Monday, September 20, 2010




''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!

ஓய்வுபெற்ற ஹெட் கான்ஸ்டபிளின் பையனான வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவர் இருப்பது சின்னக் காஞ்சிபுரம். ஆனால், பக்கத்தில் உள்ள பாலுச்செட்டி சத்திரத்தில் சாராய வழக்கு போட்டிருக் கிறார்கள். செல்லமுத்து என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து... அவருக்கு வெங்கடேசன் சப்ளை செய்ததாக


வழக்கு. கையில் விலங்கு போட்டு அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அவர் இருக்கிறார்...'' என்கிறார் ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா,

போலீஸ், மாவட்ட நிர்வாகம் இடைஞ்சல் கொடுப்பது பற்றி கேள்விப்பட்ட வைகோ, ''அதிகமான தொல்லை கொடுத்தால், அண்ணா சமாதிக்குப் போய் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...'' என்று அறிவித்த பிறகுதான் அமைதியானார்களாம் அதிகாரிகள். மாநாட்டு நாளான 15-ம் தேதி காலையில் இருந்தே காஞ்சி நகருக்குள் கூட்டம் குவிய... உண்மையில் வைகோவுக்கு உற்சாகம். 'எல்லாரும் கைக் காசை செலவு பண்ணி வந்திருக்காங்க. மழை மட்டும் வராமல் இருந்தால் போதும்...' என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம் வைகோ. மாலை நெருங்க நெருங்க... காஞ்சிபுரம் முழுக்க மனிதத் தலைகளாகவே காட்சி அளித்தது. இதில் இன்னோர் ஆச்சர்யம், எங்கே திரும்பினாலும் அண்ணா படங்கள் மட்டுமே இருந்தன. வைகோ படம் இல்லை. ''வைகோ தனது படத்தை வைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்...'' என்று காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு சொன்னபோது, வைகோ சிரித்தார்.

மாநாட்டைத் திறந்துவைத்துப் பேசிய செந்தில திபன் முதல் வைகோ வரை அனைவருமே முதல்வர் கருணாநிதி மீதுதான் கடும் தாக்குதல் நடத்தி னார்கள்.

''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.

''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.

''ஒரு குடும்பமே அனைத்துப் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்கிறது. ஆனால், அந்த இயக்கத்துக்காக உழைத்த டி.ஆர்.பாலு உதாசீனப்படுத்தப்படுகிறார். நான் ம.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... நொந்துபோன தி.மு.க-காரர்களுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் தான். 'இப்படியே போங்க சம்பத்! அப்பதான் இவய்ங்களை ஒழிக்க முடியும்'னு தி.மு.க-காரனே என்னிடம் சொல் றான். ஏன்னா... பணம் ஒரே இடத்தில் குவிகிறது. ஆள்பவர் ஏழையாக இருந்தால்தான், ஆளப்படுபவன் பணக்காரனாக முடியும் என்பார்கள். அண்ணா ஏழையாக இருந்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இன்ஜினீயரிங் கல்லூரி இல்லாத மந்திரி உண்டா? கருணாநிதி குடும்பம் நிலத்தை, வானத்தை, கடலை வளைத்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் அவர்கள் ஜெயித்தால் கறிக் கடையைக்கூட எவனும் நடத்த முடியாது. இன்னார் பெயரில் கறிக் கடை என்று ஆரம்பித்து, இன்னாரை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிடுவார்!'' என்று சில பெயர்களைச் சொல்லி முடித்தபோது விசில்பறந்தது.

இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.

''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.

பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....

''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

வைகோ சொல்வது நிஜமா?
ம.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து விலகி, இப்போது தி.மு.க-வில் இருக்கும் எல்.கணேசன் என்ன சொல்கிறார்?

''நல்லா இருக்குதுய்யா கதை! 'தனக்குப் பிறகு நீதான்!' என எனக்குத் தெரியாமல் கலைஞர் வைகோவிடம் சொன்னாராமா? கலைஞர் அப்படிப்பட்ட வார்த்தைகளை ஏன் சொல்லணும்? 93-ம் ஆண்டு தி.மு.க-வைவிட்டுப் பிரிந்த நாங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு கலைஞரிடம் 2004-ல் கூட்டணிக்காகவந்தோம். 10 வருட வசைப் பாடல்களை மறந்துவிட்டு அந்த நேரத்தில் கலைஞர் அப்படிச்சொல்லி இருப்பாரா என்ன? 'தி.மு.க-வுக்கு இவர்தான் அடுத்து' என உயில் எழுதும் பழக்கம் கலைஞருக்குக் கிடையாது. தனக்குப் பின்னால் யார் என்பதை கலைஞர் தன்வாயால் இன்று வரை சொல்லவில்லை. ஆனால், அதனை அடுத்தடுத்த செயல்களால் விளக்கி விட்டார். இன்றைக்கு கலைஞரின் பாதிச் சுமை ஸ்டாலினுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்க, கலைஞரின் வார்த்தைகளாக வைகோ ஏன் இப்படிப் பேசுகிறார் என்பது புரியவில்லை!'' என்றார் எல்.ஜி.

சீக்ரெட் பிரபுதேவா


பிரபுதேவா - நயன்தாரா ரகசியத் திருமணத்தின் அடுத்த எபிசோடு ஆரம்பம்!

இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரபுதேவா, ''நயன்தாராவைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்!'' என்று மீடியாக்களிடம் சொன்ன தாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில்... இதற்கு அவர் முதல் மனைவி ரம்லத் எந்த பதிலோ... மறுப்போ சொல்ல வில்லை. இந்த நிலையில், ஃப்ளாஷ்பேக்கில் இருந்தே ரம்லத்தின் பழைய காதலையும், கல்யாணத்தையும் எடுத்து வைப்போம்...



முதல் கல்யாணம்... முறையான கல்யாணமா?

சென்னை வடபழனியில் பிறந்த ரம்லத், பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திடம் குரூப் டான்ஸராக சினிமாவுக்குள் நுழைந்தார். பிரபு தேவாவும்


படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் நடனக் குழுவில் சேர்ந்தார். அதோடு, முறையாகப் பரதம் பயின்று, தனியாக ஒரு நடனக் குழுவை ஆரம்பித்தார். அந்தக் குழுவுக்கு 'இன்சார்ஜ்' ரம்லத். அவரை நியமித்தவர் சுந்தரம்!

1991-ம் வருடம் 'தளபதி' படத்தின் நடன ஒத்திகைக்காக மைசூர் போனபோதுதான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து 95-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியில் தெரியாமல் ரம்லத்தின் வீட்டில் அவர்கள் திருமணம் நடந்தது. அதில் மொத்தமே ஐந்து பேர்தான் கலந்துகொண்டனர். அவர்களும் ரம்லத் வீட்டினர் மட்டுமே! அந்தக் கல்யாணத்தை எங்கும் பதிவு செய்யவில்லை. விஷயம் வெளியில் தெரிந்தபோது, பிரபுதேவாவின்வீட்டில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கன்னட பிராமணக் குடும்பமான சுந்தரம் மாஸ்டரின் உறவுகள், முஸ்லிம் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டதுபற்றிப் பெரிதாக விவாதித்தன. எதிர்ப்பைத் தாங்க முடியாத பிரபுதேவா, ரம்லத்தைப் பிரிந்தார். ரம்லத் அவரது வடபழனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பிரபுதேவா, அப்போது 'காதலன்' படத்தில் பிரபலமாகி உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்கள், ரஜினிகாந்த், பி.வாசு, எஸ்.தாணு ஆகியோர் மட்டுமே!


பேர் சூட்டிய ரஜினி!

பிரபுதேவாவைக் கண்காணிக்க சுந்தரம் மாஸ்டர் சிறிய படையை உருவாக்கினார். அந்தப் படை எப்போதும் பிரபுதேவாவுடன்இருந்தது. ஒரு நாள் சுந்தரம் மாஸ்டரை அழைத்து ரஜினி பேசினார். சுந்தரம் வந்தபோது, அவரைப் பார்த்ததும் ரம்லத் காலில் விழுந்து வணங்கினார். சுந்தரம் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். அந்த ஜோடி நேராகப் போனது ரஜினியின் போயஸ் வீட்டுக்கு. ரம்லத்துக்கு, ரஜினி தைரியம் சொன்னார். அவரது வீட்டில்தான் ரம்லத் இந்து மதத்துக்கு மாறுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விஷயம் சுந்தரத்துக்கு எட்ட, கொஞ்சம் கோபம் குறைந்தது. ரம்லத் தனக்கு சாந்தி என்ற பெயர் பிடிப்பதாகச்சொல்ல, ரஜினியின் குடும்பமோ ரம்லத்துக்கு சூட்டிய பெயர் லதா. அண்ணா நகரில் சாந்தி காலனியில் 'சிங்கிள்' பெட்ரூம் வீட்டில் ஜோடி குடியேறியது!

டீச்சர் ரம்லத்,
கருணாநிதி வீட்டு சேலை!

பிரபுதேவா பிஸியான நடிகராகிவிட்ட பிறகு, ரம்லத் வீட்டில் தனிமையானார். ஆகவே, பெரும் பாலும் ரஜினியின் வீட்டில்தான் அவரது வாசம். ஒரு நாள் எதேச்சையாக ரஜினி, 'சும்மா இருக்காம நம்ம ஸ்கூல்ல ஏதாவது வேலை பார்க்கலாமே?' என சொல்ல, ரம்லத் 'ஆஸ்ரம்' பள்ளியில் டீச்சர் வேலையில் சேர்ந்தார். சில வாரங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று வந்தவர், ப்ரீ கேஜி பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார். 'வி.ஐ.பி.' படப்பிடிப்புக்கு நடுவில் வீட்டுக்கு வந்த பிரபுதேவா, ரம்லத்துக்கு பட்டுச் சேலை எடுத்துத் தர ஆசைப்பட்டார். அவர் பிரபலமான ஹீரோ. அவரே கடைக்குப் போனால், கூட்டம் கூடும் என்பதால்... தனக்கு நெருக்கமான வீட்டுக்குப் போனார். அங்கு இருந்து கருணாநிதியின் மகள் செல்விக்கு போன் போனது. செல்வி நடத்தும் 'எஸ்.எஸ்.சாரீஸ்' நிறுவனத்தில் இருந்து 30 பட்டுப் புடவைகள் வந்தன. அதில் அரக்கு கலர் புடவையை செலக்ட் செய்து மனைவிக்குக் கொடுத்தார் பிரபுதேவா. அதுதான் ரம்லத்துக்கு அவர் வாங்கிக் கொடுத்த முதல் பரிசு!

பாஸ்போர்ட் ஆதாரம்!

தனது திருமணத்தை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்த பிரபுதேவா, முதல் தடவையாக அந்தத் தகவலை ஆனந்த விகடனுக்கு சொன்னார். இருவரும் கொடுத்த பேட்டிதான் அந்தக் கல்யாணத்தின் முதல் ஆதாரம். அதற்குப் பிறகு பிரபுதேவா, தனது பாஸ்போர்ட்டில் ரம்லத்தைத் தன் மனைவியாகப் பதிவு செய்தார். அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறக்க, அவர்களின் பிறப்புச் சான்றிதழிலும் பிரபுதேவா தன்னை அப்பாவாக அடையாளம் காட்டினார். இந்து மதம் மாறிய ரம்லத், தனது பிறந்த வீட்டுக்குக்கூட போகாமல், தொலைபேசி வழியாக மட்டுமே தன் உறவுகளைத் தொடர்ந்தார். ஏனோ, ரம்லத்தின் சொந்தங்களை பிரபுதேவா தனது வீட்டுக்குள் சேர்க்கவில்லை. இந்த சமயத்தில் அவர் நடிப்பை விட்டு இயக்குநரானார். அதிலும் அவருக்கு சக்ஸஸ். அப்போதுதான் அவருக்கு நயன் தாராவின் அறிமுகம்.

நயன்தாரா எப்போதும் தி.நகரில் இருக்கும் ஓர் ஹோட் டலில்தான் தங்குவார். அங்கு இருவரும் சந்தித்த விஷயங்கள் ரம்லத்தின் காதுக்கு வந்து சேர்ந்தன. இருவருக்கும் இடை யிலான காதலை ரம்லத் உறுதி செய்தபோது, அவருக்கும் பிரபுதேவாவுக்கும் வார்த்தைகள் தடித்தன.

குஷ்புவின் ராஜா அண்ணாமலைபுரம் ஃப்ளாட்டில் தற்காலிகமாகக் குடியிருந்த பிரபுதேவா - ரம்லத் ஜோடி, அதன் பிறகு தாங்கள் சொந்தமாகக் கட்டிய அண்ணா நகர் வீட்டுக்கே குடி போனார்கள். அங்கு போன பிறகு, பிரபுதேவா அவ்வளவாக வீட்டுக்கு வரவில்லை. இந்திப் பட இயக்கத்தில் பிஸியாக எட்டு மாதங்கள் மும்பையில் தங்கினார். இது இடைவெளியை அதிகப்படுத்தியது. 'எந்திரன்' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவுக்கு ரஜினி, 'இரண்டாம் கல்யாணம் வேண்டாம்' என்று அட்வைஸ் கொடுக்க... வீட்டுக்கு வந்தார் பிரபுதேவா. இந்த சமயத்தில்தான் வெளிப்படையாக நயன்தாராவைப்பற்றிய பிரபுதேவாவின் கமென்ட் வந்து சேர்ந்தது!

நயன் - ரம்லத் நியாயங்கள்!

நயன்தாராவும் ரம்லத்துமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் ரம்லத் தன் கணவரிடம் பெரிதாக எதிர்ப்புக் காட்டவில்லை என்று கோலிவுட்டில் தகவல் படபடக்கிறது. அதே செய்தியில் பெரும் மதிப்பிலான வைர நகைகளை நயன்தாரா, ரம்லத்துக்கு வாங்கிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தியதாகவும் ஒரு தகவல் பரவியது. கேரளாவில் சொத்து, சென்னையில் வீடு, ஹைதராபாத்தில் நிறைய சொத்துகள் என நயன்தாராவின் வளர்ச்சியையும் கோடம்பாக்கம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கிறது. சினிமா வட்டாரத்தின் உள்வட்டங்களைப் பொறுத்த வரை பிரபுதேவாவின் அறிவிக்கப்படாத மனைவி அவர்தான்!

'அண்ணன் என்ன? தம்பி என்ன? சொந்தம் என்ன பந்தம் என்ன?' என்ற ரஜினியின் பாடல் வரிகள்தான் இப்போது ரம்லத்தின் காலர் டியூன். அதோடு அவர் செல்போனில் வேறு சில பாடல்களும் மாறி மாறி இடம்பெறுகிறது. அதில் பாதி சோகம், மீதி உற்சாக டியூன் என்று கலவை! ''பிரபு தேவாவின் கல்யாண அறிவிப்பு முதலில் வெளியானது, ஓர் இணையதளத்தில்தான்.அதில் பிரபுதேவா கொடுத்த பேட்டியாக வந்து இருக்கிறது. அந்த இணையதள செய்தியாளர், நயன்தாரா கூடவே இருக்கும் அவரது ஊர்க்காரர். பிரபுதேவாவின் பேட்டியைப் போடச் சொன்னதே நயன்தாராதான். இந்த பேட்டி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அதே செய்தியாளர், 'இனி நயன்தாரா நடிக்கப்போவதில்லை. படங்களைக் குறைத்துக்கொண்டார்' என்று செய்தி போட்டார்...'' - இது ரம்லத் வட்டாரம் சொல்லும் பதில்.

இது குறித்து பலரும் ரம்லத்திடம் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் ''இப்போது என் கணவர் மும்பையில் இந்திப் படப்பிடிப்பில் இருக்கிறார். ஆகவே, அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் கணவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என்னையும் குழந்தைகளையும் அவர் மிகவும் நேசிக்கிறார். மீடியாக்களில் வரும் செய்திகளை வைத்து என் கணவரை நான் சந்தேகப்பட மாட்டேன். மற்றவர்களுக்காக எனது வாழ்க்கையை எப்போதும் நான் பங்கு போட எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டேன்!'' என்று திட்டவட்டமாக சொல்லி வருகிறாராம்.

பிரபுதேவாவின் மனதில் என்ன இருக்கிறதோ?

இருட்டு சென்னையின் முரட்டு முகம்!



சமீபத்தில் எப்போதாவது இரவு 11 மணிக்கு மேல் சென்னையின் பிரதான

சாலைகளில் பயணித்து இருக்கிறீர்களா? சீறி வரும் கார்கள்... மரண வேகத்தில் மிரட்டும் பைக்குகள்... நடுரோட்டு ரகளைகள் எனக் கண்ணில் படும் கலவரங்கள் ஈரக்குலையை நடுங்கவைக்கின்றன. 'காவல் துறையின் இரவு நேர ரோந்துப் பணியே இல்லாமல் போய்விட்டதா?' என எண்ணுகிற அளவுக்கு, இரவு கவிழத் தொடங்கினாலே, சென்னையின் க்ரைம் ரேட் எகிறத் தொடங்குகிறது. பணத்துக்குப் பஞ்சம் இல்லாத உயர்தர வர்க்கம்தான் இரவு நேர சென்னையின் இதயத்தை உலுக்கி வருகிறது.



சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டல் வாசலில் நடந்த தகராறு இது. இரவு 12 மணி வரை அந்த ஹோட்டலில் ஆட்டம் போட்டுவிட்டு, காரில் வெளியே வரும் மூன்று இளைஞர்கள், மிதமிஞ்சிய போதையில் சாலையில் ஏறும்போதே பைக் ஒன்றின் மீது மோதினார்கள். பைக் மனிதர் தடுமாறி விழ, காரில் இருந்து ஜன்னல் கண்ணாடியை இறக்கிய ஒருவன், 'டேய், என் காரோட ரேட் தெரியுமா உனக்கு?' எனக் காறித் துப்பிவிட்டுப் போகிறான். 'நடப்பது சென்னையில்தானா?' என அந்த பைக் மனிதரால் நம்பக்கூட முடியவில்லை. தடுமாறி எழுந்தவர், தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்குப் போய் நடந்த சம்பவத்தைச் சொல்ல... காரின் நம்பர் குறித்து விசாரித்தவர்கள், 'பெரிய இடத்து விவகாரம்... பிரச்னை பண்ணாமல் கிளம்புப்பா!' என விரட்டி இருக்கிறார்கள்.

அண்ணா சாலை சம்பவம், ஒரு சாம்பிள்தான். கடற்கரைச் சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி 100 அடி ரோடு, தி.நகர் உள்ளிட்ட சென்னையின் இதயத் துடிப்பு ஏரியாக்களில் இரவு நேரங்களில் இப்படிப்பட்ட ராவடிகள் அதிகமாகிவிட்டன. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''வெளியே சொன்னால் வெட்கக்கேடு... நம்பர் பிளேட் இல்லாத கார்களில் வலம் வருகிற அண்ணா நகர் இளைஞர்கள் கும்பல் நள்ளிரவில் தங்கள் நகர்வலத்தை ஆரம்பிக்கிறார்கள். கூத்தும் கும்மாளமும் ஒரு புறம்... டிக்கியில் ஸ்பீக்கர்கள் கட்டிய காரில் அவர்கள் பயணிக்கும்போது, மியூஸிக் ஓசை வீதிகளை அதிரவைக்கிறது. கேட்டால், 'கார் ஓனர் யார் தெரியுமா?' என்று சிரித்தபடி கேட்டுவிட்டு தமிழகத்தின் வி.வி.ஐ.பி-யின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதைக் கேட்டு நொந்துபோகும் போலீஸார், ஒதுங்கி வழிவிடுகிறார்கள்.

சென்னையில் பெரிய இடத்துப் பையன்களின் பெயர்களைச் சொல்லி 50-க்கும் மேற்பட்ட கும்பல்கள் சென்னையை ஆட்டிப் படைக்கின்றன. பிரபல மருமகன் ஒருவர் இரவு மூச்சு முட்டக் குடித்துவிட்டு கார் ஓட்டி, சாலையில் படுத்துக்கிடந்த நான்கு பேர் மீது ஏற்றிவிட்டார். அடுத்த நிமிடமே, அங்கே போலீஸ் ஆஜரானது. ஆனால், காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வேலையை மட்டுமே போலீஸால் செய்ய முடிந்தது. அதை விபத்து எனப் பதிவு செய்யக்கூட முடியவில்லை.

புதிய தயாரிப்பாளர், சமீபத்தில் தி.நகரில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். முழு போதையில் வெளியே வந்த அவரின் நண்பர்கள், என்ன ஜாலியோ... சாலையில் நடந்து போன அப்பாவிகளை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்தும், போலீஸ் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. காரணம், ஏற்கெனவே அந்த வி.ஐ.பி-யின் விவகாரத்தை விசாரிக்கப்போனவர்கள் எங்கே தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்பது காக்கி வட்டாரத்துக்குத் தெரியும்.

அரசியல் மட்டுமல்ல... சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாக இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் இரவு நேரத்தில் நடந்த 20-க்கும் மேற்பட்ட தகராறுகள், சினிமாப் புள்ளிகளால் ஏற்பட்டவை. ஜிலுஜிலு நடிகர், மோசடி விவகாரத்தில் சிக்கிய முன்னெழுத்துப் புள்ளி, பாட்டுக்கார வித்தகர், புதிதாக தயாரிப்பு பக்கம் வந்திருக்கும் தாதா உள்ளிட்டவர்களின் சமீபத்திய வம்பு வழக்குகள் போலீஸ் ரெக்கார்டில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், மேலிடத்து நெருக்கடிகளுக்கு பயந்தே அவர்களை போலீஸ் கைவைப்பது இல்லை!'' எனச் சொன்னார் ஆதங்கம் அடங்காமல்.

சென்னையின் இருட்டு முகத்தை ஏற்கெனவே உணர்ந்துவைத்து இருந்த வழக்கறிஞர் ஒருவர், ''ஒரு நாள் இரவு ஒரே ஒரு ஏரியாவுக்கு மட்டும் என்னுடன் வாருங்கள்... அங்கு நடப்பதை நீங்களே நேரில் பார்த்தால்தான் புரியும்!'' என நெல்சன் மாணிக்கம் சாலை வழியே அழைத்துப் போனார். சுரங்கப் பாதையைத் தாண்டிய உடனேயே சாலையின் இரு ஓரங்களிலும் நின்றுகொண்டு இருந்த கார்களைக் காட்டியவர், ''ஒவ்வொரு காருக்குள்ளும் உற்றுப் பார்த்தால்தான் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். இந்தப் பக்கம் காரில் வரும்போது, தெரியாமல் கூட காரையோ பைக்கையோ நிறுத்திவிடக் கூடாது. தப்பித்தவறி நிறுத்தினால், சட்டென சில பெண்கள் மொய்த்துக்கொள்வார்கள். ஒரு முறை இந்தப் பக்கமாக வந்தபோது, செல்போனில் அழைப்பு வர, காரை ஓரம்கட்டி விட்டேன். அவ்வளவுதான்... கார் கண்ணாடியை ஒரு பெண் தட்ட, இன்னொரு பெண் காரை எடுக்கவிடாமல் முன்னால் வந்து நின்றாள். அவர்களின் நோக்கம் அறிந்து, கண்ணா டியை இறக்கி, 'நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை!' எனச் சொன்னேன். 'நீ எவனா இருந்தா என்ன? எங்களுக்கு ரூபாயை வெட்டிட்டுப் போ!' என மிரட்டி பணத்தைப் பறித்துக்கொண்டுதான் கிளம்பினார்கள். டி.பி சத்திரம் ஏரியாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு, நேரே இந்த ஏரியாவுக்கு வரும் கல்லூரி மாணவர்கள், சாலை ஓரத்திலேயே அசிங்கக் கூத்து நடத்துகிறார்கள். இவ்வளவு நடந்தும் இது வரை இந்தப் பக்கம் போலீஸ் கண் காணிப்பு காட்டிய சரித்திரமே இல்லை!'' என்றார்.

விடிந்தால் பரபரப்பும் விறுவிறுப்புமாக சுழலும் சென்னை... இரவு நேரத்தில் இப்படி ஒரு கொடூர முகத்தோடு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவு நேர சென்னையின் அபாயத்தை முழுக்க முழுக்க அறிந்திருக்கும் காவல் துறை 'ஆளும் கட்சி...' என்கிற ஒற்றை வார்த்தையை அஸ்திரமாக்கி இன்னும் எத்தனை காலத்துக்குக் கண்ணயர்ந்து கிடக்கப்போகிறதோ?

அல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்!


கடந்த சட்டமன்றத் தேர்தலின் ஹீரோ தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான்!

அதைத் தயாரித்தவர் பேராசிரியர் நாகநாதன். திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப்போனார்.

வரும் தேர்தலில் இந்த இரண்டு பேருமே மீண்டும் போட்டியிட முடியாத நிலை. காரணம், தொகுதி மறுசீரமைப்பில் திருவல்லிக்கேணி தொகுதியே காணாமல் போய்விட்டது. நாகநாதன், கருணாநிதியின் காலை நேர வாக்கிங் தோழர். கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில், பொருளாதாரம் அறிந்த நாகநாதனை நியமித்தார் கருணாநிதி. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி., 2 ஏக்கர் நிலம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி... என தி.மு.க-வின் கவர்ச்சியான தேர்தல் அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் நாகநாதன். இந்த அறிவிப்புகள் மக்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக, இலவச கலர் டி.வி. ஆசை மக்களை மயக்கிவிட்டது!

தனது பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போட்டியிட்ட நாகநாதன் தோற்றுப்போனார். அவர் ஜெயித்திருந்தால்... நிச்சயம் அமைச்சர் ஆகி இருப்பார் என்ற பேச்சு இருந்தது. தோற்றாலும், அவரை மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராக நியமித்தார் கருணாநிதி. இந்த முறையும் அவரைக் களம் இறக்கத் தயாராகி வருகிறது தி.மு.க. திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கத்துடன் சேர்ந்து விட்டதால், நாகநாதனுக்கு தொகுதி கிடைப்பதில் சிக்கல். அண்ணாநகர், துறைமுகம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நாகநாதன் நிறுத்தப்படலாம்.

பதர் சயீத்துக்கும் இதே நிலைதான். ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், 2004-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எப்படியாவது அவரை மக்கள் பிரதிநிதி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெயலலிதா, கடந்த சட்டசபைத் தேர்தலில் திருவல்லிக்கேணியில் நிறுத்தி வெற்றி பெறவைத்தார். ஆனால், உள் கட்சிப் பிரச்னைகளில் இவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஏதாவது சின்னப் பிரச்னை என்றாலும், 'அம்மாவுக்கு போன் போடட்டுமா?' என்று கட்சியினரை மிரட்டுகிறார் என்று பதர் சயீத்தின் எதிர் கோஷ்டியினர் புலம்புகிறார்கள்.

சமீபத்தில் திருவல்லிக்கேணிப் பகுதியில் ஜெயலலிதா கலந்துகொண்ட ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் பதர் சயீத் பெயரையே கட்சியினர் தவிர்த்துவிட்டனர். இருந்தும், பதர் சயீத் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 'அம்மாவின் கோஷ்டி நான்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இவரை, கட்சியினர் பயம் கலந்த மிரட்சியுடன்தான் பார்க்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு இவர் மீது நட்பு கலந்த பாசம் எப்போதும் உண்டு. எனவே, பதர் சயீத்துக்கு மீண்டும்வாய்ப்புக் கிடைக்கலாம். மயிலாப்பூர் அல்லது தி.நகர் தொகுதி தோழிக்குக் கிடைக்கலாம்!

உமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்


'பறிக்கப்பட்ட பதவி திரும்பக் கிடைத்த பிறகும் அமைதி ஆகும் ரகம் அல்ல

நான்' என்பதை நிரூபிக்கிறார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்!

சாதிச் சான்றிதழ் முறைகேடு, ஊழல் புகார் போன்ற குற்றச்சாட்டுகளால் இடைநீக்கம் செய்யப் பட்டவருக்கு, திடீரென்று பதவியை மீண்டும் கொடுத்து அதிர்ச்சியைக் கொடுத்தது அரசு. உடனே, சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு குடும்பத்தோடு வந்து, 'என்னுடைய வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார் உமாசங்கர். பொதுவாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வதில்லை. அடுத்த அதிர்ச்சியாக திருநெல்வேலிக்கு வந்து ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய பேச்சு ஆட்சியாளர்களை இன்னும் கடுப்பேற்றும் பச்சை மிளகாய் ரகம்!

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கங்களின் சார் பாகவே உமாசங்கருக்கு இந்தப் பாராட்டு விழா கடந்த 14-ம் தேதி நடந்தது. தான் பிறந்த மாவட் டத்தில்நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்று பரபரப்பாக எதிர்பார்த்து, கூட்டம் நடந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.

எஸ்.சி., எஸ்.டி. நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரிராம், ''நாங்கள் இதுவரை உங்களை ஓரமாக நின்று கவனித்து பெருமைப் பட்டோம். உங்களது அறிவும் தைரியமும் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்கள் தலித் மக்களின் அறிவுக் கருவூலம். இப்போது எங்களோடு நெருங்கிவிட்டதால்... இனி இந்த அரசு உங்களுக்கு என்ன இன்னலைத் தந்தாலும் மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளை ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து போராடுவோம்!'' என்று காட்டம் காட்டினார். அடுத்துப் பேசியவர்களும் அரசை கடுமையாக வறுத்து எடுத்தனர்.

அனைவர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்த உமாசங்கர் மைக் பிடித்தார். ''எனக்கு அநீதி இழைக்கப் பட்டதைக் கண்டதும், அதைத் தங்கள் சொந்த சகோ தரனுக்கு ஏற்பட்ட அநீதியாக நினைத்துப் போராடி வெற்றி பெற்று இருக்கிறீர்கள். சுயநலம் பார்க்காமல் போராடிய உங்களுக்குத்தான் உண்மையில் பாராட்டு விழா நடத்த வேண்டும்! எனக்கு எதற்கு? எனக்காகப் போராடிய உங்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!'' என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்,

''நாடு முழுவதும் லஞ்சமும் ஊழலும் பெருகி விட்டன. பட்டியல் இனத்தவரான நம்மைப் பார்த்து, 'திறமை இல்லாதவர்கள், ஊழலுக்கு எளிதில் வசப்படுபவர்கள்' என்றெல்லாம் அவச் சொல் பேசுகிறார்கள். அதை மாற்ற வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் 'லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்' என உறுதியேற்க வேண்டும். அப்படி இருந்தால்தான், எந்த விளைவையும் துணிவுடன் நின்று எதிர்கொள்ள முடியும். நான் சட்டப்படி இப்போதும் இந்துதான். ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவத்துக்கு மாறிவிட்டேன். அது என் விருப்பம், உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மதம் மாறியதால் மட்டும் சமூக அந்தஸ்து மாறிவிடாது. நீங்கள்கூட இப்படி மாறினால், ஞானஸ்நானம் எடுத்தாலும் அதற்கான சர்ட்டிஃபிகேட் வாங்காதீர்கள். எந்த ரெக்கார்டிலும் கையெழுத்துப் போடாதீர்கள். நீங்க பாஸ்டராவே இருந்தால்கூட, சட்டப்படி இந்துவாகவே இருங்கள்!'' என்று பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுபோல அவர் பேசியதைக் கூட்டத்தினர் உன்னிப்பாகக் கவனித்தனர்.

பத்திரிகையாளர்களிடம் மிகவும் கவனத்துடன் பேசிய உமாசங்கர், ''நான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 43 நாட்களும் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் ஓய்வாகத்தான் இருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், நான் பாதிக்கப்பட்டபோது எனக்காக எந்தக் குரலும் கொடுக்கவில்லை. ஒருவேளை நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியே இல்லை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ! என்னை இந்த அரசாங்கம் தூக்கி எறிந்தபோது, பட்டியல் இனத்து சமுதாயம் என்னைத் தங்கள் சகோதரனாகப் பாவித்து அன்போடும் ஆதரவோடும் பூ போல என்னைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். இது வரை நான் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. அவர்களில் பலர் என்னை நேரில்கூட பார்த்தது கிடையாது. ஆனால், உணர்வுரீதியாக எனக்காகக் குரல் கொடுத்த அவர்களுக்காக நானும் நிறையச் செய்வேன். சமுதாயப் பணியாற்றுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த 20 வருடங்களாக என்னிடம் வருவதற்குத் தயக்கம் காட்டியவர்கள், இப்போது நெருங்கிவிட்டார்கள். இனி மேல் நான்கூட அவர்களைத் தடுக்க முடியாது. பட்டியல் இனத்து மக்களுக்கு ஒரு தங்கமான சகோதரன் கிடைத்துவிட்டான். எனக்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசினார்கள். குறிப்பாக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகம் முழுவதும் பல கூட்டங்களில் பேசினார்கள். அவசியப்பட்டால்... அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்!'' என்று படபடத்தார்.

ஏற்கெனவே நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் காளியப்பன், ஜெயலலிதாவை சந்தித்த பரபரப்பு அடங்குவதற்குள்... உமாசங்கரும் இப்படிப் பேசி இருப்பதால், அ.தி.மு.க. தரப்பு உற்சாகம் அடைந்திருக்கிறது. அ.தி.மு.க-வை சந்தேகத்துடன் பார்க்கும் தலித் வாக்குகளைக் கவர நினைக்கும் ஜெயலலிதா, தேர்தல் சதுரங்கத்தில் அடுத்த 'மூவ்' வைக்கத் தயாராகிவிட்டார். இதற்கு தி.மு.க. சைடில் இருந்து என்ன செக் இருக்கும்?

கொடநாட்டுக்குப் போனதா கார்?


இறக்கைகளில் ஏ.ஸி-யைப் பொருத்தியது போல ஜில்லென வந்து இறங்கினார்

கழுகார். ''இரண்டு நாள் முகாம்... சிலுசிலு காற்று... நிறைய செய்திகள்...'' என்றவரை ஏற இறங்கப் பார்த்தோம். ''முக்கியமான சோர்ஸ் ரொம்ப ரகசியமாக அழைத்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கொடநாடு போய் வந்தேன். அங்கே பரபரப்பாக அடிபடும் விஷயம் என்ன தெரியுமா? 'ஜெயலலிதாவை பார்க்க விஜயகாந்த்தின் திருமதி பிரேமலதா ரகசியப் பயணமாக வந்தாரா?' என்பதுதான். கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் சொகுசு கார் ஒன்று கொடநாடு பங்களாவுக்குப் போய் இருக்கிறது. அதில் இருந்தவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் என கொடநாட்டில் 'குபீர்' கிளம்பிக் கிடக்கிறது. அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் ஏகத் தீவிரம் காட்டுபவர்கள், இந்தத் தகவலை விசாரித்தபோது உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையாம்!''


''உண்மையாகவே அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா?''

''அது போகப் போகத் தானாகத் தெரிந்துவிடும். இப்போதைக்கு நான் கேள்விப்பட்டதெல்லாம், விஜயகாந்த் தரப்பு மீது ஜெயலலிதா சமீபத்தில் கோபமானார் என்பது. ஒரு பக்கம் தங்களோடு கூட்டணிக்கான முயற்சி செய்துகொண்டே, தி.மு.க. தரப்புடன் முற்றிலும் வேறொரு வகையான பேச்சை தே.மு.தி.க. தரப்பு நடத்துவதாக ஜெ-வுக்கு தகவல் போனதாம். 'எனக்குக் கிடைத்த தகவலை அப்படியே மதுரைக் கூட்டத்தில் போட்டுக் கிழிக்கவா?' என்று ஜெ. சீறியதாகவும்... இது உடனே தே.மு.தி.க. தலைமையின் காதுக்குப் போனதாகவும் சொல்கிறார்கள். 'தி.மு.க-வுடன் தனி பேரங்கள் எதுவுமில்லை' என்று ஜெ-விடம் விளக்க ஸ்பெஷல் தூதர் அனுப்பப்பட்டார் என்றுகூட ஒரு பேச்சு உண்டு! 'இரண்டு வாரத்தில் நடத்தப் போகிற பிரமாண்ட கூட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு தி.மு.க-வை கேப்டன் போட்டுத் தாக்கப் போகிறார். அதிலேயே நீங்கள் புரிந்துகொள்ளலாம்' என்று ஜெ-வுக்கு அந்த தூதர் கூறியதாகவும்... இப்போதைக்கு ஜெ. கூலானதாகவும் கூறுகிறார்கள்!''

''நீர் கூறுவதை எல்லாம் பார்த்தால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதில் ரொம்ப முன்னேற்றமோ..?''

''அப்படிச் சொல்ல முடியாது! தி.மு.க-வை மறுபடி ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதில் ஒரே நோக்கோடு இருக் கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்...'' என்ற கழுகார்,

''காங்கிரஸோடு விஜயகாந்த் கட்சி கூட்டணியாகப் போனால்... அதையும் ஜெ. உள்ளூர வரவேற்பாராம். அவர் கணக்குப்படி காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணியாக நின்றால்... தி.மு.க-தான் பலவீனம் அடையும் என்றும், இந்தப் பிரிவினையால் அ.தி.மு.க. அலேக்காகத் தொகுதிகளை அள்ளும் என்றும் ஒரு கணக்கு வைத்திருக்கிறாராம். தனது கணக்கை மேலும் சரிபார்த்துவிட்டு, அதற்கேற்ப பா.ம.க-வை ஏற்பதா... வேண்டாமா என்றும் முடிவெடுப்பாராம்!''

''பயனுள்ள கணக்குதானா இது?''

''அது தெரியாது! ஆனால், மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி பற்றி ராகுல் காந்தி பேசும்போது, காங்கிரஸின் கூட்டணி தர்மம் என்ன என்று வெளுத்து வாங்கியிருப்பதை கவனியும். 'குட்டக் குட்ட குனிய மாட்டோம்!' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அதேபோல், அக்டோபரில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலவரத்தைப் பார்த்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கும் வந்து முழங்குவாராம் ராகுல் காந்தி. பீகார் தேர்தல் முடிந்ததுமே தமிழ்நாட்டில் தன் மனக் கணக்கை வெளிப்படையாக காங்கிரஸ் செயல்படுத்த ஆரம்பித்துவிடும். அப்போதுதான் தெரியும் - தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா... அல்லது விஜயகாந்த் கட்சியுடன் பேச்சுவார்த்தை வேகம் பிடிக்குமா என்பதெல்லாம்!''

''கேட்கையிலேயே கிறுகிறுக்குதே!''

''இதையும் கேட்டால் இன்னும் கிறுகிறுக்கும்... தே.மு.தி.க-வுக்கு 40 ஸீட் தரத் தயாராம் அ.தி.மு.க.! ஆனால், முதல்கட்ட தூதுப் பேச்சுகளில் தே.மு.தி.க. கேட்கும் பல தொகுதிகள் எம்.ஜி.ஆரின் ஓட்டு வங்கி இப்போதும் பலமாக உள்ளவை! இது கொடநாட்டை கொஞ்சம் சலிப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்!''

''சரிதான்!''

- தொண்டைக்கு இதமாக தூதுவளை மிட்டாய் கொடுத்தோம் கழுகாருக்கு. கனைத்தபடி கம்பீரக் குரலில் கனஜோராகத் தொடர்ந்தார் - ''காஷ்மீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. பிரச்னையை அனைவரும் சும்மா மென்று முழுங்கிப் பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் அதிகமாகவே சீறியிருக்கிறார். அவர் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்கிறார் சோனியா...''

''என்ன சொன்னதாம் சிறுத்தை?''

''சோனியா பேசும்போது 'ஜம்மு காஷ்மீரத்து மக்களும் நம் மக்களே' என்று சொல்லியிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டிய திருமா, 'இப்படி அம்மாநிலத்து மக்கள் நினைக்கவில்லை. அந்த மாநிலத்து மக்களின் உணர்வுகளை இந்த இந்திய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்திய அரசாங்கத்துக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குமான இந்த முரண்பாட்டை முதலில் களைய வேண்டும்' என்றபோது பிரதமரும் புருவம் உயர்த்தினாராம்!''

''அப்படியா?''

''ஆயுதப்படைகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைச் சொல்லித்தானே இத்தனை கலவரமும் நடக்கிறது. அந்த சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள் என்று சொன்ன திருமா, 'நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, ஆயுதத்தை ஆயுதத்தால் நசுக்க முடியாது' என்று சொல்லும்போது குரலை கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்.''

''இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காஷ்மீரைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதோ?'' என்று வருத்தம் தெரிவித்தோம்!

''அந்தக் கவலை இருக்கட்டும். சமீபகாலமாக நிருபர்கள் மீதான தாக்குதல் அதிகமாவதைப் பற்றி தலைமைச் செயலாளர் மாலதி ரொம்பவே கவலைப்பட்டாராம். இதைதொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், அதற்கான அமைப்புகள், போலீஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி ஒன்றை விரைவில் அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறாராம் மாலதி. நல்லதே நடக்கட்டும்!'' என்றபடி கழுகார் ஜூட்!

இளங்கோவன் கோபத்துக்கு இதுதான் காரணம்?!

சென்னையில் தொழில் அதிபர் ஒருவரின் திருமண விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்திருக்கிறார். அந்த விழாவுக்கு தி.மு.க. சார்பாக வந்திருந்த முக்கியப் புள்ளியைப் பார்த்த இளங்கோவன், அவர் அருகில்போய் அமர்ந்து இருக்கிறார். ''கூட்டணியில் இருந்துட்டே ஏன் இப்படி எங்களை வறுத்து எடுக்குறீங்க?'' என்று தி.மு.க. புள்ளி கேட்க... ''உங்க கட்சியில் யார் மேலேயும் எனக்கு வருத்தம் இல்லை. என்னோட டார்கெட்டே அமைச்சர் பொன்முடிதான்! என்னமோ, இந்தியாவுக்கே ஜனாதிபதியாகிட்ட மாதிரி யாரையும் மதிக்காமல் அவர் போடுற ஆட்டம் கொஞ்சமா... நஞ்சமா? காங்கிரஸ் ஆளுங்களைக் கண்டாலே அவருக்கு ஆகலை. அவர் அடங்குற வரைக்கும் எங்க குரல் ஒலிச்சுட்டுதான் இருக்கும்!'' எனக் கொந்தளித்தாராம் இளங்கோவன்.

எங்கே போகிறது தமிழ் சினிமா..?


2009 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்...

இந்திய மொழிவாரியாக பார்க்கும்போது, பல்வேறு பிரிவுகளிலும் கிடைத்த விருதுகளின் எண்ணிக்கை விவரம்:

• இந்தி - 15

• மலையாளம் - 10

• பெங்காலி - 6

• கன்னடா - 3

• தமிழ் - 3

• தெலுங்கு - 2

இந்தி சினிமாவுக்கு பிறகு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாவது, தமிழில் தான். அத்துடன், தமிழ் சினிமா வர்த்தகமும் முன்னணியில் இருப்பது கவனத்துக்குரியது.

முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2009 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் இருந்து வெளியான படங்களின் எண்ணிக்கை 131.

ஆனால், 2009-ம் ஆண்டின் இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் வெறும் 'மூன்றினை' மட்டுமே தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதுவும், ஒரே படத்துக்காக (பசங்க).

இது எதைக் காட்டுகிறது?

விவாதிப்போம் வாருங்கள்.

பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?


லண்டன்: ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.

அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் பாங்கும் இருக்கும் என்று ஹெர்ட்போர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கும், பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து புகழ்பெற்ற நூல் ஆசிரியர் கேரன் பைன் கூறியதாவது,

பெண்கள் தங்கள் நடவடிக்கைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும். இனி பெண்கள் மென்சஸ் வரும் முன் ஆடைகள் வாங்கச் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்.

ஏனென்றால், மென்சஸ் சமயத்தின்போதுதான் அவர்களுக்கு அதிக அளவில் செலவழிக்கத் தோன்றும் என்று அவர் கூறினார்.

18 வயது முதல் 50 வயது வரை உள்ள 450 பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்களிடம் முந்தைய வாரத்தில் அவர்கள் செலவு செய்தது பற்றியும், அவர்களுடைய கடைசி 'பீரியட்ஸ்' தேதி பற்றியும் கேட்டனர்.

இதில் கலந்து கொண்ட பெண்களின் செலவழிக்கும் பழக்கம் மாதம் முழுவதும் மாறிக் கொண்டிருந்தது. மென்சஸ் வரும் முன் இருக்கும் பதட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த பதட்டம் குறைந்ததும் அவர்கள் குறைந்த அளவிலேயே செலவு செய்கின்றனர்.

எனவே, 'பீரியட்ஸ்' சமயத்தி்ல 'பர்ச்சேஸு'க்குப் போவதைத் தவிர்த்தால் 'பர்ஸ்' தப்பும்!

உங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்?


எல்லா பெண்களுமே தங்களுக்கு வரப்போகும் கணவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். இன்றைய சூழலில் ஆண்களும் தங்களுக்கு வரும் மனைவி வேலை செய்கிறவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆண்- பெண் இருவருக்குமே திருமணப் பேச்சு ஆரம்பித்தவுடன் முதல் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு அவரவர் ஜாதகத்தில் 4-ஆம் பாவத்தை வைத்து வரப்போகும் கணவரோ மனைவியோ என்ன தொழில் செய்வார் என்று ஓரளவு தெரிந்து கொள்ளலாம். 4-ஆம் அதிபதி சுப பலம் பெற்று பலமாக இருந்தால், கீழே சொல்லப்பட்டுள்ள வேலைகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் என்றும்; 4-ஆம் அதிபதி பலம் குறைந்திருந்தால் அந்தந்த வேலையில் குறைவான சம்பாத்தியம் உடையவர் என்றும் அறிந்து கொள்ளலாம். இனி 12 ராசியினருக்கும் தங்கள் வாழ்க்கைத் துணை என்ன வேலை செய்வார் என பார்ப்போம்.

மேஷம்

இவர்களின் வாழ்க்கைத் துணை நீர் சம்பந்தமான தொழில், பெட்ரோல் சம்பந்தமான தொழில், ஹோட்டல் நடத்துவது, கப்பல் தொழிலில் வேலை, மின் சம்பந்தமான தொழில், கடல் ஆராய்ச்சி, குழாய், கிணறு தோண்டுவோர், பால், காய்கறிகள் சம்பந்தமான தொழில், முத்து, சுற்றுலா, துணி வியாபாரம், உப்பு போன்ற தொழில்களைச் செய்வார். மேஷ ராசிக்கு சந்திரன் பலமாக இருந்தால் இத்தொழில்களில் மேன்மையான புகழ், செல்வத்தோடு பணி புரிவார். சந்திரன் பலம் குன்றி இருந்தால் குறிப்பிட்ட தொழில்களில் சுமாரான வேலை கிடைக்கும்.

ரிஷபம்

இவர்களுக்கு சூரியன் பலமாக இருந்தால் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவம் சார்ந்த தொழில், தந்தையின் பரம்பரைத் தொழில், வனத்துறையில் வேலை, இயக்குநர், கவுன்சிலர், ஷேர் புரோக்கர்கள், கொள்கலன்கள், பேக்கிங் உபகரணங்கள் விற்பனை போன்ற தொழில்களைச் செய்வர். சூரியனின் பலத்தைப் பொறுத்து பணியில் ஏற்ற- இறக்கம் இருக்கும். பணியில் கண்டிப்புடன் இருப்பர். அநேகமாக ஒரே இடத்தில் செய்யும் வேலை சிலருக்கு அமையலாம்.

மிதுனம்

பேராசிரியர், ஆசிரியர், கணக்காளர், ஜோதிடர், அச்சு சம்பந்தமான தொழில், மொழிபெயர்ப்பாளர், வணிகர், புரோகிதர், புரோக்கர், நூல் வெளியீட்டாளர், ஆடிட்டர்கள் போன்ற தொழிலில் இருப்பர். இவர்கள் சொந்த இடத்திலிருந்து அவ்வப்போது சிறிது அலைந்து வேலை பார்ப்பர். புதன் பலமாக இருப்பது அவசியம்.

கடகம்

வெள்ளி, பட்டு, ஆபரணங்கள், ஓவியம், இசை சம்பந்தப்பட்ட தொழில், வரவேற்பாளர், பாடகர், ரசாயனப் பரிசோதகர், பால், ஜாம், ஊறுகாய் உற்பத்தியாளர், போக்குவரத்து ஏஜெண்ட், கட்டடம் சம்பந்தமான தொழில் அமையும். சுக்கிரனைப் பொறுத்து தொழிலில் மேன்மை வேறுபடும். இவர்கள் ஓயாமல் அலைந்து கொண்டே பணிபுரியும் நிலை இருக்கும்.

சிம்மம்

அறுவை சிகிச்சை மருத்துவர், ஆய்வாளர், ராணுவம் சம்பந்தப்பட்ட தொழில், பல் மருத்துவர், கப்பல் தொழிலாளர், அணைக்கட்டு, நீர் விநியோகப் பணியாளர்கள் போன்ற வேலைகளைச் செய்வர். மேலும், தோல் பதனிடும் இடத்திலும் இரும்புக் கிடங்கு போன்ற இருட்டு- பள்ளம் நிறைந்த இடங்களிலும் தொழில் புரிவர். செவ்வாயின் பலத்தைப் பொறுத்து வேலையில் மேன்மை அமையும்.

கன்னி

ஆசிரியர், நீதிபதி, பேச்சாளர், அரசியல்வாதி, விளம்பரத் தொழில், கட்டடத் தொழில், போக்குவரத்துத் தொழில், மருந்துகள் சம்பந்தமான தொழில், பள்ளி, கல்லூரி, தேவாலயங்கள் போன்ற இடங்களில் வேலை செய்வர். குருவின் பலத்தைப் பொறுத்து பணியில் உயர்வு- தாழ்வு அமையும். பணியில் கண்டிப்பாக நடந்துகொள்வர்.

துலாம்

மருத்துவர், துப்பறியும் நிபுணர், கைரேகை நிபுணர், பழைய பொருட்கள் சேகரிப்போர், வேளாண்மைத் தொழில், பாலம் கட்டும் தொழில், ராணுவத் தொழில், சர்வேயர், நெருக்கமான- இருட்டான இடத்தில் பணி, பழைய- மறைவான கட்டடத்திலும் பணிபுரிவர். சனியின் பலத்தைப் பொறுத்து மேன்மை அமையும். மிகவும் தேவையான பணி நேரத்தில் மட்டுமே அலைச்சல் மேற்கொள்வர்.


விருச்சிகம்

அறிவியல் அறிஞர்கள், சுரங்கப் பொருட்கள் சம்பந்தமான வேலை, தோல் நோய் மருத்துவர், ரசாயனம், மெக்கானிகல் இஞ்ஜினீயர், மின்சாரம் சம்பந்தமான அனைத்து தொழில்கள், ஏற்றுமதியாளர்கள், வண்ணம் சம்பந்தமான தொழில் போன்றவற்றை மேற்கொள்வர். சனியின் பலத்தைக் கொண்டு உயர்வு- தாழ்வு அமையும். இவர்கள் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், உள்ளுக்குள் படபடப்பாகப் பணிபுரிவர்.

தனுசு

அரசியல்வாதி, அமைச்சர், பேராசிரியர், சினிமா நடிகர், மது சம்பந்தமான தொழில், மருந்து, எண்ணெய், வாசனைப் பொருட்கள், மீன் கண்காட்சி சாலையில் வேலை, துறைமுகத் தொழிலாளர், கைரேகை, எண் கணித வல்லுநர், கப்பலில் வேலை, சாது, சந்நியாசி என்று வாழ்க்கை நிலை அமையும். பொதுவாக இவர்கள் ஈரம் சூழ்ந்த இடங்களில் பணிபுரிவர் அல்லது பதனிடும் இடங்களில் பணிபுரிவர். குருவின் பலத்தைக் கொண்டு ஏற்ற- இறக்கம் உண்டாகும்.





மகரம்

போலீஸ் துறையில் வேலை, ரயில்வேயில் வேலை, விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் விற்பனை, சமையல் கலை, குத்துச்சண்டை வீரர், தொழிற்சாலைகளில் பணி, அறுவை சிகிச்சை மருத்துவர், ராணுவத்தில் வேலை, கடிகாரம் சம்பந்தமான வேலை, தீப்பெட்டி, பட்டாசு சம்பந்தமான தொழில், பெரிய வாகனங்கள் சம்பந்தமான தொழில் புரிவர். செவ்வாயின் பலத்தைப் பொறுத்து தொழில் நிலை அமையும். இவர்கள் பொதுவாக வெப்பமான இடத்தில் தொழில் புரிவர். தொழிலில் கடுமையாக நடந்து கொள்வர்.

கும்பம்

தோட்டம் சம்பந்தமான தொழில்கள், பேங்க் வேலை, விவசாயிகள், டிரைவர்கள், சினிமாவில் வேலை, வண்ணம் பூசுபவர், பூக்கடை வைத்திருப்போர், கண்ணாடி, பிளாஸ்டிக், பட்டு, பருத்தி, பால், ஐஸ்கிரீம், காய்கறி, பெட்ரோல், அரிசி விற்பனை போன்ற தொழில் செய்வர். (இந்த ராசிப் பெண்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்பவராக அமைவர்) பணியில் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள். சுக்கிரனின் பலம் முக்கியம்.

மீனம்

நாளிதழ், வார இதழ் ஆசிரியர்கள், தூதரக அலுவலர், தபால்காரர், விற்பனையாளர், புகைப்படக் கலைஞர், பேருந்துத் தொழிலாளர், மொழிபெயர்ப்பாளர், வழிகாட்டி, வழக்கறிஞர், காரியதரிசி, மூக்கு கண்ணாடித் தொழில், பச்சை நிறம் கொண்ட பொருட்கள், ரயில்வேயில் வேலை போன்ற தொழிலைச் செய்வார். புதனின் வலு முக்கியம். இவர்கள் எப்போதும் அலைந்து திரிந்து கொண்டே பணி புரிவர்.

பெண்களின் ஜாதகத்தைக் கொண்டு பலன் காணும்போது அவர்கள் கணவரின் வேலைக்குரிய கிரகம் பலமிழந்து இருந்தால், அந்த குறிப்பிட்ட கிரகத்திற்குரிய பரிகாரம் செய்தால் வேலையில் நிறைவும் பணவரவும் கிடைக்கும்.

ஆண்- பெண் இருபாலருக்கும் சம்பந்தப்பட்ட கிரகம் 9, 12-ஆம் இடங்களுடன் சம்பந்தப்பட்டாலும்; சர ராசிகள் சம்பந்தப்பட்டாலும் வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

சம்பந்தப்பட்ட கிரகம் சனியின் ராசியிலோ சனியின் அம்சத்திலோ சனியின் பாதத்திலோ இருந்து, நீசமாகியும் கெட்டும் பலமிழந்தும் இருந்தால் துணைவர் வேலைக்குச் செல்லாமல் தூங்கியே பொழுதைக் கழிப்பார்.

தேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்!


நம் வாழ்க்கைப் பாதையில் நமது எதிரிகளைப் பற்றி ஆராய்ந்து பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். வேத சாஸ்திரங்களில் உத்தியோக சத்ரு, பஹிர் சத்ரு, அந்தர் சத்ரு என்று பிரித்துச் சொல்லி இருக்கிறார்கள். சத்ரு என்ற வார்த்தையை சத்+ரு என்று பிரிக்கலாம். சத்- நம்மிடம் உள்ள பொருட்களை- சத்துகளை உறிந்து கொண்டு, ரு- நம்மைக் கடனாளி ஆக்கிவிட்டுப் பிரிந்து சென்று விடுபவர் என்று இதற்குப் பொருள். தொழிற்கூட்டாளியாகச் சேரும் மனிதர்கள் லாபம் வரும் போது சேர்ந்திருந்து, நஷ்டம் வரும் என்று தெரிந்தால் பொருளைப் பிரித்துக்கொண்டு சென்றுவிடுவது. கடனை ருணம் என்றும் பிரிவோரை சத்ரு என்றும் பொருள்படக் கூறி உள்ளார்கள்.

ஒரு மனிதன் எதிரிகளைச் சந்திப்பதும், எதிரியாக ஆகி விடுவதும் அவரவர் ஜாதக நிலைப்படிதான். லக்ஷ்மீதரரின் வாக்கியத்தில், "ஆறாம் இடத்தில் நீசரும் சுபரும் கூடினால்கூட எதிரிகள் வலுப்பர்' என்பது குறிப்பிடத் தகுந்தது.

பகையும் எதிரியும் சேரும் ஜாதகம்நல்ல பெயர், பட்டம், சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றுக்கு ஒரு காரகனாக சந்திரன் விளங்கு வதால், 6-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர் கள் ஜென்ம விரோதிகளை உடையவர்களாக விளங்குவர்.

ஆறாம் இடத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்களுக்கு கொடுக்கல்- வாங்கலின் வழியாக எதிரிகள் ஏற்படுவார்கள். ஆனால் எதிர்ப்போரை விலகி ஓடச் செய்துவிடும் ஆற்றலையும் கொடுத்து விடுவார். அதேசமயம் கடகச் செவ்வாயானால் எதிரி வெற்றி பெற்று விட வாய்ப்பு உண்டு.

ஆறாம் இடத்தில் புதன் இருந்தால் தவளை தன்னுடைய வாயால் கெட்டது போன்று அதிகமாகப் பேசி, தேவையில்லாத ஒப்பந்தங் களைச் செய்துவிட்டு, தொழில் செய்யுமிடத்தில் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவார்கள்.

எட்டாம் இடத்தில் சனி இருக்க அதுவே மேஷமாகிவிட்டால், ஒரு பெரிய சண்டையின் வழியாக தொழிலில் எதிரிகளைச் சேர்த்துக் கொண்டு விலக முடியாமல் தத்தளிப்பார்கள். அதேசமயத்தில் ஆறாம் வீட்டில் சனி அமர்ந்து விட்டால் விரோதிகளை அடக்கும் ஆள்பலம், பணபலம் ஆகியவற்றைப் பெற்றி ருப்பார். ஆனால் ஆயுதங்களால் ஆபத்து வரலாம். சற்று கவனமாக இருத்தல் நல்லது.

ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசமாகிவிட்டால், உறவினர்களையே எதிரிகளாக ஆக்கிக் கொள்வார். ஆனால் உச்சமாகவும் 2-க்குடைய வரோடும் சேர்ந்துவிட்டால் விரோதமே விருப்பமாக மாறிவிடும்.

8-ஆம் இடத்தில் செவ்வாய் வலுப்பெற்றால் சகோதரர்களின் உறவில் விரிசல் ஏற்படும். திருடர்களாலும் பகைவர்களாலும் தொழில் மட்டுமல்ல; வாழ்க்கைக் காலமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும்.

பன்னிரண்டில் செவ்வாய் அமர, அவரோடு ஒரு பெண் கிரகம் கூடியிருந்தால், பெண்களே எதிரிகளாகி பொருட்களை அபகரித்துச் சென்றுவிடக்கூடிய காலகட்டம் உருவாகிவிடும்.

4-ல் குரு இருக்க 6-ல் ஒரு பாப கிரகம் நீசமடைந்து விட்டால், ஜாதகரை நல்ல மனிதராக வாழ வைப்பார். ஆனால், எதிரிகளால் தொல்லைகள் தொடர்ந்து வந்து நிம்மதி யைக் கெடுத்து விடும்.

ஆறாம் இடத்தில் குரு வக்ரகதி அடைந்து லக்னத்தில் சுபர்கள் இருப்பினும், மறைமுகப் பகைவர்கள் நிம்மதியைக் கெடுக்கக் கூடிய சில்மிஷங்களைச் செய்ய வைப்பார்.

பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ல் சனி அமர்ந்திருக்க 6-ல் சுபர் இருப்பினும், புத்தி மந்தத்தையும் பகைவர்களால் மீளாத துயரை யும் உண்டாக்கித் தருவார். சில நேரங்களில் மனநிலையும் தொழில் எதிரியால் பாதிப்ப டையக் கூடும்.

பன்னிரண்டில் சனி இருந்தாலும் 6-ல் ராகு- கேது அமர்ந்திருந்தாலும் ஜாதகருக்குப் பகைவர் தொல்லையே பழக்கத்திற்கு வந்து விடும். இதனால் கோர்ட், வக்கீல் செலவு, அவமானம் ஆகியவை கடுமையாக வந்து சேரும்.

ராகு ஏழில் அமர்ந்திருக்க, 6-ல் சுபர்கள் இருந்தாலும், அந்நியர்களது கூட்டுத் தொழில் வழியாகப் பிரச்சினை ஏற்பட்டு எதிர்ப்புகள் உருவாகும். இதனால் பெருத்த பொருட் செலவும் வரக்கூடும். மேலும், "10-ஆம் ராகு படிந்து செல்வோர்க்கும் பகை தருவார்' என்பது ஜோதிட விளக்கம். அதேசமயம் கேது 6-ல் அமர்ந்திருக்கும்போது 10-ல் ஒரு சுபர் அமர்ந்தால் எதிரியையும் தந்து எதிர்க்கும் துணிவையும் தருவார்.

"மனித வாழ்க்கை என்பது ரோஜா மலர் தூவிய படுக்கை அறை அல்ல; அது ஒரு போர்க்களம் போன்றது' என ஒரு தத்துவஞானி கூறினார். அந்த போர்க்களத்தில் புதிது புதிதாய் எதிரிகள் முளைக்கத்தான் செய்வார் கள். ஜனன ஜாதக- தசா புக்திகளை ஆராய்ந்து, எதிரிகள் வரும்முன் காப்போம். பகளா தேவியின் கருணையை நாடுவோம்.

பகளா தந்திரப் பிரயோகம்:

தசமகா வித்யை என்னும் சக்தி அவதார நூலில் உள்ளவாறு பத்து அவதாரங்களில் எட்டாவது சக்தியாக வருபவளே ஸ்ரீ பகளாமுகீ தேவி.

ருத்ரயாமள தந்திரத்தில் எதிர்ப்புகளை விலக்கிவிடும் பிரம்மாஸ்திரம் போன்ற ஸ்ரீ பகளாமுகி தந்திரம் இதுவே. மூவுலகங் களிலும் பிரசித்தி பெற்ற இந்த வித்தை லட்சுமி கடாட்சம், புத்திர- பௌத்திரர்கள், எதிரி விலக்கம் ஆகிய நற்பலன்களைத் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இதை உபதேசம் பெற்றுவிட்டால் கண்ட நபர்களிடம் தராமல் வாக்கு, உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விதியில் உள்ளது. மொத்தம் பதினேழு அனுவாகங்களில் வெவ்வேறு சௌபாக்கியப் பலன்கள் வருகின்றன. அவற்றில் பத்தாவது அனுவாகமாக வருவதே இந்த எதிரி விலகும் தந்திரம். இதன் மூலத்தையும் துதியையும் யந்திர வரைவையும் எழுதி (தாமிரத் தகட்டில்) தாயத்து போன்று கட்டிக் கொள்வதால்

அரசன், மோசமான எதிரிகள், பாம்பு, விலங்குகள் மயங்கி ஓடிவிடும் என்பது அனுபவம். நன்மைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். யாருக்கும் கெடுதல் நினைத்தல் கூடாது.

காலையில் குளித்தவுடன் மடியுடுத்தி மூன்று முறை பகளாமுகியின் ப்ராத ஸ்மரணம் கூற வேண்டும்.

"ப்ராத: ஸ்மராமி பகளாம் கமலாய தாக்ஷீ ம்

இந்து ப்ரசன்ன வதனாம் பரிவீத வர்ணாம்/

பாணித் வயேன தததீம் ச சீலாம் கிரீந்த்ரே

த்வேஷ்யாம்ச வாஸன கதாம் மதமத்த சித்தாம்//

ப்ராதர் நமாமி பகளாமுகீ தர்ம மூர்த்திம்

காருண்ய பூர்ண நயனாம் முகமந்த ஹாஸாம்/

இந்து ப்ரஸன்ன வதனாம் பரிமீத வர்ணாம்

பீதாம்பராம் ருசிர கஞ்சுக சோபமானாம்//

ப்ராதர்ப் பஜாமி யஜமான ஸீ சௌக்யதாத்ரீம்

காமேஸ்வரீம் கனக பூஷண பூஷிதாங்கீம்/

கம்பீரதீர ஹ்ருதயாம் ரிபு புத்தி ஹந்த்ரீம்//

ஸம்பத் ப்ரதாம் ஜகதி பாத ஜுஷாம் நராணாம்/

ச்லோகத் ரயமிதம் புண்யம் பகளாயாஸ்து ய: படேத்

ரிபுபாதாதி பிர்முகதோ லக்ஷ்மீ ஸ்தை யர்யம் அவாப்னுயாத்//'

தொடர்ந்து, செந்நிறப் பட்டில் பகளாமுகி யின் யந்திர வரைவை வைத்து, ஐங்காயம் தடவி பூஜை உபசாரங்கள் செய்து, ஏழு முறை முக்கியமான பகளா தந்திர ஸ்துதி கூற வேண்டும்.

"மாதர்ப் பைரவி பத்ரகாளி விஜயே

வாராஹி விஸ்வாக்ரயே

ஸ்ரீவித்யே ஸமயே மஹேசி பகளே

காமேசி ராமே ரமே/

மாதங்கி த்ரிபுரே பராத் பரதரே

ஸ்வர்க்காப வர்க்கப்ரதே

தாஸோஹம் சரணாகத: கருணயா:

விச்வேச்வரி த்ராஹி மாம்//'

மூலமந்திரம்

"ஓம் ஹ்ரீம் பகளாமுகி சர்வதுஷ்டானாம்

வாசம் முகம் ஸ்தம்பய

ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம்

நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா.'

தெரிந்தே கெடுத்த நயன்தாரா!


பிரபு தேவா - நயன்தாராவின் 'கள்ளக் காதல்', சட்ட விரோதமான கல்யாண ஏற்பாடுகள் கோடம்பாக்கத்தில் பெரும் அதிருப்தியையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருமணம் நடக்காமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பல்வேறு அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு மகளிர் அமைப்புகள் ரம்லத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருவேளை நயன்தாராவுடன் ரம்லத் சமரசமாகப் போனாலும், சமூக விரோதமான பலதார மணத்தை ஆதரிக்கும் இந்தத் திருமணத்தை எதிர்த்து வழக்குத் தொடரத் தயாராக உள்ளன. எனவே ரமலத்தை விவாகரத்து செய்யத் தயாராகிறாராம் பிரபு தேவா.

இன்னொரு பக்கம் பிரபுதேவா - ரம்லத் திருமணம் நடந்த போது கிளம்பிய பெரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த விவிஐபிகள் நயன்தாரா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் ஒரு குரூப் டான்ஸராக பணியாற்றிவர்தான் ரம்லத். இவர் மீது காதல் கொண்ட பிரபு தேவா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணத்தை அவரது பெற்றோர் சில ஆண்டுகள் வரை ஏற்கவே இல்லை. அவர்களின் புறக்கணிப்பைத் தாங்காத பிரபு தேவா, ரம்லத்தை ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்.

இதனால் மனம் உடைந்த ரம்லத்துக்கு ரஜினிகாந்த்தும், அவரது மனைவி லதா ரஜினியும்தான் ஆதரவு கூறி தைரியம் அளித்தனர். பிரபுதேவாவை அழைத்துப் பேசி தனிக் குடித்தனம் நடத்துமாறு அட்வைஸ் கொடுத்து தனியாக வீடு பார்த்தும் கொடுத்தனராம். மேலும் லதா ரஜினி தனது ஆஸ்ரம் பள்ளியில் ரம்லத்துக்கு ஆசிரியை வேலையையும் வழங்கி உதவினார்.

இந்த காலகட்டத்தில் இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்போது பிரபுதேவாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினர்.

இப்படி ரஜினி போன்ற திரையுலகப் பெரியவர்ள் பிரபுதேவாவுக்கும், அவரது திருமணத்திற்கும் ஆதரவாக இருப்பதைப் பார்த்த பிறகே பிரபுதேவா குடும்பத்தினர் இறங்கி வந்து கல்யாணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனராம்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரை மறைத்து வைத்திருந்த தனது திருமண வாழ்க்கையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரபு தேவா.

இந்த சூழ்நிலையில்தான் நயன்தாரா - பிரபு தேவா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. விஷயம் தெரிந்ததும் பிரபுதேவாவை முதலில் கண்டித்தவர் ரஜினிதான் என்பது கோடம்பாக்கமே அறிந்த ரகசியம். அவரது அறிவுரைக்குப் பின் நயன் விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தார் பிரபு தேவா.

"ஆனால் நயன்தாரா விடுவதாக இல்லை. இப்போதும் கூட, குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் பிரபு தேவா பேட்டியை வெளியிட வைத்தவர் நயன்தாராதான். இந்தப் பேட்டிக்கு முன்தினம், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு என்று செய்தி போட வைத்தார். அடுத்த நாளே, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரபு தேவா சொன்னதாக பேட்டியையும் வர வைத்தார். காரணம், குறிப்பிட்ட அந்த செய்தியை எழுதிய நபர் நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர், நயனின் சொந்த ஊர்க்காரரும் கூட," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்போதைய நிலவரப்படி, ரம்லத் சம்மதித்தாலும், இந்தத் திருமணம் எப்படியும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதால், 'பரஸ்பர விவாகரத்து' பெறும் முடிவுக்கு பிரபுதேவா குடும்பத்தினர் வந்திருப்பதாகவும், இதற்கு ஈடாக பெரும் தொகை மற்றும் பணத்தை ரம்லத்துக்கு நயன்தாரா தர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபு தேவா - நயன்தாரா - ரம்லத் விவகாரத்தில் நடக்கிற வில்லங்க விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரஜினி மற்றும் நண்பர்கள், பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Sunday, September 19, 2010

முருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்!


ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் ஆசிய கிளை நிறுவனம் பாக்ஸ் ஸ்டார் இந்திப் படங்களைத் தயாரித்தும், ஹாலிவுட் படங்களை விநியோகித்தும் வருகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனம் இந்திப் படங்களைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களையும் தயாரிக்க முன்வந்திருக் கிறது. அதை ஒரு வெற்றிகரமான இயக்குநருடன் சேர்ந்து செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்த போது, அவர்கள் தேர்ந்தெடுத்தது ஏ.ஆர். முருகதாஸை.

"தீனா', "ரமணா', "கஜினி' என மூன்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த முருகதாஸ், தமிழ் "கஜினி'யை அமீர் கானை வைத்து இந்தியில் இயக்கினார். அந்தப் படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்து சரித்திரம் படைத்துள் ளது. இதையெல்லாம் கணக்கெடுத்து முருகதாஸை தனது தமிழ்ப்பட பார்ட்னராகத் தேர்வு செய்தார்கள்.

முருகதாஸ் இதன் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி பாக்ஸ் ஸ்டார்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கக் களம் புகுந்துள்ளார்.

இந்தப் படத்தை முருகதாஸின் சீடர் சரவணன் இயக்குகிறார். ஜெய்- விமல் நடிக்கிறார்கள். நாயகி? தேடிக் கொண்டிருக்கிறார்கள்!

""திறமையான புதியவர்களை வைத்து முதலில் படம் தயாரிப்பது; பின்னர் பெரிய ஸ்டார்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எங்கள் திட்டம். தமிழைத் தேடி ஹாலிவுட் வந்திருக்கிறது. தமிழ் இனி ஹாலிவுட்டை நோக்கிப் போகும்'' என்கிறார் முருகதாஸ்!

எந்திரனுக்கு எதிராக குவாட்டர்!


படத்திற்கு பின்னணி பேசும் கலைஞர்களிடம் விசாரித்தால் படத்தின் ரிசல்ட்டை துல்லியமாக சொல்லி விடுவார்கள். "சுப்ரமணியபுரம்', "நாடோடிகள்' வெற்றியை முன்கூட்டியே சொன்னவர்கள் டப்பிங் கலைஞர்கள்தான். இதனால் "எந்திரன் படத்திற்கு டப்பிங் பேசியவர்களை துரத்தி துரத்தி ரிசல்ட் கேட்டு வரு கிறார்கள் விநியோகஸ்தர்கள். மிக அதிகபட்சமாக 700 பேர் டப்பிங் பேசி யிருக்கிறார்கள் "எந்திர'னுக்கு. படத்தைப் பற்றி எல்லோருமே பாஸிடிவ் ரிசல்ட் தர... வியாபாரம் படு சூடு.

ஆனாலும் இந்த மாதம் 24-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாசம் 1-ந்தேதி... என மூணு விதமான ரிலீஸ் தேதி உலவிக் கொண்டிருக்கிறது. "சன்'னும் ரிலீஸ் தேதியைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் கூட்ட...
தயாநிதி அழகிரி தரப்போ "எந்திரன்' ரிலீஸ் சமயத்தில் தங்களது "வ-குவாட்டர்-கட்டிங்' படத்தை கொண்டு வர ஜரூராக இருக்கிறது.


கமல் படத்தில் சூர்யா!


கமலின் "மன்மதன் அம்பு' படத்தில் ஒரு கெஸ்ட் ரோல். "சூர்யா' என்பது கே.எஸ்.ரவிக்குமார் சாய்ஸ். நண்பரான சூர்யாவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டாராம் தயாரிப்பாளர் உதயநிதி.


அஞ்சனா யள் ஸ்ரேயா!


தெலுங்கு ஹீரோயின் அஞ்சனாவுக்கு கோலிவுட் ஆசை. ஹைதராபாத்திலிருந்து கிளம்பி வந்து சென்னையில் டேரா போட்டார். சில படங்களுக்கான பேச்சுவார்த்தையும் நடந்த நிலையில்... "அந்தப் பொண்ணு தெலுங்கு ஹீரோ ராணாவை லவ் பண்ணுது. அதனால் அடிக்கடி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு ராணா வைத் தேடி காணாமப் போக வாய்ப்பிருக்கு' என ஸ்ரேயா ஆஃப் த ரெக்கார்டாய் அடித்து விட்டிருக்கிறார்.

ஹைதராபாத்துக்கு கிளம்பிப் போன அஞ்சனா தன் ஆசை ராணாவிடம் ஸ்ரேயாவைப் பற்றி போட்டுக் கொடுத்தாராம். விளைவு... ராணாவின் படத்தில் நடிக்கவிருந்த ஸ்ரேயாவின் வாய்ப்பை இலியானாவுக்கு கொடுத்திட்டாராம் ராணா!


பட்ஜெட் அக்ரிமெண்ட்!


"அங்காடித் தெரு' வசந்தபாலனின் அடுத்த படம் "அரவாண்' பூஜை போட்டு ரெண்டு மாசமாச்சு. இன்னும் ஷூட்டிங் போகலை. சென்னைக்கு வெளியே பிரமாண்ட செட் போடும் வேலை மழையால் தாமதமாகி நடந்து கொண்டிருக்கிறது.

"செட்டு ரெடியான பின்னாடி அங்க எடுத்துக்கலாம். மத்த போர்ஷனை எடுங்க' என தயாரிப்பாளர் சிவா சொல்ல... வசந்த பாலனோ "செட்டு ரெடியாகட்டும்' எனச் சொல்லிவிட்டார். படப் பிடிப்பு தாமதமானால் பட்ஜெட் எகிறும் என்பதால் "இதுக்குள்ள முதல் காப்பி எடுத்துத் தரணும். கூடுதல் செலவானா அது ஒங்க பொறுப்பு' என புது அக்ரிமெண்ட் போட்டாராம் சிவா. வசந்தபாலனும் ஓ.கே. சொல்ல... நிலைமை சுமுகமாகியிருக்கிறது.


பெரிய இடம் வெளியிடவிருக்கும் "பறவை' படத்தின் இசைவிழா சமீபத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாக கிளம்பி வந்தார் படத்தின் நாயகி. ஆனால் இந்த நாயகி "மாமனார்- மருமகள்' படத்தில் மருமகளாக நடித்தவர். நிகழ்ச்சிக்கு வந்தால் மீடியாவெல்லாம் "மருமகள்' வேஷம் குறித்தே கேட்டு விழாவின் நோக்கத்தை திசைமாற்றுவார்கள் என்பதால் "விழாவுக்கு வர வேணாம்' என தடை போட்டுட்டாங்களாம் படக்குழுவினர்.

இலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெரிக்கா


இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக கொழும்பில் வைத்து லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முன்னரே அறிக்கைகள் வந்திருந்தன. ஆனால் இதை இலங்கை பலமாக மறுத்துவந்த நிலையில், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் இலங்கையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களைத் தொடுக்கவென ஏற்கனவே 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தயாராக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

அதோடு, மேற்படி பயிற்சி முகாம்கள் பற்றி வோஷிங்டன் கொழும்புக்கும் தகவல் கொடுத்துள்ளதாம். இந்தியா மீது தொடுக்கவுள்ள தாக்குதலில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளும் ஈடுபட்டார்கள் என்றால் அத்தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்று புதுடில்லியின் ஆய்வு எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த, பெய்க் கொழும்புக்கு 2008 இல் சென்று அங்கு லஷ்கர் ஈ-தொய்பாவைச் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் இவர் எத்தனை தடவைகள் அங்கு விஜயம் செய்தார் மற்றும் இலங்கையை பயிற்சித் தளமாக லஷ்கர் ஈ-தொய்பா பயன்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் பொருட்டு விசாரணை நடந்துவருகிறது.

மேலும், இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்கென அனுப்பப்பட்டுள்ள 200 பேரும் இதற்கெனத் தனியான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தமது நிலைப்பாட்டை நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ள அவ்வறிக்கை, நேபாளத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இந்தியாவுக்குள் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், தற்போது அவர்களின் புது இலக்காக மாலைதீவும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.

இவ்வறிக்கை இவ்வாறிருக்க, லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளித்ததில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை என்று இந்திய மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் போலீஸ் தெரிவித்துள்ளது.

எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரஜினி ரசிகர்கள்!


எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்தக் கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சிவிட்டது வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் ரசிகர்கள் மேற்கொண்ட 'முழங்கால் நடைப் பயணம்'.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளாவிய மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டியபடி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளில் முட்டி போட்டபடி நடந்தனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (18-9-10) காலை நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான ரசிகர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பின்னர் மலைக் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர் ரசிகர்கள். படத்துக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியைக் கழிக்க சிறப்பு பூஜையும் நடத்தினர்.

இதுகுறித்து சோளிங்கர் என் ரவி கூறுகையில், "உலக சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவரின் வெற்றி மகுடத்தில் கோஹினூர் வைரமாக மின்ன வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்திய சிறப்பு பூஜை இது...." என்றார்.

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா


முன்னாள் உலக அழகியும், நடிகையுமான லாரா தத்தாவை, பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

மகேஷ் பூபதி முன்பு ஸ்வேதா ஜெய்சங்கரை மணந்தார். இந்தத் திருமணம் சமீபத்தில் முறிவடைந்தது. முறைப்படி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது லாரா தத்தாவை மகேஷ் பூபதி மணக்கவுள்ளாராம்.

ஸ்வேதாவை பிரியும் முன்பாகவே லாராவுடன் மகேஷ் பூபதிக்கு காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதை பூபதியும், லாராவும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் இப்போது பூபதி விவாகரத்து செய்து கொண்டதைத் தொடர்ந்து லாராவை மணக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் வைத்து நடந்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மகேஷ் பூபதியுடன் லாரா தத்தாவும் உடன் இருந்தார்.

தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ள பூபதி திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Saturday, September 18, 2010

காஷ்மீர் கலவரம்! டெல்லியின் பொய் முகம்! -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்


பனிப்பிரதேசமும் பற்றி எரிய முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கானப் போராட்டம். கடந்த 3 மாதமாக ஸ்ரீநகர் எரிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது அரசியல்ரீதியான சிக்கலுக்குரிய இடம். அங்குதான் இப்போது போராட்டங்கள் தீவிரமாகி, அரசாங்கத்தால் கலவரம் என வர்ணிக்கப்படுகிறது.

1991-க்குப் பிறகு முழு பள்ளத்தாக்கும் சிக்கலுக்குள்ளாகியிருப்பது இப்போதுதான். அதேநேரத்தில் முதன்முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் பிரச்சினை பெரிதாக உள்ளது. காஷ்மீரின் மற்ற இரு பகுதிகளான லடாக்கிலோ ஜம்முவிலோ இதன் தாக்கம் இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களும் பெண்களும் வீதியில் இறங்கி, ராணுவத்தினர் மீதும் துணை ராணுவத்தினர் மீதும் கற்களை வீசுகிறார்கள். செருப்புகளால் அடிக்கிறார்கள். ராணுவத் துப்பாக்கிகளிலிருந்து தவறிப் பாயும் தோட்டாக்களால் ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 பேர் வரையிலான பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம், வெளிநாட்டுத் தூண்டுதல் என்கிறது மத்திய அரசு. இந்தக் காரணம் என்பது பிரச் சினையிலிருந்து மத்திய அரசு மிக சுலபமாகத் தப்பித்துக்கொள்ளக் கூடிய வழி. உண்மையில், வெளிநாட்டுத் தூண்டுதல் என்பது மிகக்குறைவான அளவிலேயே இப்பிரச்சினைக்கு காரணமாக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டின் தொடர் தோல்விகள், முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக மெகபூபாவின் பி.டி.பி.எஃப் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உமர் அப்துல்லாவை பலவீனப்படுத்த, அவரது அப்பா பரூக் அப்துல்லா தரப்பினரே செய்து வரும் வேலைகள்... இவையெல்லாம் பிரச் சினையைத் தீவிரப்படுத்தியிருக்கும் அம்சங்களாகும்.

அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் இன்று அவற்றின் கைகளிலிருந்து நழுவி, அது காஷ்மீர் இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. நியாயமான சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் கேட்டுப் போராடும் இளைஞர்களுக்கு பெண்கள் உள்ளிட்ட காஷ்மீர் பொதுமக்கள் துணை நிற்கிறார்கள். காஷ்மீர் இளைஞர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிரான கோபம்.

1989-ல் அமைந்த வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசில் தான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் பொறுப்பில் காஷ்மீர் முஸ்லிமான முஃப்டி முகமது சயீத் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு மத்திய அரசில் முக்கியமான துறை ஒன்று, காஷ்மீர் முஸ்லிமுக்கு ஒதுக்கப்பட்டது என்பது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. அரசில்தான். 1999-ல் இந்தியாவை ஆட்சி செய்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி சேர்கிறது. அவரது மகன் உமர் அப்துல்லா வெளிவிவகாரத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

இதன்பிறகு, காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிப்போம் என இந்திய அரசு முடிவெடுக்கிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வுக்கு நகர்வது என்ற அடிப்படையில் அனைத்துப் பிரிவினரும் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகியவற்றுடன், இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் உரிமை கேட்கும் காஷ்மீரின் ஹூரியத் அமைப்பையும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

முதலாவதும், மிக முக்கியமானதுமான வாக்குறுதி என்பது, காஷ்மீரில் ராணுவத்திற்கு உள்ள சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குவ தாகும். பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் அவர்களை எந்த சட்டத்தின் கீழும் தண்டிக்கமுடியாது என்பதுதான் இந்தச் சிறப்புச் சட்டம். காஷ்மீரில் ராணுவத்தினரின் செயல்பாடுகளுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் இருக்கிறது. இந்த சட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டம் நீக்கப்படும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை நம்பிய காஷ்மீர் மக்கள், 2002 தேர்தலில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவைச் செலுத்தினர். 1970-களுக்குப் பிறகு, மத்திய அரசுப் படையினரின் முறைகேடுகள் இல்லாமல் நடந்த இந்த தேர்தலில் காங்கிரஸ்-பி.டி.பி. கூட்டணி வெற்றி பெற்று காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. ஆனால், மத்திய அரசோ, தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வில்லை.





தே.ஜ.கூ. அரசு வீழ்த்தப்பட்டு மன் மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ல் பொறுப்பேற்றபோதும் காஷ்மீர் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரமுகராக இருந்தவர் அப்போது வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்த பிரணாப் முகர்ஜி. நாளாக, நாளாக ராணுவத்தின் எண்ணிக்கையை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து குறைப்போம் என்றது ஐ.மு.கூ. அரசு. ஆனால், அது நடக்க வில்லை. அரசு மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு பெட்டாலியன் ராணுவத்தை விலக்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் ஆகியவற்றின் 2 பெட்டாலியனைக் கொண்டு வந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தியது. இதனால், ஆயுதம் ஏந்திய படையினரின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களின் அதிகார எல்லை மீறல்களும் அதிகமானது.

2009 ஏப்ரலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஷோஃபியனில் படையினர் நடத்திய போலி என்கவுன்ட் டர் மற்றும் வல்லாதிக்க பாலுறவு ஆகியவற்றால் கொதிப்படைந்த காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இச்சம்பவங்கள் தொடர்பான நியாயமான நடவடிக்கைகளையோ, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையோ அரசாங்கம் எடுக்கவில்லை. அத்துடன், அரசு அளித்த 6 வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவுமில்லை.

எல்லைக்கு அப்பால் உள்ள தங்கள் உறவினர்களை ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலை வழியாகச் சென்று காஷ்மீர் மக்கள் சந்திப்பதற் காக போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத் தப்படும் என்று சொன்ன மத்திய அரசு, ஒரே ஒரு பஸ் மட்டுமே விட்டது. அதிலும் 9 பேருக்கு மேல் பயணிக்க அனுமதியில்லை. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை ஜம்மு வழியாக முழு இந்தியாவுக்கும் அனுப்பு வதைவிட, ஜம்மு-சியால்காட் பாதை வழியாக லாகூருக்கு அனுப்புவது எளிதாகவும் லாபகர மானதாகவும் இருக்கும் என்பது காஷ்மீர் மக்களின் கோரிக்கை. அழுகும் பொருட் களாக இருப்பதால், இதனை அருகிலுள்ள லாகூருக்கு அனுப்பினால் வீணாகாமல் இருக்கும் என்றனர். எல்லையைத் தாண்டிய வியாபாரம் என்பது நியாயமான கோரிக் கைதான் என்றும் அதை அனுமதிக்கப் போவதாகவும் ஒத்துக்கொண்ட மத்திய அரசு, இதுநாள்வரை ஒரு கண்டெய்ன ருக்கும் அனுமதி வழங்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் ரம்ஜானுக்கு முன்பாக பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னெடுப்பு நடைபெறும்.. இந்த வருடம், ரம்ஜான் மாதத்தில் பேச்சுவார்த்தைக்கான எந்த முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. வழக்கமான பாவ னைகூட இல்லையே என்ற கோபம் காஷ்மீர் மக்களிடம் வந்துவிட்டது. இதனால் பள்ளத்தாக்குப் பகுதி போராட்டத்தால் எரியத் தொடங்கியது. காஷ்மீர் பற்றி எரிந்து உயிர்பலிகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையிலும் ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவில்லை.

மிகத் தாமதமாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய குழுவை அனுப்பும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ராணுவ சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் பொய் முகம்தான் வெளிப்பட்டது.

ராணுவத்தின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக 2004-ல் ஒரு கமிட்டி ஜெனரல் வி.ஆர்.ராகவன், பத்திரிகையாளர் சஞ்சய் அசாரிகா ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி 2006-ன் தொடக்கத்திலேயே, சிறப்பு அதிகாரத்தை நீக்க வேண்டியது ஏன் என்பதை வலியுறுத்தி ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. சிறப்பு அதிகாரமே தேவை யில்லை என்றும், இதுதான் தேவை என்று அரசு கருதினால் அந்த அதிகாரத்தின் வீச்சையும் தாக்கத்தையும் குறைக்கவாவது ஆரம்பிக்கவேண்டும் என்கிறது அந்த ரிப்போர்ட். ஆனால், தான் அமைத்த கமிட்டியின் அறிக்கையின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்தியாவில் எங்கெல்லாம் மக்களின் அரசியல் ரீதியான உரிமைகளுக்கான போராட்டங்கள் வேகம் பெறுகிறதோ, அங்கே மத்திய அரசின் பார்வை பிரச்சினையைத் தீர்ப்பதைவிட சமாளிப்பதில்தான் உள்ளது. Interest in conflict management. But, not conflict resolution. பிரச்சினைக்குரிய இடங்களில், சகஜ நிலைமைக்குத் திரும்புதல் (Restoration of normalcy) என்ற வார்த்தை மட்டுமே அரசுத் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. சகஜ நிலை என்பது கல்வீச்சும் செருப்படியும் நிற்பதால் உருவாகும் சூழல் அல்ல. உரிமைகளுடன் கூடிய அரசியல் அதிகாரத் தையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில்தான் உள்ளது. ஆனால், இந்திய அரசைப் பொறுத்தவரை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் சகஜநிலைக்குத் திரும்புதல் என்று போராட்டத்தை ராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அது நிரந்தரத் தீர்வாகாது.

டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் உள்ள அரசியல் தட்பவெப்ப நிலைக்கேற்றபடியே இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரைக் கையாளுகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் காஷ்மீர் மக்கள். செப்டம்பர் 18-ந் தேதி ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத்தேர்தல் நடை பெறுகிறது. இதற்கு முன் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் கர்சாய் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றார். 18-ந் தேதி யாருடைய விருப்பம் அதிகளவில் வெற்றி என்ற போர் இந்தியா-பாகிஸ் தானிடையே உச்சகட்டத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாக பலுசிஸ்தானில் இந்தியாவும் காஷ்மீரில் பாகிஸ்தானும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆட்டங்களை விட, காஷ்மீர் மக்கள் உரிமைகளில் கவனம் செலுத்துவதே முக்கிய மானது.

அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி, பேச்சுவார்த்தைகளைத் தயங்காமல் அதைத் தொடரவேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளும் அதனையொட்டிய போராட்டங்களும் தொடரவே செய்யும்.

""அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!'' - வைகோ!



""ஒரு சிறிய அமைப்பை நடத்துவதற்கு நாங்கள் எத்தனை கஷ்டப்படுகிறோம்?''

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவை திறந்தவெளி ம.தி.மு.க. மாநாடாக காஞ்சிபுரத்தில் நடத்திய வைகோ வெளிப்படையாகவே வேதனையைக் கொட்டிவிட்டார். ""அண்ணா பிறந்த மண்ணில் சத்திய வார்த்தை மட்டுமே பேசுவேன். என் பின்னால் வந்தால் துன்பங்களையும், துயரங்களையும் தாங்க வேண்டியிருக்கும். எதுவும் கிடைக்காது'' என குமுறிவிட்டார்.

வைகோவின் இந்த வேதனை பின்னணியை ஆய்ந்தறிந்து நம்மிடம் பேசினார் அக்கட்சியின் சீனியர் ஒருவர்-

""ம.தி.மு.க. ஆரம்பிச்சப்ப இவரை நம்பி நெறயப் பேரு வந்தாங்க. அப்ப இருந்த மொழிப் போர் தியாகி அண்ணன் எல்.ஜி.இப்ப இந்த மேடைல இல்ல. தொண்டர்களோடு தொண்டராக வாழும் செஞ்சியார் மேடையில இல்ல. மிசா காலத்துலயும் அத்தனை நெஞ்சுரத்துடன் இருந்த கண்ணப்பனும் இல்ல. கலைஞரோ, நாவலரோ, எம்.ஜி.ஆரோ, எஸ்.எஸ்.ஆரோ அத்தனை பேரையும் அனுசரிச்சு கட்சி நடத்திய அண்ணா எங்கே? அத்தனை சீனியர்களையும் கொத் தாக விரட்டி விட்டு தனக்கு "ஆமாம்' போடறவங்கள மட்டுமே கட்சில வச்சி ருக்குற வைகோ எங்கே? பல மாவட் டங்கள்ல கட்சியே கரைஞ்சு ஒண்ணுமில் லாமப் போச்சு. இந்த மாநாடு எதுக்கு? அங்கீ காரத்தையும் இழந்து நிற்கிற ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. தலைமை எத்தனை சீட்டு கொடுக்குமோங்குற பரிதவிப்பு. என் பின் னாலயும் ஒரு கூட்டம் இருக்குன்னு காட்டு னாத்தான் அங்க மரியாதை. இன்னொரு கட்சித் தலைவிய திருப்திப் படுத்த மாநாடு நடத்துற ஒரே தலைவன் எங்க வைகோதான். பிறகு, மனு ஷன் புலம்பத்தானே செய் வாரு...'' என்றார் நிதர் சனத்தை.

"வாழும் அண்ணா' என வைகோவை சித்தரிக்க மெனக்கெட்ட அந்த மாநாட்டு மேடையில் கலைஞரையும், அவரது குடும்பத்தையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் கட்டுப்பாடே இல்லாமல் திட்டித் தீர்த்தார்கள். அமர ராகிவிட்ட முரசொலி மாறனையும் கூட வசை பாடத் தவறவில்லை. கண் ணியம் இழந்த இந்த பேச்சு களை ஜெ. ஸ்டைலில் ரசித்துச் சிரித்தார் வைகோ. ""அண்ணாவுக்குப் பின் வைகோதான்'' என சந்தடி சாக்கில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வைகோவை மல்லை சத்யா முன்னிறுத்திப் பேசியபோது முகத்தில் இறுக்கம் காட்டினார் ஜெ. தூதராக வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ""அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றும் இடத்துக்கு ஒருநாள் ம.தி.மு.க. வரும்'' என்று முதலமைச்சர் நாற்காலியை வைகோவும் குறிவைத்துப் பேசிய போது ரொம்பவே நெளிந்தார் ஜெயக்குமார்.


அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வது, மாநில சுய ஆட்சியை வலியுறுத்துவது, ராஜ பக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமிழீழத்தை வென்றெடுப்பது என மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது இம் மாநாடு.

வைகோ ராசியோ என்னவோ, அவர் மைக் பிடித்த போது வானமே அதிர வெடி போட்டு அவரை டென்ஷன் ஆக்கி னார்கள். "பேச்சைத் தொடங்கும்போதே தடங்கலா?' என வைகோ முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடிக்க... பதறி னார்கள் மேடையிலிருந்தவர்கள். அந்தக் கோபத்துடனே பேச எழுந்தவர், வழக்கம் போல யுவான் சுவாங்கிலிருந்து ஆரம்பித்து, ""கொடும்பழி சுமத்தப்பட்டு தி.மு.க.விலிருந்து தூக்கி எறியப்பட்டேன்...'' என்ற பழைய பல்லவியையே பாடி, ""எனக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்று கலைஞரே என்னிடத்தில் சொன் னார்'' என புதிய தகவல் ஒன்றை எடுத்துவிட்டு, ""நாள்தோறும் நான் தவறாமல் படிப்பேன் முரசொலி. அதில் "அறியாமையில் அரற்றுகிறார் அம்மையார்' என ஜெயலலிதாவை விமர்சித்து கலைஞர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். 100 வயது வரை கலைஞர் நலமுடன் வாழவேண்டும்'' என தன்னையுமறியாமல் வாழ்த்திவிட்டு, ""கலைஞ ருக்கு கொள்கைக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன்'' என்று வாய் கொள்ளாச் சிரிப்பு ஒன்றை உதிர்க்க... "ஒரு மணி நேரம் கடந்தும் இத்தனை இழுவையாகப் பேசிக் கொண்டேயிருக்கிறாரே...' என கூட்டம் கலைய... ""நான் பேச்சை முடிக்கப் போவதில்லை. இப்போது தான் பேசவே ஆரம்பித்திருக்கிறேன். இனிமேல் தான் பேசவே போகிறேன்...'' என்று மோடி மஸ்தான் பாணியில் "இடையில் யாரும் எழுந்து செல்லக்கூடாது' என கண்டிப்புடன் எச்சரித்தார்.

தலைவரின் கோபமறிந்து, எழுந்த கூட்டத்தை நோக்கி பிரம்பை நீட்டி ஆங்காங்கே அமர வைத் தது ம.தி.மு.க. தொண்டரணி. சொன்னது போலவே உற்சாகத் துள்ளலுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார் வைகோ. ""யாரைப் பார்த்தாலும் பேசாமல் விட மாட்டேன். இது என்னோட குணம். ஸ்டண்ட் பார்ட்டிக இத்தனை பேரு எம்.ஜி.ஆருக்கு பக்கத்துல இருந்தும் எப்படிச் சுட விட்டீங்கன்னு அவங்ககிட்டயே கேட்டேன். அண்ணா இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது எனக்குச் சரியான தலைவலி. நியூஸ் பேப்பரை விரிச்சுத் தரையில படுத்துக்கிடந்தேன். அண்ணா செத்துட்டதாச் சொன்னாங்க. இதைக் கேட்டதும் எஸ்.எஸ்.ஆரு கூப்பாடு போட்டாரு, சிவாஜி வந்தாரு. கதறி அழுதாரு. அப்புறம் மூக்கைச் சிந்திக்கிட்டேயிருந் தாரு. எம்.ஜி.ஆரு அங்கயே மயங்கி விழுந்தாரு'' என அழுவது போல் முகபாவனை காட்டி வைகோ சீரியஸாகப் பேச... கூட்டத்தில் ஒரு பகுதி விசி லடித்து, கைதட்டி அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஒருவர் பொறுக்க முடியாமல் பத்திரி கையாளர் பகுதிக்கே வந்து, கை தட்டியபடியே இருந்தார். ஆனாலும் பேச்சைத் தொடர்ந்த வைகோ உமர்முக்தார் சினிமாவில் தனக்குப் பிடித்த காட்சிகள், லிபியாவின் விடுதலை, ரானடேயின் தியாகம், கோவா போராட்ட வரலாறு, போர்ச்சுக லின் அட்டூழியம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி ட்ரைபஸ், எமிலி ஜோலா, தொல்காப்பிய சூத்திரம், மகேந்திர பல்லவன், சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி, ஹர்ஷ வர்த்தனன், நரசிம்ம பரஞ்சோதி, ஜான் எஃப்.கென்னடி, போப் ஆண்டவர், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் என வாழ்நாளில் தான் அறிந்து வைத்திருந்த அத்தனையையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க... "இவரு பேச ஆரம்பிச்சு 2 மணி நேரம் ஆச்சு...' என வேகமாக கலைய ஆரம்பித் தது கூட்டம். ஆனாலும், இன்னொரு வரலா றைச் சொல்லி ""அவனுக்கு பைத்தியம் பிடிக்கிற நிலை ஏற்பட்டது. அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டான். தான் பைத்தியக்காரனாகி விடக்கூடாது என்று ரொம்பவே கவலைப்பட் டான்'' என்று கூட்டத்தின் மனநிலையை அறியாமல் பேசி ஒரு இடைவெளி விட, மொத்த கூட்டமும் எழுந்து நின்றது. பிறகு ஒரு வழியாக ""என் பேச்சைக் கேட்க இவ்வளவு நேரம் ஒதுக்கித் தந்திருக்கின்றீர்கள்'' என தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டே ஓய்ந்தார் வைகோ.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ராம்குமார்

""அரசியலுக்கு லாயக்கு இல்லை''
-தொண்டர்களின் கருத்து!



"மற்ற கட்சிகளைப்போல தொண்டர்களை மாநாட்டுக்கு அழைக்க திட்டமிடவுமில்லை. நிதி ஒதுக்கவுமில்லை' என குறைபட்டுக் கொண்டாலும், வியாபாரிகள், செல்வந்தர்கள், பெரிய கம்பெனி களிடம் வசூலித்தே மாநிலம் முழு வதிலுமிருந்து ஓரளவு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்கள் பொறுப்பாளர் கள். அப்படி வந்திருந்த தொண் டர்களின் கருத்தறிய பேச்சுக் கொடுத்தோம்.



தென்னரசு என்பவர், ""இந்தக் கூட்டமே போதும். அம்மா 50 சீட் தருவாங்க. ஒரு 35 இடத்துல ஜெயிப்போம். அப்புறம் தானா கட்சி வளரும். மத்த தலைவர்கள் மாதிரி முதலமைச்சர் ஆகணுங்குற ஆசை வைகோவுக்கு இல்ல'' என்றார்.


அறுபதைக் கடந்து விட்ட காவேரி, ""வடபழனியிலிருந்து கூட்டி வந்திருக்காங்க. என் கூட வந்தவங்க இன்னும் ஏழு பேரு இருக்காங்க. நாங்க எந்த கட்சியுமில்ல. சும்மா வந்தோம். வேணும்னா சமூக சேவகின்னு போட்டுக்கங்க...'' என்று சிரித்தார்.


""திருநெல்வேலில கட்டிட சென்டரிங் வேலை பார்க்கிறேன். நிஜாம் கூட்டியாந்தாரு. நான் கட்சி கிடையாது. வைகோ பிடிக்கும். ஆனா, கலைஞர் அளவுக்கு வைகோவுக்கு "நாலெஜ்' இல்ல'' என்றார் இளைஞரான சம்பத்குமார்.


""பணம் செலவழிச்சு கட்சி நடத்த முடியவில்லை. எத்தனை காலத்துக்குத்தான் கைக்காசைச் செலவழிச்சுக்கிட்டு இருப்பான் தொண்டன். வைகோ அரசியலுக்கு லாயக்கில்ல. அதான் கட்சில உறுப்பினர்கள் குறைஞ்சு கிட்டே போறாங்க. தலைவர்களும் வெளியேறிகிட்டே இருக் காங்க. நாஞ்சொல்லுறது நெஜம். அதான், மாநாட் டுக் கூட்டம் எட்டா யிரத்தைக்கூட தாண்டலை'' என்று கவலைப்பட்டார் பாண்டியன்.

ஆசியாவின் அதிசயம்!


அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை வருடம் முழுவதும் விமரிசையாக கொண்டாடியது தமிழக அரசு. இதன் நிறைவு விழாவாகவும் அண்ணா நூற்றாண்டின் பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் நினைவுகூரும் வகையிலும் கோட்டூர்புரத்தில் எட்டு அடுக்கு மாளிகையாக மிக பிரமாண்டமான வடிவத்தில் உயர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் கலைஞர்.

பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் சரியாக மாலை 5 மணிக்கு விழாவிற்கு வந்த கலைஞர், நூலக கட்டிடத்தின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைத்தார். கம்பீரமாக சம்மணம் போட்டு அமர்ந்து புத்தகம் படிக்கும் அண்ணாவின் சிலை அது. அந்த சிலையையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கலை ஞர், அந்த சமயத்தில் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தார்.

""இந்தச் சிலையில் புத்தகத்தை அண்ணா படிக்கும்போது அவரது முகத்திற்கும் புத்தகத்திற்குமான இடைவெளி சரியாக இருக்கிறதா என்று கலைஞர் கவனித்தார். இதற்காக, 2, 3 முறை திருத்தம் செய்து சரி பார்த்தார் கலைஞர்'' என்கின்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விழாவில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர், ""இந்தியாவின் நூலகத்துறையை ஒழுங்குபடுத்தி செம்மைப்படுத்திய பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. நூலகம் குறித்து அண்ணா கண்ட கனவை இன்று நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். தெற்காசியாவிலேயே இப்படி ஒரு நூலகம் பார்த்திருக்க முடியாது. ஆசியாவின் அதிசயம் இது'' என்றார்.






சிறப்புரையாற்றிய கலைஞர், தமிழகத்தின் வீதிகள்தோறும் வீடுகள்தோறும் நூலகம் இருக்க வேண்டும் என்று அண்ணா ஆசைப்பட்டதையும், மருத்துவ மனையில் அட்மிட் ஆனபோதும் புத்தகமும் கையுமாகவே அண்ணா இருந்ததையும் நினைவுகூர்ந்தவர், ""அண்ணாவின் நினைவாக நாம் உருவாக்கியிருக்கிற இந்த நூலக எழில் மாளிகை, தம்பி தென்னரசு வின் உழைப்பால், முயற்சியால் உருவாக்கப்பட்டி ருக்கிறது. யாரிடத்தில் எந்த காரியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிந்தித்து ஒப்படைக்க நினைக்கும் போது, எனக்கு நினைவு வருபவர் தென்னரசுவின் அப்பா தங்கபாண்டியன்தான். மாவட்ட செயலாளர்களிலேயே இதுபோன்ற காரியங்களை விரைந்து, வியந்து போற்றும் வண்ணம் படைக்கும் படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் தங்கபாண்டியன். அந்த தங்கபாண்டியன் பெற்ற தங்கம் தென்னரசுவை, என் சார்பாகவும் பேராசிரியர் சார்பாகவும் இந்த நூலகத்திற்கு வந்து போவோர்களின் சார்பாகவும் அவரை வாழ்த்து கிறேன்'' என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

அண்ணா நூற்றாண்டு நினைவுகளை போற்றும்வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு 5 நாளும் முட்டை வழங்குதல், அரசு துறைகள், அரசு சார்புள்ள துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளை செய்தார் கலைஞர்.

விழாவிற்கு திரண்ட கூட்டத்தினர் நூலகக் கட்டிடத்தை வியந்து பார்த்ததுடன், ""சென்னைக்கு அடையாளமாக அண்ணா மேம்பாலம், எல்.ஐ.சி., சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இனி, இந்த நூலகம்தான் சென்னையின் அடையாளம்'' என்று விவாதித்துக்கொண்டே கலைந்துசென்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, ""புதிய தலைமைச் செயலகம், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய மூன்றும் தான் எனது கனவு'' என்றார் கலைஞர். அந்த மூன்றையும் நிறைவேற்றிவிட்டார் மன நிறைவோடு.

சிறப்பம்சம்!

180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.75 லட்சம் சதுர அடியில் 8 தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது நூலகம். அனைத்து தளங்களும் ஏ.சி. வசதி செய்யப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது நூலகம்.

ஆய்வாளர்கள் இங்கே தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக அறைகளும் நூலகத்தில் உண்டு. 12 லட்சம் நூல்கள் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. முதல் கட்டமாக 5 லட்சம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, சமூகம், மருத்துவம், பொறியியல், அரசியல், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட 408 தலைப்புகளில் நூல்கள் பகுக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. உல கெங்கிலுமுள்ள முன்னணி பதிப்பாளர்களிட மிருந்து தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள் அனைத்திலும் நூல்களை வாங்கியுள்ளது தமிழக அரசு. பார்வை குறையுள்ளவர்களுக்காக பிரெய்லி நூல்களும் ஒளி நூல்களும் தொகுக்கப் பட்டுள்ளன.

நூல்கள் தவிர அரசு ஆவணங்களும் தொகுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்ப தற்கு ஏற்ற வகையில் 15,000 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்கான நூல் பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்காக மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், குறுந் தகடுகள் உள்ளன. நூலகத்தின் அனைத்து பயன்பாடுகளும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் கணினி மயமாக்கப் பட்டிருப்பது சிறப்பு.

கருத்தரங்கம், கூட்ட அரங்கம், கலையரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகியவை தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1250 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து படிக்கும் வசதி, 1026 இரு சக்கர வாகனங்கள், 500-க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்தும் பார்க்கிங் வசதி ஆகியவை கொண்டிருக்கிறது நூலகம். நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் அறிவை தருதல், எதிர்கால சந்ததியினரின் படைப்புத் திறனை நிலைநிறுத்தல், உடன் கால ஆய்வை வளர்த்தல், நூலக சேவையை பெருக்குதல், இந்தியாவிலும் வெளிநாடு களிலும் நூலகங்களுடன் இணைந்து பன் னாட்டு பண்பாட்டை உருவாக்குதல், பன் னாட்டு நூலக சங்கங்களுடனும் உலக அமைப்பு களுடனும் இணைந்து தமிழ்மொழி நூல்களின் பெருமைகளை உலக அளவில் எடுத்துச் செல்வது உள்ளிட்டவைகள் இந்த நூலகத்தின் செயல்பாடுகளாக வரையறுக்கப் பட்டுள்ளது.

மந்திரி கல்லூரிகளில் கெடுபிடி!




""ஹலோ தலைவரே... அரசாங்கம் அறிவித்த திட்டங்கள் மேலே அமைச்சர்களுக்கே நம்பிக்கையில்லாம இருக்குது.''

""என்னப்பா சொல்றே... அவங்கதானே திட்டங்களை நிறைவேற்ற வேண்டியவங்க.''

""ஒரு குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையில் பட்டதாரியாகிற மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்படும் இன்ஜினியரிங் சீட்டுக்கான 20ஆயிரம் ரூபாய் டியூஷன் ஃபீஸை அரசே ஏத்துக்கும்னு அறிவிக்கப்பட்டதால, பல குடும்பங்களும் சந்தோஷப்பட்டது. அதனால, 61 ஆயிரம் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இந்த வருஷம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்திருக்காங்க.''

""அத்தனை குடும்பங்களிலும் தலை முறை தலைமுறைக்கும் விளக்கேற்றி வைக்கப்படுமே!''

""அந்த நம்பிக்கைதான் பெற்றோர்களுக்கு இருந்தது. ஆனா, இதுவரை இந்த மாணவர்களுக்கான டியூஷன் ஃபீஸை சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அரசுத்தரப்பிலிருந்து அனுப்பி வைக்கலையாம். அதாவது, மொத்தமா 122 கோடி ரூபாய். இந்த தொகை வருமோ வராதோங்கிற பயத்தில் இருக்கும் கல்லூரி நிர்வாகங்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் இப்ப நீங்க பணத்தைக் கட்டுங்க, அரசாங்கம் பணம் கொடுத்துச்சுன்னா திருப்பித் தந்திடுறோம்னு சொல்லுதாம். அதிலும் அமைச்சர்கள் நடத்துற இன்ஜினியரிங் காலேஜ்களில் இந்த நெருக்கடி அதிகமா இருப்பதால, அரசுத் திட்டத்தை நம்பி படிக்க வந்த மாணவர்களும் அவங்களோட பெற்றோரும் பணத்துக்கு பரிதவிக்கிறாங்க. அரசாங்கம் உடனடியா இதுபற்றி ஒரு முடிவெடுக்காவிட்டால் 61 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலமும் அவங்க குடும்பத்தோட நம்பிக்கையும் வீணாப்போயிடும்.''

""கல்லூரிகளில் இந்த நிலைமைன்னா, தனியார் பள்ளிக்கூட நிலைமை இன்னும் மோசம். நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத் திற்கு ஹைகோர்ட் இடைக்காலத் தடை விதிச்சதால, ஏற்கனவே வாங்கிக்கிட்டிருந்த கூடுதல் கட்டணத்தோடு இன்னும் கூடுதலா கட்டணம் வசூலிக்கிற நிலைமை தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்குது. கால்பரீட்சை நேரத்தில், கட்டண கெடுபிடி செய்வதால பெற்றோர் பலரும் பள்ளி நிர்வாகத்தோடு முட்டி மோத முடியாம, கடனை வாங்கி கட்டணத்தைக் கட்டிக் கிட்டிருக்காங்க.''

""இந்த விவகாரம் பற்றி விசாரித்தேங்க தலைவரே... தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து எத்தனை வகுப்புகள், எவ்வளவு ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் எப்படி என்பதையெல்லாம் கேட்ட நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, அதனடிப்படையில் மே 17-ந் தேதியன்னைக்கு புதிய கல்விக்கட்டணத் தை நிர்ணயித்தது. இதில் உடன்பாடு இல்லைன்னு எந்தப் பள்ளியாவது நினைத்தால் உடனடியா அப்பீலையும் அப்ஜெக்ஷனையும் ஃபைல் பண்ணலாம்னும், 30 நாட்களுக்குள் இதை விசாரித்து முடிவு சொல்லப்படும்னும் கமிட்டி தெரிவித்திருந்தது. கமிட்டியின் சட்டவிதிகளும் இதைத்தான் சொல்லுது. இதன்படி, பல பள்ளிகள் அப்பீல் செய்தன. ஆனா, நீதிபதியோ மே 17-ந் தேதி அறிவித்த கட்டணமே தொடரும்னு அறிவித்துவிட்டு, சொந்தப் பயணமா அமெரிக்கா போயிட்டாராம். 30 நாளில் மனுக்களை விசாரிக்கணும்னு சட்டம் இருக்கும்போது, அது கடைப்பிடிக்கப்படலைன்னு ஹைகோர்ட்டில் தனியார் பள்ளிகள் தரப்பு வாதத்தை வைக்க, இந்த டெக்னிக்கல் பாயிண்ட்டால் , கமிட்டி நிர்ணயித்த கட்டணத்திற்கு ஹைகோர்ட் நீதிபதி வாசுகி இடைக்காலத் தடை கொடுத்திட்டார். தடை யுத்தரவு போட்ட வேகத்திலேயே தனியார் பள்ளி களில் வசூல் வேட்டையை ஆரம்பிச்சி, பணத்தை வாங்கிட்டு வான்னு பிள்ளைகளை பெற்றோர் கிட்டே விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.''

""கொடுத்திருப்பது இடைக்காலத் தடைதான். இறுதித் தீர்ப்புக்கான விசாரணை நவம்பர் 29-ந் தேதி நடக்கும்னு கோர்ட் அறிவித்திருக்குது. ஆனா, அரசியல்வாதிகள் நடத்துற பல பள்ளிக்கூடங்களில், ஸ்டேன்னா ஸ்டேதான். சொல்ற கட்டணத்தைக் கட்டுங்க. இல்லேன்னா உங்ககிட்டே இருக்கிற காசுக்கு தகுந்ததடி கவர்மென்ட் ஸ்கூலிலே போய் சேர்த்துக்குங்கன்னு மாணவர்களையும் பெற்றோரையும் விரட்டுறாங்கப்பா.''

""சரஸ்வதியை வச்சி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சிட்டா இப்படித்தான் நடக்குங்க தலைவரே.. நான் அரசியல் மேட்டருக்கு வர்றேன். கொடநாட்டில் ஜெ.வை பிரேமலதா சந்திச்சதா பரபரப்பு தகவல் வெளியானதைப் பற்றி விசாரித் தேன். யாரோ கொளுத்திப் போட்ட வதந்திதானாம். அதே நேரத்தில் டெல்லிக்கு விஜய காந்த்தும் பிரேமலதாவும் போயிட்டு வந்திருக்காங்க. போறதுக்கு முன்னாடியே, காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வேணும்னு கேட்டிருந்தாங்களாம். டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த விஜயகாந்த் தம்பதியை காங்கிரஸ் தரப்பிலிருந்து 2பேர் வந்து சந்திச்சிருக்காங்க.''

""என்ன பேசினாங்களாம்?''

""காங்கிரஸ் தரப்பிடம் விஜயகாந்த், தே.மு.தி.கவும் காங்கிரசும் தனி அணி அமைக்கலாம். இந்த மூன்றாவது அணிக்கு நான்தான் தலைவர். முதல்வர் கேன்டிடேட்டும் நான்தான். உங்க முடிவைக் கேட்கத்தான் வந்திருக்கேன். இப்ப நான் தனித்து நிற்பதுபோல நிற்கிற வரைக்கும்தான் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமா இருக்கும். நான் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் அந்த அணிதான் ஜெயிக்கும். அதனால, நாம தனி அணி அமைக்கலாம்னு சொன்ன விஜயகாந்த் சில கண்டிஷன்களையும் போட்டிருக்கிறார்.''

""அகமது பட்டேல் அப்பாயிண்ட்மென்ட்?''

""அவரே விஜயகாந்த்கிட்டே போனில் பேசியிருக் கிறார். என்னால் உங்களை சந்திக்க முடியலை. ஏன் முடியலைங்கிறதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உங்ககிட்டே நேரில் சொல்லுவார்னு சொல்லி யிருக்காரு. விஜயகாந்த்தை சந்திச்ச ஷீலாதீட்சித், உங்களை அவர் சந்தித்தால் தி.மு.க சந்தேகப்படும். நீங்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிற விஷயம் டி.ஆர்.பாலுவுக்குத் தெரிஞ்சு, அவர் இது பற்றி விசாரித்திருக்கிறார். அவர்கிட்டே, உங்களை பார்க் கிற ஐடியா இல்லைன்னு அகமது பட்டேல் சொல்லிட்டார். இதுதான் நிலைமை. நீங்க தனித்தே போட்டியிடுறது பற்றி யோசிங்க. நாங்க உங்களுக்குத் தேவை யான சப்போர்ட்டை செய்றோம்னு சொன்னாராம்.''

""சென்னை உள்பட தமிழ்நாடு முழுக்க ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை செப்டம்பர் 16-ந் தேதியன்னைக்கு தூள் பரத்தியிருக்காங்களே..''

""எல்லா இடத்திலும் பேனர் இருக்கணும்னு கார்த்தி சிதம்பரம் சொல்லியிருந்த படி ப.சியின் ஆதரவாளர்கள் செயல் பட்டிருந் தாங்க. இதில் கராத்தே தியாகராஜன் தென் சென்னையில் 1 லட்சம் வீடுகளுக்கு நேரில் போய் மரக்கன்று கொடுத்ததை போட்டி கோஷ்டி களும்கூட பாராட்டுது. அதே நேரத்தில், ப.சி தரப்பின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் புறக்கணித்த வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நவம்பர் 19-ந் தேதி இந்திராகாந்தி பிறந்தநாளில் திருச்சிக்கு வரும் ராகுல்காந்தியை வரவேற்பதிலிருந்து நிகழ்ச்சிகளை சிறப்பா நடத்துறது வரைக்கும் சத்தியமூர்த்தி பவனில் உட்கார்ந்து ஆலோசனை நடத்திக்கிட்டிருந்தார்.''

""அக்டோபர் 9-ந் தேதி திருச்சிக்கு சோனியா வர்றாரே?''

""அது திருநாவுக்கரசரின் இணைப்பு விழா. அதன் பின்னணியில் இருப்பவர் ப.சி. அதனால்தான் சோனியா கூட்டத்தை ராகுல் கூட்டம் மிஞ்சணும்னு வாசன் தரப்பு செயல்படுது. தலைவரே... அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதியன்னைக்குத்தான் கலைஞர்-தயாளு அம்மா திருமண நாள். சென்னையில் இருந்த மந்திரிகளும் சீனியர் கட்சிக்காரர்களும் கலைஞரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி னாங்க.''

""ஊழல் நெருங்க முடியாத- அரசியல் உணர்வுகளுக்கு ஆட்படாதவர் என்று பெயரெ டுத்த உமா சங்கர் ஐ.ஏ.எஸ்., சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்தாகி, டான்சி எம்.டியா பொறுப்பேற்றிருக்கிறார். தனக்காக குரல் கொடுத்த ஜெ.வை சந்தித்து நன்றி சொல்வதில் தயக்கமில்லைன்னு பேட்டி கொடுத்த உமாசங்கர், தன் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்குப் போற வழியில் சங்கரன்கோவில் சமூகநலக்கூடத்தில் அவரது சமுதாயத்தினர் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசினார். தேர்தல் வரப்போகுது. ஓட்டுக்காகப் பணம் தருவாங்க. மக்களாகிய உங்களோட வரிப்பணம்தான் அது. தயங்காம வாங்கிக்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வையுங்கன்னு சொன்னார். அங்கே திரண்டிருந்த அ.தி.மு.க.காரங்க, உமாசங்கரின் அரசியல் கலந்த பேச்சுக்கு பலமா கைதட்டினாங்க.''

மிஸ்டுகால்!



காமன்வெல்த் போட்டிகள் நெருங்கும் நேரத்தில், பாபர் மசூதி-ராமஜென்மபூமி சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை வெளியிடாமல் தள்ளிவைக்கலாம் என கோரப்பட்டதற்கு, வழக்கை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரில் ஒருவர் 30-ந் தேதி ரிடையர்டாவதால் 24-ந் தேதி தீர்ப்பு தந்தாக வேண்டிய நிலைமை இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காமன்வெல்த் போட்டி நடைபெறவுள்ள டெல்லியிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை விடுத்த எச்சரிக்கையால் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.


பழைய தலைமைச் செயலகத்திலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர், தலைமைச்செயலாளர் அலுவலகங்கள் செப்டம்பர் 15-ந் தேதியன்று மாறுவதாக இருந்தது. மற்ற அமைச்சர்களின் அலுவலகங்கள் பற்றி முதல்வர் விசாரிக்க, அது ரெடியாக தாமதமாகும் என்றதும், நான் மட்டும் அங்கு போய் என்னவாகப் போகிறது என்ற முதல்வர், எல்லா அலுவலகங்களும் தயாரானதும் இடமாற்றம் செய்யச் சொல்லிவிட்டாராம். நவம்பரில் தீபாவளி முடிந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கவிருப்பதால் அக்டோபர் இறுதியில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான அலுவலகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்படவிருக்கின்றன.


போச்சம்பள்ளி தனியார் பள்ளி வாசலில் ஒரு மாணவனின் உயிரைப் பலி வாங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதைக் கண்டித்து தமிழகத் தில் உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளும் வெள்ளியன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னறிவிப்பின்றி பள்ளிகளை மூடுவது சட்டவிரோதம் என்பதால் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் மூலமாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிக்கச் செய்தது அரசு. எந்தெந்தப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்பதைக் கணக்கெடுப்புச் செய்யும் பணியில் அரசு இயந்திரம் இறங்கியதையடுத்து, புதன் இரவு முதல் பல தனியார் பள்ளிகள் தங்களின் போராட்ட முடிவிலிருந்து பின்வாங்கத் தொடங்கின