Wednesday, July 7, 2010
டோனியின் காதல் கதை!
shockan.blogspot.com
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயம் கவர்ந்த டோனியின் திடீர் திருமணம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. தீபிகா படுகோன், லட்சுமிராய், அசின் என்று நடிகைகள் பலருடனும் இணைத்துப் பேசப்பட்ட டோனி கடைசியில் தன் பள்ளித் தோழி சாக்ஷி ராவத்தை திருமணம் செய்திருக்கிறார்.
டோனி படித்த ராஞ்சி டி.ஏ.வி. பள்ளி யில்தான் தன்னு டைய பள்ளிப் படிப் பை முடித்திருக்கிறார் சாக்ஷி. பள்ளிக்காலத் தில் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. ஆனால் இடையில் சில காலம் இருவரிடமும் தொடர்பு இல்லாமல் போனது. 2008-ம் ஆண்டில்தான் இருவரின் நட்பும் புதுப்பிக்கப்பட்டதாம்.
கிரிக்கெட் மேட்ச் ஒன்றுக்காக கொல்கத்தாவில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கினார் டோனி. அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படித்த சாக்ஷி அதே தாஜ் ஓட்டலில் ட்ரெயினிங்கில் இருந்தார். அப்போதுதான் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். அதன் பிறகு எஸ்.எம்.எஸ்.மூலம் இரண்டு பேரின் நட்பும் தொடர்ந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்தின் போதுதான் டோனிக்குள் காதல் சிறகு முளைத்திருக்கிறது. அங்கிருந்த படியே சாக்ஷியிடம் காதலை வெளிப்படுத்த இரண்டு பேரிடமும் பற்றிக்கொண்டது காதல் தீ. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பிறகு அவுரங்காபாத்துக்கே போய் சாக்ஷியை சந்தித்திருக்கிறார். தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க பெரிய தொப்பியை போட்டுக்கொண்டு சாதாரணமாக ரிக்ஷாவில் சாக்ஷியோடு சுற்றியிருக்கிறார்.
சாக்ஷிக்கு டோனி கொடுத்த முதல் காதல் பரிசு என்ன தெரியுமா? ஐஃபோன்! ஆஸ்திரேலியாவில் இருந்து ஆசை, ஆசையாய் வாங்கி வந்திருக்கிறார் கேப்டன். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உள்ளிட்ட பிரபலங்களின் ஃபேவ ரிட்... டோனியின் நீளமான ஹேர் ஸ்டைல். சாக்ஷியின் சந்தோஷத்திற்காக அதையும் மாற்றிக் கொண்டார் மனிதர். காதல் காலத்தில் டோனியின் உடைகளை தேர்ந்தெடுத்ததும் சாக்ஷிதானாம். விலங்குகளின் மீது கூட கருணை காட்டுபவ ராம் சாக்ஷி ராவத். அவுரங்காபாத் தெரு நாய்களுக் காக தினமும் 100 ரூபாயை செல வழித்திருக்கிறார். சாக்ஷியின் இந்த கருணை குணம்தான் டோனியின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருக்கிறது. டோனியின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதிக்கு முன்பாக டோனி திருமணம் முடிந்துவிட வேண்டும் என்று ஜோதிடர் கள் சொன்னதும், பெற்றோர்கள் உடல் நலன் உள்ளிட்டவையும் சேர்ந்துதான் ஜூலை 4-ம் தேதியே திருமணத்தை நடத்த வைத்ததாம். சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா ஆகிய நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர். ஒரு காலத்தில் நெருங்கிய நண்பராக இருந்த யுவராஜ்சிங் அழைக்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமண அறிவிப்பு மீடியாக்களில் வந்து ஏகப்பிரச்சினை ஆனது போல நடிகைகளால் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் டோனி தன் திருமணத்தை இத்தனை ரகசியமாக நடத்தினார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment