Saturday, July 3, 2010
என்மேல் சாமிக்கு இஷ்டம்'' உளறிய நித்ய பிரீத்தானந்தா!
shockan.blogspot.com
""தன்னை யோக் கியராகக் காட்டிக் கொள்ள விரும்பும் நித்யானந்தா... அதற்கு என் செல்ல மகள்களை பகடைக் காயாக உருட்டப் பார்க்கிறார். அவரால் வசியம் செய்யப்பட்ட என் மகள்களை அவரிடமிருந்து எப்படி மீட்கப்போகிறேனோ தெரியவில்லை''’என கண்ணீர் வடிக்கிறார் ஒரு அப்பாவி அப்பா.
அவரது பரிதவிப்பைப் பார்க்கும் முன் ஒரு சின்ன சம்பவம்.
கடந்த 30-ந் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணேஸ்வரி, சித்ரேஸ்வரி என்ற இரண்டு இளம்வயது சகோதரிகள் “""ரஞ்சிதா சி.டி. தொடர்பாக நித்யானந்தா மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது.. எங்கள் அப்பா எங்களை ஆசிரமத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். எங்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முயல் கிறார். இதனால் மீண்டும் நாங்கள் ஆசிரமத்திற்கே செல்ல ஆயத்த மானோம். ஆனால் எங்கள் அப்பா வோ... ஆசிரமத்திற்குப் போனால், நித்யானந்தா எங்களைக் கடத்திவிட்ட தாக போலீஸில் புகார் தருவேன் என்று மிரட்டுகிறார். எனவே... நாங்கள் ஆசிரமத்திற்கு சென்றபின் இது தொடர் பாக எங்கள் குடும்பத்தினர் நித்யா னந்தா மீது புகார் கொடுத்தால்... அதை போலீஸ் பொருட்படுத்தக்கூடாது. ரஞ்சிதா சி.டி.யை நாங்கள் நம்ப வில்லை'' என்று ஒரு மனுவைக் கொடுத்து பரபரப்பூட்டினர்.
இதைக் கண்டு திகைத்த காக்கிகள் சிலர் ""ரஞ்சிதா வுடன் நித்யானந்தா இருக்கும் படங் கள் உண்மை யானவை என்று நிரூ பணமாகி விட்டது. அவர் மீதான செக்ஸ் புகார் களுக்கும் ஆதாரம் இருக்கிறது. எனவே பெற்றோர் சொல்கிறபடி நடந்துகொள்ளுங்கள்''’என அவர் களுக்கு அறிவுரை கூறினர். எனினும்... “எடுத்த முடிவில் இருந்து நாங்கள் மாறமாட்டோம்’ என்று அந்தப் பெண்கள் உறுதியாகச் சொல்லிவிட்டனர்.
இந்த இரண்டு இளம்பெண்களும் குடும்பத்தை உதறிவிட்டு மீண்டும் நித்யானந்தாவையே சரணடையத் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில்... இவர்களின் குடும்பத்தினர் மன நிலையை அறிய குமரி மாவட்டம் தோவாளைக்கே சென்றோம்.
அங்கு இல்லத்தார் தெருவில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குப் போனபோது... அப்பாக்காரரான சிவபாலன் சோகமயமாய் இருந்தார். வீட்டுச் சுவர்களில் தொங்கிய சாமி படங்கள் குடும்பத்தினரின் பக்தியைச் சொன்னது. தொண்டையை செருமியபடி பேச ஆரம்பித்த சிவபாலன் “""கால்நடை மருத்துவ ஆய்வாளரா பணியாற்றி மூணு வருசத்துக்கு முன்னதான் ஓய்வு பெற்றேன். எங்களுக்கு ரெண்டே ரெண்டு பொம்ப ளைப் பிள்ளைங்க மட்டும்தான். அதுகமேல உயிரையே வச்ச நான்... நல்லா படிக்கவைக்கணும்னு ஆசைப்பட் டேன். என் ரெண்டு மகள்களுமே எம்.ஏ. முடிச்சிட்டு... எம்.பில், பிஹெச்.டின்னு நான் நினைச்ச மாதிரி படிக்க ஆரம்பிச்சாங்க. இந்த நேரத்தில் சென்னையில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக இருக்கும் என் தம்பி கண்ணன், நித்யானந்தாக்கிட்ட பழக்கமாகி விஸ்வரூபானந்தான்னு பேரை மாத்திக்கிட் டார். அவர்தான் நித்யானந்தா பத்தி என் பிள்ளைகள்ட்ட சொல்லி.. விரைவில் வெளிநாட்டில் அவர் ஆசிரமம் திறக்கப்போறார். அதை நீங்க ரெண்டுபேருமே நிர்வாகம் பண்ணலாம். வாழ்க்கையிலும் செட்டிலாயிடலாம்னு ஆசைகாட்டி... அவங்களை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். அங்க போனதும் எங்க மகள்களின் போக்கே மாறிடிச்சி.
ரெண்டு வருஷத்துக்கு முன்ன இதே தெருவில் நாங்க கட்டிய மாயாண்டி சாமி கோயிலுக்கு நித்யானந்தாவை எங்க பிள்ளைகள் அழைச்சிக்கிட்டு வந்தாங்க. வர்றதுக்கு முன்னயே... நித்யானந்தா தங்க ஏ.ஸி. ரூம் வேணும்னு சொன்னாங்க. சாமியாருக்கு எதுக்கு ஏ.ஸி. ரூம்னு உறுத்தல் ஏற்பட்டாலும் எங்க பிள்ளைகளுக்காக ஏற்பாடு செஞ்சேன். அங்க மூணுநாள் தங்கியிருந்த நித்யானந்தா... எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு, பூந்தோட்டம் உள்ளிட்ட சொத்துக்களை ஆசிரமத்துக்கு கொடுக்கும்படி சொல்ல... எங்க பிள்ளைகளும் சாமி சொல்றமாதிரி செய்யுங்கன்னு நச்சரிச்சாங்க. நான் பிடிகொடுக்கலை.
எங்க பிள்ளைகளின் போக்கை நினைக்க நினைக்க மன அழுத்தத்துக்கு ஆளானேன். ரஞ்சிதா சி.டி. வெளியானப்போ... பார்த்தீங்களா உங்க சாமியார் லட்சணத்தைன்னு திட்டிட்டு பிள்ளைகளை வீட்டுக்கு கொண்டுவந்துட்டேன். இதுநாள்வரை அமைதியா இருந்த என் பிள்ளைகளை.... அந்த நித்யானந்தா மறுபடியும் ஆசிரமத்திற்கு கூப்பிட்டிருக்கார். அதனால பிள்ளைகளும் பயந்துபோய்க் கிளம்புதுங்க. தன்னை யோக்கியராக் காட்டிக்க என் பிள்ளை களை அந்த நித்யானந்தா பகடைக்காயா உருட்டப்பாக்குறாருங்க''’என்றார் கண்ணீர் வடிய.
இந்த இரண்டு இளம்பெண்களின் பாட்டியான கிருஷ்ணகுமாரியோ, ""கடவுளை விட்டுட்டு மனுசனை கும்பிட லாமாய்யா... என் பேத்திகள் இந்த சாமியார் பத்தி சொன்னப்பவே... சாமியார் பசங்களை நம்பக் கூடாதுன்னு சொல்லிப் பார்த்தேன்யா... அதுக கேட்கலை. அந்த நித்யானந்தா இங்க வந்தப்ப கவனிச்சேன். நடவடிக்கையே சரியா இல்லை. சதா பொம்பளைப் பிள்ளைகளோட ஒட்டி உரசிக்கிட்டு இருக்கிறவனா சாமியார்? சொகுசு வாழ்க்கை சாமியா ருக்கு எதுக்கு? சத்தியமாச் சொல் றேன்... ஆசிரமத்துக்கு போன என் பேத்திகளை அந்த நித்யானந்தா நாச மாக்கிட்டான்யா. என் பேத்திகளை சின்ன வயசில் இருந்து தூக்கி வளர்த்தவய்யா நான். அப்படிப்பட்ட நான் சொல்றேன்யா... அதுக உடம்பில் தெரிஞ்ச மாற்றத்தை வச்சே சொல் றேன்... சின்ன வயசுப் பிள்ளைகளான இதுகளுக்கு நல்லது கெட்டது தெரி யலை. அந்த அளவுக்கு அவன் வசியம் பண்ணிவச்சிருக்கான். சாமியார் பயலால் சீரழிஞ்ச அந்தப் பிள்ளைகள் இனி எங்களுக்குத் தேவையில்லைய்யா'' என்கிறார் ஆண்டு அனுபவித்த அந்த மூதாட்டி உடைந்து போன குரலில்.
எனினும் சிவபாலனின் மனைவி லட்சுமி... ""என் இரண்டு மகள்களும் இல்லாமல் வீடு திரும்பமாட்டேன்'' என்று போராடிவருகிறார்.
பாட்டி கிருஷ்ணகுமாரியின் குற்றச்சாட்டு குறித்து நித்யானந்தா ஆசிரம வட்டாரத்திலேயே நாம் விசா ரித்தபோது... ""இவர்களில் மூத்தவரான கிருஷ்ணேஸ்வரி என்ற நித்ய பிரீத் தானந்தா... "நானும் சாமியும் ரொம்ப குளோஸா பழகறோம். என்மேல் அவருக்கு இஷ்டமான இஷ்டம்'னு சிலபேர்ட்ட அடிக்கடி சொல்ல.. இது சாமி காதுக்குப் போயிடுச்சு. உடனே பிரீத்தானந்தாவைக் கூப்பிட்டு... "நீ என்ன லூஸா? கண்டதையும் உளறிக் கிட்டு இருக்கியா'ன்னு சாமி கடுமை யாத் திட்டிக் கண்டிச்சார். அப்ப அந்தப் பொண்ணு அழுத அழுகை எங்களுக்குத்தான் தெரியும். வேறென்ன சொல்ல?''’என் றார்கள் பலரும்.
நித்யானந்தா குறித்த சர்ச்சை அலைகள்... இப் போதைக்கு ஓயாது போ லிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment