இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.
மக்கள் நலனை யோசித்த மந்திரி
ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.
நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்
இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.

அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்


தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.