Wednesday, July 7, 2010

புலிகேசியான புண்ணாக்கு! -வைகைப்புயல் வடிவேலு!


shockan.blogspot.com

'புள்ளைய பேழவிட்டுப் பாருனு ஊர்ல சொலகம் சொல்வாக வெளிக்கிபோன கொழந்த அதுமேலயே கதக்குனு ஒக்காந்திருச்சுன்னா... 'ம்ஹீக்கும்... இது தேறாது'னு சொல்லுவாங்க. பெட்டக்ஸ்ல ஒட்டிக்கிறாம குந்துனாப்ல தள்ளி ஒக்காந்துச்சுன்னா... புள்ள பொழச்சுக்குமாம். பிள்ளைகளோட ஃப்யூச்சர எதவச்சு கண்டுபுடிச்சிருகாங்கண்டு பாருங்க!

இப்புடித்தான் புள்ளைகளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் வச்சு பெத்தவக கணிக்கிறாக.

எனக்கு ஏழெட்டு வயசு இருக்கப்ப எங்கம்மா சொல்லுச்சு... ‘"ஏலேய்... எய்யா... நீ பெரிய நடிகரா வருவடா'ன்னுச்சு. அந்தச் சொல்லு இன்னமும் என் நெஞ்சுக்குள்ளயே நிக்குது.

எங்க அப்பாம்மா வெளில போயிருக்கிற போது எங்க குட்டித்தம்பி "ங்ஙொய்'னு அழுதுக்கிட்டுருப்பான். அப்ப நானும், பெரிய தம்பி ஜெகதீசனும் சினிமா காட்டி வௌôடுவம். எங்க குடுச வீடுதான் டூரிங் டாக்கீஸு. எங்கப்பாவோட வெள்ளவேட்டிய தெர மாதிரி கட்டிப்புட்டு... அரிக்கன் லைட்டை தெரைக்குப் பின்னாடி வச்சிட்டு நடுவுல நின்னு நானும் என் தம்பியும் எம்.ஜி.ஆரு, நம்பியாரு மாதிரி கத்திச் சண்ட போடுவம்; நடிப்பம். ‘"புதிய வானம், புதிய பூமி'னு நான் பாட்டும் பாடுவேன். எங்க உருவத்தோட நெழலு வேட்டியில சினிமா மாதிரி தெரியும். அதப்பாத்து அழுகய நிறுத்திப்புட்டு சிரிப்பான் என் தம்பி. ஒருநா நாம் பண்ற இந்த கூத்தப் பாத்துப்புட்டுத்தான் அம்மா சொல்லுச்சு அப்புடி.

போன மாசம் அம்மாவப் பாக்க ஊருக்கு போயிருந்தப்ப சின்னப்புள்ளயில நான் நடிச்சத சொல்லிப்புட்டு.... ‘"வடிவேலு... போடா போடா புண்ணாக்குனு நீ மொத மொத நடிச்சதயும் இப்ப புலிகேசியா நடிச்சதயும் நெனச்சு நெனச்சு பாக்குறேன். ஆத்தாடீ... ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லப்பா! அந்த வடிவேலு வேறயோ.. இந்த வடிவேலு வேறயோ'னு சொல்லுச்சு.

எனக்கே அந்த ஆச்சரியம் தாங்க முடியல.

புண்ணாக்கு வடிவேலு தண்ணீன்னா... புலிகேசி வடிவேலு எண்ண. ரெண்டும் ஒட்டவே ஒட்டாது.

டி.ராஜேந்தரோட ‘"என் தங்கை கல்யாணி' படத்துல தான் மொதல்ல தல காட்னேன். ஆனாலும்... ராஜ்கிரணோட "என் ராசாவின் மனசில'தான் எனக்கு மொதப் படம். அந்தப்படத்துல நடிக்கும்போது எலும்புந்தோலுமா இருந்தேன். "சின்னக் கவுண்டர்' படத்துல நடிச்சிட்டு... அந்தப் படம் ரிலீஸானதும் தியேட்டர் வாசல்ல போய் நின்னேன். படம் பாத்துட்டு வந்த மக்கள்லாம் என் கேரக்டர குறிப்பிட்டு "யாரோ கெழவன நடிக்கவச்சிருக்காய்ங்க'னு சொல்லிக் கிட்டுப் போனாங்க. எளந்தாரிப் பயல கெழவன்னு சொன்னா கோவந்தான வரும். ஆனா... எனக்கு வரல. குடும்பத் துல கஷ்டம். நல்ல சாப்பாடு கெடயாது. அதான் டொக்கு விழுந்துபோயி இருந் தேன். கழுத்தெலும்புல ரெண்டு பக்கமும் காப்புடி அரிசி போடலாம். அம்புட்டு பள்ளம். ச்சே... இளமையில வறும வர்றது ரொம்ப கொடுமங்க.

எந்த பேக்ரவுண்டும் இல்லாம, பெரிய சப்போட்டு இல்லாம விடாம போராடுனேன். அதுதான் இந்த வாழ்க் கைய குடுத்துருக்கு. இன்னக்கி கன்ன மெல்லாம் சத போட்டுருந்தாலும் தெனமும் கேமரா முன்னாடி நிக்கிம் போது ‘"இதுதாண்டா வடிவேலு ஒனக்கு மொத சான்ஸு. அத விட்றாத... விட்றாத... விட்றாத'னு என்னய புதுமுக மாவே நெனச்சுக்கிறேன்.

"வின்னர்' படத்துல வந்த கைப்புள்ள காமெடிய பாராட்டாதவங்களே கெடையாது. ஆனா.. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி கால் ஒடைஞ்சு போச்சு. அந்த வலியோடதான் அந்தப் படத்துல நடிச்சேன். உசுரு போற வலி மொகத்துல தெரியாம நடிச்சேன். நான் சில மேட்டர்ல ஏமாத்தப்பட்டு நிக்கிறது ஒங்க எல்லாத்துக்கும் தெரியும். இந்த பிரச்சனை எனக்கு தெரியவந்த சமயத்துல எனக்கு கடுமையான மன உளைச்சல். ‘"ஆதவன்' படத்துக்காக ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நிக்கிறேன். காமெடி பண்ணணும். ஆனா மனசு பூரா வேதனை. ‘"சார்... இன்னக்கி விட்றுவம். நாளைக்கு வச்சுக்கலாமே'னு கே.எஸ்.ரவிக்குமார் கிட்ட கேக்குறேன்.

"வடிவேலு... பிரச்சனய அப்பறமா பாத்துக்கலாம். மனச ஸ்டெடி பண்ணுங்க. இந்த மாதிரி சமயத்துல கேப் விடக்கூடாது'னு சொன்னார்.

‘"வடிவேலு... நான் ஏர்போர்ட்ல வெய்ட்டிங் ரூம்ல இருந்து பேசுறேன். இங்க டிவியில ஒங்க காமெடி பாத்தேன். ஒடனே போன் பண்ணணும்னு தோணுச்சு. அதான். வடிவேலு... இப்புடியே அடிச்சு மேல..மேல... போய்க்கே இருக்கணும்'னு நக்கீரன் கோபால் அண்ணே போன் பண்ணுச்சு. இப்படியெல்லாம் எம்மேல எல்லாருக்கும் அக்கறை.

எம்புட்டு கஷ்டம்னாலும் காலைல எந்திருச்சதும் காமெடி பண்ணியாகணும் நான். அதுக்காக எப்பவுமே சினிமாவப் பத்தியே பேசிக்கிட்டு, சினிமாவப் பத்தியே சிந்திச்சுக்கிட்டு கெடக்குறேன்.

என்னோட காமெடியில நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்கிற பல காமெடி காட்சிகள் கார் பயணத் துலதான் உருவாச்சு! அன்னைக்கும் அப்படித்தேங்... கார்ல கண்ணமூடி காமெடி ஸீன திங்க் பண்ணிக்கிட்டே வந்தேன். பசீல வயிறு ‘"கர்ருபுர்ரு'ங்குது.

"ஏய்யா டெய்வரு... வண்டியில ஏதாவது திங்கிறதுக்கு கெடக்கா?'

‘"பின்னாடி இருக்க கவர்ல பாருங் கண்ணே.'

கவர எடுத்து தொழாவுனேன். ஒரே ஒரு ஆப்பிள் இருந்திச்சு. ஆனப்பசிக்கு ஒத்த ஆப்பிளு எப்புடி பத்தும். ஆனாலும் "இது வாவது இருந்துச்சே'னு எடுத்தேன். ஆப்பிள ஆச ஆசயா பாத்தபடி நல்லா தொடக்கிறேன். அதுக்குள்ள வாயில சலுவா ஊருது. காம்ப கடுச்சு துப்பீரலாம்னு கடுச்சேன். ஏதோ ஒரு யோசனையில ஜன்னல் வழியா காம்ப தூக்கிப் போடுறதுக்கு பதிலா... காம்ப கைல எடுத்துக்கிட்டு ஆப்பிள தூக்கி எறிஞ்சுட்டேன்.

‘"ஆஹா... வாய்க்கு எட்டினது வயித்துக்கு எட்டலயே'னு வயித்தெரிச்சலாப் போச்சு.

ஆனாலும் சட்டுனு அதுல ஒரு காமெடி பீஸு மாட்டுச்சுல்ல.

‘"போக்கிரி' படத்துல... ஒருத்தன் வச்சுருக்க லவ் லெட்டர புடுங்கி அதுல உளுந்த வடய வச்சு நசுக்கி எண்ணெய்ய எடுத்துட்டு பேப்பர தூக்கிப் போடுறதுக்குப் பதிலா வடய தூக்கிப் போட்றுவேன். அது இந்த ஆப்பிள் மூலமா கிடைச்ச காமெடிதான்.

சில டைரக்டர்கள் கதை சொல்றப்பவே காமெடியவும் புடிச்சுக் கொண்டாந்துடுவாங்க.

அவுக கொண்டுவர்ற மாவ கைல எடுத்து பிதுக்கிப் பாப்பேன். வழுவழுனு இருந்தா அப்புடியே பலகாரம் சுடுறது தான் நம்ம வேல. நெறுநெறுனு இருந்தா அப்புடியே ஒரல்ல குடுத்து இன்னும் கொஞ்சம் நைஸா ஆட்டியெடுத்து சுட்று வேன்.

மதுரயில நானும், பிரெண்டு முருகேசனும் தியேட்டர் தியேட்டரா போயி படம் பாப்பம். படத்துல ஏதாவது போரடிக்கிற ஸீனு வந்தா... ‘"பருத்திப்பால்... யேய்ய்... முறுக்கு முறுக்கேய்...'னு ரவுசு விடுவோம். நாம நடிக்கிற ஸீன போரடிக்காம செய்யணும்கிற அக்கறையும், கவனமும் எனக்குள்ள இருக்க ரசிகன் வடிவேலு தந்த அனுபவம்தான்.

இப்படி நேசிச்சு பண்றதாலதான் எனக்கு இந்த வாழ்க்க கெடச்சிருக்கு.

அதுதான்... எங்கம்மா சொன்ன மாதிரி "புண்ணாக்க புலிகேசி'யாக் குச்சு. எங்கம்மா சொன்ன சொல்லவே... இந்த தொடருக்கு டைட்டிலா வப்பம்.

நல்லா சொல்றன்யா டீட்டெயிலு!

No comments:

Post a Comment