Saturday, July 3, 2010
ஜெயலலிதா டீ!
shockan.blogspot.com
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கலைஞரிடம் பத்திரிகை நிருபர் ஒருவர்... "கொடநாட்டில் விதிமுறைகளை மீறி டீ எஸ்டேட் கட்டப்படுவதாக தகவல் வெளியாகிறதே, அதற்கேனும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அந்த நிருபர் கேட்ட கேள்வியில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்திருக்கிறார்.
இதையடுத்து கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் ஜெ. தரப்பின் பயங்கர கெடுபிடி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கொடநாடு டீ எஸ்டேட்டில் ஜெ. தரப்பு விதி முறைகளை மீறிக் கட்டிக் கொண்டிருக்கும் தகவல் உண்மைதானா என விசாரணையில் இறங்கி தடைகள் பல தாண்டி ஜெ. டீ தொழிற் சாலையில் நாம் எடுத்த படங்களை எடுத்துக் கொண்டு கொடநாடு தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவரான பொன்தோஸிடம் காட்டினோம்.
""ஆமாம்... இதுதான் புதிதாய் கட்டப் படும் டீ தொழிற்சாலை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொடநாடு மேலாளர் நடராஜன் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக் கும் கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 1500 சதுர அடி அளவில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித் திருந்தார். 1500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்ட யார் அனுமதி கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை ஊராட்சிமன்றத் தலைவருக்கு இருப்பதால் அனுமதி கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதற்கடுத்த சில நாட்களிலும் அதற்கடுத்த மாதங்களிலும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே வெவ்வேறு இடங்களில் 1500 சதுர அடி அளவுள்ள 3 கட்டிடங்களுக்கு தனித்தனியாக அனுமதி கோரி கொடநாடு தரப்பிலிருந்து விண்ணப்பிக்கப் பட்டதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நான்கு கட்டி டங்களும் வெவ்வேறு இடங்களில் கட்டப்படுவதாய் சொல்லி அனுமதிகளை வாங்கிக்கொண்ட அவர்கள் ஏற்கனவே இருந்த அந்த அனுமதிகளை ஒரே கட்டிடமாக தேயிலை தொழிற்சாலையை விரிவு படுத்திக் கட்டுவதாக தகவல் வந்தது.
நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால் ஒருசேர இந்தளவுக்கு தொழிற்சாலைகளைக் கட்டுவதென்றால் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனுமதியும், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளிடமும் தொழிற்சாலை கட்ட ஆட்சேபம் இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். அதோடு அம்மாதிரியான தொழிற்சாலைகளுக்கு த்ரிபிள் ஏ கமிட்டி மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு அதிகாரத் திடமும் அனுமதி வாங்க வேண்டும்.
ஆனால் இது மாதிரியான அனுமதிகள் எதையும் வாங்காமல் தொழிற்சாலை கட்டுவது குறித்து விளக்கமளிக்குமாறு 21-11-2009 அன்றே கொடநாடுக் கும் கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் களான ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நான் கடிதம் அனுப்பினேன். கொடநாடு எஸ்டேட்டுக்கு ஆய்வு செய்ய சென்றேன். ஆனால் ஜெயலலிதாவும், சசிகலாவும், கொடநாடு எஸ்டேட்டும் பதில் தராமல் நான் அனுப்பிய கடிதத்தைத் திருப்பி அனுப்பியது போலவே கொடநாடு எஸ்டேட்டிற்குள் என்னை நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது. அதனால் 22-12-09 அன்றே 4 கட்டிடங்களுக்கு கொ டுக்கப்பட்ட அனுமதியை நான் ரத்து செய்து ஆர்டரும் போட்டுவிட்டேன்.
அதற்குப் பின்னால் கொஞ்ச காலம் கட்டிட வேலைகளை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் பின்னால் கட்டத் தொடங்கினர். இப்போது கிடைத்த தகவல், அவர்கள் மேலும் நான்கு கட்டிடங்களை எந்தவித அனுமதியும் இன்றி கட்டிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதுதான். நிச்சயம் கலைஞர் அமைத்திருக்கும் விசாரணைக் கமிஷன் மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் அநியாயங்களை வெளிக்கொண்டு வரும்'' என்கிறார் உறுதியாய்.
கொடநாடு தேயிலைத் தொழிற் சாலையிலிருந்து தயாரிக்கப்படும் டீத் தூள்கள் கொடநாடு டீத்தூள் என்ற பெயரில் பாக்கெட் செய்யப்பட்டு லோக்கலில்-குன்னூரில் மட்டும் விநியோகம் செய்வதோடு எக்ஸ்போர்ட்டும் செய்யப் படுகிறதாம்.
ஆனால் ஜெயலலிதாவோ "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தொடர் நோக்கில்தான் கொடநாட்டில் இருக்கும் லோக்கல் தி.மு.க.காரர்களையும் லோக்கல் தி.மு.க. அமைச்சரையும் வைத்து எனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில்தான் பல அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பிக்கொண்டிருக் கிறார் கருணாநிதி.
உண்மை என்னவென்றால் கொடநாடு எஸ்டேட்டில் மண் சுவரிலான 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற் சாலை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் இருக்கிறது. அதனால் அங்கு பணி புரியும் தொழி லாளர்களின் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல் நோக்கத்திற்காகவே தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணி கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
சட்டத்திற்கு உட்பட்டு சம்பந் தப்பட்ட அதிகாரி களிடம் முறையான அனுமதி வாங்கித் தான் பழைய தொழிற்சாலையை செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் முறையாக நடக்கும் செப்பனிடும் பணிகள் குறித்து விசாரணை செய்ய ஓர் அதிகாரியை கருணாநிதி நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்று மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில்... புதிய கட்டிடம் கட்ட கொடநாட்டிலிருந்து அனுமதி கோரிய விண்ணப்பமும், பொன்தோஸ் 4 கட்டிடங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தர விட்ட ஆர்டர் காப்பியையும் வாசகர்களின் பார்வைக்கு நக்கீரன் வைக்கின்றது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கொடநாட்டுக்கு ஆய்வு செய்ய வருவதையொட்டி பலத்த எதிர்பார்ப்புகள் கொடநாடு முழுக்க பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது எதிர்பார்த்து நிற்கின்றன. ஆனால் வேண்டுமென்றே இப்படியானப் பொய்களைப் புனைந்து ஆய்வு செய்ய வரும் ஆய்வுக்குழுவை அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறதாம் கார்டன் தரப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment