Monday, July 12, 2010
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி!
shockan.blogspot.com
பெங்களூர்: பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார்.
நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார்.
சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அவர் போதனை செய்யக்கூடாது என்பதுஉள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இதையடுத்து மீண்டும் போதனைப் பாதைக்குத் திரும்பி விட்டார் நித்தியானந்தா.
கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாகஅவர் போதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமாலை பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் சிஷ்யர்கள், பக்தர்களிடையே நி்த்தியானந்தா பேசினார்.
தனது செக்ஸ் மோசடி தொடர்பான செய்திகள் குறித்தும் கோபத்துடன் குறிப்பிட்டார் நித்தியானந்தா.
அப்போது அவர் பேசுகையில், இணையதள வரலாற்றிலேயே, பெரும் நெரிசல் ஏற்பட்டு இணையதள இணைப்புகள் ஸ்தம்பித்தது வரலாற்றில் இரண்டு முறைதான். முதலில் மைக்கேல் ஜாக்சன் மறைந்தபோது. இரண்டாவது நித்தியானந்தா சுவாமிகள் விவகாரத்தில்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மைக்கேல் ஜாக்சன் ஆடினார், பாடினார், உலக மக்களை கேளிக்கைப்படுத்தினார். இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் நான் என்ன செய்தேன். இப்படிப்பட்ட களேபரத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லையே? என்ற நித்தியானந்தா தனது சிறை அனுபவத்தையும் விவரிக்கத் தவறவில்லை.
சிறைக்குள் போய் ஞானோதயம் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயமல்ல. அங்கு போய்தான் ஞானோதயம் பெற வேண்டும் என்று இல்லை. அங்கு போகாமலேயே ஞானோதயம் பெறமுடியும். அதை நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.
இந்த நாட்களில் எனக்கு என்னவெல்லாமோ பட்டம் கொடுத்துள்ளனர். அவற்றுக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. சிலர் என்னை நித்தி என்று கூட சுருக்கி கூப்பிட ஆரம்பித்து விட்டனர். அதுகுறித்தும் நான் கவலைப்படவில்லை.
எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.
நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும் என்றார் நித்தியானந்தா.
ஃப்ரீடம் என்ற தலைப்பில் நேற்று பேசினார் நித்தியானந்தா. நேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர். அவர்களில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் புகழ் நடிகை மாளவிகாவும் ஒருவர்.
Read: In English
நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரதுகாலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.
முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment