Sunday, July 11, 2010
மாணவர்களை புரோக்கர்களாக மாற்றிய கல்வி...
shockan.blogspot.com
கல்வி நிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிவருகின்றன என தொடர்ந்து கல்வியாளர்கள் கவலைக்குரல் கொடுத்து வந்ததை நிரூபிக்கும் விதத்தில் அமைந் திருக்கிறது கல்லூரி மாணவர் நிர்பே குமார் சிங் கொலைச் சம்பவம்!
சென்னை மதுரவாய லில் உள்ள டாக்டர் எம்.ஜி. ஆர். நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தில் என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிர்பே குமார் சிங். கடந்த 5-ம் தேதி இரவு நீலாங்கரை யில் உள்ள நண்பர் அணிஸ் குமார் வீட்டிற்கு போய்விட்டு மற்றொரு நண்பர் பங்கஜ் குமாருடன் மதுரவாயலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவர்களை விரட்டிய கும்பல் பாலவாக்கத்தில் நிர்பே குமாரையும், பங்கஜ் குமாரையும் உருட்டுக்கட்டையாலும், இரும்பு ராடாலும் கடுமையாக தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் நிர்பே குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட... பங்கஜ்குமார் சீரியசாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர்களை தாக்கியதாக செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் வட இந்திய மாணவர்கள்தான்.
""கைதான மாணவர்களின் வாக்கு மூலத்தால்தான் பல உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்தன. சென்னையில் உள்ள பெரும்பாலான டீம்டு யூனிவர்சிட்டிகளில் பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் பாதிக்கும் மேலான மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் இருந்தும் இப்போது மாணவர்களை பிடிக்க ஆரம்பித்திருக் கிறார்கள். அந்த மாநிலங்களில் என்ஜினி யரிங் கல்லூரிகள் குறைவாக இருப்பதால் அவர்களும் இங்கு வர ஆர்வம் காண்பிக் கிறார்கள். எத்தனை மாணவர்களை வேண்டு மானாலும் சேர்த்துக்கொள்ளும் வசதி இருப்பதால் ஒரே நிறுவனத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் வரை சேர்க்கப்படுகிறார்கள். வட இந்திய மாணவர்களை சேர்க்க அந்தந்த மாநில மொழி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்த கல்லூரி நிர்வாகம் இப்போது தங்களிடம் படிக்கும் சீனியர் மாணவர்களையே புரோக்கர்களாக்கி விட்டன.
5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை டொனேஷனாக கொடுத்த மாணவனும் தான் கொடுத்த பணத்தை கமிஷனாகவே சம்பாதித்து விடலாம் என்று நினைக்கிறான். ஒரு சீட்டுக்கு 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கிறது. நிர்பே குமாரும் தான் படிக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்க சில மாணவர்களை கேன்வாஸ் செய்து வைத்திருந்தார். அந்த மாணவர்களை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் சேர்த்து விட்டார் அங்கே படிக்கும் சுமன். மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்திருக்கிறது. அது இப்போது கொலை வரை போயிருக்கிறது’’ என கொலைப் பின்னணியை விவரித் தார்கள் அதிகாரிகள்.
""தரமான மாணவர்களை உருவாக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் தறுதலை மாணவர்களாக அவர்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன'' என கொதிக்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் கனகராஜ். “ ""ஆராய்ச்சி படிப்புக்கு போக வேண்டிய மாணவர்களை புரோக்கர்களாக்கி வருகிறார் கள் கல்வி வியாபாரிகள். சில கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை தலைமை புரோக்கர்களாக்கி மாணவர் களை அவர்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட வைக்கின்றன. பொறியியல் கல்வியை கொடுக்கும் நிறுவனங்களைப் பார்த்து இப்போது தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளும் இந்த செயலில் இறங்கி விட்டன. கோவை அரசுக்கல்லூரி கவுன்சிலிங்கிற்கு வருகிற மாணவர்களை கேட்டிற்கு அருகிலேயே நின்று மடக்குகிறார்கள். பிட் நோட்டீஸ் எல்லாம் வைத்துக் கொண்டு அங்கே நிற்கும் தனியார் கல்லூரி ஆசிரியரும், மாணவர்களும் வெளிப்படையாக பிசினஸ் பேசுகிறார்கள். கையோடு கமிஷன் தொகையை வாங்கிக்கொள் கிறார்கள்.
இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஆன் டியுட்டியில் அனுப்புவதோடு, மாணவர்களுக்கும் ஃபிரீ அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். கல்வி வணிகமாவதை இப்போதாவது தடுப்பதற்கான முயற்சிகளை அரசுகள் எடுக்க வேண்டும்''’’ என்கிறார் கனகராஜ்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான டாக்டர் கலா நிதி, “""புரோக்கர்களாக மாறு கிறார்களே... கொலை செய் கிறார்களே என்று மாணவர்கள் மீது கோபப்படுவதை விட இதற்கு காரணமான அமைப்புகள் மீதுதான் கோபம் கொள்ள வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங் களாக இருக்கின்ற நிறுவனங்கள் அடிப் படையில் லாப நோக் கில்லாத டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமே இதனை நடத்துகின்றனர். இந்த டிரஸ்ட் ஆரம்பித்த நோக்கத்தில் இருந்து மாறி நடந்தால் அதனை அரசே ஏற்று நடத்தலாம் என்கிறது இந்தியன் டிரஸ்ட் ஆக்ட். அதே போல டிரஸ்ட்டின் வருமானத்தை சம்பந்தப்பட்ட துறை கண்காணிக்க வேண்டும். நிகர்நிலை அந்தஸ்து தருகிற யூ.ஜி.சி. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஆக்ஷன் எடுக்க முடியும். ஆனால் எந்த அமைப்புமே நடவடிக்கை எடுப்பதில்லை.
சமீபத்தில் கைதான கேதன் தேசாய் எத்தனை கோடி வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மட்டத்தில் இருந்து பணம் வாங்க ஆரம்பித்தால் நிர்வாகங்களுக்கு எப்படி பயம் வரும்? இங்கே நிகர்நிலைப்பல்கலைக் கழகம் நடத்தும் ஒரு நிர்வாகியின் வக்கீல்தான் அமைச்சர் கபில்சிபல். அந்த நிறுவனத்தின் மீதான புகார்களை எப்படி விசாரிப்பார்கள்? 10 லட்சம், 12 லட்சம் என்று பொறியியல் சீட்டுகளை கூறு போட்டு விற்கும் நிலையை கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள். யார் எல்லாம் நடவடிக்கை எடுக்கலாமோ அவர்கள் தூங்குகிறார்கள்.
6 மாதத்துக்கு ஒரு முறை திடீர் ஆய்வுகள் நடந்தால்தானே நிர்வாகங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும்? உயர் பொறுப்பில் இருப்பவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நிர்வாகங்கள் அதை எடுப்பதற்கு 40 மாணவர்களை புரோக்கர்களாக்கத்தான் செய்வார்கள்.
கொள்ளை அடிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு கடிவாளமாவது போடாவிட்டால் உயர்கல்வியின் நிலை மேலும் மோசமாகிவிடும். அரசுகள்தான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''’என்று அழுத்தமாக பேசுகிறார் டாக்டர் கலாநிதி.
""நிர்பே குமார் சிங் கொலைக்கு பிறகு வட இந்திய மாணவர்களை கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது காவல்துறை. வெளிப்படையாக பிசினஸ் பேசிக் கொண்டிருக்கும் மாணவ புரோக்கர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் கூறுகிறார் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment