Sunday, July 11, 2010
உலக கோப்பை சொல்லும் உண்மை!
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் நெதர் லாந்தும் ஸ்பெயினும் மோதுவதால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்குது.''
""ஆமாப்பா... கால்பந்து ஜாம்ப வான்களான பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளெல்லாம் ரொம்ப சீக்கிரமா போட்டியிலிருந்து வெளியேறி விட, ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினாவும் ஜெர்மனியிடம் காலிறுதியில் பரிதாபமாகத் தோற்று வெளியேறிடிச்சி. நட்சத்திர வீரர்களான ரூனி, காகா, மெஸ்ஸி, போர்ச்சுகல் ரொனால்டோ உள்பட யாருமே இந்த டோர்னமென்ட்டில் சரியா ஜொலிக்கலை.''
""தலைவரே... இந்த டோர்னமென்ட்டில் தனி நபரோட திறமையைவிட டீம் ஒர்க்தான் ஜெயித்துக்கிட்டிருக்குது. அதற்கு சரியான உதாரணம், ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிய அரையிறுதிப்போட்டிதான். அர்ஜென்டினாவுக்கு எதிரா 4 கோல் போட்ட ஜெர்மனி, ஸ்பெயினுக்கெதிரா ஒரு கோல்கூட போடமுடியாமல் தோற்றுப் போனது. அதற்கு காரணம், ஸ்பெயினோட டீம் ஒர்க்தான். இந்த அறையிறுதிப் போட்டியை டி.வி.யிலும் நேரடியாகவும் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் சொல்றாங்க. தன்னால்தான் கோல் விழணும்ங்கிற ஈகோ எதுவுமில்லாம, பந்தை ஒருத்தருக்கொருத்தர் பாஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. யாருக்கு வாய்ப்பு இருக்குதோ அவங்ககிட்டே பந்தை தட்டிவிட்டு, கோல் போடும் முயற்சி நடந்தது. அதனாலதான் 70-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியால் வலிமையான ஜெர்மனியை எதிர்த்து கோல் போட முடிந்தது. அதுபோலவே, ஜெர்மனி வீரர்கள் கோல் போட முடியாதபடி ஸ்பெயின் வீரர்கள் ஒற்றுமையா தடுப்பாட்டம் ஆடினாங்க. இந்த டீம் ஒர்க்தான் ஸ்பெயினின் வெற்றி ரகசியம். அதேபோல இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் இன்னொரு அணியான நெதர்லாண்ட்ஸின் வெற்றிக்குக் காரணமும் டீம் ஒர்க்தான்.''
""இது விளையாட்டுக்கு மட்டுமில்லப்பா.. எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும். இதுதான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சொல்லும் உண்மை. 11-ந் தேதி நள்ளிரவு நடக்கப்போகிற இறுதிப் போட்டியை பார்க்க உலகமே கண்விழிச் சிருக்கப் போகுது. இறுதிப் போட்டியில் மேலும் இரு அணிகளில் எது ஜெயிக்கும் என்ற பெட்டிங் செம சூடாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த பெட்டிங் தொகை 1000 கோடி ரூபாயைத் தாண்டுகிறதாம்.''
""விளையாட்டுக் களத்தைவிடவும் தேர்தல் களம் ரொம்ப விறுவிறுப்பானது. சென்னைக்கு வந்து தேர்தல் ஆணையத்தின் கண்காட்சியைத் தொடங்கிவைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தமிழக சட்டமன்றத் தேர்தலை எந்த நேரமும் நடத்துவதற்குத் தயாரா இருக்கோம்னு சொன்னார். முன்கூட்டியே தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராகி விட்டதுன்னுதான் அமைச்சர்கள்கிட்டேயும் அதிகாரிகள்கிட்டேயும் பேச்சு இருக்குது. எல்லாக் கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரும்ங்கிற எதிர்பார்ப் பில்தான் இருக்காங்க.''
""முடிவெடுக்க வேண்டியவரான முதல்வர் என்ன மனநிலையில் இருக்காராம்?''
""அவரும் தேர்தல் பற்றித்தான் தீவிரமா யோசித்துக்கிட்டிருக்கிறார். எம்.எல்.ஏ. தேர்தலைப் பற்றியல்ல. எம்.எல்.சி. தேர்தலைப் பற்றி. மேலவை கூட்டம் நடைபெறப்போகும் இடத்தைப் பார்வையிடுவது, நியமன உறுப்பினர்களா யார் யாரைப் போடுவது, ஆசிரியர்- பட்டதாரி தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் எப்போது முடியும்ங்கிறது பற்றிய விவரங்களைச் சேகரிப்பதுன்னு மேலவை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் கவனம் செலுத்திக் கிட்டிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு முடிவதற்குள் ளாக மேலவை மீண்டும் உருவாக்கப்பட ணும்ங்கிறதில் கலைஞர் தீவிரமா இருக்கிறார்.''
""மேலவை அமைக் கப்பட்ட பிறகு, 2011 மே மாதத்தில் வரவேண்டிய பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்துறதுக்கு வாய்ப்பிருக்குதா?''
""முன்கூட்டியே தேர்தல் நடத்தணும்னு மாநில அரசு கோரினால், அதை தேர்தல் கமிஷன் ஏத்துக்கிட்டு தேர்தல் தேதியை ஃபிக்ஸ் பண்ணனும். இப்ப தலைமை தேர்தல் ஆணையரா இருக்கிற நவீன் சாவ்லா விரைவில் ரிடையர்டாகப் போகிறார். அவரோட இடத்திற்கு வர விருக்கும் குரோஷி, சென்னையில் கொடுத்த பேட்டியில், தமிழகத்தில் ஓட்டுக்கு அதிகப் பணம் தரப்படுது. அதை தடுக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடுவோம்னு சொல்லியிருந்தார். தேர்தல் தேதியை நிர்ணயிப்பது உள்பட எல்லா அதிகாரமும், தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் குரோஷி கையில்தான் இருக்கும். முன்கூட்டியே தேர்தலை நடத்தி னால் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு எந்தளவில் இருக்கும்ங்கிற சந்தேகம் இருப்ப தால, எதற்கு ரிஸ்க்குன்னு ஆட்சித்தலைமை நினைக்குது.''
""விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோட தாயார் பார்வதியம்மாள் எப்ப விசா கேட்டு விண்ணப்பித்தாலும் அவருக்கு உடனடியா விசா கொடுக்கணும்னு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கு தே... பார்வதியம்மாளின் உடல்நிலை இப்ப எப்படி இருக்குதாம்?''
""கடந்த சில நாட்களா அவரோட உடல்நிலை ரொம்ப சீரியஸா இருப்பதா வல்வெட்டித்துறை ஆஸ்பத்திரியிலிருந்து தகவல்கள் கசியுது. பார்வதியம்மாளை கவனித்துக்கொள்ளும் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கத்துக்கிட்டே பேசினேங்க தலைவரே... .. திட உணவு எதையும் பார்வதி யம்மாளின் உடல் ஏற்க மறுக்குதுன்னும், திரவ உணவைக்கூட சாப்பிடுவதற்கு ரொம்ப சிரமப்படுறாருன்னும் சொன்னார். படுக்கையிலிருந்து எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் இருக்கும் பார்வதியம்மாளுக்கு, சிறுநீரகங்கள் வீங்கியிருப்பதா டாக்டருங்க சொல்றாங்களாம். வயிற்றில் புண் இருப்பதால் எந்த உணவு கொடுத்தாலும் வலி ஏற்படுதாம். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்துக்கிட்டிருந்தாலும், இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னோட உறவினர்களெல்லாம் கூட இல்லையேங்கிற மன உளைச்சலும் பார்வதியம்மாளோட உடல்நிலையை மோசமாக்கிக்கிட்டே போகுதாம்.''
""சென்னை ஹைகோர்ட்தான் விசா கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்குதே.. தமிழகத்துக்கு அழைச்சிக்கிட்டு வரலாமே?''
""அது பற்றியும் சிவாஜிலிங்கத்துக் கிட்டே கேட்டேங்க தலைவரே.. .. கனடாவிலிருக்கும் பார்வதியம்மாளின் மகளும் பிரபாகரனின் சகோதரியுமான வினோதினிக்கு தகவலைத் தெரிவித்திருப்ப தாகவும் அவர்கிட்டேயிருந்து வரும் பதிலை யடுத்துதான் இந்தியாகிட்டே மறுபடியும் விசா கேட்டு விண்ணப்பிக்கிறது பற்றி நாங்க முடிவெடுக்க முடியும்னு சொல்றார்.''
""தமிழ்நாட்டுத் தகவல்கள்?''
""தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் சொல்றேன்.. செய்தித் துறையில் 12 பி.ஆர்.ஓ.க்களுக்கான இடங்கள் காலியா இருக்குது. ஏ.பி.ஆர்.ஓ.க்களில் சீனியாரிட்டிப்படி லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதில் 12 பேருக்கு பி.ஆர்.ஓ. புரமோஷன் கொடுக்கப்பட்டிருக்குது. இப்படி புரமோஷன் பெற்றவர்களில் முதல்வர் அலுவலக ஏ.பி.ஆர்.ஓ.க்கள் 3 பேரும் அடக்கம். அதில் 2 பேர் செய்ற அலப்பரை தான் தலைமைச் செயலகத்தில் இப்ப பரபரப்பு டாக். புரமோஷன் விதிப்படி இவங்க வெளியிடங்களுக்குப் போகணும். ஆனா, சி.எம். அலுவலகத்திலேயே பி.ஆர்.ஓ.வா டேரா போட காய் நகர்த்திக் கிட்டிருக்காங்க. அதுமட்டுமில்லீங்க தலைவரே.. .. முதல்வர் அலுவலகத்திற்கான 4 ஏ.பி.ஆர்.ஓ போஸ்டிங்கை கேன்சல் செய்துட்டு, பி.ஆர்.ஓ. சீட்டை இரண்டாக உருவாக்கி, 2 பேரும் அதை ஆக்கிரமிக்கவும் காய் நகர்த்துறாங்களாம்.''
""இவங்க இவ்வளவு ஸ்பீடா செயல் படுவதற்கு என்ன பின்னணியாம்?''
""துணை முதல்வர் குடும்பத்தினர் பெயரைச் சொல்லிக்கிட்டுத்தான் இந்த இரண்டு பேரும் ஆட்டம் போடுறதா தலைமைச்செயலக அலுவலர்கள் சொல்றாங்க. பொதுவா, ஏ.பி.ஆர். ஓ. போஸ்டிங்கை கட்சிக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கம். அதையெல்லாம் கேன்சல் செய்தால், கட்சிக்காரங்களுக்கு கிடைக்குற வாய்ப்பு பறிபோகும். துணை முதல்வரின் குடும்பத் தினர் பெயரைச் சொல்லியே கட்சிக்காரர் களுக்கு வேட்டு வைக்கும் இந்த இரண்டு பூனைகளுக்கும் யார் மணி கட்டுறதுன்னு தெரியாம தலைமைச் செயலக வட்டாரம் தவிச்சிக்கிட்டிருக்குது.''
""சட்டமன்ற ஏரியா பற்றி சொன்னே... நாடாளுமன்ற பக்கம் போவோம். மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னாடி மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம்னும், தமிழகத்தைச் சேர்ந்த மந்திரிகளின் இலா காக்களும் மாறும்னும் டி.வி.யிலும் பேப்பரிலும் செய்திகள் வந்துக் கிட்டே இருக்குதே..''
""நேஷனல் மீடியாக்களில் இது சம்பந்தமான டிஸ்கஷன்தான் சீரியஸா ஓடிக்கிட்டிருக்குது. ராம்விலாஸ் பாஸ்வானும் அஜீத் சிங்கும் மந்திரிகளாகப் போ றாங்கன்னு செய்திகள் வந்தது. எனக்கு அப்படிப்பட்ட ஐடியாவே இல்லைன்னு பாஸ்வான் சொல் லிட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமைச்சர் ஆ.ராசா வின் இலாகாவை மாற்ற பிரதமர் முடிவு செய்து விட்டாருங்கிறதுதான் சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பும் தகவல். மூப்பனார் சிலை திறப்பு விழாவுக்காக தமிழகம் வந்த பிரணாப் முகர்ஜி இது சம்பந்தமா கலைஞர் கிட்டே பேசி சமாதானப்படுத்திட்ட தாகவும்கூட சேனல்கள் ஒளிபரப்பின. அப்படி எதுவும் பேசப்படலை. ஆ.ராசாவின் இலாகாவை மாற்றுவதுங்கிற ஐடியா பிரதமருக்கோ சோனியாவுக்கோ இல் லைங்கிறதுதான் டெல்லியின் உண்மை யான நிலவரம். ஐ.பி.எல். சர்ச்சையால் பதவி விலகிய சசிதரூரின் இடத்துக்குப் போட்டி நிலவுது. அதைப் பிடிப்பதற்கு ஜெயந்திநடராஜன் ரொம்ப தீவிரமா மூவ் பண்ணுறார்.''
""7-ந் தேதி நடக்கவிருந்த பா.ம.க பொதுக்குழு, 9-ந் தேதிக்குத் தள்ளிப் போனதோட பின்னணி என்ன?''
""நாம ஏற்கனவே சொன்னது போல, அன்புமணி சிபாரிசு செய்கிறவர் களைத்தான் கட்சிப் பொறுப்பு களில் நியமிக்கிறாங்க. 6 மாவட்டங்களில் அதற்கான வேலைகள் முடியாமல் இருந் தது. அதை முடித்துவிட்டு பொதுக்குழுவைக் கூட்ட லாம்னு பா.ம.க தலைமை முடிவு செய்ததாலதான் இரண்டு நாள் தள்ளிப் போனது. கிளை அமைப்பு களில் எந்த மாற்றமும் வேண்டாம்னும், நகர-ஒன்றிய- மாவட்ட நிர்வாகத்தில் அன்புமணி சொல்கிறவர்களை நியமனம் செய்யணும்ங்கிறது தான் ராமதாஸின் முடிவு. கட்சியில் அன்புமணியின் முடிவுகளுக்கு எதிரா இருக் கக்கூடியவர் காடுவெட்டி குரு. அதனால, குரு ஏரியாவில் அவர் சொன்ன ஆட்களையே பொறுப்பாளரா போட்டுட்டாங்க.''
""அடுத்த மேட்டர்?''
""இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனியின் அவசரக் கல்யாணத்துக்கு என்ன காரணம்னு நம்ம நக்கீர னில் தெளிவா எழுதி யிருந்தாங்க. அதன் பின்னணியில் யார் இருந்தாங்க என்கிற விவ ரத்தை தெரிஞ்சுக்கிட் டேங்க தலைவரே.. .. தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஸ்து வெங்கட்ங்கிற வர்தான் பின்னணியில் இருந்திருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாச னோட ஆஸ்தான ஜோசியர். ஐ.பி.எல். ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டியின் போது டோனி தலைமையி லான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டரையெல்லாம் வாஸ்துப்படி இவர்தான் முடிவு செஞ்சாராம். அவராலதான் சென்னை சூப்பர்கிங்ஸ் கப் வாங்கியதா அதன் ஓனர் சீனிவாசன் நம்புறார். இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் பலரும் இப்ப வாஸ்து வெங்கட்டை மொய்ச்சிக்கிட்டி ருக்காங்க. அவர்தான் டோனியின் எதிர்காலத்தைக் கணிச்சி, உடனடியா கல்யாணம் பண்ணணும்னு தேதி குறிச்சிக் கொடுத்திருக்கிறார். அதன்படியே கல்யாணம் நடந்திருக்குது.''
""நான் ஒரு தகவல் சொல்றேன்... கொடநாட்டிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் ஆயிட்டார் ஜெ. ஆனா, கோவையில் செம் மொழி மாநாடு தொடங்கிய ஜூன் 23-ந் தேதியன்னைக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கார் மூலம் கொடநாட்டுக்குப் போய் ஜெ.வை சந்தித்ததாக வும், கூட்டணி தொடர்பான பூர்வாங்க பேச்சுகளைத் தொடங்கிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பலமான ரூமர்.''
மிஸ்டு கால்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய வீடு இருக்கும் வல்வெட்டித்துறை பகுதியில் எம்.ஜி.ஆரின் சிலை இருந்தது. யுத்தத்துக்குப் பிறகு, இந்த இடத்தை ஆக்கிரமித்த சிங்கள ராணுவத்தினர், இந்த கைதானே புலிகளுக்கு பணம் கொடுத்தது என்று எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்தனர். தற்போது ராஜபக்சே அரசுக்கு எதிராக ஜெ.விடமிருந்து அறிக்கை வெளியானதும், முழுசிலையையும் உடைத்துப் போட்டுவிட்டதாம் வெறிகொண்ட சிங்கள ராணுவம்.
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் 8-ந்தேதி பலியானார். நமது கடலோரக் காவல்படையோ, ""தமிழக மீனவர்கள் நம் எல்லையைத் தாண்டி, இலங்கை பகுதிக்குச் சென்று விடுகிறார்கள். அவர்களை இலங்கைப் படை சுடுகிறது. சுடவேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியும் இலங்கை கடற்படை கேட்பதில்லை'' என்கிறது. இலங்கை எல்லையைத் தாண்டி சிங்கள மீனவர்கள் நமது எல்லைக்கு வரு வதும் அடிக்கடி நடக்கிறது. அப்படி வருபவர்களை கோர்ட்டில்தான் நமது படையினர் ஒப்படைக்கிறார்கள். சுட்டுக் கொல்வதில்லை. இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு கலைஞர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், தி.மு.க. சார்பில் 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 42 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு அனுமதியளித்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில். இக்கவுன்சிலின் நெறிமுறைகளுக்குட்படாமலிருந்த இக்கல்லூரிகள், உயர்நீதி மன்றம் சென்று உத்தரவு பெற்றதால், கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள், இக்கல்லூரிகளின் நிர்வாகிகளை வியாழனன்று டெல்லிக்கு வரவழைத்து, ஆவணங்களை சரிபார்த்து அனுமதியளித்திருக்கிறார்கள். ""கவுன்சிலில் இருப்ப வர்கள் 4பேர்தான். அவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். கல்லூரி நிர்வா கத்தினர் கோர்ட்டுக்கு சென்றதால் கடுப்பாகி, அத்தனை நிர்வாகிகளையும் டெல்லிக்கு இழுத்தடித்து விட்டார்கள்'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment