Tuesday, July 13, 2010

விஜய் படத்துக்கு எதிர்ப்பு: தியேட்டர் அதிபர்கள் முடிவு


தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.



கூட்டத்தில் விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுக்காக திரையரங்க உரிமையாளர்கள் கொடுத்த பணத்தில், 35 சதவீத தொகையை விஜய் திருப்பி தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு இருந்தோம். இதுவரை விஜய் திருப்பி தரவில்லை. அவர் நஷ்ட ஈடு தொகையை தரும் வரை, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




* கோவையில், மிக சிறப்பான முறையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்துள்ள தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.



* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம.நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.



* தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளராக இருந்த பழனியப்ப செட்டியாரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு பதில் புதிய பொருளாளராக டாக்டர் ஹரி கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மேற்கண்டவாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment