Tuesday, July 13, 2010
“விஜய் அண்ணவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா”
இலங்கை பிரச்சனையில், என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்புகிறவர்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை, என்று அசின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை காரணமாக, தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைகு செல்ல கூடாது என தடை விதித்திருந்தது.
இந்நிலையில், நடிகை அசின் ‘ரெடி’ என்ற இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். இதனால், தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ர்ச்சை நிலவிவருகிறது.
தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு விதித்திருந்த தடையை மீறி, இலங்கைச் சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.
இதற்கு பதில் கூறும் விதமாக, அசின் அளித்துள்ள பேட்டியில்,
நன் இலங்கைச் சென்றது, அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக தான் நான் இல்ங்கை சென்றேன். ‘ரெடி’நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டப் படம்.அந்தப் படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நாத்தியது என் கையில் இல்லை. அது, தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.
இலங்கை சென்றபின், அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன்.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியும், விடுதலைப் புலிகள் அதிகம் இருந்த இடமுமான யாழ்ப்பாணத்திற்கு தைரியமாக சென்றேன்.
கடந்த 32 வருடங்களாக அந்தப் பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஆனால், ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன்.அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.
அதன் மூலம் இலவச கண்சிச்சை நடத்தி, 300க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் நட்த்தினேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 மருத்துவர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்தகண்சிகிச்சை முகாமை நடத்தினேன்.
ஒரு நோயாளிக்கான லென்சின் விலை 5000 ரூபாய். நான் 10,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
இப்படி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? நான் இலங்கைத் தமிழர்களுக்கு உதவியதற்காகவா?.
இலஙகையில் நடந்த போரில், பெற்றோரை இழந்த ஒருவயது முதல் 16 வயது வரை உள்ள 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?.
என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து கொண்டே சும்ம பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து இங்குள்ள தமிழர்களுக்கு உதவலாமே.
யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழர்கள், “அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்” என்று கேட்கிறார்கள்.
மேலும் அவர்கள், “விஜய் அண்ணவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா” என்றும் கேட்கிறார்கள்.
ஒரு சிலர் என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்.அது பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சரி என்று தோன்றியதைத் தான் நான் செய்கிறேன்” என்று அசின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment