரசியல் தலைமையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இனிமேலும், யாரும் இப்படிப்பட்ட கொடிய, இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு சக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெருத்த ஆறுதலாக அமைந்திருக்கிறது!'' என்கிறார்.

அமைச்சர் தம்பி உயிருக்கு குறி! தமிழகத்தைக் கலக்கும் பிரபல தாதா திகில் வாக்குமூலம்!


தமிழக அளவில்... கூலிப்படை நெட் ஒர்க்காக செயல்பட்டு.. பகீர் க்ரைம்களை அரங் கேற்றிவந்த ஒரு டேஞ்சரஸ் தாதாவைக் காக்கிகள் சுற்றி வளைக்க... விசாரணையில் அவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம்... அரசியல்வட் டாரத்தில் பதட்டப் பரபரப் பை ஏற்படுத்த ஆரம்பித்திருக் கிறது.

பிடிபட்டிருக்கும் தாதா வேறுயாருமல்ல, திருச்சி குணா. டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை. முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான். எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி. இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா. இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன், செங்கல்பட்டு ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த், பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்... தமிழகம் முழுக்க தன் க்ரைம் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக் கிறான். இந்த குணாவின் க்ரைம் ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள் கிடைத்தன.

திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது. அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான். இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன் சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி டீமில் ஐக்கியமானான்.


முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ் ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல் செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத் தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான். இதேபோல்... கீரனூர் வழக்கறிஞர் கார்த்திகேயனை.. நாகேந்திரன் டீம் போட்டுத்தள்ள.. கார்த்தி டீம் நாகேந்திரனை பதிலுக்குப் பொலி போட்டது. உடனே கார்த்தி டீமைச் சேர்ந்த சக்தி, சிவா, அண்ணாமலை ஆகியோரை படுகொலை செய்யும் அசைன்மெண்ட்டை சிறையில் இருந்த குணாவிடம் நாகு டீம் கொடுத்து... அவனை ஜாமீனிலும் வெளியே எடுத்தது. இந்தத் தகவல் மெல்ல காக்கிகளுக் குப் போக... எஸ்.ஐ. மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த டீம்தான் கடலூரில் பதுங்கியிருந்த குணாவைத் தற்போது மடக்கியிருக்கிறது. அப்போதுதான் அவன் வைத்திருந்த ஒரு வி.ஐ.பி. பற்றிய பகீர் அசைன்மெண்ட் காக்கிகளுக்குத் தெரியவந்தது..

நம்மிடம் அந்த காக்கி அதிகாரி ""குணா டேஞ்சரஸான ஆள். திருச்சி ஃபைனான்ஸியர் பாலுவிடம் பணம்கேட்டு கொலைமிரட்டல் விடுத்த அவனை சமீபத்தில் பிடிக்கப் பார்த்தோம். ஆனா எங்க கைகளையே வெட்டிட்டு தப்பிச்சிட்டான். அடுத்து மண்ணச்சநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த அவனைப் பிடிக்க முயன்றோம். துப்பாக்கியால் சுட்டப்ப மயிரிழையில் தப்பிசிட்டான். இப்பதான் வசமா மாட்டியிருக்கான். இவனுக்கு தி.மு.க. வட்டச் செயலாளர் ஒருவரே பினாமியா இருப்பதையும்... டிரிபிள் மர்டர் அசைமெண்ட்டுக்காக... நாகுவின் உறவினரான மாஜி.. அ.தி.மு.க. ஒ.செ ஒருவர் இவனுக்கு கார் வாங்கிக் கொடுத் திருப்பதையும் சொன்னான். அதோட திருச்சியின் பிரபல வி.ஐ.பி ஒருத்தரையும் குறிவைத்திருந்ததாக எங்கக்கிட்ட வாக்குமூலம் கொடுத்தான்''’ என்று அதிரவைத்தார்.

விசாரணையின்போது குணா ""வக்கீல் கார்த்திகேயன் டீமைச் சேர்ந்த 3 பேரைப் பொலி போடறதோட... அந்த ராமஜெயத் தையும் தீர்த்துக்கட்டும் அசைன்மெண்ட்டோட இருந்தேன். அதுக்குள்ளப் பிடிச்சிட்டீங்க'' என்று சொல்ல...’""எந்த ராமஜெயத்தை?''’என காக்கி அதிகாரிகள் நெற்றி சுருக்கினர். குணாவோ ""அதாங்க... போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தைத் தான்''’என்றான் கேஷுவ லாய். இதைக்கேட்டு வெல வெலத்துப்போன காக்கி அதிகாரிகள்... ""யார்றா உனக்கு இந்த அசைன் மெண்ட்டைக் கொடுத்தது?'' என்றபோது... ""இங்க லோக்கல்ல இருக்கும் சில அரசியல் புள்ளிகள் தான். அதை இப்போ பகிரங்கமா சொல்ல மாட்டேன்''’என்றான் அழுத்தமாக. இந்தத் தகவலை மேலிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு... மேற்கொண்டு அவனை விசாரிக்கும் முடிவில் பரபரத் துக் கொண்டிருக்கிறார்கள் காக்கிகள்.

அமைச்சரின் இளவலைக் கொல்லும் அளவிற்கு... யார் எதிரிகள் இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியை... திருச்சிக்காரர்களால் எம்.டி. என அழைக்கப்படு பவரும் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராம ஜெயத்திடமே கேட்டோம். புன்னகையோடு பேச ஆரம்பித்தவர்.... ""நானும் கேள்விப்பட்டேன். எனக் கும் ரவுடிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த ரவுடிக்கும் ஆதரவாகவோ...எதிராகவோ நான் போலீஸில் பேசியது கூட கிடையாது. தலைவர் கலைஞர் இடும் கட்டளைக்கு ஏற்றபடி... அண்ணனுக்கு ஒத்தாசையாக கழகப்பணிகளைச் செய்துவருகிறேன். வியாபாரத்தில் கூட எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லையே''’என்றார் யோசனையாய்.

மேலும், மிகப்பெரிய டெரர் அசைன்மெண்டு களை அரங்கேற்றும் முன்... திருச்சி குணா மடக்கப் பட்டிருப்பது ஆறுதலான ஒன்று.