Thursday, June 24, 2010

முதியவனுக்கு வந்த சபலம்!



shockan.blogspot.com

முதியவர்கள், எல்லா வகையிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறார் இந்த 70 வயது தாளாளர்.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில், 300-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பயிலும் கே.பி.எஸ். (கொடைக் கானல் பப்ளிக் ஸ்கூல்) பள்ளியின் தாளாளர் 70 வயதைத் தாண்டிய பிரைட்.

பிரைட்டின் கெஸ்ட் ஹவுஸில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு ஏழை மாணவி கர்த்தவ்யா, தனது உறவினரான ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் சார்லஸ் சாமுராஜுக்கு போன் செய்தாள்.

""அங்கிள்... வார்டன் ரத்தினம் செல் ஃபோன்ல பேசுறேன்... கரஸ்பாண்டண்ட் பிரைட் சார்... ரொம்ப அசிங்கமா... ஆபாசமா நடத்து கிறார். செக்ஸ் டார்ச்சர் பண்றார்... ப்ளீஸ் அங்கிள் உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுங்க. இல்லைனா... செத்துப் போயிடுவேன் அங்கிள்!'' கதறினாள் கர்த்தவ்யா.

கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலுக்கு காரமடை, கன்னிவாடி, கோத்தகிரியிலும் பள்ளிக்கூட கிளைகள் உள்ளன. காரமடைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த கர்த் தவ்யாவை, கூட்டி வந்து இந்த கே.பி.எஸ்.சில் சேர்த்திருந்தார் சார்லஸ் சாமுராஜ்.

""என் மனைவியின் சொந்தக்கார மாணவி இந்த கர்த்தவ்யா. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஏழை மாணவிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் கே.பி.எஸ். பள்ளியில் பிரைட் சேர்த்துக் கொள்கிறார் என்று ஃபாதர் கிறிஸ் டோபர் சொன்னார். அதனால்... அங்கு 9-ஆம் வகுப்பில் சேர்த்தேன். ஹாஸ்டலில் தங்க வைத்தார். மாதா மாதம் 500 ரூபாயை தவறாமல் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கர்த்தவ்யா எனக்குப் போன் செய்து பதட்டத்தோடு சொன்னதும் உடனே கொடைக்கானல் போனேன்.... அந்த 70 வயதுப் பெரியவர் நடந்து கொண்ட விதத்தை நீங்களே கர்த்தவ்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!'' கர்த்தவ்யாவை நம்முன் நிறுத்தினார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

""நான் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்குப் போகும் போது வழிமறிச்ச பிரைட் சார் "இனிமே நீ ஹாஸ்டல்ல தங்கக் கூடாது. உன்னை மாதிரி ஏழைப்பசங்க 16 பேர் என் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிப் படிக்கிறாங்க. நீயும் தங்கிக் கொள்'னு கூட்டிப்போனார். அன்னைக்கி நைட்... நைட்டியை போட்டுக்கிட்டு படம் பார்க்க மாடிக்கு வாங்கனு கூப்பிட்டார்.





எல்லாரும் மாடிக்குப் போனோம். அசிங்கமான இங்கிலீஷ் படத்தை டி.வி.யில போட்டுக் காட்டி... "இந்த மாதிரி படங்களைப் பாருங்க அப்பத்தான் இங்கிலீஷ் சரம் சரமா பேச வரும்' என்றார் பிரைட்.
மறுநாளும் அதே மாதிரி படம்... 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவிகள் எல்லாரும் படம் பார்த்தபடியே தூங்கிட்டாங்க. அப்ப எங்க நடுவில வந்து உட்கார்ந்த பிரைட் சார்... முதல்ல தோள்ல கையைப் போட்டார். பிறகு, கண்ட கண்ட இடத்தில எல்லாம் தொட்டாரு... நான் அழுதுகிட்டே எழுந்து கீழே ஓடி வந்துட்டேன். காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் கிளாசுக்கு போக முடியலை. படுத்துக்கிடந்தேன். கெஸ்ட் ஹவுஸ்ல நான் மட்டும் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு பிரைட் சார் வந்தார்... கட்டிப் புடிச்சு டார்ச்சர் செஞ்சாரு... எழுந்து சுவரோரமாப் போய் நின்னேன்...

"உன் மாமன் மாதம் 500 தான் கொடுக்கிறான்... மீதியை நான்தான் போடுறேன்... என் இஷ்டப்படி நடக்கலைனா வெளியே போடி'னு மிரட்டினாரு... அதுக்குப் பிறகு தான் வெளிய ஓடினேன். ஹாஸ்டலுக்கு போய் வார்டன்ட்ட செல்ஃபோனை வாங்கி அங்கிள்ட்ட சொன்னேன்!'' திக்கித் திணறி கண் கலங்கியபடி சொன்னார் மாணவி.

இனிமேல் "பிரைட்' டின் கட்டுப்பாட்டில் கர்த்தவ்யாவை படிக்க வைக்க விரும்பாத பாதிரியார் சார்லஸ் சாமுராஜ் மாணவியின் டி.சி.யை வாங்குவதற்காக தலைமையாசிரியர் சீபாபால் அறைக்குச் சென்றிருக்கிறார்.

""ஹெச்.எம்.மிடம் பேசிக் கொண்டிருக் கும் போது ரொம்ப கோபமா அங்கே வந்த பிரைட் "டேய்... இந்த புள்ளை உடம்பில எங்கெங்கே நான் தொட்டம்னு சொல்லச் சொல்லுடா'னு என்னை அடிக்க வந்தார்... நான் சத்தமா பேச ஆரம்பிச்சதும் உடனே டி.சி.யை கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறுமிகளை பாழ்படுத்தும் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட முதியவரை சும்மாவிடக் கூடாது. காவல் துறையில் புகார் கொடுக்க விரும்புகிறேன். நக்கீரன் எனக்கு உதவி செய்யணும்!'' -நடந்ததை விளக்கி, நமது உதவியைக் கேட்டார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

பாதிரியாரை, டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றோம். நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், எஸ்.ஐ. ராஜபுஷ்பம் தலைமையில் ஒரு டீமை அந்த ஸ்கூலுக்கு அனுப்பினார்.

தாளாளர் பிரைட் டின் கெஸ்ட் ஹவு ஸில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய ஸ்பெஷல் டீம் பிரைட் மீது எஃப். ஐ.ஆர். போட்ட தும் தலைமறை வாகி விட்டார் பிரைட்.
பள்ளியின் முதல்வர் சீபா பாலோ ""அந்த மாணவி வேண்டுமென்றே பொய் சொல்கிறார்!'' என்கிறார்.

""பிரைட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கப் போகிறோம்!'' என்கின்றது போலீஸ். யாரைத் தான் நம்புவதோ?

தமிழனுக்கு கிடைத்த புதையல்!


""ஹலோ தலைவரே... .... பாசனத்திற்கு தண்ணீர் வேணும்னு கிணறு வெட்டுற நேரத்தில், புதையல் கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ அப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக் கிறார் கலைஞர்.''

""செம்மொழி மாநாட்டைப் பற்றித்தானே சொல்றே?''

""மாநாட்டுச் சிறப்பு ஒருவித மகிழ்ச்சின்னா, சமீபத்தில் கிடைத்திருக்கும் 86 செப்பேடுகள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்குது. ராஜராஜசோழனின் பேரனான முதலாம் ராஜாதிராஜன் நிலபுலன்கள் தொடர்பாக அளித்த ஆணையை அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் உறுதிசெய்து வழங்கிய செப்பேடுகள்தான் அது. மேலைச் சாளுக்கிய மன்னர்களை எதிர்த்து கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில், யானை மீது இருந்த முதலாம் ராஜாதிராஜன் வேல் பாய்ந்து இறந்துபோக, அந்தக் களத்திலேயே மன்னனாக முடிசூடிய அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திரன், சிதறிய சோழப்படைகளை உடனடியாக ஒருங்கிணைத்து போரில் ஜெயித்தான். அந்த கொப்பம்தான், சந்திரபாபுநாயுடுவின் ஊரான ஆந்திர மாநிலம் குப்பம். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட சோழர்கள் ஆட்சிக்காலத்தில் நில நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை இந்த செப்பேடுகள் காட்டுது. தமிழ் மூவேந்தர்களின் ஒற்றுமையையும் காட்டும் விதத்தில் புலி, வில், மீன் என மூன்று சின்னங்களும் பொறிக்கப் பட்ட இந்த செப்பேடு கலைஞருக்கு சந் தோஷத்தைக் கொடுத்திருக்குது. செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் இந்த செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.''

""தங்களுக்குள் மோதிக்கொண்ட மூவேந்தர்கள், தமிழுக்காக ஒற்றுமையாக இருந்தது சரி. செம்மொழி மாநாடு நடக்கிற நேரத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சி போராட்டம் நடத்துதே?''

""ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமையை பின்தள்ளுவதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தப்படுதுன்னு அ.தி.மு.க, ம.தி.மு.க, சில தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் குற்றம்சாட்டிவந்த நிலையில், மின்னஞ்சல் மூலமா இரா.மு.சுபன்- இணைப் பாளர்-தலைமைச் செயலகம்-தமிழீழ விடுதலைப்புலிகள் -தமிழீழம்ங்கிற முகவரியி லிருந்து உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட் டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் மாநாடு உறுதுணையாக இருக்கும் என்று வந்திருக்கிற அறிக்கை முதல்வருக்கு மனநிறைவைத் தந்திருக்குது. மாநாட் டுக்கு 2 நாள் முன்னதாகவே கோவைக் குப் போய் உற்சாகமா இறுதிக்கட்டப் பணிகளை பார்த்து, கடைசி நேர மாறுதல்களை செய்ய ஆரம்பித்து விட்டார்.''

""ஜெ மட்டும் மாநாட்டை தொடர்ந்து எதிர்த்துக்கிட்டே இருக்காரே? புறக்கணிப்பு, போராட்டம், கேலிக்கூத்துன்னு காரசாரமா அறிக்கைகள் வெளியாவதன் பின்னணி என்னவாம்?''

""மாநாட்டுக்கு எப்படியாவது இடையூறு வராதா, கலவரம் உண்டாக வாய்ப்பிருக்கு தாங்கிறதுதான் ஜெ.வோட எதிர்பார்ப்பு. ஆனா, செம்மொழி மாநாட்டுக்கு மக்கள் கிட்டே ஆதரவு இருக்குன்னு அவர் கைக்கு ரிப்போர்ட் போயிருக்குது. இந்த ரிப்போர்ட்டை தொகுத்து கொடுத் திருக்கிறவர், அ.தி.மு.க வட்டாரத்துக்குள் நியூ என்ட்ரியான சேஷாத்திரி அய்யங்கார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தினமும் எல்லா பத்திரிகை செய்திகளையும் படித்து, அதில் ஜெ.வின் கவனத்திற்குப் போகவேண் டிய முக்கிய செய்திகளை தொகுத்து, கம்ப்யூட்டர் மூலமா அதையெல்லாம் ஒரு பத்திரிகை போல வடிவமைத்து கொடுப்பதுதான் இவரோட வேலை. செம்மொழி மாநாடு சம்பந்தமா பாசிட்டவான தகவல்களை இவர்தான் ஜெ.கிட்டே தெரிவித்திருக்கிறார்.''

""அ.தி.மு.க எம்.பிக்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை திங்கட்கிழமையன்னைக்கு சந்திச்சி மனு கொடுத்தாங்களே?''

""15 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க எம்.பி.க்கள் கொடுத்த மனுவில் ஜெ ஒரு விஷயத்தை சேர்த்திருந்தார். அதாவது வழக்காடும் மொழி யாக தமிழை அறிவிக்கணும்ங்கிற கோரிக்கைதான் அது. பார்ப்போம்னு மட்டும் ஜனாதிபதியிடமிருந்து பதில் வந்ததாம். தம்பிதுரை, மைத்ரேயன், பாலகங்கா, வேணுகோபால், சிவசாமி உள்பட 8 அ.தி.மு.க எம்.பி.க்களோடு ம.தி.மு.க கணேச மூர்த்தியும் ஜனாதிபதியைப் பார்க்கப் போனாங்க. மனுவில் சி.பி.ஐ. சார்பில் கையெழுத்து போடப்பட்டிருந்தது. ஆனா, சி.பி.எம். இதில் கையெழுத்திடலை.''

""ஓ...''

""செம்மொழி மாநாட்டுக்கு புலிகளிடமிருந்து வந்த அறிக்கையை கலைஞர் வரவேற்றதால, இதை இஷ்யூவாக்கி காங்கிரசின் ஆதரவைப் பெறலாம்ங்கிற கணக்கில் ஜெ. ஒரு கண்டன அறிக்கை ரெடி பண்ணிக்கிட்டிருக்கிறார். இது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புலி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்குது?''

""செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடிகுண்டு சம்பவத்தில் குற்றவாளிகளும் பிடிபடலை, காரணமும் புரிபடலையே?''

""ரயில்வே நிர்வாகம் சில விவரங்களை மறைக்கிறதுதான் இதற்கெல்லாம் காரணம்னு தகவல் வருதுங்க தலைவரே... என்ன நடந்ததுங்கிறது தொடர்பான சந்தேகங்களை ரயில்வே துறை தெளிவாக்கவேயில்லை. சேலம் பாசஞ்சர் ரயில் க்ராஸாகிப் போனபிறகுதான் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததுன்னு ரயில்வே நிர்வாகம் சொல்லுது. இதுதான் சந்தேகத்துக்கு காரணம். உண்மை என்னன்னு தெரிஞ்சிக் கிறதுக்காக நானே நேரில் போனேங்க தலைவரே.. இன்ஜினுக்கு முன்புறத்தில் , ஒரு இரும்புத்தகடு இருக்கும். தண்டவாளத்தில் கல்லு, கட்டை ஏதாவது இருந்தா இது தள்ளிவிட்டுட்டு, ரயில் போறதுக்கு வழி பண்ணும். அதோடு சேண்ட் பைப் ஒண்ணும் முன்பகுதியில் இருக்கும்.''

""அது என்ன?''

""அதாவது, மழைக்காலத்தில் தண்ட வாளத்துக்கும் சக்கரங்களுக்குமிடையில் க்ரிப் இல்லாமல் போயிடும். அதனால, ரயில் தடம்புரண்டிடக் கூடாதுங்கிறதுக்காக இன்ஜினில் ஒரு லீவர் இருக்கும். அதை டிரைவர் இழுத்தால், அதிலிருந்து சேண்ட் பைப் வழியா தண்டவாளத்தில் மணல் தூவப்படும். மணல் தூவியதும் க்ரிப்போடு வண்டி ஓடும். சேலம் பாசஞ்சர் ரயில் இன்ஜினில் இந்த சேண்ட் பைப் அடிபட்டு வளைஞ்சிருக்குது. குண்டு வெடிக்கிறதுக்கு முன்னாடி ரயில் க்ராஸ் ஆயிருந்தா பைப் இப்படி வளைஞ்சிருக்காது. அதுபோல கடைசியா இருந்த கார்டு பெட்டியும் டேமேஜ் ஆகியிருக்குது. அதனால, குண்டு வெடிச்சபிறகுதான் தண்டவாளத்தில் அந்த ரயில் போயிருக்குது. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால், ஏன் ரயிலை நிறுத்தலை, மக்கள் உயிர் என்னாகிறதுன்னு ரயில்வே நிர் வாகம் கேள்விக்குள்ளாகும். அந்த ரிஸ்க்கை எதிர் கொள்ளக்கூடாதுன்னுதான் ரயில்வே அதிகாரிகள், வட்டாரம் இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி மறைச்சு மறைச்சு பேசுது'.

""விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி அரெஸ்ட் டாகியிருப்பதும், அதையடுத்து 3 விடு தலைப்புலிகள் வெடிகுண்டோடு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகிக்கொண்டி ருக்குதே?''

""புலிகளின் உளவுப்பிரிவில் சிரஞ்சீவி ரொம்ப முக்கியமானவர். பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். உளவறிந்து சொல்வதில் ரொம்ப கெட்டிக்காரர்னு ஈழ வட்டாரம் சொல்லுது. இவர் சொன்ன தகவல்கள் எதுவும் தவறாக இருந்ததில்லையாம். இறுதி யுத்தம் நடந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு சிரஞ்சீவி வந்துட்டார். அவர் பிடிபட்டிருப்பது எங்களோட அடுத்த கட்ட முன்னேற்றங்களுக்குப் பெரிய தடையா இருக்கும்னு புலிகள் வட்டாரம் சொல்லுதாம். தமிழக வட்டாரமோ, 15 நாளுக்கு முன்னாடியே சிரஞ்சீவி யை பிடிச்சாச்சுன்னும் வெளியே தெரியாமல் அவர் விசாரிக்கப்பட்டப்ப தமிழ்நாட்டில் யார் யாரைத் தெரியும், எந்தெந்த தலைவர்களை சந்தித்தேன்னு சொல்லியிருக்காராம்.''

""அடுத்த தகவல்?''

""செம்மொழி மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கிற நேரத்தில், பா.ஜ.க தலைவர் அத்வானி பர்சனல் விசிட்டாக தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அவர் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிற தலைவர். 22, 23, 24 இந்த 3 நாட்களும் அவர் தமிழ்நாட்டில் இருப்பதா ப்ளான். மாநாட்டுப் பாதுகாப்புக்கு போலீஸ் உயரதிகாரிகள் வரை எல்லோரும் போயிடுவாங்கங்கிறதால, வேற தேதிக்கு பர்சனல் விசிட்டைத் தள்ளி வச்சிக்க முடியுமான்னு தமிழக காவல்துறை தரப்பி லிருந்து கேட்கப்பட்டிருக்குது. நோ...ன்னு அத்வானி தரப்பிலிருந்து பதில் வந்திருக்குது. அதனால செம்மொழி மாநாட்டு நேரத்தில், அத்வானிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையிலும் தமிழக போலீஸ் இறங்கியிருக்குது.''

""தி.மு.க.வில் அழகு திருநாவுக்கரசு சேர்ந்திருப்பதால் ஜெ தரப்பில் ஒரு புது சந்தோஷம் தெரியுது. அந்த விவரத்தை நான் சொல்றேன்.. ஜெ ஆட்சியில் இருந்தப்ப அவரோட பிறந்த நாளுக்கு அனாமத்தா வந்த 3 லட்சம் டாலர் செக் சம்பந்தமா இன்னமும் வழக்கு நடந்துக்கிட்டிருக்குது. இதில் 88 லட்ச ரூபாயை வசூலித்து அதை டி.டி.யா மாற்றியதா இந்த வழக்கில் அழகுதிருநாவுக்கரசு மேலே சார்ஜ் இருக்குது. மெயின் அக்யூஸ்ட்டான அவர் இப்ப ஆளுங்கட்சிக்குப் போயிட்டார். ஏற்கனவே டி.எம்.செல்வ கணபதி இப்படி கட்சி மாறியதால் கலர் டி.வி. வழக்கு புஸ்வாணம் ஆனது. இப்ப அழகு திருநாவுக்கரசால பிறந்த நாள் பரிசு வழக்கும் நீர்த்துப்போயிடும்ங்கிறது தான் ஜெ தரப்பின் சந்தோஷத்துக்கு காரணம்.''

யுத்தம் 64 -நக்கீரன் கோபால்



""அதோ பாரக்கா...'' என்ற கமெண்ட் டுடன் வெளியான அந்தப் படத்தை நாம் எங்கிருந்தும் எடுக்கவில்லை. ஜெ.வும் சசிகலாவும் சேர்ந் திருக்கும் அந்தப் படம் போயஸ் கார்டன் வழி யாகத்தான் நமக்கு வந்தது. தோட்டத்துச் சுவரில் உள்ள ஓட்டையை அடைக்காமல், போட்டோ கிராபர்களையும் லேப் டெக்னீ ஷியன்களையும் அள்ளிக் கொண்டு வந்து சகட்டுமேனிக்குத் தாக்கி யிருக்கிறார்கள்.

ஊட்டியில் உள்ள அனைத்து ஸ்டுடியோக்களுக்கும் 6 நாட்கள் லீவு விடச் சொல்லியும், ""ஓய்வு என்ற பெய ரில் மேற்கொண்ட டீலிங் விசிட் பற்றிய ரகசியங்கள் வெளியாகிவிட்டதே'' என்ற கோபத் துடன்தான், ""மீசை வச்சிருக்கிற ஆளை அடிச்சிட்டு வா'' என்று ஆட்டோவில் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள். பெரிய மீசை வைத்திருப்பது அப்போது இருந்த ஆட்சியாளர்களை மிரளவைத்ததுடன், பழிவாங்கும் வெறியையும் தூண்டியதென்றால், அது பலருக்கு இன்ஸ் பிரேஷனாகவும் இருந்திருக்கிறது.

"தேவர் மகன்' படம் வெளி யாகியிருந்த நேரம். நடிகர் திலகம் சிவாஜி சாரும், கமலும் பெரிய மீசையுடன் அப்பா- மகனாக நடித்திருந்தார் கள். சிவாஜி சார் எத் தனையோ கெட்டப்புகள் போட்டு வித விதமான மீசை வைத்தவர். கமல் இந்த மாதிரி மீசை வைத்திருப்பது அதுதான் முதல் முறை. தென்மாவட் டத்துக்காரர்களுக்கேயுரிய கம்பீர மீசையுடன் பரமக்குடிக் காரரான கமல் அந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்த சமயத் தில், குமுதம் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்த மீசையை எப்படி செலக்ட் செய் தீர்கள்' என்ற கேள்வி கேட்கப்பட, தனக்கு இன்ஸ் பிரேஷனாக இருந்த பல மீசைகளில் என்னுடைய மீசையும் ஒன்று என்றும் அவர் சொல்லி யிருக்கிறார். வண்ணத்திரை என்ற பத்திரிகையிலும் அப்போது ஆசிரியராக பணியில் இருந்த ரெகோ வும் இதை செய்தியாக்கி இருந்தார்.

சன் டி.வி.யில் நேருக்கு நேர் நிகழ்ச்சி. என்னை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ரபி பெர்னாட். (ரபி பெர்னாட் அப்போது சன் டி.வி.யில் பணியாற்றினார்.) அவர் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று, இந்த மீசையைப் பற்றியது. "தேவர் மகனில் கமலுக்கு உங்க மீசைதான் இன்ஸ்பிரேஷனாமே?' என்றார்.

""சார்... கமல் ரொம்ப ஜீனியஸ். ஒரு கேரக்டருக்காக அவர் எவ் வளவோ பாடுபட்டு நடிக்கிறார். அதற்கான மேக்கப், கெட்டப், காஸ்ட்யூம் என்று பல இடங்களிலும் தேடுகிறார். அவருக்கு எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அப்படிப்பட்டவர், தன்னுடைய மீசைக்கு நானும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லியிருக்காருன்னா அது அவரோட பெருந்தன்மை. அவர் அப்படி சொன்னதுக்காக, நான் உடனே... கமல் என்னோட மீசையைத்தான் வச்சிருக்காருன்னு சொல்ல மாட்டேன். இதை எங்க ஊரு பக்கம் போய் சொல்ல முடியாது. சொன்னா விளக்குமாறு பிஞ்சு போகும். ஊருல ரோட் டோரக் கடையில முட்டை புரோட்டா அடிக்கிறவரு, மூட்டை தூக்கு றவங்க, முள்ளுவெட்டுறவங்க, டிரைவரு, கண்டக்டரு, வயல்ல கலப் பைய பிடிச்சு ஏர் ஓட்டுறவங்க எல்லாரும் இதே மாதிரிதான் மீசை வச்சிருப்பாங்க.

என்னைப் பார்த்துதான் கமலே மீசை வச்சாருன்னு சொன்னா, அவங்க பதிலுக்கு, "யேய் இங்க வா... நீயே எங்களைப் பார்த்துதான் மீசை வச்சிக்கிட்டு பட்டணத்திலே இருக்கே... கமல் வச்சிருக்கிறது உன்னோட மீசையா'ன்னு கேட்டு அங்கேயே வச்சு வெட்டுவாங்க. அதனால தேவர் மகனில் கமல் வைத்த மீசைக்கு நான் உரிமை கொண் டாட முடியாது. அதற்கான காப்பிரைட் எங்க தென்மாவட்ட மக்கள் கிட்டே இருக்குதுன்னு சொன்னேன். ரபி பெர்னாட் அதை ரசித்தார்.





கமலைப் பற்றிய கேள்வி முடிந்ததும், ரஜினி சம்பந்தமான கேள்விக்குச் சென்றார் ரபி பெர்னாட்.

""ரஜினி உங்க நண்பரா?''

""ஆமா... கிளிண்டனும், பிரதமரும், ஜனாதிபதியும் என் நண்பர்கள்தான்...''

""சார்... நான் சீரியஸா கேட்கிறேன்...''

""நானும் சீரியஸாகத்தாங்க சொல்றேன். நான் அவருக்கு நண்பர் என்று ரஜினிதாங்க சொல்லணும். நான் சொல்லக் கூடாது'' என்றேன்.

""ஏன்?''

""அவர் இப்ப படுபிஸியா இருக்கார். அவரை நண்பர்னு சொல்லிக்கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனா, அவர் தானே தன்னோட நண்பர்கள் யாருன்னு சொல்ல முடியும். அதனால, என்னை அவர் தன்னோட நண்பர்னு சொன்னாருன்னா அதுதான் சரியா இருக்கும். நான் பாட்டுக்கு ரஜினி எனக்கு நண்பர்னு சொன்னா... நான் ரோட்டுல போகும்போது... "அந்தா போறான் பாரு இவன் எல்லோரையும் நண்பன்னு சொல்லி ஒரே பீத்து பீத்திக்கு வான்' என்று நக்கலடிக்க மாட்டாங்களா?'' என்றேன்.

-ரபி பெர்னாட் இதுக்கும் சிரித்தார்.

இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி சன் டி.வி.யில் ஒளிபரப்பான அன்று இரவு ரஜினி லைனில் வந்தார்.

""நண்பா... அதுக்காக இப்படி என்ன கேவலப்படுத்தக் கூடாது'' என்று அன்போடு பேச ஆரம்பித்தவர், நேருக்கு நேர் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்ததாகவும், ரொம்ப நேச்சுரலா பேசிய தாகவும் பாராட்டினார். அவரைப் பற்றி நான் சொன் னதைக் குறிப்பிட்டு, ""கரெக்ட்.. கரெக்ட்.. எஸ்... எஸ்... நான்தானே சொல்லணும், நேரம் வரும்போது நிச்சயமா சொல்வேன்'' என்று தன் பாணியில் சொன்னவர், மீசை யின் பின்னணி பற்றி நான் சொன் னதையும் ரசித்ததாக சொன்னார். பின்னாளில் பெங்களூரில் கர்நாடக சி.எம்.மை பார்க்க எனக்கு துணையாக வந்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா விடமும், ராஜ்குமார் குடும்பத்திடமும் என்னை ""என் நண்பர் கோபால்'' என்று அறிமுகப்படுத்தி விட்டு, "கோபால் நான் சொன்னேன் னில்ல நேரம் வரும்போது சொல் றேன்'னு என்றார்.

இந்த மீசைதானே போலீசின் சந்தேக கேள்விகளை அதிகப்படுத்திக் கொண்டிருக் கிறது. என் மீதான விசாரணைக் கானக் கேள்விகளை தயாரிக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் தேவாரமும் பெரிய மீசைதான் வைத்திருக்கிறார். வீரப்பன் இன்ஸ் பிரேஷனில்தான் அவரும் மீசை வைத்தாரா என்று யாரும் கேட்பதில்லை. கேட்டா சுட்ரு வார்.

டி.எஸ்.பி. நாகராஜனும் அவரது டீமும் என்னைச் சுற்றி யிருந்தது. மீசை பின்னணி பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து, ரஜினி பற்றிய கேள்விக்கு வந் தார் டி.எஸ்.பி. வீரப்பனோடு முடிச்சுப் போட்டு மீசை வரைக்கும் போனவர் கள், ரஜினி யோடு முடிச்சுப் போடுவதன் நோக்கம் புரிந்தது.
""ராஜ்குமார் கடத்தலில் ரஜினியோட பங்கு என்ன?'' -டி.எஸ்.பி. கேட்டார்.

""ரஜினி கர்நாடக மாநிலத்துக்காரர். தமிழ்ப் படங்களில் நடித்து தமிழர்களின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தனது மாநிலத்தைச் சேர்ந்த மூத்த நடிகரைக் கடத்தியிருப்பவர் ஒரு தமிழர் என்பதால், இரண்டு மாநிலங்களிலும் சிக்கல்கள் ஏற்படுமே என்று யோசித்தார். என் மீது அவருக்கு நம்பிக்கை உண்டு. அதனால், அவர் என்னிடம் ராஜ்குமாரை மீட்டுத்தரணும்னு சொன்னார். நான் பல முறை உங்ககிட்டே சொல் லிட்டேன். கலைஞர், சிவாஜிசார், ரஜினி சார், சின்னக்குத்தூசி அய்யா இவங்க வலியுறுத்திய தாலதான் நக்கீரன் இந்த மிஷனில் இறங்கியது.''

""சரி.. ரஜினிக்கு வேற என்ன பங்கு இருக்குது?''

""ராஜ்குமாரை பத்திரமா மீட்கணும்ங்கிற அக்கறையோடு இரண்டு மாநில முதல்வர்கள் கிட்டேயும் அவர் பேசினார். ராஜ்குமார் குடும் பத்தினருக்கு தைரியம் கொடுத்தார். கர்நாடகா வில் பதட்டத்தையும் சந்தேகத்தையும் தணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பா கலைஞர் என்னை கர்நாடக முதல்வரையும், ராஜ்குமார் குடும்பத்தாரையும் சந்திக்க அனுப்பினாங்க. உடன் ரஜினியும் வந்தார் எனக்கு உதவியாக.''

""இன்னும் வேற என்ன பங்கு இருக்கு?''

""என்ன கேட்குறீங்க?''

""நான் என்ன கேட்குறேன்னா..'' என்ற டி.எஸ்.பி. நாகராஜன், அதன் பின்னர் சொன்ன விவரங்கள் ரொம்பவும் முக்கியமானவை.

""1994-ல் டி.எஸ்.பி. சிதம்பரநாதனை வீரப் பன் கடத்தினான். அதற்கடுத்த வருசம், 1995-ல் அந்தியூர் ரேஞ்சர்ஸ் மூணு பேரைக் கடத்தி னான். அவங்களை உயிரோடு மீட்கணும்ங்கிற துக்காக அரசாங்கத்தின் தரப்பில் தூது முயற்சி நடந்தது. எல்லாப் பத்திரிகையிலும் அந்த நியூஸ் வந்தது. அரசாங்கத்துக்கு வீரப்பன் கோரிக்கை வச்சான். தன்னோட கோரிக்கையை நிறைவேத் தினாதான் 3 ரேஞ்சர்களையும் விடுவிப்பேன்னு சொன்னான். அவனோட கோரிக்கை என்னன்னா, ஆஜானுபாகுவான ஒரு ஆளை செலக்ட் பண்ணனும். அவன் சிவப்பு சட்டை போட் டிருக்கணும். சிவப்பு கலரில் மாலை போட் டிருக்கணும். சிவப்பு நிற புல்லட்டில் வரணும்னு சொல்லியிருந்தான். சும்மா வரச்சொல்லலை... 3 கோடி கேட்டிருந்தான்.

அவன் கேட்டமாதிரியே ஒரு ஆஜானு பாகுவான ஒரு ஆளைப் பிடிச்சி, சிவப்பு சட்டை, சிவப்பு மாலையோடு, சிவப்பு புல்லட்டில் முதல் தவணையா 3 லட்ச ரூபாய் பணத்தோடு அனுப்பி வைச்சது அப்போ இருந்த அரசாங்கம். அந்த தூதர் காட்டுக்குள்ளே போய், வீரப்பன் அடை யாளம் சொல்லியிருந்த இடத்துக்கிட்டே நின்னு கொடுத்ததுக்கப்புறம்தான் 3 ரேஞ்சர் களையும் மீட்க முடிந்தது. அதுமாதிரி, ராஜ்குமாரை மீட்கிற முயற்சியில் ரஜினியோட பங்கு என்னன்னு கேட்கிறேன்'' -என்றார் டி.எஸ்.பி. நாகராஜன்.

புரிந்துவிட்டது. ரஜினியை வைத்து போலீ சார் கொக்கிப் போடுகிறார்கள். ""சார்... நீங்க சொல்றமாதிரியான பங்கு எதுவும் ரஜினிக்கு கிடையாது. அவரோட நோக்கம், ராஜ்குமார் நல்லபடியா வரணும்ங்கிறதுதான்''.

அன்றைய விசாரணை முடிந்தது. வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்களை வழக்கம் போல் சந்தித்தேன். விசாரணை விவரங்களைக் கேட்டார்கள்.

ஒரு பெரிய செய்தி... ""ஜெயலலிதா ஆட்சியில் (1995) வீரப்பனுக்கு பணம் கொடுத்தோம்னு போலீஸ் அதிகாரியே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசா ரணையை வீடியோ பதிவு செய்யும் கேமரா வில் அது அப்படியே பதிவாகியிருக்கிறது'' என்றேன்.

அடுத்தநாள் வெளியான பத்திரிகை களில், வீரப்பனுக்கு ஜெ அரசு பணம் கொடுத்ததுதான் பரபரப்பு செய்தியாக இடம்பிடித்தது. அதிர்ந்துபோனது காவல்துறை. அந்த அதிர்ச்சி... அடுத்த நாள் விசாரணையில் வெளிப்பட்டது படுபயங்கரமாக..

-யுத்தம் தொடரும்

""எங்களின் எதிர்காலம்''! மாணவர்களின் கவலை!


shockan.blogspot.com

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சத்த மில்லாமல் ஒருமைப் பல் கலைக்கழகமாக அரசு மாற்றியிருக்கும் விவ காரம், தற்போது பொறியியல் கல்லூரி மாணவர்களிடமும் மாணவ அமைப்பு களிடமும் கவலை யையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட் டத்தொடரில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றி அமைக் கும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி. இதன் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி களை தனியாகப் பிரித்து சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என புதிதாக ஒரு பல்கலைக் கழகத்தை சென்னை தரமணியில் உருவாக்குகிறது அரசு.

இந்த புதிய சட்டம் மாணவர்களிடம் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றத் தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு மலை,’’""இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்வியில் சர்வதேச அளவில் பெருமை கொண்டது. இப்பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் உறுப்பு கல்லூரிகளாக இருக்கின்றன. இதிலிருந்து வருஷத்திற்கு சுமார் 25 ஆயிரம் மாணவ-மாணவியர் கள் படித்துவிட்டு வெளியே வருகிறார் கள். இவர்கள் அனைவருக்கும் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் என்கிற சான்றிதழ் கொடுக்கப் படும்.

ஒரு மாணவன் திறமை யுள்ளவன் என்பதை நிரூபிக்க இந்த சான்றிதழே போதும். அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக் கழகமாக மாற்றி, அதன் உறுப்புக் கல்லூரிகளை தனியாக பிரித்து அதற்காக சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று புதிதாக உருவாக்குவதன் மூலம் மாணவனின் சான்றிதழ் தகுதி பல வீனமாகிவிடுகிறது. அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரி களாக இருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., ஏ.சி. டெக் மற்றும் ஆர்க்கிடெக் கல்லூரிகளைத் தவிர மற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாகும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தோடு இணைத்துவிடுகிறார்கள்.

இதனால் இந்த கல்லூரிகளில் படித்து முடித்து வெளியே வரும் மாணவ- மாணவியர்களுக்கு இனி அண்ணா பல்கலைக் கழகத் தின் சான்றிதழ் வழங்கப் படாது, மாறாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்றே சான்றிதழ் கிடைக்கும். உயர்கல்விக்காக அல்லது வேலைக்காக மேலை நாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இது தடையை ஏற்படுத்தலாம். அதனால் மாணவர்களின் தகுதியை குறைக்கும் இந்த புதிய சட்டத்தை திரும்ப பெறுவது அவசியம். இது குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு போக முடிவு செய்திருக்கிறோம்'' என்கிறார்.




இந்த மாற்றம் குறித்து உயர்கல்வித் துறை வட்டாரங் களில்விசாரித்த போது,’""அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல் கலைக்கழகமாக மாற்றி அமைக்கப்பட்டதின் பின் புலமாக இருந்தவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்களான அனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி ஆகியோர்தான்''’என்கிறார்கள்.

இந்நிலையில், அனந்தகிருஷ்ணனை தொடர்பு கொண்டு இப்பிரச்சினை குறித்து பேசிய போது,’’""பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்ந்த அறிவியல்துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்பு கள் வழங்குவதுடன் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது அண்ணா பல்கலைக்கழகம். இப்பல் கலைக் கழகத்தோடு இணைந்துள்ள அரசு மற்றும் தனி யார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள் ளுதல் போன்ற பல்வேறு பணிச்சுமைகள் அதிகரித்த தால் கற்பித்தல் பணியும் ஆராய்ச்சி பணிகளும் முழு வீச்சில் நடைபெறவில்லை. அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப பொறி யியல் கண்டுபிடிப்புகளிலும், ஆராய்ச்சிகளிலும் அண்ணா பல்கலைக்கழகமும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. காரணம் பல்கலைக்கழகத்திற்கான நிர்வாகச் சுமைகள்தான். அதனால்தான் முதல்வரை சந்தித்து இந்த பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றினால் தான் ஆராய்ச்சிப்பணிகளில் அண்ணாபல்கலைக்கழகம் கடந்த காலங்களைப்போல வளர்ச்சியடைய முடியும் என்று வலியுறுத்தினோம்.

மாணவர்களின் தகுதி என்பது சொந்த முயற்சி யாக இருக்க வேண்டும். பல்கலைக் கழகத்தை சார்ந்து இருக்கக்கூடாது. அவர்களின் திறமையும் ஆற்றலும் தான் பெருமைகொள்ள பேசப்பட வேண்டுமே ஒழிய அந்த மாணவன் சார்ந்த கல்லூரி மூலம் இருக்கக் கூடாது. ஒரு மாணவனுக்கு திறமையும் ஆற்றலும் இருக்குமேயானால் அண்ணா தொழில் நுட்ப கல்லூரி மூலமும் அவனுக்கு பெருமை கிடைக்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் இனி ஆராய்ச்சி பணிகள் முழு வீச்சில் நடக்கும். அதேசமயம் சிலபல வழிகளில் பணம் வரும் பாதை அடைக்கப்பட்டு விட்டதால் எழுந்த அதிர்ச்சியில் சிலர் இப் படி புரளி கிளப்புகிறார்கள், அவ்வளவு தான்'' என்கிறார்.

மாணவர்களின் பிரச்சினைக்காக தேசிய அளவில் போராடும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் அமைப்பு செயலாளர் சந்தீப்,’’""நிர் வாகச் சுமைகளால்தான் ஆராய்ச்சிப் பணிகள் தடைபடுவதாக சொல்வது ஏற்புடையதாகத் தெரியவில்லை. காரணம், நிர்வாக பணிச் சுமைகள் அதிகமிருப் பதைக் காட்டித்தான் அண்ணா பல் கலைக் கழகத்தை 2007-ல் சென்னை அண்ணா, திருச்சிஅண்ணா, கோவை அண்ணா என்று பிரித்தார்கள். அப்படிப் பட்ட நிலையில் ஆராய்ச் சிப்பணிகள் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டும். ஆனால் இல்லையே? மாறாக கரப்ஷன்தான் அதிகரித்தது. பிரிப்பதினால் ஆராய்ச்சிகள் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் பெரு கும் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. மொத்தத்தில் இந்த பிரிப்பு வேலைகளால் மாணவர்களின் தகுதி எதிர்காலம் பாதிக்கப்படும்''’’என்கிறார்.

இதுகுறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப் பே மாணவர்களிடத்தில் எதிரொலிக்கிறது.

வைத்தீஸ்வரன் கோயிலின் ஊழல் புராணம்!



shockan.blogspot.com

"கோயிலையே சுரண்டி சாப்பிட்டுக் கிட்டு இருக்கார் அந்த ’அகா சுகா’ முருகேசன். இவரை யாரும் தட்டிக்கேட்க மாட்டேங்கறாங்க. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்'’என கொந்தளிக்கிறார்கள் வைத்தீஸ்வரன் கோயில் ஊர்மக்களும் பக்தர்களும்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ் வரன்கோயில்... நாடி ஜோதிடத்துக்கு பிரசித்தி பெற்ற ஊர். "புள்ளிருக்கும் வேளூர்' என இலக்கியங்களில் குறிக்கப்படும் இந்த ஊரில் எழுப்பப்பட்டுள்ள வைத்தியநாதசுவாமி திருக் கோயில் மிகத்தொன்மைச் சிறப்பைக் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலைத்தான் முருகேசன் என்கிற தனி நபர் சூறை யாடிவருவதாக கொந்தளிக்கிறார்கள் பலரும்.

என்ன நடந்தது?

பெரியார், அண்ணா, காமராஜர் கல்வி அறக்கட்டளையை நடத்திவரும் எம்.ஆர்.சுப்பிரமணியனே விவரிக்கிறார். “""இலக் கியங்களில் பாடப்பட்ட எங்கள் வைத்தீஸ்வரன்கோயில்... அங்கார கன் என்னும் செவ்வாய்க்கு உரிய தலம். இங்கு கோயில் கொண் டிருக்கும் சிவபெருமானான வைத்தியநாதரை முருகக்கடவுளே வந்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கிறது.. அதனால் எங்கள் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலைத் தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகிறார்கள். இந்தக் கோயில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வருமானம் அதிகம். அதோடு 1000 ஏக்க ருக்கு மேல் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் குறிவைத்து இந்தக் கோயிலுக்குள் கிளர்க்காக 92-ல் அடியெடுத்து வைத் தார் முருகேசன். இவர் தருமை ஆதீனகர்த்தரின் அண்ணன் மகன். இவருக்கு மாத சம்பளம் வெறும் 1,695 ரூபாய்தான். சாதாரண நிலையில் கோயிலுக்குள் அடி யெடுத்து வைத்த முருகேசன்... கோயில் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கிட்டு... கோயில் சொத்துக்களை எல்லாம் இஷ்டத்துக்கும் விற்று பணத்தைச் சுருட்ட ஆரம்பிச்சார். இதன் விளைவு இப்ப... கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அவ ருக்கு சொத்துக்கள் சேர்ந்துவிட்டது. கோயில்தான் இப்ப ஓட்டாண்டியாகி விட்டது''’என்றார் காட்டமாய்.

""அப்படி என்னதான் கோயில் சொத்துக் களை இவர் இஷ்டத்துக்கு கையாண்டிருக்கிறார்? '' என்று அவரிடமே நாம் கேட்டபோது... கிறுகிறுக்க வைக் கும் அளவிற்கு ஒரு பட்டியலையே போட்டார் அவர்.

""அறநிலையத்துறையின் அனுமதியைப் பெறாமலே... பல கோயில் சொத்துக்களை வித்தி ருக்கார். உதாரணமா... சர்வே நம்பர் 2729-ஐக் கொண்ட கோயிலுக்கு 1 ஏக்கர் நிலத்தை சக்தி மரவாடி குமாருக்கு வித்துட்டார். அதே சர்வே நம்பர்ல இருந்த 7 ஏக்கரை சங்கர் பிள்ளைக்கிட்ட வித்துட்டார். இதேபோல் சர்வே எண் 20/1, 17/2, 17/3-ஐக் கொண்ட 12.3 ஏக்கரை ராஜி என் பவரிடம் வித்துட்டார். சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கும் தருமை ஆதீன பிரச்சார நிலைய இடத்தை... தனியார் ஒருத்தருக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட குத்தகை என்னும் பெய ரில் தாரை வார்த்துட்டார். இங்க இருக்கும் சிவ சாமி ஜோதிடருக்கு 100 குழியையும் சிவா என் பருக்கு 80 செண்ட்டையும் வித்துட்டார். இப்படி கோயிலுக்கு சொந்தமான இடங் களையெல்லாம் வித்த முருகேசன்... இங்க எங்க ஊரைச் சேர்ந்த ஜட்ஜ் ஒருத்தர் ஐயனார் கோயில் கட்ட அனுப்பிய ஒன்றரை லட்ச ரூபா செக்கை (எண்: 448962)... இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இருக்கும் தன் அக்கவுண்ட்டில் போட்டுக்கிட்டார். (அக்கவுண்ட் எண்:7949) இப்படி அவர் செய்த மோசடிகளை யெல்லாம் பட்டியல் போடணும்னா... தனியா ஒரு புத்தகமே போட் டாகனும். வறுமையில் ஒருகாலத்தில் உழன்ற முருகேச னுக்கு இப்ப கும்பகோணம் நால்ரோட்டில் ஒரு பங்களா, சொந்த ஊரான உக்கடையில் நிலபுலன், வீடுகள் இருக்கு. இப்படி பல இடங்களில் பல பினாமிப் பெயர் களில் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் ஒரு தனி குழுவைப் போட்டு அறநிலையத்துறை விசாரிக்கணும்''’என்கிறார் எரிச்சலாய்.





கோயிலில் இருக் கும் துரை குருக்களோ..... “""இந்த கோயிலின் மாத உண்டியல் வருமானமே லட்சக்கணக்கில் இருக் கும். சித்திரையில் நகரத் தார் எனப்படும் செட்டி நாட்டுக்காரங்களும் பங்கு னியில் சேலத்தார்களும் ஆயிரக்கணக்கில் வருவாங்க. எல்லோரும் வசதியானவங்க. ஏகத்துக்கும் கோயிலுக்கு டொனேசனை அள்ளிக்கொடுப்பாங்க. இந்த நிதியெல்லாம் எங்க போகுதுன்னே தெரியலை. கேட்க நாதியில்லை''’என்கிறார் வருத்தமாய்.

தி.மு.க. பேரூராட்சித் தலைவரான மோகன்ராஜோ ""ஊரைச் சுத்தியிருக்கும் 28 குளங்களும் கோயில் நிர்வாகத் தின் கீழ்தான் இருக்கு. கோயில் கழிவுகளை அதில் கலக்க விட்டு ஊரை நாற வைக்கிறார் முருகேசன். கோயிலுக்குள்ளேயே இருக்கும் அழகான திருக்குளத்தில்.. மீன்களுக் குன்னு சொல்லி மாட்டு இறைச்சியையும் அழுகிய இறைச்சி களையும் போட்டு சுகாதாரக் கேட்டை உண்டுபண்றார். இவரை ஆதீனமும் கண்டுக்கலை. அறநிலையத் துறையும் கண்டுக் கலை. மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்க. அவங்களை நாங்க தான் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கோம்''’என்றார் ஆதங்கமாய்.

கோயிலுக்கு வந்த பக்தர்களோ ""கோயில் நிர் வாகம் ஒரு விடுதி வசதியையோ... கழிவறை வசதியையோ வர்றவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலை. குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு தவிக்க வேண்டி யிருக்கு''’என்கிறார்கள் கொதிப்பாய்.

இந்தக் குற்றச்சாட்டுக் களுக்கெல்லாம் நாம் முருகேசனிடமே விளக்கம் கேட்ட போது “""நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இப்ப உங்களோட பேசமுடியாது. ஃபிரீயா இருக்கும்போது உங்களைக் கூப்பிடுறேன்''’என்று முடித்துக் கொண்டார்.

இந்தப் புகார்கள் குறித்து மயிலாடுதுறையில் இருக்கும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பொன்.செல்வராஜிடம் நாம் கேட்டபோது “""அந்த முருகேசன் மீது ஏகப்பட்ட புகார்கள் எங்களிடமும் வந்து குவிந்திருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே முரு கேசனை விசாரித்து... அதன் பேரில் உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்போம்''’என்றார் அழுத்தமாக.

பழமை வாய்ந்த ஒரு திருக்கோயிலை ஒரு தனி மனிதர் எப்படி இஷ்டத்துக்கும் ஆட்டிப் படைக்கிறார்? சுரண்டுகிறார்?

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!


shockan.blogspot.com
தனியார் மருத் துவமனையொன்றில் பயிற்சி பெற வந்த ஒரு நர்ஸிங் மாணவி, தான் தங்கியிருந்த விடுதியில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் அக்குழந்தையை கேரிபேக்கைப் போட்டு அதை அவள் தூக்கி வீசப் பார்த்தபோது குழந்தையை ஓடிவந்து காப்பாற்றிய அவ்விடுதி காப்பாளரால் விஷயம் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியும் குழந்தையும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருச்சி கல்லூரி ஒன்றில் படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருத்தி... பாத்ரூமுக்குப் போய் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டதையும், அந்தக் குழந்தையை பை ஒன்றில் வைத்து தனது விடுதி அறையில் வைத்துவிட்டு... ஒன்றுமே தெரியாததுபோல் வகுப்பறையில் வந்து உட்கார்ந்ததையும் "பாத்ரூமில் பிரசவம்' என்ற தலைப்பில் கவலைக்குரிய செய்தியாகத் தந்திருந்தோம்.

இது கடந்த வருடம் நடந்த சம்பவம்.

தற்போது அதைவிட மோசமான சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். என்னதான் நடந்தது?

ராமநாதபுரத்தில் பாரம்பரியமான பெண்கள் பள்ளி, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தால் நடத்தப்படும் புனித ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளி. கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் பெற்ற பள்ளி. ராமநாதபுரத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். (மாணவியின் பெயர் வேண்டாமே).

கடந்த 14-ந் தேதி பள்ளி வளாகத்திலிருந்த பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்த அந்த மாணவியின் யூனிஃபார்ம் முழுவதும் ரத்தக்கறை. இருந்தும் அலட்டிக்கொள்ளாமல் அந்தக் கறையோடு வகுப்பறையில் வந்து உட்கார்ந்தாள். இதைக்கண்டு திகைத்த வகுப்பாசிரியை அவளுக்கு மாற்று உடை கொடுத்தார். பிறகு பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் மனோகரன் மார்ட்டினே சங்கடத்துடன் விவரிக்கிறார்.

""இந்தப் பகுதி மக்களுக்கே எங்க பள்ளியோட கட்டுப்பாடுகள் தெரியும். அந்தளவுக்கு மாணவிகளை ஒழுக்கத் தோடு உருவாக்கி வருகிறோம். இப்ப நடந்த சம்பவத்தால் ரொம்ப சங்கடமாப் போச்சு.

சம்பந்தப்பட்ட அந்த மாணவி ஒரு மாதிரியா வந்து க்ளாஸ்ல உட்கார்ந்தபோது டீச்சர்ஸ் விசாரிச்சிருக்காங்க. அந்தப் பொண்ணு எதுவும் சொல்லலை. சரி... மாதந்தோறும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைன்னு நினைச்சு முதல்ல விட்டுட்டாங்க.

இந்த நிலையில் பாத்ரூம்ல குழந்தை அழற சத்தம் கேட்டு போய்ப் பார்த்தா... பிறந்த குழந்தை சீரிய ஸான நிலையில் கிடந்தது. உடனே குழந்தையை மீட்டு ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அந்தப் பொண்ணுகிட்ட விசாரிச்சதுல, நான்தான் இதை பெத்தெடுத்தேன்னு ஒத்துக்கிடுச்சு. நஞ்சுக்கொடியைக்கூட கண்ணாடித் துண்டை வச்சு தனக்குத்தானே அறுத்திருக்கா. நினைக்கவே பயமா இருக்கு. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சு செஞ்சாளா, தெரியாமல் செஞ்சாளான்னு தெரியலை. இருந் தாலும் நாங்க அந்தப் பெண்ணோட எதிர்காலத்தை யோசிச்சி யார்கிட்டேயும் இதுபத்தி சொல்லாம அவங்க அம்மாவை வரவழைச்சு விஷயத்தைச் சொன்னோம். பொண்ணையும் குழந்தையையும் கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டோம்.

அந்தப் பொண்ணோட அப்பா வெளிநாட்டில் இருக்காரு. கிராமத்துல நடந்த முளைக்கொட்டு விழா நேரத்துலதான் தன் பொண்ணை ஊர்ல எவனோ இப்படி பண்ணியிருக்கான்னு அந்தம்மா அழறாங்க. ஆனா தைரியமா குழந்தை பெத்துப்போடத் தெரிஞ்ச அந்தப் பொண்ணு, தன்னை இந்த மாதிரி ஆக்கினது யாருங்கிறதை சொல்லவே மாட்டேங்குது. அதோட அந்த மாணவியை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டாங்க. நாங்க எங்க டயோசிசனுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிட்டோம்'' என்றார் அதிர்ச்சி விலகாமலே.

பள்ளியுடன் முடிந்துவிடும் என்று நினைத்த இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி மாவட்டம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இதைத்தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், விஷயத்தைத் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

விசாரணைக் குழுவோ, "அந்த பள்ளிக்குள் எந்தத் தவறும் நடக்கவில்லை. அந்த மாணவிக்கு நடந்த கொடுமை அவளுடைய கிராமத்தில்தான் நடந்துள்ளது. சாதாரணமாக குண்டாக இருந்த அந்த மாணவி எட்டு, ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் கோடை விடுமுறையில் தன் வீட்டில்தான் இருந்திருக்கிறாள். அவள் குடும்பத்தினர்தான் கர்ப்பமான விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். பள்ளி மனிதாபிமான முறையில்தான் நடந்திருக்கிறது' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

நாம் அந்த மாணவியின் கிராமத்திற்குச் சென்றோம். ஆனால் ஊர்க்காரர்களோ அப்படியொரு சம்பவம் தங்கள் ஊரில் நடக்கவில்லை என்றும், சிலர் அந்தக் குடும்பம் ஊரை விட்டு வெளியூர் சென்றுவிட்டது என்றும் மாறி மாறிப் பேசி நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்.

கலெக்டர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணிய மோ... ""நடந்த சம்பவம் மோசமானது. அந்த மாணவியை நாசப் படுத்தியது யார் என்பதை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், ""அந்த மாணவியைக் கெடுத்தது யாரென்று அந்த ஊர்க்காரர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். மாணவியின் வீட்டிற்கு அருகில் வசித்த 60 வயது கிழவன்தான் மாணவியை வசப்படுத்தி அடிக்கடி அவளை பயன்படுத்தியிருக்கிறான். மிரட்சியில் இருந்த மாணவியோ தனக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். இந்த மாணவியின் அம்மா விவரமில்லாதவராக இருந்திருக்கிறார். தற்போது இந்தப் பிரச்சினையை போலீஸ் விசாரிப்பது தெரிஞ்சதும் அந்தக் கிழவன் எஸ்கேப் ஆயிட்டான். சம்பந்தப்பட்டவனை பிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்க தடையாக இருப்பவர்கள் அந்த ஊர்க்காரர்கள்தான்'' என்றார் வருத்தம் வழிய.

தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி விழவேண்டு மானால் தவறு நேரும் முன்பே பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தடுக்க வேண்டும்.

டீச்சர் காதலால் பசங்களுக்குத் தடை!



shockan.blogspot.com
"சார்... என்னோட பையன் ஒண்ணாவதிலிருந்து +2 வரை உள்ள இந்த ஸ்கூல்லதான் படிச்சான். பத்தாவதுல 500-க்கு 434 மார்க் எடுத்திருக்கான். ஆனா திடீர்னு டி.சி.யை கொடுத்து +1, +2 ஆம்பளப் பசங்கள சேர்க்க மாட்டோம் வேற ஸ்கூலில் போய் சேர்த்துக்கோங்கன்றாங்க . இப்படி திடீர்னு சொன்னா நாங்க எந்த பள்ளியைப்போய்த் தேடிச் சேர்க்கிறது?' என்று வருத்தப்படுகிறார் மாணவன் பிரகாசின் தந்தை செல்வராசு. இதைப் போலவே ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்... விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டபடி. ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கிற கோ-எஜுகேஷன் ஸ்கூலில் ஏன் இப்படி? விசாரித்தபோதுதான் பல இன்ஃபர்மேஷன்கள் கிடைத்தன.

""ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதுவை மறை மாவட்ட கண்ட் ரோலில் உள்ளது இந்த பள்ளி. கல்வித்தரம் ரொம்ப நல்லா இருந்ததால சுத்துப்பட்டு கிராமத்துல இருக்கிற பல ஏழை எளிய பிள்ளைகளும் முன்னேற வாய்ப்பா இருந்தது. ஆனா இந்த பள்ளி மாணவன் சமீபத்துல ஒரு மாணவியை கூட்டிக்கிட்டு ஓடிட்டான். அந்த அதிர்ச்சி அடங்கு றதுக்குள்ள அவனை விட கில்லாடி மாணவன்(!) பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரையே கரெக்ட்பண்ணி கூட்டிட்டு ஓடிட்டான். இப்படி+1, +2 மாணவர்களின் அட்டகாசங் கள்தான் அட்மிஷன் மறுப்புக்கு காரணம்'' என்கிறார்கள்.

""ஒருசில பசங்க பண்ற தப்பால எல்லா மாணவர்களையும் பழிவாங்கலாமா?'' என்று குமுறிய பெற்றோர்களின் ஆதங்கத்தை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிலியஸ் மேரி குருசம் மாளிடம் கேட்டபோது... ""வகுப் பறையிலும் பள்ளி வளாகத்திலும் நடந்துக்குற விதம் சரியில்லைங்க. எல்லாத்தையும் அடிச்சு சேதப் படுத்துறாங்க. மாணவிகளிடம் தவறாக நடந்துக்கிறாங்க. எங்களால சமாளிக்க முடியலைங்க. ஆம்பள பசங்களை கடந்த மார்ச் மாசமே சேர்க்கிறதில்லைன்னு முடிவு பண்ணி அறிவிச்சுட்டோம். ஆனா இப்போ பிரச்சினை பண்றாங்க'' என்கிறார்.

""அதே பள்ளியில ஒண்ணா வதிலிருந்து படிச்ச மாணவர்களை சமாளிக்க முடியலைன்னா... என்ன தான் சொல்லிக் கொடுத்து உருவாக்கியது அந்தப்பள்ளி? மாணவிகளும் தவறு செய்தால் பள்ளியையே மூடிடுவாங்களா? சிறுபான்மையினர் என்றும் கோ-எஜுகேஷன் என்றும் சொல்லி அரசின் உதவிகளைப் பெற்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆண் களை யே சேர்க்காமல் இருக்க பிளான் பண்ணுவதை எப்படி ஏத்துக்க முடியும்? இதை எதிர்த்து கண்டன போஸ்டர் அடித்து போராடப் போறோம்'' என்கிறார் பா.ம.க. பிரமுகர் சுரேஷ்.

விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரியோ... ""அப்படியா? உடனடியாக விசாரிக்கிறோம்'' என்கிறார் உறுதியாக.

ஆசிரியர்-மாணவர் உறவு குறித்து எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்றாங்க ளேப்பா!

முஸ்லிம் தீவிரவாதியின் சிறை அனுபவங்கள்!




shockan.blogspot.com

13 ஆண்டுகள் கழித்து விடுதலையாகியிருக்கும் தடா அப்துல்ரகீம் ஒரு சிறைப் பறவை. முஸ்லிம் தீவிரவாதி எனப் போலீசாரால் முத்திரை குத்தப்பட்டவர். 1993-ம் ஆண்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில், தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தடாவில் கைதாகி 3 ஆண்டுகள் சிறை யில் இருந்தவர். 1997-ல் திருச்சியில் நடந்த திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, கடந்த மே-21 அன்று குணங்குடி அனீபாவுடன் விடுதலை யான 8 பேரில் ஒருவர் அப்துல் ரகீம்.

காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள நெய் யாடு கிராமம்தான் அப்துல் ரகீமின் சொந்த ஊர். சென்னையில் அச்சகம் நடத்தி, பழனிபாபாவின் புனிதப் போராளி பத்திரிகையை அச்சிட்டுக்கொடுத்து, அவரது அகில இந்திய ஜிகாத் கமிட்டியில் முக்கிய பங்காற்றினார். பாபாவுடன் பா.ம.கவிலும் சேர்ந்து பொறுப்பு வகித்தார். இஸ்லாமிய இளைஞர்களை தீவிர வாதிகளாக முத்திரை குத்து வதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அனுபவ சாட்சியாக இருக்கும் அப்துல் ரகீமை சந்தித்தோம்.

""பத்திரிகைகள் எழுதுவது போலவோ, போலீசார் சித்தரிப் பது போலவோ நான் ஒன்றும் தீவிரவாதியல்ல'' என்ற ரகீமின் மனதில் சிறைவாழ்வின் காயங் களும் கசப்பான அனுபவங் களும் ஆறாமல் இருப்பதை உணர முடிந்தது. ""வெளியில் தான் மதவெறியர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்றால், சிறையிலும் மதவெறி அரசியல்-அதிகாரம்தான் இருந்தது. அதனால் நாங்கள் நசுக்கப்பட்டதை நக்கீரன் கிட்ட மனம் திறந்து சொல்ல விரும்புறேன்'' என்றபடி பேச்சைத் தொடர்ந்தார்.





95-ம் வருசம் விடுதலைப்புலிகள் 9பேர் சென்னை மத்திய சிறையிலிருந்து தப்பிச்சிட் டாங்க. இதற்கு போலீசாரும், சிறை அதிகாரிகளும்தானே பொறுப்பு. அவங்களை தப்பிக்க விட்டுட்டு, தடா கைதிகளாக இருந்த எல் லோரையும் ஆடு-மாடுகளை அடிப்பதுபோல கொடு மைப்படுத்தினாங்க. நான், அல்-உமா பாட்சா, தமிழ் நாடு விடுதலைப்படை முரு கேசன், நல்லரசன், ஆர்.ஒய். எல். வேலுன்னு 25 பேர் இருந்தோம். பக்ரீத் பண்டி கைக்காக புது டிரஸ் வாங்கி வச்சிருந்தோம். அதை யெல்லாம் போலீசார் தூக் கிட்டுப் போயிட்டாங்க. எங் களை ஜட்டியோடு நிற்க வச்சு அடிச்சாங்க. 3 நாள் இப்படித்தான் சரியான அடி. இந்த விஷயம் எப் படியோ தெரிஞ்சு, வழக்கறிஞர் சங்கரசுப்பு மனு தாக்கல் செய்ய, தடாகோர்ட் நீதிபதி ராதாகிருஷ்ணன் நைட் 7 மணிக்கு ஜெயிலுக்கு வந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் எங்க காயங் களைப் பார்த்து, நேர்மையா அறிக்கை தயாரித்து தாக்கல் செய் தார். அதனால அந்த நீதிபதியை நாகர்கோவிலுக்கு மாத்திட்டாங்க. அப்புறம் ஆட்சி மாறியதும், ஜெ.வும் சசிகலாவும் அரெஸ்ட் டாகி வந்தாங்க. சசிகலா ஆஸ் பத்திரியில் படுத்துக்கிட்டப்ப அவருக்கு ஃபாரின் மேக்கப் சாதனங்கள், உலர் உணவுகள், டேபிள் ஃபேன், வெஸ்டர்ன் டாய்லட்டுன்னு எல்லா வசதியும் செய்து தரப்பட்டது. அதுபோல ஜெ.வுக்கு சிறையின் தனி அதிகாரி ராஜேந்திரன் பல சலுகைகள் கொடுத்தார். திரும்பவும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் டெபுடி ஜெயிலர் ராஜேந்திரன் சூப்பிரண் டென்ட் ஆகிவிட்டார்.

97 டிசம்பர் 6-ல் நடந்த ரயில் குண்டுவெடிப்பில் சதித்திட் டம் தீட்டியதாக 10.01.98-ல் என்னைக் கைது செய்தார்கள். திருச்சியில் பி.ஜே.பி. பிரமுகர் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார். நாங்கள் ஜெயிலில் இருக்கிறோம். எங்களுக் கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றபோதும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே, தடா கைதிகளான எங்கள் 22 பேரையும் சிறையின் இணை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் ஒரு டீம் தினமும் காலையிலும் மாலையிலும் வெளியே இழுத்துப் போட்டு அடிக்கும். இதுபோல 100 நாள் அடிச்சாங்க. நாங்க சாப்பிடுறப்ப எங்க சாப்பாட்டிலே மண்ணை அள்ளிப்போடுவாங்க. இந்தக் கொடுமையால இமாம் அலிக்கு கிட்னி பிரச்சினை ஏற்பட, அவர் போலீசிடமிருந்து தப்பித்து, அப்புறம் என்கவுண்ட்டரில் இறந்துபோனார்.

ஜெயிலில் இருந்த பாக்ஸர் வடிவேலும் அவங்க ஆட்களும் பவுடர் வியாபாரம் செய்திருக்காங்க. அதை டெபுடி ஜெயிலர் ஜெயக்குமார் பிடிச்சிட்டார். அந்த ஆள் வேலையில் நேர்மையான ஆள். ஆனா, சித்ரவதையில் கொடூரக்காரர். இவரது அடிதாங்காமல் எந்தக் கைதியாவது ப்ளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்றால், காயம்பட்ட இடத்திலேயே உப்பையும் மிளகாய்த்தூளையும் தேய்ச்சிடுவார். அப்படித்தான், ஒரு கிலோ கஞ்சாவையும் பவுடரையும் கலந்து வடிவேலுவை படுக்க வைத்து வாயிலே ஊத்தினாங்க. அதிலே பாக்ஸர் வடிவேலு செத்துப்போனதாலதான் ஜெயிலுக்குள்ளே கலவரம் வெடிச்சது. ரத்த ஆறுஓடியது. . டெபுடி ஜெயிலர் ஜெயக் குமாரை அடித்து கரிக்கட்டை, பெட்சீட், வாரண்ட் பேப்பர் போட்டு எரிச்சிக் கொன்னுட்டாங்க. இந்தக் கலவரத்தில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா, எங்களையும் சித்ரவதை செஞ்சாங்க.

