Tuesday, September 7, 2010

2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கலாநிதி. கலாநிதி மாறன் பெற்ற சம்பளம் ரூ. 37.08 கோடியாகும்


அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் வரிசையில், சன்டிவி தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோரை சத்தமின்றி முந்தியுள்ளார் ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர் குழும துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான நவீன் ஜின்டால்.

நடப்பு நிதியாண்டில் தலைமை செயலதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சம்பளம் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் 25 முன்னணி தொழிலதிபர்களின் சம்பளம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

சிஇஓக்கள் எனப்படும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளமாக, ஒட்டுமொத்த லாபத்தில் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஇஓக்களுக்கு பெருமளவில் சம்பளம் தருவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் முன்பு கூறியிருந்தார். இருப்பினும் நாட்டின் முன்னணி சிஇஓக்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வை அவர்களது நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 25 முன்னணி சிஓஓக்களுக்கும் கிட்டத்தட்ட ரூ. 442 கோடியை சம்பளமாக மட்டும் வழங்கியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், அந்த நிறுவனங்களின் மொத்த லாப அளவு 6 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பொருளாதார சீர்குலைவுக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிஇஓக்களுக்கு கணிசமான உயர்வை அவர்களின் நிறுவனங்கள் வழஹ்கியுள்ளன. இவர்களில் பாதிப்பேர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவர்.

நவீன் ஜின்டால் முதலிடம்:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 வயதாகும் இளம் எம்.பியான நவீன் ஜின்டால் 2009-10ம் ஆண்டில் சம்பளம், இதர சலுகைகள் போக ரூ. 39.7 கோடியை கமிஷன் என்ற பெயரில் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டு சம்பளம் உள்பட மொத்தமாக பெற்றதொகை எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அவர் அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 48.6 கோடியைப் பெற்றார் என்பதால், அதை விட அதிகமாகவே கடந்த ஆண்டு அவர் பெற்றிருப்பார் என்பது உறுதி.

2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கலாநிதி:

கலாநிதி மாறன் பெற்ற சம்பளம் ரூ. 37.08 கோடியாகும். அவரது மனைவி காவேரி மாறனும் இதேதொகையை ஊதியமாக பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கலாநிதி மாறன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். அவருக்கு முன்பு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருந்து வந்தார்.

முகேஷ் அம்பானி ரூ. 15 கோடி மட்டுமே:

2007-08ம் ஆண்டில் ரூ. 44 கோடி சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக தரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட முகேஷ், ஆண்டுக்கு ரூ. 15 கோடியை மட்டுமே தற்போது சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது 3வது இடத்தில் ஹீரோ ஹோண்டா சிஇஓ பவன் முஞ்சால் இருக்கிறார். அவர் பெற்ற சம்பளம் ரூ. 30.88 கோடியாகும்.

மெட்ராஸ் சிமென்ட்ஸின் பி.ஆர்.ஆர் ராஜா பெற்ற சம்பளம் ரூ. 27.91கோடியாகும்.

யுவராஜ் சிங்கை தீவிரமாக காதலித்த இந்தி நடிகை கிம் சர்மா...கென்ய தொழிலதிபரை திருமணம் செய்தார்


இந்தி நடிகை கிம் சர்மா திடீரென கல்யாணம் செய்து கொண்டுள்ளார். கென்ய சேர்ந்த தொழிலதிபரை அவர் மணந்துள்ளார்.

கென்யாவின் மொம்பாஸா நகரில் இந்த கல்யாணம் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றதாக தெரிகிறது. கிம் சர்மா மணந்துள்ள தொழிலதிபரின் பெயர் அலி புஞ்சனி. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் கல்யாணத்தை இப்போது ரகசியமாக நடத்தி முடித்துள்ளார் கிம்.

இரு வீட்டார், குடும்ப நண்பர்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனராம்.

கிம் முன்பு ஸ்பெயிந் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் மரின் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் நிச்சயதார்ததமும் நடந்தது. ஆனால் அதிரடியாக அதை ரத்து செய்தார் கிம். அதே வேகத்தில் தற்போது புஞ்சனியை மணந்து விட்டார்.

நான்கு ஆணடுகளுக்கு முன்பு யுவராஜ் சிங்கை தீவிரமாக காதலித்தவர் கிம் சர்மா. ஆனால் அது பாதியிலேயே புட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

செஸ் விளையாட்டில் காய்களை நகர்த்துவது போல காதலர்களை மின்னல் வேகத்தில் மாற்றி கிம் சர்மா ஆடிய இந்த திருமண விளையாட்டு பாலிவுட்டை மிரட்டலுக்குள்ளாக்கியுள்ளது.

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது!







வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் (7) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் தேர்த் திருவிழா நடைபெற்றது.

இன்று அதிகாலை தொடங்கிய நித்திய பூஜை வசந்தமண்டப பூஜைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி வந்து அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து 9.25 மணியளவில் தேர் முட்டியை வந்தடைந்தது.

இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் தென்னிலங்கையில் இருந்தும் மன்னார் வவுனியா திருகோணமலை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் பங்குபற்றினர்.

எனவே பக்தர்களுக்குரிய வசதிகளைப் பொலிஸாரும் மாநகர சபையினரும் மேற்கொண்டிருந்தனர். மக்களுக்கு வேண்டிய சுகாதார குடிதண்ணீர் வசதிகள் போன்றவற்றை யாழ். மாநகரசபையும் மற்றும் ஆலயச் சூழலில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் சுமார் 600 பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கும் மேலாக பரியோவான் முதலுதவிப் படையினர் சாரணர்கள் மற்றும் தொண்டர் படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முருகபெருமானின் தீர்த்தத் திருவிழா நாளை தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, September 6, 2010

ஆப்பம், இறால் குழம்பு கேட்டு விமானத்தை இயக்க மறுத்த பைலட்


கடந்த 29ம் தேதி பகல் 2.15 மணிக்கு கொச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் (ஐ.சி-519) சென்னை வழியாக பெங்களூர் புறப்பட இருந்தது.

அந்த விமானத்தை கேப்டன் தினகரன் என்பவர் இயக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் அன்று காலை 11.30 மணிக்குதான் இன்னொரு விமானத்தை இயக்கிக் கொண்டு கொச்சி வந்து சேர்ந்தார்.

உடனடியாக மற்றொரு விமானத்தை இயக்க வேண்டி நிலையில் அவரும் விமான சிப்பந்திகளும் விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் அபாதுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தனக்கு ஆப்பமும், இறால் குழம்பும் வேண்டும் என்று விமானி கேட்டார். ஆனால் அந்த உணவுகள் அங்கில்லை.

இருந்தாலும் ஆப்பம், இறால் குழம்பு தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த தினகரன், ஹோட்டலில் இருந்த வேறு எந்த உணவையும் உண்ண மறுத்துவிட்டார்.

இதையடுத்து இறால் மீன் வரவழைக்கப்பட்டு கறி தயார் செய்யப்பட்டது. ஆனால், தான் கேட்ட நேரத்தில் அந்த உணவு கிடைக்காததால் அதை உண்ண மறுத்தார் தினகரன்.

மேலும் நான் இன்னும் சாப்பிடவில்லை, இதனால் விமானத்தை இயக்க முடியாது என்று மறுத்தார்.

இதையடுத்து அந்த விமானம் மாலை 4 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 4.30 மணிக்கு பசி பொறுக்காமல் விமான நிலையத்துக்குள் இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்த விமானி, தனக்கு மிகவும் டயர்டாக இருப்பதாகக் கூறி விமானத்தை இயக்க மறுத்தார்.

இந் நிலையில் 5.30 மணி ஆகிவிட்டது. அப்போதும் விமானம் புறப்படாததால் ஆத்திரமடைந்த 138 பயணிகளில் பலர் கொச்சி விமான நிலையத்தின் துணை மேலாளரின் அறை முன் போராட்டம் நடத்தினர்.

அப்படி இப்படி என மணி இரவு 7.30 ஆகியும் விமானத்தை இயக்க விமானி மறுத்தார். இதையடுத்து அங்கிருந்த டூட்டி மேனேஜர்கள் விமானியில் காலில் விழாத குறையாக கெஞ்சியதையடுத்து விமானத்தை இயக்க அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால், அதற்குள் அந்த விமானத்தின் பேட்டரிகளில் பிரச்சனை ஏற்பட்டுவிட, புதிய பேட்டரியை சென்னையிலிருந்து வந்த இன்னொரு விமானத்தில் வரவழைத்தனர்.

அதைப் பொறுத்திய பின் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கே அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்தப் பிரச்சனையால் ஏர் இந்தியாவின் ஒரு சர்வதேச விமானம் உள்ளிட்ட அடுத்தடுத்து கிளம்ப இருந்த 3 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

கடந்த ஒரு வாரமாக மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் இப்போது தான் வெளியில் வந்துள்ளது.

வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!

ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!

(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)

எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.

அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...

“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.

நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...

“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்துக் கூவ, நான் அசந்து போனேன்.

பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல! பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.

வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலைத்தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...

“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...

“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...

அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.

“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.

நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.

பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நினைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண், எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்) உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).

பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.

எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவில்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...

மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.

இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.

நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.

என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

Saturday, September 4, 2010

லஞ்சத்தைச் சொன்னால் மிரட்டல்!

""சுனாமி வீட்டுக்கு 30 ஆயிரம் கமிஷனா? ஏதோ ஆயிரம், ஐநூறு என்றால் கொடுக்க முயற்சிக்கலாம். 30 ஆயிரமெல்லாம் தர முடியாது. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன்?'' என்றாராம் பாம்பன், மொட்டையன்பனைப் பகுதியில் வசிக்கும் மீனவர் மரியராயப்பன். இவர் இடத்துக்கு கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உள்ளவர்கள் எல்லாரும் சுனாமி வீட்டுக்கு செலக்ட் ஆகிவிட்டார்கள். இவருக்கு மட்டும் வீடு மறுக்கப்பட்டுவிட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் முகாமில் இருந்து நக்கீர னுக்கு தகவல் தந்தார் மரியராயப்பன். ""சுனாமி வீட்டுக்காக லஞ்சம் கேட்ட அதிகாரிகளைப் பற்றி, கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்தேன். இங்கே சுனாமி ஏ.டி.க்கு பதிலா வேலை செய்ற ஒருத்தரு, "ஏண்டா எவ்வளவு தைரியம்... எங்க அதிகாரி பத்தியே புகார் கொடுக்க வந்தியா? இனிமே சுனாமி வீடு மட்டுமில்ல... எந்தச் சலுகையுமே உனக்குக் கிடைக்க விடமாட்டேன். மரியாதையா ஓடிப்போயிடு. இல்லேன்னா ஆளைவச்சு காலிபண்ணிப்பிடுவம்'னு மிரட்டுறா ருங்க.இப்ப வெளிய வந்து நிக்கிறேன். கலெக் டர்ட்ட மனு கொடுக்கணும். உதவி செய்யுங்கள்' -பதட்டக் குரலில் சொன்னார் மரியராயப்பன்.

கலெக்டர் அலுவலகம் சென்றோம். டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணியனும் ஆர்.டி.ஓ. பிரபா கரனும் மற்ற அதிகாரிகளும் பொதுமக்களிட மிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

மரியராயப்பனை, ஆர்.டி.ஓ. முன்னால் நிறுத்தினோம். ""பொதுமக்கள் பயமில்லாமல் தங்களோட பிரச்சினைகளை சொல்வதற்குத் தானே இதுபோன்ற முகாம்களை நடத்துறீங்க. மனு கொடுக்க வந்த இவரை உங்க ஊழியர் ஒருவர் மிரட்டி வெளியே அனுப்பியிருக்கிறார் சார்''.

""சுனாமி ஏ.டி. உடனே இங்கே வரவும்'' -மேஜையிலிருந்த மைக்கில் அழைத்தார் ஆர்.டி.ஓ.

வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒருவர், அலட்சியத் தோரணையோடு வந்தார். ""ஏ.டி.க்காக நான் தான் வந்திருக்கேன்'' என் றார் அவர்.

""மனு கொடுக்க வந்த "பப்ளிக்'கிடம் இப்படித்தான் மரியாதை குறைவா நடப் பீங்களா?'' -கண்டிப்போடு கேட்டார் ஆர்.டி.ஓ.

""இப்படியெல்லாம் மனு எழுதக் கூடாதுன்னு அட்வைஸ் செய்தேன். மிரட்ட வில்லை'' என்றார் அலட்சியத்தோடு அந்த ஊழியர் மலைராஜ்.

பக்கத்தில் நின்ற மரிய ராயப்பன் உடனே குறுக்கிட்டு, ""என் குழந்தைங்க மேல சத்தியமா இவர் மிரட்டினாருங்க. இவங்க கேட்ட லஞ்சத் தை கொடுக்கலைன்னுதான் என்னை சுனாமி வீட்ல சேர்க்கலை'' என்றார் தழுதழுத்த குரலில்.

""நீங்க பயப்படாதீங்க. இந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கலெக்டரிடம் சொல்றேன். உங்களுக்கு சுனாமி வீடு கிடைக்க ஏற்பாடு செய்றேன்... அந்த மனுவை என்னிடம் தாங்க'' மனுவைப் பெற்றுக்கொண்டு மரிய ராயப்பனையும் நம்மையும் அனுப்பி வைத்தார் ஆர்.டி.ஓ. பிரபாகரன்.

அங்கு நடந்த விஷயங்களை கலெக்டர் ஹரிகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் கலெக்டர்

திரைக்கூத்து!


அஜீத்துக்கு ரஜினி சிபாரிசு!


"சந்திரமுகி' இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு வந்தார் டைரக்டர் பி.வாசு. சமீபத்தில் அஜீத்திடம் பேசிய ரஜினி ‘சந்திரமுகி-பார்ட்-2'வில் நீங்க பண்ணினா நல்லாருக்கும்' என ரெகமெண்ட் செய்தாராம். தலயும் சந்தோஷமாக தலையாட்டி யிருக்கிறார்.


நகுல் கேட்ட கோடி!


"ஈரம்' பட இயக்குநர் அறிவழகன் தனது அடுத்த படத்திற்கு நகுலிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால்... ஒருகோடிப்பக்கமாக சம்பளம் கேட் டாராம் நகுல். இதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. புதிய கமிட்மெண்ட்டுகள் எதுவும் தேடி வராததால்‘"எவ்வளவு வேணாலும் சம்பளத்தை குறைச்சுக்கிறேன்' என தூதுவிட்டபடி இருக் கிறாராம் நகுல்.


சானாவுக்கு பரத் ஒட்டிய போஸ்டர்!


"தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் பரத்தும் சானா கானும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரையும் பற்றி கிசுகிசு எழுந்து அடங்கியது. இந்நிலையில் பரத் வசிக்கும் சூளைமேடு வீட்டுப்பகுதியில் சானா கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி கலர்ஃபுல் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரத் தரப்பின் கைவண்ணமோ... என கண் ணடிக்கிறார்கள் கோலிவுட்டில்.


ஓடாத நல்ல படங்கள்!


"நல்லால்லாத படம் ஓடாமப் போனா... அது நியாயம். ஆனா கடந்த இருபது நாளா பலபடங்கள் வெளியானது. அதில் சில நல்ல படங்களும் அடக்கம். ஆனால் எந்த தியேட்டரிலுமே கூட்டமில்லை.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவா இருக்குனு நினைக்கிறோம் கோழி...' என வெசனப்பட்டார்கள் தியேட்டர் பார்ட்டிகள் சிலர். ஆனா எல்லா ஒயின்ஷாப்பும் நிரம்பித்தான் வழியுது.


கார்த்தி காதல் வம்பு!


கார்த்தி நடிக்கும் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அந்தப்பட நாயகிக்கும், கார்த்திக்கும் "அது இது' என கிசு கிசு கிளம் பீருது. ஆனால் தமன்னாவோ, காஜல் அகர் வாலோ ‘"அப்படி எதுவும் இல்ல' என துப்பட்டாவ போட்டு தாண்டாத குறையா விளக்கம் சொல்றாங்க. ஏன் இப்புடி வம்பு கிளம்புதுங்கிற ரகசியம் தான் தெரியல.


அள்ளும் ஹன்சிகா!




தெலுங்கில் இருந்து கோலி வுட்டுக்கு வந்த ஹன்ஸிகா மொத்வானிக்கு எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறு கிறது மார்க்கெட் நிலவரம். தனுஷுடன் ‘"மாப்பிள்ளை', ஜெயம்ரவியுடன் ‘"இச்', விஜய்யுடன் "வேலாயுதம்' என அள்ளு கிறார். மகளுக்கு இருக்கும் கிரேஸைப் பார்த்து கிறங்கிப்போன ஹன்ஸிகா மம்மி துட்டை கொண்டுபோய் மும்பையில் தன் மகள் பெயரில் ஒரு ஃபிளாட்டை வாங்கி சமீபத்தில் நடந்த மகளின் பர்த்டே வுக்கு வீட்டுச் சாவியை பரிசளித்திருக் கிறார்.

அப்படியா!



அந்த பிரமாண்ட டைரக்டர் சின்ன பட்ஜெட்டில் தரமான படங் களை பிற டைரக்டர்களை வைத்து தயா ரித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஆற அமர உட்கார்ந்து கணக்குப் பார்த்த போது நிறைய்ய நஷ்டம். அதனால் தயாரிப்பு நிறுவனத்தை தற்காலிக மாக மூடிவிடும் ஐடியாவில் இருக்காராம்.

அட்டகாச (கு)"டி'ரைவர்கள்!

சமீபகாலமாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பு டிரைவர், கண்டக்டர் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. எல்லாம் டாஸ்மாக் படுத்தும் பாடு.

முன்பெல்லாம் போக்குவரத்து ஊழியர்களில் சிலர் தங்கள் உடல் வலியை மறக்க ஓய்வு நேரத்தில் குடித்தனர். இப்போதோ அந்த சிலர் டூட்டிக்கே குடித்துவிட்டு வருகின்ற சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இது தனிப்பட்ட நபர் உரிமைப் பிரச்சினையென்றால் சாதாரண மாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது பொதுமக்களின் உயிர் பிரச்சினை. உதாரணத்திற்கு சில சம்பவங்கள்...
ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து (டி.என். 63-1102) பரமக்குடிவரை ஒழுங்காக வந்தது. அங்கு டிரைவர்கள் மாறினார்கள். இளையாங்குடி சாலை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் டிரைவராக ஏறினார். ஏறும் போதே ரொம்ப தட்டுத் தடுமாறித்தான் ஏறியிருக்கிறார். பேருந்திலோ சரியான கூட்டம். டிரைவரிடமிருந்து கிளம்பிய பழவாசனை பேருந்தின் கடைசி சீட்டுவரை போய் திரும்பி வந்தது.

உஷாரான சில பயணிகள் முன்னெச்சரிக்கையோடு இறங்கி வேறு பேருந்தில் ஏறிவிட்டனர். போதை டிரைவர் பற்றி பொருட் படுத்தாத பயணிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

பேருந்து கிளம்பியது. பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். அப்படியொரு ஆர்ப்பாட்டத்தோடு பேருந்து கிளம்பியது. டிரைவருக்கோ இதைப் பார்த்து ரொம்ப குஷி. சிரிப்பு வேறு. அதற்குப் பின்பு பெண்களும், ஆண்களும் அலற ஆரம்பித்தனர். உச்சமான வேகத்தில் பாம்பு போவது போல் பேருந்து சாலையில் போனால் ஜனங்கள் அலறாமல் என்ன செய் வார்கள்?

""நிதானமா போப்பா'' என்று கண்டக்டர் சொல்வதைக் கேட்பதாய் இல்லை டிரைவர் சண்முகம்.

ஒருவழியாக சத்திரக்குடி வந்ததும்... உயிரைக் கையில் பிடித் துக்கொண்டிருந்த கூட்டத்தில் பாதி கீழே இறங்கிவிட்டது. "ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் எடுத்தாச்சே' என்று பொருளாதார ரீதியாக சிந்தித் தவர்கள் மட்டும் உயிர் பயமில்லா மல் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.

சத்திரக்குடியில் பாதி பேரை இறக்கிவிட்டு மீதி பேர் களோடு பேருந்து கிளம்பிவிட்டது. அங்கு பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தவர்களிடம் பேசினோம். ""பின்னே என்ன சார். அரை போதை யில் இருக்காரு. சமாளிச்சு பஸ்ஸை ஓட்டிடுவார்னு நெனைச்சோம். ஆனா, அவரு மரண போதையில இருக்காரு சார். இதுவரைக்கும் ஆக்ஸிடெண்ட் ஆகாம வந்ததே கடவுளோட புண்ணியம். கண்டக்டர் சொல்றதையும் கேட்கமாட்டேங் கிறார். திடீர்னு கையை விட்டுட்டு சீட்ல சாஞ்சுக்கிட்டு பஸ் ஓட்டுறாரு. பரமக்குடியில இருக்கிற டைம் கீப்பர், டிக்கெட் கேன்வாசர், எப்படி இவ ரை வண்டி ஓட்ட அனுமதிச் சாங்கன்னு தெரியலை'' என்றனர் மிரட்சியோடு.

மறுபடியும் பேருந்து டான்ஸ் ஆடிக்கொண்டே போக... அதற்கு மேல் பொறுக்க முடியாத பயணி கள், டிரைவர் சீட் அருகே போய் "பஸ்ஸை நிறுத்து, நிறுத்து' என்று சத்தம் போட... அதற்குப்பின் சுதாரித்த டிரைவர், லாந்தை என்ற இடத்தில் ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் இறங்கி டிரைவரை அடிக்கப் போனார்கள். கண்டக்டர் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்த, அந்த நேரமாக அந்த வழியாக பரமக்குடிக்கு சென்றுகொண்டிருந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி. அமல் ராஜ், தனது வாகனத்தை நிறுத்தி பயணிகளிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தார்.

பயணிகள் விபரத்தைக் கூறியதும் கடுப்பான அவர், டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தைத் திட்டிவிட்டு பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பும்படி உத்தரவிட்டது மட்டுமில்லாமல், டிரைவரை மது சோதனை செய்து வழக்குப் போடும்படி ராமநாதபுரம் மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதற்குப் பிறகு போலீஸார் வந்து டிரைவர் சண்முகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். தற்போது போக்குவரத்துக் கழகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. பொதுமக்களோ... அந்த திகில் பயணத்தை மறக்க முடியாமல் உள்ளனர்.

இதைப் போலவே கடந்த மாதம் அழகன் குளம் டூ ராம்நாடு வருகின்ற டவுன் பஸ்ஸை ராம சாமி என்ற டிரைவர் கடும்போதையுடன் ஓட்டிவர... பயணிகள் எல்லோரும் அலறித் துடிக்க... கண்டக்டர் பிரேக்கை மிதித்து வண்டியை நிறுத்தி னார். அந்த ஊரிலிருந்த பிரைவேட் டிரைவர் ஒரு வர் மூலம் வண்டியை ராம்நாட் கொண்டு வந்தார் கள். டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

22-ந் தேதி திருச்சி டூ ராமேஸ்வரம் வருகின்ற பி.பி. பேருந்து ஒன்றில் கண்டக்டர் போதையுடன் ஏறி, டிக்கெட் போடுகிறேன் பேர்வழி என்று சீட்டு மேல் கால் வைத்து பயணிகளின் தலை, தோள் களின் மீது ஏறி டிக்கெட் போட்டதால் பெரும் ரகளையானது. என்ன செய்வது? யாரும் புகார் செய்வதில்லை. இது அவர்களுக்கு வசதி.

இதே ரூட்டில் கடந்த மாதம் டிரைவர் ஃபுல் மப்பில், நிற்க வேண்டிய ஸ்டேஜில் நிற்காமல் செல்ல... தேவகோட்டை ஒத்தக்கடை ஸ்டாப்பில் இறங்க வேண்டிய இளம்பெண்ணை, அங்கே இறக்கிவிடாமல், பயணிகள் எல்லோரும் கத்தியும் கண்டுகொள்ளாமல்... ஏழு கிலோமீட்டர் தள்ளியுள்ள புளியால் என்ற ஊரில் இறக்கிவிட் டார். நள்ளிரவு நேரம். நல்ல வேளையாக அந்தப் பெண் செல் மூலம் தன் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்க... அவர்கள் தேவகோட்டையிலிருந்து ஆட் டோ மூலம் பஸ்ஸை துரத்தி வந்து அந்தப் பெண்ணை கூட் டிச் சென்றார்கள். இப்படி பல சம்பவங்கள்...

இதையெல்லாம் தடுத்து நட வடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் என்ன செய்கிறது? என்று பொதுவான ஊழியர்களிடம் கேட்டோம்.

""என்னைக்கு அரசியல் கட்சி கள் உள்ளே நுழைஞ்சதோ அப்போ திருந்து குடி மட்டுமில்லாம அனைத்துக் கெட்ட பழக்கங்களும் தொழிலாளர்களுக்கு வந்துவிட்டது. வேலை பார்த்துக்கிட்டிருக் கும்போதே கட்சிக் கூட்டம், கல்யாணம், காது குத்துனு கிளம்பிப் போய் தண்ணியப் போட்டுட்டு வந்து மறுபடியும் டூட்டி பார்ப்பாங்க. பெரும்பாலும் சென்னை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்னு நைட்ல ஹால்ட் அடிக்கிற குறிப்பிட்ட சில டிரை வருங்க சரக்கு சாப்பிடுவாங்க. போதை தெளியாம கிளம்புறப்பதான் இது போன்ற பிரச்சினை வருது'' என்றனர்.

இதுபோன்று இனிமேலும் நிகழா மல் இருக்க போக்குவரத்து அமைச்சர் நேருதான் சாட்டையைச் சுழற்ற வேண்டும்.

ராஜா vs ராஜேந்திரன்!



ராஜாவா? ராஜேந்திரனா? கிங் ஆஃப் சேலம் யார்? -இதுதான் இப்போ தைக்கு சேலம் உ.பி.க்கள் எழுப்பும் கேள்வி. அந்தளவு இருதரப்பும் கோஷ்டி பூசலால் முட்டிக் கொண்டு நிற்க இது சமீபத்தில் சேலம் வந்த ஸ்டாலின் வரவேற்பில் பூதாகரமாய் வெடித்து உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கூட்டத்திற்கு செல்ல சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டாலினை வரவேற்க பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் செல்ல, "நீங்க போகக்கூடாது' என வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜா பார்வையாளர் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார். "என்னை தடுக்க நீங்க யார்?' என ராஜேந்திரன் திருப்பிக் கேட்க ராஜா மீண்டும் தடுக்க இவர்களின் நீயா? நானா? சண்டையால் விமான நிலையமே பரபரப்பானது.

என்ன நடந்தது? அங்கிருந்த உ.பி.க்களிடம் கேட்டோம்.

""ராஜா தன்னோட ஆதரவாளர்களுடன் வெயிட்டிங் ரூம்கிட்ட இருந்தாரு அப்போ ராஜேந்திரன் தன்னோட ஆதரவாளர்களோட வந்தாரு. உடனே ராஜா, ராஜேந்திரனை "போகக் கூடாதுன்னு' தடுக்க இவர் மீறிப் போனாரு. நான் சொல்ல சொல்ல போறாங்களானு ராஜா சத்தம் போட, கடுப்பான ராஜேந்திரன் "யார்கிட்ட சத்தம் போ டுறீங்க'ன்னு முறைச்சுக்கிட்டே திரும்பி வந்தாரு. அங்க இருந்த வங்க மட்டும் சமாதானம் செய்ய லேன்னா ஸ்டாலின் முன்னாடியே அடிதடி வரைக்கும் போயிருக்கும்' என்றனர் பீதியோடு.

இது உண்மையா? என அறிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரனிடம் பேசினோம். ""அஞ்சு பேருதான் ஓடுதளம் வரை செல்ல ஏர்போர்ட் அனுமதி தந் திருக்குனு' ராஜா சொன்னாரு. நான் ஏர்போர்ட் அத்தாரிடிகிட்ட கேட்டப்போ அப்படிலாம் இல் லைன்னு சொன்னாங்க. இருந் தாலும் நான் அங்க அமைதி யாத்தான் இருந்தேன். திடீர்னு பார்த்தா ராஜா கூட 50 பேருக்கு மேல திபுதிபுன்னு உள்ளே போனாங்க. கட்சி யில் உறுப்பினரா இல்லா தவங்க கூட உள்ள போ னாங்க. அப்புறம்தான் நம்மள வேணுமின்னே அவாய்ட் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும் தடா லடியா துணை முதல்வரை வரவேற்க உள்ளே போ னேன். அவ்வளவுதான்' என மேற்கொண்டு விரிவாய் பேச தயங்க அவரின் ஆதரவாளர் களிடம் கேட்டோம்.

"ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, மாநில இளைஞரணி துணை செயலாளர் துணை முதல் வர் வரும்போது அண்ணன் அங்க வரவேற்க இல்லாம போனா ஸ்டாலின்கிட்டே கெட்ட பேரு வரும்னுதான் ராஜா தடுத்து இருக்காரு. இதேபோலதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி ராஜேந் திரன் தன்னோட பனைமரத்துப் பட்டி தொகுதியில் உள்ள குமார கிரி கோயிலுக்கு. நமக்கு நாமே திட்டத்தில் தார்ச்சாலை போடும் வேலையை தொடங்கி வைத்து விட்டு போனாரு. "நான் இருக்கும் போது அவரெப்படி தொடங்கி வைக்கலாம்னு' சொல்லி மறுபடி யும் ஒரு பூஜை போட்டாரு ராஜா. முதல்வர் சேலம் வருகையப்போ அஸ்தம்பட்டியில் ராஜேந்திரன் பேர் போட்டு வச்சு இருந்த வளைவு பேனரை அமைச்சர் வீர பாண்டியார் சொல்லி ராஜா ஆளுங்க அதை கிழிச்சாங்க. முதல்வர் வரும்போது பிரச்சினை வேணாம்னு தான் இன்னும் இருபது இடத்துல வைக்க இருந்த பேனரை கூட வைக்காம அஸ்தம்பட்டி காவல்நிலையத்துல புகார் மட்டும் குடுத்துட்டு நிறுத் திக்கிட்டோம். ஆனா தன்னை தாண்டி ராஜேந்திரனுக்கு செல் வாக்கு பெருகிறத பொறுக்காமத் தான் ராஜா இப்படிப் பண்ணி னாரு'னு குமுறியவர்கள் தொ டர்ந்து "ராஜேந்திரன் ஸ்டாலின் ஆதரவாளர் என்பதால் எங்கே பிரச்சனை பெருசாகிடுமோனு ஏர் போர்ட் உள்ளே வந்த ராஜா "நான் வேணும்னு உங்கள தடுக்கல கூட் டம் அதிகம் வேணாம்னு நினைச்சு தான் சொன்னேன்'னு காம்ப்ர மைஸ் பேசுறாரு'' என்றனர்.

""ஸ்டாலினிடம் கெட்ட பெயர் வாங்கணும்னு தான் நீங்கள் ராஜேந்திரனை தடுத்த தாக கூறுகிறார்களே?'' என்றோம் வீரபாண்டி ராஜாவிடம்.

""அந்த அவசியம் எனக்கில்லை'' கோபத் தோடு பேசத் தொடங் கிய ராஜா, ""ஏர்போர்ட்ல தடுத்தா சென்னையில் போயி இவங்க துணை முதல்வரை பாக்குறது இல்லையா இல்ல தனியா அவரை ரூம்ல போயி தான் பாக்காம இருக்காங் களா? நாங்க யார்கிட்ட யாவது ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் குடுக்கா தீங்க'னு சொல்றமா? இல்லையே நாங்க யாரையுமே ஏர்போர்ட்ல தடுக்க கிடையாது'' என்றவர் தொடர்ந்து "இவர் கூட தான் என் படம் கூட இல்லாம பேனர் வைக்கிறாரு. அத நான் பெருசா எடுத்துக்கலையே. இவர் பேனர் வச்சுதான் எனக்கு அடையாளம் கிடைக்கணும்னு இல்லை. இந்த ராஜாவ சேலம் மக்களுக்கு அடையாளம் தெரியும். மாவட்ட மாநகர ஒன்றிய கூட்டத்தில் பேசி முதல்வர் வரப்போ யார் யாருக்கு எந்த எந்த இடத்துல கட் அவுட் பேனர் வைக்கணும்னு ஏரியா பிக்ஸ் பண்ணி தந்துட்டாங்க. அதன்படி கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாக்காம வேலை செய்யும் போது இவர் பாட்டுக்கும் போயி இன்னொருத்தர் ஏரியால "வளைவு' வச்சா யார்தான் ஏத் துக்குவாங்க. ஒரு மொராலிட்டி வேணாமா? இவரு தொழிற்சங்கத்துல. இளைஞ ரணியில பொறுப்புல இருக்கலாம். ஆனாலும் கட்சி மாவட்ட நிர்வாகத்துல எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படணும் அதைத்தாண்டி இவர் பிரியப்பட்டாருனா எங்ககிட்ட வந்து இடம் ஒதுக்கிதாங்கன்னு கேட்டா ஒதுக்கி தந்துருப்போம் எல்லாமே தலைவருக்காக (கலைஞர்) தானே. வாய்தாராணி ஆர்ப்பாட்டத்துலகூட தனியா நின்னுகிட்டு இருந்தாரு. நான்தான் கூப்பிட்டு மேடையில மைக் தந்து பேசச் சொன்னேன். மற்றபடி அவரு தான் (ராஜேந்திரன்) பெரிய மனுசனாக ணும்னு என்னென்னமோ சொல்லிக் கிட்டு இருக்காரு. அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கல'' என்றார் கூலாக.

சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை விழாவில் ""அனை வரும் ஒற்றுமையாய் இருந்தால் தமிழகத்திற்கு பல நன்மைகள் உண்டு'' என கலைஞர் பேசினார். இது கட்சிக்குள்ளும் தான் என புரிந்து கொள்வார்களா உரசிக் கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள்?


அப்படியா!



அந்த முன்னாள் முதல் குடிமகனை மேடம் சேனலுக்காக பேட்டியெடுக்க பகீரத முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின் றன. தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக் காமல் போனதற்கு தமிழகத்தின் ஆட்சித் தலைமைதான் காரணம் என்றும், மொழி மாநாட்டிற்கு அழைக்காததற்கும் அதே கார ணம்தான் என்றும் அவர் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் பேட்டியின் நோக்கமாம். அப்படியெல்லாம் பொய்சொல்ல மாட்டேன் என மறுத்துவிட்டாராம் முன்னாள் முதல் குடிமகன்.

சுடுகாட்டில் பேதம்! -மரணகானா விஜி



அது ஒரு செவ்வாக் கெழமை. ராத்திரி நேரம். ஓவரா தண்ணி அடிச்சிட்டு பிளாட்பாரம் ஓரமா விழுந்து கெடந்திருக்கான் பாபு. எனக்கு ரெண்டாவது உறவா கெடச்ச என்னோட உசுருல கலந்துட்ட என் மச்சான் பாபு.

அந்த வழியா பறந்துக்கிட்டுப் போன பிரேக் பிடிக்காத லாரி ஒண்ணு பாபுவை நசுக்கி எடுத்து ருச்சி. அதப்பாத்துப் பாத்து அழுதேன், கதறினேன், பதறினேன், புரண்டு புரண்டு விழுந்தேன். துக் கத்தை அடக்கவே முடியலை. எப்படி கதறி அழுதும் எம் மனம் ஆறவே இல்ல.

என்னோட எல்லா கஷ்டத்துல யும் கூட இருந்த மச்சான் பாபு என்னை விட்டுட்டுப் போ யிட்டான். அவன் இருந்த வரைக்கும் எனக்கு ரெண்டு காலு இல்லை யேங்கிற கொற யே தெரியாம இருந்துச்சு. எனக்கு ஊன்று கோலா இருந்தவன் அவன்.

ஜி.ஹெச்.லயிருந்து வந்த லாரி, பாபுவின் உடம்பை தூக்கிப் போட்டுக்கிட்டுப் போனது. பாபு செத்துட்டான்னு கேள்விப்பட்டு எக்மோர் ராணி வந்திருந்தா. நாங்கள்லாம் ஒன்னா இருந்த காலத்துல ஒண்ணா சேர்ந்து அவள அனுபவிச்சிருக்கோம். பாபுவை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். செத்துட்டான்னு கேள்விப் பட்டதும் கதறித்துடிச்சிட்டு ஓடி வந்தா. என்னைக் கட்டிப்புடிச்சிட்டு கதறினா ராணி. எப்படி எப்படியோ அழுது பார்த்தும் அவளுக்கு மனசு ஆறவே இல்ல.

"ஏய் விஜி... நீ மீண்டும் அனாதையாயிட் டேடா...'ன்னு கதறி அழுதா. நான் அனாதை ஆயிட்டேனான்னு நெனைக்க நெனைக்க நெஞ்சு வலிச்சது எனக்கு. பாபுவோட மரணம் ரொம்ப நாளைக்கு பைத்தியக்காரனா என்னை அலைய வெச்சது. இப்படி மரணங்களை அடிக்கடி சந்திச்ச எனக்கு மனசு மரத்துப்போச்சு.





இந்த ஒலகத்துல மனுஷங்களுக்கு நிம்மதியான இடம்னா சுடுகாடுதான்னு ஒரு தத்துவம் சொல்லுவாங்க. இதுமட்டுமில்ல... பேதமில்லாத ஏரியா... சமரசம் இருக்கும் இடம்ன்னுகூட சுடுகாட்டைப் பத்தி பேசுவாங்க. ஆனா... நிஜம் அப்படி இல்ல. ஏற்றத் தாழ்வுகள் நெறஞ்ச இடமாத்தான் பொணம் பொதைக்கிற சுடுகாடும் இருக்கு. வெளி உலகத்துல மனுஷங் களுக்குள்ள எப்படி பெரியவன், தாழ்ந்தவன்னு இருக்கோ அது அத்தனையும் இங்கேயும் இருக்கு.

பொதுவா, சுடுகாட்டுல ஒரு பொணத்தை பொதைக்கணும்னா 6 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட குழியை வெட்டி வெச்சிருப்பாங்க. ஒரு மனுஷன் செத்துப் போனான்னா, அவங்க வூட்ல இருந்து ஒரு ஆளு வந்து வெட்டியான்கிட்டே, செத்துப்போனது பெரிய ஆளா, கொழந்தையான்னு விபரம் சொல்லிட்டுப் போவான். அதுக்கேத்த மாதிரி குழி வெட்டி வைப்பாங்க.

ராயபுரம் சுடுகாட்டுல நான் இருந்தப்ப... ஒருநாள் நல்லா வசதி படைச்ச ஆளு "பாடி'யை கொண்டு வந்தாங்க. பெரிய அளவுல அலங்கார பாடை, ஆட்டம், பாட் டம்னு அந்த பாடியை கொண்டு வந்தாங்க.

அதப்பாத்த எனக்கு "அந்த மனுஷன் உசுரோட இருந்தப்ப அந்த ஆளை இப்படி சந்தோஷமா வெச்சிருந்தானுங்களோ இல்லை யோ... செத்ததுக்குப் பெறகு எல்லா மரியாதையும் செய்றானுங்கோ'ன்னு தோணுச்சு. தயாரா தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு பாடியை கொண்டு போனாங்க. பாடியை குழிக்குள் எறக்கியப்போ... செத்துப்போனவனோட தல கொஞ்சம் கிராஸ் ஆயிடுச்சு. ஏன்னா... குழியின் நீளத்துல ஒரு அரை அடி கம்மியா இருந்ததால... பாடியை நேரா படுக்க வைக்க முடியாம தல மட்டும் கொஞ்சமோ கொஞ்சம்தான் கிராஸ் ஆனுச்சு.

அதப்பாத்து, செத்துப்போன ஆளோட மகன்களுக்கு வந்ததே கோவம் பாருங்க... அப்படியொரு கோவம். குழிவெட்டிய ஆளுங் களக் கூப்பிட்டு, "ங்கோத்தா... என்னடா குழி வெட்டிருக்கே... குழி. எங்க அப்பன் தலயப் பாருடா... க்ராஸ் ஆயிடுச்சி. எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா எங்கப்பன்?னு ஆரம்பிச்சி மெட்ராஸ் பாஸையில இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையாலயும் திட்டித் தீர்த்துட்டானுங்க.

மண்ணுக்குள்ளே போயிட்டா எல்லாம் மக்கிப்போயிடப் போவுது. இதுக்குப்போயி இவ்வளவு அசிங்கமா பேசணுமா வசதி படைச்ச ஆளுங்கன்னு நெனைச்சிக்கிட்டேன்.

இந்த சம்பவம் நடந்து ரெண்டு மூணு நாளைக்குப் பெறகு ஒருநா, ஜி.ஹெச். ஊழியருங்க ரெண்டுபேரு ஒரு கோணியைத் தூக்கிக்கிட்டு வந்தாங்கோ. "குழி வெட்ட றவனுங்க யாருமில்லையா?'ன்னு எங்கிட்டே கேட்டாங்க. வந்துடுவாங்க... என்ன விஷயம்னு கேட்டேன்.

"ஒரு குஷ்டரோகி செத்துப் போயிட்டான், அவன மூட்டையில கட்டி கொண்டாந்திருக்கோம். அத பொதைக்கணும்'னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் இருங்க... வந்துருவாங்கோன்னு அவனுங்களுக்குச் சொல்லிட்டு அந்த மூட்டையையே வெறிச்சிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ரெண்டு நாளைக்கு முன்னால இதே சுடுகாட்டுக்கு வந்த "பாடி'க்கு எவ்வளவு மரியாதை, ஆட்டம், பாட்டம், அலங்காரம்! அந்த மனுஷனப் போலத்தான் இந்த குஷ்டரோகியும் ஒரு மனுசன். ஆனா, இவனுக்கு எந்த மரியாதையும் இல்லே. ஏதோ குப்பைக்கூளங்களை மூட்டையில அள்ளிட்டு வர்ற மாதிரி கட்டிக்கிட்டு வந்திருக்காங்க. கொறஞ்சது ரெண்டு கழிய கெடத்தி அதுல ஒரு பாயை வெச்சி அதுல அந்த குஷ்ட ரோகியை கட்டி பொணம் சுமக்கிற வண்டியிலயாவது கொண்டு வந்திருக்கலாம். ஆனா, இல்லே! ரெண்டு "பாடி'களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை நெனச்சு ஏனோ மனசு வேதனைப்பட்டது.

கொஞ்ச நேரத்துல வெட்டியானுங்க வந்தாங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். வெட்டியான்ங்ககிட்ட, ஜி.ஹெச். ஊழியருங்க விசயத்தைச் சொல்ல... மட மடன்னு 2-க்கு 2 அடியில குழியை வெட்டினாங்க. அதுல குஷ்டரோகி பாடியைப் போட்டு பொதைச்சிட்டு போயே போயிட் டாங்க. எல்லாம் ஒரு அரை மணி நேரத்துல முடிஞ்சுப் போயிடுச்சு.

வசதி படைச்சவனோட பாடிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் னுட்டு ஒரு மூணு மணி நேரம் அடக்கம் பண்றதுக்கே ஆனுச்சு. அப்படி மூணு மணி நேரம் ஆகவேண்டிய அந்த விசயம், ஒரு குஷ்ட ரோகியோட பாடிக்கு வெறும் 30 நிமிசத்துல முடிஞ்சுப் போயிடுச்சு. இது மட்டுமில்ல... 6 அடி நீளத்துல ஒரு அரை அடி கொறைஞ்சதுக்கே ஆத்திரப்பட்டாங்க வசதி படைச்சவனுங்க. ஆனா, இந்த பாடிக்கு மொத்தமே 2 அடிதான். குஷ்டரோகிக்காக யாரு கோவப்படறது?

உசுரு போயிட்டா எல்லா ஒடம்பும் "பாடி'தான். ஆனா, அந்த "பாடி'ய அடக்கம் பண்றதுலதான் எவ்ளோ ஏற்றத்தாழ்வுகள். இருக்கப்பட்டவனுக்கு ஒருவித ஏற்பாடும், இல்லாதவனுக்கு ஒரு ஏற்பாடும்ங்கிறதுதான் சுடுகாட்டுலயும் நெலவுது. அப்புறம் எப்படி பேதமில்லாத இடம் சுடுகாடுதான்னு சொல்றாங்களோ? செத்ததுக்குப் பெறகு பாடியை சாஸ்திர சம்பிரதாயத்தோட அடக்கம் பண்ணினாத்தான் செத்தவன் சொர்க்கத்துக்குப் போ வான், செத்தவன் மனசு சாந்தியடையும்னு செய்றாங்க இப்படி. இந்த குஷ்டரோகி என்ன பாவம் பண்ணினான்? இவன் சொர்க்கத்துக்குப் போகக்கூடாதா? இவன் மனசு சாந்தி அடைய வேணாமா?ன்னு தோணுச்சு. அப்போ, உடனே நான், குஷ்டரோகி பொதைக்கப்பட்ட குழிக்கிட்டே நகர்ந்து நகர்ந்து போயி... அந்தக் குழியை ஒட்டி 6 அடி நீளத்துக்குப் பாத்தி மாதிரி மண்ணை குவிச்சு, ஒரு பாடி பொதைக்கப்பட்டது போல செஞ்சேன். கொஞ்ச தூரம் தள்ளி வந்து... அத பார்த்தேன். எல்லாரையும்போல இங்கேயும் ஒரு பொணம் பொதைக்கப்பட்டிருக்கிற மாதிரி இருந்துச்சு. அதப் பார்த்து ஏனோ எனக்குள்ள ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்துலயே என் பறை எடுத்து...

விதவிதமா பொம்மலாட்டம்

பேசுவதெல்லாம் பித்தலாட்டம்

உறவுகள்ளாம் கழுகுக் கூட்டம்

உள்ளம் முழுக்க காசுதான்!

பணமிருந்தா செத்துப்போன

பொணத்துக்கும் பூமாலை!

பணமில்லைனா மனுசனுக்கே

இங்கு இல்லை பாமாலை!

-ன்னு அடித்தொண்டையில இருந்து பாடினேன். அந்த குஷ்டரோகிக்கான இந்த மரண தாலாட்டு... அந்தச் சுடுகாடு முழுக்க எதிரொலித்தது.

(தொடரும்)

வீடு தேடி வந்த நிதி!


திடீரென அதிகாரிகளை அழைத்த வேலூர் மாவட்ட ஆட்சி யர் ராஜேந்திரன் ""கைகால் நல்லா இருப்பவர்களே வாழ்க்கையில் முன்னுக்கு வர போராடவேண்டி யிருக்கு. அப்படியிருக்க... உடல் ஊனத்தோட இருக்கும் மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு போராட வேண்டியிருக்கும்? அதனால் அவங்க பத்தின விபரங்களை என் டேபிளுக்குக் கொண்டுவாங்க.. அவங்களைத் தேடிப்போய் நாம உதவிபண்ணலாம்''’என்றார் ஸ்ட்ரிக்டான குரலில். இதைத் தொ டர்ந்து பைல் ரெடியாக.... 24-ந் தேதி காலை ஆட்சியர் ராஜேந்திரன் தன் விசிட்டைத் தொடங்கினார்.

அவரது கார்... முதலில் குடியாத்தம் அருகே இருக்கும் நெல்லூர்ப்பேட்டை கிராமத்தில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுமுன் நின்றது. கால் ஊனமுற்ற இளைஞர் ரமேஷ்... மாவட்ட ஆட்சியர் தன் வீட்டுமுன் வந்து நிற்பதைக் கண்டு திகைத்துப்போய்... பதறியடித்து எழ... ‘""வாழ்ந்துகாட்டுவோம் திட்டத் தின்படி உனக்கு 20 ஆயிரம் ரூபாய் சேங்ஷன் ஆகி யிருக்கு. இந்தா பணம். வாழ்த்துக்கள்''’என்றபடி பணத்தைக் கொடுத்து விடைபெற...நெகிழ்ந்து போய்விட்டார் ரமேஷ்.


அடுத்து ஆட்சியரின் கார் சேங்குன்றம் கிராமத்துக்குப் போனது. அந்தப் பெட்டிக்கடைமுன் அவரது கார்போய் நிற்க... கடைக்குள் இருந்த பார்வையற்ற சேகர்... யாரோ எவரோ என திகைத்தார். காரிலிருந்து அவரிடம் நேராக சென்ற ஆட்சியர் ""நீங்கதானே சேகர். நான் இந்த மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன். இந்தாங்க.. நீங்க எதிர்பார்த்த கடன் பணம் 20 ஆயிரம் ரூபாய். இதைவச்சி... நல்லபடியா கடையை நடத்துங்க. வாழ்த்துக்கள்''’என இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டுக் கிளம்பினார். ஊர் எல்லையில் நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்ப தைக் கண்டவர், அவர்களை அழைத்து...’’""ஆளுக்கு ஒரு திருக் குறள் சொல்லுங்க''’என்று ஆட்சியர் கேட்க... ஒரு சிறுமி ‘"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க' அதற்குத் தக’ என்றாள் கை களைக் கட்டிக்கொண்டு. குறள் சொன்ன மாணவிக்கு அவர் சால்வை போர்த்தியதோடு... மற்ற குழந்தைகளுக்கும் அதைப் போர்த்தி ‘நீங்களும் இதேபோல் திருக்குறள் படிக்கணும்’’ என்ற படி அங்கிருந்து கிளம்பினார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியரின் கார் செங்குன்றம் கிராமத்துக்குள் போய் ஒரு சின்ன குடிசை வீட்டின் முன் நின்றது. வீட்டுத் திண் ணையில் லேசான உறக்கத்தில் இருந்த மாற்றுத் திறனாளி விஜயாவை எழுப்பி...’. ""ஆடு வளர்க்க நீங்க கேட்ட கடன் 20 ஆயிரம் கொண்டுவந்திருக் கோம். வாங்கிக்கங்க. உடம்பைப் பார்த்துக்கங்கம் மா''’என்றபடி பணத்தைக் கொடுத்துவிட்டு ஆட்சி யர் புறப்பட... விஜயா கண்ணீர் பளபளக்க கை கூப்பினார். இதேபோல்...நாராயணபுரம், தட்டப் பாறை, ஏர்த்தாங்கல் கிராமங்களுக்கும் சென்று உதவிகள் வழங்கினார் ஆட்சியர் ராஜேந்திரன்.

ஆட்சியருடன் இருந்த வாழ்ந்துகாட்டு வோம் திட்ட இயக்குநர் சிவகாமியோ ""மாவட் டத்தில் இருக்கும் அத்தனை மாற்றுத் திறனாளி களுக்கும் அரசின் உதவிகள் கட்டாயம் கிடைக் கும்''’என்றார் உற்சாகமாக. இது ஒருநாள் கூத்தாக முடிந்துவிடாமல்... தொடரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

யுத்தம் 85 நக்கீரன் கோபால்




பொதுமேலாளர் தம்பி சுரேஷின் குரலில் பதட்டம் தெரிந்தது.

""அண்ணே... ..வீட்டுக்கு இரண்டு பக்கமும் போலீஸ்... மஃப்டியில் சுத்திக்கிட்டிருக்காங்க. வீட்டுக்கு ஒரு பக்கம் வேன் நிக்குது. இன்னொரு பக்கம் ஜீப் நிக்குதாம்.''

-வீட்டில் செக்யூரிட்டியாக இருக்கும் கண்ணன் தான் தம்பி சுரேஷூக்கு போன் செய்து விவரம் சொல்லியிருக்கிறார். மீண்டும் போலீஸ் முற்றுகை என்றதும் பதட்டமான தம்பி சுரேஷ் எனக்கு போன் செய்து தகவலைச் சொன்னார். எனக்கு பதட்டம் இல்லை. இதையெல்லாம் எதிர்பார்த்துதானே இருந்தோம்.

தம்பி காமராஜ் கொண்டு வந்து தந்த ஃபேக்ஸ் காப்பிக்குப் பிறகு, இந்த ஆட்சியில் நக்கீரனுக்கு எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை பட்டவர்த்தன மாகத் தெரிந்துவிட்டது. கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதிய அவதூறு புத்தகம் தொடர்பாக சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அட்வகேட் ஜெயப்பிரகாஷிடம் நடத்திய டிஸ்கஷன் ஏறத்தாழ 2 மணி நேரம் தொடர்ந்தது. டிஸ்கஷன் முடிந்ததும் தம்பி குருவுக்குப் போன் செய்தேன்.

""வீட்டைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டி ருப்பதா சுரேஷ் சொன்னாரு. நீ நேரா வீட்டுக்குப் போயிடு. யாரும் பயப்படவேணாம். நான் இங்கே அட்வகேட்ஸ்கூடத்தான் இருக்கேன். சீனியர்கிட்டேயும் பேசிட்டேன். எல்லாத்தையும் சட்டரீதியா எதிர்கொள்ள லாம். வீட்டுல உள்ளவங்களை தைரியமா இருக்கச் சொல்லு. வீட்டில் செக்ரிட்டிய டைட் செஞ்சுடு. அப்புறம், வீட்டுல 2 சூட்கேஸ்களை ரெடியா வச்சிருக்கேன். அதை ராஜேந்திரன் ஆட்டோவில் ஏற்றி, டிரைவர் மோகன் வீட்டில் வைக்கச் சொல்லிடு'' என்றேன். குரு வேக வேகமாக வேலைகளில் இறங்கினான். அங்கிருந்து எனக்குத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. போலீசார் நடமாட்டத்தை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.





தம்பி சுரேஷை மறுபடியும் தொடர்புகொண்டு, ஃபோட்டோகிராபர் இளங்கோவனை உடனே பேசச் சொன்னேன். இளங்கோவன் லைனுக்கு வந்தார்.

""தம்பி.. நீங்க உடனே வீடியோ கேமராவோடு வீட்டுக்குப் போயிடுங்க. அங்கே போலீஸ் சுத்திக்கிட்டி ருக்கு. யார், யார் இருக்கான்னு வீடியோ பண்ணிடுங்க. போலீஸ் வண்டிகளையும் நம்பரோடு வீடியோ எடுத்துக்குங்க.''

""சரிங்கண்ணே...''

அடுத்ததாக, ஃபோட்டோகிராபர் சம்பத்தை லைனில் பிடித்தேன்.

""அண்ணே...''

""தம்பி.. நீங்க உடனே வீட்டுக்குப் போயிடுங்க. போலீஸ் டீம் இருக்கும். ஒருத்தரையும் மிஸ் பண்ணாம ஃபோட்டோ எடுத்திடுங்க. இளங்கோகிட்டே வீடியோ எடுக்கச் சொல்லிட்டேன்.''

""சரிங்கண்ணே.. இதோ கிளம்பிட்டேன்..''

""தம்பி காமராஜ், போலீஸ் சைடில் அடுத்தடுத்த கட்டமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தனக்குரிய சோர்ஸ்கள் மூலமாக விசாரித்துக்கொண்டி ருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, என்னென்ன மூவ்மென்ட்ஸ் நடக்கப் போகுது'' என்று கேட்டேன்.

""ரொம்ப சீரியஸா மூவ் பண்ணுவதா நம்ம சோர்ஸ் சொல்லுதுங்கண்ணே'' என்றார் தம்பி.

என் வீடு இருந்த கீழ்ப்பாக்கம் கார்ட னுக்குப் பக்கத்தில்தான் தம்பி சுரேஷின் வீடு இருந்தது. அதனால் அதிகாலை 3 மணி வாக்கில் சுரேஷ் அங்கே போய், போலீசின் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்துவிட்டு எனக்குப் போன் செய்தார்.

அண்ணே... வண்டிகளும் நிக்குது. போலீஸ்காரங்களும் சுத்திக்கிட்டிருக்காங்க.

அதிகாலை 4 மணிக்கு நமது பிரிண்ட்டிங் மேனேஜர் பெருசு சுந்தர் அங்கே போய் நோட்டம் விட்டார். அவரும் அதையேதான் சொன்னார். அதன்பிறகு, பொழுது விடிஞ்சதும் டிரைவர் மோகனை அனுப்பி நிலைமையைப் பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போனபோதும் அதே நிலைமைதான். போலீசிடம் அநாவசியமாக பேச்சு எதுவும் கொடுக்காமல் நோட்டம் விட்டபடி தெருமுனைக்கு வந்த மோகன், அங்கே பால்காரர் ஏழுமலையைப் பார்க்கிறார். அவர் மோகனிடம், ""3 நாளா இந்த ஏரியாவிலேயேதான் போலீஸ் ஜீப் சுத்துது. அண்ணனை கவனமா இருக்கச் சொல்லுங்க'' என்கிறார். அங்குள்ள ஆட்டோ டிரைவர்களும் இதையேதான் சொல்கிறார்கள். ஏரியா நிலவரத்தை விசாரித்துவிட்டு மோகன் எனக்குப் போன் செய்து இதையெல்லாம் சொன்னார்.

அலுவலகமும் பரபரப்பாகத் தான் இருந்தது.

அட்வகேட் பெருமாள் சார் லைனில் வந்தார். ""அண்ணாச்சி, போலீஸ்காரங்க ரொம்ப வெறியா இருக்காங்களாம். டி.எஸ்.பி. நாக ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கள் லட்சுமணசாமி, பெரியசாமி, கோபால்சாமினு பெரிய டீமே சென் னைக்கு வந்திருக்குது'' என்றார்.

அப்படியென்றால் அவர்கள் நம் வீடு, அலுவலகம் உள்ள ஏரி யாவில்தான் சுற்றிக்கொண்டிருப்பார் கள். சிவாவை ஆத்தூரிலிருந்து கடத்திச் சென்றதுபோல நம் மையும் தூக்கிச் செல்லத் தான் திட்டமிட்டிருப் பார்கள். ஏற்கனவே போலீஸ் ஜீப்பில் பணக்கட்டுகளை வைத்துக்கொண்டு, நம்மைத் தேடி சுற்றியவர்களாயிற்றே! நக்கீரன் கோபாலை லட்சக்கணக்கான பணத் தோடு காட்டில் கைது செய்தோம் என்று பொய்க் குற்றம் சுமத்தி உள்ளே தள்ள வேண்டும் என்பதுதானே ஜெயலலிதா அரசாங் கத்தின் நோக்கம்!

அலுவலகத்திலிருந்த ராஜாமணியை வீட்டின் பாதுகாப்புக்காகப் போகச் சொன்னேன். செக்யூரிட்டிகளுடன் அவரும் இருந்தால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.

ஃபோட்டோகிராபர் சம்பத் அங்கிருந்த போலீசாரையெல்லாம் படம் பிடிக்க, இளங்கோ எல்லோரையும் வீடியோ வில் பதிவுசெய்து கொண் டிருந்தார். இதைக் கவ னித்த போலீசார் தங்கள் முகத்தை மூடிக் கொண்டு வேனுக்கும் ஜீப்புக்குமாக ஓட்டம் பிடிக்க, அவர்கள் ஏறியதும் ஜீப்பும் வேனும் அவசர அவசரமாகக் கிளம்பி, அந்தத் தெரு வைவிட்டுச் சென்றது. சம்பத், இளங்கோ இரண்டு பேரும் அவர் களை விடவில்லை. விரட்டி விரட்டி வீடியோ வும் ஸ்டில்லும் எடுத்த படியே போலீஸ் வண்டி களைத் துரத்திச் சென்றனர். இரண்டு தெருக்கள் தள்ளி ஓரிடத்தில் வண்டிகளை நிறுத்திவிட்டு, போலீசார் காத்திருந்தனர்.

டிரைவர் மோகனிடம் ஜீப்பை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்பாவின் காரை பயன்படுத்துவதையும் மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். மெக்கானிக் அண் ணாதுரையின் ஒர்க் ஷாப்பில் சோனைமுத்து மச்சானின் மாருதி கார் சர்வீசுக்காக வந்தி ருந்தது. அதை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்.

அட்வகேட் பெருமாள் சார் மீண்டும் லைனில் வந்தார். ""இன்னமும் வெறி குறையாமல்தான் இருக்காங்க. நீங்க வழக்கமா இருக்கிற இடங்களில் இருந்தால் ஆபத்துதான்'' என்றார்.

தம்பி காமராஜிடம் சொல்லி, கொடைக்கானலில் உள்ள அவ ருடைய நண்பர் கிட்டா மூலம் அங்கே தங்கலாமா என ஆலோ சித்தேன். தம்பியும் உடனடியாக கிட்டாவிடம் பேசி, அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டி ருந்தார். எல்லா வழியிலும் செக்கிங் பலமாக இருக்கிறது என்று போலீஸ் சோர்ஸ் களிடமிருந்து அடுத்த தகவல் வந்தது.

""அண்ணே.. நீங்க ஜீப்பிலேயோ காரிலேயோ போகும்போது மடக்கித் தூக்கிச் செல்றதுங்கிறது தான் அவங்க திட்டம்'' என்ற தம்பி காமராஜ், போலீசின் திட்டங்களைப் பற்றியும் தற்போதைய நிலைமைகளையும் கலைஞரிடம் சொல்லிவிட்டு வருவதாக கிளம்பிச் சென்றார்.

நாம் அவசரமாக வரச் சொன்னதையடுத்து அட்வகேட் ப.பா.மோகன், சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தார். அவரும் பெருமாள் சாரும் சிவக்குமாரும் தம்பி காமராஜூடன் சீனியர் கே.எஸ் ஸிடம் டிஸ்கஸ் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். கோபியில் நடந்த 10 நாள் விசாரணை தொடர் பாக ப.பா.மோகனிடம் ஒரு அஃபிட விட் வாங்கித் தாக்கல் செய்வதென சீனியருடன் டிஸ்கஷன் நடந்தது.

திரும்பி வந்த ப.பா.மோகன், ""போலீஸ் ஏன் உங்க வீடு இருக்கிற பகுதியில் சுத்திக்கிட்டே இருக்க ணும்? வீடியோ எடுக்கும்போது ஏன் ஓடணும்? எந்த கேசுக்காக அரெஸ்ட் டுன்னு வாரண்ட் இருந்தா நேரா வந்து அரெஸ்ட் பண்ணலாமே? அவங்க வேற ஏதோ ஒரு பெரிய திட் டத்திலே இருக்காங்க சார்..'' என் றார். பக்கத்தில் இருந்த அட்வகேட் பெருமாள், ""சிவா மாதிரி உங் களை தூக்கிட்டுப்போய் இன் னொரு குரூப்பிடம் கொடுக்கிற ப்ளான் இருக்கலாம் அண் ணாச்சி'' என்றார். ""அப்படி பழிவாங்குற எண்ணம்தான் கவர்மென்ட்டுக்கு இருக்கும்'' என்றார் ப.பா.மோகன்.

நக்கீரன் மீதான வழக்கு கள் நிலுவையில் உள்ள கோர்ட் டுகளில் ஏதாவது வாரண்ட் வாங்கியிருக்கிறார்களா என்று விசாரித்தோம். எந்த வாரண் டும் வாங்கப்படவில்லை என்பது தெரிந்தது. நமது வழக்கறிஞர் களின் சந்தேகம் சரிதான். எந்த வாரண்ட்டும் இல்லாமல் நம்மை தூக்கிச் செல்வது என்பதுதான் அவர்களின் திட்டம்.

"50 போலீசார் தலைமை யில் கோபால் வீடு நோட்டம்'- என தினமலர் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைப் பார்த்த பெருமாள் சார், ""அண் ணாச்சி, இந்த செய்தியை மற்ற பத்திரிகைகளிலும் சேனல்களி லும் வரச் செய்யணும். அது ஒரு ஸ்ட்ராங்க் எவிடென்ஸ்'' என் றார். உடனே தலைமைத் துணை யாசிரியர் தம்பி லெனினை பத்தி ரிகைகளுக்கு கொடுப்பதற்கு பிரஸ் ரிலீஸ் ரெடிபண்ண சொன் னேன். தம்பிகள் சுரேஷ், பிரான் சிஸ், சிவக்குமார் மூவரையும் அழைத்து, ""எல்லா பத்திரிகை களுக்கும் சேனல்களுக்கும் தம்பி லெனின் எழுதி கொடுக்கும் பத்திரிகைச் செய்தியை ஃபேக்ஸ் பண்ணிடுங்க. வழக்கம் போல் எல்லா இடங்களுக்கும் தந்தி கொடுத்திடுங்க'' என்றேன். போலீசின் நடவடிக்கைகள் பற்றி எல்லா இடங்களுக்கும் தக வல்கள் பறந்துகொண்டிருந்தன.

என் வீட்டைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு, நோட்டமிட்டபடியே இருந்தனர். நான் சென்ற இடம்.. ..

-யுத்தம் தொடரும்

கலவர அபாயம்! தென் மாவட்ட டென்ஷன்!




""சாதி கலவரத்தை, மதக்கலவரத்தை உருவாக்கி, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திட முனைவோரைக் கண்டறிந்து தடுத்திடும் செயலில் உடனே ஈடுபடுவீர்!''

ஆகஸ்ட் 27 மற்றும் 28-ந் தேதிகளில் சென்னை கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் கலைஞர் எச்சரிக்கை செய்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் சாதி மதக் கலவரங்கள் நடந்தா லும், தமிழகத்தில் சாதி மதக் கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை. அமைதியாக இருந்த தமிழகத்தில் இப்போது சில சக்திகளால் கலவரச் சூழல் ஆரம்ப மாகியிருப்பதை, உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் இதே மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மறுநாள்தான் மள்ளர் இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் கொந்தகை ஹரிகிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல் லப்பட்டு, கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டி ருக்கிறார்.
கொந்தகை கிராமம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சாதீய வெறி யைக் கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படு கொலை.

மதுரைக்கு அருகிலுள்ள சிவகங்கை மாவட்ட கொந்தகைக் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ள 80 தேவர் சாதி குடும்பங்களும் வீடுகளைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

கொந்தகையில் மெஜாரிட்டியாக வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல குடும்பத்தினரும் திரண்டு, ஏ.டி.எஸ்.பி. கண்ணனை முற்றுகையிட்டு ""எங்கள் இன இளைஞரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்யாவிட்டால், உங் கள் போலீஸ் காவலையும் மீறி அந்த வீடுகளை நொறுக்குவோம்'' என்று ஆவேசப்பட்டுக் கொண்டி ருக்க... அவர்களைச் சாந்தப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமானார்கள் காவல்துறையினர்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரி கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்றோம். சோகமும் கோபமும் கொந்தளிக்கத் திரண்டிருந்தார்கள் இளை ஞர்கள். ஹரிகிருஷ்ணனின் தந்தை ராமையாவிடம் பேசினோம். கண்ணீரைத் துடைத்தபடி நடந்ததை விவரித்தார் ராமையா.

""எனக்கு இரண்டு பெண்கள். ஒரே பையன். அந்த ஒரே மகன் ஹரியைத்தான் வெட்டிக் கொலை செய்துவிட் டார்கள் சாதி வெறியர்கள்.

மகனை நல்லா படிக்க வைக்க ணும்னுதான் ஸ்கூலுக்கு அனுப்பி னோம். பள்ளிக்கூடத்துல பிரச் சினைக்கு மேல பிரச்சினை. 9-ம் வகுப்போட நின்னுட்டான். கூலி வேலைக்கு அனுப்பினேன். அவ னுக்குப் பிடிக்கலை. இமானு வேல் பேரவையில சேர்ந்து கடுமையா வேலை செய்தான். எப்பவும் இல்லாத அளவுக்கு போன ஆண்டு செப்டம்பர் 11 அன்னிக்கு தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை இந்த கொந்தகை கிராமத்தில கிராண்டா ஏற்பாடு செய்தான். அப்பவே இங்கே இருக்கிற தேவர் சாதி இளைஞர்களுக்கு எதிரியாயிட்டான் என் மகன்.

எங்க தேவேந்திர சாதிப் பையன் ஒருத்தன், பள்ளிக்கூடத்துச் சுவரில் அவங்க சாதி யைப் பற்றி என்னமோ எழுதிப் போட்டி ருக்கான். அதை ஹரிதான் எழுதினான்னு அவங்க நினைச்சி, அதே சுவத்துல எங்க சாதியைப் பத்தி எழுதிப்பிட்டார்கள். நம்ம பையன் ஒருத்தன் அவங்க எழுதினதை அழிச் சிருக்கான். அதனால அவனை அவங்க அடிச் சிட்டாங்க. அந்தப் பையன் வந்து நம்ம ஹரிகிட்ட சொல்லிப்பிட்டான்.

சனிக்கிழமை ராத்திரி அங்கே போன ஹரி, எவன்டா எங்க பயலை அடிச்சதுனு சத்தம் போட்டிருக்கான். இதுதான் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை நைட். ஹரியும் அவன் நண்பன் ஆவணியாபுரம் விஜயனும் எங்க வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும்போது, ஹரிக்கு வேண்டிய நாயக்கர் சாதி நண்பன் கார்த்திக் செல்போன்ல, உடனே வாடானு கூப்பிட்டான். அவசரமா சாப்பிட்டுட்டு ரெண்டுபேரும் கார்த்திக்கை பார்க்கப் போனானுங்க. அப்புறம் ராத்திரி மூணு நாலு மணிக்கு என் மகனோட பிணத் தை அந்தக் கிணத்துல இருந்து தூக்கி னோம்யா'' ஒரே மகனை பறிகொடுத்த அந்தத் தந்தை மேலே பேச முடியாமல் தேம்பினார்.

""ஹரி கொல்லப்பட்ட தகவல் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?''

""ஹரியை கொலை செஞ்சவனுங்க ஹரியோட செல்போன்ல இருந்து எங்க சாதிப் பையன் ஒருத்தனுக்குப் போன் போட்டு, "டேய் ஹரியை போட்டுட்டம்டா... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கானுங்கடா'னு சொல்லிட்டு கட் பண்ணிட்டானுங்க. அந்தப் பையன் சொல்லித்தான் தெரியும். ஏழு, எட்டு பையன்கள் ரவுண்ட் கட்டியிருக்கானுங்க. ஹரியோட நண்பன் விஜயன், அடியை வாங்கிட்டு ஓடிட்டான். எட்டுபேரும் சேர்ந்து ஹரியை வெட்டியிருக்காங்க.

என் மகன் ஹரி, தன்னோட நெஞ்சிலயும் கையி லயும் இமானுவேல் சேகரனோட படத்தைப் பச்சைக் குத்தியிருந்தான். பச்சை குத்தின அந்த நெஞ்சுப் பகுதியில 7 கத்திக் குத்து. மொத்தம் 36 கத்திக்குத்து. அப்புறமா வெட்டித்தான் கிணத்துல தூக்கிப் போட்டிருக்கானுங்க. தப்பி ஓடின விஜயனுக்கு போன் போட்டுக் கேட்டப்ப... தேவர் சாதி பயலுக 8 பேர் சேர்ந்து வெட்டினதாவும், உயிருக்குப் பயந்துதான் ஓடிப்போனதாவும் சொன்னான். அந்த கார்த்திக்தான் அந்தச் சாதிப் பையனுங்களுக்கு ஆளா இருந்து கூட்டிக்கொண்டு விட்டு கொலைபண்ண வச்சிட்டான்'' என்றார் ராமையா.

""சாதி சங்காத்தம் வேணாம் வேணாம்னு அடிச் சுக்கிட்டேனே... இமானுவேல் நினைவுநாளை கொண் டாடின கோபத்துலதானே "பொலி' போட்டுட்டானுங்க. போன வருஷத்தைப்போல இந்த வருஷம் செப்டம்பர் 11 அன்னிக்கு இமானுவேல் அய்யா விழாவை நிறைக்கச் சிறக்க கொண்டாட இருந்தானே... என் வயித்துல பொறந்த ஒரே வாரிசை சாதி வெறி கொன்னுடுச்சே'' -கதறிக் கொண்டிருந்தார் ஹரியின் தாயார் லட்சுமி.

""பதிலுக்குப் பதில் நாங்களும் கிளம்பியிருந்தால் எத்தனை பிணம் விழுந்திருக்கும். கோழைகள் ஏழெட்டு பேர் சேர்ந்து ஒரு வீரனை கொலை பண்ணிட்டு, ஊரைவிட்டே ஓடி ஒளிஞ்சிட்டானுக'' -திரண்டிருந்த தேவேந்திர இளைஞர்கள் ஆவேசப்பட்டார்கள்.

தேவர் சாதி வீடுகளை நோக்கிச் சென்றோம். அத்தனை வீடுகளிலும் பூட்டு தொங்கியது. ஒரு வீட்டில் வயதான பாட்டி மெல்ல எட்டிப் பார்த்தார். அந்த வீட்டுக்குள் நுழைந்தோம்.

""பேப்பர்காரவுகளாய்யா... என்னை போட்டோ கீட்டோ புடிச்சுப் போடாதிய... நாளைக்கு வெளில தலைகாட்ட முடியாதுய்யா...'' -நடுக்கத்தோடு சொன் னார்.

சமாதானப்படுத்தி, வாயைக் கிளறினோம்.

""எல்லாரும் ஏன் ஓடிட்டாகனு கேக்குறியளா? இருந்தா போலீஸ் கேஸ்னு வந்திருமே அதுக்குப் பயந்து தான் அத்தனை தேவமாரு வீடுகளும் ஓடிப்போயித்தாக'' என்றார்.

""சும்மா சொல்லுங்க பாட்டி... ஏன் இப்படி சாதி கொலை நடந்தது?

""இது இன்னக்கி நேத்து தகராறு இல்லை. 12 வருஷம் முன்னாடி எங்க பசங்களை அவங்க வெட்டினாங்க. பதிலுக்கு இவனுங்க வெட்டி னானுங்க. ரெண்டு சாதியிலயும் வயசானவுக எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. எல்லாம்... இந்த எளவட்டப் பசங்க செய்றது தான். புதுசு புதுசா சாதிக்கட்சி. கொடியேத்தி அசிங்கமா வையிறது, திருப்பி வையிறது இப்படித்தான்... அந்த ஹரிகிருஷ்ணன் இருக்கானே... பெரிய பொம்பளைப் பொறுக்கி. பஸ்ல வர்ற வேற சாதிப் பொண்ணுகளா பாத்துதான் இடிப்பான். தட்டிக் கேட்டால் தீண்டாமை கேஸ் குடுப்பான். இல்லைனா மிரட்டுவான்.

எத்தனை நாளைக்கு பொறுத்துப் போகமுடியும். எங்க சாதியிலயும் எளவட் டங்கள் இருக்கானுகள்ல... உறுதியா நின்னு போட்டுத் தள்ளிட்டானுக. என்னைக் கேட்டா அவனை கொலை பண்ணீருக்கப்பிடாது. ஒத்தைக் காலையோ, கையையோ வெட்டிட்டு உசுரோட விட்டுருக்கலாம். இப்ப பாருங்க ஸ்கூலுக்குப் போற என் பேரனையும் போலீஸ் புடிச்சிக்கினு போயிருச்சு. அவுகளும் சும்மா இல்லை. ஆம்பளை, பொம்பளைய கூட்டமா வந்து எங்க சாதிக்கார 21 வீடுகளை இடிச்சுப்பிட்டுப் போனாக. போலீஸ் பார்த்துக்கினுதான் இருந்துச்சு. மாட்டி யிருந்தா என்னையும் கொன்னுட்டுப் போயி ருப்பானுங்க'' . பெருமூச்சு விட்டார் அந்த மூதாட்டி.

சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. கண்ணனோ... ""இந்தக் கொலைச் சம்பவத்தை அரசிய லாக்கிவிடக் கூடாது என்பதுதான் எங்க கவலை. கொலைகாரர்களை அரெஸ்ட் பண்ணிட்டோம். கிரிக்கெட் விளையாட்டு தான் சாதிச் சண்டையா மாறி, கொலைவரை கொண்டுவந்துவிட்டது. அந்த ஹரியும் சாதாரண ஆளில்லை. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர். 2 நாளைக்கு முன்னால் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் டுக்கு போயிருக்கிறார்கள். மிகப்பெரிய கலவரமாக மாறி யிருக்க வேண்டியதை கட்டுப்படுத்தியிருக் கிறோம்'' என் கிறார்.

ஹரி கொலை நடந்த மூன்றாம் நாள், ஹரியின் நண்பர் விஜயனின் ஊரில் இருக்கும் இமானுவேல் சேகரனின் சிலையை ஒரு கும்பல் சேதப்படுத்தி விட்டது. அங்கேயும் சா"தீ' படரத் தொடங்கியிருக்கிறது.

ஹரியின் கொலை பற்றி நம்மிடம் பேசிய மள்ளர் கழக இலக்கிய அணி பொருளாளர் சோலை பழனிவேல் ராஜன்...

""கடந்த 9 வருடங்களில் 80-க்கும் அதிகமான தேவேந்திர இனத்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பரமக்குடி வில்சன், ஜான்சன், வில்லாபுரம் அறிவழகன், பள்ளப்பட்டி சுரேஷ்... இப்ப கொந்தகை ஹரி... இப்படி எத்தனை கொலைகள்? தேர்தல் வரும் வேளையில், சாதிப் படுகொலைகளை தூண்டும் சாதியினர் மீதும், இவர்களைத் தூண்டுவோர் மீதும் ஈவு இரக்கமில்லாமல் நடவடிக்கை எடுக்கணும். உண்மையான கொலைகாரர்களை விட்டுவிட்டு அப்பாவிகள் மேல் வழக்குப் போட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் போடவும் முயற்சி செய்கிறதாம் போலீஸ்'' என்கிறார்.

இது மட்டுமின்றி மதுரை விமான நிலைய பெயர் பிரச்சினையும் தென் மாவட் டங்களில் புதிய பதட்டத்திற்கு வழி வகுத் திருக்கிறது.

மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவ தென்று அரசு முடிவெடுத்திருக்கிறது. தேவேந்திரர் தரப்போ ""எங்கள் இமானுவேல் சேகரனின் பெயரை சூட்டவேண்டுமென்று ரொம்ப நாளாக அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று, மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனின் பெயரைச் சூட்ட வேண்டும்'' என்று போராடத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தப் "பெயர்' பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, சாதிக் கலவரத்துக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன சில "சக்தி'கள். இந்த விமான நிலைய பெயர் சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ அரசு?

உங்கள் தொகுதியில் யாருக்கு சீட்?


2011-ல் வர இருக்கும் தேர்தலுக்கான தகிப்பு இப்போதே பரவலாக ஆரம்பித்து விட்டது. கூட்டணிக்கான காய் நகர்த்தல்களில் கட்சிகளின் தலைமை... ஒருபுறம் தீவிரம் காட்டிக்கொண்டிருக்க.. இன் னொருபுறம் ஒவ்வொரு கட்சியிலும்...ஏரியா வாரியாய் கோலோச்சிக்கொண்டிருக்கும் முக்கிய புள்ளிகள்... தொகுதி சீரமைப்பு விவகாரங்கள் நடந் திருக்கும் நிலையில்... தங்களுக் குத் தோதான தொகுதிகளைக் குறிவைத்து இப்போதே சீட் டுக்கான ரேஸில் வரிந்துகட்டி ஓட ஆரம்பித்துவிட்டார்கள். இது குறித்த ஒரு கவரேஜை நக்கீரன் இந்த இதழில் இருந்து தரத்தொடங்குகிறது.

முதலில் அரசியல் விறு விறுப்புக்குப் பஞ்சமில்லாத. மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளின் பக்கம் நாம்.. நமது பார்வை யைக் கொஞ்சம் ஸூம் பண்ணலாமா?.

மதுரை மத்தி : மிகவும் சின்னத் தொகுதியாக இருந்த மதுரை மத்தி.. பெரிய சைஸ் தொகுதியாக மாறியிருக்கிறது. இங்கு ஆளும்கட்சி சிட்டிங் எம்.எல்.ஏ.வான கவுஸ்பாட்சா வோடு வட்டச் செயலாளர் பக்ருதீனும் ஏதோ ஒரு நம் பிக்கையில் சீட்ரேஸில் ஓட ஆரம்பித்திருக்கிறார். இது பி.டி. ஆரின் செல்லத்தொகுதி என்பதால் அவரது மகன் தியாகராஜனுக்கு சீட்ஜாக்பாட் அடிக்கலாம் என அவர்தரப்பு எதிர்பார்க்க... அழகிரி யண்ணன் வாரிசுகள் யாராவது நின்னாத்தான் விறுவிறுப்பா இருக்கும் என உ.பி.க்களில் ஒரு தரப்பு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இலைத் தரப்பிலோ மா.செ.ராஜன் செல்லப்பா சீட் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார். தே.மு.தி.க.வினரோ...இங்கு கேப்டன் அல்லது அவரது மனைவி, மைத்துனர் யாராவது ஒருவர் நின்றால்தான் எங்களுக்கு கௌரதையாக இருக்கும் என்று தீர்மானமே போட்டு விஜயகாந்த்தை துரத்த... அவர் ‘இங்க அழகிரிக்காகத்தான் யோசிக்க வேண்டியிருக்கு. ஆனாலும் நெருக்கத்தில் பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்காராம்.

மதுரை கிழக்கு : இது சி.பி.எம். நன்மாறனின் சிட்டிங் தொகுதி. நன்மாறனோ.. இப்போது அழகிரி சூறாவளியை எதிர்கொள்ள முடியுமா? என யோசிக்கிறாராம். அதேசமயம் ஏற்கனவே எம்.பி.க்கு நின்ற ஜோதிராம்... சீட் ரேஸுக்கு ரெடியாகிவிட்டார். இலைத் தரப்பிலோ... இந்தமுறை தோழர்களுக்குத் தொகுதியைத் தருவதாக இல்லை’ என்ற குரலே பலமாக ஒலிக்கிறது. யாதவர் வாக்குகளை நம்பி மாஜி கண்ணப்பன் சீட்ரேஸுல் ஓட ஆரம்பிக்க... ஜெயக்குமாரின் சிபாரிசில் சீட் ஜாக்பாட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் ஏரியாவி லேயே வீடுவாங்கி செட்டில் ஆன கோகுல இந்திரா வும் சீட் மாரத்தானில் ஐக்கியமாகி ஓடிக்கொண்டிருக் கிறார். ஆளுந்தரப்பிலோ சுரேஷ்குமார் நிற்பார் என்ற யூகங்கள் முதலில் இருந்தது. இப்போதோ... மா.செ. மூர்த்திக்கு அழகிரி பச்சைக்கொடி காட்ட அவரும் நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருக்கிறார். இதற்கிடை யே... கயல்விழி மூலம் சீட் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் வழக்கறிஞர் சந்திரசேகரும் ரன்வேயில் தடதடக்கிறார். தே.மு.தி.க.விலோ மா.செ.அரவிந்தனும் மாஜி மா.செ.கவியரசும் கைகோர்த்தபடி ரன் பண்ணுகிறார்கள்..

மதுரை தெற்கு : புதிதாக உருவெடுத்திருக்கும் இந்தத் தொகுதியைக் குறிவைத்து சூரியத்தரப்பில் மாநகரச் செயலாளர் தளபதி நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருக்க... ஒருவேளை மதுரை மத்தியில் சான்ஸ் நழுவினால் இங்காவது வாய்ப்புகொடுங்கள் என கவுஸ்பாட்சா.. இந்தத் தொகுதி ரன்வேயிலும் கால் வைத்திருக்கிறார். இலைத்தரப்பிலோ மா.செ. செல்லூர் ராஜுவும் சீனிவேலுவும் ஸ்பீட் ரன்னிங்கில் இருக்க... திருப்பரங் குன்றம் சிட்டிங்கான போஸும்... தனது வீடு இருக்கும் இந்தத் தொகுதியே தனக்கு வசதி என ரேஸில் குதித்திருக்கிறார். ம.தி.மு.க.விலோ சின்னசெல்வமும் பூமிநாதனும்... தொகுதியை நமக்கு வாங்குங்கண்ணே என தலைமையகமான தாயகத்தை நோக்கி.. எம்.எல்.ஏ. கனவில் தங்கள் ரேஸைத் தொடங்க... முரசுத் தரப்பில் மாநிலப் பொருளாளரான சுந்தர் ராஜன் நைனா ரேஸில் இருக்கிறார்.

மதுரை வடக்கு : புத்தம் புது தொகுதியான இதில்... முதல்முதலாய் முத்திரை பதிப்பது நானாகத்தான் இருக்கவேண்டும் என்றபடி சூரியத்தரப்பில் துணை மேயர் மன்னன் ரேஸைத் தொடங்க... கிழக் கில் சிக்கல் என்றால் வடக்கிலாவது வாழவையுங்கள் என்று இங்கும் ரன்னிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார் வழக்கறிஞர் சந்திரசேகர். இலைத் தரப்பிலோ வி.ஆர். ராஜாங்கம், கவுன்சிலர் ஜெயவேல் ஆகியோர் சீட் ரேஸில் இருக்க... தே.மு.தி.க.வில். ஏ.கே.டி.ராஜா. மாஜி நகரம் ராமர் போன்றோர் பிடிபிடி என சீட் கேட்டு சுதீஷைத் துரத்து கிறார்கள்.

மதுரை மேற்கு : சிட்டிங் காங்கிரஸ் கே.எஸ்.கே. ராஜேந்திரனின் தொகுதி இது என்பதால்... சூரியத்தரப்பில் பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம் ராஜாங்கம், சிலுவை போன்ற கதர்சட்டைகள் ரேஸில் குதித்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தை காங்கிரஸுக்குத் தாரைவார்த்துவிட்டு.. ’மேற்கில்’ சூரியனை உதிக்கவைக்கலாமா என்ற ஆலோசனையில் அழகிரி இருக்கிறாராம். அப்படி சூரியத்தரப்பின் கைக்கு தொகுதி வரும் பட்சத்தில்.. தனது மருமகனும்... ’இளமை ஊஞ்சலாடுகிறது’ பட ஹீரோவுமான டாக்டர் சரவணனுக்கு சீட்டை வாங்கிவிட வேண்டும் என்று ’தாய் மூகாம்பிகை சேதுராமன்’... அழகிரி வீட்டை கிரிவலப்பாதையாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். இலைத் தரப்பிலோ மாஜி வளர்மதி ஜெபராஜ், மாநில மாணவரணி உதயகுமார், காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை போன்றோர் வின்னிங் இலக்கோடு ரன்னிங்கில் இருக்கிறார்கள். தே.மு.தி.க. மா.செ.அரவிந்தன் டீமும் ரேஸில் பரபரக்கிறது.

மேலூர் : எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது மு.க.அழகிரிக்கு அதிக லீடிங் காட்டியது மேலூர் தொகுதிதான். எனவே, மேலூருக்குத்தான்... எம்.பி. நிதியை அதிகம் ஒதுக்கிச் செல்லங் கொஞ்சுகிறாராம் அழகிரி. மாநில அரசியலுக்குத் திரும்பும் தனது விருப்பத்தை தலைமை ஏற்றுக்கொண்டால் தேர்தலை இங்கிருந்துதான் அண்ணன் எதிர்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அவர் களமிறங்காத பட்சத்தில் வாரிசு கயல்விழியை நிறுத்தச் சொல்வோம் என தொகுதி உ.பி.க்கள். பலரும் வரிந்துகட்ட... மா.செ.மூர்த்தி இந்தத் தொகுதிக்கான ரேஸிலும் இருந்துகொண்டிருக்கிறார். இலைத் தரப்பிலோ சிட்டிங் சாமியும் மாஜி எம்.எல்.ஏ. பரமசிவனும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். முரசுத் தரப்பில் ஒத்தக்கடை ராஜேந்திரனும் வண்டியூர் செந்திலும் ரேஸில் விறுவிறுக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் : கூட்டணிக்குள் சி.பி.எம் வந்தால் அவர்களுக்கு, இல்லாவிட்டால் காங்கிரசுக்கு என் பது உ.பி.க்களின் எண்ணம். காங் கிரசில் மாவட்ட பொறுப்பாளர் சுந்தரராசனா தேவ ராசனா என பூவா, தலையா போட்டுக்கொண்டிருக்கிறார் கள் கதர்சட்டைகள். ப.சி. ஆதரவாள ருக்கு சீட் என மேலிடம் முடிவு செய் தால் பஜார் சுரேஷ்தான் வேட்பாளராம். தி.மு.க.வே இங்கு களமிறங்கினால், தான்தான் வேட்பாளர் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் முன்னாள் மேயர் செ.ரா. இலைத்தரப்பிலோ சிட்டிங் போஸ் மற்றும் மாஜி எம்.எல்.ஏ. சீனிவேலு ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள் போஸின் பார்வை மதுரை தெற்கின் மீதும் மையம் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க.வில் ராஜ மாணிக்கமும் உசிலம்பட்டி ராஜாவும்தான் முன் வரிசையில் ஓடுகிறார்கள்.

திருமங்கலம் : சூரியத்தரப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ லதா அதியமான் பதவியில் சோபிக் காததால்.. இந்தமுறை அவருக்கு சீட் இல்லை என்று முடிவாகிவிட்டது. இதற்கிடையே புறநகர் மா.செ.தளபதியின் தங்கையும் யூனியன் சேர்மனுமான காந்திமதி எம்.எல்.ஏ. கனவோடு ரேஸில் குதித்திருக்கிறார். இதேபோல் எஸ்.ஆர்.கோபி, சேடப்பட்டி மகன் மணிமாறன் ஆகியோரும் ரன்வேயில் பரபரப்புக் காட்டு கிறார்கள். இலைத் தரப்பிலோ புறநகர் மா.செ.ஜெயராமன், ஜக்கையன், கடந்தமுறை வெற்றிக்கனியைப் பறிகொடுத்த முத்து ராமலிங்கம் ஆகியோர் ரேஸில் விறுவிறுக் கிறார்கள். மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர் சேதுராமனோ ’போனமுறை சோழவந்தானை ஒச்சாத்தேவருக்குத் தராததால்தான் கலைஞரை விட்டு வந்தேன். இப்ப ஜெயலலிதாவும் தராட்டி... அதே சேதுராமனைத்தான் மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்’ என தன் ஆதரவாளர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே 2 முறை முரசடித்த தனபாண்டியன் மீண்டும் சீட் கேட்டு தே.மு.தி.க.ரன்வேயில் ஓடிக்கொண்டி ருக்கிறார்.

சோழவந்தான் : தனித் தொகுதியான சோழவந்தானில் சிட்டிங் மந்திரி தமிழரசியும் அவரது கணவர் ரவிக்குமாரும் மாஜி தாசில்தார் ராஜா ராமும் ஓடிக் கொண்டிருக்க...’அண்ணியைக் களமிறக்குங்கண்ணே’ என உ.பி..க்களில் பலரும் அழகிரியைத் துரத்துகிறார்கள். இலைத் தரப்பிலோ கடந்தமுறை நின்ற வக்கீல் லட்சுமி, மாஜி எம்.எல்.ஏ.பொன்னம்பலம் போன்றோர் ரேஸில் இருக்கின்றனர். தே.மு.தி.க.வில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லாததால் இன்னும் அவர்களது ரன்வே பரபரப்படைய வில்லை.

உசிலம்பட்டி : ஜெ. பக்கமிருந்த ஃபார்வர்டு பிளாக் சந்தானத்தை தி.மு.க கூட்டணிக்கு அழகிரியண்ணன் கூட்டிட்டு வரும்போதே, அடுத்த எலக்சனில் உசிலம்பட்டியை எங்களுக்கு கிஃப்ட்டா கொடுங்கன்னு சந்தானம் கேட்டிருந்தார். கொடுத்த வாக்குப்படி அவருக்கு சீட் தரப்படலாம் என்கிறார்கள் உ.பி.க்களில் சிலர். எனினும். எஸ்.ஓ.ஆர். தங்கபாண்டியனும் ந.செ.தங்கமலைப் பாண்டியனும் சீட்டைக் குறிவைத்து விறுவிறுக் கிறார்கள். இலைத்தரப்பும் தன் கைவசம் இருக்கும் இந்தத் தொகுதியை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கிற்கு தரும் எண்ணத்தில் இருக்க... வல்லரசு வின் அக்கா மகன் கதிரவன்... சீட்டைக் கேட்ச் பண்ணும் ஆர்வத்தில் ஓட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மகேந்திரனோ ‘யார் யாரோ கூப்பிட்டும் எதி ரணிக்குப் போகாம போராடிக்கிட்டு இருக்கும் எனக்கு சீட் தரமாட்டாங்களா? பார்த்துக்கறேன்’ என அவரும் ரேஸில் குதித்திருக்கிறார். இவர் களுக்கிடையே நாடாளும் மக்கள் கட்சி நடிகர் கார்த்திக்கும் இந்தத் தொகுதி மீது காதலாகி.. கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறார்.




-இப்படியாக மதுரை மாவட் டத் தொகுதி களில் புழுதிப் புயலைக் கிளப் பும்படி... சீட் ரேஸ் சூடுபிடித் திருக்கிறது.

விஜயகாந்த்துக்கு வேறு வழி இல்லை'' "ஜெ.' சொன்ன கணக்கு!



""ஹலோ தலைவரே... மீண்டும் கொடநாட்டில் ஓய்வெடுக்கப் போய்விட்டார் ஜெ.''

""இந்த முறை ஓய்வுங்கிறது யாருடன் கூட்டணிங்கிற ஆய்வாக இருக்கும்னும், கூட்டணி பற்றி ஒரு முடிவெடுத்துவிட்டுத்தான் மலையிலிருந்து ஜெ இறங்குவார்னும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்றாங்கப்பா..''

""என்கிட்டேயும் சொன்னாங்க தலைவரே... .. கோவையிலும் திருச்சியிலும் கூட்டம் அதிகமா வந்ததிலிருந்து, கூட்டணி பற்றிய ஜெ.வின் சிந்தனை மாறியிருப்பது பற்றி நாம்தான் முதன்முதலில் சொன்னோம். அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரப்போறதில்லைங்கிறதை தெரிஞ்சுக்கிட்ட ஜெ., விஜயகாந்த் நம்ம பக்கம் வந்தா வரட்டும், இல்லைன்னா தற்போது இருக்கிற ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., சின்ன கட்சிகளோடு தேர்தல் களத்தை சந்திப்போம்ங்கிற எண்ணத்திற்கு வந்திருந்தார். இதனால ஜெ.வின் நலனில் அக்கறையுள்ள ஆலோசகர்கள் சில பேர் பதறிப் போயிட்டாங்க. தங்களோட ஆலோசனைகளை சொல்வதற்காக ஜெ.வை சந்திச்சாங்க.''

"""என்ன ஆலோசனை?''

""காங்கிரஸ் வராதுங்கிற நிலையில், அ.தி.மு.க.வோடு விஜயகாந்த் கட்சி கூட்டணி அமைச்சாதான் ஜெயிக்க முடியும். தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டையும் விஜயகாந்த் விமர்சிக்கிறாரு. அதற்கு கலைஞர் உடனே ரியாக்ட் பண்ணி பதிலடி கொடுக்குறாரு. அது மாதிரி, நீங்க எதுவும் பதில் கொடுத்திடவேணாம். விஜயகாந்த்தைப் பக்குவமா அ.தி.மு.க. அணிக்கு கொண்டு வந்திடணும்ங்கிறதுதான் அவங்களோட ஆலோசனை.''

""ஜெ.வின் ரியாக்ஷன் என்னவாம்?''

""கொடநாடு கிளம்புறதுக்கு முன்னாடி கட்சி நிர்வாகி கள்கிட்டே ஜெ. பேசியிருக்கிறார். மூன்றாவது அணின்னு விஜயகாந்த் பேசுறார். அவர் சொல்ற மூன்றாவது அணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மூன்றும் இருக்கும்னு சொல்றாங்க. காங்கிரசுக்கு 8% ஓட்டு இருக்குது. தே.மு.தி.க.வுக்கு 8% ஓட்டு இருக்குது. பா.ம.க.வுக்கு 2% தான் ஓட்டு இருக்குது. எல்லாத்தையும் சேர்த்தாலும் 18% ஓட்டுதான் வரும். இதை வச்சிக்கிட்டு மூன்றாவது அணியால எப்படி ஜெயிக்க முடியும்? விஜயகாந்த்தை தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் அழைச்சிக்கிட்டுப் போகாது. அதனால அவருக்கு வேற வழியே இல்லை, நம்ம கூட்டணிக்குத்தான் வந்தாகணும். நம்ம கட்சி சார்பா அவங்களோடு பேசிக்கிட்டிருக்கிறவங்களைத் தொடர்ந்து பேசச் சொல்லுங்க. அவங்க தரப்பில் 60 சீட் கேட்குறாங்க. நாம 40 சீட்தான் தரமுடியும். அதற்குத் தகுந்த மாதிரி பேசச் சொல்லுங்க. வேற வழியில் லைங்கிறதால நாம சொல்றதுக்கு ஒத்துக்கிட்டு கடைசியா கூட்டணிக்குள்ளே விஜயகாந்த் வந்திடுவாருன்னு ஜெ. சொன்னாராம்.''

""கொடநாட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி கட்சி நிர்வாகிகள்கிட்டே வேற என்னென்ன சொன்னாராம்?''

""இந்த முறை ஸ்ரீரங்கத்தில்தான் ஜெ. போட்டி போடப்போறாருன்னு அ.தி.மு.க. தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு இருக்குதே, அதைப் பற்றியும் ஜெ. சொல்லியிருக்கிறார். "என் தாய்வழி தாத்தா ரங்கசாமி அய்யங் காரும், தந்தை வழி தாத்தா ரங்காச்சாரி அய்யங்காரும் ஸ்ரீரங்கம் பக்கத்திலே இருக்கிற நங்கவரத்திலே பிறந்தவங்க. அதனால நான் ஸ்ரீரங்கத்திலே போட்டி போடப்போறதா எல்லோரும் எதிர்பார்க்குறாங்க. என் தாத்தா ரங்கசாமி அய்யங்கார் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் சீஃப் அக்கவுண்ட் மேனேஜரா இருந்தாரு. அவர் சித்த வைத்தியமும் பாப்பாரு. அதன் மூலம்தான் மைசூர் அரண்மனையோடு தொடர்பு ஏற்பட்டது. எங்க குடும்பத்துக்கு மைசூர் அரண்மனையில் நல்ல செல்வாக்கு. இதுதான் என் பூர்வீக விவரம். ஆனா, இந்த எலெக்ஷனில் எங்கே போட்டி போடுறதுன்னு நான் இன்னும் முடிவு செய்யலை'ன்னு ஜெ. சொல்லியிருக்கிறார்.''

""கொடநாட்டில் ஓய்வெடுக்கும்போது, தன்னோட தொகுதி எதுன்னும் ஜெ. முடிவு பண்ணிட்டு வருவார்னு சொல்லு.''

""அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தில் அவர் ரொம்ப தீவிரமா கவனம் செலுத்துறார். வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தது சம்பந்தமான வழக்கைப்போல, அவர் முதலமைச்சரா இருந்தப்ப, பிறந்தநாள் பரிசா வந்த 3 லட்சம் டாலருக்கான காசோலையை தன் அக்கவுண்ட்டில் போட்டுக் கொண்டது சம்பந்தமான வழக்கும் ரொம்ப சிக்கலான வழக்குங்கிறதை ஜெ. புரிஞ்சு வச்சிருக்கிறார்.''

""வாய்தா.. வாய்தான்னு இந்த வழக்கையும் அவர் தொடர்ந்து இழுத்தடிப்பதிலிருந்தே புரியுதுப்பா.''

""சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்குது. இதை டிஸ்மிஸ் செய்யணும்னு ஜெ தரப்பில் மனு போடப்பட்டது. அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துட்டதால, ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது ஜெ. தரப்பு. இதை முதலில் விசாரித்தவர் நீதிபதி சி.டி.செல்வம். அவர் ஏற்கனவே, ஜெ.வுக்கு எதிரா வக்கீலா ஆஜராகியிருப்பதால் வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்தார். அதையடுத்து, இந்த மனுவை விசாரிக்க வந்த நீதிபதி மதிவாணனும் வேற நீதிபதி இதை விசாரிக்கட்டும்னு பரிந்துரை பண்ணிட்டார். அதனால, சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசாரணை தேங்கிக் கிடக்குது. ஹைகோர்ட்டில் போடப்பட்டுள்ள பெட்டிஷனைக் காட்டியே ஜெ. தரப்பு இந்த வழக்கை இழுத்தடிச்சிக்கிட்டிருக்குது. எப்படியாவது இந்த வழக்கிலிருந்து வெளியே வந்திடணும்ங்கிற துடிப்பு ஜெ. தரப்பில் அதிகமா தெரியுதுங்க தலைவரே..''

""ஏன் இத்தனை துடிப்பு?''

""தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ.தி. மு.க.வினர் 3 பேரின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததிலிருந்து, தனக்கு எதிரா எந்த தீர்ப்பும் வந்திடக்கூடாதுங்கிற பதட்டத்தில் இருக்கிறார் ஜெ. அதனால தன்னோட வக்கீல்கள் டீமிடம், எப்படியாவது இந்த கேஸி லிருந்து என்னை விடுவிக்கிறதுக் கான நடவடிக்கையை சீக்கிரமா எடுங்கன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காராம். ஹைகோர்ட்டில் போட் டிருக்கிற பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆனா, சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயா வது கேஸிலிருந்து விடுபடணும்ங்கிறதுதான் ஜெ.வோட இன்ஸ்ட்ரக் ஷன். இந்த அக்கறையை பஸ் எரிப்பு வழக்கிலும் காட்டியிருக்கலா மேன்னு கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க... தொண்டர்களுக்கு தூக்கு கயிறை ஊசலாடவிட்டுவிட்டு, தன்னை மட்டும் கட்சித்தலைமை காப்பாத்திக்குதுன்னு பேச்சு அடிபடுதுங்க தலைவரே..''

""புதிய தலைமைச் செயலாளர், புதிய தகவல் ஆணையர் நியமனம் பற்றி என்ன பேச்சு அடிபடுது?''



""இரண்டையும் முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன் தான்னு கோட்டை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. தலைமைச் செயலாளர் பதவிக்கு கடுமையான போட்டி. 7 பேர் இந்த கேடரில் இருந்த நிலையில், மாலதி ஐ.ஏ.எஸ்.ஸை முதல்வர் செலக்ட் பண்ணினார். நேர்மையான அதிகாரின்னு பெயரெடுத்திருக்கும் மாலதியை தலைமைச் செயலாளரா நியமித்தது கோட்டை வட்டாரத் தில் வரவேற்பை பெற்றிருக்குது. மாநிலத் தலைமை தகவல் ஆணை யர் பதவிக்கு தலித் அதிகாரி நியமிக்கப்படுவார்னு எதிர்பார்க் கப்பட்டது. ஆனா, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ரிடை யர்டான ஸ்ரீபதிக்கு ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துட்டதால, அதன்படியே இந்த பதவி கொடுக்கப்பட்டதாம். தலித் அதிகாரியான கிறிஸ்துதாஸ் காந்திக்கு வளர்ச்சித் துறை ஆணையர் பதவி கொடுக்கப் பட்டிருக்குது. கவர்னர் மாளிகை யில் ஸ்ரீபதி பதவியேற்றுக் கொண் டதும் அவரைச் சூழ்ந்த பத்திரி கையாளர்கள், "இந்தப் பதவி நீங்கள் விரும்பிக் கேட்டதா, அவர்களாக தந்ததா'ன்னு கேட் டாங்க. அதை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுத் தெரிஞ்சுக்குங்கன்னு சாமார்த்தி யமா பதில் சொன்னார் ஸ்ரீபதி.''

""அரசியலிலும் அதி காரத்திலும் சாமர்த்தியம் ரொம்ப முக்கியமாச்சே!''

""எங்க தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னசாமிக்கு ரொம்பவே சாமர்த்தியம்னு மருங்காபுரி தொகுதிவாசிகள் சொல்றாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன். ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க ரோடு கான்ட்ராக்ட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குத்தான் தரணும்னு உத்தரவு வந்திருக்குதாம். நம்ம ஆட்சியில இவருக்குத் தரச்சொல்லி எப்படி உத்தரவு போட்டாங்கன்னு உ.பிக்கள் தலையைப் பிய்ச்சிக்கிட்டு விசாரித்தப்ப, உள்ளாட்சித்துறை மந்திரி அலுவலகத்திலிருந்தே இன்ஸ்ட்ரக்ஷன் வந்திருக்குன்னு தெரிஞ்சு ஷாக்காகியிருக்காங்க. அ.தி.மு.க. ஆட்களோ, "எங்க எம்.எல்.ஏ.வுக்கு இந்த ஆட்சியில் ஏற்கனவே இப்படி பல காண்ட் ராக்ட் கிடைத்திருக்குது. ரொம்ப அதிர்ஷ்டமான ஆளு'ன்னு சொல்றாங்க. எம்.எல்.ஏ சின்னசாமி இப்ப பங்களா கட்டிக்கிட்டிருக்காராம். அதற்குப் பணத்தேவை இருப்பதால ஆளுங்கட்சியோடு அனுசரித்துப்போய் இந்த மாதிரியான கான்ட் ராக்ட்டுகளை வாங்கிடுறாருன்னும், அ.தி.மு.க.வி லிருந்து கூடிய சீக்கிரம் அவர் ஜம்ப் ஆகப்போ றாருன்னும் மருங்காபுரியிலிருந்து மதராசப் பட்டினம் வரைக்கும் பேச்சு இருக்குது.''

""பரபரப்பா பேசப்படுற ஒரு விஷயம் பற்றி நான் சொல்றேன்.. அமைச்சர் தம்பி உயிருக்கு குறின்னு போன இதழில் வெளியான செய்தியோட ஃபாலோ அப் இது. மந்திரி தம்பியை ஏன் குறிவைக்க ணும், ரவுடி திருச்சி குணாவை இயக்கி யது யாருங்கிறது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்குது. எம்பி, எம்பி பந்தை போட்டு பாயிண்ட் எடுக்கும் விளையாட்டு தொடர்பான சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களின் பிடியிலிருந்து சங்கத் தை மீட்டு, விளையாட்டையும் வீரர்களையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தியவர் மாண்பு மிகுவின் தம்பி. தங்கள் கையிலிருந்த அதி காரம் பறிபோன கடுப்பில்தான் உயிருக்கே குறிவைக்கும் சதியில் இறங்கியதாம் சங்கத் தைப் பறிகொடுத்த தரப்பு.''

மிஸ்டுகால்!



தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சமீபத்தில், தலைமையின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்றிருந்தார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் விதத்தில் அக்டோபர் 2-ந் தேதி முதல் 45 நாட் களுக்கு பாதயாத்திரை நடத்த வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டுள் ளது. சென்னை, தேனி, கன்னி யாகுமரி என 3 பாயிண்ட்டு களில் ஒரே நாளில் தொடங் கும் இந்த யாத்திரை திருச்சி யில் நிறைவடைகிறது. தமிழக காங்கிரசின் சீனியர் தலை வர்களும் ஆங்காங்கே இந்த யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. டெல்லியில் ராகுலை சந்தித்த யுவராஜ், பிறந்தநாள் வாழ்த்து சொல் வதற்காக விஜயகாந்தை சந் திக்க அனுமதி கேட்டிருக்கிறார். ஒப்புதல் வழங்கப்பட்டதால் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் யுவராஜ்.


ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையை ஏற்று ஊதிய முரண்பாட்டை நீக்கியதற்காக ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகி களும் முதல்வரை நேரில் சந் தித்து நன்றி தெரிவித்தனர். வியாழக்கிழமையில் மட்டும் 85 சங்கங்களின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்ததால் முதல்வரின் அறை நீண்ட நேரம் பரபரப்பாக இருந்தது. இந்த செய்தியை டி.வியில் பார்த்த நடுநிலை யாளர்கள் பலரும், ""இத்தனை பேரை சந்திக்க அனுமதித்தால், முதல்வரின் உடல்நிலை என் னாவது? அவரது உடல்நிலை கருதியாவது சம்பந்தப்பட்டவர் கள் இத்தகைய சந்திப்புகளில் கட்டுப்பாடு விதித்து, இன்ஃபெக் ஷன் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாமே?'' என்றனர் அக்கறையோடு.


அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா.சபையின் சிறப்புக்கூட் டத்தில் கலந்துகொள்ளத் திட்ட மிட்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அவர் அமெரிக்கா வரும்போது, கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று ஒபாமா விடம் கோரிக்கை வைத்திருக் கின்றன தமிழர் அமைப்புகள். இனஅழிப்பு செய்த பல நாட்டு அதிபர்களை இதற்குமுன் அமெ ரிக்கா, நாடு கடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனடிப்படை யில் ராஜபக்சேவை நாடு கடத் தக்கோரி அமெரிக்க நீதிமன்றத் தில் வழக்கும் போடப்பட்டுள்ளது.

பதற வைக்கும் நிஜ வில்லன்!


தனது கிட்னாப் அதிரடிகளால்... அரியலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தியின் குடும்பத் தைப் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறான்... அவரது முன்னாள் கார் டிரைவரான மணிகண்டன்.

கடந்த ஜூன் மாதம்... 9-ஆம் வகுப்பு படிக்கும் அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமியின் மகன் தர்மதுரை.. திடீரென காணாமல் போக... ""கடத்தி யது நான்தான். பணம்கொடுத்தால் உயிரோடு விடுவேன்''’என செல்போனில் வீரப்பா சிரிப்பு சிரித்து அமரமூர்த்தியின் குடும்பத்தையே பதறவைத்தான் மணிகண்டன். இரண்டு நாள் கழிந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கிளியனூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த இனோவா காரில் இருந்து... தர்மதுரையை மீட்டனர் காக்கிகள். கடத்திய மணிகண்டனோ பிடிபடாமல் எஸ்கேப்பாகி விட்டான்.

இந்தநிலையில்... கடந்த 30-ந் தேதி இதே பழனிச்சாமி மூத்தமகன் கவுசிக்கைக் குறிவைத்தான் மணிகண்டன். ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கிப் படித்துவந்த கவுசிக்கை... யாரோ உறவினர் பேசுவதுபோல் செல்போனில் பேசி விடுதியில் இருந்து வெளியே வரவழைத்தான். தன் நண்பர்கள் இருவர் சகிதம்... கவுசிக்கை அப்படியே கோழியை அமுக்குவதுபோல் அமுக்கி காரில் பலவந்தமாக ஏற்றினான். ’""கவுசிக்கைக் கடத்தியாச்சு. பணத்தை ரெடி பண்ணுங்க''’ என அமரமூர்த்தி குடும்பத்துக்கு... தகவல் மூலமே இரண்டாவது முறையாய் பகீர் தந்தான்.

"ஓவர். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பேக் சைட்ல இருக்குற ஆனந்த் ஓட்டலை... டவர் காட்டுது. அங்க சர்ச் பண்ணுங்க ஓவர்'’என உயரதிகாரிகள் வாக்கிடாக்கி மூலம் உத்தரவு பிறப்பிக்க... டி.சி.ருபேஷ்குமார், மீனா தலைமை யிலான டீம் ஓட்டலை முற்றுகையிட்டது. இப்போது ஓட்டலை விட்டு செல்போன் அடையாளம் நகர்கிறது என மீண்டும் தகவல் வர... அட இப்பதாங்க.. ஒரு ஆம்னி வேனில் ஒரு காலேஜ் பையனோட மூணு பேர் போனானுங்க’ என்றனர் ஓட்டலில் இருந்தவர்கள். இதைத் தொடர்ந்து திருச்சியின் 9 செக் போஸ்ட்டுகளிலும் போலீஸ் டீம் அலர்ட் டாக நின்றது. இதை உணர்ந்த மணிகண் டன் டீம்... கவுசிக்கை இனி கொண்டு போகமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு.. காவேரி ஓடத்துறை அருகே இறக்கி விட்டுவிட்டு எஸ்கேப் ஆக.. இந்தத் ததவல்...டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்குப் போக... இதைத்தொடர்ந்து சத்திரம் எஸ்.ஐ. இந்திரா டீம்... காயத்தழும்புகளோடு இருந்த கவுசிக்கை மீட்டது. மீட்கப்பட்ட கவுசிக் நம்மிடம் ""இந்த முறை உன்னை உயிரோடு விடறேன். ஆனா விரைவில் மறுபடியும் கடத்துவேன்னு மிரட்டிட்டுப்போனான் மணி''’என்றார் வெட வெடப்பு மாறாதவராக.

அரியலூர் எஸ்.பி.அலுவலகக் காக்கிகளோ “""மணிகண்டன் டேஞ்சரஸ் பேர்வழி. சென்னையில் இருக்கும் கூலிப்படைகளோட தொடர்பு உள்ளவன். இவன் அப்பா சரவணனும் காங்கிரஸ்காரர்தான். தன் பையன் சரியில்லைன்னு அவர் எம்.எல்.ஏ.கிட்ட வருத் தப்பட... அவனை எங்கிட்ட விடுப்பா, சரியாய்டு வான்னு எம்.எல்.ஏ. அவனை டிரைவரா வச்சிருந்திருக் கார். இருந்தும் அவன் திருந்தலை. இப்ப அவர் குடும் பத்திலேயே விளையாடறான்''’என்றார்கள் எரிச்சலாய்.

முதல் கடத்தலிலேயே எஸ்கேப் ஆன மணிகண்டன்... அடுத்தக் கடத்தலையும் தைரிய மாக அரங்கேற்றி.. போலீஸுக்கே தில்லாய் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறான். அவனை எப்போது மடக்கப்போகிறார்கள் காக்கிகள்?

வேலை முழு நேரம்! சம்பளம் பகுதி நேரம்! -போராடும் சத்துணவு ஊழியர்கள்!


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் டிஸ்மிஸ்ஸும் 42-க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

முதல்வர் கலைஞரோ, "தி.மு.க. ஆட்சியில்தான் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, இவர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 3780-ம் அதிகபட்ச ஊதிய மாக 4694-ம் வழங்கப்படுகிறது. இவை தவிர பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகை கால முன்பணம், ஓய்வூதியம், பொங்கல் பரிசுத்தொகை என பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. தவிர பகுதிநேர ஊழியர்களான இவர்கள், முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படு கிற சம்பளத்தைக் கேட்கிறார்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிச்சாமியிடம் விசாரித்தபோது, ""தொகுப்பூதியம் பெற்றுவரும் எங்களை காலமுறை ஊதியம் பெறுபவராக மாற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கலைஞர். ஆனால் செய்ய வில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைகள் வராத நிலையிலே கடந்த 27 வருடமா போராடிக்கிட்டிருக்கோம். கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தினார்.

ஆறாவது ஊதியக் குழுவில், ஒரு ஊழியருக்கு குறைந்த பட்சம் அடிப்படைச் சம்பளம் 4800 என்றும் அதுவே எஸ்.எஸ். எல்.சி. பாஸ் செய்திருந்தால் அவருக்கு 5200-ம் தரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதைத்தான் தாருங்கள் என்கிறோம். அதை மறுத்த தால்தான் போராட்டம் நடத்தினோம்.

ஓய்வூதியம் 400, 500, 600 தருவதாகச் சொல்கிறார் கலைஞர். இதே ஆட்சியில் முதியோர்களுக்கு ஓய்வூதியமே 500 தருகிறார்கள். அரசுக்கு வேலையே செய்யாத முதியவர்களுக்கு 500, அரசுக்காக ஓடாய் உழைக்கிற எங்களுக்கும் 500. இது நியாயம்தானா? இன்னொரு விஷயம்... போலீஸ் மோப்ப நாய்களுக்கு 6, 7 வருஷத்துக்குப் பிறகு ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதைப் பராமரிப்பதற்காக ஒரு நாய்க்கு 1500 ரூபாய் மாதம் தருகிறது இந்த அரசு. அதாவது அந்த நாய் வாழ்வதற்காக. ஆனா, எங்களுக்கு வெறும் 500. அந்த நாயைவிட நாங்கள் கேவலமானவர்களா?

அரசு உத்தரவில்தான் நாங்கள் பகுதி நேரம் என்கிறது. ஆனா நாங்கள் காலை 9 முதல் 4 மணி வரை என ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இது பகுதி நேரமா? முழு நேரமா? அதனால், ஏதேதோ காரணம் சொல்லி எங்களை வஞ்சிக்காமல் எங்களின் நியாயமான உணர்வுகளை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

போராட்டம் நடத்தியவர்களை டிஸ்மிஸ், சஸ்பெண்ட் செய்திருப்பதை மற்ற அரசு ஊழியர் சங்கங்களே ஏற்கவில்லை. ""இதுபோன்ற நடவடிக் கையை எடுப்பது ஜெயலலிதாதான். தி.மு.க.விடம் எதிர்பார்க்கவில்லை. இந்த நட வடிக்கை எதிர்மறை பலன்களை தி.மு.க.வுக்கு கொடுக்கும்'' என்கிறார்கள் இவர்கள்.

அரசுக்கும் சத்துணவு பணியாளர்களுக்கும் இடை வெளி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

காவி தீவிரவாதம்! எள்ளு தெளித்த இந்து முன்னணி!


உள்துறை அமைச்சர் ப.சிதம் பரத்தின் வார்த்தைச் சேர்க்கை எதிர்க் கட்சி-சொந்தக் கட்சி என பல தரப்பிலும் எதிர்ப்புக் கொடியை உயரவைத்திருக்கிறது. டெல்லியில் நடந்த போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பேசும் போது, "காவி தீவிரவாதம் குறித்து எச்சரிக் கையுடன் இருக்கவேண்டும்' என்றார் ப.சி. அவரது இந்த வார்த்தைச் சேர்ப்பு, நாடாளு மன்றத்தில் பா.ஜ.க.வை கொந்தளிக்க வைத்தது. சுஷ்மா ஸ்வராஜில் தொடங்கி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். அதன் தொ டர்ச்சியாக இந்துத்வா அமைப்புகள் ப.சி.க்கு எதிராக கொடிபிடித்தன.

டெல்லியிலிருந்து 1-ந் தேதி இரவு ப.சி. சென்னை திரும்புகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் 50 பேர், அதன் மாநில நிர்வாகி இளங்கோவன் தலைமையில் நுங்கம் பாக்கத்தில் உள்ள ப.சி வீட்டின் முன் மாலையி லேயே திரண்டு கருப்புத்துணியுடன் முற்றுகை போராட்டத்திற்குத் தயாராயினர். அதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை. உடனே, இந்து முன்னணி யினர் சிலர் எள்ளு தெளித்து, இறந்தவர் களுக்கு செய்யும் சடங்கு களை ப.சி. வீட்டருகே செய்ய ஆரம்பித்து விட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஏ.சி. ஜாபர் அலி, அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இரவு 7.30 மணிக்கு சென்னையில் தரையிறங்கத் திட்டமிட்டிருந்த ப.சிக்கு, இந்த விஷயம் தெரிவிக்கப் பட, கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ள, அதன்படி இ.மு.வினர் விடுவிக்கப்பட்டனர். அதன் பின் 8 மணிக்கு டெல்லி யிலிருந்து ஃப்ளைட்டில் புறப்பட்டு சென்னை வந் தார் ப.சி. இதனிடையே, ப.சியின் காவி தீவிரவாதம் என்ற கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. கட்சியின் பொதுச் செய லாளர்களான ஜனார்த்தன திவிவேதியும் திக்விஜய்சிங்கும், ''ஒரு மதத்தினர் புனித மாகக் கருதும் நிறத்தின் பெயரால் தீவிரவாதத்தைக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. சாதி, மதம், நிறம் இவற்றை தொடர்புபடுத்துவதை எதிர்க்கிறேன்'' என பேட்டியளித்தார்கள்.

ப.சி.யோ, ""சமீபத்தில் நடந்த சில குண்டுவெடிப்புகளில் மதவாதிகளுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிட்டுத்தான் அப்படிச் சொன்னேன். என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது. காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை 2001-லேயே நாடாளுமன்றத்தில் பலரும் பயன்படுத்தியுள்ளனர்.

எங்கள் கூட்டணிக் கட்சியினரும் இது பற்றி பேசியிருக்கிறார்கள். என் கருத்து பற்றி கட்சித்தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு. மற்றவர்கள் கருத்து சொல்ல அதிகாரம் இல்லை'' என உறுதியாகச் சொல்லி விட்டார்.

காவி தீவிரவாதம் என்ற கருத்தில் ப.சி உறுதியாக இருப்பதால், அவருக்கும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பும் வலுவாக இருக்கிறது.

கோயில் ஊர்களில் எமர்ஜென்ஸி கெடுபிடி!



தமிழக மக்களின் அடிப் படை உரிமைகளை, ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் திருப்பணியை பரவலாக்கத் தொடங்கிவிட் டது இந்தியத் தொல்பொருள் துறை.

தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் பரப்பளவில் 2 சதவிகித நிலத்திற்கு "பூட்டுப்' போடும் மத்திய அரசின் புதிய சட்டத்தைப் பற்றி செப்டம் பர் முதல் தேதி நக்கீரனில் "முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை' செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதேநாளில் குடந்தை தாரா சுரத்தில் இருந்து "குடும்ப அட்டை களையும் வாக்காளர் அட்டை களையும் திருப்பிக் கொடுக்கும்...' போராட்டத்திற்கான அறிவிப்பு வந்தது.

யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம் பரியச் சின் னங்களில் கும்பகோணம் அருகிலுள்ள தாரா சுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்தக் கோயி லைச் சுற்றிலும் 300 மீட்டர் (சுமார் 1000 அடி) சுற்றளவிற்கு தடை செய்யப் பட்ட பகுதியாக வும், ஒழுங்குமுறைப் பகுதியாகவும் அறிவித்திருக்கிறார் கள். இந்த 1000 அடி சுற்றளவுக் குள் அமைந்துள்ள வீடுகளில் பழுது பார்க்கவோ, ஓடு மாற்றவோ, ஒயர் மாற்றவோ, பெயிண்ட் அடிக்கவோ கூடாது என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தாராசுரம் பொதுமக்களின் போராட்டக்குழுத் தலைவர் விஜய்யிடம் நடந்ததைக் கேட்டோம்.

""25 வருடத்துக்கு முன்பு, இந்தக் கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. அவைகளை அகற்றி, இராஜராஜன் நகர்னு ஒரு இடத்தைக் கொடுத் தாங்க. அந்த இடத்தில் வீடு வாசலைக் கட்டினோம். சிலபேர் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்ப திடீர்னு வந்து இங்கேயும் எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு தடுக்கிறார்கள். பாதி கட்டியும் பாதி கட்டாமலும் கிடக்குது. ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் எல்லாம் ஒழுகும் நிலையில் இருக்கு. நாங்க எல்லாரும் பட்டா உள்ள பிளாட்டுகளைத்தான் வாங்கியிருக்கிறோம். எங்க சொந்த இடத்தில் எங்க உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார். உயிர் போனாலும் பரவாயில்லை. எங்க உரிமைகளை பறிகொடுக்க மாட்டோம்'' என்கிறார் விஜய்.

""அய்யா... உயிருக்கு ஆபத்து உண்டாக் கக்கூடிய தொழிற்சாலைகளை ஊருக்கு வெளியே ரொம்ப தொலைவில காட்டுக் குள்ள கட்டுவாங்க. கோயிலை எங்கே கட்டுவாங்க? ஊருக்கு நடுவில கட்டுவாங்க. கோயிலைக் கட்டிவிட்டு ஊரைக் காலிபண்ணுங்கனா என்ன அர்த்தம்? வருஷா வருஷம் திருவிழா நடத்தி, சொந்தஞ் சுருத்து களை வரவழைச்சுக் கொண்டாடி அன்ன தானம், விளம்பரம்னு செஞ்சதுனாலதானே இந்தக் கோயிலுக்கு பேரும் புகழும் வந்துச்சு. சுத்தி... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒண்ணும் இருக்கக்கூடாதா? அப்புறம் அது பாழடைஞ்ச கல்லறைத் தோட்டம் மாதிரி யில்ல ஆயிடும்? இந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் புகழ் சேர்ப்பதே இங்கே இருக் கிற சிற்பிகளும், ஓவியர்களும், பாத்திரம் செய்கிறவர்களும், நெசவாளர்களும்தானே.... எங்க வீடு வாச கடைகளுக்கு மட்டும் என் னத்துக்கு இவ்வளவு எமர்ஜென்சி கெடுபிடி?'' -கடைக்காரர் ராமபாக்கியத்தின் குமுறல்.

""மழையில வீட்டுச் சுவர் கரையுதேன்னு செங்கல்லை வச்சுக் கட்டினோம். வந்து தடுத்துப்பிட்டாக. வர்ணம் பூசப் பிடாது. சுண்ணாம்பு அடிக்கப் பிடாது. ஒட்டடை அடிக்காதேங் கிறாங்க. இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது?'' -இது குடும்பத் தலைவி பத்மாவின் ஆதங்கம்.

""அதிகாரிகள் செய்யும் அதிரடிக் கட்டுப் பாடுகளால் தாரா சுரம் ஊரே அழியப் போகுது. தமிழர் களை எல்லாம் விரட்டிவிட்டு கோ யிலை வெளிநாட் டுக்காரன்ட்ட கொ டுக்கப் போகிறார் களா?'' -இது மகேஷ் தமிழ்வா ணன் கேள்வி.

அரசின் தடை உத்தரவுகளை நிறை வேற்றிக்கொண்டி ருக்கும் தாராசுரம் பேரூராட்சியின் இ.ஓ.வான மோகன் தாஸிடம் இதைப் பற்றிக் கேட்டோம். ""எங்களுக்கு மேலிடத்து உத்தரவுங்க. உத்தரவை மீறினா ஒரு லட்சம் அபராதம். 2 வருஷம் சிறைனு அறிவிச்சிட் டாங்க. அதனாலதான் பாதுகாப்பு வேலையில கவனமா இருக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அவர்.

""தொன்மை மிகுந்த பண்பாட்டு கலைச் சின்னங்களை பாதுகாத்து எழில் குன்றாமல் வருங்காலத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமைதான். கோயிலையொட்டி பல நூறடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் தோண்டியதாலும், புதிய பிரமாண்ட கட்டடங்களுக்கு பல அடி ஆழ அஸ்திவாரப் பள்ளம் தோண்டியதாலும்தான் காளஹஸ்தி ராஜகோபுரம் நொறுங்கியது. திருவரங்கம் ராஜகோபுரம் வெடித்துக் கொண்டு நிற்கிறது.

இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களை கோயிலையொட்டி செய்யத் தடை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, முன்னூறு, நானூறடி தாண்டியுள்ள வீடுகளுக்கு மராமத்து செய்வதைக்கூட தடுத்தால் எப்படி மக்கள் வாழ முடி யும்?'' என்பதுதான் தமிழகத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் கேள்வி!