Thursday, August 5, 2010

'காப்பி அடிக்கும் கெளதம் இப்படி பேசக் கூடாது'


சொந்த சரக்கை பயன்படுத்தாமல் எல்லாப் படங்களையும் காப்பி அடித்து இயக்கிக் கொண்டிருக்கும் கெளதம் மேனனுக்கு அஜீத்தை விமர்சிக்கும் அருகதை கிடையாது என்று அஜீத் ரசிகர்கள் காட்டமாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

சொந்தமாக கற்பனைத் திறனே இல்லாத ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால் அது கெளதம் மேனன் மட்டும்தான். மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிதான் இந்த கெளதம் மேனன். ஹாலிவுட்டில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடித்தே படம் எடுத்துப் பழக்கப்பட்டவர் இவர்.

இவர் பணியாற்றும் லட்சணத்தைப் பாருங்கள்.

இவரிடம் 15 முதல் 20 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஆளுக்கு 2 டிவிடிக்களைக் கொடுத்து தினசரி படம் பார்க்கச் செய்கிறார். ஒவ்வொன்றிலிருந்தும் 2 சீன்கலை எடுத்து அவரிடம் கொடுக்கச் சொல்கிறார்.

இப்படித்தான் இவரது படத்தின் சீன்கள் உருவாக்கப்படுகின்றன. சொந்தமாக எதையும் செய்வதில்லை. கெளதம் மேனனை நீங்கள் சந்திக்க விரும்பினால் அவரை அவரது அலுவலகத்தில் பார்க்க முடியாவிட்டாலும் கூட, ஜெமினி மேம்பாலத்திற்கு அருகே உள்ள பார்சன் காம்ப்ளக்ஸில் அடிக்கடி பார்க்கலாம். பர்மா பஜாரில் பார்க்கலாம், அல்லது பிற டிவிடி விற்பனை கூடங்களில் பார்க்கலாம்.

இங்குதான் அவர் அடிக்கடி போய் லேட்டஸ்டாக வந்த ஹாலிவுட் பட டிவிடிக்களை வாங்குவது வழக்கம்.

சினிமா படம் எடுப்பது குறித்து இப்போது உள்ள 5 வயதுக் குழந்தைக்குக் கூட நன்றாகத் தெரியும். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஸ்கிரிப்ட்டை ரெடி செய்ய வேண்டும் என்பது ஒருஅடிப்படை. ஆனால் கெளதம் மேனனுக்கு மட்டும் அது தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவாராம், அங்குதான் வசனமே எழுதுவாராம். கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடுவதிலும் இவருக்கு அதிக விருப்பம்.

அவருடைய மேனரிசம் கூட ஒரிஜினல் கிடையாது. பேட்டிகளின்போது அவர் காட்டும் மேனரிசங்கள், குறுக்கிட்டுப் பேசுவது எல்லாமே பல்வேறு டிவிடிக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்.

பிரபலமான இயக்குநர்கள், படைப்பாளிகளின் பேட்டிகள், பேச்சுக்களைப் பார்த்து காப்பி அடித்து மேனரிசத்தை கற்றுக் கொள்கிறார் இவர்.

கெளதம் மேனன் ஒரு செயற்கையான மனிதர்.

சமீபத்தில் வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் டிவிடியைப் பார்த்து விட்ட இவர் உடனடியாக அதேபோல ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காக 15-20 போலீஸ் ஸ்டோரி டிவிடிக்களை வாங்கினார். இப்படித்தான் இவர் கதையை உருவாக்குகிறார். இவர் பார்க்கும் ஹாலிவுட் படங்களை வேறு யாருமே பார்க்க மாட்டார்கள், அஜீத் பார்க்க மாட்டார் என்று நினைத்து விட்டார் போலும்.

தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரிடம் ஸ்கிரிப்ட்டை இவர் சொல்வதே கிடையாது. இதனால்தான் தபு போன்றவர்கள் கூட இவருடன் பணியாற்ற மறுத்து விட்டனர்.

நடிகர்கள், டெக்னீஷியன்களுடன் மோதுவதே இவரது வழக்கமாகி விட்டது. முன்பு ஹாரிஸ் ஜெயராஜுடன் மோதினார்.இப்போது அஜீத்துடன் மோதியுள்ளார்.

தனக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டது என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். தான் காப்பி அடித்த டிவிடிகளின் பெயர்களை பட டைட்டிலின்போது போட முன்வர வேண்டும்.

சூர்யாவுக்காக காத்திருக்கத் தயார் என்று கூறுகிறார் கெளதம். சூர்யாவை விட சிறப்பாக நடிக்கக் கூடிய தகுதி எங்களது அஜீத்துக்கு இருப்பதை அவர் உணர வேண்டும். வாலி, வரலாறு, வில்லன், சிட்டிசன் படங்களில் அஜீத்தின் நடிப்பு எவ்வளவு சிறப்பாக அமைந்தது என்பதை அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கெளதமின் பேச்சைக் கேட்டு அஜீத் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்களாகிய நாங்கள் கெளதமை வன்மையாக கண்டிக்கிறோம். கெளதம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

இப்போது கெளதம் மேனன் இயக்கி வரும் நடுநிசி நாய்கள் படம் கூட பார்டர் டவுன் படத்தின் டிவிடி காப்பிதான் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!


சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின.

இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது:

நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன்.

எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, 'சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்'என்றார்.

நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்..." என்றார்.

'ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?', என்று கேட்டதற்கு, "கேட்டேன். அதற்கு அவர், 'அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது' என்று கூறிவிட்டார்" என்றார் எஸ்வி சேகர்.

'சரி... ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?" என்றதற்கு, "இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?" என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, "தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது.

சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது..." என்ரார் எஸ்வி சேகர்.

Tuesday, August 3, 2010

அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது! - கவுதம் மேனன் கடுப்பு


அஜீத் - கவுதம் மேனன் இடையே இருப்பது நட்பா, கசப்பா என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு தலைக்கு லட்ச ரூபாய் பரிசே தரலாம்.

சில நேரங்களில் அஜீத் அருமையான நடிகர் ... அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கவுதம் மேனன் சொல்வதும், அடுத்த சில தினங்களில், அஜீத்துக்கு கதை சொல்வதே கஷ்டமான காரியம் என்றும் பேசுவதுமாக முரண்பட்டு நின்றார்.

அஜீத்தும், இனி கவுதமுடன் சேர மாட்டேன் என்றும், இல்லையில்லை கட்டாயம் படம் பண்ணுவோம் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்தார்.

இந்த நிலையில் தயாநிதி அழகிரியின் நிறுவனத்துக்காக அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்குகிறார். வெங்கட் பிரபு படம் முடிந்தததும் இந்தப் படம் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து கவுதம் மேனனிடம் கேட்டபோது வெடித்துவிட்டார் மனிதர்.

"ஏன்... எதற்காக நான் அஜீத்துக்காக காத்திருக்க வேண்டும். இந்நேரம் அவர் படத்தை பாதி முடித்திருப்பேன். ஆனால் அவரோ சொன்ன தேதியில் வராமல் ரேஸுக்குப் போய்விட்டார். இப்போது நான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் பிஸியாகிவிட்டேன். எனது நிறுவனம் சார்பில் 3 படங்களைத் தயாரித்து வருகிறேன்.

கமல் அல்லது எனது நண்பன் சூர்யாவுக்காக வேண்டுமானால் காத்திருக்கலாம். அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது. என்னுடன் படம் செய்வதாக அறிவித்துவிட்டு, ஊரில் உள்ள எல்லா இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறார். தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வொர்க் பண்ண முடியும்," என்றார் கோபாவேசமாக.

என்னதான் நடக்குது?

எந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று சன் பிக்ஸர்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் மூன்று மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

எந்திரன் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

ஆடியோவையும் பெரும் வெற்றியடையச் செய்துள்ளனர். வெளியான இரண்டே நாட்களில் மீண்டும் பல லட்சம் ஆடியோ சிடிக்களை தயார் செய்துள்ளது திங்க் மியூசிக் நிறுவனம்.

'எங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு விற்பனையைப் பார்த்ததில்லை', என்கிறார் திங்க் மியூசிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.

இந்நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என பெரும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர் ரசிகர்கள். எந்திரன் இசை வெளியீட்டு மேடையில் அடுத்த மாதம் ரிலீஸ் என்று கூறினார் சன் பிக்ஸர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. ஆனால் அதை அவர் சொன்ன தேதி ஜூலை 31. எனவே ஆகஸ்டா, செப்டம்பரா என்ற குழப்பம் இருந்தது. இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் எந்திரன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆடியோ, சிடி விற்பனையில் எந்திரன் படப் பாடல்கள் புதிய சாதனை


ஆன்லைன் பாடல் விற்பனையில், ரஜினிகாந்த் தின் எந்திரன் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

முன்னணி ஆன்லைன் விற்பனையகமான ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் சர்வதேச இசைப் பிரிவில், எந்திரன் முதலிடத்தைப் பிடித்தது. இருப்பினும் தற்போது அது 2வது இடத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடந்த விற்பனையில்தான் எந்திரனுக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது. 2வது இடத்திற்கு வந்தாலும் கூட முதலிடத்தை பிடித்த முதல் தமிழ் இசைத் தொகுப்பு இது என்ற பெருமை எந்திரனுக்குக் கிடைத்து விட்டது.

ஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ விற்பனை முதலிடத்தைப் பிடித்தது ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்.

எந்திரன் ஆடியோ மலேசியாவில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் இந்த சாதனையை அது படைத்துள்ளது.

ஆப்பிள் ஐட்யூன் இணையதள விற்பனையகம் மூலம் கடந்த 2 நாட்களில் விற்பனையான ஆடியோக்களிலேயே எந்திரனின் பங்கு 70 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் படம் என்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதும் கூடுதல் போனஸாக அமைந்துள்ளதால், எந்திரன் பட பாடல்களுக்கு ஆன்லைன் விற்பனையில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

Monday, August 2, 2010

எந்திரன் திரைப்பட இசை விமர்சனம்


பாடல்கள்- வைரமுத்து, பா.விஜய் , கார்க்கி
இசை- ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ரஜினி யின் எந்திரன் இசை- பாடல்கள் வெளியாகிவிட்டன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து, பா.விஜய், கார்க்கி பாடல் வரிகளில் ரசிகர்களுக்கு முழுத் திருப்தி கிடைத்துள்ளதா...? பார்க்கலாம்!

சி.டியில் மொத்தம் 7 பாடல்கள். இவற்றில் 6 முழு பாடல்கள். ஒன்று மட்டும் யோகி.பி, பிரவீண் மணியின் ராப் பாடல்.

'புதிய மனிதா... பூமிக்கு வா...' என்ற வைரமுத்துவின் பாடலுடன் ஆரம்பிக்கிறது ஆல்பம்.

ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகள் கதீஜா குரல்களில் மெதுவாக ஆரம்பிக்கும் அந்தப் பாட்டு, 'நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது பேரறிவு...' என எஸ்.பி.பியின் குரலுக்கு தாவியதும் உச்சத்துக்குப் போகிறது, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் விதத்தில். முதல் முறை கேட்கும் போதே உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது.

அடுத்த பாடல் ஒரு அழகான டூயட். 'காதல் என்பது...' எனத் துவங்கும் இந்தப் பாடலை விஜய் பிரகாஷ்-ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும் போது பெரிதாக ஈர்க்கவில்லை!

'இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே...' பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இதற்குத்தான் பெரிய அளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பரவாயில்லை கேட்கலாம்....' எனும் அளவுக்குத்தான் இந்தப் பாடல் உள்ளது.

'அரிமா அரிமா...' அடுத்த அட்டகாசம். பின்னி எடுத்திருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடியவரும் எழுதியவரும். வரிக்கு வரி அசத்தல். பாடலின் கம்பீரம் மீண்டும் மீண்டும் கேடகேட்கத் தூண்டுகிறது.

'உன்னைப்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா...' என்ற வரிகளை ஹரிஹரன் பாடும் ஸ்டைல் செம கிக்.

இந்த ஆல்பத்தின் உச்சப் பாட்டு என்றால் அது கிளிமாஞ்சாரோ...தான். மனசைத் துள்ள வைக்கும் மெட்டு. அந்த மெட்டை இருமடங்கு தூக்கிக் கொடுக்கும் பா.விஜய்யின் பாடல் வரிகள். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் ஜாவேத் அலியும் சின்மயியும் பாடியிருக்கும் விதம். அட்டகாசமான, பழங்குடி டைப் பாட்டு.

இந்த ஆல்பத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவே. ரசிகர்களால் அதிக அளவு காலர் ட்யூனாக தேர்வு செய்யப்பட்ட பாட்டும் இதுதான் என்பது கூடுதல் தகவல்.

கடைசி பாட்டு 'ரோ ரோ ரோபோடா...'. பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடல் இல்லை. வெறும் விஞ்ஞான வார்த்தைகளைப் போட்டு நிரப்பினால் மட்டும் போதாததல்லவா....

மொத்தத்தில் ஒரிரு பாடல்கள் ஏமாற்றம் தந்தாலும், கிளிமாஞ்சாரோ, அரிமா அரிமா, புதிய மனிதா போன்ற கலக்கல் பாடல்களுக்காக கட்டாயம் ஒரிஜினல் சி.டி வாங்கியே கேட்கலாம்!

கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!


'பெரும் பொருட்செலவில்...' என்ற பீடிகையுடன் ஒரு படத்தின் தயாரிப்பு பற்றி சொல்லும்போதே, அந்த பெரும் பொருட்செலவில் என்னென்ன சமாச்சாரங்களெல்லாம் அடங்கும் என்று குத்துமதிப்பாக ஒரு யூகத்துக்கு வந்துவிடலாம்.

இதில், பொதுவாக படத்தின் அடிப்படைச் செலவை விட அனாவசிய ஆடம்பரச் செலவுகளுக்கே அதிக இடம் கொடுத்திருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமல் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல் தங்கியிருந்து அறைக்கான வாடகைக் கட்டணமே ரூ 1.25 கோடி செலுத்தப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு மூன்றரை லட்சமாம்!

கமலுக்கு இந்த ரேஞ்ச் என்றால், த்ரிஷா, அவரது தாயார் தங்கிய அறைக்கான வாடகை, மாதவன், சங்கீதா, இயக்குநர் ரவிக்குமார் தங்கிய அறைகளுக்கான வாடகை, இவர்களின் குழுவினர் 80 பேர் தங்குவதற்கு வாடகை.... இதெல்லாமும் பட்ஜெட் டிலேயே சேருகிறது. கிட்டத்தட்ட 5 கோடியை (படத்தின் பட்ஜெட் ரூ 50 கோடியாம்) விழுங்கியுள்ளது இந்த வாடகைச் செலவே!

நல்ல பிரமாண்டம் போங்க!

எந்திரன் டிரைலர்

Sunday, August 1, 2010

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அ.தி.மு.க.வுக்கு நான் ஆனா ஒரு கண்டிஷன்'' -விஜயகாந்திடம் அதிர்ந்த ஜெ.!


""ஹலோ தலைவரே... தமிழகத்தில் தேர்தல் கூட்டணி எப்படி அமையும்ங் கிறதை தேசிய அளவில் உள்ள கட்சிகளும் எதிர் பார்த்துக்கிட்டு இருக்குது.''

""எப்படி சொல்றே? டெல்லி வட்டாரத்தில் இது பற்றி ஏதாவது பேச்சு நடந்ததா?''

""சி.பி.எம்.மின் மத்திய கமிட்டி கூட்டத்தில் பிரகாஷ்காரத்தைப் பார்த்து சீதாராம் யெச்சூரியும் பிமன் போசும், காங்கிரசோடு கூட்டணி அமைக்கப் பேசிக்கொண்டிருக்கிற ஜெயலலிதா வுடன் தமிழ்நாட்டில் எப்படி உறவைத் தொடருறீங்கன்னு கேட்டாங்க. காரத் அதற்குப் பதிலளிப்பதற்கு முன்னாடி, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம். எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சட்டென பதில் சென்னார்.''

""என்ன சொன்னாராம்?''

""ஜெ. நமக்கு ரொம்பவும் நம்பிக்கைக்குரியவர்னு சொன்ன டி.கே.ஆர்., காங்கிரசோடு அ.தி.மு.க. பேசுவதாக சொல்வதும், ராகுல்காந்தியோடு பேசு வதா சொல்வதும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கும் வேலை கள்தான். நம்ம முயற்சியால தமிழ் நாட்டில் அ.தி.மு.க. -தே.மு. தி.க கூட்டணி உருவாகும்னு சொல்லியிருக்கிறார். ''

""அப்படின்னா அ.தி.மு.க.வின் கூட்டணி டார்கெட் தே.மு.தி.க.தானா?''

""2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கும்னும், இது சோனியா ஏற்கனவே கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதின்னும் டெல்லியிலிருந்து ஜெ.வுக்கு தகவல் கிடைத்திருக்குது. தன்னை சந்திக்க வரும் சின்னக் கட்சிகளின் தலைவர்கள்கிட்டே ஜெ.வே இதைச் சொல்றாராம். அதே நேரத்தில், ராகுல் தரப்பினரைத் தூண்டிவிட்டு, மகாராஷ்ட்ரா பாணியில் தமிழ் நாட்டிலும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு சிக்கலை ஏற்படுத்தணும்ங்கிறதில் ஜெ மும்முரமா இருக்கிறார். தி.மு.க. சீட் தரமறுத்தால் காங்கிரசுக்கு நாங்க தர்றோம்னு சொல்லி அ.தி.மு.க. தரப்பு சீன் போட்டாலும் கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய சாய்ஸ் தே.மு.தி.க.தான்.''

""அதுசம்பந்தமாகத்தான் ஜெ.வையும் விஜயகாந்த்தையும் தவிர, இரண்டு கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைகளெல்லாம் மும்முரமா பேசிக்கிட்டிருக் காங்களே!''

""கூட்டணிக்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவிக்கட்டும், அப்புறம் பேசலாம்ங்கிறதுதான் ஜெ.வின் நிலைங்கிறதை நாம ஏற்கனவே சொல்லியிருக்கோம். இது சம்பந்தமா விஜயகாந்த்கிட்டே தே.தி.மு.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மூணுபேரும் தொடர்ந்து பேசி யிருக்காங்க. கூட்டணி இல்லைன்னா தே.மு. தி.க. காணாம போயிடும்னு பண்ருட்டியார் வலியுறுத்திச் சொன்னதையடுத்து, அப்போதைய மனநிலையில் கூட்டணிக்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.''

""அடுத்த கட்டம்?''

""தே.மு.தி.க. தங்கள் அணிக்கு வந்தால் என்ன லாபம்ங்கிறதை அ.தி.மு.க. நிர்வாகிகள், ஜெ.கிட்டே நோட் போட்டுக் கொடுத்திருந் தாங்க. எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் ஓட்டுகளில் 10% விஜயகாந்த் பக்கம் போயிட்டதாகவும், எம்.பி. தேர்தல் போல பூத்துகளை விட்டு அ.தி.மு.க. ஏஜெண்ட்டு கள் பாதியிலேயே ஓடினாலும் விஜய காந்த் கட்சிக்காரங்க உறுதியா நிப்பாங் கன்னும் தெரிவிக் கப்பட்டிருக்குது. எல்லாம் சரியாகத் தான் இருக்குன்னு யோசித்த ஜெ, சீட் விஷயமாகவும் பேசச் சொல்லியிருக்கிறார்.''

""என்ன நிலவரமாம்?''

""அ.தி.மு.க. தரப்பிலிருந்து தே.மு.தி.க.விடம் இதுபற்றி பேசப்பட, அவங்க விஜயகாந்த் கிட்ட சொல்லியிருக்காங்க. விஜயகாந்த் உடனே, தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் எப் படி முக்கியமோ அதுபோல அ.தி.மு.க அணிக்கு நான் முக்கியம். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் என்ன ஓட்டு பலம் இருக்குதோ அதற்கு இணையாக நம்ம கட்சிக்கும் ஓட்டு பலம் இருக்குது. அதனால, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படுதோ அதே அளவு சீட்டுகளை நமக்குத் தரவேண்டும்னு உறுதியா சொல்லியிருக்கிறார். இது ஜெ. காதுக்குப்போக, அவர் கடும் அதிர்ச்சியில் இருக்காரு.''

""அ.தி.மு.க. கூட் டணியில் தே.மு.தி.க. இணையும் சூழல் ஏற்பட்டால் பா.ம.க.வின் கூட்டணி நிலைப்பாடு என்ன வா இருக்கும்?''

""இப்ப பா.ம.க. வோட கவனமெல் லாம் வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு களை தக்கவைப்பது தான். அதற்காக வன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு கோரி 28-ந் தேதி மாநிலம் முழுக்க பா.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க கலந்துக்கிட் டாங்க. அதிகபட்சமா சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமா மதுரையில் 19 பேரும் இருந்திருக்காங்க. சென்னையில் ராமதாசும், காஞ்சிபுரத்தில் அன்புமணியும், அரியலூரில் குருவும் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் 1987-ல் நடந்த போராட்டத்தைவிட கடுமையான மறியல் போராட்டம் நடக் கும்னு பேசினாங்க. வழக்கம்போல் அதிகமா கொந்தளித்த குரு, குஜ்ஜார் இனமக்களைப் போல தண்டவாளங் களை தகர்ப்போம். ரயில், பஸ்களை ஓட விடமாட்டோம்னு பேசியதை மாநில உளவுத்துறையினர் கவனமா குறிப்பெடுத் துக்கிட்டாங்க.''

""போராட்டம் னதும் ஆகஸ்ட் 4-ந் தேதி ஜெ.வுக்கு எதிரா தி.மு.க. இளைஞரணி மாநிலம் தழுவிய அள வில் நடத்தப்போற போராட்டம் ஞாபகத் துக்கு வருதுப்பா...''





""தலைவரே... மு.க.ஸ்டாலின் அறிவித்த போராட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருக்குன்னும் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க ணும்னும் ஹைகோர்ட்டில் கேஸ் போட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி ஒரு டிராஃப்ட் ரெடி பண்ணி, அதை ஜெ.வின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்காங்க. அரசாங்கத்தின் அங்கமாக துணை முதல்வர் பொறுப்பில் இருப்பவரே , நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொள்ளும் ஒருவருக்கு எதிராக எப்படி போராடலாம்ங்கிறது தான் அ.தி.மு.க தரப்பு வாதம். ஸ்டா லினோ, ஜெ. ஸ்டேட்மெண்ட் பற்றி யெல்லாம் கவலைப்படமாட்டோம்னும், திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம்னும் பத்திரிகையாளர் கள்கிட்டே சொல்லியிருக்கிறார். போராட்டத்துக்கு கோர்ட் ஸ்டே கொடுக்காதுன்னு ஸ்டாலின்கிட்டே தி.மு.க. வழக்கறிஞர்கள் நம்பிக்கையா சொல்லியி ருக்காங்களாம்.''

""ம்...''

""கோவையில் 100 கோடி ரூபாயில் கட்டப் படும் புதிய மேம் பாலத்திற்கு அருகில் தீரன் சின்ன மலை சிலையை வைக்கணும்னு ஸ்டாலினிடம் கொங்கு முன்னேற்றக்கழக நிர்வாகி கள் கோரிக்கை வைத்திருக்காங்க. ஆகஸ்ட் 2ந் தேதி கோவையில் டை டல் பார்க் திறக்க வருகை தரும் கலைஞரிடமும் இதை வலியுறுத்தப் போறாங்களாம். கோவையில் ஜெ கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டத்தை மீடியாக்கள் பிரம்மாண்டப் படுத்தியதால, கலைஞர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அதைவிட அதிக கூட்டம் கூடும்னு சொல்லும் கட்சிக்காரர்கள் அதற் கான ஏற்பாடுகளில் இறங்க, கோவை பொதுமக்களும் கலைஞர் வருகையை ஆவலோடு எதிர்பார்த் திருக்காங்க.''

""திருவாரூர், தஞ்சாவூரில் கலைஞர் கலந்துகொண்ட கூட்டங்களிலும் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தாங் களே?''

""ஆமாங்க தலைவரே... திருவா ரூரில் அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்த முதல்வர், சொந்த மண்ணில் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தார். மாணவ-மாணவிகள் திரண்டு வந்திருந்ததில் அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தை திறந்துவைத்து திலகர் திடலில் அவர் பேசும் போதும் செம கூட்டம். அந்த மேடையில் காரசாரமா பொளந்து கட்டியவர் மந்திரி பொன்முடிதான். கலைஞரை விமர்சித்து ஜெ. வெளி யிட்டிருந்த அறிக்கைக்கு சுடச்சுட பதில் கொடுத்த பொன்முடி, கள்ள ரயில் ஏறி சென்னை வந்தார்னு கலை ஞர் பற்றி சொல்கிறார் ஜெ. நாகரிக மாகப் பேசினால் நாகரிகமாகப் பதில் சொல்லமுடியும். இவருக்கு வெற்றி கொண்டான் பாணியில்தான் பதில் சொல்லணும்.பெங்களூரிலிருந்து தகர டப்பா, கிழிந்த பாயோடு வந்தவர்தானே இவர். ஒரு ரூபாய்க்கு அரிசி போட வக்கில்லாத ஜெ.வே நாக்கை அடக்கிப் பேசு. நகைகள் ஏது என்று கேட்டால் மைசூர் மகாராஜா எங்கம்மாவுக்கு தந்தது என்கிறார். அப்படின்னா மைசூர் மகாராஜா உனக்கு மாமனா, மச்சானா, சித்தப்பனான்னு போட்டுத்தாக்கினார்.''

""அவர் தாக்கியது இருக்கட்டும். துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான ஸ்டாலின் நீ சொன்ன தகவல் தப்புன்னு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்காரே. அதற்கு என்ன சொல்றே?''

""ஸாரிங்க தலைவரே... மு.க. அழகிரி மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி மாநில அரசியலில் ஈடுபடப் போகிறார்னு சொல்லியிருந்தேன். அப்படி எதுவுமில்லைன்னு ஸ்டாலினே சொல்லும்போது அதுதானே உண்மையாக இருக்கும்.''

""சரி... சரி... என்னோட தகவலைச் சொல்றேன்... செப்டம்பருடன் கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் முடி வடையுது. அவருக்கு எக்ஸ்டென்ஷன் இல்லைன்னு மத்திய அரசு முடிவெடுத்து விட்டதால் அடுத்த கவர்னர் பற்றிய பேச்சுகள் கிளம்ப, ரிடையர்டு தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லாதான் கவர்னர்னு யாரோ கொளுத்திப்போட்டிருக்காங்க. ப.சிகிட்ட சிலர் இதைப்பற்றி கேட்க, சாவ்லாதான் கவர்னர்னா அதற்குப்பதில் மதுசூதனனையே நியமிச்சிடலாமேன்னு சாவ்லாவின் அ.தி.மு.க விசுவாசத்தை மறைமுகமா குறிப்பிட்டு கமெண்ட் அடித்தாராம். ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், மக்களவை முன்னாள் சபாநாயகர் பல்ராம்ஜாக்கர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதில் பல்ராம் ஜாக்கர் தான் சரியான சாய்ஸ்னு முடிவாகி யிருக்குதாம்''

பூவரசி தொடர்பு! ஒத்துக்கொண்ட ஆதித்யா அப்பா!




"எனக்கும் சிறுவன் ஆதித்யா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க. நான் நிரபராதி. ஆதித்யாவோட அம்மா அனந்தலட்சுமி ஹவாலா மோசடி பண்ணினதால யாரோ குழந்தையை கொலை செஞ்சிருக்காங்க. ஜெயக்குமார் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினதை மறைக்க... இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தி என்னை பலிகடாவாக்கிடுச்சு ஜெயக்குமார் குடும்பம்'' -சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசி இப்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய... இவ்வழக்கு மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது.

சிறுவன் ஆதித்யாவை தொலைத்து விட்டேன்... ஆதித்யாவின் அப்பா ஜெயக்குமாரே மகனை கொன்றுவிட்டார்... என்று முன்னுக்கு முரணான ஸ்டேட்மென்ட்களை கொடுத்த பூவரசி கடைசியாகத்தான் காதலன் ஜெயக் குமாரை பழிவாங்க... அவரது மகன் ஆதித்யாவை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசியதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது... இப்படி!

பூவரசிக்கும் ஜெயக்குமாருக்கும் அப்படி என்னதான் தொடர்பு? ஜெயக்குமாரின் குழந்தையை பூவரசி ஏன் கொலை செய்ய வேண் டும்? -இதுவரை இந்தக் கேள்வி களுக்கு மீடியாக்களிடம் வாய் திறக்காத ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரை தேடிச்சென் றோம்.

காலிங்பெல்லை அழுத்தியதும் சோகம் அப்பிய முகத்துடன் கதவைத் திறந்த சிறுவன் ஆதித்யாவின் தாய் அனந்தலட்சுமி, "நக்கீரன்' என்றதும் உள்ளே அழைத்தார். பேசத் தொடங்கு வதற்கு முன்பே அவரின் கண்களில் பீறிட்டு வருகிறது அழுகை. துக்கம் குறையாத குரலில் ""ஹவாலா மோசடின்னா என்னங்க? ம்... இப்படி ஒரு கொலையையும் செஞ்சுட்டு என் கணவர் மேல பழியைப் போட்டவ... இப்போ என் மேலயும் அபாண்டமா பழியை சுமத்தி நொந்த மனசை இன்னும் நோகடிக்கிறா.

வர்ற செப்டம்பர் 25-ந் தேதி அவனுக்கு நாலாவது பிறந்த நாள். எங்களோட ரெண்டு பிள்ளைங்களோட பிறந்தநாளையும் ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மையத்துலதான் கொண்டாடுவோம். ஆனா இந்த வருஷம் அந்தப் படுபாவி பூவரசியால...'' என்று அவர் குமுறும்போது நம் நெஞ்சமும் கனத்துவிடுகிறது.

அருகிலிருந்த ஜெயக்குமாருக்கு மகனை பறிகொடுத்த சோகம்... "அதுக்கு நீதாண்டா காரணம்' என்று போலீஸ் விசாரணையில் பூவரசியின் வாதம்... என தலை துவண்டு போயிருந்தவர், மெல்ல பேசத் தொடங்கினார்.

""அவ்வளவு பிரிலியண்டான பிள்ளைங்க ஆதி. "மம்மி வயித்துல ஒரே புழுக்கமா இருந் துச்சு ஏ.சி. வேற இல்ல... அதான் வெளியில வந்துட்டேன்'பான். "வயித்துக்குள்ள இருக்கும் போது பாய் பட்டன், கேர்ள் பட்டன்னு ரெண்டு இருந்துச்சு. அதுல பாய் பட்டனை ப்ரஸ் பண் ணினதாலதான் நான் பையனா பொறந்தேன்'னு ரொம்ப ஸ்வீட்டா பேசுவான். ஒரு நல்ல அறிவாளியா வரவேண்டிய ஒரு பிள்ளையை இப்படி அநியாயமா...'' என்று குலுங்கிக் குலுங்கி அழுதவரை ஆசுவாசப்படுத்தினோம்.

பிறகு... ""இங்க பாருங்க சார்... இனியும் பொய் சொல்லாதீங்க. இந்த மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்துட்டோம். உங்கள் புள்ள ஆதித்யா மேல நீங்க உண்மையிலேயே அன்பும் பாசமும் வெச்சிருந்தா இனியும் மறைக்காம உண்மையைச் சொல்லுங்க'' என்று நாம் கேட்டதும் , ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு ""ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தாலும் பூவரசிக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லாமத்தான் இருந்தது. 2009 மார்ச் மாசம்தான் எனக்கு கீழ அஸிஸ்டெண்ட் சேல்ஸ் மேனேஜரானா பூவரசி. ரொம்ப பிர்லியண்டா ஒர்க் பண்ணுவா. அப்போதான் எங்க ரெண்டுபேருக் குள்ள அடிக்கடி பேசக்கூடிய சூழல் ஏற்பட் டுச்சு. அப்போதான் "எங்கப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லோரும் ஆக்ஸி டெண்ட்ல இறந்துட்டாங்க. எனக்குன்னு யாரு மே இல்ல. ஹாஸ்டலில் தங்கிதான் வாழ்க் கையை ஓட்றேன். இதனால எட்டு தடவை சூஸைட்பண்ணிக்க ட்ரைபண்ணியிருக்கேன்'னு சொன்னா. அப்போதான் அவமேல எனக்கு இரக்கம் வர ஆரம்பிச்சது.

அந்த இரக்கம்தான் அடிக்கடி ஃபோன்ல... நேர்ல சந்திச்சு பேசிக்கக்கூடிய நட்பை உருவாக்கி கடைசியில் அடிக்கடி செக்ஸ் வெச்சுக்கிற லெவ லுக்கு கொண்டு போயிடுச்சு'' என்று உண்மையை நம்மிடம் ஒப்புக்கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.


""நான் வேலை பார்த்துக்கிட்டிருந்த ஆபீஸ்லயிருந்து வேற ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில வேலைக்கு ஜாயின்ட் பண்ணினேன். அங்க சனிக் கிழமையில் ஆதித்யாவை ஆபீசுக்கு கூட்டிக்கிட்டு வரும்போது அவனை அவ வெளியில் கூட்டிட்டுப் போய் வருவா. போரூர் மணப்பாக்கத்துல தனக்குன்னு ஒரு வீடு கட்டிக்கிட்டிருக்கிற பூவரசி, வேலை செஞ்ச ஆபீஸ்ல ப்ராப்ளம்னு வேலையை விட்டு நின்னவ... வீட்டுக்காகவும் செலவுக்காகவும் அடிக்கடி பணம் கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சா. நானும் கஷ்டப்படுறாளேங்கிறதுக்காக பணம், மனைவியின் நகைகளை கொடுத்திருக்கேன். முத்தூட் ஃபைனான்ஸ்லதான் அடகு வெச்சிருக்கா.

ஒரு கட்டத்துல என் மனைவிக்கு சந்தேகம் வந்துடுச்சு. இனிமே என் மனைவியும் குடும்பமும் முக்கியம்னு நான் அவளை அவாய்டு பண்ண ஆரம்பிச் சிட்டேன். பணம் கொடுக்கிறதையும் நிறுத்திட்டேன். பணம் கேட்டு நச்சரிச்சதால அவளுக்கு வேலையை வாங்கிக் கொடுத்துட்டா பிரச்சினை முடிஞ்சதுன்னு மதுரையில எங்க பிரான்ச் ஆபீசுக்கு ரெகமண்ட் பண்ணினேன். ஆனா உழைக்காம எங்கிட்டே யிருந்து பணம் கிடைக்குதுங்கிற சுகத்துல... அவள் சோம்பேறியாகி நான் சொன்ன வேலைக்கும் போக மறுத்துட்டா. ஆனா அவளை அவாய்டுபண்ணி பணம் கொடுக்கிறதை நிறுத்த ஆரம்பிச்சதும் என் மேல உள்ள கோபத்தை துளிக்கூட வெளிப்படுத்தாம இருந்தா. அதனால தான் அவளை நம்பி என் குழந்தையை கொடுத் தனுப்பினேன். ஆனா... இப்படி வெளிப்படுத்து வான்னு'' ...குமுறி அழ ஆரம்பித்தவரிடம் ""உங்க குழந்தையை பூவரசி கொலை பண்றதுக்கு நீங்களும் ஒரு காரணம்தானே?'' என்று நாம் கேட்டவுடன் கைகளை முகத்தில் மறைத்துக் கொண்டு அழுகிறார் ஜெயக்குமார்.

ஒன்றும் தெரியாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற கொலைக்கு எந்த காரணங்களையும் சொல்லி நியாயப் படுத்த முடியாது.

சபலத்தின் சம்பளம் மரணம்!


இன்றைய இளைஞர்களை முறையற்ற உறவுகளும்... சபலங்களும்... மோச மான பாதைக்கு அழைத்துப்போகின்றன. ஒருவித மன்மதக் கிக்கில் புத்தி பேதலிக்கிற... இத்தகையவர்களுக்கு... எப்படிப்பட்ட விபரீதங்கள் எல்லாம் படையெடுத்து வருகின்றன தெரியுமா?

சம்பவம்-1 :

திருவண்ணாமலையில் இருக்கும் பிரபல ’இந்தியன் ஹார்டு வேர்’ கடையில்... கல்லாவில் உட் கார்ந்திருந்தான்... கடை ஓனரின் மகனான ஷாசுதீன். இவன் ஒரு கல்லூரி மாணவன். அப்போது அந்தக் கடைக்கு இளம் விதவைப் பெண்ணான கல்பனா பெயிண்ட் வாங்க வந்தாள். கல்பனா பெயிண்ட்டின் வண்ணங்களைப் பார்த்துக்கொண்டிருக்க... ஷாசு தீனோ கல்பனாவின் உடல் வனப்பைக் கண்களால் மேய்ந்தான். செல்போனில் அவன் பதிந்து வைத்திருந்த பலான காட்சிகள் அவன் புத்தியை ஏற்கனவே கிறுகிறுக்க வைத்திருந்தன. எனவே படத்தில் பார்த்ததை எல்லாம் நேரில் பார்க்கும் வெறி அவனுக்குள் கொஞ்சநாளாய் மூண்டிருந்தது.

இதை அறியாத கல்பனா... ‘"இந்த பிராண்டில் ஸ்கைபுளூ கலர்ல பெயிண்ட் இல்லையா?'’ என்றாள். ஷாசுதீனோ, "மேடம் நீங்க கேட்கிற கலர் இப்ப ஸ்டாக்கில் இல்லை. உங்க செல் நம்பரைக் கொடுத்துட்டுப்போங்க. பெயிண்ட் வந்ததும் போன் பண்றேன்'’என்று சொல்ல... கல்பனாவும் தன் செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

மறுநாளே அவள் எண்ணைத் தொடர்புகொண்ட ஷாசுதீன்... தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளாமல் ""மேடம் உங்க உடம்புக்கட்டு அட்டகாசம். உங்க அழகு கிறங்க வைக்குது. திம்மு திம்முன்னு இருக்கும் உங்க மேனியை தொட்டுப் பார்க்கணும் போலிருக்கு''’ என்று ஜொள் விட...

""டேய் யார்றா நீ? பொறம்போக்கு. நேர்ல வாடா செருப்பால அடிக்கிறேன்''’ என்று கல்பனா காட்டமாய் டோஸ் விட்டாள். உடனே போனைத் துண்டித்துவிட்டான் ஷாசுதீன். மறுநாள் மீண்டும் கல்பனா எண்ணுக்குப் போன ஷாசுதீன் ‘""மேடம் என்னை மன்னிச் சிடுங்க. தப்புத் தப்பாப் பேசி உங்க மனசை நோக வச்சிட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு நீங்க சொன்னாதான் எனக்கு மனசு ஆறும்'' என்றான் கெஞ்சலாக.

இதைக்கேட்டு மனம் இரங்கிய கல்பனா, ""சரிப்பா. தப்பு செய்யறது இயற்கை. அதை உணர்ந்தாலே போ தும். நீ நல்லவனா இருக்கே. உன் பேர் என்ன? எங்க இருக்கே?'' என்று அக்கறையாக விசாரித்தாள்.

இவனும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ‘""உங்க பேச்சு எனக்கு சந்தோசமா இருக்கு. இனி நல்லதை மட்டுமே நினைப்பேன். உங்க நட்பு மட்டும் கிடைச்சாப் போதும். இந்த உலகத்தையே ஜெயிப்பேன்''’என்று சொல்ல... அன்று முதல் கல்பனா அவனுக்கு தோழியாகிவிட்டாள். ஒரே வாரத்தில் அவர்களின் பேச்சு காதலில் தொடங்கி கட்டில் வரை போனது.

தனிமைப் பசியில் இருந்த கல்பனாவை கொஞ்சம் கொஞ்சமாய் வளைத்து புதுவை, சென்னை என அவளுடன் அடிக்கடி டூர் அடித்து.... மன்மதம் படித்தான் ஷாசு. அவனுக்குத் தன்னைக்கொடுத்த கல்பனா... பதிலுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் வாங்க ஆரம்பித்தாள். பிறகு?

வெறயூர் இன்ஸ்பெக்டர் முருகேசனே சொல்கிறார்.... ""இந்தக் கள்ள உறவு... கல்பனாவின் வீடுவரை தொடர ஆரம்பிச்சிருக்கு. ஷாசுதீனின் சபலத்தைப் பயன்படுத்திக் காசைப்பிடுங்க ஆரம்பித்த கல்பனா... அன்று தனக்கு அவசரமாக 40 ஆயிரம் ரூபாய் வேணும்னு போன்ல கேட்டிருக்காள். ஷாசுதீன் 20 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்திருக்கான். கல்பனாவோ "என்னை விதவிதமா அனுபவிக்கத் தெரியுது. காசு கேட்டா மட்டும் நோகுதா? இன்னும் 20 ஆயிரம் இன்னைக்கே வேணும். தராட்டி.. நீ என்னோட சல்லாபிச்ச அசிங்கமான காட்சிகள் எல்லாம் என் செல்போன்ல இருக்கு. அதை போலீஸ்ல கொடுத்து உன்னை அசிங்கப்படுத்துவேன்'னு சொல்லியிருக்கா. இதில் கோபமான ஷாசுதீன்... கல்பனாவின் தலையை சுவத்தில் வேகமா மோதியிருக்கான். அவ்வளவுதான் இதில் கல்பனா செத்துட்டா. ஷாசுதீனின் சபலம்.. அவனை கொலைகாரனா இப்ப கம்பி எண்ண வச்சிருக்கு. செத்துப்போன பெண்ணுக்காக நாம வருத்தப்படறதா? இல்லை சிறைக்குப் போன இவனை எண்ணி வருத்தப்படறதா? இந்த ரெண்டு பேரின் நிலைமைக்கும் காரணம் சபலம்‘ என்கிறார்'' வருத்த மாக.

சம்பவம்-2 :

சென்னை முகப்பேரைச் சேர்ந்த ப்ளஸ்-1 படிக்கும் மாணவி சித்ரா வுக்கும்.. அதே பகுதியில் இருக்கும் கார் ஓட்டும் இளைஞனான வினோத்துக்கும் இடையில் காதல் முளைத்தது. விவகாரம் சித்ராவின் வீடுவரை போக... நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சை இருக்க விடக் கூடாது என்றபடி... சித்ராவை திருவண்ணாமலை அருகே இருக் கும் ஆலந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

காதலனைப் பார்க்காமல் தவித்துப்போன சித்ரா... தான் இருக்கும் முகவரியைச் சொல்லி... இரவு நேரத்தில் வீட்டுக்குப் பின்புறம் வரும்படி அழைத்தாள். உடனே சென்னையில் இருந்து டூவீலரிலேயே ஆலந்தூர் போன வினோத்... சித்ரா சொன்ன நேரத்துக்கு அந்த வீட்டின் பின்புறம் போய் காத்திருந்தான். சித்ரா சொன்னமாதிரியே வந்தாள். அவளை ஃபாலோ பண்ணிய அவளது சொந்தபந்தங்களும் ஊராரும் வினோத்தை மடக்கிப் பிடித்து அடித்தனர்.

தப்பி ஓடிய அவனைத் துரத்திப்பிடித்தும் செமையாய் கவனித்தனர். பிறகு?

அந்த வினோத்தின் உடல் அருகே இருந்த கிணற்றில் மிதந் தது. போலீஸோ.. அது கொலையா? தற்கொலையா? என தற்போது விசாரித்துக்கொண்டிருக்கிறது.

சம்பவம்-3 :

திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ராமானுஜம். அவரது மனைவிக்கு பிரசவவலி உண்டாக.. மனைவியை திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அதே மருத்துவமனையில் தன் பாட்டியை சேர்த்திருந்த குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பானுவைப் பார்த்து... அவளது அழகில் மயங்கிய ராமானுஜம்... அடிக்கடி பேசி நம்பிக்கையூட்டி... மருத்துவ மனையிலேயே தனிமையான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்று.. நினைத்ததை முடித்துக்கொண்டார்.

பானுமதியின் பாட்டி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்போக... ருசிகண்ட பூனையான ராமானுஜம்.. பானுவைத் தேடி குலமாணிக்கம் கிராமத்திற்குப் போனார். இவரை மடக்கிய கிராமத்தினர்... பானுவின் கழுத்தில் தாலியைக் கட்டு என்றனர். ராமானுஜமோ ""என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடிச்சி''’என்றார். இதைக்கேட்டு கடுப்பான கிராமத்தினர்... ’""கண்டவனும் வந்து தின்னுட்டுப்போக... எங்க ஊரு பொண்ணு என்ன ஓசிச் சாப்பாடா?''’ என்று அவரைத் தாக்கியதோடு... அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து விட்டு அவர் ஊருக்கும் தகவல் கொடுத்தனர். சபலத் தீயில் விழுந்த ராமானுஜம் உண்மையிலேயே தீயில் எரிந்து கரிக்கட்டையாய் இறந்துபோனார். தற்போது குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை இது தொடர்பாகக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

-இப்படிப்பட்ட சபல மரணச் சம்பவங்கள்... நாளுக்குநாள் பெருகிவருகின்றன. ஏன்?

பா.ம.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஜயகுமாரின் கணிப்பு இது... “""படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய மாணவ-மாணவிகள்... இன்றைக்கு குடிப் பழக்கத்தைக் கத்துக்கறது.. நள்ளிரவு வரை ஊர் சுத்தறது... காதல் என்கிற பெயரில் சபல விஷயங்களில் இறங்கறதுன்னு திசைமாறிப் போய்க்கிட்டிருக்காங்க. இன்றைக்கு வளர்ந்திருக்கும் மோசமான டெக்னாலஜிகள்தான் இதுக்கெல்லாம் காரணம். இந்த சமயத் தில் மாணவர்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதுக்குப் பாலியல் கல்வியைக் கொண்டு வரணும். அதில் விழிப்புணர்வு இருந்தா சபலமெல்லாம் வரவே வராது. அதே சமயம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை வைத்து... அவர்களைக் கவனிக்கணும். அவங்கக்கிட்ட மனம் விட்டுப் பேசணும். அவங்க பிரச்சினைகளுக்கு பொறுமையா காது கொடுக் கணும்.

அப்படி பெற்றோர்களின் கனிவான அக்கறையான அரவணைப்பிற்குள் இருக்கும் பிள்ளைகள் கெட்டுப்போக மாட் டாங்க''’அவரது வார்த்தைகளில் தெளிவு தென்படுகிறது.

’பாவத்தின் சம்பளம் சபலம்; சபலத்தின் சம்பளம் மரணம்’ என்பதாகத்தான் இருக்கிறது இன்று பலரின் வாழ்க்கை.

நித்தி மீது சீட்டிங் கேஸ்!


""தனது கர்மவினைகள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தும்... பண பலத்தால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்.. மீண்டும் பிடதி ஆசிரமத்தில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் நித்யானந்தா''’என்று மர்மப் புன்னகை பூத்தார் நித்தியின் வழக்கை விசாரிக்கும் அந்த பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி.

அவர் ஆட்டம் என்று குறிப்பிட்டது நித்தி நடத்திய குரு பூர்ணிமா நிகழ்ச்சியை.

ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியை தன் பிடதி ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்தார் நித்தி. குரு பூர்ணிமா என்பது பக்தர்களின் பாவங்களை குருவானவர் ஏற்றுக்கொள்ளும் வைபவம். இப்படி தங்கள் பாவ வினைகளை ஏற்கும் குருவிற்கு, பக்தர்கள்... அரிசி, பருப்பு முதலான தானியங்கள் தொடங்கி, கரன்ஸிகள், தங்க, வைர ஆபரணங்கள்வரை காணிக்கையாக செலுத்தி பாதபூஜை செய்வார்கள்.

ரஞ்சிதா சி.டி. வெளியாவதற்கு முன்... இந்த நிகழ்ச்சியில் 15-ல் இருந்து 20 ஆயிரம்பேர் வரை கலந்துகொள்வார்கள். அப்போது காணிக்கையாக... அங்கு வரும் பக்தர்கள் அத்தனைபேரும் நித்தியின் காலடியில் கொட்டும் காணிக்கையின் மதிப்பு 50 கோடி ரூபாய் அளவிற்குக் கூட இருக்கும். இப்படி கோலாகலமாக குருபூர்ணிமாவைக் கொண்டாடி வசூலில் திளைக்கும் நித்யானந்தா... இந்த முறை... சில அரசியல் கட்சிகளைப்போல ஆள்திரட்டும் வேலையில் இறங்கவேண்டியிருந்தது.

வாகனங்கள் மூலம் அங்கங்கே ஆட்கள் திரட்டப்பட்டனர். கர்நாடகா வைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் கூலிகொடுத்துக் கூட்டிவரப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்பினர் சிலரும் தருவிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் 1500 பேரைத் தாண்டவில்லை. பாதாபிஷேக வசூலும் ரொம்பவே டல்லடித்தது. இதில் ரொம்பவே நித்தி அப்செட் ஆனாலும்... அடிக்கடி தான் உற்சாகமாக இருப்பதுபோல்... காட்டிக்கொண்டார். தங்கப் பல்லக்கில் ஏறி ஆசிரமத்துக்குள் ரவுண்ட் அடித்த நித்தி.. வழக்கம்போல் பெண்கள் மீது சாக்லெட்களை வீசியெறிந்து ஆனந்தப்பட்டார்.

ஆசிரமத்துக்குள் இருக்கும் மெஹா சைஸ் லிங்கமான வைத்திய சரோவர் லிங்கத்துக்கு 2009-ல்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இருந்தும் குரு பூர்ணிமா அன்றும் 100 குடம் பால், 100 குடம் சந்தனக் கரைசல் என பலவற்றாலும் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

இதெல்லாம் பத்திரிகைகளில் பெரிதாக வரவேண்டும் என்பதற்காக நித்யாவின் சிஷ்யர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது நித்தி-ரஞ்சி சி.டி. போலியானது என்று திரும்பத் திரும்பச் சொன்னார் கள்.

நாம் பெங்களூர் சி.ஐ.டி. அதிகாரியிடம்... ""நித்தி-ரஞ்சி சி.டி. காட்சிகளை மறுக்கிறார்களே... எந்த தைரியத்தில்?'' என்றோம்.

அவரோ, ""ரஞ்சிதாவையே சென்னையி லேயே வைத்து 8 மணிநேரம் விசாரித்தோம். அவர் ஆசிரமத் தரப்பால் சரி செய்யப்பட்டி ருக்கிறார். எனவேதான் "அந்த சி.டி. காட்சி பத்தி எனக்குத் தெரியாது... நானும் அவரும் எதுவும் பண்ணலை'ன்னு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அது உண்மையான சி.டி.தான் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக இருக்கிறது. சிஷ்யர்கள் சொல்வது பொய் என்பது உரிய நேரத்தில் கோர்ட்டில் சி.டி. பேசும். அதேபோல் "என் பெயரில் சொத்துக்களோ பிஸ்னஸோ இல்லை. நான் வெறும் சாமியார்தான். எல்லாச் சொத்துக்களுமே ஆசிரமத்தின் பேரில்தான் இருக்கு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நித்யானந்தா மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது''’என்றார் அழுத்தம் திருத்தமாய்.

அது என்ன மோசடி வழக்கு என்று நாம் துருவத்தொடங்கி னோம்..

நித்யானந்தாவோ அமெரிக்காவில் நித்யா யோக ஃபவுண் டேசன், லைட் ப்ளஸ் ஃபவுண்டேசன் என்கிற பெயர்களில் அறக்கட்டளைகளைத் தொடங்கியிருக்கிறார். இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களின் சேவைக்காக என்று சொல்லி... அறக்கட்டளைக் குக் குவியும் நிதிகளுக்கு வரிவிலக்கும் பெற்றிருக்கிறார்.

இது ஒருபக்கம் என்றால்... தன்னை சந்நியாசி என்று சொல்லிக்கொண்டு எப்படி ரஞ்சிதாவை படுக்கையில் உருட்டி விளையாடி... சந்நியாசத்துக்கு எதிராக நடந்துகொண்டாரோ... அதேபோல்... ‘"என் பெயரில் எந்த சொத்துக்களும் நிறுவனங்களும் இல்லை. எல்லாமே ஆசிரம அறக்கட்டளையின் பெயரில்தான் இருக் கிறது. நான் ஒரு துறவி'’ என்று எல்லா இடங்களிலும் தன்னைப் பற்றி சுத்தமானவராக அறிவித்துக்கொள்ளும் நித்யானந்தா... தன் அறிவிப்பிற்கு மாறாக அமெரிக்காவில் ஒரு ஷேர் மார்க்கெட் நிறுவனத்தையே பார்ட்னர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டி ருக்கிறார்.

"நித்யானந்தா கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட்'’ என்ற பெயரிலான இந்த ஷேர் மார்க்கெட் கம்பெனியில் மேனேஜர்களாக (எம்.டி) கோபிகாவின் கணவரான ராஜேஷ் கிருஷ்ணன், சுப்பிங்லின் ஆகியோரோடு ’ஸ்ரீ நித்யானந்தா சுவாமி’ என்ற பெயரில்... இந்த நித்தியும் இருக்கிறார். (ஆதாரம் காண்க:)

இந்தியாவில் பங்கு மார்க்கெட் பிஸ்னஸில் ஹர்ஷத் மேத்தா பண்ணிய கோல்மால்கள் போல்... அமெரிக்காவில் நித்யானந்தா மேனேஜராக இருந்து நடத்திவரும் இந்த ஷேர்மார்க்கெட் கம்பெனியிலும் ஏகப்பட்ட ஃபிராடுத்தனங்கள் அரங்கேறியிருக்கிறது. இதை ஆதாரத்தோடு கண்டுபிடித்திருக்கும் அமெரிக்கப் போலீஸ்... நித்தியை தனது விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டுவர இருக்கிறது என்கிறது அமெரிக்கத் தரப்பு..

ஆக, நித்தியின் மோசமான கர்மவினைகள் அவரை லேசில் விடாது போலிருக்கிறது.

தமிழக கம்யூனிஸ்ட் கட்சி உதயம்?


""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படும் கட்சி சாராத எம்.எல்.ஏ.வாகிவிட்டார். அவரைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவபுண்ணிய மும் அரசு விழாக்களில் தி.மு.க. அரசை பாராட்டிப் பேசுகிறார். கோவிந்தசாமியும் சிவபுண்ணியமும் இணைந்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சி என்கிற கட்சியை உருவாக்கி தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கொடியை இணைக்கப் போகிறார்கள்'' என்று செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் என்ன நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட தோழர்களிடம் கேட்டோம். ""நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் எங்க மாவட்டத்தில் தி.மு.க. சில இடங்களில் தோற்றிருக்கிறது. திருநெய்பேறு என்கிற கிராம ஊராட்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட்டே பறிபோனது.

முத்துப்பேட்டை பகுதியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 17-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கிரிசாமிக்கும் தி.மு.க.வின் கே.முருகையனுக்கும் இடையே கடுமையான போட்டி. அதில் எங்க பக்கிரிசாமி 30 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வெற்றியை தவிர்க்க தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகேயன், தேர்தல் அதிகாரியிட மிருந்து வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யையே தள்ளிவிட்டு ஓடினார். அதை கம்யூனிஸ்ட் தோழர் கள் முறியடித்தனர்.

அழகு திருநாவுக்கரசு தி.மு.க.வுக்குப் போகிற விழாவிற்கு சிவானந்தம் என்கிற எங்களது ஒன் றிய கவுன்சிலரை கடத்திக்கொண்டு போகப் பார்த்தார்கள். அதை எங்களது தோழர்கள் முறியடித்தார்கள். இவ்வளவு வேலைகளையும் தி.மு.க.வுக்கு எதிராக களத்தில் நின்று செய்து முடித்தவர் யார் தெரியுமா? சிவபுண்ணியம்தான்.

அவரது சொந்த ஊரான மேலபனையூர் ஒரு கம்யூனிஸ்ட் கிராமம். அந்த ஊரில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் வைத்தியநாதன். அவர் சிவபுண்ணியத்தின் அப்பா. அவரும் அதே கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, அவரது குடும்பம் முழுவதுமே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். அப்படிப்பட்டவர் தி.மு.க.வுக்கு எப்படிப் போவார்'' என எதிர் கேள்வி எழுப்புகிறார்கள்.

சந்தேகத்திற்குரிய சிவபுண்ணியமோ... ""நான் எனது கட்சி முடிவுகளுக்கு மீறி எப்பொழுதும் செயல்படமாட்டேன். அதேநேரம் நல்ல திட்டங்களை பாராட்டவும், நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு விழா, சட்டமன்றம் என அனைத்தை யும் மக்களுக்காக பயன்படுத்துவேன்'' என்கிறார்.

சென்சார் அதிகாரிக்கு காப்பு!




"காதல் சொல்ல வந்தேன்'’படத்துக்கு தணிக்கை சர்டிபிகேட் கொடுக்க லஞ்சம் கேட்ட ஊழல் முதலை ஒன்றை குறிவைத்துப் பிடித்திருக்கிறது சி.பி.ஐ. டீம்.

இந்த ஊழல் முதலை விவகாரத் துக்குப் போவதற்கு முன்... டிராஜிடியும் நெகிழ்ச்சியும் கலந்த ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.







அமைச்சர் பரிதி இளம்வழுதி யின் செல்லமகன் பெயர் அப்பு. துரு துருவென அழகாய் இருப்பார். கல்லூரி ஒன்றில் படித்து வந்த அப்பு மீது பரிதியும் அவர் மனைவியும் உயிரையே வைத்திருந்தனர். இந்த நிலையில்... திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பு இறந்துபோனார். இந்த சோகத்தைத் தாங்கமுடியாமல் பரிதி குடும்பம் திணறியது. பரிதியின் மனைவி, மகன் நினைவாக எப் போதும் அழுதுகொண் டே இருந்தார்.

இந்த நிலையில் விஜய் டி.வி.யில் "கனா காணும் காலங் கள்'’தொடரில் நடித்துக்கொண் டிருந்த பாலாஜி யைப் பார்த்து திகைத்துப்போய்விட்டார் பரிதி மனைவி. காரணம்... தன் மகன் அப்புவின் சாயலில் அப்படியே இருந்தார் பாலாஜி. உடனே தன் கணவரான பரிதியிடம்... ""இந்தப் பையனைப் பார்த்தா நம்ம அப்பு மாதிரியே இருக்கு. இப்பவே இந்தப் பையனை நேர்ல பார்க்கணும் போலிருக்கு. எப்படியாச்சும் நீங்க இந்தப் பையனைக் கண்டுபிடிச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க''’ என அழ ஆரம்பிக்க... பரிதியே அந்த பாலாஜியைத் தேடி களம் இறங்கினார்.

சென்னை கோயம்பேட்டில் பாலாஜியின் அப்பா காய்கறிக்கடை வைத்திருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டு.... பாலாஜியை நேரில் சந்தித்தார். தன் மகன் அப்பு பற்றி எடுத்துச்சொல்லி... பாலாஜியை வீட்டுக்கு அழைத்து வந்தார். பரிதியின் மனைவி, பாலாஜியை தன் மகனாகவே பார்த்து கண்ணீர் வடித்தார். புத்தாடைகள் கொடுத்து, தன் கைகளால் சாப்பாடு போட்டார். அதிலிருந்து அடிக்கடி பாலாஜி, பரிதி வீட்டிற்கு வந்து போவார்.

பாலாஜிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பரிதி... தன் நண்பரான எஸ்-3 பிலிம்ஸ் ஜெயக்குமா ரிடம் பாலாஜியை அறிமுகப்படுத்த... ஜெயக்குமாரோ... பாலாஜியை ஹீரோ வாகப் போட்டு படம் எடுக்கும் முடிவுக்கு வந்தார். இப்படித்தான் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் "காதல் சொல்ல வந்தேன்'’ படத்தின் ஹீரோவாக ஆனார் பாலாஜி. ஹீரோயின் மேக்னா. படத்துக்கு இசை யுவன். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. படப்பணிகள் முடிக் கப்பட்டு... தணிக்கைச் சான்றிதழுக்காக சென்னை சாஸ்திரிபவனில் இருக்கும் அதற்கான அலுவலகத்துக்குப் போனது. அங்கு மண்டல அதிகாரியாக இருந்த ராஜசேகர்... ""எனக்கு ஒரு லட்சரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் கொடுப்பேன்'' என்று சொன்ன தோடு... படத்தையும் பார்க்காமல் சான்றிதழையும் தராமல் இழுத்தடித்தார்.

படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வரதராஜன், ""நானும் தணிக்கைக் குழுவில் உறுப்பினரா இருந்தவன்தான். எங்கக்கிட்டயே கறாரா பணம் கேட்டா எப்படி?''’ என்று பேசிப் பார்த்தார். ஊழல் முதலையான ராஜசேகர்... ""பணமிருந்தால் வாங்க. படத்தைக் கூடப் பார்க்காம... சர்டிபிகேட் கொடுக்கு றேன்''’என்றார் விடாப்பிடியாக. ""சரி பணத் தோட வர்றேன்'' என்றபடி அங்கிருந்து கிளம் பிய வரதராஜன்... அதே சாஸ்திரிபவனில் இருந்த சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இன்னொரு பட நிர்வாகியான கோவிந்தராஜை அனுப்பினார்.

டி.ஐ.ஜி. அருணாச்சலத்திடம் விவரங் களைச் சொல்லிப் புகார் கொடுத்தார் கோவிந்தராஜ். உடனே சி.பி.ஐ. டீம் அதிரடி ஆக்ஷனுக்கு ரெடியானது.

10 ஆயிரம் ரூபாயை ரெடிசெய்து.. அதன் எண்களைக் குறித்துக்கொண்டதோடு... அந்தப் பணத்தை அப்படியே ஸ்கேன் செய்து கொண்டனர். பின்னர் அதை கோவிந்த ராஜிடம் கொடுத்து ராஜசேகரிடம் அனுப் பினர். ""என்ன 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கா. மிச்சத்தை எப்பத் தருவீங்க?''’என்றபடி ராஜசேகர் அந்தப் பணத்தை வாங்கி சட்டைப் பைக்குள் வைக்க... அதே நேரம் அவர் அறைக்குள் நுழைந்த எஸ்.பி.ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.பி.ஐ. டீம், புழல் சிறைக்கு ராஜசேகரை அனுப்பி வைத்தது.

தஞ்சாவூர்க்காரரான ராஜசேகர் பஞ்சாப் கேடரில் ஐ.எஃப்.எஸ். படித்து... விலங்குகள் சரணாலய அதிகாரியாக இருந்தவர். சினிமாப் புள்ளிகளின் நட்பிற்காகவும் சம்பாதிப்பதற்காகவும்... கொஞ்சம் செலவு செய்து விருப்ப மாறுதல் வாங்கிக் கொண்டு கடந்த ஜூன் 17-ந் தேதிதான் இங்கு வந்து சேர்ந்தார். 40 வயதுக் காரரான ராஜசேகர், இங்கு வந்த 40-வது நாளிலேயே லஞ்ச வழக்கில் சிக்கி கைதாகியிருக்கிறார். இந்த 40 நாளில் அவர் தணிக்கைச் சான்று கொடுத்த படங் களின் எண்ணிக்கையும் 40 என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக இருக்கிறார். குழந்தைகள் இல்லை. இருந்தபோதும் பண ஆசை... ராஜசேகரை விடவில்லை.

ராஜசேகர் முதலில் கொடுத்த தணிக்கைச் சான்று.. "ராவணன்' படத்துக்காகத்தான். இதற்காக 75 ஆயிரம் ரூபாய் மொய் வசூலித்திருக்கிறார். சின்ன சின்ன புரட்யூசரைக்கூட விடாமல் கறாராக லஞ்சத்தைக் கேட்டு வாங்கிய ராஜசேகர்... இந்த 40 நாளில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறார் என்கிறது தணிக்கை அலுவலகத் தரப்பே.

மதுரை மண்டலத்தின் கள நிலவரம்


ஒவ்வொரு சாலையும் ரோம் நகரம் நோக்கியே செல்கின்றன என்பது போல, அரசியலில் ஒவ்வொரு நடவடிக்கையும் தேர்தலை மனதில் வைத்தே நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் தலைமையை எதிர்த்து எதிர்க்கட்சியும், எதிர்க் கட்சியின் தலைமையை எதிர்த்து ஆளுங்கட்சியும் போராட்டம் நடத்துகின்ற வித்தியாசமான அரசியலைக் காண்கிறது தமிழகம். தினம்தோறும் அறிக்கைகள், பதிலறிக்கைகள், விவாதங்கள், விளக்கங்கள் என விறுவிறுப்பைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது அரசியல் களம். தனிப்பட்ட செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்கள் எந்தப் பக்கம் போவார்கள், கட்சிகள் எந்தக் கூட்டணிப் பக்கம் சாயும் என்பதெல்லாம் உற்று கவனிக்கப்பட்டு வரும் நிலையில், நக்கீரனின் கள ஆய்வு முடிவுகள் மிக உன்னிப்பாக நோக்கப்படுகின்றன.

தமிழக அரசியலைத் தீர்மானிப்பதில் தென்மாவட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கட்சி செல்வாக்கின் அடிப்படையிலும், சமுதாயங்களின் பலத்தின் அடிப்படையிலும் தென்மாவட்டங்கள் மீது அரசியல் கட்சிகள் சிறப்பு கவனம் செலுத்து கின்றன. தென் மண்டலத்தின் மிகப் பெரிய நகரமாக விளங் கும் மதுரையை மையமாகக் கொண்ட மதுரை மண்டலத்தின் கள நிலவரம் இந்த இதழில் இடம்பெறுகிறது....






வைகைப் பாசனமும், அதனையே நீர் ஆதாரமாகவும் கொண்டிருக்கிற மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதிகளே இந்த மண்டலத்திற்குள் வரையறுக்கப் பட்டுள்ளன. இந்த 3 நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரமே இங்கு வெளியாகியுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களுடன் கிராமப்புறங்கள் அதிகளவில் இணைந்த இந்த மண்டலத்தில் விவசாயமும் சிறு அளவிலான தொழில்களுமே மக்களின் வாழ்வாதாரம். கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். பெரியளவில் தொழிற்பேட்டைகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ அமைந்திடாத இந்த மண்டலத்தில் கட்சிகளின் செல்வாக்கினை வரைபடம் காட்டுகிறது.

மதுரை

ஆளுந்தரப்பின் முழு நம்பிக்கையும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதுதான். அவருடைய தேர்தல் ஃபார்முலா தங்களை ஜெயிக்க வைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. ஒருகாலத்தில் மதுரையைத் தனது கோட்டையாக வைத்திருந்த அ.தி.மு.க., தற்போது அழகிரி போடும் ஓட்டையிலிருந்து கட்சியைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே செயல்படுகிறது. எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் நிரந்தர ஓட்டு வங்கியையும், கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கையும் வைத்து ஆளுங்கட்சியை எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறது அ.தி.மு.க. சமுதாயரீதியாக முக்குலத்தோர், பிள்ளைமார், முஸ்லிம், தலித், நாயுடு, யாதவர்கள் எனப் பல சமூகத்தினரும் ஒவ் வொருவிதமான தாக் கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக் கிறார்கள்.

முக்குலத்தோர் அதிகமாகவும் அவர்களின் வாக்குகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தலித் மக்களும் வசிக்கும் மேலூர் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதக மாக அமைந்தது. எனினும், நாடாளுமன்றத்தேர்தலில் மதுரை எம்.பி. தொகுதிக் குட்பட்ட இங்குதான் மு.க.அழகிரிக்கு அதிக லீடிங் கிடைத்தது. அழகிரி மகள் கயல்விழி இங்கு போட்டி யிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உ.பி.க்கள் தேர்தல் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர். கோட்டையைக் கோட்டைவிட்டுவிடக்கூடாது என அ.தி.மு.க. வரிந்து கட்டுகிறது. காங்கிரசுக்கு இங்குள்ள பாரம்பரியமான வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே கூட்டணி அடிப்படையில் முடிவுகள் அமையும் என்பதே மேலூர் நிலவரம்.

பிறன்மலைக் கள்ளரும் நாயுடு ஓட்டுகளும் கணிசமாக உள்ள மதுரை தெற்கு தொகுதியில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் வரிந்து கட்டுகின்றன. அழகிரியின் அட்வைஸ்படி தொகுதிக்குள் மா.செ. தளபதி வலம் வந்து கொண்டிருப்பதை அ.தி.மு.க தரப்பும் கவனிக்கத் தவறவில்லை. அ.தி.மு.க-தி.மு.க நேரடி போட்டி கடுமையாக அமையக்கூடிய தொகுதியாக இருக்கிறது மதுரை தெற்கு.





சி.பி.எம். எம்.எல்.ஏ. நன்மாறனின் எளிய அணுகுமுறையும், பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக முன்னிற்கும் தன்மையும் மதுரை கிழக்குத் தொகுதி மீது தோழர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. தி.மு.க. மா.செ. மூர்த்தி கடந்த 1 வருடமாக இந்தத் தொகுதியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். யாதவர்களும் முக்குலத்தோரும் சரிசமமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இத் தொகுதியில் அ.தி.மு.க. மாஜிகளான கண்ணப்பனும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து வலம் வருகிறார்கள். கூட்டணிக்கட்சிக்கா, கழகங்களுக்கா என்று தொகுதி முடிவாகும்போது போட்டி விறுவிறுப்பாகும்.

காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதியான மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர் அதிகம். தொழிலாளர்களும் அதிகம். அதனால் கம்யூ னிஸ்ட்டுகளை தனது அணியில் கொண்டுள்ள அ.தி.மு.க. புதிய நம்பிக்கை பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கே மறுபடியும் சீட் கொடுத்தால் அழகிரிதான் ஜெயிக்க வைக்கவேண்டும் என்று தி.மு.க.வினரே சொல் கிறார்கள்.

பி.டி.ஆரின் மரணத்தால் இடைத்தேர்தலை சந்தித்து, அழகிரியின் தேர்தல் ஃபார்முலாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை மத்திய தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அவர்களையடுத்து, யாதவர்கள், முக்குலத்தோர், தலித், பிள்ளைமார் என்ற வரிசையில் வாக்குவங்கி உள்ளது. முஸ்லிம் ஓட்டுகள் ஆளுந்தரப்புக்கு சாதகமாக இருக்கிறது. யாதவர்கள், முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாகப் பெற அ.தி.மு.க. கணக்குப்போட, தி.மு.க. அங்கும் தன் செல்வாக்கைச் செலுத்திக்கொண் டிருக்கிறது. விஜயகாந்த்தின் சொந்தப் பகுதி என்பதால் தே.மு.தி.க. வாக்குவங்கியும் முக்கியத்துவம் பெறுகிறது. கேப்டனே இங்கு நிற்கப்போகிறார் என தே.மு.தி.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பொதுப்பிரச் சினைகளும் தொகுதிகளுக்கான தனிப்பட்ட பிரச்சினை களும் பின்தள்ளப்பட்டு, கட்சி செல்வாக்கு, ஜாதி பலம், தனிமனிதர்களின் ஆளுமை, கூட்டணி நிலவரம் இவற்றை மையமாக வைத்தே மதுரையின் தேர்தல் களம் அமைந்துள்ளது.

சிவகங்கை

தொகுதி சீரமைப்புக்குப்பின் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரு சட்டமன்றத் தொகுதிகளைத் தன்னுள் கொண்டுள்ள சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் முக்குலத்தோர்தான். அவர்களிலும் கள்ளர் சமுதாயத்தினர் இங்கு அதிகம்.

இவர்களின் ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பது அ.தி.மு.க. அடுத்த இடம், காங்கிரசுக்கு. ஆளுங் கட்சியான தி.மு.க.வை ஆதரிக்கும் கள்ளர் சமுதாயத்தினர் குறைவு என்பதை நம் கள ஆய்வில் காண முடிந்தது. முக்குலத்தோரில் மற்றொரு பிரிவினரான அகமுடையார் சமுதா யத்தினரில் பெரும்பாலானவர்கள் தி.மு.க. அனுதாபிகளாக உள்ளனர். மறவர் சமுதாயத்தினர், அ.தி.மு.க. சார்பாக உள்ளனர்.

எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் தலித் மக்கள். இவர்களில் தேவேந்திரகுல வேளாளர்களும் ஆதிதிராவிடர்களும் சம அளவில் உள்ளனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான வாக்குகள் ஓரளவு இருந்தாலும், தலித் சமுதாய வாக்கு களில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களுக்கானப் பங்கைக் கொண் டிருக்கின்றன.

வாக்காளர் பலத்தில் மூன்றாவது இடம் முத்தரையர் களுக்கு. நான்காவதாக யாதவர்கள் உள்ளனர். இவர்கள் மத்தியில் ராஜ.கண்ணப்பனுக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கு, அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிறது. அந்த வாக்குகளை தி.மு.க.வுக்குத் திருப்ப, அமைச்சர் பெரியகருப்பன் போராடிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பிடத்தக்க அளவில் உள்ள உடையார் சமுதாயத்தினரில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ், தி.மு.க. அனுதாபிகளாக உள்ளனர். சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களும் தி.மு.க. பக்கமே அதிகளவில் உள்ளனர். காரைக் குடி, திருமயம் தொகுதிகளில் உள்ள செட்டியார் சமுதாயத்தின ரில் பெரும்பகுதியினர் பாரம்பரிய மாக காங்கிரசுக்கு வாக்களிக் கின்றனர்.

அரசின் இலவச திட்டங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் தி.மு.க. ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை காங்கிரசும் பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசில் 3-வது இடத்தில் இருக்கும் அமைச்சரான ப.சிதம்பரத்தின் சொந்த நாடாளுமன்றத் தொகுதி என்பதால் காங்கிரசின் கவனம் இங்கு கூடுதலாக உள்ளது.

அதே நேரத்தில், காரைக்குடி நகரம் வளர்ந்த அளவுக்கு மற்ற நகரங்கள் வளரவில்லை என்ற குற்றச்சாட்டு, பொதுமக்களிடம் உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்துள்ள இந்த மாவட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உரிய அளவில் எடுக்கப்படவில்லை. காளையார் கோவில் பகுதியில் நடந்த அணைக்கட்டு, கண்மாய் சீரமைப்புப் பணிகளில் ஊழல் என விவசாயிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கும் விதத்தில் அ.தி.மு.க. தரப்பு செயல்பட, அதைத் தடுக்கும் வியூகங்களை தி.மு.க. வகுப்பதால் சிவகங்கை மாவட்டத்தில் போட்டிக்களம் விறுவிறுப்பாகவே உள்ளது.

ராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் நேரடியாக இலங்கைக் கடற்படையினரால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் எப்போதுமே அரசியல் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகியவற்றோடு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவான திருச்சுழியும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளாக உள்ளன.

பெரியளவிலான தொழிற்சாலைகள் எதுவுமில்லாத இந்த மாவட்டத்தில், மீன்பிடித் தொழிலை நம்பி 2 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்த்து, தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பிக் கொண்டி ருக்கிறார்கள்.

சமுதாய ரீதியில் முக்குலத் தோரே இந்த மாவட்டத்தில் அதிகம். அவர்களில் மறவர், அகமுடையார் அதிகம். கள்ளர் சமுதாயத்தினர் குறைந்த அளவு உள்ளனர். இந்த 3 பிரிவினரில் 60 சதவீதம் பேர் அ.தி.மு.க. ஆதரவாளர்களாகவும், 30 சதவீதம் பேர் தி.மு.க. பக்கமும் இருக்கிறார்கள்.

இரண்டாவது பெரிய சமுதாயமான தலித் மக்களில், தேவேந்திரகுலவேளாளர்கள் மிக அதிகமாகவும், ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள் குறைவாகவும் உள்ளனர். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்த தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குவங்கியை தற்போது தன் பக்கம் வைத்திருப்பதில் புதிய தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. எனினும், அக்கட்சிக்கு அமையும் கூட்டணி, அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் ஆகியோரைப் பொறுத்தே இந்த வாக்குகள் தேர்தல் நேரத்தில் பதிவாகிறது.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், மூன்றாவது பெரிய சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள். மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ஆகியவற்றில் இவர்கள் இடம் பெற்றிருந்தாலும் தேர்தலில் வாக்கு என்று வரும்போது இஸ்லாமியர்களில் முக்கால்வாசி பேர் தி.மு.க.வையே ஆதரிக்கிறார்கள்.

மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருப்பதால் அவர்கள் மத்திய -மாநில அரசுகளின் மீது கோபத்தில் உள்ளனர். இதனை அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதில் முனைப்பாக இருக்கின்றன. யாதவர்கள் வாக்குகளை மொத்தமாக அ.தி.மு.க. பக்கம் திருப்பும் அசைன்மென்ட் ராஜ.கண்ணப்பனிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

வானம் பார்த்த பூமி எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரளவு விவசாயம் நடைபெறும் ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி பகுதிகளில் போதிய பாசன வசதி இல்லை. சிட்டிங் எம்.எல்.ஏக்களில் பலருக்கும் இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த்திட்டம், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றை தேர்தல் நேர அறுவடையாக்கும் முயற்சியில் ஆளுந்தரப்பு மும்முரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன் பழைய பலத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது.

மதுரை மண்டலம் இரு கழகங்களின் கௌரவப் போட்டிக் களமாக உருவெடுத்திருப்பதை நமது கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

(வரும் இதழில் திண்டுக்கல் மண்டலம்)

காமராஜ் - எம்.ஜி.ஆர் சகாப்தம்! தேர்தல் ஆய்வு!


முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-க்கும் எதிர்வரும் 2011 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடை யே தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திராவிட அரசியல் இயக்கங்களின் வளர்ச்சிக் குப்பின், இந்திய அளவில் தமிழகம் தனித்துவம் வாய்ந்த மாநிலமாகிவிட்டது. பலம் மிக்க பெரிய கட்சி கள் இருந்தாலும் அவை கூட்டணியின் துணையின்றி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலைமையே தமிழகத்தில் நிலவுகிறது. தனித்து நிற்கும் சூழலை பெரிய கட்சிகள் தவிர்க்கவே செய்கின்றன.

தமிழகத் தேர்தல் களத்தின் முறைப்படியான கூட்டணி வரலாறு 1967-ல் தொடங்கியது. அந்த தேர்தல் முடிவுகளால் காமராஜரின் ஆட்சி நிறைவுபெற்று, தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து, அண்ணா தலைமையில் அரசு அமைந்தது. இதன்பிறகு நடந்த தேர் தல்களில் ஏதேனும் ஒரு வகையில் கூட்டணி அமைப் பதையே கட்சிகள் விரும்புகின்றன. மாநிலத்தில் உள்ள இருபெரும் கழகங்களுடன் தேசிய கட்சிகள்கை கோர்ப்பதும், சிறிய கட்சிகள் இந்த கூட்டணிகளுக்குள் இணைந்து கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. எனவே, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு கட்சிகளின் பலம் என்று தனியாகக் கணக்கிடுவது பொருத்தமாக இருக்காது.

அந்த அடிப்படையில், கூட்டணி அரசியல் வலுப் பெற்று பெருந்தலைவர் காமராஜர் மறைவு வரையிலான காலகட்டத்தை காமராஜர் சகாப்தம் என்றும், தி.மு.க. விலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி ஆட்சி யமைத்த எம்.ஜி.ஆரின் பதவிக்காலத்தை எம்.ஜி. ஆர். சகாப்தம் என்றும், எம்.ஜி.ஆரின் மறைவுக் குப் பிறகு அ.தி.மு.க. பிளவுபட்ட காலத்தை ஒரு பகுதியாகவும், பிரிந்த அ.தி.மு.க. ஒன்றுசேர்ந்து இன்றுவரையிலான அரசியல் நிலவரத்தை இன் னொரு பகுதியாகவும் கொண்டு கட்சிகளின் பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

காமராஜர் சகாப்தம்

தமிழக அரசியலில் தேர்தலுக்கு முந் தைய வலுவான கூட்டணி 1967 தேர்தலில் அமைந்தது. அதில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், தி.மு.கவுக்கு தனி மெஜா ரிட்டி இருந்ததால் கூட்டணி அரசு அமையா மல், தனிக்கட்சியின் ஆட்சியே அமைந்தது. அதன்பின்னர் நடந்த தேர்தல்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது. 1971 தேர்தலில் தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான காமராஜர் தலைமையிலான காங்கிரசும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் கைகோர்த்து மெகா கூட்டணியை அமைத் தது. எனினும், தி.மு.க., இந்திரா காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளை மட்டுமே தன் பக்கம் வைத்துக்கொண்டு பெரும் வெற்றி பெற்றது. தி.மு.க. மட்டும் 183 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காமராஜர்-ராஜாஜி இருவரும் இணைந்தும் காங்கிரசால் வெற்றிபெறமுடி யாமல் போனது இன்றுவரையிலும் அரசியல் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சகாப்தம்

பெருந்தலைவர் காமராஜர் 1975-ல் மறைந்தார். அதன்பின், தமிழக அரசியல் களம் என்பது எம்.ஜி.ஆர்-கலைஞர் என்ற இரு தலைவர்களுக்கிடையிலான போட்டிக்களமாக மாறியது. காமராஜரின் ஆதரவாளர்கள் பலரும் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர். அங்கே சேரவிரும்பா தவர்கள் ஜனதா கட்சியில் செயல்பட்டனர்.

எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து பிரித்து, தனிக்கட்சி தொடங்க வைப்பதன் மூலம் தமி ழகத்தில் காங்கிரஸ் மீண்டும் பலம் பெறும் என்பது மத்தியில் ஆட்சியி லிருந்த காங்கிரசின் திட் டம். ஆனால், அதன் கணக்குப் பலிக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சி யைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., தி.மு.க.விற்கு ஏற்படுத்திய சேதம் கொஞ்சம்தான். தி.மு.க. வுக்கு எதிராகவும் காங் கிரசுக்கு ஆதரவாகவும் இருந்த வாக்குகளே பெரு மளவில் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பியது. கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பிராமணர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் ஆதரவு வாக்குகள் எம்.ஜி.ஆருக்கு சாதகமாக அமைய 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத் தது. இதில், 1984-ல் மட்டும்தான் காங் கிரசுடன் எம்.ஜி.ஆர். கூட்டணி அமைத்திருந் தார். 1977, 80 இரு தேர்தல்களிலும் அவ ருக்குத் துணை நின்ற வை கம்யூனிஸ்ட் கட்சி கள். எனினும், இந்த காலகட்டத்தில் கம்யூ னிஸ்ட்டுகள் தங்கள் சொந்த பலத்தைப் பெருக்கிக்கொள்ள வில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற விடாப் பிடிக் கொள்கையால், காங்கிரசுடன் கூட்டணி சேராத கழகம் எதுவோ அதன் கூட்டணியில் சில தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு தேர்தலை சந்தித்தனர். 3 சட்டமன்றத் தேர் தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனபோதும், கலைஞரின் அரசியல் வியூகங்களால் தி.மு.க என்ற கட்சி அமைப்பு உறுதியாகவே இருந்தது.

(எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், கட்சிகளின் செல்வாக்கு நிலைமை பற்றிய விபரங்கள் வரும் இதழில்)

குளிர் காய கலவர நெருப்பு?


விருதுநகர் மாவட்டம் -வத்றாப் புதுப்பட்டி.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாதிக் கலவரம் மூண்டு ஏழு பேரைப் பறிகொடுத்த கிராமம். ஆதிதிராவிடர்களுக்கும், தேவேந்திரர்களுக்கு மிடையே இங்கு அவ்வப்போது பகைமையும், வன்மமும் தலைதூக்கினாலும் கூட, ஒருமனதாக தேவேந்திரர் ஒருவரை அடுத்தடுத்து பேரூராட்சித் தலைவர் ஆக்கியதில் இருதரப்பும் கரம் கோர்த்தே நின்றது. நீடித்து வந்த இந்த ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகத்தான், பேருந்து ஒன்றில் பயணித்தபோது வாய்ச் சண்டையில் ஆரம்பித்த விவகாரம் ஒன்று அடிதடியில் முடிந்தது. இதில் தாக்கப்பட்ட குமாருக்காக, தேவேந்திர மக்கள் ஆதி திராவிடர்களோடு மோத ஆயத்தமாக, ஸ்பாட்டுக்கே வந்த வத்றாப் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, "சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்தலாமா? உயிரை விட ஏன் துடிக்கிறீர்கள்?' என்று கடுமையாக எச்சரிக்கிறார். அவரது அறிவுரைக்கு செவி சாய்க் காமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த இருதரப்பும் அரிவாளைத் தூக்க... நிலைமையைச் சமாளிக்க இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வானத்தை நோக்கிச் சுட வேண்டியதாயிற்று. இந்தக் களேபரத்தில் பால்காரர் கருப்பையா வெட்டப்பட்டு பிணமானார்.

கைது நடவடிக்கைகள், அதிக அளவில் காக்கிகளைக் குவித்து பந்தோபஸ்து போட்டும் கூட, "பலியான தேவேந்திரர் உயிருக்கு பழிக்கு பழி வாங்காமல் ஓய மாட்டோம்' என ஒரு கும்பல் வெறித்தனமாகப் புறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், பக்கத்து கிராமமான மாத்தூரில் இரவு நேரத்தில் வெடிகுண்டு வீசி ராமு என்ற சலவைத் தொழிலாளியைக் கொன்று விடுகிறார் கள். முக்குலத்தோரான முத்துராஜுக்கும் வெட்டு விழுகிறது. இருட்டில் அடையாளம் தெரியாமல் சாதி மாறி விழுந்த இக்கொலை பிற சமுதாய மக்களையும் உஷ்ணப்படுத்த, ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியே வ.புதுப்பட்டிக்கு வந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

கடும் பீதி நிலவிய வ.புதுப்பட்டிக்கு நாம் சென்றபோது பெரியவர் ஒருவர்,

""தலித்து மக்கள் ஜனாதிபதியாக்கூட ஆயிருக்காங்க. பெரிய பெரிய ஜட்ஜா இருக்காங்க. சட்டமேதை அம்பேத்கர் பிறந்த சமூகம் இது. படித்து முன்னேறிக்கிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துல உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அருவாளத் தூக்கிட்டு அலையுறது ரொம்பக் கேவலமா இருக்கு. இந்த ரெண்டு கொலையவும் சாக்கா வச்சு இந்த விருதுநகர் மாவட்டத்துல பெரிய அளவுல சாதிக் கலவரத்த தூண்டிவிட ஒரு கட்சி தயாராயிட்ட தா பேசிக்கிறாங்க. கலவர நெருப்புல குளிர் காயறதுன்னா அந்தக் கட்சிக்கு அம்புட்டு சுகம். அத இந்த நாடு பார்க்காம இல்ல. அதோடு கூட்டணி சேர்ந்துருக்கறவங்க இந்தப் பிரித் தாளும் சூழ்ச்சில சிக்கிடக்கூடாது'' என்றார் பதற்றத்துடன்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் நம்மிடம் ""கலவரத்தை உண்டுபண்ண யார் முற்பட்டாலும் அவர்கள் மீது காவல்துறை கடு மையா நடவடிக்கை எடுக்கும். குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு நிச்சயம் நீதிமன்ற தண்டனை வாங்கிக் கொ டுப்போம்'' என்றார் உறுதியுடன்.

ஒருதாய் மக்களாக வாழ கிராமங்கள் உறுதி பூண வேண்டிய தருணம் இது.

மாணவர்களின் ஸ்காலர்ஷிப் கொள்ளை!

மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகையை ஆசிரியர்களே கொள்ளையடிக்கிறார்கள்’ என ஏகத்துக்கும் பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் வர... விசாரணையில் இறங்கினோம்.

புகார்க்குரல் எழுப்பும் மாணவர்கள் தரப்பில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கௌசல்யா, அஸ்வினி, ரேகா, சங்கீதப்பிரியா ஆகியோரைச் சந்தித்தோம்.

குமுறலோடு பேசிய அவர்கள் ""தலித் சமூகத்தைச் சேர்ந்த நாங்க இப்ப கல்லூரியில் சேர்ந்திருக்கோம். இதுக்கு முன்ன வி.டி.எஸ்.மேனிலைப்பள்ளியில் படிச்சோம். ப்ளஸ்-1, ப்ளஸ்-2 படிச்ச எங்களுக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை வழங்கியது. வருஷத்துக்கு 1,500 ரூபா வீதம் தந்த இந்த உதவித்தொகையை அந்தப் பள்ளி நிர்வாகம்... இவ்வளவு நாள் ஆகியும் எங்களுக்குத் தரலை.

அந்த பள்ளியில் ஸ்காலர்ஷிப் விவகாரத்தை கவனிக்கிற வெங்கடேசனிடம் போய்க் கேட்டால்... "ஹெச்.எம்.மை போய்ப் பாருங்க'ன்னாரு. ஹெச்.எம். ஆனந்தனைக் கேட்டால்... "இது என் வேலையில்லை. போய் ஆபீஸ் ரூமில் கேளுங்க'ன்னு துரத்தறார். அரசாங்கம் எங்களுக்குக் கொடுத்த கல்வி உதவித்தொகையை வாங்க 4 வருசமா அலையா அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். கொடுக்கமாட்டேங் கறாங்க''’என்றார்கள் ஆதங்கமாய்.

டேனிஷ் மிஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ்-2 முடித்து வெளியே வந்திருக்கும் மாணவி கௌசல்யாவோ ""நானும் ப்ளஸ்-1 படிக்கும் போதே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிச்சேன். இந்த ரெண்டு வருஷ உதவித்தொகையையும் கொடுக்க மாட் டேங்கறாங்க.. 2 வாரத்துக்கு முன்ன மார்க் ஷீட் வாங்கப் போனப்பகூட கேட்டேன். அரசாங்கம் இன்னும் அனுப்பலைன்னு சொல்றாங்க. அங்க படிச்ச பாதிப் பேருக்கு மட்டும் கொடுத்துட்டு மீதிப் பேருக்கான பணத்தை கொடுக்காம அமுக்கிட் டாங்க''’என்கிறார் கவலையாய்.

தலித் விடுதலை இயக்க நிறுவனர் ஞானசேகரனோ ""திருவண்ணாமலையில் இருக்கும் இந்தப் பள்ளிகள் மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளில் இந்த நிலைமை இருக்கு. இது தொடர்பா நாங்க ஆதி திராவிட நலத்துறையில் கேட்டப்ப.. "பள்ளிகள் சரியா விண்ணப்பம் அனுப்பறதில்லை'ன்னு சொல் றாங்க. பள்ளிகள்ட்ட கேட்டா...

"நாங்க அப்ளிகேஷன் அனுப்பறோம். அவங்கதான் பணம் அனுப்பலை'ன்னு மழுப்பறாங்க. இந்த ரெண்டு தரப்பு சொல்றதுமே பொய். அரசாங்கம் ஒதுக்கும் உதவித் தொகையை பள்ளிகள்ல இருக்கும் சில நந்திகள்தான் வழிமறிச்சி.. தானே எடுத்துக்குது. இதே டேனிஷ் பள்ளியில் இருக்கும் ஒரு ஆசிரியர்... மாணவர்களைப் போல போலியாக் கையெழுத்து போட் டுட்டு.. உதவித்தொகைப் பணத்தை எடுத் திருக்காரு. அதற்கான ஆதாரம் எங்கக்கிட்ட இருக்கு. இது பற்றி அதிகாரிகள் தரப்பிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை''’என்றார் எரிச்சலாய்.

இந்த விவகாரம் குறித்து வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த னிடம் நாம் கேட்டபோது ‘""ஸ்காலர்ஷிப்பில் பிரச்சினை வருதுன்னு தெரிஞ்சதால்.. கடந்த ரெண்டு வருசமா நானே மாணவர்களைக் கூப்பிட்டு உதவித் தொகையைத் தர ஆரம்பிச் சிருக்கேன். 2006-2007-ல் 40 மாணவர்களுக்கான உதவித் தொகை வரலை. அதற் கான ரெக்கார்டுகளைக் காட்டச் சொல்றேன் பாருங்க’’என்றவர்'' கிளரிக்கல் செக்ஷனைச் சேர்ந் தவர்களைக் கூப்பிட்டு... பைல் களை நம்மிடம் காட்டும் படி சொன்னார்.

அங்கிருந்தவர்கள் ஒருமணி நேரத்துக்கு மேலும் தேடிக் கொண்டே இருந்தனர்.

ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் கண்ணை யாவோ, ""டேனிஷ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை அங்க இருக்கும் ஆசிரியரே திருடியது எங்க விசாரணையில் தெரியவந்திருக்கு. அவங்க விநியோகிக்காம வச்சிருந்த 24,500 ரூபாயை நாங்க திருப்பி வாங்கிட்டோம். அதை நாங்களே சம்பந்தப்பட்ட மாணவர்கள்ட்ட கொடுக்கப்போறோம். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வி.டி.எஸ். மேல் நிலைப்பள்ளிக்கான உதவித் தொகையை நாங்க பள்ளிக்கு அனுப்பிட்டோம். அதே சமயம் அந்தப் பள்ளி குறித்த புகார்கள் எதுவும் எங்களுக்கு வரலை''’என்றார் உறுதியாக.

நிறைவாக நாம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடமும் இந்த கல்வி உதவித்தொகை மோசடி குறித்துக் கேட்டோம். மாவட்ட ஆட்சியரோ

""டேனிஷ் பள்ளி ஆசிரியர் கில்பர்ட் தனசேகரன்... மாணவர்களின் கல்வி உதவித் தொகையை 3 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கேட் டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் அவரைக் கைது செய்து... அவரிடமிருந்து பணத்தை ரெக்கவரி செய்து... சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பிரித்துக் கொடுப்போம். மற்ற பள்ளிகளின் நிலவரம் குறித்தும் விசாரணை நடந்துகொண்டிருக் கிறது''’என்கிறார் நம்மிடம்.

மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் இப்படிப்பட்ட திருட்டு ஆசிரியர்களைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

22-க்கு 12 கட்டிய தாலி!

நாடி சோதிடத்தில் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில், வைத்தீஸ்வர நாதர் கோயிலைச் சுற்றியுள்ள கீழவீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி -நான்கு வீதிகளிலும் 60-க்கும் அதிகமான சோதிடக் கடைகள் உள்ளன. இந்த 60 கடைகளிலும் சுமார் 180 சோதிடப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சுவடி படிப்பது, ஜாதகம் கணிப்பது, ஜாதகம் எழுதுவதுதான் இந்தப் பணியாளர்கள் வேலை.

சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை. கடலூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பம் , வாடகைக் காரில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்தது. வெங்கட் சோதிடக் கடை வாசலில் நின்றது. இறங்கினார்கள். ""வாங்க வாங்க'' -வரவேற்றார் சோதிடக் கலை வெங்கட்.

""எங்க மகளோட ஜாதகத்தைக் கணிச்சுச் சொல்லணும்'' -22 வயது மகளைச் சுட்டிக் காட்டியபடி சொன்னார் கடலூர்க்காரர்.

உட்காரச் சொன்ன வெங்கட், தன் பணியாளரை அழைத்து... ""ஏம்பா... பொன்பாலா, இந்த பொண்ணோட ஜாதகத்தை சரியா கணிச்சு... எந்தத் திசையில் மாப்பிள்ளை அமைவார்? ஏழையா? பணக்காரரா? பொண் ணுக்கு திருமண நோக்கம் நடக்கிறதா? பார்த்துச் சொல்லு'' என்று பொன்பால னிடம் கடலூர் பெண்ணின் சாதகத்தைக் கொடுத்தார்.

அந்தக் குடும்பத்தை பக்கத்து கடைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்து சாதகத்தை கணிக்கத் தொடங்கினார் பொன்பாலன். கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து விட்டுக் கடைசியில் சொன் னார். ""சொல்லப் போற தைக் கேட்டு அதிர்ச்சி யடையக் கூடாது. சரியா! உங்க பொண்ணு சாதகத்தில் சூரியனும் செவ்வாயும் ஒரே வீட்ல ஒண்ணா இருக்கிறார்கள். உங்க பொண்ணுக்கு சிறப்பா கல்யாணம் நடக்கும். ஆனால் 16-ம் நாளில் கணவன் ஏதாவது விபத்தில் இறந்து விடுவான். உங்க பெண் அமங்கலி ஆவாள். இதற்கு இப்போதே ஒரு பரிகாரம் செய்யலாம். 12- வயதுக்கும் கீழே உள்ள ஒரு பையனை உங்க பெண் கழுத்தில் 3 முடிச்சு போட வைத்து, உடனே அறுத்துவிட்டு கோயில் ஊருணியில் தலையை முழுகிவிட்டு கிளம்புங்கள். பிரச்சினையே இல்லாமல் உங்க பெண் தீர்க்க சுமங்கலியாக ஆயுள் முழுக்க வாழ்வார்'' என்று சொல்ல வேண்டியதை ஏற்ற இறக்கத்தோடு சொல்லி மயங்க வைத்துவிட்டார் பொன்பாலன்.

ஆயிரம் ரூபாயை தட்சணையாக வாங்கிக்கொண்டு, தன் கடை யில் வேலை செய்யும் 12 வயது சிறுவனை அந்த 22 வயது பெண் ணுக்கு தாலி கட்ட வைத்து தோஷமும் கழித்துவிட்டார் பொன்பாலன்.

அந்தச் சோதிடர் கடையின் அறைக்குள் நடந்த இந்த தோஷ கல்யாணம், ஒருமணி நேரம் கழித்துதான் அக்கம்பக்க சோதிடர்களுக்குத் தெரிந்தது. மேல வீதியே திரண்டு வந்து, பொன்பாலனை, அந்த அறைக்குள்ளே கட்டி வைத்து அடித்து ஊரைவிட்டே விரட்டியிருக்கிறார்கள்.

சோதிடக்கடை முதலாளி வெங்கட்டை தொடர்புகொண்டு ""உண்மைதானா?'' என்றோம். ""அதெல்லாமில்லை... நேர்ல வா பேசிக் கிடலாம்'' என்றார்.

ஒளிந்து திரிந்த பொன்பாலனை கண்டுபிடித்து விசாரித்தோம்.

""பெரிசா ஞாயம் பேசுறானுங்க... அடிக்கிறானுங்க... நான் வைத்தீஸ்வரன்கோயில் பேரை கெடுத்துப்பிட்டேனாம். சாராயம் காய்ச்சி வித்தவனும், கண்டிசன் பெயில்ல கையெழுத்துப் போடுறவனும் சோசியக்கடை வச்சு ஊரு உலகத்தை ஏமாத்திப் பிழைக்கிறான். நான் ஒரு நல்ல குடும்பத்துக்கு மன வைத்தியம் செஞ்சு அனுப்பினது பெரிய தப்பா போயிடுச்சாம். அன்றைக்கு ஒண்ணும் நடக்கல. என்னை விட்டு டுங்க... நான் பேட்டியெல்லாம் தரமுடியாது...'' -நன்றாகப் பேசிக் கொண்டிருந்த பொன்பாலன் தலை தெறிக்க ஓட்டமெடுத்தார்.

வெடிகுண்டு பூமியான பாண்டி!


டேஞ்சரஸ் திகில் பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது புதுவை.

அட்டாக்-1 : அந்த எம்.எல்.ஏ. வீட்டுக்குப் பக்கத் தில் இருக்கும் ஓட்டல் பாரில்... எம்.எல்.ஏ. ஆளான தாதா கழுவா செந்திலும் அவன் கூட்டாளி பாலாஜியும் உட் கார்ந்து தண்ணியடித்தனர். வெளியே தனக்காக எமன் காத்திருப்பதை அறியாமல்... சிரித்துப் பேசியபடியே கண்சிவக்கக் குடித்தவர்கள்... மெல்ல தள்ளாட்டமாய் வெளியே வந்தனர். அப்போது வெளியே காத்திருந்த கழுவாவின் எதிரி டீமான கருணா டீம்... படீர் படீர் என வெடிகுண்டுகளை வீச... ரத்தச் சகதியாகி துடிதுடித்து செத்துப்போனான் கழுவா தன் நண்பனுடன்.

தனது மச்சான்களான காந்தியையும் பரசுராமனையும் ஏற்கனவே கழுவா செந்தில் பொலிபோட்டதால்... பதிலுக்கு பதிலாக கழுவாயைத் தீர்த்துக்கட்டி புதுவையை திகிலில் உறைய வைத்துவிட்டான் கருணா. இது நடந்தது கடந்த மாதம் 12-ந் தேதி.

அட்டாக்-2 : முன்னாள் கப்பல் கேப்டனான விஜய சுந்தரம், தன் மகனின் திருமணப் பத்திரிகையை உறவினர் களுக்குக் கொடுப்பதற்காக... உற்சாக உற்சாகமாக கடந்த 9-ந் தேதி புதுவைக்கு வந்தார். அப்போது அவரை பஞ்சநாதன் என்று எண்ணி... பஞ்சநாதனின் எதிர்கோஷ்டியான ஏகநாதன் குரூப்... ஆள்மாறாட்டத்தில் குறிவைத்துப் பின் தொடர்ந்தது. இது தெரியாமல் அங்கே இங்கே என்று அவர் கல்யாணப் பத்திரிகையோடு போய்க்கொண்டிருந்தார். சரியான சந்தர்ப்பமாகப் பார்த்து... ஏகநாதன் டீம்... விஜயசுந்தரத்தின் மீது குபீர் குபீர் என வெடிகுண்டுகளை எடுத்து வீச... எதற்கு? யாரால் கொல்லப்படு கிறோம்? என்று தெரியாமலே அந்த மாஜி கேப்டனின் உயிர்த்துடிப்பு அடங்கிவிட்டது. இதனால் புதுவையின் பதட்ட டெஸிபல்ஸ் அதிகமானது.

அட்டாக்-3 : க்ரைம் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி... காரைக்காலில் வசித்து வந்த பாலா என்கிற சின்ன பாலாவுக்கு போதாத நேரம். தன் குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக... குழந்தையை புதுவையில் இருக்கும் அந்த மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த் தான். மருத்துவமனையில் பொழுது போகாததால்... அருகில் இருந்த பாலாஜி சினிமா தியேட்டருக்குப் போனான். அவன் தியேட்டருக்குப் போவதைக் கண்ட ஒரு டீம் பரபரப்பானது. திடீர் வியூகங்கள் வகுக் கப்பட... ஆயுதங்கள் ரெடி செய்யப்பட்டன.

தனக்கு விபரீதம் காத்திருப்பது தெரியாமல்... உள்ளே ஜாலியாய்ப் படம் பார்த்துக்கொண்டிருந்த பாலா... படம் முடியும் தறுவாயில் வெளியே வந்தான். வாசலில் காத்திருந்த அந்த டீம்... குபீர் குபீர் என அவன் மீது வெடிகுண்டுகளை வீசியதோடு.. அடிபட்டுத் துடித்து விழுந்தவனை அரிவாளால் பொலிபோட்டுவிட்டுக் கிளம்பியது. 5 வருடங்களுக்கு முன் மொந்தி சங்கரை கொலை செய்ததற்கு... இத்தனை நாள் காத்திருந்து கணக்குத் தீர்த்தது சமீபத்தில் கொல்லப்பட்ட கழுவா செந்திலின் சிஷ்யகோடிகள் டீம்..

-திருவள்ளுவர் நகர் 8-வது வார்டு கவுன்சிலரான ராஜலட்சுமி சொல்கிறார், ""புதுவையைப் பொறுத்தவரை ஜனங்க ஒவ்வொரு நொடியையும் மரண பயத்தோட கழிக்க வேண்டியிருக்கு. யாரை வெட்டறாங்க? எதுக்கு வெட்டறாங்கன்னே தெரியமாட் டேங்குது? வெடிகுண்டுகள் ரொம்ப தாராளமாப் புழங்குது. சில அரசியல்வாதிகள் தாதாக்களை உரம்போட்டு வளர்க்கறாங்க. பெரும்பாலான மர்டர் திட்டங்கள் சிறையில்தான் தயாராகுதுன்னு சொல்றாங்க. பிள்ளையார் கோயிலுக்குள்ள செல்போன் ஜாமர் கருவியை வைக்கிறவங்க.. ஜெயிலுக்குள்ள வைக்கலாமில்லையா? பாரதியும் பாரதிதாசனும் புழங்கிய புரட்சி பூமியான புதுவையில்... ரத்தச் சகதியோட ஆயுதக் கலாச்சாரம் வளரக்கூடாது. காவல்துறை என்ன பண்ணுதுன்னு தெரியலை''’ என்றார் ஆதங்கமாய்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றவேண்டும் என்ற கோஷத்தோடு இடது சாரிகள் பாலாஜி தியேட்டர் எதிரில்... ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு மைக் பிடித்த தோழர் விசுவநாதன் "" “யார் மீதாவது பெட்டிகேஸ் போட்டாக்கூட அமைச்சர்கள் அவங்களுக்காக போலீஸிடம் பேசறாங்க. குற்றவாளிகளைப் பிடிக்கிறதுக்கு முன்னரே... அமைச்சர்கள் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்துடறாங்க. இப்படியிருந்தா எப்படி சட்டம்-ஒழுங்கைக் காப்பாத்தறது?''’-என காட்டமாகப் பேசி ஆளும் தரப்பான காங்கிரஸுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

புதுவையில் பெருகிவரும் க்ரைம்கள் குறித்து நம்மிடம் பேசிய சில காக்கிகள் ’""புதுவையைக் கலக்கிய 2 தாதாக்கள்ல வெள்ளை குணா காங்கிரஸில் சேர்ந்து நற்பணி மன்றம் நடத்தறார். இன்னொரு தாதாவான தட்டாஞ்சாவடி செந்தில் பா.ம.க.வில் சேர்ந்துட்டார். இருந்தபோதும் இந்த ரெண்டுபேருமே எங்க போனாலும் அடியாட்கள் புடைசூழத்தான் போய்க்கிட்டு இருக்காங்க. வெள்ளை குணாவிடமிருந்து போன கருணா இப்ப தனி டீமா... ஆயுதங்களோட ஒருபக்கம் துவம்சம் பண்ண... கழுவா செந்திலின் மரணத்துக்குப் பின் அவன் ஆளுங்க வீரய்யா தலைமையில் ஒரு டீமா க்ரைம் ராஜாங்கம் நடத்திக்கிட்டு இருக்காங்க. இதற்கிடையில் தி.மு.க., எம்.எல்.ஏ.வான சிவா சில தாதாக்களோட நட்பு பாராட்டிக்கிட்டு இருக்கார். அவங்களால் இவருக்கு எதுவும் ஆயிடக் கூடாதேன்னு எம்.எல்.ஏ.வை எச்சரிக்கிறது எங்க துறை''’ என்கிறார்கள் நிலைமையின் சூட்டை தெளிவுபடுத்தும் விதமாய்.

புதுவையின் பகீர் நிலவரம் குறித்து எஸ்.எஸ்.பி. பொறுப்பில் இருக்கும் சந்திரனிடம் கேட்டோம். அவரோ ""நான் வந்ததும் இரண்டு வெடிகுண்டு வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுபண்ணியிருக்கேன். இனியும் ரவுடிகள் அடங்கவில்லை என்றால் தமிழகத்தில் நடப்பது போல் என்கவுண்ட்டர்கள் இங்கும் நடக்கும். யோசிக்கமாட்டோம்'' என்றார் அழுத்தமாய்.

காவல்துறை அமைச்சர் வல்சராஜையும் சந்தித்து "குற்றவாளிகளை அரசியல்வாதி கள்தான் காப்பாத்தறாங்கன்னு சொல்றாங்களே?'’ என்றோம். ""அமைச்சரோ காவல்துறையில் இருப்பவர்கள் தீவிரமாகச் செயல்படவில்லை. அதனால்தான் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுது. இனி செயல்படாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்போகிறேன்.

எந்த அரசியல்வாதிகளின் குறுக்கீட் டிற்கும் காவல்துறை முக்கியத்துவம் தராது. புதுவையின் சட்டம்- ஒழுங்கை சரிபண்ண தீவிரமான நடவடிக் கைகளில் இறங்குவோம்'' என்கிறார் அழுத்தமாக.

புதுவை அமைதிப் பூங்கா வாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

யுத்தம் 75 - நக்கீரன் கோபால்


அலுவலக வாசலில் இரண்டு ஜீப்புகள் திடீரென வந்து நிற்கின்றன. எப்போதும் நெரிசல் அதிகமாக இருக்கும் ஜானி ஜான்கான் தெருவில் போலீஸ் ஜீப் வந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரண்டு ஜீப்புகள் ஒரே நேரத்தில், நக்கீரன் அலுவலக வாசல் முன் நின்றதால் அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் பரபரப்பாகி விட்டனர்.

லோக்கல் ஸ்டேஷனான ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருடன் வந்திருந்த இன்னொருவர், பவானி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். மிரட்டும் தொனியில் வந்து நின்றது அவர்களின் வாகனங்கள்.

பெருசு சுந்தர்தான் இதை முதலில் கவனித்தார். எப்போதும் அலர்ட்டாக இருப்பார். போலீசாரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேசுவார். நோட்டம் பார்ப்பதுபோல, மஃப்டியில் அலுவலகம் முன் சுற்றிக் கொண்டிருக்கும் போலீஸ்காரர்களையும் அடையாளம் கண்டு, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து மெல்ல அனுப்பி வைப்பதில் பெருசு சாமர்த்தியசாலி.

இரண்டு ஜீப்புகளில் வந்த அதிகாரிகளிடமும் அவர்தான் பேசினார்.

""வெயிட் பண்ணுங்க...'' என்று அவர்களை கேட்டி லேயே நிறுத்திவிட்டு, இன்டர்காமில் என்னைத் தொடர்பு கொண்ட பெருசு, ""அண்ணே... நம்ம லோக்கல் இன்ஸ்பெக்டரோடு புதுசா ஒரு இன்ஸ்பெக்டரும் வந்திருக்காரு. சம்மன் கொடுக்க வந்திருக்காராம்'' என்றார்.

போலீசின் நோக்கம் நிச்சயமாக நமக்கு எதிராகத்தான் இருக்கும். அதனால், ""பெருசு... அவங்க யாரையும் மேல அனுப்ப வேண்டாம். நான் தம்பி சுரேஷை கீழே அனுப்புறேன்'' என்றேன்.

நமது பொது மேலாளர் தம்பி சுரேஷ், கீழே சென்று போலீசாரிடம் விசாரிக்கிறார்.

""என்ன விஷயமா வந்திருக்கீங்க சார்..''

""சம்மன் கொடுக்கணும்.''

""என்ன கேஸ்?''

""அதை சம்மனை சர்வ் பண்றப்பதான் சொல்வோம்.''

""சாயங்காலம் வாங்களேன் ...''

""சார் இல்லையா?''

""மாலை 4 மணிக்குத்தான் பார்க்க முடியும்...''

சாயங்காலம் வரச் சொன்னதும், சரி என்று புறப்பட்டார்கள். போலீஸ் ஜீப்புகள் நம் வாசலிலிருந்து கிளம்பியதும்தான் பரபரப்பு புழுதி அடங்கியது.

மாலையில் மீண்டும் அதே பரபரப்பு புழுதி. லோக்கல் இன்ஸ்பெக்டருடன் பவானி இன்ஸ்பெக்டர் வந்து நின்றார். தம்பி சிவக்குமார் சம்மனை வாங்கிய பின் என்னிடம் காண்பித்தார். ஏதோ புது பூதத்தைக் கிளப்பப் போகிறார்கள் என்று நினைத்தால், பாட்டிலில் அடைக்கப் பட்ட பழைய பூதம் ஒன்றைத் திறந்து காட்டுகிறார்கள். ஆமாம்... பேராசிரியர் கிருஷ்ணசாமி கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு. நக்கீரன் மீது போடப்பட்ட அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று.

வீணாப் போன காளிமுத்து ஐ.ஜி.யால் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஏற்பாடு செய்து காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்தித்த ஒரு டீமுடன் சேர்ந்து சென்றவர் சட்டப் பேராசிரியரான கிருஷ்ணசாமி. போலீசால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் எல்லோரையும் ஃபைன் போட்டு உட்கார வைத்து விட்டான் வீரப்பன். பலவித உபாயங்களுக்குப்பிறகு அவனிடமிருந்து இவர்கள் மீண்டு வந்தனர். நக்கீரன் சொல்லித்தான் வீரப்பன் தங்களை பிணைக் கைதியாக்கினான் எனப் போலீசுடன் சேர்ந்து இவர்கள் எழுதிய திரைக்கதையின் அடிப்படையில் 1998-ல் போடப்பட்ட இரண்டு பழைய வழக்கு கள் சம்பந்தமான சம்மனைத்தான் புதிய பூதம் போலக் கொண்டு வந்து மிரட்டிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். இந்தப் பொய் கேஸ் தொடர்பாகவும் 10 நாள் விசாரணையில் சகட்டுமேனிக்கு கேள்விக்கொக்கிகளைப் போட்டுப்பார்த்தது டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையிலான டீம். அந்தக் கொக்கியில் மீன் அல்ல, புழு கூட மாட்ட வில்லை. உண்மை இருந்தால்தானே ஆதாரம் இருக்கும்!

ஏற்கனவே இந்த வழக்கில் பல குளறுபடிகள் இருந்தன. போலீஸ் தரப்பு இதை அவசர அவசரமாக கையிலெடுத்து எங்களுக்கு சார்ஜ்ஷீட் கொடுக்க வேண் டும் என்று கோர்ட்டில் தெரிவித்து, தேதி வாங்கி சம்மன் அனுப்பி யிருந்தார்கள். சம்மனைப் பெற்றுக்கொண் டேன். எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று பார்த்தால், மறுநாள் காலையிலேயே ஆஜராகவேண்டும் என்று இருந்தது. நாளை ஆஜராக வேண்டிய வழக்கிற்கு, இன்று சம்மன் கொண்டு வந்து கொடுக்கும் போலீசின் அவசரமும் அதற்குள் ஒளிந்திருக்கும் நோக்கமும் புரிந்தது.

கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கில் என்னையும் தம்பிகள் சிவசுப்ரமணியன், ஜீவா ஆகியோரையும் சேர்த்திருந்தது போலீஸ்.

நம்மைப் பொறுத்தவரை நீதி மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால், கோர்ட்டையும் சட்டதிட்டங்களையும் மதித்தே நக்கீரன் நடந்துகொள்ளும். போலீசார் போடுவது பொய்வழக்குதான் என்று தெரிந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமோ அதனை மேற்கொள்வதுதான் வழக்கம். கோர்ட்டைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அடுக்கடுக்கான வழக்குகள் போடப்பட்டபோதும், அனைத்து வழக்குகளிலும் ஆஜராகி சட்டரீதியாக வெல்வதே நக்கீரனின் இயல்பு. அதனால், கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கிலும் ஆஜராவது என்று முடிவெடுத்தேன். அதற்கொரு காரணமும் இருந்தது.

இந்த வழக்கில் தம்பி சிவா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால், அவரையும் ஆஜர் படுத்துவதற்காக கோவை சிறையிலிருந்து சத்தியமங்கலம் கோர்ட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது, தம்பியைப் பார்க்கலாம், பேசலாம் என்பது என் கணக்கு. ஏனென்றால், சில நாட்களுக்கு முன் தன் துணைவியாரிடம் தம்பியும் இதைத்தான் எதிர்பார்ப்புடன் சொல்லியிருந்திருக்கிறார்.

அன்று காலையில், சிவாவின் துணைவியார் ஜெயந்தியிடமிருந்து போன்.

""அண்ணே.. மாமனார் உடல்நிலை ரொம்ப சீரியஸா இருக்கு. மாமாவை (சிவாவை) பார்க்கணும்னு சொல்றார். மாமனார் ஒரு வாரம்தான் தாங்குவார்னு எல்லோரும் பயமுறுத்துறாங்க. எப்படியாவது மாமாவை அழைச்சிட்டு வந்து, மாமனாரை பார்க்க வைக்க முடியுமா?''

-பதட்டம் மிகுந்த குரலில் பேசி னார் தங்கை ஜெயந்தி.

சிறைக் கெடுபிடிகள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அதுவும் நக்கீரன் சம்பந்தப்பட்டது என்றால் ஸ்பெஷல் ட்ரீட் மெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிறை அதிகாரிகள். மேலிட உத்தரவு தினந்தோறும் வந்துகொண்டே இருக்கிறது. சிவாவின் அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னாலும் மனிதாபிமானத்தோடு சிறை அதிகாரிகள் நடந்துகொள்வார்களா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், முயற்சிக்கிறேன் என்று தங்கை ஜெயந்தியிடம் தெரிவித்தேன்.

விறுவிறுவென வேலைகள் ஆரம்ப மாயின. அட்வகேட் ப.பா.மோகனைத் தொடர்புகொண்டு, அப்பாவைப் பார்க்க சிவாவை வெளியில் கொண்டு வர முடியுமா என விசாரித்தேன். அவர், வக்கீல் அபுபக்கரை கோவை சிறைக்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னார். தம்பி சிவா, ஒரு ஆள் மூலம் அபுபக்கருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

""அப்பாவை எப்படியாவது பார்த்தாகணும். அது சம்பந்தமாகத்தான் எங்க ஆசிரியர்கிட்டே பேசணும்'' என்று சொல்லியிருக் கிறார் சிவா.

நான் தம்பி பாலுவைத் தொடர்பு கொண்டேன். அவரது முத்தூரிலிருந்து சிவாவின் அப்பா இருக்கும் பெருங்கரணைப் பாளையம் பக்கம். ""தம்பி.... நீங்க உடனே சிவா அப்பாவைப் போய் பார்த்து, அவரோட உடல்நிலை எப்படி இருக்குன்னு எனக்குத் தகவல் கொடுங்க.''

""சரிங்கண்ணே..''

உடனடியாக பெருங்கரணைப்பாளை யத்துக்குக் கிளம்பிச் சென்ற பாலு, கொஞ்ச நேரத்தில் தொடர்புகொண்டார்.

""அண்ணே... சிவா அப்பாவோட உடல்நிலை மோசமாகத்தான் இருக்கு. ஊர் மக்களெல்லாம் நம்பிக்கையில்லாமத் தான் பேசுறாங்க. அந்த கிராமத்திலே சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்காது'' என்றார்.

பாலுவிடம் பேசியதும் உடனடியாக, ஜீவாவை லைனில் பிடித்தேன். ""தம்பி... நீங்க உடனே சிவா அப்பாவைப் போய் பாருங்க. அங்கிருந்து அவரை அழைச்சிக்கிட்டு, ஈரோட்டுக்குப் போய் ஆஸ்பிட்டலில் சேர்த் திடுங்க. கவனம் தம்பி...''

""சரிங்கண்ணே..''

சிவாவின் அப்பா, ஈரோட்டில் அட்மிட் செய்யப்பட்டார்.

இணையாசிரியர் தம்பி காமராஜ் கோவைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார். தம்பி சிவாவைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

""தம்பி.. நீங்க சிவாவைப் பார்த்து தைரியம் சொல்லுங்க. அவர் அப்பாவோட உடல் நிலையையும் விசாரிச்சிட்டு வாங்க'' என்றேன். கோவை சென்று திரும்பிய தம்பி காமராஜ் சிறையில் சிவாவை சந்தித்தபோதும், என்னைப் பார்க்க வேண்டும் என்பதை சிவா சொல்லி யிருக்கிறார்.

""அண்ணனை எப்படியும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராகச் சொல்வாங்க. அப்ப என்னையும் ஆஜர்படுத்துவாங்க. அந்த சமயத்தில் அண்ணனை சந்திச்சிடலாம் ...''

-இதெல்லாம் நடந்த சில நாட்களில் தான், சம்மனோடு வந்து நின்றார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். பொய் வழக்குக்கு இத்தனை முஸ்தீபு என்றாலும், அந்தப் பொய் வழக்கும் நமக்கு ஒரு விதத்தில் பய னுள்ளதாகத்தான் இருக்கிறது என்று நினைத்தேன்.

சிவாவை சந்திக்கும் ஆர்வத்துடன் சத்தியமங்கலம் புறப்பட்டேன். மறுநாள், வழக்கறிஞர்களுடன் கோர்ட்டில் ஆஜர். தம்பி சிவாவை எப்போது அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

""போலீஸ்தான் வந்தது... ...''

""சிவா...?''

-யுத்தம் தொடரும்

கே.பி எனப்படும் கே.பத்மநாதன் www.shockan.blogspot.com பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி


2006 தொடக்கம் 2009 வரையான போர்க்கள நிலவரங்களை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? முதலில் கிழக்கு பின்னர் வன்னி கள நிலவரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உங்களுக்கு அறியத் தந்தார்களா?

போர்ப்பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் நானிருந்தேன். கிழக்கு மற்றும் வன்னிக்கள முனைகளில் என்ன நடைபெறுகிறது என்பதனை நான் அறிந்தவனாகத் தான் இருந்தேன். எங்களுடைய உறுப்பினர்கள் கடும் அழுத்தத்துக்குள்ளாகி இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் நுழைந்த போது அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

நான் முன்னரே சுட்டிக்காட்டியது போல செப்டம்பர் 11 அல்ஹைடாவின் தாக்குதல் இலங்கைப் போரிலும் முற்றாக வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க சர்வதேச சமூகத்தைத் தள்ளி விட்டிருந்தது. இராணுவ ரீதியாக படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்தக்கள நிலவரம் முற்றாக மாறியிருக்கிறது என்பதை பிரபாகரன் மிக இலகுவாகவே புறக்கணித்திருந்தார். விளைவு தான் வரலாறாயிற்றே.

இந்தப் போரில் மிக முக்கியமான பாத்திரத்தை நீங்கள் வகித்திருக்கிறீர்கள்? வடக்கு கிழக்கு களமுனைகளில் உங்களுடைய தந்திரோபாயம் தோல்வியடைந்தது ஏன் என்று கருதுகிறீர்கள்?

பிரபாகரன் கள நிலவரம் குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லை. செப்.11 தொடர்பாக அவர் அவதானமாக அலசி ஆராய்ந்திருப்பாரேயானால் அதேபோன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானது இலங்கையின் தந்திரோபாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததை அவதானித்திருப்பாரேயானால் விடுதலைப்புலிகள் இன்றும் இருந்திருப்பார்கள். பிரபாகரன் மிக எளிமையான ஒரு மனிதர். அவர் தனது இலக்கிற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுpலசமயங்களில் கண்முடித் தனமாகக் கூட.

1987 – 1990 வரையான உங்களது பங்களிப்பு என்னவாக இருந்தது?

தாய்லாந்து மலேசியா சைப்பிரஸ் உட்படப் பல நாடுகளுக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தேன்.

பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே இருந்து பணியாற்றி வருகிறீர்கள். சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் அறிவீர்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் பற்றி உங்களது அபி;ப்பிராயம் என்ன?

ஆப்கான் மற்றும் ஈராக் இரண்டும் இன்னமும் நெருக்கடிக்குள் தான் இருக்கின்றன. சர்வதேசப்படைகள் இன்னமும் அங்கு அவற்றைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றன. வெளிநாட்டுப்படைகளின் வரவால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்ற உதாரணத்திற்கு ஆப்கானும் ஈராக்கும் கூட விதிவிலக்காகவில்லை.

உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அதனால் நீங்கள் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும் அண்மையில் கருணா தெரிவித்திருந்தார். இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவை நோர்வே ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாடுகளில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?

கருணாவுக்குச்சுதந்திரம் இருக்கிறது தனது அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு. என்னைப்பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறித்தோ அல்லது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறித்தோ நான் எதனையும் சொல்லப் போவதில்லை. இந்தக்கணத்தில் தேவையானது போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு புனர் நிர்மாணமும் மீள் குடியேற்றமும் தான்.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களில் அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவில் ஒருவராக பிரபாகரன் என்னை நியமித்தார். ஆனால் சிலர் அதனை எதிர்த்தார்கள். பல்வேறு நாடுகளுக்கும் சென்று அரச பிரதிநிதிகளுடன் பேசும் வாய்ப்பை அது எனக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அதனை எதிர்த்தவர்கள் பயந்தார்கள் நான் இதனைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை தவிர்ந்த வேறு விடயங்களில் ஈடுபடக்கூடும் என.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்தை பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து நீக்க விரும்பியிருந்தார். அன்ரன்பாலசிங்கம் கையாண்ட வழிமுறையை அவர் அங்கீகரித்திருக்கவில்லை.

நான் தற்போது அரசாங்கத்தோடும் இராணுவத்தோடும் இணைந்து பணியாற்றுவது பற்றி சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். மிகநீண்டகாலமாகவே துயர்ப்படும் மக்களுக்கு ஒரு அரசாங்கத்தின் உதவியின்றி எவ்வாறு உதவுதல் முடியும்? நான் என்ன செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்? சந்திரனிலிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு வருவதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதா?

2003 ஏப்ரலில் புலிகள் பேச்சுவார்த்தையை முறித்தது குறித்து புலிகளின் தலைவரிடமிருந்து அதற்கான காரணங்களைப் பெற முயலவில்லையா?

நம்பிக்கையீனம் தான் பேச்சுமுறிவடையக்காரணமாக இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்த முறிவு குறித்து பிரபாகரனுடன் பேசிய போது கிடைத்தது இது தான். பேச்சுவார்த்தையூடாகச் சமாதானம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. போர் புரிவதை விடக் கடுமையானது அது. அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடு ஒப்பிடும் போது விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் சாதாரணமானவர்களாகவும் ஆற்றல் குன்றியவர்களாகவும் காணப்பட்டனர். அரசாங்கத்தின் தரப்பில் ஜி.எல்.பீரிஸ் உட்படப் பல தகுதிவாய்ந்த நிபுணர்கள் அங்கு இருந்தாhர்கள்.

2007 மத்தியில் கிழக்கின் முக்கியமான எல்லாத் தளங்களையும் இழந்த பிற்பாடு தாம் அவற்றை மீளக் கைப்பற்றி விடுவோம் என்று புலிகள் நம்பினார்களா? எவ்வாறு?

ஒருமுறை வன்னி மோதலில் இராணுவத்;தின் கை ஓங்கியபின்னரும் கூட அது எங்களது களநிலவரங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் கடற்படையினர் புலிகளுக்கான கடல் வழி வழங்கல் பாதைகளைக் கட்டுப்படுத்தியபடியால் தான் இலங்கையின் வெற்றி சாத்தியமாகியதென. இதனுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

கடல்வழி வழங்கலைக்கட்டுப்படுத்தியமை பாரிய பின்னடைவு தான்.

இப்போது போர் முடிவடைந்து விட்டது. போரில் ஈடுபட்ட தரப்புக்கள் பேச்வார்த்தை நடாத்தி எல்லா சமூகங்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமா?

இதே போன்ற கேள்விக்கு நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு வாக்காளர்களின் வாக்குரிமையை மறுத்தமையானது அன்று பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சாதகமான நிலையை வழங்கியதல்லவா?

ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமான ஒரு முடிவை அடைய பலம் வாய்ந்தவராக இல்லை என்று பிரபாகரன் நினைத்திருக்கக்கூடும்