இப்படியெல்லாம்தான் சிறைக்கொடுமைகளை அனுபவிச்சோம். முஸ்லிம்ங்கிறதாலதான் எங்களுக்கு இவ்வளவு சித்ரவதையும். ஆனா, எந்த முஸ்லிம் அமைப்பும் எங்களைக் காப்பாத்தலை. அவங்க வேலை என்னன்னா, இங்க உள்ள நிலைமைகளையெல்லாம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி உழைக்கிற முஸ்லிம் இளைஞர்களுக்கு மதஉணர்வைத் தூண்டிவிடுற மாதிரி லெட்டர் எழுதுறதுதான். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர்கள் பதிலுக்கு கடிதம் எழுதுவதோடு, டி.டி.யும் காசோலையும் எடுத்து அனுப்புவாங்க. அந்த லெட்டரையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு பணத்தை அக்கவுண்ட்டில் போட்டுடுவாங்க. மாசம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வருது.

முஸ்லிம்களுக்கு இறையச்சம் இருக்கணும். இந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு இறையச்சம் கிடையாது. தாடி, தொப்பியைப் போட்டுக்கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள். முஸ்லிம் மக்களிடம் கொள்ளையடிக் கிறாங்க. ஜெயில் சித்ரவதைகளை விட கொடூரமான சித்ரவதை இது. அமைப்புகளின் பெயரால் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்'' என்றார் அப்துல் ரகீம் கடுமையான குரலில்.

"தீவிரவாதிகள் என்ற முத்திரையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களையும், மத அமைப்பு களிடமிருந்து முஸ்லிம் மக்களையும் காப்பாற்ற வேண்டும்' என்கிற வைராக்கியம் அப்துல் ரகீமின் குரலில் எதிரொலிக்கிறது.

மனிதா... மனிதா...!

shockan.blogspot.com

நாமோ அடுத்தவர்களோ தங்களது கவனத்தை தவற விடும்போதும், அடுத்த மனிதர்கள் மீது அக்கறைப் படாத போதெல்லாம் ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது. அப்படியான ஓர் அசம்பாவித சம்பவம்தான் சேலம் இரயில் நிலையத்தில் நடந்தேறியிருக்கிறது; நடந்தேறிக் கொண்டுமிருக்கிறது.

யாரும் அக்கறைப்படாத அந்த அடுத்த மனிதன் பெயர் ஜினில். கோவை கங்கா ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து ஐ.சி.யூ.வில் கிடத்தப்பட்டிருக்கும் ஜினில் நம்மிடம் சேலம் இரயில்வே நிலையத்தில் நடந்ததை வலியோடு சொல்லத் தொடங்கினான்... ""எனக்கு சொந்த ஊரு கேரளாங்க சார். நான் பெரம்பலூர்ல இருக்கற ஒரு காலேஜ்ல பி.சி.ஏ. படிச்சுட்டு இருக்கறேன். வீட்ல ஒரு விசேஷம் வச்சிருந்ததால அம்மாவும் அப்பாவும் லீவு போட்டுட்டு வாப்பான்னு சொன்னாங்க. அவுங்க கூப்புடுறாங்களேன்னு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கேரளாவுக்கு போக சேலம் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன். வந்து நின்ன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ட்ரெயின் வந்துருச்சு.

யாரோ ஒருத்தர் ட்ரெய்ன்ல சீட் புடிக்கிறதுக்காக ஓடி வந்து என் மேல மோதிட்டாரு. செல்போன் பேசிட்டு வந்த நான் பேலன்ஸ் இல்லாம இரயில் பெட்டிக்கும் ப்ளாட் பார்முக்கும் இடையில இருந்த கேப்புல விழுந்துட்டேன்.

என் ரெண்டு கால் மேல ட்ரெயின் வீல் ஏறி கால் ரெண்டும் சொத சொதன்னு ஆயிருச்சு. இரத்தம் கொட்ட கொட்ட காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கதறினேன்.

என்னோட கதறல கேட்டு ட்ரெயின்ல வந்த ஏதோ காலேஜ் பசங்கதான் என்னைய தூக்கிட்டு இரயில்வே ஸ்டேஷன்ல இருக்கற ஆர்.பி.எஃப். ஓ.பி.க்கு கொண்டு போனாங்க. அங்கயிருந்த போலீஸ்காரர் ஒருத்தர்கிட்ட சீக்கிரமா ஆம்புலன்ஸ கூப்புடுங்க சார்னு காலேஜ் பசங்க சொல்ல... அவரும் கூப்பிட்டாரு.

என் செல்போன்ல இருந்த எங்கப்பா நம்பருக்கு போன் போட்டு "உங்க பையனுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். சேலம் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போறாங்க. பயப்படாம வாங்க'ன்னு சொல்லிட்டுத்தான் காலேஜ் பசங்க கிளம்பி னாங்க.

அவுங்க போனதுக்கப்புறம் கிட்டத் தட்ட ரெண்டு மணி நேரமா ஆம்புலன்ஸ் வரவேயில்லை. வலி தாங்க முடியாம போலீஸ்காரர்கிட்ட "சார்... எவ்வளவு பணம் வேணாலும் தர்றேங்க சார். வலி தாங்க முடியலை'ன்னு அழுதேன். "108-க்கு போன் பண்ணிட்டேன் தம்பி நான் என்ன பண்றது'ன்னு அவுரு சொன்னாரு.

இடையில எங்கப்பா போன் போட்டு போன் போட்டு இன்னும் ஆம்பு லன்ஸ் வர்லியா சாமீன்னு அழ ஆரம்பிச் சிட்டாரு. அதுக்கப்புறம் நான் கெஞ்சுனது னால போலீஸ்காரரே திரும்பவும் 108-க்கு போன் போட்டார். அதுக்கப்புறம்தான் 108 ஆம்புலன்ஸ் வந்துச்சு. சேலம் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போனபோது டாக்டர்ஸ் பர்ஸ்ட் எய்டு பண்ணி விட்டாங்க. இங்க பெரிசா ஸ்பெஷாலிட்டி இல்லை. சீக்கிரமா கோயமுத்தூருக்கு போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கப்பான்னு டாக்டர்ஸ் சொன்னதால கோயமுத்தூருக்கு 108 ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க.

எங்கப்பா போன் பண்ணி "கங்கா ஆஸ்பிடல்ல அட்மிட் ஆயிருப்பா. கோயமுத்தூர்ல இருக்கற நம்ம சொந்தக்காரங்க கங்கா ஆஸ்பிடல் முன்னால நின்னுட்டு இருக்கறாங்க'ன்னு சொன்னதால இங்க அட்மிட் ஆனேன்.

ஆஸ்பிடலுக்கு ஓடோடி வந்த எங்கப்பா ஒரு கால் எடுக்கப்பட்ட நிலையிலதான் என்னையப் பார்த்தாரு. ஒரு மணி நேரத்திற்கு முன்னால கொண்டு வந்திருந்தா இன்னொரு காலயும் காப்பாத்தியிருக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க'' என்ற ஜினில் ""ஆம்புலன்ஸ்க்காக ரெண்டு மணி நேரம் காத்துக் கிடந்தேன் சார்... சிரத்தையெடுத்து அந்த போலீஸ்காரரோ இல்லை யாராவதோ ஆம்புலன்ஸை சீக்கிரமாக வரவழைத்திருந்தால் என் இன்னொரு கால...'' என்னும்போதே நா தழு தழுக்க கண்கள் கலங்குகின்றன.

அவன் அப்பாவான ஆண்டனியோ... ""சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட், ஃபுட்பால்னு சாப்புடாம கொள்ளாம ஓடி ஓடி விளையாடிட்டு இருப்பவன் இப்படிக் கிடக்குறானே. இப்ப வரைக்கும் பையனுக்கு இப்படி ஆனது இவன் அம்மாக்கு கூடத் தெரியாது. தெரிஞ்சுதுன்னா தாங்க மாட்டாளே...'' என்கிறார் பரிதாபமாய்.

""இந்த சேலம் ரயில்வே நிலையத்தில் இப்படி நடப்பது இது ஃபர்ஸ்ட் டைம் இல்லீங்க... இந்த ஒன்றரை மாதத்தில் இது நாலாவது சம்பவம்ங்க... ஒரு முஸ்லிம் லேடி ட்ரெயின்லயிருந்து லக்கேஜ் எல்லாம் எடுத்து வச்சிட்டிருக்கும் போது ட்ரெயின் கிளம்ப... பர்தா படிக்கம்பியில மாட்டி இதே கேப்புல விழுந்து அந்தம்மா ஸ்பாட் அவுட் ஆயிட்டாங்க.

அடுத்தடுத்து ரெண்டு பசங்க கிளம்பிட்டிருந்த ட்ரெயின்ல ஓடி வந்து ஏறும் போது படியில கால் வழுக்கி கேப்புக்குள்ள விழுந்து ரெண்டு பேருமே ஸ்பாட் அவுட்தான். இவ்வளவு மர ணம் நிகழ்கிறது பேசன்ஜரோட அஜாக்கிரதை ஒரு காரணமா இருந்தாலும் ப்ளாட்பார்முக் கும் ரயில் படிக் கட்டுக்கும் இடையில் இவ்வளவு இடைவெளி இருக்கறதாலதான் பேசன்ஜர்கள் மரணம் நேருதுன்னு பல பேர் புகார் சொல்லியும் இரயில்வே நிர்வாகம் கண்டுக்கவே யில்லை'' என்கிறார்கள் சேலம் ரயில் நிலையத்து கடைக்காரர்கள்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது... "கவனத்தில் கொள்கிறோம். முடிந்தவரை சரி செய்யப் பார்க்கிறோம்' என்ற சம்பிரதாய வார்த்தைகளையே உதிர்க்கி றார்கள்.

ஆனால் சேலம் சமூக சேவகியான சிஸ்டர் செலின்... ""ரயில்வே நிர்வாகமும் சரி... ரெண்டு மணி நேரமாய் கால்கள் நசுங்கிக் கிடந்த அந்த இளை ஞனை ஆம்புலன்ஸுக்காக காக்க வைத்த அந்த போலீஸ்காரரும் சரி தங்கள் கடமையை செய்திருந்தால் அந்த இளைஞனை முன்னைப் போல் நடக்க வைத்திருக்கலாம். உரிய நிவாரணத்தை ரயில்வே நிர்வாகம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் '' என்கிறார் கொதிப்பாய்.

சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் பாபுவிடம் பேசியபோது... ""நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. மிகவும் வேதனையான விஷயம்தான். சம்பவ நாளில் பணியில் இருந்த போலீஸ்காரர் யார் என்பதை தெரிந்து கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் '' என்கிறார் உறுதியாய்.

சேலம் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதியை முதன்மை யாகக் கருதி பயணிகளின் தேவை யை பூர்த்தி செய்ய வேண்டும். அதைத்தான் கால்கள் நசுங்கிக் கிடக்கும் பரிதாப இளைஞன் ஜினில் மட்டுமல்ல... அனைத்துப் பயணிகளின் சார்பாய் நாமும் அன்போடு வேண்டுகிறோம்.

தொடர் விபத்துகள்!

shockan.blogspot.com

கும்பகோணத்துல இருந்து இரவு 10 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறினோம். இரவு 1 மணிக்கு புதுக்கோட்டையின் எல்லையைத் தொட்ட அந்தப் பேருந்து புதுக்கோட்டையின் சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்து வழிதெரியாமல் ஒண்ணரை மணி நேரம் சுற்றி... கடைசியில் உள்ளூர்க்காரர் ஒருவரின் வழிகாட்டுதலோடு இரண்டரை மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டது. 16-வது கிலோமீட்டரில் எதிரில் வந்த லாரியின் ஓட்டுநர் ""என்ன சார்... மதுரை வண்டி பொன்னமராவதிக்கு போவுது?'' என்றதும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாதை தெரியவில்லை என்பது பயணிகளுக்கு தெரிந்தது. 16 கி.மீ. திரும்பி வந்த பிறகு மதுரை ரோட்டை கண்டுபிடித்தார்.

""நான் என்ன செய்வேன். நான் சென்னை பஸ் ஓட்டுறவன். டிரைவர் வரலனு இந்த பஸ்ஸை ஓட்டச் சொல்றாங்க. தொடர்ந்து 3-வது டியூட்டி பார்க்கிறேன். கண்ணெல்லாம் எரியுதே... டயம் வேஸ்ட் மட்டுமில்லை... டீசலும் செலவு, என்ன பதில் சொல்றது?'' -புலம்பிக்கொண்டே ஓட்டினார் அந்த ஓட்டுநர்.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய அரசுப் பேருந்து அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்றுகொண்டு ஓடி... பஸ்சுக்காக காத்திருந்த இரண்டு பயணிகளின் உயிரைப் பறித்தது.

அடுத்த இரண்டாம் நாள். நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்புற "சக்கரங்கள்' கழன்றோட ஆற்றுக்குள் தலைகுப்புற குட்டிக்கரணம் போட்டு 65 பேரை படுகாயப்படுத்திவிட்டது. இவர்களில் பள்ளிக் குழந்தைகள் ஒன்பது பேரும் அடக்கம்.

இந்தக் கொடுமையான விபத்து ஏற்பட்ட மறுநாள்... மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்து மயிலாடுதுறை மேம்பாலம் ஏறியிறங்கிய போது முன்புற அச்சு முறிந்து, சந்தைக்குள் கவிழ்ந்து ஒரு பயணியைச் சாகடித்தது. 60-க்கும் மேற்பட்டவர்களை படுகாயத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிப்போக வைத்தது.

ஏன் இந்த மோசமான விபத்துகள்? ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் பேசினோம்.

""பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லீங்க. அதிகாரிகள் இருப்பதற்கு ஏ.சி. ரூம்கள் இருக்கு. "சார் இந்த வண்டி சரியில்லை... பிரேக் பிடிக்கலை... ரொம்ப சவுண்ட் வருது... கிளட்ச் சரியில்லை'னு சொன்னால்.... "யோவ் இஷ்டம்னா அந்த வண்டில டூட்டி பாரு. இல்லைனா டெப்போவுல நிறுத்திட்டு வீட்டுக்குப் போ'ன்னு மிரட்டுறாங்க'' என்கிறார்கள்.

""கும்பகோணம் கோட்டத்தில் இவ்வளவு மோச மான மெயின்டனன்ஸ்... விபத்துகள் இதற்குக் கொஞ்ச மும் குறையாமல்தான் மற்ற கோட்டங்களிலும் அதிகாரி களின் நிர்வாகச் சீர்கேட்டால் உயிர்ப்பலிகள்... ஊனமாகி றார்கள். எதற்காக பணிமனைகள் இருக்கிறதோ? போ.வ. துறை அமைச்சரும் முதல்வர் கலைஞரும் நேரடியாக தலையிட்டால்... இவற்றைச் சரிசெய்ய முடியும்?'' என்கிறார் பொதுவுடமைச் சிந்தனையாளர் சத்தியநாராயணா.

கும்பகோணம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இல்லாததால் ஏ.இ. ஸ்ரீதரிடம் கேட்டோம்.

""இந்த விபத்துக்களுக்கான விசாரணை இப்ப நடக்கிறது. என்ன காரணம் இருக்கப் போகிறது? ஓவர் டேக்... ஸ்பீடு... டிரைவரோட அசால்ட்... இவைகள்தான் காரணமாக இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.

மக்களின் உயிருக்கு யார்தான் பொறுப்பு?

அரசின் ஈரப்பார்வை திரும்புமா?

shockan.blogspot.com
கலைஞரய்யாவோட 108 ஆம்புலன்ஸ் ஆயிரக்கணக்கான வங்க உயிரைக் காப்பாத்திக்கிட்டு இருக்கு. ஆனா அதே 108 எங்க செந்தில்குமாரை...’’ என முழுதாக சொல்லி முடிக்கமுடியா மல் கதறுகிறார்கள் அந்த அப்பாவிப் பெற்றோர். என்ன நடந்தது?

திருச்சி சமயபுரம் அருகே இருக்கும் போக்கு வரத்துநகர் அய்யாவு, அன்னக்கிளி ஆகியோரின் மகன்தான் செந்தில்குமார். பெற்றோரின் கூலிவேலை உழைப்பில்.. ஜமால் முகமது கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் படித்து விட்டு... நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என கனவு கண்டார் 23-வயது இளைஞரான செந்தில். அவருக்கு 108 ஆம்புலன்ஸில் முதலுதவி டெக்னீஷியனாக வேலை கிடைத்தது. பிறகு...

வழிந்த கண்ணீரை துடைத்தபடியே அப்பா அய்யாவு சொல்கிறார்... ""108 ஆம்புலன்ஸில் வேலைன்னதும் சந்தோசமாப் போனான். "அப்பா இந்தவேலை மனசுக்கு நிறைவா இருக்குப்பா. கலைஞரய்யாவோட நல்லதிட்டம்ப்பா இது. நிறையபேர் உயிரைக் காப்பாத்த முடியுதுப்பா'ன்னு அடிக்கடி பெருமிதமா சொல்லிக்கிட்டு இருப்பான். சமீபத்தில் கூட "துரைசாமிபுரத்தில் சாக்கடையோரம் அனாதையாக் கிடந்த ஒரு குழந்தையைக் காப்பாத்தினோம்ப்பா... வையம்பட்டியில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய 4 பேரை சரியான நேரத்துக்குப் போய் காப்பாத்திட்டோம்ப்பா'ன்னு சொன்னான். அப்படிப்பட்ட புள்ளையை அதே 108-லேயே இழந்துட்டோம்ய்யா''’என்றபடி தலையில் அடித்துகொண்டு அழுதார்.

அழுகைக்கு இடையிடையே பேசிய அம்மா அன்னக் கிளியோ “""சாப்பாடு தூக்கத்தைக்கூட பாக்கமாட்டான். வேலை வேலைன்னு பறப்பான். அன்னைக்கு மதியத்தோட டூட்டி அவனுக்கு முடிஞ்சிடிச்சி. மாற்றிவிட ஆள் இல்லைன்னு அவனே தொடர்ந்து டூட்டி பார்த்தான். அப்ப இரவு பத்தே முக்காலுக்கு திருவளர்ச்சிபட்டியில் இருந்து ராஜேஸ்வரிங்கிற அம்மா சீரியஸ்னு போன்வர... அரக்கபரக்க அங்க போயிருக்கான். போகும் வழியில் டி.வி.எஸ். டோல்கேட்டுக்கிட்ட ஒரு கும்பல் ஆம்பு லன்ஸை வழிமறிச்சி.. குடிபோதையில் சீரியஸா இருக்கான்னு சதீஷ் என்ற பையனை ஏத்திட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. அவனை ஸ்ட்ரெச் சர்ல எங்க புள்ளை ஏத்தும்போது... மரம் ஏத்திக் கிட்டு அந்தவழியா எம வேகத்தில் வந்த ஒரு லாரி ஆம்புலன்ஸில் மோத... அதில் ராஜேஸ்வரி, சதீசோட.. எங்க புள்ளை யும் இறந்துட் டான்யா... பலரைக் காப்பாத்திய எங்க புள்ளைய கடவுள் காப்பாத்தலையே.. கடவுள் இருக்கானா இல்லையான்னு தெரியலையே''’என்று கதறினார்.

போக்குவரத்துநகர் வாசிகளோ ""இந்த விபத்தில் இறந்துபோன மத்த ரெண்டு பேருக்கும் தலா 1 லட்ச ரூபா தரப்படும்னு அரசு அறிவிச்சி ருக்கு. ஆனா... முதலுதவி டெக்னீஷியனாக இருந்த செந்தில் பேர் எப்படியோ விடுபட்டுடுச்சி. இந்த நிமிசம் வரை உதவித் தொகை அறிவிக் கப்படலை. அரசுதான் செந்தில் குடும்பத்துக்கு உதவணும்''’என்றார்கள் ஒரே குரலில்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்களின் திருச்சி மாவட்ட மேலாளர் ரவியிடம் கேட்டபோது ""விடுபட்டது உண்மைதான். செந்தில்குமாருக்கும் உதவித்தொகை வழங்கணும் என்று அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தவிர... எங்கள் ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை செந்தில் குடும்பத்துக்கு வழங்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம்''’என்றார் நம்மிடம்.

அரசின் ஈரப்பார்வைக்குக் காத்திருக்கிறது செந்தில்குமார் குடும்பம்.

அழியும் மொழியா தமிழ்? சவால் மாநாடு!


shockan.blogspot.com

இனி உலகத் தமிழர்கள் இதுபோலொரு தமிழ் செம்மொழி மாநாட்டைக் கண்டிடக்கூடாது என்பதையும், இனி யாரும் இப்படியொரு மாநாட்டை நடத்திவிடக்கூடாது என்பதையும் கவனத்திற்கொண்டு மிக மிக சவாலாக எடுத்து அதை சாதகமாக்கிக்கொண்டும் கோவையை கலகலத்துப் போக வைத்திருக்கிறார்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழியான தமிழ் மொழியே, என திரும்பும் இடமெங்கும் பாடல்களாலும் பேனர்களாலும் தமிழால் நிரம்பி வழிகிறது கோவை.

துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் தொடர் கோவை விசிட் அடித்து இறுதி கட்டப் பணிகளை வேகமாக முறுக்கிவிட தங்கத் தொட்டியில் இடப்பட்ட நிலவாய் மின்னத்தொடங்கியிருக்கிறது கோவை.





மாநாடு தொடக்க நாளன்று இனியவை நாற்பது என்ற தலைப்பில் தமிழரின் வீரத்தையும், ஐவகைத் திணைகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் விளக்கும் சிலைகளைக் கொண்டு நடக்கும் எழிலார் பவனி காண்போரையெல்லாம் மயக்கிவிடும் என்பது கட்டியம் எனக்கூறும் ஓவியர் மருது நம்மிடம்... ""தமிழர்களைப் பற்றியான வாழ்க்கை முறைகளை கண்ணெதிரே காண்பிக்கப் பட வேண்டிய சிலைகளை செய்ய வேண்டுமென் றாலே என்னைப் போன்ற ஓவியர்கள் மிகுந்த உற் சாகத்தோடுதான் ஓவி யக் களத்தில் குதிக் கிறோம். தனக்கிழைக் கப்பட்ட அநீதியின்போது வயதானவர்களையும், குழந்தைகளையும், தாய்மார்களையும், தந்தைகளையும் பத்திரப் படுத்திய பின்பே மதுரையை எரித்த கண்ணகி யின் உக்கிரச் சிலையும், சாதி மறுத்த வீரர்களின் போராட்டம் என்ற தலைப்பில் மருதநாயகம் தொட்டு புலித்தேவன், சுந்தரலிங்கம் என பலரும் சாதி மறுத்து வெள்ளை யர்களுக்கு எதிராய் போரிட்டு நின்றதையும் சிலையாக்கியிருந்தேன்.

கடந்த முறை கோவைக்கு விசிட் செய்திருந்த முதல்வர் கலைஞர், இந்த சாதி மறுத்த வீரர்களின் போராட்டச் சிலையைப் பார்த்துவிட்டு "என்ன ஓர் அருமையான வேலைப்பாடு' என்று ஆச்சரியப்பட்டவர் என்னை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார்'' என்கிறார் உற்சாகமாய்.

"இனியவை நாற்பது' சிலைகளைப் போலவே பிரம்மாண்டத்தோடு மக்களை ஈர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது மாநாட்டுப் பந்தல். பனையோலைகளால் வேயப்பட்ட முகப்பும், 65,000 பேருக்குமேல் அமரக்கூடிய வகையிலான பந்தலும் பிரம்மாண்டத்தின் உச்சம் என்கிற பொதுமக்களின் கூற்றைப் பற்றி மாநாட்டுப் பந்தல் அமைப்பாளரான பந்தல் சிவாவிடம் பேசினோம்...





""இது பெரிய விஷயம்தான். ஏன்னா தளபதி தலைமையில் நடந்த இளைஞரணி மாநாட்டுப் பந்தல்தான் தி.மு.க.வின் மாநாடுகளில் போடப்பட்ட பிரம்மாண்ட பந்தல். அதையும் தாண்டி இப்படியொரு பிரம்மாண்ட பந்தலை இனி யாராலும் செய்ய முடியாது என தளபதியும் பேராசிரியருமே இங்கு வந்து பார்வையிட்டபோது கூறியது என் வாழ்வில் மறக்க முடியாதது.

சரியாக 45 நாளில் 500 தொழிலாளர் களின் உழைப்பில்தான் இப்படியொரு பிரம்மாண்டத்தை செய்தோம். மாநாட்டுப் பந்தலின் உள்ளே உலகத் தமிழர்களுக்காக சாப்பாடு வசதிக்கு வேண்டி 12 பிரம்மாண்ட சமையற்கூடங்களும், ஒரே நேரத்தில் 60,000 பேருக்கு மேல் சாப்பிடும் அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் தனி அரங்குகளும் பார்ப்போரை எளிதில் ஆச்சரியப்படுத்திவிடும்'' என்கிறார் சற்றும் குறையாத பூரிப்போடு.

தங்குமிட வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து செம்மொழி மாநாட்டுச் சிறப்பு அலுவலர் பிரபாகரனிடம் கேட்டோம்...

""வெளிநாடுகளிலிருந்து சுமார் 4 ஆயிரம் தமிழறிஞர்களின் வருகை கோவையில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கோவை வரும் தமிழ் அறிஞர்களை விமானநிலையத்தில் வரவேற்று, அத்தமிழறிஞர்கள் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பு வதற்கு ஏதுவாக இன் னோவா போன்ற கார் களை கொடுக்கிறோம். ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு அங்கேயே அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது.





கட்டுரை ஆராய்ச்சியாளர்களுக்கு என ஓர் ஏ.சி. பேருந்தில் 30 பேர் வீதம் என அழைத்து வரப்பட்டு அவர்களுக்கும் தங்குமிட வசதிகளோடு உணவு வழங்கப்படுகிறது. தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரை கொடுத்த 5000 பேரில் 1020 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சகல வசதிகள் செய்து தரப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். அதைப் போலவேதான் இந்த மாநாட்டில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு 71 ரூபாய் மதிப்பு கொண்ட சாப்பாடை 30 ரூபாய்க்கு அளிக்கிறோம்.

லட்சக்கணக்கான மக்களின் தேவைக்காக குடிநீரும், நடமாடும் கழிப்பிட வண்டி வசதிகளும் தயாராகிவிட்டன. தமிழின் மகத்துவத்தை உணர்ந்து அனைத்து தமிழர்களும் பங்கேற்று சிறப்பிக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தமிழர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது என்பதை தெரிவுபடுத்தி விடுகிறோம்'' என்கிறார் பொறுப்பாய்.

""இப்படி எல்லா ஏற்பாடுகளும் மாநாட்டிற்காக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவ்வளவு பேர் கூடும் மாநாட்டில் ஏதாவது அசம்பாவிதம் உண் டானால் சிகிச்சை அளிப்பதற்கென்றுதான் கோவை அரசு மருத்துவமனையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் இரவு பகலாக டாக்டர்ஸ் டீம் ஒன்று செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையம், ஆர்.எஸ்.புரம் போன்ற முக்கிய 9 இடங்களில் எந்நேரமும் சிகிச்சைக்கான சகல வசதிகளோடு ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். அதுபோக அவினாசி சாலையில் 8 ஆம்புலன்ஸ் களை நிறுத்தி வைத்திருக்கிறோம்.

மாநாட்டுப் பந்தலுக்கு முன்பு 2 ஆம்புலன்ஸ் களும் மாநாட்டுப் பந்தலுக்குள் அவசர சிகிச்சை யளிக்க என்று தனி அறையும் முன்னெச்சரிக்கை யாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார் செம்மொழி மாநாட்டு சுகாதாரக் குழுவின் உறுப் பினரும் கோவை அரசு மருத்துவமனையின் பொறுப்பு டீனுமான சிவப்பிரகாசம்.

இதேவேளையில் திருடர்களை கண்காணிக் கும் கேமராக்களை கோவையின் பிரதான சாலைகளெங்கும் பொருத்தியிருக்கிறது கோவை மாநகர காவல்துறை. சமீபத்தில் ரயில் தண்டவாளங் கள் தகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் செம்மொழி மாநாட்டுக்கு இடையூறு செய்யவேண்டி சமூக விரோதிகள் முயலக்கூடும் என கருதுகிறது காவல்துறை.

அதனால் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் ஒரு கி.மீட்டருக்கு ஒரு போலீஸ் என 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதுபோக ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி போஸ்டர்களும், மாநாட்டை எதிர்த்துத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படலாம் என்றும் போலீஸ் தரப்புக்கு தெரிய வந்திருப்பதால் அப்படி வெளியிடும் முக்கிய இயக்கங்களை வாட்ச் செய்துகொண்டும் இருக்கிறது போலீஸ் டீம்.

உலகத் தமிழர்களின் ஒற்றுமைகளை மேம்படுத்தவும், உலகின் அழியும் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கிறதென்ற யுனெஸ்கோவின் அறிவிப்பை மூட்டை கட்டி ஒரு பாழுங் கிணற்றில் வீசவும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தமிழ் செம்மொழி மாநாடு உபயோகப்பட வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வேண்டுவது உறுதியாய் நடக்கும்.



தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 3 நாட்கள் நடைபெறும் கலை விழாவை 11 இடங்களில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துவிட்டுப் போக... தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கோவைவாசிகள் கண்டு களிப்பதோடு இலவச உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டு குதூகலிக்கிறார்கள்.

வெறும் மொழிக்காக எதற்கு இவ்வளவு செலவும் ஆர்ப் பாட்டமும் செய்கிறார்கள் என்று தமிழக அரசு நிறுவனங்களில் பணியாற்றும் மலையாள அலுவலர்கள், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியைப் பற்றி விமர்சிக்கிறார்களாம். "தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்துவதற்கு முன், நடத்தியதற்கு பின்' -என இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார்கள் கோவைவாசிகள். எங்கும் பளிச் சாலைகள், புதிய மின் விளக்குகள், பூங்காக்கள் என தற்போது மிளிரும் கோவைக்கு நிறைய திட்டங்கள் வகுத்திருப்பதும், கோவை அரசு மருத்துவமனையைப் பராமரிக்க 50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதும் கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பந்தலில் அமைக்கப் பட்டிருக்கும் உணவு அரங்கத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துவிட்டுப் பந்தலில் சாப்பிட... ஸ்டாலின், எ.வ.வேலு, கனி மொழி எம்.பி. ஆகியோர் அமர அல்வா, இட்லி, வடை, பொங்கல் என ஆளுக்கொரு பிளேட் கொடுக்கப்பட்டது. வாங்கிப் பார்த்த ஸ்டாலின் "என்னய்யா எடுத்தவுடனேயே அல்வா கொடுக்கறீங்க' என கிண்டல் செய்ய... மொத்தக் கூட்டமும் சிரிப்பலையில் மிதந்தது.

Wednesday, June 23, 2010

டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை: கா.சிவத்தம்பி


shockan.blogspot.com
இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் உலகத்தமிழ்செம்மொழி மாநாட்டை தொடங்கிவைத்தார்.



துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். முனைவர்வா.செ.குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை நாட்டு பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.




பேராசிரியர் சிவத்தம்பி வாழ்த்துரை வழங்கும் போது, ’உலகம் முழுவதும் பரவியிருக்கிறது தமிழ். இது உலக மொழியாக,செம்மொழியாக பரவியிருக்கிறது.



இந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதியை நான் கேட்டுக் கொள்கிறேன், வெளியில் வாழும் தமிழர்கள், தமிழ் மீது பற்று கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும், போதிக்கும் நூல் ஒன்றைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, அவசியமானது.




தமிழை மேம்படுத்த நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும். உதாரணத்திற்கு டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை. அதை நாம் உருவாக்க வேண்டும்.



சங்கத் தமிழ் இலக்கியம் சமயச் சார்பற்ற இலக்கியம். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று போதித்தவர்கள் தமிழர்கள்’’ என்றார்.

வங்காளப் பெண்ணை மணக்கிறார் மேனகா மகன் வருண் காந்தி


shockan.blogspot.com

டெல்லி : இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி- மேனகா காந்தி தம்பதியின் ஒரே மகனான வருண் காந்திக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இந்திரா காந்தியின் பேரனான வருண் காந்தி பாஜக எம்.பியாக உள்ளார். கட்சியின் தேசியச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவால் வளர்க்கப்பட்டு வரும் வருண் காந்திக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாமினி ராய் சவுத்ரியை மணக்கவுள்ளார் வருண் காந்தி. இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. காரணம், யாமினியை கடந்த 4 வருடங்களாக வருணுக்குத் தெரியுமாம்.

டிசம்பரில் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது. இருப்பினும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மகன் திருமணம் நடக்கப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார் மேனகா காந்தி. மேலும், தனது வருங்கால மருமகளுக்காக வாரணாசி சென்று பட்டுப் புடவைகளையும் அவர் வாங்கியுள்ளார்.

Monday, June 21, 2010

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை


shockan.blogspot.com

கெய்ரோ: இதற்கு முன்பு அமெரிக்கர்கள் சந்தித்த தாக்குதலை விட மிக பலத்த தாக்குதலை விரைவில் நடத்துவோம் என அல் கொய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் கடாஹன் எச்சரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் விடுத்துள்ள 24 நிமிட வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது...

மாசசூசஸ்ட்ஸ் செனட் தேர்தலில் நீங்கள் (ஒபாமா) தோல்வியைச் சந்தித்துள்ளீர்கள். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதலை விட மிகக் கடுமையான தாக்குதலை விரைவில் உங்களது நாடு சந்திக்கும்.

நீங்கள் இதுவரை கொன்றுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையுடன், நாங்கள் நடத்திய தாக்குதலில் பலியான அமெரிக்கர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் நடத்திய வேண்டிய தாக்குதல் கள் இன்னும் நிறைய உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருங்கள். இனி நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்பு நடத்தியதை விட மிகக் கடுமையானதாக இருக்கும். இதற்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிக அளவிலான அமெரிக்கர்கள் அதில் உயிரிழப்பார்கள்.

அந்த நேரம் வரும் வரை நாங்கள் பொறுத்திருக்கப் போகிறோம். அதனால்தான் தற்போது அமைதியாக இருக்கிறோம், கட்டுப்பாடு காக்கிறோம். ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் அல் கொய்தா தோற்றாலும் கூட கோடானு கோடி முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவார்கள்.
Read: In English
அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக இப்போது நீங்கள் இல்லை.

எங்களுடன் நீங்கள் சமரசமாக போக வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரேலுடனான உறவை முற்றிலும் வெட்டி விட வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரித்துள்ளார் கடாஹன்

ராவண்: அமிதாப் கடும் விமர்சனம்... விக்ரம், சந்தோஷ் சிவன் பதில்!


shockan.blogspot.com

மும்பை: ராவண் படம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது... படத்தின் கதாநாயகன் பாத்திரம் எப்போதும் குழப்பமாகவே காட்சி தருகிறது, என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ராவணன் படம் இந்தியில் ராவண் ஆக வெளியாகியுள்ளது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அமிதாப்பச்சன் அதிருப்தி அடைந்துள்ளார். தனது மகன் அபிஷேக் பாத்திரம் தொடர்புடைய முக்கிய காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் குழப்பம் உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராவண் படத்தின் சிறப்புக் காட்சி லண்டனில் நடந்தது. இந்த காட்சியை அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், விக்ரம், ஷாருக்கான் உள்ளிட்டோர் பார்த்தனர். படம் குறித்து அமிதாப் பச்சன் ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"ராவண் படமாக்கப்பட்ட விதம் ஒரு பெரிய ஆச்சர்யம். இந்தப் படத்தைப் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம்.

மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக் களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம் மிக்கது. அவரது படைப்புகள் உற்சாகம் தருபவை.

ஆனால் ராவண் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 10 தலை ராவணனை கண் முன் நிறுத்துவதற்காகத்தான் அபிஷேக் பாத்திரம் பலவித குணங்கள் கொண்டதாக சித்தரிக்கப்பட்டது. கடைசியில் அவன் ஒரு உறுதியான முடிவுக்கு வரும்போது, அந்த பத்துத் தலைகளும் (குணங்களும்) உதிர்ந்துபோய் ஒற்றைத் தலை நிற்கும்.

ஆனால் அதற்கான காட்சிகள் இப்போது படத்தில் இல்லாததால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது. இதுவே படத்துடன் ஒன்ற விடாமல் செய்துவிட்டது..," என தெரிவித்துள்ளார்.

'எடிட் செய்வது இயக்குநரின் உரிமை'!

அமிதாப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

"எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கிற உரிமை உள்ளது. தெற்கே மிகப் பெரிய வெற்றி கண்டுள்ள ராவணன் படம் பற்றி, ஒரு மாறுபட்ட கோணத்திலான கருத்தை அமிதாப் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் எதையெல்லாம் வெட்டி எறிவது என்பது ஒரு படத்தின் இயக்குனரின் பிரத்யேக உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது,'' என்றார்.

ரசிகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்....

அமிதாப் கருத்துக்கு ராவணன் தமிழ்ப் படத்தின் கதாநாயகன் விக்ரமும் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, "நான் அமிதாப்பச்சனை மதிக்கிறேன். மணி ரத்னம் சாரையும் மதிக்கிறேன். இது அவர்களுக்கிடையேயான பிரச்சினை. அதில் நான் கருத்து சொல்ல முடியாது.

அதே நேரம் இது தொடர்பாக 100 விதமான கருத்துக்கள் வரலாம். சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். சிலர் மோசமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..." என்றார்.

வட கொரியா மீது போர் தொடுத்த போர்ச்சுகல்-7 கோல் அடித்து அட்டகாச சாதனை


shockan.blogspot.com

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டிகளிலேய மிக மிக விறுப்பான, ஒரு பக்க போட்டியாக மாறிப் போனது இன்று நடந்த போர்ச்சுகல்- வட கொரியா இடையிலான போட்டி.

அதி பயங்கரமாக ஆடிய போர்ச்சுகல் வீரர்கள் அடுத்தடுத்து 7 கோல்களை அடித்து வட கொரியாவை வாரிச் சுருட்டி விட்டனர். வட கொரியா வசம் பந்தே போகாமல் இந்தப் போட்டியை போர்ச்சுகல் வீரர்கள் தங்கள் வசம் முழுமையாக எடுத்துக் கொண்டு விட்டனர்.

காலில் பட்ட பந்தெல்லாம் கோலுக்கே என்பது போல அவர்கள் ஆடிய அதி வேக ஆட்டத்தால் வட கொரியா நடுநடுங்கிப் போனது. இறுதி வரை வட கொரியாவால் ஒரு கோல் கூட போட முடியாமல் போய் விட்டது.

முதல் கோல்...

முதல் பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் வட கொரியா சிறந்த முறையில் தடுப்பாட்டத்தைக் கொடுத்தது. ஆனால் 29வது நிமிடத்தில்
போர்ச்சுகல் அணியின் மெரிலியஸ் அபாரமான கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார்.

2வது கோல் ...

இதையடுத்து 2வது பாதி ஆட்டத்தில், 53வது நிமிடத்தில் சிமாவோ அபாரமான கோலைப் போட்டார்.

3வது கோல்...

அடுத்த 3 வது நிமிடத்தில் அதாவது 56வது நிமிடத்தில், அல்மெய்டா இன்னொரு கோலைப் போட்டார். அத்துடன் நிற்கவில்லை போர்ச்சுகலின் கோல் மழை.

4வது கோல் ...

60வது நிமிடத்தில் டியாகோ இன்னொரு சிறப்பான கோலைப் போட்டார்.

5வது கோல் ...

81வது நிமிடத்தில் லீட்சன் அபாரமான கோலடித்தார்.

6வது கோல்...

87வது நிமிடத்தில் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ 6வது கோலடித்தார். கடந்த 2 ஆண்டுகளில் ரொனால்டோ அடித்துள்ள சர்வதேச கோலாகும் இது.

7வது கோல்

89வது நிமிடத்தில் ஸ்டார் வீரர் டியாகோ இன்னொரு அபாரமான கோலை அடித்து போர்ச்சுகல் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

இன்று போடப்பட்ட பெரும்பாலான கோல்களுக்கு வழிவகுத்த சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் 7 கோல்கள் அடித்து ஒரு அணி வெல்வது இது 10வது முறையாகும். மேலும் நடப்புத் தொடரில் ஒரு அணி அதிகம் போட்ட கோல்களும் இதுவேயாகும்.

இன்றைய போட்டியை முழுமையாக போர்ச்சுகல் ஹைஜாக் செய்து விட்டது. பந்து வட கொரியா வசம் போகவே இல்லை.

தனது முதல் போட்டியில் பிரேசிலுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்த வட கொரியா இன்றைய போட்டியில் போர்ச்சுகலிடம் மிகப் பரிதாபமாக தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா வெளியேறியது

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் ஜி பிரிவில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். தொடர்ந்து 2 போட்டிகளில் வட கொரியா தொடரை விட்டு வெளியேறி விட்டது.

பிரேசில் ஏற்கனவே நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறி விட்டது. தற்போது போர்ச்சுகல் அணியும் நாக் அவுட் ரவுண்டுக்கு வந்து விட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கோலே அடிக்காமல் 'வறுமையில்' வாடி வந்த ரொனால்டோ இன்றைய போட்டியில் பிரமிக்க வைக்கும் வகையில் அட்டகாசமாக ஆடினார். பல கோல்கள் கிடைக்க வழி வகுத்ததோடு கடைசியில் அவரும் ஒருகோலடித்துக் கொண்டார்.

Sunday, June 20, 2010

திரைக்கூத்து!

அசின்-சூர்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


"இலங்கைப் படவிழாவுக்கு போனவங்க நடிச்ச படங்களை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்'னு திரையுலகம் கூடி முடிவெடுத்துச்சு. அந்த விழாவில் கலந்து கொண்ட விவேக் ஓபராயும், சூர்யாவும் சேர்ந்து நடிச்ச "ரத்த சரித்திரம்' படத்தை சூர்யாவுக்காக வெளியிட அனுமதிப்போம்'னு சீமான் சொல்றார். இது என்ன கொள்கையோ தெரியல. சீமான்தான் ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரியா? இப்போ தமிழில் தனுஷும், ஜெனிலியாவும் நடிச்சிட்டு வர்ற ‘"உத்தமபுத்திரன்' படத்தை ஹிந்தியில் எடுக்கப் போறாங்க. அதில் சல்மான்கான் ஜோடியா அசின் நடிக்கப் போறார். இந்தப் படத்தோட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கப் போகுது. இந்தப் படத்துல இருந்து அசின் விலகிக்கணும். இல்ல... தமிழ்ப்படங்களில் அசின் நடிக்கக் கூடாது. ‘"ரத்த சரித்திரம்' படத்திற்கு எதிராவும், அசினுக்கு எதிராவும் நாங்க கோயம்புத்தூர்ல போராட்டம் நடத்துறோம்' என வம்புச் செய்தியை என் காதில் போட்டார் இந்து மக்கள் கட்சி கண்ணன்.


மோதல் திவ்யா!


சில தினங்களுக்கு முன் ஜீவா, "குத்து' ரம்யா என்கிற திவ்யா பந்தனாஸ் நடிக்கும் ‘"சிங்கம்புலி' படத்தோட ஷூட்டிங் வடபழநி பகுதியில் நடந்தது. அம்மணியை பேட்டி எடுத்துவிட முக்கிய சேனல் ஆட்கள் மைக்கோடு போய் மொய்க்க... கர்நாடக மீடியாக்களிடம் அடிக்கடி மோதும் திவ்யா அதே போல் இங்கும் சேனல் ஆட்களோடு மோதியவர்... ‘"நான் தமிழ்ச் சேனலுக்கெல்லாம் பேட்டி தர்றதில்லை' எனச் சொல்லிவிட்டு கேரவனுக்குள் புகுந்து கொண் டாராம். அம்மணியின் மேனேஜர் தங்கதுரையை சேனல் ஆட்கள் தொடர்பு கொள்ள... ‘"அவங்க சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது' எனச் சொல்லி விட்டாராம். ஏமாந்து போய் திரும்பினார்கள் சேனல் ஆட்கள்.


ஆளுக்கொரு படம்!


மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக ‘"துப்பறியும் ஆனந்த்' படம் எடுக்க பேசப்பட்டிருந்தது. கௌதம்மிடம் அஜீத் கதை கேட்டபோது கதையைச் சொல்லாமல் இருந்தாராம். இப்போது முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு ‘"நான் ரெடி' என கௌதம் சொல்ல... அஜீத்தோ கதையை கேட்க தயாரில்லையாம். இதனால் மனக்கசப்பு உருவாகி யிருக்கிறதாம். இருவருக்குமே அட்வான்ஸ் கொடுத்திருப்பதால் கௌதம் இயக்கத்தில் ஒரு படத்தையும், அஜீத் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரிக்க துரை ஆலோசிக்கிறாராம். அஜீத் பட வாய்ப்பை பெற்றுவிட அஜீத்தோடு டச்சில் இருக்கிறாராம் வெங்கட்பிரபு.


சர்ட்டிபிகேட்!


உறவுப் பிசகல்களால் ஏற்படும் விளைவுகள் ரொம்ப வலி மிகுந்தது என்பதுதான் ‘"ஒச்சாயி' படத்தின் கதையாம். உசிலம்பட்டி ஏரியா கதை என்பதால் அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களையே கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் ஆசைத்தம்பி. பஞ்சாயத்து தேர்தலே நடத்த முடியாமல் பரபரப்பை உண்டாக்கிய பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ‘"ஒச்சாயி' படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்திருக்கும் ஆசைத்தம்பி ‘"வெளி உலகம் நினைக்கிற மாதிரி அங்கே ஜாதி வெறியில்லை. நாங்க படப்பிடிப்பு நடத்தின போது அந்த ஊர் மக்கள் ரொம்ப உதவிகரமா இருந்தாங்க' என சர்டிபிகேட் தருகிறார்.


ஸ்விம்சூட் அலப்பரை!



சிம்புவால் ‘"ஒனக்கு நடிப்பே வரலை' என திட்டியனுப்பப்பட்ட லேகா வாஷிங்டன் இப்போ பாலிவுட்டில் படு கலக்கு கலக்குகிறார். லேகா நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஸ்விம்சூட்டில் அம்புட்டு கவர்ச்சி அலப்பரை பண்ணுவதால் பார்ட்டிகளுக்கும், விழாக்களுக்கும் தப்பாமல் தள்ளிக் கொண்டு வந்து விடுகிறார்கள் லேகாவை.

அப்படியா?


அந்த கடைவீதிப் படம் சில பர பரப்பான வணிக நிறுவனங்களின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக நிறுவனங்களின் தரப்பில் நினைக்கிறார்கள். இமேஜை தூக்கி நிறுத்த பெரிய ஸ்டார்களின் உதவியை நாடு கிறார்கள். அதன் அடிப்படையில் "சூ' நடிகர் ஒரு வணிக நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ஒரு பெருந்தொகைக்கு ஒப்பந்தமாகியிருக் கிறார். முதலில் நடிகர் யோசித்தாலும் வீடு கட்டிவரும் பணத் தேவைக்காக ஓகே சொல்லிவிட்டாராம்.

டிரைவரின் போதை தந்த பயங்கரம்!


shockan.blogspot.com
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள திருமல்வாடி கணேசன்-சுகன்யா தம்பதியின் ஒரே மகள் நித்யாவுக்கும், பில்பருத்தி மகேந்திரன் மகன் குஜராத்தில் பணிபுரியும் டிப்ளமோ இன்ஜினியர் அருணுக்கும், பொம்மிடி மண்டபத்தில் 17.6.10 காலை 8 மணிக்கு திருமணம். 23 வயது நித்யா பி.ஏ. முடித்து, ஆசிரியர் பயிற்சியும் முடித்திருந்தார்.

நித்யாவுக்கு அமையவிருக்கும் நல்ல வாழ்க்கை... ஜோடிப் பொருத்தம்... ஜாதகப் பொருத்தம் பற்றி யெல்லாம் உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மினிலாரி வந்தது. அதன் ஓட்டுநர் மாரண்டஹள்ளி குமாரவேல் இறங்கி வந்தார்.

""லாரி கண்டிஷன்ல இருக்கா? 60 பேருக்கு மேல ஏறணும்... ஒண்ணும் பிரச்சினை இல்லைல... சரி வாங்க டிரைவர் கொஞ்சம் "சரக்கு' ஏத்திக்கலாம்!'' அழைத்துச் சென்று டாஸ்மாக் விருந்து வைத்திருக்கிறார்கள் சில உறவினர்கள்.

""பொண்ணு அலங்காரம் பண்ணிருக்கு... பொண்ணையும் பொண்ணோட பாட்டியையும் உன் பக்கத்தில கேபின்ல உட்கார வச்சுக்கப்பா!'' மணமகனின் தந்தை கணேசன் டிரைவரிடம் சொன்னார்.

மணமகள் வீட்டாரை ஏற்றிக் கொண்ட மினிலாரி, பொம்மிடி நோக்கி கிளம்பியது.

இரவு 10.30. புலிகரை தாண்டி கடமடை பகுதியில் வேகமெடுத்தது லாரி.

சாலையோரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டரை, முன்னால் சென்ற பஸ் ஓவர்டேக் எடுத்தது. அதைத் தொடர்ந்து குமாரவேலுவும் பஞ்சர் டிராக்டரை தாண்டிச் செல்ல முயன்றபோது, எதிரில் சரக்கேற்றிய கேரள லாரியொன்று ஹெட்லைட் பிரகாசத்தோடு பாய்ந்து வந்தது. ஒரு நொடி தடுமாறிய மினிலாரி ஓட்டுநர் குமாரவேலு, லாரியை வலது பக்கம் சாலையை விட்டு கீழே இறக்க முயன்றபோது... வந்து மோதியது கேரள லாரி... டிரைவர் கேபின் தனியே பெயர்ந்து சாலையை விட்டு தூக்கியெறியப்பட்டது.

மினி லாரியின் பின்புறம் நொறுங்கி நடுரோட்டில் கவிழ்ந்து... அதன்மீது கேரள லாரி ஏறித் தள்ளி... மோதிய சத்தமும் 60 பேரின் அலறலும் அந்த ஏரியாவையே குலை நடுங்க வைத்து விட்டது. சாலை ரத்தக் காடாகிவிட்டது.

ஸ்பாட்டிலேயே 16 பேரின் உயிர் போய்விட்டது. கடுமையான காயம்பட்டு ஆஸ்பிட்டல் கொண்டு செல்லப்பட்ட 41 பேரில் 2 பேர் இறந்து விட்டனர்.

சிறு சிறு காயத்தோடு டிரைவர் கேபினுக்குள் மயங்கிக் கிடந்த ஓட்டுநரையும் மணமகள் நித்யாவையும், பாட்டியையும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யாவைப் பெற்றவர்களும் சீரியஸாகத்தான் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

முதலுதவிக்குப் பிறகு வெளியே வந்த நித்யா... மருத்துவமனையில் அடுக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்து ""அய்யோ... அய்யய்யோ... என்னால் என் சொந்தக்காரங்க எல்லா ரும் செத்துப் போயிட்டாங்களே... நான் என்ன பாவம் செஞ்சேன்...!'' கதறிய காட்சி... அத்தனை பேரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. திருமல்வாடி துக்கவாடியாய் கதறிக் கொண்டிருக்கிறது.

பெற்றோர்களை மறந்த பிள்ளைகள்! -சே... சே... சென்னை!






shockan.blogspot.com

ஆசியாவிலேயே அழகான நகரங்களில் நம்ம சீர்மிகு சென்னையும் சிறப்பான இடத்துல இருக்கு. ஆனா, சமீபத்துல எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் சே... சே... சென்னை என்று டென்ஷன் பட வைத்திருக்கிறது.

வயசான பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள்.. அவர்களின் பிள்ளைகளாலும், உறவினர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுறது எங்க அதிகமா இருக்குன்னு இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட சர்வேயில்தான்... சென்னை நம்பர்-1 இடத்தைப் பிடித்து வேதனை பட்டியலில் இடம்பெற்று தலை குனிய வைத்திருக்கிறது.

உதாரணத்துக்கு சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ருக்மணி நம்மிடம், ""என் கணவரோட பிறந்த நாலு தம்பிகளையும்... என் அம்பது பவுன் நகையெல்லாம் வித்து படிக்க வெச்சு ஆளாக்கினேன். அதுக்கப்புறம் புருஷனோட சென்னை மயிலாப்பூருக்கே வந்துட்டேன். மூணு பையன் ஒரு பொண்ணு பொறந்தது.

என் கணவர் ராஜ கோபால் சைக்கிளில் போகும்போது... ஆட்டோ இடிச்சு கை, கால் நொறுங்கி படுத்த படுக்கையாகிட்டார். இந்த கஷ்டமான சூழ்நிலையிலயும் பெரிய பையன் சந்திரசேகரனை படிக்க வெச்சு கப்பலுக்கும், ரெண்டாவது பையன் ராஜசேகரை படிக்க வெச்சு ஏர்போர்ட் வேலைக்கும்னு... வெளிநாட்ல இருக்கானுங்க. மூணாவது பையன் கோபாலகிருஷ்ணனுக்கு என் கணவர் மூலமா ரெயில்வேயில் வேலை கிடைச்சது. நாலாவது பொண்ணு கீதாவை பி.எஸ்.சி., பி.எட். வரை படிக்க வெச்சு பாண்டிச்சேரியில அட்வகேட்டுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். நாலு பிள்ளைகளும் நல்ல வசதி வாய்ப்போடுதான் இருக்குதுங்க. ஆனா, நான் தான் இப்போ முதியோர் இல்லத்துல இருக்கேன்'' என்று மனம் நொந்து போன ருக்மணி பாட்டி... மேலும் சொன்ன தகவல் பரிதாபத்தின் உச்சம், ""மூணாவது பையன் வீட்லதான் இருந்தேன். நாலு வீடு வாடகை விட்டு ஒரு பக் கம் வருமானம் வந்துக்கிட்டு தான் இருந்தது. ஆனா, மருமக ராஜலட்சுமி, "சும்மாவே உட்கார்ந்திருக் கீங்க... எதாவது வேலைக்குப் போக வேண்டி தானே'ன்னு அடிக்கடி சொல் லிக்கிட்டே இருப்பா. 70 வயசுல என்னால எந்த வேலைக்குப்பா போக முடியும்? அப்படியிருந்தும் பூ கட்டி விக்கிறது, வீட்டு வேலை செய்யுறதுன்னு போயி பார்த்தேன். உடம்புக்கு முடியாம போச்சுய்யா. மனைவி எந்த வார்த்தை சொன்னாலும்... பெத்த புள்ள கண்டுக்க மாட்றானேங்குற வேதனை ஒரு பக்கம். அப்பாவோட சாவுக்கே வராத புள்ளைங்க ரெண்டும் வெளி நாட்டுல. பொம்பளப்புள்ள மட்டும் எப்படி நம்மள பாத்துக்கும்? இனி புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்'' என்று வாழ்த்துகிறார் கண்ணீர் மல்க 75 வயதாகும் ருக்மணி.

வடிவம்மையோ ""பையன் ஆறு முகம் டிரைவர் வேலை பார்த்துக்கிட்டி ருந்தான். என்னைக்கு கல்யாணம் ஆச்சோ... அன்னையோட என்னை விட்டுட்டு பொண்டாட்டி வீட்டுக்கே போயிட்டான். சரின்னு பொண்ணு வீட்டுக்கு போனேன். மருமகனுக்கு நான் இருக் கறது புடிக்கலங்கிறதை புரிஞ்சுக் கிட்டேன். நம்மளால நம்ம பொண்ணு வாழ்க்கை வீணாயிடக் கூடாதுன்னு தான் முதி யோர் இல் லத்துக்கு வந்துட்டேன். இங்க வந்தாதான் என் னை மாதிரி எத்தனையோ பேர் பிள்ளைங் களால வெறுத்து ஒதுக்கப்பட்டு இங்க வந்திருக்காங் கன்னு புரிஞ்சது. ஹூம்'' பெருமூச்சு விடுகிறார் வேதனை யுடன். இதே நிலைமைதான் 75 வயது கோதையம்மாளுக்கும்.

""படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு வர்றவரைக்கும்தாங்க அம்மா-அப்பா எல்லாம். நல்ல வாழ்க்கை அமைஞ்சுருச் சுன்னா போதும் நம்மள தூக்கி எறிஞ்சுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க புள்ளைங்க'' என்ற குமுறலுடன் பேசுகிறார் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன். ""ரெண்டு பையன், மூணாவது பொண்ணுங்க. சின்ன வயசிலே யே ஹார்ட் அட்டாக்ல என் மனைவி அமிர்தவள்ளி எங்களை விட்டுப் போய்ட்டா. மூணு பிள்ளைகளையும் மாமியார் வீட்ல விட்டுட்டு... அப்பவே ஆவின் லைசென்ஸ் வாங்கி பால் வியா பாரம் பண்ணி முதல் பையன் லட்சுமி நரசிம்மனை படிக்க வெச்சேங்க. நல்லா படிச்சான்... அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டுல அப்போ சீஃப் என்ஜினியரா இருந்த ஜானகிராமன் மகள் மீனாட்சிக்கும்... என் பையனுக்கும் பெரிய அளவுல கல்யாணம் பண்ணி வெச்சேன். அதோட போனவன்தான்... எப்படித்தான் என்னை மறக்க முடிஞ்சுதோ தெரியல...'' -கலைச்செல்வி "தபஸ்கா' முதியோர் இல்லத்திலிருந்தவரின் குமுறல்.

""இதாவது பரவாயில்லை. பல பெற்றோர்களை வய சானதும்... ரோட்டோரமா வீசிட்டு போய்டுறது. ஆஸ்பத்திரி யில அட்மிட் பண்ணிட்டு அப்படியே எஸ்கேப் ஆயிடுறது. சொத்து எழுதிக் கொடுக்குறவரை பாசமா வெச்சிருந்து எழுதிக் கொடுத்ததும்... கொடுமைப்படுத்தி முதியோர் இல்லங் களுக்கு அனுப்புற கொடுமைகள் அதிகமாகிடுச்சு'' என்று கவலையுடன் சொல்லத் தொடங்குகிறார்... முதியோர்கள் குறித்த சர்வேயை வெளியிட்ட "ஹெல்ப் ஏஜ் இந்தியா' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் இந்திராணி ராஜதுரை. ""ஜூன்-15 உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம். இதையொட்டி சென்னை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத்னு மாநில தலைநகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில்தான் தமிழக தலைநகரான சென்னையில் 63.3 சதவீதம் இந்த கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியவந்து அதிர்ச்சி ஆகிட்டோம். அதனால சென்னையை மையப்படுத்தி அப்பா, அம்மா எவ்ளோ முக்கியம்ங்கிற விழிப்புணர்வை பல விதங்களில் ஏற்படுத்திக்கிட்டிருக்கிறோம்'' என்கிறார் அவர்.

ஆதரவற்ற ஏழை, எளிய கொடுமைப்படுத்தப்படும் முதி யோர்கள் குறித்த தகவல் கொடுக்க இந்தியாவில் 18 மாநிலங் களில் 1253 என்கிற ஹெல்ப் லைன் நம்பர் அரசின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கு. அதே நம்பர் சென்னை, பாண்டி, கடலூர்ல இருக்கு. தமிழ்நாடு முழுக்க தொடர்புகொள் ளும் வசதி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கு.

பெற்றோர்கள் இப்படி ஒதுக்கப்படுறதுக்கு என்ன காரணம்? புதிதாக திருமணமான ஆசைத்தம்பியோ ""திருமணமான பிறகு அதே பாசத்தோடு இருந்தால் கூட... வயது ஆக ஆக தன் பிள்ளைகள் மனைவியிடம் மட்டுமே பாசம் வைக்குறாங்கன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அதே மாதிரி சென்னையை எடுத்துக் கிட்டோம்னா கணவன்-மனைவி ரெண்டுபேருமே வேலைக்குப் போனாதான் வாழ முடியும். இதனால பிள்ளைகளை கவனிச்சுக்கிறதுக்கே முடியாத சூழல். அப்படியிருக்கும் போது வயதான நோய்வாய்ப்படும் பெற்றோர்களை கவனிக்க முடியாமப் போய்டுது. இப்படி பல நெருக்கடிகள் இருந்தாலும் நம்ம பெத்தவங்களை கஷ்டத்தோடு கஷ்டமா நாமளே பாத்துக்கிறதுதான் நல்லது. பெரும்பாலும்... திருமணமாகி வரும் பெண்கள்... நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை வரக்கூடும்கிறதை புரிஞ்சுக்கிட்டு மாமியார்-மாமனாரை... அம்மா-அப்பாவா நெனைச்சு பாதுகாக்கணும்'' என்கிறார் அவர்.

"அன்னை' முதியோர் இல்லம் நடத்தும் ராணி கிருஷ்ணனோ ""சென்னையில் ஜனத்தொகை அதிகரிப்பில் இடநெருக்கடியும் அதிகம். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் பெற்றோர்களை பார்க்கும் போது குறிப்பாக... கழிவுகளின் நாற்றமும்... குழந்தைக்கும் நோய் தொற்றி விடுமே என்கிற அச்சமும் திருமணமான பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இதனால் பலர் வாடகை வீடுகளில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டு பல பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்'' என்கிறார் அவர். இதற்கு தீர்வுதான் என்ன?

உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வித்யாசாகரோ ""வெளிநாடுகளில் சமூக பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு நபர் வயசானதுமே அவருக்கு என்ன செய்யணும்ங்கிறதை அரசே தீர்மானிக்குது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம் கழிவுகளை அள்ளியவர்கள் நம் பெற்றோர்கள். அதே வயதான குழந்தைகளாகத் தான் முதியவர்கள். அதை புரிந்து கொண்டு அவர்களை பராமரிக்க வேண்டும். அதிக படிப்பும், வாழ்க்கை மாற்றமும் நம் முன்னோர்களை கொடுமை செய்தால்... வருங்கால சந்ததி நம்மை கொடுமை செய்யும் என்பதை மறந்துடக்கூடாது'' என்கிறார்.

தமிழகத்தில் இதற்கு சட்டரீதியான தீர்வு என்ன? முதியோர்களின் பிரச்சினைகளுக்கு இலவசமாக தீர்வு காணும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுமார், ""பெற்றோர் மற்றும் வயதானவர்கள் பராமரிப்புச் சட்டம் 2007-லேயே மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த வருடம் 1-1-2010-ல் தான் தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்கிறது. உணவு, உறைவிடம், மருத்துவ வசதி என அடிப்படை தேவைகளை செய்யாத மகன், மகள், பேரன், பேத்திகள் மீது வயதான பெற்றோர்களும், சந்ததியில்லாத முதியவர்கள் இரத்த சொந்தத்தில் உள்ளவர் மீதும் வழக்கு போடலாம்.

நீதிமன்றங்களில் அலையவோ பணம் செலவழிக்கவோ தேவையில்லை. எதாவது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமே வழக்கு தொடரலாம். இச்சட்டப்படி 10,000 ரூபாய் வரை மெயின்டென்ஸ் சார்ஜ் கேட்கலாம்.





அந்தந்த வட்டாரத்திலுள்ள ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுக்க லாம். இந்த புகாரை விசாரிக்க முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கான அதிகாரம் ஆர்.டி.ஓ.வுக்கு உண்டு. வக்கீல்கள் வாதாட அனுமதியில்லை. 90+30 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவில்லை என்றால் ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை பாயும். தீர்ப்பு திருப்தி இல்லை என்றால் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம். சொத்து எழுதிக் கொடுத்தபிறகு பிள்ளைகள் கொடுமைப் படுத்தினால் திரும்பவும் தன் பெயருக்கே மாற்றி எழுதவும் இந்த சட்டத்தில் இடம் இருக்கு. அதனால... முதியோர்கள் தானே என்று ஏமாற்ற முடியாது'' என்கிறார் அதிரடியாக.

ஆனால், மனவேதனையை சுமந்தபடி பெற்றோர்களோ ""என் னது புள்ளைங்க மேல வழக்கா... வேணாம்யா எங்க இருந்தாலும் எங்க புள்ளைங்க சந்தோஷமா நல்லபடியா வாழட்டும்'' -வலிகளை பொறுத்துக் கொண்டு வாழ்த்துகிறார்கள் முதியோர் இல்லங்களில் இருந்தபடி. இந்த அன்பையும், பாசத்தையுமாவது புரிந்துகொண்டு பெற்றோர்களை பாசத்தோடு பாதுகாப்பார்களா பிள்ளைகள்?