Friday, July 9, 2010
துரத்திய தோழர்கள்! சிக்காத விஜயகாந்த்! ஒதுங்கிய ஜெ.!
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... பெட்ரோல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயர்ந்திடும். மக்கள் தலை யில்தான் சுமை ஏறும். அதனால்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து 5-ந் தேதி நாடுமுழுக்க பொதுவேலை நிறுத்தம் நடந்தது.''
""பா.ஜ.க ஒரு பக்கமும், இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் அணி அமைத்து ஒரே நாளில் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டம் இந்தியா முழுக்க மக்கள் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், தமிழ்நாட் டில் அது தேர்தல் பிரச்சினையா தெரிந்ததைக் கவனித்தியா?''
""கவனிச்சேங்க தலைவரே.. ... தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரா ஒரு வலுவான அணி உருவாகியிருப்பதை இந்த வேலைநிறுத்தம் மூலம் காட்டணும்ங்கிறதில் அ.தி.மு.க.வைவிட கம்யூ னிஸ்ட்டுகள் அதிக அக்கறையோடு செயல்பட்டாங்க. இதற்காக சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் போட்டி போட்டுக்கிட்டு விஜயகாந்த்தை ஞாயிற்றுக் கிழமை வரைக்கும் தொடர்புகொள்ளும் முயற்சியிலே இருந்தாங்க. ஆனா, விஜயகாந்த் இவங்களோட லைனுக்கே வரலை.''
""சில மாதங்களுக்கு முன்னாடி நடந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தின்போதுகூட எதிர்க்கட்சிகளோடு விஜயகாந்த் கை கோர்க்கலையே?''
""அந்த சமயத்தில், தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கிட்டுப் போராட்டம் நடத்துவோம்னு ஜெ.கிட் டே தோழர்கள் சொன் னப்ப, அதெல்லாம் வேண்டாம்னு ஜெ பட் டெனச் சொல்லிட்டார். அதனால இந்த முறை ஜெ.வின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு போகாமல், தோழர்களே விஜயகாந்த்தை தொடர்பு கொள்ள முயற்சித்தாங்க. பிடிக்க முடியலை. ஆனாலும் அவங்க விட்டுடலை. விஜயகாந்த்தோடு யார், யார் பேசிக்கிட்டிருக்காங் களோ அவங்க மூலமா தொடர்பு கொள்ளலாம்னு முயற்சி எடுத்தாங்க. அப்படியும் விஜயகாந்த்தைப் பிடிக்க முடியலை. ரொம்ப அப்செட்டான தோழர்கள், இப்பவே இப்படின்னா, நாளைக்கு அதிகாரத்துக்கு வந்துட்டா எப்படி இவரைத் தொடர்புகொள்ள முடியும்னு தங்களுக்குள்ளே பேசிக்கிட்டாங்க.''
""வேலைநிறுத்தத்தில் தே.மு.தி.க கடைசிவரை கலந்துக்கலையே... விஜயகாந்த்தோட வியூகம் என்ன?''
""அவரைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு அ.தி.மு.கவோடோ அதனோடு கூட்டணியில் இருக்கிற கட்சிகளோடோ கைகோர்த்து போராட்டம் நடத்துவதா இல்லை. எந்த அணியில் தே.மு.தி.க இடம்பெறப்போகுதுங்கிறதை தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம்னும் அதுவரைக் கும் எந்தப் பக்கம்னு காட்டிக்க வேணாம்ங்கிறது தான் விஜயகாந்த்தோட முடிவு. பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு இதையெல்லாம் எதிர்த்து தே.மு.தி.க சார்பில் தனியா ஒரு தேதியில் போராட்டம் நடத்தலாமான்னு தன் கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் ஆலோசனை செய்துக்கிட்டிருக்கிறார்.''
""எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே வேகம் காட்டலையே?''
""தீவிரம் காட்ட வேணாம்ங்கிறது கொடநாட்டிலிருந்து கட்சிக்காரர்களுக்கு கிடைத்த இன்ஸ்ட்ரக்ஷன். மறியல் போராட்டம் நடத்தி யாரும் கைதாக வேண்டியதில்லைன்னு சொல்லப் பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒதுங்கியே இருந்தார்கள். ஜூலை 13-ந் தேதி. செம்மொழி மாநாடு நடந்த கோவையில் ஜெ தலைமையில் அ.தி.மு.க நடத்தும் போராட்டத்தில் கட்சிக்காரர்கள் பெருமளவில் கலந்துக்கணும்ங்கிற வியூகத்தோடு போராட்ட ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்குது.''
""செம்மொழி மாநாடுன்னு சொன்னதும், மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பா முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்தான் ஞாபகத்துக்கு வருதுப்பா.. என்ன ஆலோசிக்கப்பட்டதாம்?''
""முதல்வர் தலைமையில் மாநில அளவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் கலந்துக்கிட்டார். அவர் பொதுவா, ஆலோசனைக்கூட்டங்களுக்கு வரமாட்டார். இந்தக் கூட்டத்தையும் அவர் தவிர்க்கப் பார்த்தார். ஆனா, கலைஞர்தான் வரச்சொல்லி வலியுறுத்தினாராம். கனிமொழியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கிட்டார். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டுவருவது பற்றித்தான் முக்கியமா ஆலோசிக்கப்பட்டிருக்குது.''
""மாநாட்டு முடிவுகளில் முக்கியமான முடிவும் இதுதானே?''
""இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதை ஆலோசனையின்போது சுட்டிக்காட்டியிருக்காங்க. ஏற்கனவே, பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் முதல்முறையாக கல்லூரியில் சேரும்போது அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியபோது, அதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்கிட்டாங்க. அதுபோல, தமிழில் படித்தவர் களுக்கு வேலையில் முன்னுரிமைங்கிற சட்டத்திற் கும் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்கக்கூடும்ங் கிறதால, எந்த சிக்கலும் தடையும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றுவது எப்படின்னு முதல் கட்ட ஆலோசனை நடந்திருக்குது.''
""நம்ம நக்கீரன் ஏற்கனவே சொன்னபடி ஜூலை 3-ந் தேதி கலைஞரை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தாரே... என்ன ஆலோசனை நடந்ததாம்?''
""ஆலோசனை நடப்பதற்கு முதல்நாளே, வட இந்திய மீடியாக்களெல்லாம் பிரணாப் முகர்ஜியின் விசிட் ரகசியம்னு வழக்கம்போல் பரபரப்பை உண்டாக்கிடிச்சி. மத்திய அமைச்சரவையில் இலாகா மாற்றம் நடக்கப்போவதாகவும், தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் இலாகாவை மாற்ற பிரதமர் முடிவெடுத்து விட்டதால, கலைஞரை சந்தித்து கன்வின்ஸ் செய்வதற்காகத் தான் பிரணாப் முகர்ஜி வர்றாருன்னும் 2-ந் தேதி முழுக்க பரபரப்பு கிளப்பப்பட்டது.''
""கலைஞரும் பிரணாப் முகர்ஜியும் உண்மையில் என்ன பேசினாங்களாம்?''
""நம்ம நக்கீரன் முன்கூட்டியே சொன்ன சப்ஜெக்ட்டில் தான் பேச்சு தொடங்கியிருக்குது. அதாவது, செம்மொழி மாநாட்டில் கலந்துக்கிட்டதுக்காக பிரணாப்புக்கு கலைஞர் நன்றி சொல்ல, பிரணாப்போ.. மாநாட்டில் கலந்துக்கிட்டது எனக்கு கிடைத்த பாக்கியம். கலந்துக் காம போயிருந்தா ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணியிருப் பேன்னு சொல்லி யிருக்கிறார். பொது வான அரசியல் நிலைமைகளையும் இரண்டுபேரும் பேசியிருக்காங்க. அதற்கப்புறமா, சாதிவாரி கணக் கெடுப்பு பற்றி பேச்சு வந்திருக்குது. இந்த விஷயத்தை தள்ளிப்போட லாமாங்கிறதுதான் காங்கிரசோட நிலை. அதனால, கலைஞரை கன்வின்ஸ் செய்யும் தொனியில் பிரணாப் பேச, கணக்கெடுப்புத் தேவைன்னு உறுதியா சொல்லிட் டாராம் கலைஞர்.''
""ம்...''
""அதுபோலவே, மாநில அரசு களிடம் உள்ள வரிபோடும் உரிமையை மத்திய அரசு கையில் எடுப்பதற்கு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்கனவே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினையிலும் மத்திய அரசின் நிலைக்கு சாதகமா பிரணாப் முகர்ஜி பேசிய போதும், கலைஞர் பிடிகொடுக்கலையாம்.''
""நான் ஒரு தகவல் சொல்றேன். கொடநாடு டீ ஃபேக்டரி, ஹெலிபேடு எனத் தொடர்ச்சியாக சிக்கல்கள் ஏற்பட்டு வர்றதால, அங்கே இருக்கும் முனியப்பர் கோயிலில் கிடாவெட்டி, 500 பேருக்கு சாப்பாடு போடப்பட்டிருக்குது. சாப்பிட்டவங்களுக் கெல்லாம் ஸ்வீட், வாழைப்பழம்னு சைவ அயிட்டங்களை ஜெ.வே பரிமாறினாராம்.''
மிஸ்டு கால்!
பா.ம.க.வின் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட- ஒன்றிய நிர்வாகிகளில் பெருமளவில் மாற்றம் நடைபெறவுள்ளது. அன்புமணி சிபாரிசில் அதிகம் பேர் புதிய பொறுப்புக்கு வரவிருப்பதால், 7-ந் தேதி நடைபெறவிருக்கும் மாநிலப் பொதுக் குழுவை பதட்டத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் பா.ம.க.வினர்.
பகுஜன் சமாஜ்கட்சி மாநிலத் தலைவரான எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க.வின் ஆலோசனைப்படிதான் எம்.எல்.ஏ பதவியை செல்வம் ராஜினாமா செய்யவில்லை என்றும், மேலவை தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தார் என்றும், ப.சி. மூலமாக காங்கிரசில் சேர முயற்சிக்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை மீது கட்சித்தலைமையிடம் ஆம்ஸ்ட்ராங் சுமத்திய 3 குற்றச்சாட்டு களே நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் கட்சியினர். செல்வப் பெருந்தகையோ, நான் ஏற்கனவே கட்சியின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டேன். இப்போது பெயருக்கு நடவடிக்கை என அறிவித்துள்ளார்கள் என்கிறார்.
தி.க.தலைவர் கி.வீரமணியின் வீட்டில் நின்ற கார் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பெரியார் தி.க.வைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் தி.க.வைச் சேர்ந்த திருவாரூர் தங்கராசுவின் கார் சில நாட்களுக்கு முன் தாக்கப் பட்டதற்கு பதிலடியாகத்தான் வீரமணியின் கார் தாக்கப் பட்டதாம்.
ஐந்து நாட்களுக்கும் மேலாக, தன் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் இருக்கிறார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராமநாதன். காரணம், பதிவாளர் ரத்தினசபாபதிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி டீனுக்கும் பதவி காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்து வந்தார். இதனால் முறைப்படி பொறுப்புக்கு வர வேண்டியவர்கள் பாதிக்கப்படவே, பல்கலையின் ஆசிரியர்கள் ஊழியர்களின் 7 சங்கங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தி துணைவேந்தரின் அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment